எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, September 10, 2019

நான் வந்துட்டேன், நான் வந்துட்டேன்னு சொல்லு நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!

அமெரிக்கா ஹூஸ்டன் க்கான பட முடிவு

Picture Courtesy: Google, Thanks.

நான் வந்துட்டேன், நான் வந்துட்டேன்னு சொல்லு நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!  ஹாஹாஹா! 

குட்டிக்குஞ்சுலுவுக்கு எங்களை நன்றாக அடையாளம் தெரிந்தாலும் முதலில் தலையைத் திருப்பிக் கொண்டு "நோ" என்று சொன்னது. தொடக் கூடாதாம், கன்னங்களைக் குட்டிக்கைகளால் மூடிக் கொண்டு முகத்தையும் திருப்பி கொண்டு விட்டது. ஹேஹே, நாங்க விடுவோமா? ஓடிப் போய்த் தொட்டுட்டோம். சிரிக்கிறது முகத்தை மூடிக் கொண்டு. நேற்று அதற்கு நக்ஷத்திரப் பிறந்த நாள். நாங்க வாங்கிட்டு வந்திருந்த பாவாடை, சட்டையைப் போட்டுக் கொண்டு அது அப்பா, அம்மாவுடன் அருகே இருந்த கோயிலுக்குப் போய்விட்டு வந்தது. வந்து எல்லோரையும் நமஸ்காரமெல்லாம் பண்ணினதாம். என்னால் உட்காரமுடியவில்லைனு போய்ப் படுத்துட்டேன். ஆகவே அதைப் பார்க்கக் கொடுத்து வைக்கலை. நேற்று முழுவதும் எழுந்து உட்காரவே முடியவில்லை.ஜெட்லாகெல்லாம் இல்லை நல்லவேளையா. சுமார் 24 மணி நேரம் உட்கார்ந்தே வந்ததில் கால்கள் வீங்கி விட்டன. அதனால் வலி கொஞ்சம். தூங்கி எழுந்ததில் இன்று பரவாயில்லை. இன்னும் கொஞ்சம் நிதானம் வர 2,3 நாட்கள் ஆகும் போல் இருக்கிறது. முன்னெல்லாம் வந்த அன்றே வேலையைத் துவக்குவேன். இந்த முறை முடியலை.

அம்பேரிக்காவுக்கு வந்து சேர்ந்தாச்சு. கிளம்பும் முன்னர் கிளம்புவதற்கான ஆயத்தங்கள் செய்வது, நடுவில் பண்டிகைகள் வந்தது அதற்கான வேலைகள் எனச் சரியாக இருந்தது. தினமும் கணினியில் அமர்ந்து கொண்டு வேலைகள் செய்தேன் தான். ஆனால் அவை எல்லாம் கிளம்புவதற்கான ஆயத்தவேலைகள். கிளம்பும் முன்னர் செய்ய வேண்டிய ஆயத்தங்கள். தொலைபேசியை சேஃப் கஸ்டடியில் வைப்பது, மின்சார வாரியத்துக்கு முன் பணம் கட்டுவது எனப் பல வேலைகள். இவற்றை எல்லாம் ரங்க்ஸ் செய்தாலும் சில வேலைகள் ஆன்லைனில் செய்ய வேண்டி இருக்கிறது. அவை எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது.  ஞாயிற்றுக் கிழமை மாலை இங்கே வந்து சேர்ந்தோம். பையர் வந்து அழைத்துக் கொண்டு வந்து வீட்டில் சேர்ப்பித்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்தே நாங்க இருவருக்குமே வீல் சேர் கேட்டிருந்ததால் நல்லவேளையாக விமான நிலையத்தில் நடக்க வேண்டிய மணிக்கணக்கான, மைல் கணக்கான நடை இல்லை. விமானப் பயணம் குறித்துச் சொல்லுவதற்கு முன்னர் சில விஷயங்கள்.

சனிக்கிழமை சென்னை விமான நிலையத்துக்குக் கிளம்ப வேண்டும். அதற்கு 2 நாட்கள் முன்னரே வயிறு வழக்கம்போல் கொஞ்சம் தகராறு செய்ய ஆரம்பித்தது. மோர் சாதம் தவிர்த்து வேறே ஏதும் சாப்பிடக் கூடாதுனு கவனமாக இருந்து 2 நாட்கள் பொழுதையும் கழிச்சாச்சு. சனிக்கிழமை சாயந்திரம் ஆறு மணி போல் கிளம்பியும் ஆச்சு. வண்டியில் ஏறிக்கொண்டு வரும் வழியில் ரேவதி தொலைபேசியில் விசாரித்தார். பின்னர் இங்கே வந்ததும் பேசிக்கொள்ளலாம்னு சொல்லிவிட்டுத் தொலைபேசியை வைத்தார். நாங்க கிளம்பும்போது மதியச் சாப்பாடுக்கான குழம்பு, ரசம், கறி, கூட்டு மட்டும் காடரர் மூலம் வாங்கிக் கொண்டோம். கைக்குச் சப்பாத்தியும் உருளைக்கிழங்கு மசாலா(மதுரை அம்பி கடை மாதிரி) பண்ணி (சின்ன வெங்காயம் போட்டுத் தான்) எடுத்துக் கொண்டு விட்டேன். வெண்ணெய் வேறே நிறைய இருந்ததால் மெலிதாப் பராந்தா மாதிரிப் பண்ணி எடுத்துக் கொண்டேன்.

வண்டியில் வந்து கொஞ்ச தூரம் ஆனதும் இரவு எட்டு மணி சுமார் வண்டியை எங்கானும் நிறுத்தி விட்டுச் சாப்பிடலாம்னு முடிவு செய்து, உளுந்தூர்ப்
பேட்டை தாண்டி அடையார் ஆனந்த பவன் வாசலில் (பெட்ரோல் பங்கை ஒட்டி இருக்குமே அது)நிறுத்திவிட்டுக் கழிவறைக்குப் போகலாம்னு கீழே இறங்கினோம். சாப்பாடு எனக்கு வேண்டாம்னு சொல்லிவிட்டுச் சூடாகக் குடிக்கத் தான் வேண்டும் என்று அடையார் ஆனந்த பவனிலேயேயே காஃபி வாங்கித் தரச் சொன்னேன். காஃபி வாங்கிக் கொண்டு வந்ததும் வண்டி கிளம்பியது. வேறே எங்கும் நிற்காமல் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தோம். அங்கே எமிரேட்ஸ் நுழைவாயிலுக்கு எங்கே நிறுத்தணும்னு கேட்டுக் கொண்டு அங்கே நிறுத்திய பின்னர் ட்ராலியில் சாமான்களை வைத்துக் கொண்டு உள்ளே பாதுகாவலரிடம் பயணச் சீட்டையும், பாஸ்போர்ட்டையும் காட்டிவிட்டு நுழைந்து ஸ்கானிங் மாதிரியான வேலைகளை முடித்துக் கொண்டு பயணச் சீட்டு வாங்கச் சென்றோம். அங்கிருந்த ஏர்லைன்ஸ் ஊழியரிடம்  எங்களுக்கு முன் வரிசையில் ஓரத்து இருக்கைகள் இருந்தால் கொடுக்கும்படி கேட்டதில் அவர் முன் வரிசை எல்லாம் விற்று விட்டன என்றார். ஙே! இதென்ன என யோசித்ததில் கால்களை வசதியாக வைத்துக் கொண்டு உட்கார முடியாத முப்பது வயதுக்கு உட்பட்ட முதியோர்கள் அவற்றை அதிகப் பணம் கொடுத்து வாங்கிவிடுவதாகக் கேள்விப் பட்டோம். முன்னெல்லாம் இப்படி இல்லை. பிசினெஸ் க்ளாசில் எல்லாம் போக இன்னும் அதிகப்படியான டாலர்களைக் கொடுக்க வேண்டும். வேறே வழியில்லாமல் அவங்க கொடுத்த இருக்கை எண்களை வாங்கிக் கொண்டு நாமும் 30 வயதுக்குட்பட்ட முதியோராக இல்லாமல் போனோமே என நினைத்துக்கொண்டு வந்து வீல் சேருக்குக் காத்திருந்தோம்

40 comments:

  1. நடசத்திர பிறந்த நாளுக்கு போய் விட்டீர்களா?

    பயணத்திற்கு முன் நிறைய வேலைகள் அந்த அலுப்பு களைப்பு எல்லாம் குட்டி செல்லத்தைப் பார்த்தவுடன் பறந்து போகும். குழந்தையுடன் மகிழ்ந்து இருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, ஆமாம், நக்ஷத்திரப் பிறந்த நாளைக்குப் போயிடணும்னு தான் திட்டம். இன்று ஆங்கிலத் தேதி! அது நாங்க வாங்கி வந்த பாவாடை, சட்டையைப் போட்டுக் கொண்டு கழட்டமாட்டேன்னு சொல்கிறது. :))))))

      Delete
  2. ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள் அம்மா...

    ReplyDelete
  3. பயணம் நல்லபடியாக முடிந்தது அறிந்து மகிழ்ச்சி...

    குழந்தையுடன் பொழுது போகுங்கள்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட், அது ஓடும் ஓட்டத்துக்கு ஓட முடியலை! :)

      Delete
  4. அமெரிக்காவில் மகிழ்வுடன் நாட்கள் கழிய என் வாழ்த்துக்கள்! கால் வீக்கம் இருக்கும் தான்! கவனித்துக்கொள்ளுங்கள்! போகும்போது எங்கள் ஊர் [ துபாய் ] வழியாகத்தான் சென்றீர்களா?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், மனோ! உங்கள் ஊர் வழியாகத் தான் 2,3 முறை சென்றிருக்கிறோம். இப்போதும்! கால் வீக்கம் இப்போத் தான் குறைய ஆரம்பித்துள்ளது.

      Delete
  5. பத்திரமாக சென்று சேர்ந்ததில் மகிழ்ச்சி.  குழந்தை சந்தோஷப் பட்டிருப்பாள்.  ஸ்கைப்பில் பார்த்த உருவங்களை நேரில் கண்டதும் திகைப்பில் ஆழ்ந்திருப்பாள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், நாங்க தான் வரோம்னு அவளுக்குப் புரிஞ்சிருக்கு. முதல்லே சிரிச்சாலும் முகத்தைத் திருப்பிக் கொண்டு விட்டாள். ஆனால் நாம் தொட்டால் ஒண்ணும் சொல்லலை. நேற்று இரவு பத்தரை வரை ஒரே கொட்டம்!

      Delete
  6. நீங்கள் அமெரிக்கா கிளம்பும் பிஸியில் இருக்கிறீர்கள் என்று தெரியும்.  எங்கள் ஒரு பதிவின் ஆரம்பத்தில் சொல்லவும் சொல்லி இருந்தேன்.  இன்று உங்கள் கமெண்ட் எங்களில் பார்த்ததும் சந்தோஷம் ஏற்பட்டது.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம், நான் பதிவுகள் எல்லாம் பார்த்தே 15 நாட்கள் ஆகின்றன. ஆனால் வாட்சப்பில் கேட்டிருந்தீர்கள். தி/கீதாவும் கேட்டிருந்தார். வல்லியும் கேட்டிருந்தார்/பேசவும் பேசினார்.

      Delete
  7. முப்பது வயதுக்குட்பட்ட முதியவர்கள்...
    ஹா...   ஹா..  ஹா...  பணம் பத்தும் செய்யும்!
    ஆறுமாசம் அமெரிக்கா வாசமா?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஸ்ரீராம், ஆறு மாசம். மார்ச் ஏழாம் தேதி வரை இருக்கலாம். ஆனால் பத்துப் பதினைந்து நாட்கள் முன்னாடியே வந்துடுவோம்னு நினைக்கிறேன்.

      Delete
    2. ஆமாம், பெரும்பாலும் அந்த முன் வரிசை இருக்கைகளில் ஜீன்ஸ் போட்ட இளைஞர்கள், இளைஞிகளே காணப்பட்டனர். ஆங்காங்கே ஒன்றிரண்டு பெண்கள் கையில் குழந்தையுடன்! என்றாலும் பெரும்பாலும் இளைஞர்களே அமர்ந்திருந்தனர். எங்க பையரும் பணம் கட்டலாம்னு ஆன்லைனில் பார்த்தப்போ எல்லாம் நிறைந்து விட்டதாம். இத்தனைக்கும் ஒரு மாசம் முன்னாடியே!

      Delete
  8. மகிழ்ச்சியான விடயம் குட்டிக் குஞ்சுலுவை கேட்டதாக சொல்லவும்.

    மகிழ்வாய் கழித்திட எமது வாழ்த்துகள்.

    //நான் வந்துட்டேன், நான் வந்துட்டேன்னு சொல்லு நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு//

    சரி நான் இதை யாருகிட்டே போய்ச் சொல்ல ?

    ReplyDelete
    Replies
    1. கட்டாயமாய்ச் சொல்றேன் கில்லர்ஜி, இன்னிக்குக் குஞ்சுலுவுக்கு ஆங்கிலத் தேதிப் பிறந்த நாள்.

      //சரி நான் இதை யாருகிட்டே போய்ச் சொல்ல ?// ஹாஹா, இதைத் தலைவர் தான் சொல்லணுமா? நாங்க தான் ஈடு இணையற்ற தலைவியாச்சே! நாங்களும் சொல்லுவோமுல்ல!

      Delete
  9. வணக்கம் சகோதரி

    தாங்கள் நலமுடன் அமெரிக்கா சென்று சேர்ந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. அங்கு தங்கள் பேத்தியுடன் நாட்களை மகிழ்வுடன் என்ஜாய் செய்யுங்கள். மகன் மருமகள் அனைவரின் நலம் விசாரித்ததாக கூறவும்.

    இங்கு நீங்கள் வலைதளம் வருகை தராத நாட்களில் உங்களைத்தான் நினைத்துக் கொண்டேயிருந்தேன். நீங்கள் எப்போது புறப்படுவீர்கள் என்பது தெரியாதாகையால், நீங்கள் அங்கு சென்றவுடன் தரும் பதிவுக்காக காத்திருந்தேன்.

    தற்சமயம் கால் வீக்கம் குறைந்திருக்கிறதா?இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கால்களை தொங்க விட்டு பயணித்தாலே கால் வீக்கம் வரும். நீங்கள் தொடர்ந்து 24 மணி நேரம் பயணித்திருக்கிறீர்கள்... நடுவில் வேறு விமானம் மாற்றி ஏறும் வரை அங்கு சற்று ஒய்வு எடுத்திருக்கலாமே! பயணம் குறித்த பதிவு நன்றாக உள்ளது. அடுத்து பயணித்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, கட்டாயமாய் நீங்கள் அனைவரும் விசாரித்ததைச் சொல்கிறேன். நான் வலைப்பக்கங்களில் தான் வந்து பார்த்துப் படித்துக் கருத்துச் சொல்லவில்லை. ஆனால் இணையத்துக்கு தினம் வந்து செய்யும்படியான வேலைகள் நிறையவே இருந்தன. எனக்கு வீட்டிலேயே காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஒரே இடத்தில் உட்கார்ந்தால் கால் வீங்கும். இப்போக் கேட்கவே வேண்டாம். இன்று கொஞ்சம் பரவாயில்லை.

      Delete
  10. /வந்து எல்லோரையும் நமஸ்காரமெல்லாம் பண்ணினதாம்.//ஆஆவ் chooo chweet .கண்கொள்ளா காட்சியை மிஸ் பண்ணிட்டீங்களே 
    //கால்களை வசதியாக வைத்துக் கொண்டு உட்கார முடியாத முப்பது வயதுக்கு உட்பட்ட முதியோர்கள்//ஹாஹாஇதை போர்டில் எழுதி ஏர்லைன்ஸ் அந்த சீட்டுகளுக்கு ஓட்டிவச்சிருக்கணும் :) 
    குட்டி குஞ்சுலுவோடு என்ஜோய் செய்யுங்க  

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல், வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. உண்மையிலேயே நல்லதொரு காட்சியைத் தவறத் தான் விட்டு விட்டேன். இன்னிக்குப் பண்ணுமே! பார்ப்போம்.

      உங்க தலைவி பாருங்க, என் கிட்டே ஒரே பொறாமை! வரவே இல்லை. நானும் ட்ரம்ப் அங்கிளைப் பார்க்கப் போறேன்னு பொறாமையிலே இருக்காங்க போல.

      Delete
    2. ஹா ஹா ஹா நேக்கு பயங்கர தலையிடி, இன்று வர இருந்தேன் அதுக்குள் என்னா அவசரம் புதுப்போஸ்ட் போட்டிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      பட்டுக் குஞ்சுலுவைப் பார்த்தது எமக்கும் மகிழ்ச்சி.. நன்கு என்சோய் பண்ணி வாங்கோ.

      ///குட்டிக்குஞ்சுலுவுக்கு எங்களை நன்றாக அடையாளம் தெரிந்தாலும் முதலில் தலையைத் திருப்பிக் கொண்டு "நோ" என்று சொன்னது. தொடக் கூடாதாம், கன்னங்களைக் குட்டிக்கைகளால் மூடிக் கொண்டு முகத்தையும் திருப்பி கொண்டு விட்டது.///

      ஆஆஆஆஆஆ இதுக்குத்தான், டயட் பண்ணி கொஞ்சம் ஸ்லிம்மாப் போய் வாங்கோ கீசாக்கா எனச் சொன்னால் கேட்டால்தானே கர்:)) பாருங்கோ குஞ்சு பயப்பிடுது:)) ஹா ஹா ஹா... குழந்தைகளின் ஒவ்வொரு செயலும் பொறிக்கப்பட வேண்டியதே... மகிழ்ச்சியாக இருங்கோ..

      Delete
  11. >>> உட்கார முடியாத முப்பது வயதுக்கு உட்பட்ட முதியோர்கள் <<<

    தங்களை நகைச்சுவை விடாது போலிருக்கின்றது...

    குட்டிக் குஞ்சுலுவுக்கு அன்பின் நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, வேறே என்ன சொல்லுவது துரை? இரண்டு பேருமே விமானத்தில் இந்தக் கோடியில் இருந்து அந்தக் கோடி வரை நடந்தோம். ஒரே இடத்தில் உட்கார முடியாதேனு. அப்போத் தான் பார்த்தோம். அனைவருமே 30 வயதுக்கு உட்பட்ட முதியோர்கள். காலை நீட்டி ஆசுவாசமா உட்கார வேண்டி அந்த இடங்களைப் பிடிச்சுட்டாங்கனு!

      Delete
  12. நான் வந்துட்டேன், நான் வந்துட்டேன்னு சொல்லு நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு//

    சரி நான் இதை யாருகிட்டே போய்ச் சொல்ல?..

    எங்கிட்ட தான் சொல்லச் சொல்லியிருக்காங்க...

    திரும்பத் திரும்பச் சொன்னாலும்
    வந்துடாங்க.. தானே.. வந்துட்டாங்க தானே!...

    தானே...ல்லாம் வரலீங்க..

    பிளைட்..ல தான் வந்தாங்க!...

    ஓ.. இது வேறயா!...

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, நம்ம தலைவராச்சே! அவர் தான் சொல்லணுமா என்ன? நாங்களும் தலைவி இல்லையோ? சொல்லுவோமே! :))))

      Delete
  13. வாங்கம்மா வாங்க வாங்க

    ReplyDelete
    Replies
    1. வந்தோம், வந்தோம், வந்தோம்!

      Delete
  14. நீங்க திரும்ப வந்துட்டீங்க ஆனால் அமெரிக்காவில் எந்த நகரத்திற்கு வந்திருக்கீங்கன்னு சொல்லையே

    ReplyDelete
    Replies
    1. நாங்க தான் எப்போவுமே தனீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ஆச்சே, நியூ ஜெர்சி, நியூயார்க், சியாட்டில், கனெக்டிகட்னு எல்லாம் வரலை. இங்கே டெக்சாஸில் ஹூஸ்டனுக்கு வந்திருக்கோம்.

      Delete
  15. நீயூஜெர்ஸி பக்கம் வந்திருந்தா சொல்லுங்க நேரம் கிடைத்தால் கண்டிப்பாக பார்ப்போம்

    ReplyDelete
    Replies
    1. 4,5 முறைகளுக்கும் மேல் ஹூஸ்டன் வந்தாலும் வட கிழக்கே வர நேரவில்லை. அங்கே டெனிசியில் பெண் இருந்தப்போ மெம்பிஸில் வந்து 3 முறை இருந்திருக்கோம். அட்லான்டாவில் என் சித்தி பையர் இருக்கார். அங்கே வந்திருக்கோம்.

      Delete
  16. வரணும் வரணும் கீதாமா.
    குழந்தை ஒட்டிக் கொண்டு விடும்.
    பட்டுக் குஞ்சுலுவைப் பார்க்க ஆசை.

    யார் ஜாடையில் இருக்கிறது.
    வெய்யில் அதிகமா இருக்குன்னு மகள் சொல்லி இருந்தார்கள். நீங்கள் வந்த வேளை மழை பெய்யட்டும்.
    முடிந்த போது நடக்க ஆரம்பியுங்கள்.
    கால்வலி எல்லாம் குறையட்டும்.
    இரண்டாவது பேத்திக்கும் என் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, குழந்தை ஒட்டிக் கொள்வது பெரிசில்லை. திரும்பி நான் போகும்போது அது அழப்போகிற அழுகையை நினைத்தால் இப்போவே வயித்தைக் கலக்குகிறது! ஏற்கெனவே என் பெரிய மைத்துனரும் அவர் மனைவியும் குழந்தையைப் பார்க்க இங்கே வந்திருக்காங்க. அவங்க இங்கிருந்து Katyகேடிக்குப்பெண் வீட்டுக்குப் போறச்சே ஒரே அழுகையாம்

      Delete
    2. நாங்க வந்ததில் இருந்து இங்கே குளிர்தான்/ குளிர்னா குளிர்காலக் குளிரெல்லாம் இல்லை. மழை, இடி, மின்னல்! இப்போக் கூட ஒரே மழை மேகம், தூறல், இடி உருண்டு புரள்கிறது.

      Delete
  17. முன் இருக்கை கிடைப்பதில்லை தான். எவ்வளவு பணம் தான் கொடுப்பது.
    தூங்கவாவது முடிந்ததா.
    இன்னும் இரண்டு நாட்கள் போகட்டும். சரியாகை விடும். மகன்,மருமகளுக்கு அன்பு.

    ReplyDelete
    Replies
    1. தூங்கல்லாம் முடியலை வல்லி. விமானத்தையே அசுத்தம் செய்து விட்டனர். அத்தனை கூட்டம். இன்னும் சில நாட்கள்/மாதங்களில் நின்று கொண்டே பயணம் செய்யும் முறை கூட வந்துடும் போல! அவ்வளவு கூட்டம்! நாங்க கையில் வைத்துக்கொள்ள வைத்திருந்த லக்கேஜைக் கூடக் கார்கோவில் போடச் சொல்லிட்டாங்க! காபினில் இடம் இல்லையாம்.

      Delete
  18. அம்பேரிக்காவில் கணினி மூட்கார நேரம் அதிகம்கிடைக்கலாம் வந்துட்டேன்னு சொல்லு ஏதோ சினிமா டயலாக் மாதிரி இருக்கே

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி சார், ரொம்ப நாட்கள் கழிச்சு வந்ததுக்கும், கருத்துக்கும் நன்றி. ஆமாம் அது சினிமா வசனம் தான். ஏதோ ஒரு ரஜினி படம்.

      Delete
  19. வந்து சேர்ந்ததும் பிரயாணக் கஷ்டம் எல்லாம் மறைந்திருக்கும்.

    ReplyDelete