என் பயணங்களில்
காஞ்சிபுரம் பற்றிய தகவல்கள் ஏற்கெனவே எழுதியவற்றை மேற்கண்ட சுட்டியிலும் படிக்கலாம்.
காமாக்ஷி சந்நிதிக்கு நேரே அவளை வணங்கிய கோலத்தில் துண்டீர மகாராஜாவின் சந்நிதி இருக்கிறது. உற்சவ காமாக்ஷி சந்நிதியில் இருந்து துண்டீர மகாராஜா சந்நிதி வரையிலும் மெளனமாய்ச் செல்லவேண்டும் என்பது ஐதீகம். இங்கே பிரமனால் பூஜிக்கப் பட்ட முழுதும் தங்கத்தால் ஆன சொர்ண காமாக்ஷி இருந்தாள். பிரமன் அம்பிகைக்கும், அப்பனுக்கும் திருமண உற்சவம் காணவேண்டிப் பிரார்த்திக்க, ஏகாம்பரேஸ்வரருக்கு உகந்த ஏகாம்பிகை அம்பிகையின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றினாள். பின்னர் அதே போன்ற தங்கத்தாலான மூர்த்தத்தைப் பிரதிஷ்டை செய்ய அவளே பங்காரு காமாக்ஷி எனப்பட்டாள். இந்த பங்காரு காமாக்ஷியை முகமதியர் படை எடுப்பின் போது அவர்களிடமிருந்து காக்க எண்ணி, அப்போது காஞ்சி பீடத்தின் பீடாதிபதியான சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், பங்காரு காமாக்ஷியைக் கோயில் அர்ச்சகர் ஒருவரின் உதவியோடு உடையார்பாளையம் ஜமீனுக்குக் கொண்டு சென்றார். வழியில் தஞ்சையை ஆண்ட மராட்டி அரசன் பிரதாப சிம்மனது விருப்பத்தின் பேரில் அங்கே தங்க, மன்னனின் வேண்டுகோளின்படி புதிதாய்க் கட்டப் பட்ட ஆலயத்தில் அந்த பங்காரு காமாக்ஷி பிரதிஷ்டை செய்யப் பட்டாள். காஞ்சி அர்ச்சகர்களில் சிலரே இங்கும் குடி வந்து வழிபாட்டைத் தொடர்ந்தனர். சியாமா சாஸ்திரிகள் இந்த மரபில் வந்தவரே.
பாரதம் முழுதும் கால்நடையாகவே பயணம் செய்து இந்துமதத்தின் வழிபாடுகளை ஆறுவகையாகப் பிரித்து அத்வைதத்துக்குப் புத்துயிர் கொடுத்த ஆதிசங்கரர் காஞ்சியில் காமாக்ஷியின் முன்பாக ஸ்ரீசக்ர யந்திரத்தைப் பிரதிஷ்டை செய்தார். அப்போது காஞ்சியை ஆண்ட மன்னனிடம் அம்பாளை நடுவில் வைத்து ஸ்ரீசக்ர வடிவில் காஞ்சியைப் புனர் நிர்மாணமும் செய்யச் சொன்னார். ஸ்ரீசங்கரர் அங்கேயே மன்னனின் வேண்டுகோளின்படி சர்வக்ஞபீடமும் ஏறினார். காஞ்சியிலேயே முக்தியும் அடைந்தார். காமாக்ஷி கோயிலில் ஆதிசங்கரருக்குத் தனிச் சந்நிதியும், உற்சவர் சிலையும் உண்டு. காஞ்சிமரமே இந்தக் கோயிலின் தல விருக்ஷம் ஆகும். இந்தக் கோயிலின் ஒவ்வொரு வாயிலும் ஒவ்வொரு திசையில் அமைந்துள்ளது. இங்குள்ள எந்தச் சிவன் கோயிலிலும் அம்பாள் சந்நிதியே கிடையாது. காமாக்ஷி ஒருவளே அனைத்துச் சக்தியையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு அனைத்துக் கோயில்களுக்கும் ஒரே சக்தியாக விளங்குகிறாள். கையில் கரும்பு வில்லை வைத்துக் கொண்டு காக்ஷி அளிக்கும் காமாக்ஷி அந்த மன்மதன் திரும்ப உயிர் பெறக் காரணம் ஆனவள்.
இந்தக் கோயிலின் சிறப்பம்சம் முக்கோண வடிவக் கருவறை ஆகும். பிரகாரம் மூன்றரைச் சுற்றுக் கொண்டது. ஸ்ரீசக்ரத்தின் பிந்துமண்டலத்தில் முக்கோணத்தில் உறைபவள் என்பதைக் குறிக்கும் வண்ணம் கருவறை முக்கோண வடிவிலும், நம் உடலில் சுருண்டிருக்கும் குண்டலினி மூன்றரைச் சுற்று என்பதைச் சுட்டும் வண்ணம் மூன்றரைச் சுற்றுப் பிராகாரமும் அமைந்துள்ளது என்பார்கள். இந்தக் கோயிலில் அம்மன் பிராகாரத்தைச் சுற்றி வலம் வர முடியாது. காமாக்ஷி கோயிலின் ஒரு புறம் வரதராஜப் பெருமாள் கோயிலும் மறுபுறம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலும் அமைந்திருப்பது அம்பாளின் திருக்கல்யாணத்தை நினைவு படுத்துவதாக அமைகிறது. குமரகோட்டமோ எனில் காமாக்ஷி கோயிலுக்கும், ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கும் நடுவில் அமைந்து சோமாஸ்கந்த மூர்த்தியை நினைவு மூட்டுகிறது. அடுத்து அஞ்சன காமாக்ஷி எனப் பெயர் சூட்டப் பட்ட ஸ்ரீ என்னும் மஹாலக்ஷ்மியும், அவளைக் காணத் திருட்டுத் தனமாக அங்கே வந்த கள்ளனையும் காணலாமா???
ஒருசமயம் வைகுந்தவாசன் ஆன மஹாவிஷ்ணுவோடு உற்சாகமாயும், உல்லாசமாயும் பேசிக் கொண்டிருந்த ஸ்ரீ என்னும் மஹாலக்ஷ்மி, விளையாட்டாகத் தன் நாதனைக் கறுப்பன் என அழைக்க, மஹாவிஷ்ணுவோ, கறுப்பனை ஏன் திருமணம் செய்து கொண்டாய்? எனக் கேட்டார். பாற்கடல் தேவியின் பொன்வண்ணத்தினால் பொன் மயமாய் ஜொலிக்க அந்த ஜொலிப்பில் மாயக் கண்ணனான மஹாவிஷ்ணுவின் நிறமும் தங்கமாய் ஜொலித்ததாயும், அதில் ஏமாந்துவிட்டதாகவும் சொன்னாள் ஸ்ரீ. மஹாவிஷ்ணுவும், இப்போது கொஞ்சம் நம் திருவிளையாடல்களைக் காட்ட நேரம் வந்துவிட்டது என எண்ணி, இவ்வுலகில் தங்கள் மேனி அழகை மெய்ம்மறந்து ரசிக்கும் அனைவருக்கும் ஒரு பாடமாகவும் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு, “லக்ஷ்மி, உனக்கு கர்வம் அதிகமாகிவிட்டது. நீ அழகாய் இருப்பதால் தானே இந்த அளவுக்குப் பெருமை? உன் அழகெல்லாம் இழந்து நீ பூவுலகில் திரிவாய்.” என்று சொல்ல, பதறிய லக்ஷ்மி, இதற்கு என்ன விமோசனம் எனக் கேட்க, இப்போது என் அருமை சகோதரி காமாக்ஷியைப் போய்க் கேள், அவள் உனக்கு உதவுவாள் என்று அனுப்பிவிடுகிறார்.
காஞ்சி வந்த லக்ஷ்மி காமாக்ஷியை எண்ணித் தவத்தில் ஆழ்ந்தாள். காமாக்ஷி கறுத்த லக்ஷ்மியை “அஞ்சன காமாக்ஷி “ என அன்போடு அழைத்தாள். மேலும் அவளைத் தன் அருகிலேயே வைத்துக் கொண்டு, தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அளிக்கப் படும் குங்குமப் பிரசாதத்தை அவர்கள் அஞ்சனகாமாக்ஷிக்குச் சார்த்தியபின்னரே இட்டுக் கொள்ளுவார்கள். இப்படி பக்தர்கள் இட்ட குங்குமத்தினால் நீ இழந்த உன் பொன் வண்ணமும் பெறுவாய் . உன் திருமேனியைத் தொட்டு வணங்கும் பக்தர்களுக்கு சகல செளபாக்கியங்களையும் நீ வழங்குவாய்!”எனச் சொல்கிறாள். அதன்படி சாப விமோசனம் பெற்றுப் பொன் வண்ணம் அடையும் லக்ஷ்மியைக் காணவேண்டும் என்ற எண்ணம் விஷ்ணுவுக்கு உண்டாக, அவர் எவரும் அறியாமல் திருட்டுத் தனமாய் அங்கே வர, சகோதரிக்குத் தெரியாதா என்ன?
அண்ணனைக் கண்டு அவள், வாராய் கள்ளா! என அழைக்க, மாதவனும், லக்ஷ்மியும் சேர்ந்தனர். ஆகவே இங்கே அஞ்சனகாமாக்ஷி, செள்ந்தர்ய லக்ஷ்மி ஆகியோரோடு மஹாவிஷ்ணுவையும் காணமுடியும். ஆனால் இவை எல்லாமும் நாம் உள்ளே சென்றால்தான் பார்க்கமுடியும். வெளியே இருந்து பார்க்கமுடியாது. ஒருவேளை மஹாவிஷ்ணுவையாவது பார்த்துவிடலாம். அஞ்சன காமாக்ஷி உள்ளே காமாக்ஷிக்கு வெகு அருகிலேயே இருப்பதால் நம்மால் பார்க்க இயலவில்லை. கோயில் நிர்வாகம் தான் பக்தர்களுக்கு இவற்றைத் தரிசனம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும். மஹாவிஷ்ணு இருப்பது 108 திவ்யதேசங்களில் ஒன்றாய்க் கூறப் படுகிறது. விஷ்ணுவின் திருநாமம் கள்வர் பெருமாள் என்றே சொல்கின்றனர். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பட்டிருக்கிறது.
அம்பாள் சந்நிதி நுழையும் இடத்தில் மேலே நெமிலி ஸ்ரீபாலாவின் சித்திரம் இடம்பெற்றுள்ளது. காமாக்ஷி அவதாரம் சிறப்பு வாய்ந்ததாய்ச் சொல்லப் படுகிறது. சக்தியின் அம்சமான காமாக்ஷி என்ற பெயரின் அர்த்தத்துக்கு பக்தர்கள் விரும்பியதைத் தருவாள் என்ற பொருளில் வரும். காமாக்ஷியின் கண்களின் திரிவேணிசங்கமமும் இருப்பதாய்ச் சொல்லுகின்றனர். கண்மணி கறுப்பு விழிகள் வெண்மை, அதில் ஓடும் செவ்வரிகள் முறையே கங்கை, யமுனை,சோனபத்ரா என்று சிலரும் /சரஸ்வதியைக் குறிக்கும் என்று சொல்கின்றனர். 24 அக்ஷரங்களைக்கொண்ட காயத்ரி பீடத்தின் நடுவே பஞ்ச பிரம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஸ்ரீகாமாக்ஷி நம் ஐம்புலன்களையும் வசப்படுத்தி நம்மைத் தன்பால் ஈர்ப்பதற்காகவே அவதரித்திருக்கிறாள். அனைவரும் ஸ்ரீகாமாக்ஷியின் பாதங்களில் பணிவோம். அழகான காஞ்சியில் புகழாக வீற்றிடும் அன்னை காமாக்ஷி உமைக்கு நம் நமஸ்காரங்களைச் சமர்ப்பிப்போம்.
இதற்கடுத்துக் காலை உணவு அருந்தியபின்னர் முறையே வரதராஜப் பெருமாள் கோயிலுக்கும், ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கும் சென்றோம். முதலில் ஏகாம்பரேஸ்வரரைப் பார்த்துவிடுவோமா???
வரதர் எங்கே எனக் கேட்பவர்கள் இரண்டு நாட்கள் பொறுத்திருக்கவும். அத்தி வரதர் நிற்க ஆரம்பிக்கிறதுக்குள்ளே காஞ்சி வரதர் வந்துடுவார்.
நான் அத்திவரதர் சேவைக்குச் சென்றிருந்தபோது முதல் முதலாக காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றேன். என்னுடன் வந்த மாம்பலத்தைச் சேர்ந்த ஒருவர் (இரயில் சிநேகம்) காமாட்சி அம்மனை தரிசனம் செய்துவைத்தார். பிறகு அங்கேயே கள்வனார் சன்னதிக்குப் போகமுடியாமல் வெளியிலிருந்தே கண்ணாடி மூலம் தரிசனம் செய்தேன். முன்னமே தெரிந்திருந்தால் அஞ்சன லக்ஷ்மியைப் பற்றிக் கேட்டிருப்பேன், சேவித்துமிருப்பேன்.
ReplyDeleteவாங்க நெ.த. அடுத்த முறை போகும்போது அஞ்சன லக்ஷ்மியைப் பற்றித் தெரிந்து கொண்டு கேட்டுச் சேவித்து விட்டு வாருங்கள். கள்வனாரை நாங்க 2,3 முறை பார்த்திருக்கோம்.
Deleteஅரூப லக்ஷ்மி என்றும் சொல்வார்கள்.
Delete//சர்வக்ஞபீடமும் ஏறினார்.// - விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் 'சர்வக்ஞ சர்வதோ முகஹ" என்பதுதான் தெரியும். சர்வக்ஞ பீடம் என்றால் என்ன?
ReplyDeleteஎல்லோருடனும் வாதங்களில் வென்று சகலமும் அறிந்தவர் என்பது சர்வக்ஞர் என்பதன் பொருள். ஆதி சங்கரர் இந்த சர்வக்ஞ பீடம் காஞ்சியில் தான் ஏறினார் எனச் சிலரும் இல்லை காஷ்மீரில் எனப் பலரும் சொல்கின்றனர். சிருங்கேரி மடத்தின் படி காஷ்மீரில் சர்வக்ஞ பீடம் ஏறியதாய்ச் சொல்லப்படுகிறது, காஞ்சி மடத்துக்காரர்கள் காஞ்சி என்கின்றனர். இது குறித்து "சங்கர விஜயத்தில்" விளக்கமாக எழுதி இருக்கிறேன்.
Deleteகாஷ்மீர் சர்வக்ஞ பீடத்தில் 64 படிகளிலும் உள்ள காவல் தெய்வங்களின் சவாலை ஏற்றுக்கொண்டு அவற்றின் கேள்விகளுக்குச் சரியான பதிலை அளித்த பின்னர் அங்கிருந்த சர்வக்ஞ பீடத்தில் ஆதி சங்கரர் அமர்ந்தார் என்பார்கள்.
Deleteதுண்டீர மஹாராஜா சன்னிதி, முக்கோண வடிவில் அமைந்த கருவறை - இவற்றை அடுத்த முறை நன்றாகப் பார்க்கிறேன்.
ReplyDeleteபாருங்கள், பாருங்கள். நன்றாய் நிதானமாய்ப் பாருங்கள்!
Deleteஎங்க கீதா சாம்பசிவம் மேடம்..பார்க்கிறது. அவங்கதா, போங்க போங்க என்று விரட்டுகிறார்களே. அப்புறம் என்னைக் கோவிலுக்குக் கூட்டி வந்தவர், கீழே அர்ச்சனை வரிசையில் என்னைக் கூட்டிச் சென்று சேவித்துவைத்தார்.
Deleteஅப்புறம், கள்வனாரையும் அப்படியே கண்ணாடியில் பார்த்துக்கோங்க. உள்ள வரக்கூடாது என்று சொல்லிவிட்டனர்.
ஒருவேளை அத்திவரதர் கூட்டம் இங்கேயும் வந்ததனால் இருக்கலாமோன்னு மனசைத் தேத்திக்கொண்டேன்.
இந்தக் கோயில்களில் எல்லாம் தெரிந்தவர்கள் இருந்தாலே நன்றாக ஆற அமர தரிசனம் செய்ய முடியும்.
Deleteஸ்ரீ காமாக்ஷியே அழகு. பங்காரு காமாக்ஷி தஞ்சாவூரில்
ReplyDeleteஇருக்கிறாள் என்று நினைத்தேன்.
உத்சவ வரதரும் உடையார் பாளையம் செல்கிறார்.
காமாக்ஷியும் அங்கே செல்கிறாள். உடையார் பாளைய மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.
காஞ்சியில் இருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
ஆனந்தம் தரும் செய்திகள்.
மிக நன்றி கீதா.
காமாக்ஷியின் கோவிலில் கள்ளழகரையும் தரிசித்திருக்கிறோம்.
வாங்க வல்லி. பங்காரு காமாக்ஷி தஞ்சையில் தான் இருக்கிறாள். உடையார்பாளையம் போகலையே!
Deleteஸ்ரீ ஸ்வர்ணகாமாக்ஷி சிறிது காலம் உடையார் பாளையத்திலும் சிலகாலம் திரு ஆரூரிலும் இருந்தாள் என்றும் அதன் பின்னரே தஞ்சையம்பதியில் நித்ய வாசம் கொண்டாள் என்றும் கூறுவர்...
Deleteமேல் அதிகத் தகவலுக்கு நன்றி துரை!
Deleteஎப்போதோ போனது...சுத்தமாக ஞாபகமில்லை. நேற்று சக்ர காளி அம்மன் கோவில் சென்றபோது சிறிய மயிர்க்கூச்சல் ஏற்பட்டது புதிய அனுபவம்.
ReplyDeleteசக்ரகாளி அம்மன்? செங்கல்பட்டிலா? காஞ்சியிலா? பவதாரிணி கோயிலோ? நான் செங்கல்பட்டில் எந்தக் கோயிலையும் பார்த்தது இல்லை.
Deleteநிறைய விடயங்கள் தந்தமைக்கு நன்றி
ReplyDeleteஅத்தி வரதர் வரலாறு அறிய காத்திருக்கிறேன்.
வாருங்கள் கில்லர்ஜி. கருத்துக்கு நன்றி. விரைவில் வெளியிடுகிறேன்.
Deleteபல விஷயங்கள் எனக்குப் புதியவை. தொடர்கிறேன்.
ReplyDeleteபிரபலமான பல கோவில்களில் நின்று நிதானித்து தரிசனம் செய்ய முடிவதில்லை என்பதும் ஒரு குறை தான். எல்லா இடங்களிலும் தெரிந்தவரை வைத்துக் கொள்வது அத்தனை சுலபமில்லையே.
வாங்க வெங்கட், நீங்க போகாத கோயில் ஒன்றும் இருப்பது குறித்து சந்தோஷம்! :))))) ஒரு முறை போயிட்டு வாங்க!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteகாஞ்சி காமாக்ஷியை பற்றிய விவரங்கள் மிக அழகாக கூறியிருக்கிறீர்கள். கள்வனாரின் கதையும் அருமை. இந்த விபரங்கள் தங்கள் வாயிலாக படித்து ஆனந்தமுற்றேன். அடுத்து வரதராஜ பெருமாளையும் ஏகாம்பரேஸ்வரரையும் காண அவர்கள் வரலாறு பற்றி அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். தெய்வங்களைப்பற்றி தாங்கள் விவரித்து கூறும் போது மெய்சிலிர்க்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி. அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா! நிறையத் தரம் காஞ்சிக்குப் போயிருந்தாலும் இந்த ட்ராவல்ஸ் காரங்களோடு போனது தான் எழுத முடிஞ்சது! :))))
Deleteகாலங்கார்த்தால காமாக்ஷியின் தரிசனம்..
ReplyDeleteகருணாகடாக்ஷி அனைவரையும் காத்தருள்வாள்...
காமாக்ஷியின் கடைக்கண் பார்வை அனைவரையும் ரக்ஷிக்கட்டும்.
Deleteஇனிய தரிசனம்.
ReplyDeleteவாங்க மாதேவி நன்றி.
Deleteஅஞ்சன காமாக்ஷி , பங்காரு காமாக்ஷி - அறிந்துக் கொண்டேன் ..
ReplyDeleteஅருமையான தகவல்கள் மா ...குறித்துக் கொள்கிறேன் அங்கு செல்லும் போது பார்க்க ஏதுவாக இருக்கும் ..
வாங்க அனு, போய்ப் பார்த்துட்டு வாங்க!
Deleteகாமாட்சியம்மன் தரிசனம் கிடைத்துவிட்டது மா ..பதிவும் போட்டாச்சு ..முடியும் போது வந்து பாருங்க
Deletehttps://anu-rainydrop.blogspot.com/2019/07/blog-post_26.html
கஞ்சி காமாட்சி கோவிலில் பார்த்த வரிகள்/
ReplyDeleteபத்துவிரல் மோதிரம் எத்தனைப் பிரகாசமது,
பாடகம் தண்டை கொலுசும் பச்சை வைடூரியம்
இச்சையா யிழைத்திட்ட பாத சிலம்பின் ஒலியும்
முத்து மூக்குத்தியும் இரத்தினப் பதக்கமும் மோகன மாலையழகும்
முழுதும் வைடூரியம் புஷ்பராகத்தினால் முடிந்திட்ட தாலி அழகும்
சுத்தமாயிருக்கின்ற காதினிற் கம்மலும் செங்கையின் பொன் கங்கணமும்
ஜெகமெலாம் விலை பெற்ற முகமெலாம் ஒளியுற்ற சிறு காது கொப்பின் அழகும்
அத்திவரதன் தன் தங்கை சக்தி சிவ ரூபத்தை அடியனால் சொல்லத் திறமோ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே. !
வாங்க ஜிஎம்பி ஐயா, என் அம்மா தினம் இதைப் பாடிக்கொண்டே தான் சமைப்பார். எங்கேயானும் இது ஒலித்தாலே அம்மாவோட அந்த நினைவுகள் தான் வரும்.
Deleteஅஞ்சனகாமாக்ஷி வரலாறு அருமை.
ReplyDeleteபெருமாளை தரிசனம் செய்து கண்ணாடிதான் அஞ்சனகாமாக்ஷி என்று தரிசித்த நினைவு.
பல வருடம் ஆகி விட்டதால் வரலாற்றை படித்து மகிழ்ந்தேன்.
பாலசுப்பிரமணியம் சார் சொல்லும் பாடலை வெள்ளிக் கிழமை பாடுவேன்.
கீதாக்கா நாளை வருகிறேன் இரு பதிவுகளையும் வாசித்து. இப்பவே லேட்டாகிவிட்டது. ஒவ்வொன்றா பார்த்து வரும் போதுதான் நேற்றும் உங்க பதிவு வந்திருப்பது தெரிந்தது...
ReplyDeleteநாளை காலை வருகிறென்
கீதா
கீதாக்கா இனிய காலை வணக்கம்.
ReplyDeleteஇரு கோயில்களுமே சென்றதுண்டு. காஞ்சியில் பல கோயில்கள் சென்றதுண்டு. பல வருடங்களுக்கு முன்.
அருமையாகச் சொல்லியிருக்கீங்க. சக்தியின் சக்தியைப் பற்றி. இவ்வுலகமே சக்தி என்று சொல்ல்ப்படுவது அதனால்தானே!
//தன் நாதனைக் கறுப்பன் என அழைக்க, மஹாவிஷ்ணுவோ, கறுப்பனை ஏன் திருமணம் செய்து கொண்டாய்? எனக் கேட்டார். பாற்கடல் தேவியின் பொன்வண்ணத்தினால் பொன் மயமாய் ஜொலிக்க அந்த ஜொலிப்பில் மாயக் கண்ணனான மஹாவிஷ்ணுவின் நிறமும் தங்கமாய் ஜொலித்ததாயும், அதில் ஏமாந்துவிட்டதாகவும் சொன்னாள் ஸ்ரீ. மஹாவிஷ்ணுவும், இப்போது கொஞ்சம் நம் திருவிளையாடல்களைக் காட்ட நேரம் வந்துவிட்டது என எண்ணி, இவ்வுலகில் தங்கள் மேனி அழகை மெய்ம்மறந்து ரசிக்கும் அனைவருக்கும் ஒரு பாடமாகவும் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு, “லக்ஷ்மி, உனக்கு கர்வம் அதிகமாகிவிட்டது. நீ அழகாய் இருப்பதால் தானே இந்த அளவுக்குப் பெருமை? உன் அழகெல்லாம் இழந்து நீ பூவுலகில் திரிவாய்.” என்று சொல்ல, பதறிய லக்ஷ்மி, இதற்கு என்ன விமோசனம் எனக் கேட்க, இப்போது என் அருமை சகோதரி காமாக்ஷியைப் போய்க் கேள், அவள் உனக்கு உதவுவாள் என்று அனுப்பிவிடுகிறார்.//
ஆஹா இங்கு லக்ஷ்மி கர்வமா.
பானுக்கா எழுதிய கதையில் ராமர் சீதையைச் சொல்லுவது போல வரும்...
எதுவா இருந்தாலும் மாரல் ஆஃப் த ஸ்டோரி அழகில் கர்வம் கொள்ளக் கூடாது. சுயகர்வம் எந்த வகை கர்வமும் கூடவே கூடாது என்பதே.
கீதா