எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, July 15, 2019

கச்சி ஏகம்பரைப் பார்ப்போமா? 1

என் பயணங்களில்!

திருக்கச்சி ஏகம்பம் என அழைக்கப் படும் ஏகாம்பரேஸ்வரர் கோயில் ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இருந்ததாய்ச் சொல்லப் படுகிறது. இப்போ காஞ்சி நகரைப் பற்றிய இன்னும் சில பெருமைகளைப் பார்ப்போமா?முக்தி தரும் ஏழு தலங்களில் காஞ்சியும் ஒன்று என ஏற்கெனவே நாம் பார்த்தோம். அதோடு பஞ்ச பூதத் தலங்களில் பூமி அல்லது மண்ணுக்குரிய தலமாகவும் காஞ்சி சொல்லப் படுகிறது. இங்கே மூலஸ்தானத்தில் இருப்பவர் மணலால் பார்வதி பிடித்து வைத்த லிங்கமே எனவும் சொல்லப் படுகிறது. பிரளய காலத்திலும் அழியாத தலமாகச் சொல்லப் படுகிறது. ஆகையால் பிரளய சித்து எனவும் அழைக்கப் படுகிறது. அம்பிகை கம்பை நதியின் வெள்ளப்பருக்கைக் கண்டு அஞ்சி இறைவனைத் தழுவியதால் சிவபுரம் எனவும் அழைக்கப் படுகிறது. இங்கே பிரமனும் தவம் செய்திருக்கிறான். அந்தக் கதை வரதராஜர் கோயில் பத்திச் சொல்லும்போது வரும். ஆகக் கூடி பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் இங்கே வாசம் செய்ததாலும், இன்னமும் திரிமூர்த்திகளின் அருள் இங்கே நிறைந்து இருப்பதாலும் திரிமூர்த்தித் தலம் அல்லது திரிமூர்த்தி வாசம் எனவும் அழைக்கப் படுகிறது.

ஏகாம்பரேஸ்வரர் கோவில் க்கான பட முடிவு

படங்களுக்கு நன்றி விக்கிபீடியா!

கி.மு. 2-ம் நூற்றாண்டிலேயே பழங்காலச் சோழர்களுக்கு இது தலைநகராய் இருந்ததாய்ச் சொல்லப் படுகிறது. அதன் பின்னரே பல்லவர்களும், அதற்குப் பின்னர் பிற்காலச் சோழர்களும் காஞ்சியைத் தலைநகராய்க்கொண்டு ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர். அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியர், திருக்குறளுக்கு உரை எழுதிய,( நாம் இன்றும் படிக்கும்) பரிமேலழகர், சக்ரவர்த்தியாக வட நாட்டில் ஆட்சி புரிந்த ஹர்ஷவர்த்தனர் நிறுவிய நாளந்தா பல்கலைக் கழகத்துக்கும் முன்னோடி காஞ்சி பல்கலைக் கழகம் எனவும், ஹர்ஷர் காலத்தில் நாளந்தா பல்கலைக் கழகத்தின் முதல் தலைவரான தர்மபாலர் இங்கே தான் கல்வியும், ஞானமும் பெற்றுச் சிறப்படைந்த தலம் இது. இத்தனை பெரியோர்களைச் சான்றோர்களாகக் கொண்ட காஞ்சிக்கு, “கல்வியிற்சிறந்த காஞ்சி” என்னும் பெயர் கிடைத்ததில் ஆச்சரியமே இல்லை அல்லவா?

இங்கே உள்ள சிவ காஞ்சியில் நாவுக்கரசர் காலத்துக்கு முன்பிருந்தே ஏகாம்பரேஸ்வரர் கோயில் கொண்டிருந்திருக்கிறார். அதற்குச் சான்றாக இந்தக் கோயில் வளாகத்திலேயே சில கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப் பட்டிருக்கின்றன. இந்தக் கற்றளிக் கோயில் இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டப் பட்ட கைலாசநாதர் கோயிலுக்குப் பின்னர் கற்றளியாக மாறி இருக்கக் கூடும் எனவும், அதற்கு முன் செங்கல்லால் கட்டப் பட்ட கோயில் ஒன்று இருந்திருக்கிறது என்றும் அந்தக் கல்வெட்டுக்கள் மூலம் தெரிய வருகிறது. எப்படி ஆனாலும் கிட்டத் தட்ட ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தக் கோயிலின் தல வரலாறு பின்வருமாறு சொல்லப் படுகிறது.

ஈசனின் கண்களை விளையாட்டாகப்பொத்திய அம்பிகை மீண்டும் ஈசனை அடைய வேண்டி பூவுலகுக்கு வர நேர்ந்தது. முதலில் மாங்காடு என்னும் இடத்தில் பஞ்சாக்னி வளர்த்து ஒற்றைக் காலில் நின்று தவம் செய்த அம்மை, பின்னர் ஈசனைப் பூஜிக்க வேண்டி, காஞ்சிபுரத்தில் வேகவதி ஆற்றுக்கு அருகே மணலால் சிவலிங்கம் ஒன்றை அமைத்து வழிபட்டு வந்தாள். அங்கேயும் ஈசனின் சோதனை தொடர்ந்தது. அம்பிகை மாமரத்தின் நிழலில் இருந்து ஈசனை வழிபட்டு வந்தாள். அப்போது அங்கேயும் வெப்பம் அதிகரிக்கச் செய்தார் ஈசன். தன் சகோதரனின் உதவியை நாடிய அம்பிகைக்கு ஈசனின் சடாமுடியில் இருந்த சந்திரனின் அமுத கிரணங்களால் குளிர்ச்சி ஊட்டினார் விஷ்ணு. அப்போது கங்கையை ஏவ, கங்கை தன் சகோதரி என்பதால் அவளைச் சமாதானம் செய்து கொண்டாள் அம்பிகை. ஆனால் வேகவதியாற்றில் வெள்ளம் பெருக்கெடுக்குமாறு ஈசன் செய்ய தான் மணலால் கட்டிய லிங்கம் அடித்துச் சென்றுவிடுமோ என பயந்த அம்பிகை தன் இரு கைகளாலும் அந்த லிங்கத்தை அணைத்துக் கொண்டார். அம்பிகையின் ஸ்பரிசம் பட்டதுமே உள்ளம் குளிர்ந்த ஈசன், அவளுக்குக் காட்சி கொடுத்தார். அம்பிகை தழுவியதால் தழுவக் குழைந்த நாதர் என்ற பெயரும் பெற்றார் ஈசன்.

இந்தக் கோயிலின் தல விருஷம் மாமரம். நான்கு கிளைகள் கொண்ட இந்த மாமரத்தில் நான்கு பருவங்களில் நான்கு வித சுவையோடு கூடிய வித்தியாசமான மாங்கனிகள் பழுக்கும். நான்கு கிளைகளும் நான்கு வேதங்கள் எனச் சொல்லப் படுகிறது. இந்த மாமரம் மூவாயிரம் வருஷங்களுக்கும் முற்பட்டது என்று சொல்லுகின்றனர். நான் முதலில் பார்த்தபோது மாமரம் பரந்து விரிந்து இருந்தது. இப்போ அதன் கிளைகள் வெட்டப் பட்டுச் சுற்றிலும் கட்டடங்கள் எழுப்பப் பட்டு., நடுவில் அம்பிகையும், ஈசனும் இருக்குமிடம் ஒரு கோயில் போல் மாற்றப் பட்டு, அதற்குத் தனிச் சீட்டு என வைக்கப் பட்டு! கொடுமைடா சாமி! இத்தனையையும் பார்த்துண்டு இருக்கே, உனக்கே வேண்டி இருக்கோனு தோணுதே!

கோயிலுக்குள் நுழையும் இடம் முன்னாடி கடைகள் எதுவும் இல்லாமல் இருந்தது. இப்போக் கடைகளை அனுமதிச்சிருக்காங்க.  

26 comments:

 1. நான் சமீபத்தில் கச்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குப் போய் அங்குள்ள திவ்யதேசப் பெருமாளைச் சேவித்தேன்.

  ஏகாம்பரேஸ்வரரை தரிசிக்க முடியவில்லை. கூட்டம் ரொம்ப ஜாஸ்தி அப்போது ஒருவர் நான் சுருக்கு வழியில் அழைத்துக்கொண்டு செல்லவா என்றார் (என் மனைவிலாம் வருவது சந்தேகம். அவள் பெருமாள் சன்னிதி பக்கத்திலேயே நின்றுகொண்டிருந்தாள்). ஆனால் எனக்கு குறுக்கு வழியில் போவது உகப்பா இல்லை என்று சேவிக்கலை.

  ReplyDelete
  Replies
  1. காஞ்சிபுரத்தில் எல்லாக் கோயில்களிலுமே கூட்டம் இருக்கும். குமரகோட்டம், சித்ரகுப்தன் கோயில் எல்லாம் போனீங்களா? சின்னக் காஞ்சீபுரத்தில் அருமையான புடைவைகள் கிடைக்கும் சந்நிதித் தெருவிலேயே!

   Delete
  2. குமரகோட்டம், நான் அத்திவரதர் சேவித்த அன்று கோவில் வழியா காஞ்சி மடத்துக்குப் போனேன். அதன் புராதனம் தெரியாததாலும் நேரக் குறைவினாலும் உள்ளே செல்லலை. சித்திரகுப்தன் கோவில்-கேள்விப்பட்டதே இல்லை.

   கடைகளின் வெளியே தொங்கவிட்டிருக்கும் புடவைகளின் அழகு கண்ணைக் கவர்ந்தது. என்னவோ..மனைவிக்கு வாங்கித்தரணும் என்று மனசுல எழலை. என்ன காரணம்னு தெரியலை. நான் அழகான புடவைகளைக் கண்டால் உடனே அவளுக்கு வாங்கித்தரும் இயல்புடையவன்.

   Delete
  3. நல்ல தரமான கைத்தறிப் புடைவைகள். சின்னக் காஞ்சீபுரத்தில் தான் கிடைக்கும். நன்கு உழைக்கும். பட்டெல்லாம் வாங்குவது எனில் அங்கேயே உள்ள உள்ளூர்க்காரர்கள் யோசனையில் தான் வாங்கலாம். நாங்க பட்டெல்லாம் வாங்கியது இல்லை. கைத்தறிப் புடைவைகள் பருத்தியிலே!

   Delete
 2. மாமரம்..விரிந்திருந்தது.. நான்கு கிளைகளில் நான்கு பருவங்களில் நான்குவித சுவையுள்ள மாம்பழம்...

  நான் பார்த்தது, பித்தளைக் கவசம் போட்ட மாமரத் தண்டுப்பகுதி மட்டும்தான். மாமரம்லாம் பார்க்கலை.

  வாட்சப்பில் அனுப்பறேன்

  ReplyDelete
  Replies
  1. நான் கடைசியாகப் போய்ப் பத்து வருஷங்கள் இருக்கலாம்! ஆகவே தற்போதைய நிலைமை தெரியவில்லை.

   Delete
  2. 10 வருஷத்துல இவ்வளவு மாற்றமா? கோவில் ஸ்தல விருட்சமே காணாமல்போகும் அளவு? ஆச்சர்யம்தான்.

   Delete
  3. நீங்கள் சொல்வது மனதைக் கலங்க அடிக்கிறது நெல்லைத் தமிழரே!

   Delete
 3. அப்போ முன்னால ஏகாம்பரேச்வரருக்கு தனி கோவில் இல்லையா? அப்படித் தோணலையே..இது புராதான கோவில் மாதிரித்தான் எனக்குத் தோன்றியது.

  ReplyDelete
  Replies
  1. //அப்போ முன்னால ஏகாம்பரேச்வரருக்கு தனி கோவில் இல்லையா? அப்படித் தோணலையே..இது புராதான கோவில் மாதிரித்தான் எனக்குத் தோன்றியது.//

   //திருக்கச்சி ஏகம்பம் என அழைக்கப் படும் ஏகாம்பரேஸ்வரர் கோயில் ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இருந்ததாய்ச் சொல்லப் படுகிறது.//
   //இங்கே உள்ள சிவ காஞ்சியில் நாவுக்கரசர் காலத்துக்கு முன்பிருந்தே ஏகாம்பரேஸ்வரர் கோயில் கொண்டிருந்திருக்கிறார். அதற்குச் சான்றாக இந்தக் கோயில் வளாகத்திலேயே சில கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப் பட்டிருக்கின்றன. இந்தக் கற்றளிக் கோயில் இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டப் பட்ட கைலாசநாதர் கோயிலுக்குப் பின்னர் கற்றளியாக மாறி இருக்கக் கூடும் எனவும், அதற்கு முன் செங்கல்லால் கட்டப் பட்ட கோயில் ஒன்று இருந்திருக்கிறது என்றும் அந்தக் கல்வெட்டுக்கள் மூலம் தெரிய வருகிறது. எப்படி ஆனாலும் கிட்டத் தட்ட ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தக் கோயிலின் தல வரலாறு பின்வருமாறு சொல்லப் படுகிறது.//

   அவசரம்! அவசரம்! ஒரே அவசரம்! ஒழுங்காப் படிக்கிறதே இல்லை.

   Delete
  2. //நடுவில் அம்பிகையும், ஈசனும் இருக்குமிடம் ஒரு கோயில் போல் மாற்றப் பட்டு, அதற்குத் தனிச் சீட்டு என வைக்கப் பட்டு!// - இதுனாலதான் கன்ஃப்யூஸ் ஆயிட்டேன். நீங்க அந்த கூண்டுக்குள் வைக்கப்பட்டிருந்த மாமரத் தண்டைச் சொல்றீங்கன்னு நினைக்கறேன்.

   Delete
  3. grrrrrrrrrrrrrrrrrrr! :))))) மதுரையில் வைச்சிருக்கற மாதிரி இங்கேயும் பண்ணிட்டாங்க போல! :( வாட்சப்பில் வந்த படத்தைப் பார்த்தேன்.

   Delete
 4. எல்லா ஊர் கோவில்களிலுமே கடைகள் இருப்பது பக்தர்களுக்கு இடையூறாக இருக்கிறது இதை தேவசம் போர்டு ஆலோசிக்கணும்.

  ReplyDelete
  Replies
  1. @Killergee! கடைகள் எனக்குத் தெரிந்து பல வருடங்கள் இல்லாமல் இருந்தன. பின்னர் தான் நாங்க கடைசியாப் போனப்போக் கடைகள் வந்திருந்தன! :(

   Delete
 5. வரும் இருபத்தி மூன்றாம் தேதி காஞ்சிபுரம் செல்ல வேண்டிய வேலை இருக்கிறது. பாஸ் உறவினர் சதாபிஷேகம். போகமுடியுமா என்று பார்க்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம், 23 ஆம் தேதி அன்னிக்குத் தான் பிரதமர் வரார் காஞ்சீபுரத்துக்கு! கெடுபிடிகள் சும்மாவே ஜாஸ்தியா இருக்குன்னாங்க! அன்னிக்குக் கேட்கவே வேண்டாம். கவனம்!

   Delete
 6. எத்தனை தகவல்கள்.

  தழுவக் குழைந்த நாதர் - எத்தனை அழகான பெயர்.

  ஸ்தல விருக்ஷம் வெட்டப்பட்டு - அடடா.... பல இடங்களில் இப்படித்தான் என்பது சோகம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், தகவல்கள் சேகரிப்பது கோயில்களின் புராதனத்தை நமக்குத் தெரியப்படுத்துகிறது அல்லவா?
   "தழுவக் குழைந்த நாதர்" இங்கே கும்பகோணம் அருகே திருச்சத்திமுற்றத்திலும் உண்டு. ஸ்தல விருக்ஷங்கள் இருந்தால் தான் இப்போல்லாம் ஆச்சரியப்படணும்.

   Delete
  2. https://aanmiga-payanam.blogspot.com/2006/08/23.html திருச்சத்திமுற்றம்(முத்தம்) பற்றிய சின்னக் குறிப்பை இங்கே காணலாம்.

   Delete
 7. விரிவாக வரலாற்று செய்திகள் அடங்கிய அருமையான பதிவு.
  படங்களும் நன்றாக இருக்கிறது.

  மாமரம் வெட்டபட்டு கவசம் சாற்றபட்டு இருப்பது மனதுக்கு வேதனை அளிக்கிறது.
  முன்பு கிளை பரப்பிக் கொண்டு இருந்ததே!

  கோவில்களில் இப்போது எந்த வழியிலாவது வருமானம் வருவது போல் பார்த்துக் கொள்கிறார்கள் போலும்.

  காஞ்சீபுரம் முழுவதும் புடவை வாங்கச் சொல்லி நம் பின்னால் நிறைய பேர் துரத்தி கொண்டு வருவார்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி, நாங்க மாமரத்தைப் பார்த்திருக்கோம். இப்போ இல்லை என்பது வருத்தமாய் இருக்கிறது. புடைவை வாங்கச் சொல்லித் துரத்துபவர்கள் பின்னால் எல்லாம் போனால் அவ்வளவு தான்! :)))) படங்கள் விக்கிபீடியா!

   Delete
 8. கோயிலுக்குச் சென்றிருந்தாலும் புராணம் உங்கள் பதிவின் மூலம்தான் அறிகிறேன் கீதாக்கா.

  நாங்கள் சென்ற சமயம் நல்ல காலம் அத்தனை கூட்டம் இல்லை. நான் சொல்வது 30 வருடங்களுக்கு முன் ஹிஹிஹி...விவரணம் அருமை கீதாக்கா.

  என் அத்தையும் அங்கு இரு வருடங்கள் இருந்தார் அப்போதும் சென்றதுண்டு. ஆமாம் கீதாக்கா சின்ன காஞ்சியில் சன்னதி தெருவில் நல்ல புடவைகள், ட்ரெஸ் மெட்டீரியல் கூடக் கிடைக்கும். நான் அப்போதிலிருந்தே காட்டன் மட்டும்தான் கட்டுவேன் என்பதால் அத்தை எனக்கு காட்டனில் சல்வார் வாங்கிக் கொடுத்தார். காஞ்சி காட்டன் ஃபேமஸ் ஆச்சே!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நான் போகும்போதே கூடியவரை அந்த இடம் குறித்த தகவல்கள், பார்க்கவேண்டிய இடங்கள் எனத் தெரிந்து கொண்டு போய்விடுவேன். சில சமயங்களில் முடியறதில்லை. முன்னெல்லாம் நிறைய நேரம் இருந்தாற்போல் இருந்தது. இப்போது நேரமே இல்லாத மாதிரி இருக்கு. இத்தனைக்கும் அப்போல்லாம் சொந்த வீடு தனி வீடாக என்பதால் வேலை வாங்கும் தினம் தினம்! இப்போ இந்த சின்னக் குடியிருப்பு வளாகத்தில் வேலை அதிகம் போல நேரமே கிடைப்பதில்லை! :(

   Delete
 9. “கல்வியிற்சிறந்த காஞ்சி” ....அருமையான தகவல்கள் ..

  தழுவக் குழைந்த நாதர் ...ஆஹா என்ன அழகிய பெயர் ..

  ReplyDelete
  Replies
  1. வாங்க அனு. அங்கேயும் வந்து கருத்துச் சொன்னதுக்கு நன்றி. காஞ்சியிலும் தழுவக் குழைந்த நாதர், இங்கே திருச்சத்திமுற்றத்திலும் தழுவக் குழைந்த நாதர்.

   Delete
 10. காஞ்சியில் பார்க்கவேண்டிய கோயில்களில் இதுவும் ஒன்று.

  ReplyDelete