எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, July 27, 2019

அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்!

பதினைந்து நாட்களாகவே இணையத்தில் அதிகம் உட்கார முடியலை. கடந்த ஒரு வாரமாகச் சுத்தமாய் நேரம் கிடைக்கவில்லை. அதிலும் கடந்த மூன்று தினங்களாகக் கணினியைத் திறக்கவே முடியலை! நேற்று மாமனார் ஸ்ராத்தம். அதுக்காக முந்தாநாளில் இருந்து ஏற்பாடுகள். நேற்று ஸ்ராத்தம் முடிந்து சாப்பிட்டு உட்கார 2 மணி ஆகிவிட்டது. அதன் பின் கணினியில் உட்கார முடியலை! இன்றும் வேலை. நாளைக்குக் குலதெய்வம் கோயிலுக்குப் போவதால் அதற்கான ஏற்பாடுகள்! இன்னிக்குச் சாப்பிடவே 2 மணி ஆகி விட்டது. அதன் பின்னர் சற்று நேரம் கணினியில் உட்காரலாம் என்று வந்தேன்.

என்னோட இரண்டு நூல்கள் மின்னூலாக வெளி வந்திருக்கின்றன. வழக்கம்போல் க்ரியேட்டிவ் காமன்ஸ் வெளியீடு தான். அனுப்பி 3 மாதங்கள் ஆகிவிட்டன. அவங்களுக்கு ஏதேதோ வேலைகள். நேற்றைக்கு அனுப்பி இருக்காங்க சுட்டிகளை.  முகநூலிலும் சுட்டிகள் கொடுத்திருக்கேன். முகநூலில் இல்லாதவங்க கீழே கொடுக்கும் சுட்டிகளில் சென்று படிக்கலாம். அதில் ஒரு மின்னூல் என்னோட கல்யாணம் நடந்த விதம் பற்றியும், மதுரை, தஞ்சாவூர் நகரங்களின் பழக்க, வழக்கங்களின் மாறுபாடுகள், பேசுவதில் உள்ள வேறுபாடுகள், அதைச் சமாளித்தவிதம் எல்லாம் பற்றிச் சுருக்கமாக வரும். க்ரியேடிவ் காமன்ஸ் ஸ்ரீநிவாசன் அதை "சுய சரிதை" எனச் சொல்லி இருக்கார். சுய சரிதை அல்ல. வாழ்க்கையின் முக்கியமான பகுதியில் ஓரிரு மாதங்களைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்திருக்கேன்.  அவ்வளவு தான். அதன் பின்னர் சென்னைக்குக் குடித்தனம் வந்ததும், சென்னையில் வேலைக்குச் சேர்ந்ததும் அங்கே 3 வருட வாழ்க்கைக்குப் பின்னர் ராஜஸ்தான் சென்றதெல்லாம் தனிக்கதை! அதை எல்லாம் எழுதினால் ஆயிரம் ஆயிரம் பக்கங்கள் வரும். ஆரம்ப காலப் பதிவுகளில் அவ்வப்போது பகிர்ந்திருக்கேன்.

அடுத்தது இதே "எண்ணங்கள்" வலைப்பக்கங்களில் மார்கழி மாதங்களில் ஒரு வருடம் எழுதிய பதிவுகள். ஒவ்வொரு திருப்பாவைக்கும் ஏற்ற கோலங்களை ஒரு மாதிரியாகத் தேர்ந்தெடுத்துப் போட்டுத் திருப்பாவையின் பொருளை எளிய முறையில் சொல்லி இருந்ததைத் தொகுத்துப் போட்டிருக்கிறேன். விரும்பியவர்கள் படிக்கலாம். சுட்டிகளைக் கீழே தருகிறேன்

.மார்கழித் திங்கள்

கீதா கல்யாணமே, வைபோகமே!

46 comments:

  1. வாழ்க நலம்... வளர்க நலம்...
    அன்பின் வணக்கங்களுடன்.,

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் கீதா.
    நவராத்திரியில் போட்ட பதிவுகளை தொகுத்து போட்டு விட்டீர்களா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, நவராத்திரியில் முன்னெல்லாம் ஒவ்வொரு வருடமும் பதிவுகள் போட்டிருக்கேன். எதைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. சமீபத்தில் எழுதிய "ஶ்ரீலலிதைக்கு சோபனம்" மின்னூலாக உடனேயே வெளி வந்து விட்டது.

      Delete
    2. முன்பு நவராத்திரியில் போடும் பதிவைதான் சொல்கிறேன்.
      ஸ்ரீலலிதைக்கு சோபனம் மின்னூலாக வந்தது தெரியும்.

      Delete
    3. ம்ம்ம்ம்? அதான் எதுனு புரியலை! இப்போ வந்திருக்கும் இன்னொரு புத்தகம் மார்கழி மாதத்துக்கான பதிவுகளைத் திருப்பாவை விளக்கங்கள், கோலங்களோடு தொகுத்து வந்திருக்கிறது. இன்னும் சில புத்தகங்கள் காத்திருப்பில்!

      Delete
  3. குலதெய்வ கோவிலுக்கு போய் வாருங்கள்.
    உறவினர்களுடன் பயணம் நன்றாக இருக்கும்.
    இறைவன் உடல் நலத்தோடு வைத்து இருகட்டும்.

    ReplyDelete
    Replies
    1. கோமதி, குலதெய்வக் கோயிலில் நேற்று சிறப்பாக அனைத்தும் நடந்தது. ஆனால் உறவினர் யாரும் வரவில்லை. வழக்கம்போல் நாங்க இரண்டு பேர் தான்! :))))) இங்கெல்லாம் போய் வருவதே உடல் நலத்தை நன்றாக வை என இறைவனிடம் வேண்டிக்கத் தானே!

      Delete
    2. சுமகங்கலி பூஜைக்கு வந்த உறவினர் ஊருக்கு போய் விட்டார்களா?

      குலதெய்வம் உடல் நலத்தை நன்றாக வைக்க வேண்டும் . எனக்கு இரண்டு வாரமாய் உடல் நிலை சரியில்லை குலதெய்வத்தைதான் வேண்டிக் கொண்டு இருக்கிறேன். சாருக்கும் கொஞ்சம் சரியில்லை அவர்தான் துணை.

      Delete
    3. வாங்க கோமதி, எல்லோரும் அன்றே இரவு கிளம்பி விட்டார்கள். அவரவர் வேலை இருக்கே! உங்கள் உடல்நிலை சரியில்லை என்பது கவலையைத் தருகிறது. அவருக்கும் சரியில்லை என்கிறீர்கள். நல்ல மருத்துவரிடம் காட்டி உடல் நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள்! உடம்பு சரியில்லைனாலும் நம் வேலைகளை நாம் தானே செய்ய வேண்டி இருக்கு! குலதெய்வம் கூட நின்று காத்து அருள் புரியும். கவலை வேண்டாம்.

      Delete
  4. வாழ்துகள்.
    சுட்டியை காணோமே.

    ReplyDelete
  5. மன்னிக்கவும் .வந்துவிட்டது:)

    ReplyDelete

  6. இந்த பக்கத்தை புக் மார்க் செய்து கொண்டேன் நேரம் கிடைக்கு போது கண்டிப்பாக படிக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி மதுரைத் தமிழரே!

      Delete
  7. மின்நூல்கள் இன்னும் தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி! மின்னூல்கள் ஏழெட்டுக்கும் மேல் வெளி வந்திருக்கின்றன. அதிகம் விளம்பரம் செய்வதில்லை. இதை இங்கே சொன்னதுக்கு முக்கியக்காரணம் அந்தக் காலத்தியத் திருமணம், அவை நடந்த விதம், நிகழ்வுகள் மாப்பிள்ளை, பெண் வீட்டாரின் மனப்பாங்கு ஆகியவற்றை இந்தக் கால இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளத் தான்.

      இன்னும் தென்னிந்திய பிராமண/முக்கியமாய்த் தமிழகப் பிராமணத் திருமணங்கள் குறித்தும் எழுதி வந்தேன் 2013 ஆம் ஆண்டில். அவற்றையும் தொகுத்துக் கொண்டிருக்கிறேன். பொதுவான பிராமணத் திருமணங்கள் முன்னர் நடைபெற்ற விதம், தற்காலங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் என அவற்றில் வரும்.

      Delete
  8. இரண்டு நூலையும் தரவிறக்கம் செய்து விட்டேன் ...படித்து பார்க்கிறேன் ...

    உங்கள் குல தெய்வம் கோவில் பயணம் சிறப்பாக அமையட்டும் ...

    ReplyDelete
    Replies
    1. நன்றி அனு. உங்கள் வலைப்பக்கம் வர முடியாமல் மறந்தே போகிறேன். ஒவ்வொரு முறையும் நினைப்பேன். இப்போது உங்கள் காமாட்சி தரிசனம் குறித்துப் படிக்க எப்படியானும் வருகிறேன். நன்றிம்மா.

      Delete
  9. வாழ்த்துகள் கீதா மா. சிரத்தையோடு செய்தது மனத் திருப்தி.
    கோவில் சென்று வந்து எழுதுங்கள்
    உங்கள் புத்தகங்கள் எப்பொழுதும் சுவைதான். எனக்கும் இது போல வெளியிட ஆசை.

    நிறைய பதிவுகள் காணாமலே போனதில்
    வந்த கவலை.
    குலதெய்வத்துக்கு என் நமஸ்காரங்கள்.
    உடல் நலம் நன்றாக இருக்கப் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி. கோயில் பயணம் நன்றாக அமைந்தது. உடல் நலத்தை அந்த மாரியம்மன் தான் கொடுக்கவேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொண்டு வந்தேன். உங்கள் பிரார்த்தனைகளுக்கு என் நன்றி.

      Delete
  10. தலைப்பைப் பார்த்த உடனேயே.... அடுத்த லீவு லெட்டரா என்று தோன்றியது நிஜம்.

    ReplyDelete
  11. கீதா கல்யாணமே வைபோகமே நூலை தரவிறக்கிக்கொண்டேன். விரைவில் படிக்கிறேன். இதெல்லாம் இந்தத் தளத்திலேயே எழுதினதா?

    ReplyDelete
    Replies
    1. நெ.த. ஆமாம். 2011 ஆம் வருடம் ஒரு தொடர் பதிவு/அவரவர் பெயருக்கான காரணங்களைச் சொல்லணும்னு வல்லி அழைப்புக் கொடுத்திருந்தாங்க! அதை எழுத ஆரம்பித்தது அப்படியே என் கல்யாண நிகழ்வுகளைக் குறிப்பிட்டுத் தொடர்ந்தன.

      Delete
  12. வீட்டு விசேஷங்களில் பிஸியா? மெதுவாய் வாருங்கள். வேளை பளு ஜாஸ்தியாய் இருக்கும் என்றுநினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், வேலை பளு அதிகம் தான். மருத்துவர் ஒரு ஸ்பூனைக் கூடக் கையில் எடுக்காதீங்க என்கிறார். நான் மலையையே புரட்டிக்கொண்டிருக்க வேண்டி இருக்கிறது! :)))))

      Delete
  13. குட் மார்னிங் அக்கா. இணையத்தில் உங்களை மூன்று நாட்களாக பார்க்காமல் உடம்பு சரியில்லையோ என்று கவலையாக இருந்தது. உங்களின் மின்னூல் வெளியானதற்கு பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பானுமதி. இணைய நண்பர்கள் அனைவரின் அன்பும், பாசமுமே இங்கே வரமுடியலையே என்னும் வருத்தத்தையும் எனக்குக் கொடுக்கும். ஆனால் தவிர்க்க முடியாத காரணம்! மற்றபடி பாராட்டுகளுக்கு நன்றி. படித்துவிட்டுச் சொல்லுங்கள்.

      Delete
  14. குட் மார்னிங் அக்கா. இணையத்தில் உங்களை மூன்று நாட்களாக பார்க்காமல் உடம்பு சரியில்லையோ என்று கவலையாக இருந்தது. உங்களின் மின்னூல் வெளியானதற்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  15. இரண்டு மின்புத்தகங்கள்.... வாழ்த்துகள் கீதாம்மா...

    ஒரு புத்தகம் தரவிறக்கம் செய்து விட்டேன். படித்து முடித்த பின் மற்றதையும் தரவிறக்கம் செய்து கொள்வேன்.

    மேலும் பல புத்தகங்கள் வெளியிட வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், ஏற்கெனவே என்னோட கயிலை யாத்திரையில் இருந்து பல புத்தகங்கள் வெளி வந்திருக்கின்றன. இவற்றையும் படித்துவிட்டுச் சொல்லுங்கள்.

      Delete
  16. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. வீட்டுவிசேஷங்களில் பிசியா? குலதெய்வம் கோவிலா? கணினியில் அமர எனக்கும் நேரம் கிடைப்பதில்லை. இளையவன் ஆக்ரமிக்கிறான்!

    ReplyDelete
    Replies
    1. இது என்ன அதிசயமாக இருக்கு... இப்போல்லாம் பசங்க அவரவர் மொபைலே கதின்னா இருப்பாங்க...

      Delete
    2. வாங்க ஶ்ரீராம், சில சமயங்களில் எனக்கும் யாரானும் கணினியை எடுத்துக் கொண்டு கிடைக்காமல் போனது உண்டு. ஆனால் இப்போது அந்தப் பிரச்னை இல்லை. வேலை அதிகம் என்பதாலேயே வர முடியலை!

      Delete
    3. நெல்லைத் தமிழரே, பசங்க மட்டும் இல்லை, அனைவருமே மொபைலே கதினு தான் இருக்காங்க! :(

      Delete
  18. நாங்களும் அடுத்த மாதம் குலதெய்வம் கோவிலுக்குச் செல்வதாய் நினைத்துள்ளோம். இறைவன் திருவுள்ளம் வேண்டும். முன்னாலேயே சொல்வதற்குக்கூட தயக்கமாய் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், நல்லபடியாகப் போயிட்டு வாங்க. குலதெய்வம் என்றென்றும் துணை நிற்கும். கவலைப்பட வேண்டாம். சொல்லாமலேயே போயிட்டு வாங்களேன்! அதனால் என்ன?

      Delete
  19. மின் நூல்கள் பற்றி முகநூலில் பார்த்தேன். இனிதான் இறக்கிப் படிக்க வேண்டும். சுசரிதை என்றதும் நானும் புதுசாய் எழுதியிருக்கிறீர்களோ என்றுதான் நினைத்தேன். இப்போது புரிகிறது. இதில் சிலவற்றையாவது நானும் இங்கே தளத்தில் படித்திருப்பேன் இல்லை?

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், சுயசரிதை என்னும் தலைப்பு க்ரியேடிவ் காமன்ஸ் ஶ்ரீநிவாசன் வைச்சிருக்கார். இது சுயசரிதை எல்லாம் அல்ல. வாழ்க்கை ஆரம்பத்தின் ஒரு சின்னப் பகுதி! அதன் முன்னும் சரி, பின்னாலும் சரி நடந்த விஷயங்களை எழுத ஆரம்பித்தால் எத்தனை பக்கங்கள் வருமோ! :))))

      Delete
  20. தங்கள் கல்யாணமே வைபோகமே & மார்கழித் திங்கள் இரண்டும் Free Tamil E Books இல் படித்தேன். என் துணைவி படித்துக்கொண்டிருக்கிறார். 'மாப்பிள்ளைப் பையர்' என்று அர் விகுதி போட்டுப் பையனைப் பையராக்கியது சுவையாக இருந்ததாகச் சொன்னார்.திருச்சி வரும்போது தங்களைச் சந்திக்க வேண்டும்.

    -இராய செல்லப்பா (தற்போது நியூ ஜெர்சியில்)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் திரு ராய.செல்லப்பா அவர்களே! நீண்ட காலமாக உங்களை எந்தப் பதிவிலும் பார்க்க முடியவில்லை. இங்கே வந்ததுக்கும் கருத்துச் சொன்னதுக்கும் நன்றி. திரு கிருஷ்ணமூர்த்தி பற்றிய உங்கள் புத்தகத்தைக் குறித்த என் அறிமுகப் பக்கங்களைப் பார்க்க உங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தேன். நேரமின்மையால் வரவில்லை போலும். ஆனால் அது ஓரிரு வருடங்கள் முன்னர் என நினைக்கிறேன்.

      Delete
  21. கீதாக்கா வாழ்த்துகள்.

    எங்க பெட்டிக்கு வந்துவிட்டதே உங்கள் புத்தகம் லிங்க். அதைத்தான் வாட்சப்பில் குறிப்பிட்டிருந்தேன்!

    தரவிறக்கிவிட்டேன் இனிதான் வாசிக்க வேண்டும் கீதாக்கா...

    கீதா

    ReplyDelete