எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, July 23, 2019

கஞ்சி வரதப்பா! அத்தி வரதர் வந்துட்டாரே!

20 ஆம் தேதி சனியன்று உறவினர் வருகை. சென்னையில் மேற்கு மாம்பலத்தில் இருக்கும் தம்பி வீட்டில் சுமங்கலிப் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் அங்கே கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் என்பதால் அங்கே வைத்துச் செய்வது கஷ்டம் என்பதால் நாங்களே அவங்களை இங்கே ஸ்ரீரங்கம் வந்து செய்யுங்க என்று சொல்லி இருந்தோம்.  அதற்கு மற்றவர்களுக்கும் சிரமம் இல்லாமல் இருக்கணும், எல்லோரும் வரணும் என்பதால் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையாகப் பார்த்துத் தேர்ந்தெடுத்தார்கள். வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு அன்று தான் வர முடியும். குடும்ப விழா என்பதால் குடும்பத்து நபர்கள் தவிர்த்து 3 பேர் மட்டும்  இங்கே உள்ளவர்கள். அதற்கான ஏற்பாடுகள் மற்றும் உறவினர் வந்து சென்ற போது என இணையத்துக்கு வர முடியலை! எந்தப் பதிவுகளையும் படிக்கலை! சனிக்கிழமை ஓரிரு பதிவுகள் பார்த்தேன் என நினைக்கிறேன். பின்னர் வர முடியலை. இனி ஒவ்வொன்றாக வரணும். ஹிஹி இந்த வாரம் வெள்ளியன்று மாமனார் ஸ்ராத்தம். ஆகவே நாளைக்குக் காலம்பர வந்து "நட்பேயார்" வந்திருக்காரானு பார்த்துட்டுப் போயிடுவேன். நாளைக்குக்   கடைசி நாத்தனார் வேறே தில்லியிலிருந்து வராங்க! வெள்ளிக்கிழமை சாயந்திரம் நேரம் கிடைச்சால் வருவேன். இல்லைனா சனிக்கிழமை தான்! இஃகி,இஃகி, இஃகி.  எல்லோரையும் போல நானும் பிசி! பிசியோ பிசி!
*********************************************************************************


என் பயணங்களில் - கஞ்சி வரதப்பா!

மலையாக மாறிய கஜேந்திரனின் மேல் பெருமாள் எழுந்தருளி இருப்பதால் மேலே பல படிகள் ஏறிச் சென்றே பெருமாளைத் தரிசிக்கவேண்டும். ஒரு வகையில் இதுவும் ஒரு மாடக்கோயில் என்றே சொல்லலாம். இந்தக் கோயிலுக்கு தேவகுரு பிரஹஸ்பதியும் வந்து வழிபட்டிருக்கிறார். இந்திரன் கொடுத்த சாபத்தால் ஏழ்மை நிலையடைந்த பிரஹஸ்பதிக்கு இங்கேதான் சாப விமோசனம் கிடைத்தது என்கின்றனர். ஐந்து பிராஹாரங்களுடன் இருக்கும் இந்தக்கோயில் கட்டுமலை அமைப்புடன் கூடியது. கட்டுமலைகளை முறையே வாரணகிரி அத்திகிரி எனச் சொல்லுகின்றனர். முதலில் மேலே ஏறுவது வாரணகிரியில். அங்கே அழகிய சிங்கரைத் தரிசனம் செய்து கொண்டே பின்னர் அத்திகிரிக்கு இன்னும் மேலே ஏற வேண்டும். மேலே ஏறினால் தேவராஜப் பெருமாள் என்ற பெயரில் மூலவர் எழுந்தருளி உள்ளார். ஆனால் இங்கே உற்சவர் ஆன வரதராஜருக்கே சிறப்பு அதிகம். அதோடு இந்தக் கோயிலில் தாயாருக்குச் சிறப்பும், செல்வாக்கும் அதிகம் என்கின்றனர். ஆகையால் முதலில் பெருந்தேவித் தாயாரைத் தரிசிக்கவேண்டும். அதுக்கு முன்னால் அத்தி வரதர் பற்றிய சில செய்திகளைப் பார்க்கலாம்.

காஞ்சிபுரத்தின் அத்தி வரதர் மிகவும் பிரபலமானவர். அவரை நாம் தினமும் தரிசிக்க முடியாது. அவர் இருப்பதும் வெளியே ஏதோ சந்நிதியில் இல்லை. கோயிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் அருகே உள்ள அநந்த சரஸ் என்னும் தீர்த்தத்தில் உள்ள நீராழிமண்டபத்தின் அடியில் நீருக்குள்ளே நிரந்தரமாய் சயனக் கோலத்தில்வெள்ளிப் பேழையில் இருப்பவர் அத்தி வரதர். பெரிய அத்திமரத்தால் செய்யப் பட்ட இவர் யாகத் தீயில் இருந்து தோன்றியதால் உடல் வெப்பத்தால் தகிப்பதாகவும், தினமும் மூன்று வேளை நூற்றுக்கணக்கான குடங்களில் திருமஞ்சனம் செய்யவேண்டும் என்று பட்டாசாரியார் ஒருவரது கனவில் வந்து சொன்னதாகவும், தினமும் திருமஞ்சனம் மூன்று வேளை செய்ய முடியாவிட்டால், தன்னை நிரந்தரமாய் அநந்த சரஸில் மூழ்க வைக்கும்படியும் பெருமாள் சொன்னதாகவும், நூற்றுக்கணக்கான குடங்களில் நீர் எடுத்துத் தினமும் மூன்று வேளை திருமஞ்சனம் செய்ய முடியாது என்பதால் வரதரை நீரில் மூழ்கும்படிச் செய்தார்கள் எனச் சொல்லப் படுகிறது. மற்றோர் தகவலின் படி கி.பி ஆறாம் நூற்றாண்டுகளில் பெளத்தர்கள் வசம் இந்தக் கோயில் போய்விட, இங்கே இருந்த மூல விக்ரஹங்கள் பாடலிபுத்திரம் அனுப்பப்பட்டன/கடத்தப் பட்டன. நரசிம்மர், ஹரித்ராதேவி தாயார், வரதர் போன்ற அனைவரும் பாடலிபுத்திரம் போய்விட, சில நாட்கள் கோயில் வழிபாட்டிலேயே இல்லை எனச் சொல்கின்றனர்.

ஸ்ரீராமாநுஜர் காலத்தில் கோயிலில் ஏற்கெனவே வழிபாடுகள் ஆரம்பித்திருந்த நிலையில், உற்சவர் இல்லையே என கோயிலின் பட்டர் ஒருவரும் ராமாநுஜரும் கூடி யோசித்து அத்திமரத்தால் வரதராஜரின் சிலா உருவை உருவாக்கியதாகவும், அந்நியர் கண்களில் இருந்து தப்பவேண்டி அநந்த சரஸில் வைத்திருக்கலாமெனவும் சொல்கின்றனர். எது எப்படி இருந்தாலும் ஒரு வெள்ளிப்பேழையில் வைக்கப் பட்ட அத்திவரதர் நீருக்குள் போய் மறைந்தார். இனி மூலவரும் இல்லை, உற்சவரும் இல்லையே என்ன செய்வது? என யோசித்த அர்ச்சகர்களுக்கு பெருமாளே மீண்டும் கனவில் வந்து பழைய சீவரம் என்ற இடத்தில் தன்னைப் போன்றே இன்னொரு வரதர் இருப்பதாகச் சொல்லி அவரைக் கண்டு பிடித்துப் பிரதிஷ்டை செய்யச் சொல்லி இருக்கின்றனர். அவரைக் கண்டுபிடித்து இந்தக் கோயிலுக்குக் கொண்டு வந்து எழுந்தருளப் பண்ணி இருக்கின்றனர். அத்தி வரதரை பெருமாளின் ஆக்ஞைப்படியே நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை நீரில் இருந்து வெளியே எடுத்து ஒரு மண்டலம் ஆராதனைகள் செய்து பின்னர் மீண்டும் நீருக்குள்ளேயே விடுவார்கள்.

அத்தி வரதர் க்கான பட முடிவு

படங்களுக்கு நன்றி கூகிளார்!

கடைசியாய் 1979-ம் ஆண்டு அத்தி வரதர் வெளியே வந்திருக்கார். (அட, நாங்க செகந்தராபாத்தில் இல்லை இருந்திருக்கோம்?) (இது எழுதினப்போ) மீண்டும் 2019- வருவாராம். ஹிஹிஹி, இருக்கோமோ, இல்லையோ? யாருக்குக் கொடுத்து வைக்கிறதோ தெரியலை, போகட்டும்! (வந்துட்டார், வந்துட்டார், பார்க்கத் தான் முடியலை! )

அத்தி வரதர் க்கான பட முடிவு

ஜெயஸ்ரீ கேட்ட சக்கரத்தாழ்வார் என்ற சுதர்சனர் இங்கே தான் குளக்கரையில் சேவை சாதிக்கிறார். மிகப் பெரிய சக்கரத்தாழ்வார் என்று சொல்கின்றார்கள். அநந்த சரஸ் தீர்த்தம் தவிரவும் வேகவதி ஆற்றையும் சேர்த்து மேலும் நான்கு தீர்த்தங்கள் உள்ளன எனச் சொல்கின்றனர். ஸ்ரீரங்கநாதருக்கும் தனி சந்நிதி இருக்கிறது. வேணுகோபாலன், பூவராகன் ஆகியோரும் தனித்தனி சந்நிதிகளில் அருள் பாலிக்கின்றனர். முதல் பிரகாரத்தை நம்மாழ்வார் பெயரில் ஆழ்வார் வீதி என அழைக்கின்றனர். பெருமாள் கருடசேவையின் போது இந்த ஆழ்வார் வீதிக்குத் தான் முதலில் வருகின்றார். மற்ற ஆழ்வார்கள், ஆசாரியர்கள் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம். இன்னும் பல அடியார்கள், திருக்கச்சி நம்பிகள் ஆகியோரையும் தரிசித்தாலும் எல்லாவற்றையும் விட முக்கியமானது இங்கே உள்ள அம்மாள் காலட்சேபக் கூடம். வேதாந்த தேசிகரின் குருவான நடாத்தூர் வரதாசாரியார் என்பவர் தினமும் பெருமாளுக்கு சேவை செய்து வந்தார்.  அவர் செய்யும் நைவேத்தியங்களில் பாலும் இடம் பெறும். சூடாகக் காய்ச்சப்பட்ட பாலைச் சூடு போக நன்கு ஆற்றி, ஆற்றி இளஞ்சூடாகப் பெருமாளுக்கு நிவேதனம் செய்வாராம்.. ஒரு தாய் தன் மகவுக்கு எப்படி சூடு பொறுக்காது எனக் கவனமாகச் செயல் படுவாளோ அதைப்போல் கவனமாகவும், பொறுமையாகவும் தினமும் இதைச் செய்து வந்ததால் பெருமாளே இவரை, “அம்மையே” என அழைத்ததாகவும், அது முதல் இவர் பெயர் நடாத்தூர் அம்மாள் என அழைக்கப் பட்டதாகவும் சொல்கின்றனர்.

நாலாம் பிரஹாரத்தில் மடைப்பள்ளி. அங்கிருந்து பெருந்தேவி தாயார் சந்நிதிக்குப் போகும் வழியில் மீண்டும் பிரசாத விநியோகம் நடந்தது. இதுவும் பெருமாளுக்குப் படைக்கப்பட்டு மடைப்பள்ளியில் இருந்து வந்ததே. ஆனால் வெளியில் வைத்து விற்பனை செய்ய முடியாது என்பதால் கேட்பவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். நாங்கள் அனைவரும் தலைக்கு ஐந்து ரூபாய் கொடுத்துவிட்டு, அவர் கேட்கலை, நாங்களாகவே தீர்மானம் பண்ணிக் கொடுத்தோம், பிரசாதங்கள் வாங்கிக் கொண்டோம். புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் ஆகியவை விநியோகிக்கப் பட்டது. எந்தப் பெருமாள் கோயிலுக்கு எப்போது சென்றாலும் பிரசாதம் கிடைக்காமலோ அல்லது சாப்பிடாமலோ வரவே முடியாது. காக்கும் கடவுள் என்பதாலோ என்னமோ பெருமாள் கோயில்களுக்குப் போனால் வயிற்றைக் கவனிச்சுட்டுத் தான் அனுப்பறார் பெருமாள். இனி பெருந்தேவித் தாயாரின் சந்நிதி. அவள் கதை தனிக்கதை./. நாளைக்குப் பார்க்கலாமா? ஏற்கெனவே திவா வந்து ஸ்ரீபுரம் கூட்டிண்டு போகலையேனு கேட்டுண்டு இருக்கார். நிஜமாவே காஞ்சியைப் பத்தி ஓரளவு சுருக்கமாத் தான் எழுதறேன். ஹிஹிஹி, விரிவா எழுத ஆரம்பிச்சால் சிதம்பர ரகசியத்தை விடப் பெரிசாய் வரும்.

36 comments:

  1. வரதர் குறித்த தகவலுக்கு நன்றி.

    தங்கள் வீட்டு விஷேசம் சிறப்புடன் நடைபெறட்டும்.

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கில்லர்ஜி!

      Delete
  2. //எல்லோரையும் போல நானும் பிசி! பிசியோ பிசி!// - டமாரச் சத்தம் காதைத் துளைக்கிறது. கொஞ்சம் பஞ்சு காதில் வைத்துக்கொண்டுதான் இந்தப் பத்தி படித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நெ.த. ஹாஹாஹா, பொறாமை? இஃகி, இஃகி, இஃகி!

      Delete
  3. நடாதூர் அம்மாள். அவர்தான் எங்கள் முன்னோர். நாங்க காஞ்சீபுரத்தைச் சேர்ந்தவங்க. 4 தலைமுறைக்கு முன்னால் நெல்லையில் கோபாலசமுத்திரம் என்ற ஊருக்கு எங்கள் முன்னோர்களை குடிவரச் சொல்லி அவர்களுக்கு உணவுக்கு நிலம் கொடுத்தாராம் அந்தப் பகுதியைச் சேர்ந்த ராஜா. அப்படித்தான் நாங்க நெல்லையைச் சேர்ந்தவர்கள் ஆனோம். பெண் (திருமணத்துக்கு) திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். நாங்களும் பேர் போட்டுக்கும்போது 'நடாதூர்' என்று சேர்த்துக்குவோம்.

    ReplyDelete
    Replies
    1. நெ.த. இங்கே ஶ்ரீரங்கத்திலும் நடாதூர் அம்மாள் மாளிகை என்று இருக்கிறது. மேலச் சித்திரை வீதியா, வடக்குச் சித்திரை வீதியா? நினைவில் இல்லை. நீங்க காஞ்சீபுரத்திலிருந்து நெல்லைக்குப் போனாப்போல் என் அப்பாவின் முன்னோர்கள் நர்மதா நதி தீரத்திலிருந்து வந்து ஆந்திராவிலும் இருந்துட்டுப் பின்னர் கேரளம் போய் அங்குள்ள பெண்ணை மணந்து கொண்டு மதுரைக்கருகே மேல்மங்கலத்தில் குடியேறினாங்க. அப்பா இது பற்றிய குறிப்புகள் கொண்ட ஓலைச்சுவடிகள் வைத்திருந்தார். சொல்லிக் கொண்டே இருப்பார். ஆனால் கடைசியில் மதுரையை விட்டு வரும்போது அதை என்ன செய்தார்னு தெரியலை! எங்க அப்பா குடும்பத்திற்கு "ஈஸ்வரக்குட்டியார்" பரம்பரை என்னும் பெயர் உண்டு.

      Delete
    2. அந்த ஊர்ல (கோ.சமுத்திரம்) ஏகப்பட்ட ஓலைச் சுவடிகள் (அழகான மேலட்டை மரத்தாலானது, அடியில் கட்டை) இருந்தன (நான் பார்த்திருக்கிறேன்). 50 வருடங்களுக்கும் மேலான கடிதங்கள் கட்டித் தொங்கவிடப்பட்டவை (நான் சொல்வது 79ல் பார்த்தது), வித வித ஸ்டாம்புகளோடு...... எல்லாம் பொக்கிஷம். எங்க அப்பா வீட்டை சல்லிசா இன்னொருவருக்குக் கொடுத்தபோது எல்லாம் போச்சு. அப்புறம் எங்க அப்பாட்ட சொன்னதற்கு, நீ முன்னமே சொல்லியிருந்தா அதையெல்லாம் எடுத்து வந்திருப்பேன் என்றார். (பழையகால நாணயங்களும் ஏகப்பட்டது)

      எப்படியோ... மதுரையிலும் நெல்லையிலும் நல்ல ஏற்ற பெண்கள் இல்லைனு அவங்களுக்குத் தெரிஞ்சுருக்கு (அந்தக் காலத்தில்) ஹா ஹா ஹா

      Delete
  4. இது எப்போ எழுதின இடுகைன்னு தெரியலையே... ஓ பத்து வருஷம் முன்பு சென்று வந்த இடுகையா? அதனால்தான் 2019ல் என்று எழுதியிருக்கீங்களா?

    இன்னும் வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரசாதம் சாப்பிடும் பாக்கியம் கிடைக்கலை. ஆனால் தேவராஜப் பெருமாளை 10 நிமிடங்கள் தரிசனம் செய்தேன் ஓரிரு மாதங்கள் முன்பு.

    ReplyDelete
    Replies
    1. நெ.த. சென்னையில் இருந்திருந்தால் ஒரு வேளை அத்தி வரதர் தரிசனம் கூடச் செய்திருப்போம். இப்போ இருக்கும் நிலைமைக்கு இங்கே நம்பெருமாளைப் போய்ப் பார்க்கக் கூட முடியலை! பெரிய ரங்குவுக்குத் தைலக்காப்பு சார்த்தி வெறும் முக தரிசனம் தான்! பாத தரிசனம் செய்ய முடியாது! அதைக் கூடப் போய்ப் பார்க்க முடியலை!

      Delete
    2. நீங்க சொல்றதைப் படிக்கறவங்க, ஏதோ சோம்பேறித்தனம்னு நினைச்சுடப் போறாங்க.

      நான் ஒரு முறை அரங்கன் கோவிலுக்குள் சுத்தி வரும்போதே ஏகப்பட்ட தூரம் நடந்தார்ப்போல் எனக்கு இருக்கும். தினமும் அரங்கனைச் சேவிக்கணும்னா, நான் பெரிய கோபுரத்துக்குத் தொட்டடுத்த வீட்டில் இருந்தால் ஒருவேளை போக வாய்ப்பு இருக்கு.

      Delete
    3. //நீங்க சொல்றதைப் படிக்கறவங்க, ஏதோ சோம்பேறித்தனம்னு நினைச்சுடப் போறாங்க.// I am least bothered! :)))))

      Delete
  5. வீட்டில் சுமங்கலி பூஜை நடந்தது மகிழ்ச்சி.
    மாமனார் ஸ்ராத்தம். நல்லபடியாக நடக்கட்டும்.

    வரதர் வரலாறு விரிவாக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.
    பெருமாள் கோவில் பிரசாதம் சுவையானது.
    காக்கும் கடவுள் எல்லோரையும் நன்றாக வைக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி! வரவுக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி. பெருமாள் அனைவரையும் ரக்ஷித்துக் காப்பாற்றுவார்.

      Delete
  6. வணக்கம் சகோதரி

    நல்ல விரிவான அழகான வரதர் குறித்த தகவல்கள். நிறைய செய்திகளுடன் படித்து அறிந்து கொண்டேன். நன்றாக உள்ளது. இனி பெருந்தேவி தாயாரின் கதையையும் அறிய ஆவலாக உள்ளேன்.

    சுமங்கலி பிராத்தனை நன்றாக நடைபெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி. நடுவில் நம் வீட்டு விஷேடங்களுக்கும் நேரத்தை கண்டிப்பாக ஒதுக்க வெண்டும். அனைவரும் ஊருக்கு திரும்பியாகி விட்டார்களா? பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, பாராட்டுக்கு நன்றி. எல்லோரும் ஞாயிறன்றே ஊருக்குப் போயாச்சு! என் அண்ணாக்களைத் தவிர்த்து மற்றவர்கள் அலுவலகம் போகணுமே! :) தங்க முடியாது! நேற்று வீட்டை ஒதுங்க வைத்து ஒழுங்கு செய்வதில் நேரம் போய் விட்டது. இன்னிக்குத் தான் இணையத்தில் கொஞ்சம் உட்கார முடிந்தது.

      Delete
  7. அன்பு கீதா மா,
    எத்தனை அழகான வரலாற்றுப்பதிவு.
    Zee Tamil ஒளிபரப்பப் போகிறதாமே வரத வைபவத்தை. ஸ்ரீ வேளுக்குடியார்
    தலைமையில்.
    நாங்களும் முயற்சி செய்கிறோம்.
    வரதராஜர் கோவில் சரித்திரம்,விளக்கம் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    யாரோ அது புத்தர் சிலை என்றார்கள்.
    துரை செல்வராஜு சொன்னது போல் உங்களைப் போல்
    சரியாகச் சொன்னால் மனதுக்கு நிம்மதி.

    பெருந்தேவித்தாயார் பெயரில் தான் தேசிகர் ஸ்ரீ ஸ்துதி செய்தார்.
    சக்கரத்தாழ்வார் ஸ்ரீரங்கம் சக்கரத்தாழ்வார் மாதிரி பெரிய தனிச் சன்னிதி. பிரம்மாண்டம்.

    சக்திவாய்ந்தவர்.
    நிறைவான பதிவு மா. மிக நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி. இங்கே எங்களுக்கு ஜீ தொலைக்காட்சி எல்லாம் வராது! ஆமாம், இப்போதைய நிலவரப்படி எல்லாம் பௌத்தம், சமணம் என்றே சொல்ல வேண்டும்.

      Delete
  8. உங்க கட்டுரைல உடையார்பாளையம் வரலை. உற்சவரை 40 வருடங்கள் அங்கு வைத்துக் காப்பாற்றியதால் அந்த குடும்பத்துக்கு ஒரு நாள் முன்னுரிமை இருக்குன்னு நினைக்கிறேன். அத்தி வரதர், மிலேச்சர்கள் படையெடுப்பால் 1650ல் அந்தக் குளத்தில் ஒளித்துவைக்கப்பட்டார். (அதுவரை அவர்தான் மூலவர்)

    இருந்தாலும், உங்கள்ட சண்டைக்கு வந்து உங்க 'கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' பெற விரும்பலை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. உடையார்பாளையம் பத்திய தகவல் கிடைக்கலை!

      Delete
  9. என்னடா ஆளைக் காணோமே என்று நானும் தேடினேன். பிறகுதான் தெரிந்தது. சென்னையில் இப்போது தண்ணீர்க் கஷ்டம் கொஞ்............ சம் பரவாயில்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், தண்ணீர்க்கஷ்டம் பரவாயில்லை என்பது அறிந்து சந்தோஷம்!

      Delete
  10. காஞ்சிபுரத்தின் அத்திவரதர் பிரபலமானவர். ஒரு அரசியல் பிரபலம் நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை வெளியில் வரும் அத்தி வரதர் விழா வருடா வருடன் கொண்டாடப்படுவதாக சொல்லி இருக்கிறார்!

    ReplyDelete
    Replies
    1. ஐயோ பாவம். எழுதி வைத்ததையும் சரியாகச் சொல்ல முடியலை அவரால். திறமை இல்லாதவர்கள், மகன் என்ற ஒரே காரணத்துக்காக முன்னிலைப்படுத்தப்பட்டால் இதுதான் நடக்கும். 'ஆகவே'... இனிமேல் 'ஆகவே' இதைப் பற்றி 'ஆக' சொல்லாதீங்க

      Delete
    2. ஶ்ரீராம், நெ.த. அதான் அவரைப் போட்டுக் காய்ச்சி எடுத்துட்டாங்களே! :))))))

      Delete
  11. அத்தி வரதரை பாஸ் நேற்றிரவு தரிசித்து வந்தார். நேற்றிரவு எட்டே முக்காலுக்கு உள்ளே நுழைந்து ஒன்பதரைக்கு தரிசனம் செய்து வெளிவந்தார். அத்திவாரதர் வரலாறு விதம்விதமாய் வாட்ஸாப்பில் தினம் ஒன்று வெளிவந்து கொண்டிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. இது என்ன அதிசயம்...இரவு கூட்டம் குறைவா?

      Delete
    2. உங்க பாஸுக்கு அதிர்ஷ்டம் தான். இன்றைய தரிசனத்துக்காக மக்கள் நேற்றிரவே போய் அங்கே உட்கார்ந்திருப்பதை முகநூல் நண்பர் கேசவபாஷ்யம் வி.என். படம் எடுத்துப் போட்டிருந்தார்.

      Delete
  12. மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.. நேற்றே படித்து விட்டேன் என்றாலும் இன்றைக்குத் தான் மொய்...

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி துரை. எப்போச் சொன்னால் என்ன? நேரம் கிடைக்கையில் சொன்னால் போதும்! நன்றிப்பா!

      Delete
  13. >>> அத்திவரதர் வரலாறு விதம் விதமாய் வாட்ஸாப்பில் தினம் ஒன்று வெளிவந்து கொண்டிருக்கிறது.<<<

    நம்மளைக் கிறுக்கன் ஆக்காம உடமாட்டானுங்க போல இருக்கு!...

    தெருவுல சும்மா போக வேண்டியவன் எல்லாம் பொங்கி எழுந்துக்கிட்டு இருக்கானுங்க!..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், தினம் தினம் அத்தி வரதர் தவிர்த்த வேறே செய்திகள் இல்லை!

      Delete
  14. வரதர் வரலாறு மிகவும் சுருக்கமாக அல்லது ஏதோ அவசரத்தில் சொல்லப்பட்டது போல எனக்கு(மட்டும்) தோன்றுகிறது.

    ReplyDelete
  15. பலமுறை காஞிசிவரம் சென்றதுண்டு அத்தி வரதர் பற்றியாரும் சொல்லலை பிறகென்ன அத்திவரதரேமீடியாக்களின் தயவால் இப்போதுதான் பிரபல மாயிருக்கிறார் சிலையை நின்றகோலத்தில் வைத்தால் நின்றகோல வரதர் சாய்த்து வைத்தால் சயன கோல அத்திவரதர் கடவுள்களுக்கும் மீடியாக்கள் தயவு தேவை

    ReplyDelete
  16. அத்திவரதர் பத்தி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் கீதாக்கா.

    ஸ்ரீராமும் துரை அண்ணாவும் சொல்லியிருப்பது போல் வரலாறு முக்கியமப்பா என்பது போல் வாட்சப்பில் அத்திவரதர் குறித்து பல செய்திகள் அதுவும் லைவ் செய்திகள் போல கூட்டம் பற்றியும் கூட வருது...

    கீதா

    ReplyDelete
  17. பிசியோ பிசி... விருந்தினர் வருகை மகிழ்ச்சி....

    அத்தி வரதர் கதை உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். தொடர்கிறேன்.

    ReplyDelete
  18. வரதர் வரலாறு அறிந்து கொண்டோம்.

    நாங்கள் சென்றபோது எங்களுடன் வந்த தமிழ்நாடு சுற்றுலா கைட் சில விபரங்கள் கூறி இருந்தார். இருந்தும் உங்களிடமிருந்து முழு விபரம் கிடைத்தது.

    ReplyDelete