இந்த புவனேஸ்வரியைப் பற்றி எழுதப் போகும்போது திடீரென வானம் கறுத்து இடி, மின்னல் ஏற்பட்டது. மின்னல் என்றால் நான் உட்கார்ந்து எழுதுவது அறைக்குள்ளே. அந்த அறைக்குள்ளே திடீரென ஒரு பேரொளி பாய்ந்தது. அதை நான் நன்கு உணரும் முன்னே அண்ட, சராசரங்களும் ஆடுவது போன்ற ஒரு பெரிய ஓசையுடன் இடி இடித்தது. அதை இடி என்றே உணர முடியவில்லை. அப்போது தான் ஓசையில் இருந்து அம்பிகை தோன்றுவதைப் பற்றிக் கேட்டு விட்டுக் கணினியில் உட்கார்ந்திருக்கின்றேன் எழுத. உடனேயே ஒளியும், ஓசையுமாகக் கண் முன்னே தோற்றம் ஏற்பட்டுச் சிறிது நேரம் வரைக்கும் எதுவும் புரியவில்லை. காணாதது கண்டாற்போன்றதொரு நினப்பு. என்ன நடந்தது என்றும் உணரமுடியவில்லை. என்னை நான் மீட்டுக் கொள்ளவும் நேரம் பிடித்தது. உடனேயே கணினியை மூடி வைத்துவிட்டு உட்கார்ந்துவிட்டேன். பின்னர் இடியும், மின்னலும் உண்மைதான் என்று தெரிந்தாலும் எனக்கு ஏற்பட்ட அபூர்வ உணர்வு புதுமையாகவே இருந்தது.
ஹ்ரீம் என்ற புவனேஸ்வரியின் பீஜமானது காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. இந்த ஹ்ரீமில் இருந்தே தோன்றியவர்கள் மற்ற தேவியர்கள் ஆன மஹா காலீ, மஹா லக்ஷ்மீ, மஹா சரஸ்வதி ஆகியோர் . விதை விதைத்தால் அதிலிருந்து முதலில் முளை, துளிர், இலை, கிளை, அரும்பு, பூக்கள், காய்கள், கனிகள் என்று தோன்றுகிறாப் போல் அம்பிகையும் தோன்றுகின்றாள் என்பதை நன்கு புரிய வைத்தது அந்த இடியும், மின்னலும். இந்த தேவியரின் மந்திர வடிவங்களில் முக்கியமானவை நவாக்ஷரியும், ஸப்த ஸதீ மாலா மந்திரமும். நவாக்ஷரி மந்திர உபதேசம் பெற்றவர்கள் அங்கமாய் ஸப்தஸதீயும், ஸப்த ஸதீ உபதேசம் பெற்றவர்களின் அங்கமாய் நவாக்ஷரியும் விளங்குகின்றது. மேலும் சிதம்பர ரகசியத்தில் பரமசிவன், பார்வதிக்கு இந்த ஸப்தசதீயின் மகிமை பற்றிக் கூறுகின்றார்.
இந்த ஸப்தசதியைப் படிப்பவர்களுக்கு ஏழ்மையில் இருந்து விடுதலை கிடைக்கும். பகைவர்களை வெல்லும் திறமை உண்டாகும். மனதில் ஏற்படும் காரணமற்ற அச்சம் போன்றவை விலகும். தேவர்களுக்கு அருள் புரியும் பொருட்டுக் காலி, காளி என்னும் பெயருடன் தோன்றிய பரதேவதை காலாந்தரத்தில் லக்ஷ்மியாகவும், சரஸ்வதியாகவும் தோன்றினாள். மூன்று வடிவு கொண்ட அவளின் உருவை சின்மயம் என்று சொல்லுவதுண்டு. திரிபுரா என்ற பெயரில் அவளை அழைப்பார்கள். இந்த தேவி மகாத்மியம் மார்க்கண்டேயபுராணத்தில் எழுநூறு மந்திரங்களில் கூறப்பட்டுள்ளது. மஹாபாரதத்தில் எவ்வாறு எழுநூறு ஸ்லோகங்களில் பகவத்கீதை அமைந்துள்ளதோ அதே போல் மார்க்கண்டேய புராணத்தில் எழுநூறு மந்திர வடிவங்களில் அமைந்துள்ள இந்த தேவி மகாத்மியத்தைப் படிப்பவர்கள் , ஒரே தடவையில் பாராயணம் செய்ய அவகாசம் இல்லை என்றாலும் மத்திம சரித்திரத்தை மட்டும் படிக்கலாம். அல்லது நவாஹ பாராயாணம், சப்தாஹ பாராயணம் என்ற முறையிலும் படிக்கலாம். சில சரித்திரங்கள் அரை, குறையாகப் படிக்கக் கூடாது, படிக்க முடியாது என்ற நியமங்கள் உண்டு. அத்தகையதொரு எந்தவிதமான நியமும் இதற்குக் கிடையாது.
பரமேசுவரியைச் சரணடைந்து அவளின் பாதாரவிந்தங்களில் ஆராதனைகள் பலவும் செய்து வந்தால் அனைத்து நன்மைகளும் கிட்டும். ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் சாதனைகளாலும், வழிபாடுகளாலும் பவதாரிணி என்ற உருவில் அன்னை வழிபடப்பட்டு அவள் பெருமை எடுத்து உரைக்கப் பட்டிருக்கின்றது. மிகச் சிறந்ததொரு எடுத்துக்காட்டான அவரின் மொழியமுதத்தைப் படித்தாலே அன்னையின் ஆற்றல்கள் அளப்பரியது என்பது நன்கு விளங்கும். யுக, யுகமாய் விளையும் தீமைகள் அனைத்தையும் அவளின் கடைக்கண் பார்வையாலேயே பொசுக்கி ரட்சிக்கின்றாள். தீயவற்றைப் பொசுக்கும் பேரொளியாக வந்தவளே அந்த துர்க்கா தேவி. மகா காலி, லக்ஷ்மி, சரஸ்வதி என்று சொல்லலாம். ராமகிருஷ்ணருக்குப் பின்னர் பெரும் சக்தி உபாசகரும், இன்றளவும் கவிதை உலகில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாத அளவுக்குக் கவிதைகள் எழுதியவரும் ஆன நம் பாரதியும் ஒரு மகத்தான சான்று.
சக்தியைப் பற்றி எழுதிவிட்டு பாரதியைச் சொல்லாமல் இருக்க முடியுமா?? மிகச் சிறந்த சக்தி உபாசகர் ஆன அவர் தன் பெயரையே சக்தி தாசர் என்றும் வைத்துக் கொண்டார். பராசக்தியை அக்னிக்குஞ்சு வடிவில் காண்டு அது தன் மனதில் உள்ள மாசுக்களைப் பொசுக்கியதையும் உள்ளத்தில் பரவிய பேரொளியையும் தன் அக்னிக்குஞ்சு பாடல் மூலம் இரண்டே வரிகளில் காட்டுகின்றார். மேலும் தேவி மகாத்மியத்தில் தேவியின் பெருமையைக் கூறும் ஸ்லோகங்களுக்குச் சமானமாக அவரின் சக்திப் பாடல்கள் பலவும் கூறலாம். காளியானவள் யாதுமாகி அனைவரிடத்திலும் நின்றதைக் குறிக்கும் பாடல் கீழே
.
“யாதுமாகி நின்றாய் காளி,
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை யெல்லாம் காளி
தெய்வ லீலையன்றோ
பூதமைந்தும் ஆனாய் காளி
பொறிகளைந்தும் ஆனாய்
போதமாகி நின்றாய் காளி
பொறியை விஞ்சி நின்றாய்
\இன்பமாகி விட்டாய் காளி
என்னுளே புகுந்தாய்
பின்பு நின்னையல்லால்
பிறிது நானுமுண்டோ?
அன்பு தந்துவிட்டாய் காளி- காளி
ஆண்மை தந்துவிட்டாய்
துன்பம் நீக்கிவிட்டாய் காளி
துயரழித்துவிட்டாய்.”
சரியோ, தப்போ, தெரியாது என் மனசில் தோன்றியதை எழுதி இருக்கின்றேன்.
எப்போதோ ஓர் மழை நாளில் ஏற்பட்ட அனுபவம். தற்செயலாக ட்ராஃப்ட் மோடில் இருந்தவைகளைப் புரட்டும்போது கிடைத்தது. இப்போப் படிக்கையில் மெய் சிலிர்த்தது. இத்தகைய அனுபவம் அதன் பின்னர் ஏற்படவே இல்லை என்பது தெரிந்து வெட்கமாயும் இருக்கிறது. இப்போதைய காலகட்டத்தில் இரண்டு மூன்று வருடங்களாக நான் அதிகம் லௌகிக வாழ்க்கையில் மூழ்கி அனைத்தையும் மறந்துவிட்டேனோ என நினைக்கிறேன். குருநாதரின் தரிசனம் கிட்டாமல் இருப்பதும் ஒரு காரணமோ? ஆனால் நான் வேண்டினாலும் இத்தகைய அனுபவம் மீண்டும் ஏற்படாது. ஏனெனில் மனம் வசப்பட வேண்டும். அது தான் என்னென்னவோ நினைத்துக் கொண்டு இந்த உலக வாழ்க்கையில் மூழ்கி இருக்கே!
ரொம்ப ஆச்சர்யமான நிகழ்வுதான். இதையெல்லாம் விவரிக்க முடியாது
ReplyDeleteவாங்க நெ.த. அந்த நாளை நினைவுகளில் இருந்து மீட்டெடுத்தேன். ஆனால் உணர்வுகள்?
Delete//அதிகம் லௌகிக வாழ்க்கையில் மூழ்கி // - அதுக்கு முன்னால இன்னும்தான் லெளகீக வாழ்க்கையில் மூழ்கியிருப்பீங்க....
ReplyDeleteஇல்லை நெ.த. எங்க குருவே சொல்லுவார். உங்களிடம் பற்றின்மை தெரிகிறது என்று! அது என்னமோ தெரியலை! இப்போச் சில வருடங்களாக மனசு அடிச்சுக்கறது. பற்றைத் தேடி அலைகிறது. காற்றில் அசைந்தாடும் கொடியைப் போல் என் மனம் அங்கும் இங்கும் அலைக்கழிந்து கொண்டிருக்கிறது.
Deleteஎதுனால இப்போ மனசு, 'பற்றைத் தேடி அலையணும்'? ஒருவேளை அந்த சமயத்துல 'பற்று' தேவையாயிடுமோ? அல்லது வெறுமை மனதை ஆக்கிரமிக்குமோ? அல்லது ஏதேனும் காரணத்துக்காக இப்படி நிகழ்கிறதோ? - எல்லாம் நன்மைக்கே என்றுதான் நினைத்துக்கொள்ளணும்.
Deleteதடுமாற்றம்னு நினைக்கிறேன். அல்லது பரிதவிப்புத் தான் காரணமோ! கடந்த 2,3 வருஷங்களின் நிகழ்வுகள் காரணமோ! எதுனு தெரியலை! அதிலிருந்து கொஞ்சம் ஆட்டம் கண்டு விட்டது.
Deleteஇந்த அற்புதமான அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டு நீங்கள் எழுதியதை இப்போதுதான் வேளை வந்து பூர்த்தி செய்திருக்கிறீர்கள் என்றால்
ReplyDeleteஅதுவே நல்லதிற்கு அறிகுறி.
எனக்கும் ஒரு உபாசகர்
புவனேஸ்வரித் தாயைத் தினமும் நினைத்து உச்சரிக்க
மந்திரம் எழுதிக்கக் கொடுத்தது, 1980 இல்.
96 ஆம் வருடத்துக்குப் பிறகு என்
பிடிப்பு முன் போல் இல்லை.
தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கும் ஆத்மா தானே.
சம்சாரம் விடுமோ ,இல்லை நாம் தான் அதை விடுவோமோ.
சம்மட்டி அடி வாங்கினாலும்
மனம் மீண்டும் குடும்பத்தில் தான் உழல்வேன் என்கிறது.
அற்புதமாக விளக்கி இருக்கிறீர்கள்.
புதுக்கோட்டை புவனேஸ்வரி நினைவுறுத்துகிறாள். அதுவும் வெள்ளி
பார்த்து.
துதிக்கிறேன்.நன்றி மா.
நல்ல வார்த்தைகளுக்கு நன்றி ரேவதி. நீங்க சொன்னபடியே ஆகட்டும். எனக்கு மந்திரங்கள் எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டாங்க! ஆனாலும் சம்சாரம் இப்போத் தான் அதிகம் பிடித்துக் கொண்டிருக்கிறது. புவனேஸ்வரி தான் ஆட்கொள்ள வேண்டும்.
Deleteஅம்பிகை நேரில் வந்தாள்
ReplyDeleteஅருளை அள்ளி தந்தாள் உங்களுக்கு.
அவள் நினைவில் ஆழ்ந்து விட்டீர்கள்.
மெய் சிலிர்ப்பான அனுபவம் தான்.
புவனேஸ்வரி மழையை கொடுக்கட்டும்.
தண்ணீர் பஞ்சம் நீங்க வேண்டும்.
அம்பிகையை சரண் அடைந்தால் யாதும் அவள் தருவாள்.
முக்கியமாய் மழை குறித்து எழுத வேண்டும் என்றே யோசித்துக் கொண்டிருந்தேன் கோமதி. அப்போத் தான் இது கண்களில் பட்டது. மழைநாளில் எழுதிய பதிவு! அதே போல் மழையை இப்போவும் புவனேஸ்வரி தான் அருள வேண்டும்.
Deleteநீங்கள் உபதேசம் பெற்றவரா? ஆனால் நீங்கள் அடைந்த அந்த அனுபவம் படிக்கும்போது சிலிர்க்கிறது. சிலருக்கே இதுமாதிரி அனுபவங்கள் வாய்க்கிறது.
ReplyDeleteஶ்ரீராம், உபதேசமா? எனக்கா? நீங்க வேறே! இன்னும் அந்த அளவுக்கெல்லாம் தகுதியைப் பெறவில்லை. ஆனால் இம்மாதிரிச் சில அனுபவங்கள் ஏற்படும். கோயில்களுக்குச் செல்கையில் கூட மனம் தனியாக வெளியே வந்து/அல்லது நானே வெளியே வந்து என்னையே பார்ப்பது புரியும். மிதக்கிறாப்போல் உணர்வேன்.
Deleteநீங்கள் சொல்லி இருக்கும் பாடல் பற்றி படித்ததும் எனக்கு இன்னொரு பாரதி பாடல்நினைவுக்கு வந்து உடனே சென்று அதனைக் கேட்டு விட்டேன்.
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=rvBuNzeXAVU
நெஞ்சுக்கு நீதி தானே? கேட்டிருக்கேன். இப்போவும் கேட்டுக் கொண்டிருக்கேன்.
Deleteஇவைகளை உணர்ந்தவர்களால் மட்டுமே நம்ப முடியும் காரணம் இன்றைய சமூகம் அப்படி.
ReplyDeleteஎனக்கும் சில அனுபவங்கள் உண்டு.
வாங்க கில்லர்ஜி, பகிர்ந்து கொள்ளுங்கள்.
Deleteவியப்பாக இருக்கிறது அம்மா... அருமை...
ReplyDeleteவாங்க டிடி. நன்றி.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteதங்களது அனுபவங்கள் மிகவும் ஆச்சரியமூட்டுகின்றன. மனதை ஒருநிலை படுத்துதல் என்பது சம்சார சாகரத்தில் உழலும் நமக்கு சாத்தியமா? நீங்கள் தெய்வ பக்தி மிகவும் கொண்டவர் என்பதினால் இவ்வகை உணர்வுகள் தோன்றுகின்றனவோ? இல்லை தினமும் சதாரண வழிபாடுகளை முறையாக செய்து வருவதனால் இந்த பிரகாசம் நமக்குள் தோன்றுமா? எப்படியாயினும் தெய்வ அனுகிரஹகம் என்பது எல்லோருக்கும் எளிதில் கிடைத்து விடாது.தங்களுக்கும் அது உண்டென்பது மகிழ்வை தருகிறது. என் பெரிய நாத்தனாரின் கணவர், புவனேஸ்வரியை தினமும் பூஜித்து வந்தார்.வேண்டிய மழையை தந்து மனித குலத்தை அன்னை காக்கட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, அனைவருக்கும் இப்படி அனுபவங்கள் ஏற்படும் என்றே எண்ணுகிறேன். உணர்வதில் சற்று முன் பின்னாக இருக்கலாம். நாம் அனைவருமே அதிகமான தெய்வ பக்தி கொண்டவர்கள் தாம். நீங்கள் சற்றும் குறைந்தவர் அல்ல. சாதாரண வழிபாடுகள் எதையும் நான் இப்போதெல்லாம் செய்வதில்லை. கீழே உட்கார முடியாது. பட்டினி கிடக்க முடியாது! தலைக்குத் தினமும் தண்ணீர் ஊற்ற முடியாது! இப்படிப் பல கட்டுப்பாடுகள்.தெய்வத்தை நினைப்பதே இப்போதெல்லாம் பெரும்பாடாக ஆகிவிட்டது! உங்களுக்கும் தெய்வ அனுகிரஹம் உண்டு. நம் அனைவருக்குமே உண்டு. இல்லையெனில் நாம் இவ்வாறு இருப்பது எப்படி சாத்தியம்?
Deleteயாவுமாகி நிற்பவள் அன்னை. யாவும் அவளின் சங்கல்பம் . தன் இருப்பை ஒரு மென்காற்றாக உணர்த்திச் செல்பவள் அவள். நம் நுண்ணர்வு விழிப்புடன் மலர்ந்திருந்தால் கண்டு கொள்ளலாம்.
ReplyDeleteஅகிலாண்டேஸ்வரியே சரணம்!
வாங்க தம்பி! நீங்கள் எழுதிய இன்றைய பதிவைப் படித்ததும் என்ன ஒரு எண்ண ஒற்றுமை எனத் தோன்றியது. வானத்தின் வர்ணஜாலம் உங்களுக்கு ஜகதம்பிகையின் மந்தகாச முறுவலாகத் தோன்றி உள்ளது. எனக்கு அவளே நேரில் வந்துவிட்டாளோ என்னும்படியாக இருந்தது. நன்றி தம்பி. அழைத்ததும் வந்து கருத்துச் சொன்னதற்கு நன்றி.
Deleteஅறைக்குள்ளே பேரொளி..அதன் பின்னே பெருஞ்சத்தம்.. புவனேஸ்வரி தந்த அருங்காட்சி எந்த வருடத்தில் நிகழ்ந்தது?
ReplyDeleteபுதுக்கோட்டை புவனேஸ்வரியை தரிசித்ததுண்டா?
வாங்க ஏகாந்தன், இது நடந்து ஐந்தாறு வருடங்கள் ஆகிவிட்டன. இங்கே ஶ்ரீரங்கத்தில் அரங்கன் மழையையே ஒதுக்கி விடுகிறாரே! இடி, மின்னல் வரும்! புதுக்கோட்டை புவனேஸ்வரியைத் தரிசித்திருக்கேன் ஒரே முறை.
Deleteசிலிர்கவைக்கும் அனுபவம்.
ReplyDeleteகீதாக்கா செம எக்ஸ்பீரியன்ஸ். இப்படியானவை எல்லாம் ஒரு சிலருக்கே வாய்க்கும். அதில் ஆழ்ந்திருந்தால் மட்டுமே. இறைவன்/இறைவி நம்முடன் நம் மனதுள்தான் இருக்கிறார்கள் என்பதை உணரவும் நம் அகக்கண் விழிப்புடன் இருக்க வேண்டுமே!!!!!
ReplyDeleteஎனக்கு இப்படி எல்லாம் நிகழ்ந்ததில்லை. நான் அந்த அளவிற்கு ஆன்மீகவாதியைல்லையே. பக்தி என்பதும் இல்லையே!!!!!!!!!
என்றாலும் ஒரு சில சமயம் பிரார்த்தனை செய்யும் போது மனதுள் டக்கென்று தோன்றும் இப்படித்தான் நடக்கும் அல்லது தீர்வு கிடைக்கும் அல்லது ஒரு முயற்சி எடுக்கும் போது டக்கென்று தோன்றும் நடக்கும் நல்லதே நடக்கும் என்றும்...ஃபேவரபிளாக நடக்கும் என்றும்...அது நடக்கவும் செய்யும்...பாசிட்டிவான எண்ணங்கள் மனதுள் நிறைந்திருக்கும் போதுதான் இது ஏற்படுகிறது என்பதையும் கூர்ந்து கவனித்திருக்கிறேன் அக்கா...
ரிச்சுவலிஸ்டிக் கிடையாது ஆனால் நம்முடனேயே நம்முள்ளேயேதான் இறைவன் எப்போதும் இருக்கிறார் என்ற அசாத்தியமான நம்பிக்கை உண்டு.
இந்தப் பதிவை அன்று படித்திருந்தால் உங்களிடம் பேசியிருந்திருப்பேன்...ஆனால் உங்கள் இருமல் உங்களை அதிகம் பேசவிட்டிருக்காதே.....
எல்லாம் நல்லதே நடக்கும் கீதாக்கா. அருமையா யாதுமாகி நின்றாய் காளி என்று எழுதியிருக்கீங்க...
இது முன்னரே இந்தப் பாடல் சொல்லியிருக்கீங்களோ அப்படித்தான் எனக்கு நினைவு வருது. இந்தப் பாடல் நான் முன்பே வாசித்த நினைவு வருகிறது.
கீதா
ஆகா அருமை அருமை
ReplyDelete