மனதில் மிகுந்த பாரத்துடன் இந்தச் செய்தியைப் பகிர்கிறேன். நம் அருமைத் தோழியும் என் உடன் பிறவாத் தங்கையும் ஆன பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் கணவர் திரு வெங்கடேஸ்வரன் மிகுந்த போராட்டத்துக்குப் பின்னர் இன்று மதியம் காலம் ஆனார் என்னும் செய்தி சற்றுமுன் கிடைக்கப் பெற்றேன். பானுமதி அவர் கணவரிடம் எவ்வளவு நெருக்கம் என்பதை நான் பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன். பொருத்தமான தம்பதிகள்! பானுமதி விரைவில் தன் இந்த இழப்பில் இருந்து மீண்டு வெளி வர எங்கள் பிரார்த்தனைகளும். பானுமதியின் இந்தச் சிரித்த முகமே கண் முன்னே நிற்கிறது. இனி இம்மாதிரி நிறைந்த சிரிப்புடன் காண முடியுமா? சந்தேகமே! தன் துணையை இழந்து தவிக்கும் பானுமதி இந்தச் சோகத்தில் இருந்து மீண்டு வரப் பிரார்த்தனைகள்.
எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Saturday, August 31, 2019
பானுமதி வெங்கடேஸ்வரனுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்! :(
மனதில் மிகுந்த பாரத்துடன் இந்தச் செய்தியைப் பகிர்கிறேன். நம் அருமைத் தோழியும் என் உடன் பிறவாத் தங்கையும் ஆன பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் கணவர் திரு வெங்கடேஸ்வரன் மிகுந்த போராட்டத்துக்குப் பின்னர் இன்று மதியம் காலம் ஆனார் என்னும் செய்தி சற்றுமுன் கிடைக்கப் பெற்றேன். பானுமதி அவர் கணவரிடம் எவ்வளவு நெருக்கம் என்பதை நான் பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன். பொருத்தமான தம்பதிகள்! பானுமதி விரைவில் தன் இந்த இழப்பில் இருந்து மீண்டு வெளி வர எங்கள் பிரார்த்தனைகளும். பானுமதியின் இந்தச் சிரித்த முகமே கண் முன்னே நிற்கிறது. இனி இம்மாதிரி நிறைந்த சிரிப்புடன் காண முடியுமா? சந்தேகமே! தன் துணையை இழந்து தவிக்கும் பானுமதி இந்தச் சோகத்தில் இருந்து மீண்டு வரப் பிரார்த்தனைகள்.
Subscribe to:
Post Comments (Atom)
மனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.
ReplyDeleteஅவரது குடும்ப அங்கத்தினர்களுக்கு இதை தாங்கும் சக்தியை இறைவன் கொடுக்க வேண்டுமென பிரார்த்தனையோடு அன்னாரது ஆத்மா இறைவனின் காலடியின் அமைதியாய் இளைப்பாறவும் வேண்டிக் கொள்கிறேன். - கில்லர்ஜி
மனதை கலங்க வைத்த செய்தியை சற்று முன் எ. பியில் பார்த்ததுமே அழுது விட்டேன் சகோதரி. எப்படி இவ்வாறு நடந்தது? சகோதரி பானுமதி அவர்களுக்கு ஏன் இத்தனை சோதனை யை விதி தந்து விட்டது என மனது கிடந்து புலம்புகிறது. அவருக்கும்,அவர் குடும்பத்தினருக்கும் இதை தாங்கும் சக்தியை இறைவன் தர வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteமிகவும் அதிர்ச்சியாக இருக்கு :(
ReplyDeleteMy heartfelt sympathy ,May God comfort her during this difficult period
மிகவும் சிரமமாக இருக்கிறது. மன உறுதி கொண்டவர் தான். என்றாலும் இந்த இழப்பைத்
ReplyDeleteதாங்குவது மிக சிரமம்.
அவர் உடலால் மிக சங்கடப் பட்டு விட்டார்.
காலம் தான் ஆற்றணும்.
பானுமதி வெங்கடேச்வரன் மேடம் அவர்களின் சோகத்தில் நானும் பங்குகொள்கிறேன். அவர் விரைவில் இந்த இழப்பின் தாக்கத்திலிருந்து மீண்டு வரணும். வெங்கடேச்வரன் அவர்களது ஆன்மா சாந்தியடையப் ப்ரார்த்திக்கிறேன்.
ReplyDeleteசெய்தியை கேட்டதும் மிகவும் வருத்தம் அடைந்தேன்.
ReplyDeleteமருத்துவம் எவ்வளவோ முன்னேறி இருக்கிறது, அவர் நலம் பெற்று வந்து விடுவார் என்று நினைத்து இருந்தேன்.
ஏன் இப்படி என்று மனம் கனத்து போகிறது.
ஈடு செய்ய முடியாத இழப்பு . இறைவன் அவருக்கு சாந்தி அளிக்க வேண்டும்.
பானுமதி அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவன் மன ஆறுதலை தர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
மிகவும் வருந்துகிறேன்...
ReplyDeleteஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன். நமது துணைக்கு கஷ்டம் என்றாலே துடிக்கும் நமக்கு அவர்களின் இழப்பு மிகவும் பெரிய இழப்புதான் அதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது,,,கால்ம்தான் பானுமதி அவர்களுக்கு ஆறுதலை தரமுடியும்
ReplyDeleteஅசோ படிக்கும் போதே மனம் கனக்கிறது ..அதிர்ச்சியாகும் உள்ளது
ReplyDeleteஅவருக்கும் , அவர் குடும்பத்தினருக்கும் இறைவன் துணை இருக்கட்டும் ..
இச்செய்தியைப் படித்ததும் மிகவும் வருத்தம் அடைந்தேன்.
ReplyDeleteஸ்ரீமதி பானுமதி வெங்கடேச்வரன் அவர்களின் சோகத்தில் நானும் பங்குகொள்கிறேன்..
மிகவும் கடினமான இவ்வேளையில் இத்துயரத்தைத் அவர்கள் தாங்கிக் கொள்ளும் சக்தியினை
எல்லாம் வல்ல இறைவன் தந்தருள வேண்டும்...
ஸ்ரீவெங்கடேஸ்வரன் அவர்களது ஆன்மா இறைநிழலில் கலந்திருப்பதாக...
இந்த சோதனையான நேரத்தைக் கடக்கும் வலிமையை அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் இறைவன் அருளட்டும். திரு வெங்கடேஸ்வரன் அவர்கள் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எங்கள் பிரார்த்தனைகள்.
ReplyDeleteஅதிர்ச்சி. இப்போதுதான் பார்க்கிறேன் இந்த செய்தியை.
ReplyDeleteஅன்னாரது ஆத்மா இறைவனின் திருவடித் தாமரை சேர்ந்து அமைதியடையப் பிரார்த்திக்கிறேன்.
திரு வெங்கடெஸ்வரன் எனக்கு தம்பி முறை சித்தப்பாமகன் செய்தி அறிந்ததும் என்னவெல்லாமோ நினைவுகள் திருமதி பானுமதிக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்
ReplyDeleteவெங்கடேஸ்வரன் மாமாவை நேரில் பலமுறை சந்தித்து இருந்ததால் ன்ம் வீட்டிற்கும் அவர் வந்திருந்தால்...அந்தத் தருணங்கள் எல்லாம் நினைவில் வருகிறது. நானும் அக்காவும் சேர்ந்து எழுதிய கதைக்கு இறுதியில் சஸ்பென்ஸ் உடைத்து கருத்துகளுக்கு எங்கள் பதில்களை க் கொடுக்க வீடியோ எடுக்க மிகவும் பொறுமையாக எடுத்துக்க கொடுத்தெல்லாம் நினைவில்...
ReplyDeleteஅவரின் ஆன்மா அமைதியை அடைய பிரார்த்தனைகள்...இரங்கல்களும். பானுக்காவிற்கு எங்கள் வருதங்களை த் தெரிவித்து அவருக்கும் குடும்பத்திற்கும் தூக்கத்திலிருந்து மீட்டு இறைவன் அமைதி நல்கிட பிரார்த்தனைகள்....
கீதா
நேற்று இரவு தாமதாகத்தான் மின் அஞ்சல் பார்த்து அறிந்தேன்..அதிர்ச்சியாக இருந்தது. அவர் உடல் நலன் சரியில்லாமல் இருந்தது அறிந்திருந்தாலும். எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள். அவரின் ஆன்மா இறைவன் அடியில் சாந்தி அடைய பிரார்த்தனைகள். சகோதரிக்கும் அவரது குடும்பத்திற்கும் இத்துயரிலிருந்து மீண்டிட இறைவன் அருள்புரிய பிரார்த்தனைகள்.
ReplyDeleteதுளசிதரன்
ஆழ்ந்த இரங்கல்கள்.
ReplyDeleteஇழப்பிலிருந்து அவர்கள் மீண்டு வர எனது பிரார்த்தனைகள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஎங்கள் துயரையும் பகிருகிறேன்.
செய்தி கேட்ட கணத்திலிருந்து என்னால் மீள முடியவில்லை, என் வீட்டு நிகழ்வுபோல மனம் கனக்கிறது... அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன்... ஆண்டவன் நல்ல தைரியத்தை பானுமதி அக்காவுக்குக் குடுக்க வேண்டும்.
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள். அவருக்கும் , அவர் குடும்பத்தினருக்கும் இறைவன் துணை இருக்கட்டும் ..
ReplyDeleteபானுமதிக்கு இரங்கல் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள்.
ReplyDeleteஅட ராமா..... என்ன ஆச்சோன்னு உங்க பதிவுகளில் தேடிப் பார்த்தேன். ஆழ்ந்த இரங்கல்கள்...... :-(
ReplyDelete