இது 2010 ஆம் வருஷம் எழுதினது.இதை மரபு விக்கியிலும் இணைத்திருந்தேன். இதை மரபு விக்கியில் பார்த்துவிட்டு என் மதிப்புக்குரிய சகோதரர் திரு வரகூர் நாராயணன் அவர்கள் இதைத் திரும்பவும் இந்த நவராத்திரியில் போடும்படி கேட்டுக் கொண்டார்கள். அதன்படி திரும்பப் போடுகிறேன். இதற்காகச் சில மேல் விபரங்களைத் தேடினால் கூகிளில் Vedhichomas என்னும் வலைத்தளத்தில் "ராமச்சந்திரன்" என்பவர் "சந்துரு" என்னும் பெயரில் இதில் சில மேல் விபரங்களையும் என்னோட தனிப்பட்ட விபரங்களை எடுத்துக் காட்டும் வார்த்தைகளையும் நீக்கிவிட்டுப் போட்டிருக்கார். உடனே அந்தத் தளத்திற்கு ஒரு மெயில் கொடுத்துக் கேட்டதற்கு இன்று வரை பதில் வரவில்லை! இது மாதிரிப் பல பதிவுகள் இப்படித் தான் பலரால் திருடப்படுகிறது. குறைந்த பட்சமாகப் பெயரையாவது கீதா சாம்பசிவம் எழுதினது எனக் கொடுத்திருக்கலாம். :(
vedhichomas இதிலே எஸ்.ராமச்சந்திரன், சந்துரு என்னும் பெயரில் காப்பி செய்திருக்கிறார். 2015 ஆம் வருஷம்
Face Book முகநூலில் ஒருவர் அத்வைதம் என்னும் பெயரில் இதைக் காபி செய்திருக்கிறார். இது 2017 ஆம் ஆண்டில்!
நானும் முகநூலில் பத்து வருஷமாக இருந்தும் எனக்கும் தெரியவில்லை. யாரும் பார்த்துச் சொல்லவும் இல்லை. :( ரொம்ப வருத்தமாக இருக்கிறது. இதைத் தவிர்த்துப் பெண்மை என்னும் தளத்தில் என்னுடைய பெயரிலேயே வெளியிட்டிருக்கின்றனர்.
பெண்மை பெண்மையில் 2016 ஆம் ஆண்டில் வெளியிட்டிருக்கின்றனர்.
இதிலே என்னுடைய பெயரைக் குறிப்பிட்டிருக்கின்றனர். அவர்களுக்கு என் நன்றி. ஆனால் இதைப் போலவே என்னோட சிதம்பர ரகசியம் தொடர், பிள்ளையார் பற்றி எழுதிய நெடுந்தொடர், சுமங்கலிப் பிரார்த்தனை, கல்யாணங்கள் பற்றி எழுதியவை என அனைத்துமே காப்பி செய்யப்பட்டு உரிய காலத்தில் எனக்கு நண்பர்களால் தெரிவிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களைக் கேட்டும் இன்று வரை பதில் இல்லை! :( போகட்டும். இது முழுக்க முழுக்க என்னுடைய உழைப்பில் எழுதப்பட்ட பதிவு.
சோபனம், சோபனம் 2010 ஆம் ஆண்டு நான் எழுதியவற்றின் சுட்டிகள்
சோபனம், சோபனம் இது கடைசிப் பதிவு. அக்டோபரில் ஆரம்பித்து டிசம்பர் வரை சுமார் 26 பதிவுகள் எழுதி அனைத்தையும் மரபு விக்கியிலும் நானே ஏற்றினேன். பெண்மையில் என்னைக் கேட்கவில்லை என்றாலும் குறைந்த பட்சமாக என்னுடைய பெயரையாவது போட்டிருக்காங்க. மத்தவங்க! :(((((
படத்துக்கு நன்றி கூகிளார்!
சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 1
மங்களமான லலிதாம்பாள் சோபனம்
மங்களமுண்டாகப் பாடுகிறோம்
ஸ்ருங்கார கணபதி ஷண்முகர் ஸரஸ்வதி
எங்கட்கு முன்வந்து காப்பாமே
முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்திரனும்
மும்மூர்த்திகளும் வேதப் பிராமணர்களும்
நாற்பத்து முக்கோண நாயகியாளம்மன்
நாதர் காமேசருங்காப்பாமே!
போன வருஷம் அம்பிகையின் நவதுர்கா ரூபத்தையும், அவளின் படைத் தளபதிகளான சப்தமாதர்களையும் பார்த்தோம். இப்போது கொஞ்சம் தேவியின் புராணத்தைப் பார்ப்போமா??
மஹாவிஷ்ணுவைப் போல தேவிக்கும் பத்து அவதாரங்கள் என்பார்கள். இதன் காரணம் தெள்ளத் தெளிவானது. தேவியின் ஆண் அம்சமே விஷ்ணு. நம்மைப் போன்ற பாமரர்களின் செளகரியத்திற்காக விஷ்ணுவின் சகோதரி தேவி வைஷ்ணவி என்கிறோம். உண்மையில் ஆதி பராசக்தியிடமிருந்தே அனைத்தும் தோன்றியது, அனைவரும் தோன்றினார்கள் என்பது சாக்தர்களின் தீவிர நம்பிக்கை. அதனாலேயே அவர்கள் பெயருக்கு முன்னே ஸ்ரீ என்னும் அடைமொழியைச் சேர்த்து ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீராமன், ஸ்ரீகிருஷ்ணன் என்று அழைக்கப்படுவதாய்ச் சொல்கின்றனர். அவள் விஷ்ணுவாக இருந்த ரூபத்திலேயே மோகினியாக மாறி வந்து ஹரிஹர புத்திரன் உதித்தான் என்றும் சொல்லுவதுண்டு. மோகினியையும் அம்பிகையின் இன்னொரு அவதாரமாகவே சாக்தர்கள் பார்க்கிறதாய்ச் சிலர் கூற்று. தேவியை உபாசித்தவர்களில் தலை சிறந்தவர்கள் மகேசுவரர், மாதவர், பிரம்மா, மன்மதன், ஸ்கந்தன், நந்திகேசுவரர், இந்திரன், மனு, சந்திரன், குபேரன், அகஸ்தியர், துர்வாசர் ஆகியோர் ஆவார்கள். இத்தனைபேர் தேவியை ஆராதித்த பெருமையைச் சுட்டும் விதமாகவே மஹாவிஷ்ணு, தேவியைப் போலவே அனைவர் மனமும் மகிழும் வண்ணம் மோகினி அவதாரம் எடுத்தார் எனச் சொல்லுகின்றனர்.
ஈசனால் எரிக்கப் பட்ட காமன் என்னும் மன்மதன் தேவியின் கருணா கடாக்ஷத்தாலேயே அநங்கனாக மாறி ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரியும்படியான வடிவும், அழகும் நிரம்பிய சூக்ஷ்மதேகத்தைப் பெறுகின்றான். இதையே லலிதா சஹஸ்ரநாமமும் “ஹர-நேத்ராக்னி-ஸந்தக்த-காம-ஸஞ்சீவ-நெளஷதி: என அம்பிகையைப் போற்றுகிறது. ஹரனாகிய ஈசனின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட காமனைப் பிழைக்க வைத்த சஞ்சீவனி மருந்தாக அம்பிகை இங்கே செயல்பட்டிருக்கிறாள் என்பதே இதன் பொருள். அந்த மன்மதனுக்கும் கரும்பு வில் தான். அம்பிகையான காமாக்ஷிக்கும் கரும்பு வில்தான். அநங்கனுக்கும் புஷ்ப பாணங்கள். அம்பிகைக்கும் புஷ்ப பாணங்கள். ஆனால் ஒரு மாபெரும் வேற்றுமை என்னவெனில் மன்மதனின் அம்புகளால் சிற்றின்பமாகிய காமத்தில் மூழ்கிக் கிடக்கும் நம்மைக் கடைத்தேற்றுவதே அம்பிகையின் கரும்பு வில்லுக்கும், புஷ்ப பாணங்களுக்கும் முக்கிய வேலையாகும். நம் மனதைக் கட்டுப்படுத்திக் கட்டுக்குள் வைக்க அம்பிகையின் அருள் உதவி புரிகின்றது. அம்பிகையின் கடாக்ஷம் நமக்கு மோக்ஷ மார்க்கத்தைக் காட்டி, சிவனோடு ஒன்றுபட உதவுகிறது. மானுட வர்க்கத்தின் ஆசைகளைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இங்கே கரும்பு வில் நம் மனதை உருவகப் படுத்துகிறது. பாணங்கள் ஐந்தும் ஐந்து தன்மாத்திரைகள் ஆகும். நம்முடைய ஆசையை அம்பிகை தன் இடமேல்க்கரத்தில் பாசாங்குசமாக வைத்திருக்கிறாள். நம்முடைய கோபத்தை அடக்கும் அங்குசத்தை வலமேல்க் கையில் வைத்திருக்கிறாள். இத்தகைய கோலத்துடன் காட்சி அளிக்கும் அம்பிகையை வணங்கித் துதிப்பவர்கள் எந்தவிதமான ஆசாபாசங்களுக்கும் அடிமையாக மாட்டார்கள் என்பது சாக்த வழிபாட்டின் முக்கியக் குறிக்கோளாகும்.
இத்தகைய காமாக்ஷியைத் துதித்து அகஸ்தியர் தவம் இருக்கிறார் தன் மனைவி லோபாமுத்திரையுடன். அப்போது அவர் முன்னால் ஹயக்ரீவர் சங்கு, சக்ரதாரியாகக் கையில் புத்தகத்துடன் தோன்றினார்.
“ஆதிப் பிரம்மரிஷி அகஸ்தியரும்
அகிலலோகம் சஞ்சரிப்பவரும்
ஜோதி காமாக்ஷியைக் காஞ்சி நகரத்தில்
ஸ்துதித்து பூஜை செய்து தபஸிருந்தார்.
சங்கு சக்கரம் வலக்கை புஸ்தகமும்
தரித்தே ஹயக்ரீவர் மஹாவிஷ்ணுவாய்
தங்கவர்ணி லோபாமுத்திரை மணவாளன்
தபஸிற்கு முன் வந்தார்- சோபனம் சோபனம்!
தன்மாத்திரை என்னவென நினைப்பவர்களுக்காக:
சப்தம்
ஸ்பரிசம்
ரூபம்
ரசம்
கந்தம் இவை ஐந்தும் தன்மாத்திரை எனப்படும்.
மேற்கண்ட லலிதாம்பாள் சோபனம் பாடல் தொகுத்து அளித்திருப்பது சகோதரி சுப்புலக்ஷ்மி ஆவார்கள். (சேவாசதன்) இவரைப் பற்றிய ஒரு குறிப்புக் கடைசி நாளில் வரும்.
இந்த வருஷம் திங்களன்று மகாலய அமாவாசை எனச் சொன்னாலும் செவ்வாயன்றும் அமாவாசை மீதம் இருந்ததால் நாளை புதன் முதலே நவராத்திரி பூஜைகள் ஆரம்பம். ஆகவே நாளைய பூஜைக்கான முறைகள் கீழே கொடுக்கப்படுகின்றன. கொலு வைப்பவர்கள் அமாவாசையன்றே வைக்க வேண்டும். இன்றைய தினம் வீட்டில் சமைப்பதே கொலுவிற்கும் ஆராதிக்கலாம். நாளை முதல் கொலு/நவராத்திரி பூஜைகள் ஆரம்பிப்பதால் கொலுவின் நிவேதனம் இருவேளையும் தனி!
நவராத்திரி முதல் மூன்று நாட்கள் அம்பிகையை துர்கையாக நினைத்து வழிபட வேண்டும். துர்கதியிலிருந்து நம்மை நற்கதிக்கு மாற்றும் வல்லமை கொண்டவள் துர்கை! இன்றைய தினம் 2 வயதுப் பெண் குழந்தையை பாலையாக நினைத்து வழிபட வேண்டும்.

ஒரு சிலர் குமாரியாகவும் வழிபடுவார்கள். இன்றைய தேவி சைலபுத்ரி ஆவாள். இவள் தான் மலைமகள் என அழைக்கப்படும் பார்வதி தேவி ஆவாள். பவானி, பர்வத குமாரி என்றெல்லாம் அழைக்கப்படுபவள் இவளே. வலக்காலை ஊன்றி இடக்காலைத் தூக்கி ஈசன் ஆடிய ஆனந்த தாண்டவத்தின் ரிஷிமண்டலத்தில் தோன்றியவள் இவள்.
நவராத்திரி முதல்நாளன்று அரிசி மாவினால் பொட்டுக் கோலம் போடவேண்டும். வில்வ மலர்கள் விசேஷம் என்றாலும் மல்லிகை, சிவப்பு அரளி போன்றவையும் உகந்ததே! இன்று காலை வழிபாட்டின்போது வெண்பொங்கல் நிவேதனம் செய்யலாம். மாலை பாசிப்பயறுச் சுண்டல் இனிப்பு, காரம் இரண்டும் செய்யலாம். அல்லது வெண் மொச்சைச் சுண்டல் செய்யலாம்.
தனது பதிவு பிறரது தளத்தில் அவர்களது பெயரில் காணும்போது எவ்வளவு வேதனையாக இருக்கும்.
ReplyDeleteசில ஜென்மங்களுக்கு வெட்கமென்பது கிடையாது.
நானும் இப்படி அனுபவப்பட்டு இருக்கிறேன்.
வாங்க கில்லர்ஜி, நிறையப் பேர் சொல்லிட்டாங்க. முக்கியமா ஆவணி அவிட்டம் குறித்த பகிர்வு, ரதசப்தமி குறித்த பகிர்வு, அக்னி நக்ஷத்திரம் குறித்த பதிவு, கர்ணன் குறித்த பதிவு இவை எல்லாம் என்னோட பதிவுகளில் நான் எழுதியதை அப்படியே காப்பி எடுத்து பேஸ்ட் பண்ணிப் போட்டிருக்காங்க! :(
Deleteநல்ல வேளை... அனுபவப் பதிவுகளைத் திருடி, அதில் தங்கள் பேர் போட்டு வெளியிடும் அளவு நண்பர்களுக்குத் தைரியம் வரவில்லை போலும்...
Deleteமுக நூலில் லிங்க் கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் அங்கே ஒரு கமெண்ட் போட்டு கேட்டிருப்பீர்கள் என்று நினைத்தேன். காணோமே...
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், அங்கே கொடுக்க நினைச்சு மறந்துட்டேன். இன்னிக்காவது போய்க் கொடுக்கிறேன். நினைவிருக்கணும். :( வேதிக்ஹோமாஸில் கருத்துத் தெரிவிக்கும் ஆப்ஷன் இல்லை.
Deleteநவராத்திரி மீள் பதிவு சிறப்பு.
ReplyDeleteபடங்கள் அழகு.
விஷ்ணு முன்னொரு காலத்தில் தேவியை பூஜித்து அழகிய பெண்ணுருவமடைந்தார் என்றும் அம்பிகையை பூஜித்ததின் பயனாக காமனை ஜெயித்த பரமசிவனை விஷ்ணூ மோகிக்கச் செய்தார் என்றும் அம்பிக்கையின் ஒப்பற்ற சக்தியும், மேன்மையும் போற்றப் படுகிறது.ஸெளந்தர்ய லஹரீயில். 5வது பாட்டில்.
நன்றி கோமதி!
Deleteநவராத்திரி வணக்கங்கள்.மிக மிக அழகாக விளக்கி இருக்கிறீர்கள்.
ReplyDeleteதுர்க்கையை வரும் மூன்று நாட்களும் உபசாரம் செய்து வழிபடலாம்.
உங்கள் பதிவுகள் இப்படி திருடப்படுவதை அறிந்து மிக வருத்தமாக இருக்கிறது.
இங்கும் கொலுவைத்தாலும் நாளையிலிருந்துதான் அழைப்பெல்லாம்.
நன்றி ரேவதி!நான் இன்றும் நாளையும் வீட்டுக்கு வரவங்களுக்குக் கொடுத்துட்டு வெள்ளியன்றிலிருந்து அழைக்க நினைப்பு! பார்க்கலாம்.
Deleteஅம்பிகையின் அநுக்ரஹம் அனைவருக்கும் உண்டாகட்டும்...
ReplyDeleteவாழ்க நலம்..
நன்றி துரை, உண்மையில் தசமகாவித்யா குறித்துத் தான் அந்த அந்த தேவியர், கோயில் பற்றி எழுத நினைச்சிருந்தேன். என்னோட சில ஸ்ரீவித்யா உபாசக நண்பர்கள் ரொம்பவே அதில் ஆழமாகப் போகக் கூடாது என்னும் எச்சரிக்கையும் கொடுத்திருக்கின்றனர். ஆகவே லௌகிக வாழ்க்கைக்குத் தேவையானபடி எழுத நினைச்சு அது முடியலை! வேளை வரலை! அம்பிகை அருள் இப்படி இருந்திருக்கு! இதுவும் அவள் புகழ் பாடுவது தானே!
Deleteஇதைப்பற்றி உங்களுக்கு எழுதணும்னு நினைத்தேன். தியானம் வழில போறவங்க கடைசியில் ஶ்ரீவித்யா உபாசனை ஸ்டேஜுக்குத்தான் போவாங்க. இந்த வழியைக் கற்றுக்கொள்ள ஆசை....
Deleteஅப்படி எல்லாம் இல்லை நெல்லைத் தமிழரே! எல்லோருக்கும் அம்பிகையின் அருளால் போக முடியறதில்லை என்றே தோன்றுகிறது. சிலருக்கு உபாசனா மூர்த்தி வேறேயாகவும் இருக்காங்க! உங்களிடம் சொன்னேனே என் மானசிக குரு அவருக்கு ஆஞ்சநேயர்னு நினைக்கிறேன். அவருடைய ஒரு நண்பருக்கு நரசிம்மர்! அவர் பெயரும் நரசிம்மா தான்! அப்படியே சுதர்சனச் சக்கரம் வரைகையில் பின்னால் நரசிம்மர் வந்து அவருள்ளும் வியாபிப்பார் என நண்பர்கள் சொல்லக் கேள்வி. அதிகம் பேச மாட்டார்!
Deleteசித்தர்களில் சிலருக்கு ஆரம்பகாலத்தில் கிடைக்கும் வாலை எனப்படும் பாலா திரிபுரசுந்தரி தரிசனம் பற்றிச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அதற்கு மேல் எல்லாம் அனுபவம் தான்! வெளியே வரதில்லை!
Deleteநீங்கள் சொல்வதைப் போலவே
ReplyDeleteஎனது பதிவுகளைக் களாவடி Fb ல் ஏற்றி விட்டார் ஒருவர்...
எனது தளத்திற்கு வந்து பதில் சொல்ல ஆளைக் காணோம்...
Fb ல் வந்த களவுக்கு ஏகப்பட்ட கருத்துரைகள்.. நூற்றுக்கும் மேலான Likes...
என்ன செய்யச் சொல்கிறீர்கள்!...
குணா அமுதன் என்ன்னும் புகைப்படக் கலைஞர்.. மதுரைக்காரர்..
ஜல்லிக் கட்டு போராட்டத்தின் போது இவர் தனது தளத்தில் வெளியிட்டிருந்த காளைகளின் படத்தை அப்படியே திருடி அவரது பெயரை நீக்கி விட்டு அட்டைப் படமாக தனது பெயரில் வெளியிட்டுக் கொண்ட ஊடகங்களைப் பற்றிய செய்திகளையும் அவரே வெளியிட்டு இருந்தார்..
இதைப் போல இன்னும் நிறைய...
எல்லாருக்கும் நல்லபுத்தி வரட்டும்!..
ஆமாம், துரை, நானும் காப்பி செய்து போட்டிருந்தவங்களைக் கேட்டும் இன்று வரை பதில் வரலை. இந்த முகநூல் நண்பரைக் கேட்கலை. கேட்கணும்! பார்க்கவே அதிர்ச்சியா இருக்கு!
Deleteமங்களமான லலிதாம்பாள் சோபனம் மங்களமுண்டாகப் பாடுகிறோம். லலிதாம்பாள் சோபனம், தேவிபாடம் போன்றவைகள்தான் பழைய காலங்களில் வழக்கம். மிகவும் அழகாக எழுதியிருக்கிறீர்கள். ஸஹஸ்ரநாமம் போன்றவைகள் வாத்தியார் வந்துதான் வாசிப்பது வழக்கம். படிக்க இன்பமாக இருந்தது. நவராத்திரி ஆசிகள். அன்புடன்
ReplyDeleteவாங்க அம்மா, நீண்ட நாட்கள்/மாதங்கள் கழிந்து உங்கள் வரவும் பாராட்டுகளும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அவ்வப்போது முகநூலில் பார்த்தாலும் இப்போதெல்லாம் அதுவும் காணக்கிடைப்பதில்லை. உடல் நலமாக இருக்கப் பிரார்த்திக்கிறேன்.
Deleteஅடப்பாவிகளா.... பதிவை அப்படியே திருடறாங்களா? சமையல் குறிப்பை உபயோகப்படுத்திக்கலாம். அதை அப்படியே தங்கள் தளத்துல வெளியிட்டுக்கறதும் தவறு. அதைவிட இந்த மாதிரி கடும் உழைப்பில் உருவாகும் பதிவுகளைத் திருடறதுக்கு எப்படித்தான் மனசு வருதோ.
ReplyDeleteஎனக்கு இது முதல் முறை அல்ல. பலமுறை அனுபவப்பட்டாச்சு. காப்பி, பேஸ்ட் பண்ணும் ஆப்ஷனை எடுக்கும் எண்ணம் இருக்கு! ஆனால் அதில் சில பிரச்னைகள் உண்டு என்கின்றனர். டிடியிடம் தான் இது குறித்து ஆலோசனை கேட்க வேண்டும். நண்பர்கள் பல வருடங்களாக வற்புறுத்தி வருகின்றனர். பார்க்கலாம்.
Deleteநமஸ்காரம் அன்னையே. என் பெயர் குமார் ராமநாதன். அத்வைதம் முகநூல் பக்கம் என்னுடையது அல்ல. உங்கள் Blog ஐ இதுவரை சந்திக்கும் பாக்கியம் மற்றும் உங்கள் எழுத்துக்களை சுவைக்கும் பாக்கியம் அம்பிகை இனிமேல் அருளட்டும். மேலும் முக நால் அத்வைதம் பக்கத்தில் கமெண்ட்ஸ் எழுதியது போல் நான் பதிவு செய்தது எனக்கு 2014ம் வருடம் கூகுள் தனிக்குழுவில் மின் அஞ்சலாக கிட்டியதை நான் 2015ல் முகநூல் தனி ஆல்பமாக பதிவிட்டேன். உங்களது பெயர் மற்றும் சோபனத்தின் மூல உரையின் விவரங்கள் அதில் இல்லை. எனது தவறு என்று நீங்கள் கூறுவது முறையல்ல. உங்களை போல் நானும் அம்பிகையின் தயவினால் எழுத்தாளனே.இதில் எனது பெயரை பிரத்யேகமாக நீங்கள் கூறுவது ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் என்னை தவறு செய்துகொண்டவன் என்றால் ஏற்கிறேன். மன்னிக்கவும். உங்களின் விவரம் தெரியாததினாலும் மேலும் உங்கள் நட்பில் நான் இல்லாததால் உங்களை பற்றி விவரம் தெரியவில்லை. நன்றி. நமோ தேவ்யை.
ReplyDeleteஅப்படியா!!!!!!!!!!!!!!!!! நேற்று மாலை சுமார் ஐந்திலிருந்து ஆறு, ஆறரைக்குள்ளாக முகநூலில் "அத்வைதம்" முகநூல் பக்கத்தில் என்னுடன் பேசியவர் நீங்கள் இல்லையா? அப்படி எனில் அவருடனான என்னுடைய வாத, விவாதங்களைச் சேமித்து வைத்திருக்கிறேன். அவற்றை அப்படியே வெளியிடுவதில் உங்களுக்குத் தடை ஏதும் இருக்காது என நம்புகிறேன். கொடுத்த வாக்கை மீறும் எண்ணம் எனக்கு எப்போதும் இல்லை! ஆகவே தான் அனுமதி வேண்டுகிறேன். நன்றி.
Deleteபதிவு செய்தவர் எனது நண்பர். அந்த பதிவுகள் எனது முக நூல் பக்கத்தில் இருந்து எடுத்தது. உங்களுடன் நாங்கள் செய்தது தவறா மற்றும் சரியா என்கிற விவாதத்திற்கு வரவில்லை. உங்கள் விருப்பம். முடிந்தால் எனது பெயரை உங்கள் சிகப்பு எழுத்தில் எழுதிய பதிவில் இருந்து நீக்கவும். எல்லாரும் அம்பிகையின் குழந்தைகளே. அவள் குடுத்த ஞானத்தை பகிர்வதில் தானே ஆனந்தம். மற்றபடி நமஸ்காரம். அத்வைதத்தில் அந்த பக்கத்தில் பதிந்த உங்கள் பதிவுகளை அவர் நீக்கி விட்டார். மேலும் சோபனம் எனக்கு தெரிந்தவரை இரண்டு டசன் பிளாக் கில் பலர் பதித்துள்ளார். இதில் மூலத்தில் எந்த வித குறிப்புகளும் இல்லை. தங்கள் புரிதலுக்கு நன்றி. நமஸ்காரம். நமோதேவ்யை.
ReplyDeleteநான் நவராத்திரியில் மட்டுமில்லாமல் வீட்டிலும் கொஞ்சம் வேலை மும்முரத்தில் இருக்கிறேன். உடல்நலம் வேறே சரியில்லை. ஆகவே உடனுக்குடன் உங்கள் பதிலைக் கண்டு கொள்ள முடிவதில்லை. என்னுடன் முகநூலில் பேசியவர் குமார் ராமநாதன் என்னும் பெயரில் தான் பேசினார். உண்மையில் அந்தப் பேச்சு வார்த்தையின் முடிவில் அவர் பதிவுகளை நீக்குவதாகச் சொல்லி அதை நீக்கியும் விட்டார். நானும் அவர் பெயரை நீக்குவதாகத் தான் இருந்தேன். ஆனால் அவர் பெயரை எடுப்பதற்குள் எனக்கு அடுத்தடுத்த பிரச்னைகள், வீட்டில்! ஆகவே இதைச் சுத்தமாய் மறந்துட்டேன். உங்க பெயரில் கருத்து வந்திருப்பதைப் பார்த்துத் தான் நினைவே வந்தது. ஆனால் இதில் எழுதி இருப்பதைப் பார்த்தால் குமார் ராமநாதன் என்பவருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமே இல்லை போல் சொல்கின்றீர்கள்! எதை நம்புவது, எதை நம்பாமல் இருப்பது எனத் தெரியவில்லை. மேலும் பலரும் சோபனம் பதிவுகளைப் பகிர்ந்திருப்பதாயும் சொல்கிறீர்கள். நான் அதையும் பார்க்கணும். உங்களோட கருத்து எல்லோரும் பகிர்வதால் என்ன நஷ்டம் என்னும் கருத்துத் தொனிக்கிறதோ என்னும் ஐயம்! ஒவ்வொரு புத்தகங்களையும் படித்துப் பொருத்தமான ஆதாரங்களைக் கண்டறிந்து இணைக்கவேண்டிய இடத்தில் பொருத்தமாக இணைத்தும் எழுதுவதற்கு எனக்கு எத்தனை நாட்கள் பிடித்தது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். வெகு சுலபமாகச் சொல்லிவிட்டீர்கள் எல்லோரும் அம்பிகையின் குழந்தைகள் தான் என! அம்பிகையின் குழந்தைக்கு இன்னொரு அம்பிகையின் குழந்தையே அநீதி இழைப்பதை அம்பிகை பொறுப்பாளா? என் பெயரை அவர் காப்பி செய்த இடத்திலேயே கிடைத்திருக்குமே. போட்டிருக்கலாம். ஆனாலும் நீங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க மேலே உள்ள சுட்டியில் முகநூலில் ஒருவர் பகிர்ந்திருந்தார். இப்போது நீக்கி விட்டார் என்று மாற்றுகிறேன். மற்றபடி பதிவுகள் அங்கே இருந்ததும் நான் ஆதாரங்களைக் காட்டியதும் நீக்கப்பட்டதும் உண்மை. இரண்டு டசன் வலைப்பதிவுகளையும் சுட்டியோடு குறிப்பிடுங்கள். தேடித் தான் செல்லவேண்டும். நம் சொத்தை நாம் தானே காப்பாற்றிக்கொள்ள வேண்டும்! :(
Deleteஅவர் நண்பர் ஒருவரும் அதே பதிவில் இது குமார் அண்ணாவின் "எழுத்து" என எனக்கு பதில் சொல்லி இருந்தார். வரகூர் நாராயணன் அண்ணாவும் என் பதிவுகளைப் பகிர்ந்து தான் வருகிறார். நான் போட்டது என்று சொல்லி என்பெயரையும் படத்தையும் போட்டு! இந்தப் பதிவைக் கூட! See the Carnatic & Bajans Page in Face Book and Brahmins Bojan group and in so many groups. Really he is very Great by giving me attention from all the Facebook members. It is very nice of him.
Delete