எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, July 18, 2019

கஞ்சி வரதப்பா 1

என் பயணங்களில்

காஞ்சி வரதராஜ பெருமாள் க்கான பட முடிவு

நூற்றியெட்டு திவ்யதேசங்களில் முப்பத்தி ஒன்றாவதும், ஸ்ரீஹயக்ரீவர் அகத்தியருக்கு ஸ்ரீவித்யையை உபதேசித்ததும், சக்தி பீடங்களில் ஒன்றுமானது காஞ்சி என முன்னரே பார்த்தோம். காஞ்சி ஸ்ரீமந்நாராயணனின் இடுப்புப் பகுதியாகத் திகழ்வதாய்ச் சொல்லுவார்கள். அயோத்தி தலையாகவும், காசி மூக்காகவும், மதுரா கழுத்தாகவும், ஹரித்வார் மார்பாகவும், துவாரகை தொப்புளாகவும், அவந்தி காலடியாகவும் சொல்லப் படும். பஞ்சாமிர்த க்ஷேத்திரங்களில் ஒன்றாயும் சொல்லுவார்கள் காஞ்சியை. மற்றவை திருவரங்கம் எனப்படும் ஸ்ரீரங்கம், திருப்பதி, திருவல்லிக்கேணி, திருநாராயணபுரம் என அழைக்கப் படும் மேல்கோட்டை. ஸ்ரீ ராமாநுஜர் திருமஞ்சன கைங்கர்யம் இங்கே செய்து வந்த வேளையிலேயே பரந்தாமன் வைணவத் தலைமையை அவர் ஏற்கும் பொருட்டு ஸ்ரீரங்கத்திற்கு அனுப்பி வைத்தான் என்றும் சொல்லுவார்கள். பரந்தாமனுக்கு இணக்கமான ராமாநுஜரைத் தியாகம் செய்ததால் தியாக மண்டபம் எனவும் வரதராஜப் பெருமாள் கோயில் அழைக்கப் படுகிறது.

காஞ்சி வரதராஜ பெருமாள் க்கான பட முடிவு

பரமஞாநிகள் வாழ்ந்த இடமான காஞ்சியில் அருள் பாலிக்கும் ஸ்ரீவரதராஜப் பெருமாளைக் கிருத யுகத்திலேயே பிரமன் வழிபட்டதாகச் சொல்கின்றனர். திரேதா யுகத்தில் கஜேந்திரனும், துவாபர யுகத்தில் பிரஹஸ்பதியும் கலியுகத்தில் அநந்த சேஷனும் வழிபட்டனர். சரஸ்வதியின் கோபத்தைப் பரந்தாமன் போக்கிய தலம் இது. நாரதர், ஆதிசேஷம், பிருகு முனிவர், இந்திரன் ஆகியோரும் வழிபட்டிருக்கின்றனர். மஹாபாரதத்தில் குறிப்பிடப் படவில்லை என்றாலும் வில்லி பாரதத்தில் அர்ச்சுனன் தீர்த்த யாத்திரையில் காஞ்சிபுரம் வந்து தீர்த்த ஸ்நாநம் செய்து மற்றும் ஏழு நதிகளில் நீராடியதாயும் சொல்லப் பட்டுள்ளது. பொய்கை ஆழ்வார், ஸ்ரீஸ்வாமி தேசிகன் ஆகியோர் அவதரித்தது இங்கேயே. பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார், கூரத்தாழ்வார், ஸ்ரீராமாநுஜர், ஸ்ரீநிமாந்த மஹாதேசிகர், அப்பய்ய தீக்ஷிதர், புரந்தரர், அப்புள்ளார் நடாத்தூர் அம்மா ஆகியோரால் வழிபாடுகள் செய்யப் பட்டும் போற்றிப் பாடப்பட்டும் சிறப்புப் பெற்ற தலம்.

காஞ்சியில் நடை அழகு, வடை அழகு, குடை அழகு என்று சொல்லுவார்கள். காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலின் பிரசாதமான மிளகுவடையும், அருமையாக இருக்கும் என்பதோடு பல நாட்கள் ஆனாலும் வீணாய்ப் போகாது என்பது இதன் தனிச்சிறப்பு. கோயிலின் குடையின் அழகும், வரதராஜர் பவனி வரும் பல்லக்கின் பல்லக்குத் தூக்கிகள் நடக்கும் நடை அழகும் மிகவும் பிரசித்தி பெற்றவை. வடை பிரசாதம் நேரடியாகக் கோயில் மடப்பள்ளியில் இருந்து வாங்கிச் சாப்பிடணும். எங்களுக்கு அன்று பிரசாதமாகக் காஞ்சிபுரம் இட்லி கிடைத்தது. சந்நிதிக்குள் நுழையும் இடத்தில் அன்றைய காலை வழிபாட்டின் நைவேத்யப் பிரசாதத்தை பட்டாசாரியார் விநியோகித்துக் கொண்டிருந்தார். அபூர்வமாய்க் கிடைத்தது. வெளியே ஸ்டால்களில் விற்பது பிரசாதம் அல்ல.

வரதராஜப் பெருமாள் கோயில் வாசலில் போய் இறங்கியதுமே பலவிதமான துணிக்கடைகள். எல்லாமே கைத்தறிக் கடைகள் ஒவ்வொரு முறை செல்லும்போது பார்ப்பேன். பெரிய காஞ்சியை விட இந்த விஷ்ணு காஞ்சியிலேயே நிறையக் கடைகள் கைத்தறித் துணி விற்பவையாக உள்ளன. கடைகள் திறந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் உள்ளே தரிசனத்துக்குச் சென்றோம். தல வரலாறை பிரம்மாண்ட புராணத்தில் காணலாம் என்று சொல்கின்றனர். ஹஸ்திகிரி வரலாறு எனவும் சொல்லப் படுகிறது. பிருகு முனிவர் கேட்க நாரதர் சொன்ன அந்தத் தல வரலாறு பின் வருமாறு:

திருமகளுக்கும், கலைமகளுக்கும் யார் பெரியவங்க என்பதில் போட்டி வந்தது. பிரம்மாவிடம் போய்ச் சந்தேகம் கேட்க திருமகளே பெரியவள் என பிரம்மா தீர்ப்புச் சொல்லிவிடுகிறார். சரஸ்வதிக்குக் கோபம் வந்து சிருஷ்டிக்குப் பயன்படுத்தும் சிருஷ்டி தண்டத்தை எடுத்துக் கொண்டு பிரமனை விட்டுப் பிரிந்து விடுகிறாள். சிருஷ்டி தண்டம் இல்லாமையால் படைப்புத் தொழிலே நின்று போக மஹாவிஷ்ணுவின் உதவியை நாடுகிறார் பிரமன். அவரை நூறு அஸ்வமேத யாகம் செய்யச் சொன்ன விஷ்ணு, பின்னர் திவ்யக்ஷேத்திரமான காஞ்சியில் ஒரு முறை செய்தாலே நூறு முறை செய்தாற்போல் ஆகும் எனச் சொல்லி அங்கே போகச் சொல்ல, பிரமனும் காஞ்சிக்கு வருகிறார். காஞ்சியில் யாகத்தைத் துவக்கிய பிரமன் சரஸ்வதியை யாகம் செய்யத் துணைக்கு அழைக்க, சரஸ்வதி வர மறுக்கிறாள். உடனே சாவித்திரியின் உதவியோடு யாகத்தைத் துவக்கினார் பிரமன். கோபம் கொண்ட சரஸ்வதி, அக்னி, அசுரர்கள் மூலம் யாகத்தைத் தடுக்க முயல, விஷ்ணுவின் உதவியால் அவை தடுக்கப் படுகின்றன. ஆனால் சரஸ்வதியோ நதியாக மாறி தனது நீர் உருவெடுத்து வேகமாய் வேகவதியாகப் பெருக்கெடுத்து ஓடி வருகிறாள். அவள் செய்யப் போவதை உணர்ந்த விஷ்ணு அங்கே தம் கால், கைகளைப் பரப்பிப் படுத்துக் கொண்டு அணை போல் குறுக்காகப்ப் படுத்துக் கொண்டு வெள்ளத்தின் வேகத்தைத் தடுத்தார். தன் வழியில் குறுக்கிட்ட விஷ்ணுவைக் கண்டு நாணம் அடைந்த சரஸ்வதி ஒரு மாலை போல் அவரைச் சுற்றிக் கொண்டு போய் பூமியில் அந்தரவாஹினியாக மறைந்தாள். யாகம் இனிதாய் முடிவடைய, யாகத்தில் ஜோதிப் பிழம்பாய், தீபப் பிரகாசராய் விஷ்ணு தோன்றினார். சிருஷ்டி தண்டத்தை பிரமனிடம் ஒப்படைக்க, பிரமன் அவரை அங்கேயே புண்யகோடி விமானரூடராக எழுந்தருளப் பிரார்த்திக்கிறார். பெருமாளும் அவ்வண்ணமே அங்கே எழுந்தருளுகின்றார்.

சிருஷ்டி தண்டத்தை பிரமனுக்கு அளித்த நாள் கிருத யுகம் ஐந்தாவது மன்வந்தரத்தில் யுவ வருஷம், விருஷப மாதம், சுக்லபக்ஷ சதுர்த்தசி அஸ்வ நக்ஷத்திரம் என்ரு சொல்லுவார்கள். மேற்கண்ட கேள்வியை இந்திரனிடமும் கேட்டதாகவும் இந்திரனும் திருமகளையே உயர்த்திப் பேசியதால் சரஸ்வதி அவனை யானையாக மாறும்படி சபித்ததாகவும், இன்னொரு வரலாறு கூறுகிறது. மகாலக்ஷ்மி இந்திரனை பிரஹலாதனிடம் நரசிம்ம மந்திர உபதேசம் பெற்று ஸ்ரீவரதராஜ க்ஷேத்திரத்தில் தவம் செய்து சாப விமோசனம் பெறும்படிச் சொன்னதாகவும், அதன் படி இந்திரன் இங்கே வந்து சாப விமோசனம் பெற்றதாகவும் கூறுகின்றனர். இந்திரனுக்கு ஸ்ரீநரசிம்மர் பிரத்யட்சமாகி அவனுடைய கஜரூபத்தை இரண்டாய்ப் பிளந்து சுயரூபத்தை அருளினார். அந்த நரசிம்ம மூர்த்தி, கஜரூபத்தையே மலையாகக்கொண்டு அங்கேயே குகை நரசிம்மராக எழுந்தருளி இருக்கிறார். ஹஸ்தி என்னும் யானை மலையாக மாறியதால் இந்தப்பகுதி ஹஸ்திகிரி எனப் படுகிறது.

காஞ்சியைக் குறித்த தகவல்கள் இன்னொரு புத்தகம் எழுதலாம் போல் நிறையவே இருக்கின்றன.

38 comments:

  1. வரதரின் வரலாறுகள் இன்னும் பவனி வரட்டும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, நன்றி.

      Delete
  2. காஞ்சியின் (வரதராஜப்பெருமாள்) பழமை பிரமிக்க வைக்கிறது. அர்ச்சுனன் கூட வந்த இடம் என்பதும் ஆச்சர்யம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம்,பொரிச்ச குழம்பு சாப்பிட வரலையேனு நினைச்சேன். இங்கே வந்ததுக்கும் கருத்துக்கும் நன்றி. காஞ்சி ஊரே மிகப் பழமையானது இல்லையா? நாளந்தா பல்கலைக்கழகத்துக்கும் மூத்தது காஞ்சி பல்கலைக்கழகம் என்பார்கள். கல்வியிற் சிறந்த காஞ்சி அல்லவா!

      Delete
  3. கோவில்களில் சன்னதியிலேயே அன்றைய நைவேத்திய பிரசாதம் எப்போதாவது எந்தக் கோவிலிலாவது கிடைத்திருக்கிறதா எனக்கு என்று யோசித்துப்பார்க்கிறேன். ஊ.......ஹூம்!

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், ஶ்ரீரங்கம் கோயிலிலேயே வாங்கி இருக்கேன். இப்போத் தான் அற(மற்ற) நிலையத் துறை நிறுத்திட்டாங்கனு சொன்னாங்க! அதிலும் அந்த நெய்யப்பம் சூடாகத் தருவாங்க. சுவையோ சுவை! அதே போல் தோசையும். வாங்கிட்டு வீட்டுக்கு வந்து தக்காளித் தொக்கு அல்லது சட்னியைத் தடவிட்டுச் சாப்பிடுவோம். ஆஹா!

      Delete
    2. இப்படி மறதி ஸ்ரீராமுக்கு இருந்தால் எப்படி புளியோதரை கிடைக்கும்? நங்கநல்லூர் ஆஞ்சநேயர் சன்னிதியில் வெண்பொங்கல் பலமுறை சாப்பிட்டிருக்கிறாரா இல்லையா?

      கூட்டம் கொஞ்சம் குறைவா இருந்தால், அத்தி வரதர் தரிசனத்துக்கு அப்புறம் வரதராஜர் கோவிலில் பிரசாத ஸ்டாலில் ஏதேனும் வாங்கிச் சாப்பிடச் சொல்லுங்கள்.

      Delete
    3. திருப்பதில பிரசாதம் சாப்பிடலையா? எத்தனை கோவில்ல பிரசாதம் சாப்பிட்டிருப்பீங்க. ஞாபகப்படுத்திப் பாருங்க.

      Delete
    4. ஆமாம்.... மறந்து விட்டாலும் ஏனோ சட்டென மனதில் நிற்கவில்லை. லார்ஜ் ஸ்கேலில் இருப்பதால் தோன்றவில்லையோ!!

      Delete
    5. ப்ரஸாத ஸ்டாலில் வாங்கிச் சாப்பிடுபவை எதுவும் ப்ரஸாதம் அல்ல. :( ப்ரஸாதங்கள் உடனே விநியோகிக்கப்பட்டுவிடும். ஸ்டாலுக்குப் போவது இல்லை.

      Delete
    6. ஸ்ரீராம் திருப்பதிக்குத் தான் போகவே இல்லையே! முன்னால் போயிருக்கலாம். ஆனால் கட்டாயமாகத் திருப்பதியில் தரிசனம் முடிச்சுப் பிராஹாரம் சுத்தி வருகையில் ஏதேனும் ஒரு பிரஸாதம் கிடைத்துவிடும்.

      Delete
  4. சரஸ்வதி நதியின் கதை இப்போதுதான் அறிகிறேன். சரஸ்வதிக்குதான் எவ்வளவு கோபம் வருகிறது!

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், ராஜஸ்தானில் அஜ்மேர் அருகிலுள்ள புஷ்கரில் உள்ள பிரம்மா கோயிலிலும் சரஸ்வதி கோவித்துக் கொண்டு யாகத்துக்கு வராததைப் பற்றிச் சொல்வார்கள். இந்தியா முழுசும் எங்கு போனாலும் இவை எல்லாம் ஒரே மாதிரித் தான் இருக்கும்!

      Delete
    2. திருவள்ளூர் அருகில் இருக்கும் சுருட்டப்பள்ளி...ஆந்திராபார்டரில் இருக்கும் பள்ளிக்கொண்டீஷ்வரர் கோயிலுக்கு அருகில் இருக்கும் ஆரணி ஆறு அருகில் இருக்கும்குன்று என்று இது போன்று ஒரு கதை உண்டு...

      கீதா

      Delete
    3. சுருட்டப்பள்ளிப் பத்துப் பதினைந்து வருஷம் முன்னால் ஒரு பிரதோஷத்துக்குப் போனது. அநேகமா இதிலே இருந்து தான் கோயில்கள் செல்வது அதிகமாக ஆனது என்றும் ஓர் நினைவு. அதற்கு முன்னாலும் போனோம் என்றாலும் சுருட்டப்பள்ளி போனப்போக் கூடவே 2,3 கோயில்கள் தரிசனம் செய்து வந்தோம். பின்னர் அருகே சுற்றுவட்டாரக் கோயில்களுக்கெல்லாம் ஒவ்வொரு வாரமும் போக ஆரம்பித்தோம்.

      Delete
  5. மிக அருமையாக அக்ஷரம் பிறழாமல் புராணம் சொல்லி இருக்கிறீர்கள்.
    வரத்ராஜனைப் பார்க்க முடியவில்லையே என்ற குறை,
    இந்த எழுத்துகளால் குறைகிறது.

    அழகாகச் சயனித்திருக்கும் அத்தி வரதன் எல்லா திக்குகளிலும் மழை பொழியட்டும். மக்களின் தாகம் தீரட்டும்.
    மிக மிக நன்றி கீதாமா.

    ReplyDelete
    Replies
    1. அத்தி வரதனை அநேகமா தினம் தினம் பார்த்துக் கொண்டு இருக்கோம் தொலைக்காட்சி தயவால்! மழை தான் நாங்களும் வேண்டுகிறோம். எங்கே! :(

      Delete
    2. கீசா மேடம்.... மழை வரவைக்கும் சூட்சுமம் தெரிந்த நீங்களே இப்படி அலுத்துக்கலாமா? நான் உங்களுக்கு நினைவுபடுத்தணுமா? என்ன செய்ய... உங்களுக்கு வயசாயிடுச்சு போலிருக்கு. ஞாபக மறதியும் வந்துடுச்சு.

      நீங்கதானே எழுதியிருந்தீங்க... நீங்க வடகம் போட்டால் உடனே மழை வந்துடும்னு. உடனே வடகம் போட முயற்சியை ஆரம்பிங்க. மழை பெய்யலைனா என்னைக் கேளுங்க. (நான் உடனே நீங்கள் எழுதின அந்தச் சுட்டியைத் தருகிறேன்)

      Delete
    3. நீங்க வேறே நெ.த. வீட்டிலே அன்றாடம் சமைக்கவே இப்போ இரண்டு மாசமாகத் தடா! :(((( இதிலே வடாம் எங்கே போடறது? நீங்க ஒண்ணும் நினைவு படுத்த வேண்டாம். எனக்கே நினைவில் இருக்கு அதெல்லாம்.

      Delete
    4. /அன்றாடம் சமைக்கவே இப்போ இரண்டு மாசமாகத் தடா! :// - என்ன பேச்சுவாக்கிலே குண்டு போடறீங்க. எனக்கே மனசுல கிட்டத்தட்ட மூணு வாரமா காமாட்சி அம்மாவின் எழுத்தை எங்கயும் பார்க்கவில்லையே..நலமில்லை என்று சொன்னார்களேன்னு தோணிக்கிட்டே இருக்கு.

      உங்கள் உடல் நிலை (அலர்ஜி தும்மல்) நார்மலுக்கு வந்தாச்சுன்னுதானே படித்த ஞாபகம்..இதுல மழைக்காலம் வந்தால் இன்னும் கஷ்டமே..

      Delete
    5. நெல்லைத் தமிழரே, மருத்துவர் செய்தது எல்லாம் போதும் என்கிறார். ஆனாலும் உட்கார்ந்திருக்கவா முடியுது? சமையல் தவிர்த்து மற்ற வேலைகள் இருக்கு! காலை தினம் டிஃபன் பண்ணணும். மாலைக்கும் ஏதாவது செய்யணும். சில நாட்கள் அதிலும் காடரிங்கில் வாங்கும்படி ஆகும்! சும்மா எல்லாம் உட்காருவதில்லை. இது வீசிங் பிரச்னை என்பதால் இல்லை. மருத்துவர் கால் நரம்புகள் மிகவும் பலவீனமாக இருப்பதாகச் சொல்கிறார். ரொம்பவே அதிகமாக ஓடி ஆடி இருக்கீங்க என்கிறார்.

      Delete
  6. சிறப்புப் பதிவு

    ReplyDelete
  7. காஞ்சி புராணம் படிக்க நன்றாக இருக்கிறது. நீண்டு சென்றாலும் சுகமே!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஏகாந்தன். நான் சுருக்கிச் சொல்லி இருக்கேன். ஒரு பெரிய புத்தகமே போடலாம் அளவுக்கு விஷயங்கள்.

      Delete
    2. ஏகாந்தன் அண்ணா இதுவே நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஎ ளமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ!!!!! ஹா ஹா ஹாஹ் ஹா ஹா ஹா

      அக்கா ரொம்பவே சுருங்கச் சொல்லியிருக்காங்க

      கீதா

      Delete
  8. நீங்கள் சொல்லும்விதம் மிகவும் அருமையாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முனைவர் ஐயா!

      Delete
  9. காஞ்சியின் வரலாறு உங்கள் மூலம் படிக்க முடிகிறது என்பதில் மகிழ்ச்சி.

    சரஸ்வதி பிரம்மனிடம் கோபித்துக் கொண்டு தனிக்கோவில் கொண்டிருக்கும் கதை இன்னும் சில இடங்களிலும் சொல்கிறார்கள். ராஜஸ்தான் புஷ்கரில் கூட இந்தக் கதை இருக்கிறது. உங்களுக்கும் தெரிந்திருக்கும். புஷ்கர் சென்ற போது சரஸ்வதியின் மலைக்கோவிலுக்கும் சென்று வந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட், புஷ்கர் பற்றி நானும் குறிப்பிட்டிருக்கேன். இந்தியா முழுவதும் இப்படி ஒரே மாதிரியான புராணக் கதைகள் தான் நம்மை ஒருங்கிணைக்கிறது என்னலாம்.

      Delete
  10. வணக்கம் சகோதரி

    காஞ்சி கதை மிக அருமையாக விளக்கமாக, நன்றாக சொல்லியுள்ளீர்கள். கதைக்குள் கதையாக படிக்க நன்றாக உள்ளது. சில கதைகள் அறியாதவை. சில கதைகள் படித்து மறந்தவை. அனைத்தும் அறிந்து கொள்ளும் வகையில் பக்தி பிரவாகமாக எழுதியிருக்கிறீர்கள். தாங்கள் இதையெல்லாம் தொகுத்து ஒரு மின்னூலாக வெளியிடலாமே..! சேர்ந்து படிக்கும் போது மிகவும் நன்றாக இருக்கும். ஒரு வேளை மின்னூல் ஏற்கனவே வந்துள்ளதோ ? தங்களுக்குத்தான் அதில் அனுபவங்கள் அதிகமாக உள்ளதே.! இன்னமும் அடுத்த பகுதியை ஆவலாக எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். மின்னூலாக வெளியிடணும் தான். ஆனால் ஏற்கெனவே இரண்டு மின்னூல்களுக்கான விஷயங்களைத் தொகுத்து அனுப்பி 3 மாதம் ஆகிறது. புத்தகம் இன்னமும் வெளியிடவில்லை. ரொம்ப வேலை மும்முரத்தில் இருக்காங்க போல! 2,3 தரம் கேட்டுப் பார்த்துட்டேன். வரட்டும்.

      Delete
  11. ஹப்பா காஞ்சி பற்றி எம்புட்டுத் தகவல்கள் புராணக் கதை முதல் வரலாறு புடவை என்று கலக்கல். கூடவே மிளகுவடையும் (அதானே ப்ரசாதம் சொல்லாமல் போகலாமோ?!!) நானும் சாப்பிட்டுருக்கிறேன் ஆனால் இப்போதெல்லாம் ஒரிஜினல் கிடைக்க்மா தெரியவில்லை.

    எனக்கு காஞ்சி காட்டன் புடவை ஒன்று அத்தை கொடுத்தார் அவர் அங்கிருந்த போது. நான் காட்டன் மட்டுமே உடுத்துவேன் என்பதால். எல்லாம் பழைய கதை. அத்தை இப்போது வானுலகில்...அதுதான் முதலும் கடைசியும்.

    பதிவு அருமை கீதாக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பட்டுப்புடைவை மட்டும் காஞ்சீபுரத்தில் வாங்கவே கூடாது. உள்ளூர்க்காரங்களைத் தெரிஞ்சிருந்தால் அல்லது உண்மையான தறிப் பட்டுக் கொடுப்பவர்களைத் தெரியும்னால் வாங்கலாம். ஆனால் காஞ்சி காட்டனில் அவ்வாறு ஏமாற்ற முடியாது! தைரியமாக வாங்கலாம்.

      பிரசாதங்கள் கருவறைக்கு வெளியே கொடுத்தால் நம்பி வாங்கலாம். வெளியில் எல்லாம் கொடுத்தால் சந்தேகம் தான்.

      Delete
  12. பிரயாணத்தில் இருந்ததால் பதிவுகள் பலவற்றை படிக்க முடியவில்லை. இன்றுதான் மொத்தமாக எல்லாவற்றையும் படித்துக் கொண்டு வருகிறேன்.
    விவரங்களை சுருக்கி அழகாக கொடுத்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.

    ReplyDelete
  13. //காஞ்சியில் நடை அழகு, வடை அழகு, குடை அழகு என்று சொல்லுவார்கள். // ஒரு சிறிய திருத்தம். ஸ்ரீரங்கம் நடையழகு, காஞ்சி குடை அழகு, வேங்கடம் வடிவழகு என்பது மருவி வடையழகு என்றாகி விட்டது என்பார்கள்.

    திருவரங்கத்தில் பெருமாளை ஏளப்பண்ணும் பொழுது(சுவாமி புறப்பாட்டின் பொழுது) ஸ்ரீபாதம் தாங்கிகள் பெருமாளை சுமந்த படி நடக்கும் நடைக்கு வையாளி என்று பெயர். நிஜமாகவே மிக அழகாக, ஒரு அரசன் நடப்பது போல் மிக கம்பீரமாக இருக்கும். அதுவும் அந்த நடையழகை பின் பக்கம் நின்று சேவிக்க வேண்டும். இதை போலவே திருப்பதியிலும் செய்ய வேண்டும் என்று அதே ஸ்ரீபாதம் தாங்கிகளை திருப்பதிக்கு அழைத்துச் சென்றார்களாம். ஆனால் அவர்களுக்கு அந்த நடை திருப்பதியில் வரவில்லையாம். எனவே திருவரங்கம்தான் நடையழகு. காஞ்சி கொடையழகு, வேங்கடம் வடிவழகு திரிந்து வடையழகு என்றாகி விட்டது.

    ReplyDelete
  14. காஞ்சி குடையழகு என்று படிக்கவும்.

    ReplyDelete