சிவகங்கைத் தீர்த்தம்.படம் சொந்தம்!
இப்போ இருக்கும் மாமரம் பழைய மாமரம் இல்லைனு ஆதாரபூர்வமாய்த் தெரிய வந்தது. ஆனாலும் இதன் பழங்களும் வித்தியாசமான சுவையோடு இருக்கு, பழைய மரத்தின் கிளை அல்லது விதையிலிருந்து வந்ததுனு சொல்றாங்க. இந்த விஷயம் எனக்குப் புதுசு. போகட்டும். மூலவர் தழுவக் குழந்த நாதரையும், மூலஸ்தானத்திலேயே அம்மன் ஈசனை அணைத்த கோலத்திலேயே லிங்கம் காட்சி கொடுப்பதையும் கவனித்துத் தரிசனம் செய்யவேண்டும். அம்பாளே பிரதிஷ்டை செய்த மணல் லிங்கம் என்பதால் இந்த லிங்கத்திற்கு தேவிக லிங்கம் என்று பெயர். அபிஷேஹம் கிடையாது. காமாக்ஷி அம்மன் கோயிலின் ஸ்ரீசக்ரத்தை ஈசனை ஸ்தாபனம் செய்யச் சொன்னாளாம் அம்பிகை. முதன்முதல் இங்கே ஸ்ரீசக்ரம் ஸ்தாபனம் செய்தது ஈசனே என்றும், அம்பாளே இந்தப் பீடத்திற்குக் காமகோடி பீடம் என்ற பெயரில் விளங்கட்டும் என்று சொன்னதாகவும் தெரியவருகிறது. பூஜை முறைகளும் துர்வாச வடிவத்தில் ஈசனையே வகுத்துக் கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டாள் என்கின்றனர். ஈசன் ஸ்தாபித்த ஸ்ரீசக்ரத்திற்கே காமாக்ஷி கோயிலில் வழிபாடுகள், ஆராதனை எல்லாம் நடக்கும். இந்த ஸ்ரீசக்ரம் கிருத யுகத்தில் துர்வாசரும், த்ரேதாயுகத்தில் பரசுராமரும், த்வாபர யுகத்தில் தெளம்யரும், கலியுகத்தில் ஆதிசங்கரரும் பொலிவூட்டி வழிபட்டிருக்கின்றனர்.
பொதுவாக சிவசக்தி பிரிவதில்லை என்பதால் எல்லாச் சிவன் கோயில்களிலும் லிங்கத்தின் பக்கம் அம்மன் இருப்பது ஐதீகம். ஆனால் ஏகாம்பரேஸ்வரரின் லிங்கத்திலேயே அம்மனும் சேர்ந்து காட்சி கொடுக்கிறாள். அதோடு காஞ்சியில் எந்தச் சிவன் கோயிலிலும் அம்பிகை சந்நிதி கிடையாது. சிற்பங்களும், அழகாய் இருந்தாலும் படம் எடுப்பது தடை செய்யப் பட்டுள்ளது. வாரம் ஒருநாள் அம்மன் ஈசனைத் தழுவிய கோலம் தெரியும்படியான கவசத்தினால் அலங்கரிக்கின்றனர் என்றும் சொல்கின்றனர். உற்சவ அம்மனுக்கு ஏலவார் குழலி என்று பெயர். இந்தக் கோயிலில் தற்சமயம் இருக்கும் ஆயிரங்கால் மண்டபம் முன்னாட்களில் நூற்றுக் கால் மண்டபமாக இருந்து, பின்னர் பிற்காலச் சோழர்களால் ஆயிரக்கால் மண்டபமாய் மாற்றப் பட்டது என்றும் சொல்கின்றனர். தற்சமயம் காணப்படும் தெற்கு ராஜ கோபுரம் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப் பட்டது என ஒரு கல்வெட்டுக் கூறுவதாயும் தெரியவருகின்றது. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஒரு கண் பார்வை இங்கே கிடைத்ததாகவும் சொல்கின்றனர்.
இங்கே உள்ள கொடிமரத்தின் முன்னே, சிவகங்கை தீர்த்தத்தின் தென்கரையில் உள்ளது கச்சிமயானம் எனச் சொல்லப் படும் சந்நிதி. இங்கேதான் யாகசாலையில் பண்டாசுர வதம் நடந்தது எனச் சொல்லப் படும். சிவகங்கைத் தீர்த்தமே அம்மனும் ஈசனும் வளர்த்த நெய்க்குண்டம் தான் என்று சொல்லுகிறார்கள். இந்தக் கச்சி மயானத்தின் லிங்கத் திருமேனி யாகசாலை நெருப்பிலிருந்து உண்டானது என்றும் சொல்கின்றனர். இங்கே உள்ள விநாயகர் விகட சக்ர விநாயகர் என்ற பெயரில் அழைக்கப் படுகிறார். வெளிப்பிராஹாரம் பெரியதாய் உள்ளது. நாங்க நிறையத் தரம் வந்து சுத்தி இருப்பதாலும், மேலும் பார்க்க, நடக்க நிறைய இடங்கள் இருப்பதாலும் வெளிப்ரஹாரம் சுத்தவில்லை. வெளியே வந்து வண்டி இருக்குமிடம் தேடினோம். நம்ம ஆகிரா இருக்கும் தெருவில் தான் வண்டியை நிறுத்தி இருந்தாங்க. அங்கே போய் உட்கார்ந்து கொண்டு மத்தவங்க வரதுக்குக் காத்திருந்தோம். எல்லாரும் வந்ததும், நாங்க கிளம்பினது திருப்புட்குழி. ஆனால் நாம் காஞ்சிபுரத்தின் வரதராஜரைப் பார்க்கலையே இன்னும். வரதராஜரைப் பார்த்துட்டுத் தான் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கே வந்தோம். ஆனால் வசதிக்காக் ஏகம்பனைப் பத்தி எழுதியாச்சு. அடுத்து கஞ்சி வரதப்பா, எங்கே வரதப்பா!
படங்களே கொஞ்சம் தான் எடுக்க முடிஞ்சது. அதுவும் சரியா அப்லோட் ஆகலை, என்னமோ எந்தப் படமும் போடமுடியலை, ஓரளவுக்கு சிவகங்கை தீர்த்தம் படம் வந்திருக்கு, அதைப் போட்டிருக்கேன்.
//படம் சொந்தம்!// - நான் முதலில் வாசித்ததும், சிவகங்கைத் தீர்த்தமே உங்களுக்குச் சொந்தம்னு சொல்றீங்களோன்னு நினைத்தேன். ஹா ஹா.
ReplyDeleteபடம் ரொம்பத் தெளிவா வந்திருப்பதால், நாங்க சந்தேகப்படுவோம்னு நினைக்கறீங்களா?
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
Delete//ஈசன் ஸ்தாபித்த ஸ்ரீசக்ரத்திற்கே// - இது எங்க இருக்கு? மூலவர் சன்னிதியிலேயேவா?
ReplyDeleteஆமாம்.காமாக்ஷி அம்மன் கோயில் கருவறை
Deleteஇது இந்த இடத்தில் இருக்குன்னு சொல்வாங்களா? அல்லது அம்மன் சிலைக்குக் கீழேயே இருக்கா?
Deleteஶ்ரீசக்ரபீடத்தில் தான் அம்பிகை இருக்கிறாள் என்பார்கள்.
Deleteவிவரங்கள் படித்துக் கொண்டேன்.
ReplyDeleteவருகைக்கு நன்றி.
Deleteநாங்கள் சிவகங்கைக் குளத்தைப் பார்த்தோம்.
ReplyDelete//கச்சி மயானத்தின் லிங்கத் திருமேனி// - இது பார்க்கலை. மற்ற விவரங்களும் தெரியாது.
//கஞ்சி வரதப்பா, எங்கே வரதப்பா!// - இடுகை என்ன காலையில் எழுதுனீங்களா? கச்சி என்பதற்குப் பதில் காலைக் கஞ்சி ஞாபகம் வந்துவிட்டதா? இல்லை மாமா உங்களிடம் கேட்டதை இடுகையில் தவறுதலா எழுதிட்டீங்களா?
//கஞ்சி வரதப்பா, எங்கே வரதப்பா!// இப்படிச் சொல்வாங்க. ஆன்மிகத்தில் திளைத்த சந்நியாசி ஒருத்தர் காஞ்சி வரதனை நினைத்துக் கொண்டே கஞ்சி வரதப்பா! என்று சொன்னதாகவும், அதைக் கேட்ட அவர் சீடர் ஒருத்தர் சாப்பிடும் கஞ்சியை நினைத்து எங்கே வருகிறது என்பதை எங்கே வருதப்பா? என்று கேட்டதாகவும் மிகப் பழமையான ஒரு நகைச்சுவை வார்த்தையாடல் உண்டு.
Deleteதமிழ் சினிமா பாடலே உண்டு.
Deleteவரதப்பா வரதப்பா கஞ்சி வரதப்பா
கஞ்சிக் கலயம் தலையில் தாங்கி வஞ்சி வருதப்பா
தெரியும்!
Deleteசிவகங்கையும் ஏகாம்பரேசரும் மீண்டும் மீண்டும் தரிசிக்கலாம்.
ReplyDeleteநன்றி மாதேவி!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteகாஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரரைப் பற்றி, கோவிலைப் பற்றிய அருமையான விபரங்கள். படிக்க படிக்க ஸ்வாரஸ்யமாக உள்ளது. எப்போதோ அங்குள்ள கோவில்களுக்குப் போனது. சரியாக எதுவும் நினைவில்லை. தங்கள் பதிவின் மூலம் விபரங்கள் அறிந்து கொண்டேன். சிவ கங்கை தீர்த்தம் படம் மிக அழகாக இருக்கிறது. அடுத்த பதிவுக்கும் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா. படங்கள் எடுத்திருந்தோம். ஆனால் கிடைக்கவில்லை! அதனால் போட முடியவில்லை. போய்ப் பத்து வருஷங்கள் ஆச்சே!
Deleteசிவகங்கை வந்து இருக்கின்றீர்களா ?
ReplyDeleteதேவகோட்டை அருகில்தான்.
கில்லர்ஜி, இது அந்த சிவகங்கை அல்ல! சிவன் கோயில் தெப்பக்குளம் அநேகமான கோயில்களில் சிவகங்கை என்றே அழைக்கப்படும். காரைக்குடிக்கு வந்திருக்கேன். :))))
Deleteஉங்கள் வழி எங்களுக்கும் தரிசனம்..... எப்போது இங்கே எல்லாம் போக எனக்கு வாய்க்குமோ?
ReplyDeleteவாங்க வெங்கட், விரைவில் கிடைக்கும்.
Deleteகாஞ்சியில் அனைத்துக்கோயில்களுக்கும் சென்றுள்ளேன். உங்களால் மறுபடியும் இன்று...
ReplyDeleteநாங்களும் அநேகமாக எல்லாக் கோயில்களுக்கும் போயிருக்கோம்.
Deleteசிவகங்கை தீர்த்த படம் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteவிவரங்கள் அருமை.
ஏகாம்பரேஸ்வர், காமாட்சி தரிசனம் ஆச்சு.
அடுத்து வரதர் வரம் அருளட்டும்.
நன்றி கோமதி! இன்று மட்டும் அத்தி வரதரைத் தரிசிக்க சுமார் 2 லக்ஷம் மக்கள் போயிருப்பதாகத் தெரிகிறது. தரிசனத்துக்கு ஏழு மணியிலிருந்து எட்டு மணி நேரம் ஆகிறதாம். இனி மக்கள் 2 நாட்களுக்கு வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! :(
Deleteசிவகங்கஈத் தீர்த்தம் படம் அழகாக வந்திருக்கு கீதாக்கா
ReplyDeleteவிவரங்கள் எல்லாம் அறிந்து கொண்டேன்.
படங்கள் எனக்கும் சில சமயம் அப்லோட் ஆகாது படுத்தும் பொறுமை போய்விடும் கீதாக்கா.
கீதா
வாங்க தி/கீதா, படங்கள் எடுத்திருந்தால் அப்லோட் செய்துடுவேன். முன்னால் எல்லாம் பிகாசா மூலம் நேரடியாகப் பதிவுக்கே படங்களைப் போட்டதும் உண்டு. ஆனால் சில சமயங்கள் பிகாசாவில் இருந்து படங்கள் வருவதில்லை. இப்போல்லாம் நேரடியாகப் படங்கள் ஃபைலுக்கே சேர்த்துடறேன்.
Delete