எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, February 07, 2014

இதோ, இவன் தான் மோதி!


இவன் தான் எங்க மோதி. படங்கள் இன்னும் இருக்கின்றன.  ஆனால் எல்லாம் எடுக்க முடியா உயரத்தில் உள்ளன. வெளியே வைச்சிருக்கும் இந்தப் படத்தை வீட்டுக்கு வந்தவங்க பார்த்திருக்கலாம். கண் திறக்காமல் வந்த இந்தக் குட்டியை நானும் பெண்ணுமாகப் பார்த்துக் கொண்டாலும் இது என்னமோ நான் சாப்பாடு கொடுத்தால் தான் சாப்பிடும்.  நான் வெளியே சென்றால் எங்க பொண்ணு சாப்பாடு கொடுத்தால் அது பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கும்.  சாப்பிடாது.  நான் வந்தப்புறமாத் தான் சாப்பிடும்.  இது கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது.  ஆனால் நாய் காவலுக்குனு வளர்க்கிறச்சே மத்தவங்க சாப்பாடு கொடுத்தா சாப்பிடாதது நல்லது தான் என மருத்துவர் சொன்னாலும், வீட்டில் உள்ள மத்தவங்களை விட்டும் சாப்பாடு கொடுத்துப் பழக்கினோம். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது.

லூட்டி அடிக்கும். தினம் சாயந்திரம் அலுவலகத்திலிருந்து வரும் ரங்க்ஸ் இதுக்கு பொறை, பிஸ்கட், ப்ரெட்னு வாங்கிட்டு வருவார்.  இது வந்தப்போ பையர் குஜராத்தில் படிச்சுட்டு இருந்தார்.  அவர் கிட்டே இதோட ஒவ்வொரு கட்ட வளர்ச்சி குறித்தும் நேர்முக வர்ணனை கொடுப்போம்.  அவரும் தீபாவளி லீவுக்காக வந்தார்.  வரும்போதே இது ஆக்ரோஷக் குலையல்.  பையர் நடுங்கிட்டுத் தான் வந்தார்.  ஆனால் அரைமணி நேரத்திலேயே சிநேகம் ஆகிவிட்டது.  இது கிட்டே புதுசா யாரானும் வந்தாங்கன்னா அவங்களை நாம தொட்டுக் கொண்டு, "ஃப்ரன்ட்" "ஃப்ரன்ட்" அப்படினு சொல்லிக் கொடுத்தால் போதும்.  அடுத்த முறை அவங்களைப் பார்த்தால் குலைக்காது.  ஆனால் தெரிஞ்சவங்களுக்குனு தனிக் குரல்.  மத்தவங்களுக்கு வேறு குரல்னு வைச்சுக்கும்.

இதுக்குக் கழுத்துக்கு மணியெல்லாம் வாங்கி அலங்கரித்தது நம்ம ரங்க்ஸ் தான். குட்டியா இருந்ததால் எங்கே இருக்குனு சமயத்திலே தெரியாமல் இருந்தது. அப்போக் கட்ட ஆரம்பிச்சது. அது பெரிசா ஆனப்புறமாக் கூட பெல்ட் மாத்தறச்சே மணியை வாயில் கவ்விக் கொண்டு வந்து கொடுத்து கட்டச் சொல்லும்.  பையரோட சிநேகம் ஆகி அவர் காலடியிலேயே கிடக்கும். ஆனாலும் உள்ளூர அவரிடம் இதுக்கு ஒரு பயமும் உண்டு.  ஒருநாள் மொட்டை மாடியில் பையர் பரிக்ஷைக்குப் படிச்சுட்டு இருந்தார்.  தேநீர் கேட்டிருந்தார்.  தேநீர் போட்டுட்டு மேலே கொண்டுவரவானு கேட்டதுக்குக் கீழே வரேன்னு சொல்லிட்டு வந்தார். புத்தகத்தை மாடியிலேயே நாற்காலியில் வைச்சுட்டு வந்துட்டார்.  நல்ல காற்று நாள்.  காற்றிலே புத்தகம் பக்கம், பக்கமாகப் பறக்க நம்ம மோதியார் பையரோட மாடியிலே இருந்தவருக்குக் குஷி தாங்கலை.

புத்தகத்தை நாற்காலியில் இருந்து கீழே தள்ளி உருட்டிப் புரட்டி ஒரு வழி பண்ணிட்டார்.  தேநீர் குடிச்சுட்டு சாவகாசமாப் பையர் மேலே போய்ப் பார்த்தால் இது ஏதோ பெரிய சாதனை பண்ணிட்டாப்போல் அவர் கிட்டே புத்தகத்தைக் காட்டிக் குதியான குதி.  அவருக்கு வந்ததே கோபம். ஒரு அடி கொடுத்துட்டார். புத்தகம் கல்லூரி நூலகப் புத்தகம் வேறே.  பரிக்ஷைக்கும் படிக்க முடியாமல் போச்சு. நல்ல அடி வாங்கிண்டு வந்தது.  அதுக்கப்புறமாக் கீழே ஒரு சின்னத் தாள் இருந்தாலும் பொறுக்காது.  அது தெருவிலே இருந்தால் கூட.

புத்தகம் எப்படியோ சமாளிச்சோம்.  நூலகத்துக்கு வேறே புத்தகம் வாங்கிக் கொடுத்தது.  இதுக்கு மாசா மாசம் மருத்துவர் வந்து பார்க்கிறச்சே அவரைக் கண்டாலே ஓடிப் போய் ஒளிஞ்சுக்கும்.  தடுப்பு ஊசி எல்லாம் போட்டு மருந்து, மாத்திரைகள் கொடுத்துனு இதுக்கு சிசுருஷை பண்ணிட்டு இருந்தோம். மாத்திரை கொடுக்கிறது தான் பெரிய விஷயம்.  அதுக்கும் பொண்ணு ஒரு வழி கண்டு பிடிச்சா. இதுக்குச் சப்பாத்தின்னா ரொம்பப் பிடிக்கும்.  சப்பாத்திக்குள் மாத்திரையைச் சுருட்டி வைச்சு அதை அப்படியே லபக் பண்ண வைப்பா. எங்க பொண்ணை ஒருதரம் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்ல எங்க அண்ணா பையர் வந்தார். அவரை உள்ளேயே விடலை.  பொண்ணை அழைச்சுட்டுப் போறாராம்.  அதுக்காகக் கோபம். எங்க பொண்ணையும் வெளியே விடலை.  வீட்டிலே இரண்டு வாசல் இருந்ததால் இன்னொரு வாசல் வழியாகப் பொண்ணு வெளியே வந்தா.  அதுக்குள்ளே இதைப் பிடிச்சுக் கட்டிப் போட்டு வைச்சோம்.

அவ கல்யாணத்தையும் இதுக்காகவே அம்பத்தூரிலேயே வைச்சோம். நாங்க யாரும் வீட்டிலே இல்லைனா பாடாய்ப் படுத்திடும். அக்கம்பக்கம் எல்லாம் புகார் வரும்.  ஆகவே சொந்தக் காரங்க கல்யாணம்னா எங்க பக்கத்துக் கல்யாணங்களுக்கு நான் மட்டும் போவேன்.  அன்னிக்கு ரங்க்ஸ் லீவு போடுவார். பொண்ணையும் சில சமயம் அழைச்சுட்டுப் போறாப்போல் இருக்குமே.  அவர் பக்கத்துக் கல்யாணம்னால் அவர் மட்டும் போவார்.  சொந்தக்காரங்க இதைப் புரிஞ்சுக்கலங்கறது வேறே விஷயம்! :))) மத்தவங்க வீட்டுக் கல்யாணத்துக்கு யாரானும் ஒருத்தர் போனாப் போதும்.  சொந்தப் பொண்ணு கல்யாணத்துக்கு வீட்டோட எல்லாரும் போகணுமே!  அதுக்காகவே வீட்டிலிருந்து கிட்ட இருக்கும் சத்திரமாவே பார்த்தோம்.  கிடைத்தது.  வீட்டிலிருந்து ரங்க்ஸோ, நானோ, பையரோ யாரானும் அடிக்கடி வந்து பார்த்துட்டுப் போகலாம்னு முடிவு.

அப்படித் தான் கல்யாணத்துக்கு முதல்நாள் காலை விரதம், நாந்தி எல்லாம் நடந்துட்டு இருந்தப்போ, இதுக்கு சாப்பாடு எடுத்துட்டுப் பையர் ஸ்கூட்டரிலே வீட்டுக்குப் போனார்.  போற வழியிலே தெருவிலே ஒரு முக்கிலே புதுசா வீடு கட்டிட்டு இருந்தாங்க.  அந்தத் தெரு வழியாப் போனால் எங்க வீடு நேரே வரும்.  இல்லைனா அடுத்த தெருக்கள் வழியாச் சுத்தி வரணும்.  பையர் இப்படியே போயிடலாம்னு முடிவு பண்ணி வந்திருக்கார். கூட என்னோட தம்பி மனைவியும்.  அவளை முக்கிலே இறக்கிட்டு, அவங்க போய் ஏதோ துணி எடுக்க அவங்க வீட்டுக்குப் போக அனுப்பிட்டு இங்கே திரும்பி இருக்கார்.  கம்பி கட்டறவங்க நட்ட நடுவிலே கம்பிகளைப் போட்டுப் பெரிய உளியால் கம்பிகளை வெட்டிட்டு இருந்திருக்காங்க.  பையர் வழி கேட்டுக் கொண்டே மெல்ல வருகையில் கிக் ஸ்டார்டர் ஒரு கம்பி கட்டறவரோட முழங்காலுக்குக் கீழே பட்டுக் காயத்தை ஏற்படுத்தி விட்டது.  அவர் கோபத்தோட பையரைப் பார்த்துக் கூச்சல் போட்டுக் கொண்டே அந்த உளியை ஓங்கி அவர் தலையில் போட்டிருக்கார்.

27 comments:

 1. சுவாரஸ்யமாப் படித்துக் கொண்டு வரும்போது பாதியில் நிற்கிறதே... 'சேவ்' கொடுப்பதா நினைச்சு பபிஷ் ஆகி விட்டதா?

  ReplyDelete
 2. //"ஃப்ரன்ட்" "ஃப்ரன்ட்" அப்படினு சொல்லிக் கொடுத்தால் போதும்.// ஓ, இங்க்லீஷ் நாய் போலிருக்கு!
  நல்ல காலம் ”பேக், பேக்” ந்னு சொல்லித்தரலை!

  ReplyDelete
 3. ஶ்ரீராம், "பப்ளிஷ்" இம்பொசிஷன் எழுதுங்க! :)))

  அது தானா எல்லாம் பப்ளிஷ் ஆகலை. நான் தான் சஸ்பென்ஸ் வைச்சிருக்கேனாக்கும்! :))))

  ReplyDelete
 4. வா.தி. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))

  ReplyDelete
 5. தொடரும் போடாததால் நானும் அவசரத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது என்றுதான் நினைத்தேன்.

  அப்றம் என்னாச்சு கீத்தாம்மா?..

  ReplyDelete
 6. அமைதி, ஹாஹாஹா, அவ்வளவு சீக்கிரம் போட்டுடுவோமா? அடுத்த ரெண்டு நாட்கள் நான் ஊரிலேயே இல்லை! :))))))))

  ReplyDelete
 7. ஒரு ஒரு அடிக்கு மோதி (கூட) மாறி திருந்தி விடுகிறது... ம்...

  ReplyDelete
 8. மோதி புராணம் ரசிக்கவைத்தது..!

  ReplyDelete
 9. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-5.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
 10. படத்தில் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறது மோதி.

  சஸ்பென்ஸ் பயங்கரமா வச்சிருக்கீங்க.

  ReplyDelete
 11. வாங்க வெங்கட், அப்புறமும் எழுதுவேன். :))))

  ReplyDelete
 12. வாங்க டிடி, பொதுவாகவே நாய்களுக்கு ஒரு முறை நல்லாச் சொல்லிக் கொடுத்துட்டோம்னா அது எப்போவும் நினைவில் வைச்சுக்கும். பல நாய்களை வளர்த்ததின் அனுபவம்.:))))

  ReplyDelete
 13. நன்றி ராஜராஜேஸ்வரி, இதைப் பத்தி நிறைய எழுதலாம்னாலும் சுருக்கமா ஒன்றிரண்டு சம்பவங்களே பகிர்ந்துக்கப் போறேன். :)

  ReplyDelete
 14. நன்றி டிடி, போய்ப் பார்த்துட்டு வந்துட்டேன்.

  ReplyDelete
 15. வாங்க அப்பாதுரை, இப்போல்லாம் பார்க்கவே முடியறதில்லை. ஆமாம், நல்ல ஆரோக்கியமாய்த் தான் இருந்தது. கடைசியிலே தான் திடீர்னு என்னனு புரியலை! :( மாதா மாதம் மருத்துவர் வந்து பார்த்துட்டுப் போவார். எல்லாவிதமான ஊசிகளும் போட்டு நல்லாத் தான் பார்த்துண்டோம். :(

  ReplyDelete
 16. இப்பவும் ரெஸ்டாரெண்டுக்குள்ள அனுமதியில்ல்லே, ஆனா நிறைய ஹோட்டல்ல உடன் தங்க அனுமதிக்கறாங்க. முன்னெல்லாம் நாய்களை ஓட்டலுக்குக் கொண்டு வரணும் என்றால் முன் அனுமதி வாங்கி அந்த அனுமதி சீட்டையும் கொண்டு வரணும்.

  இது உண்மையா நடந்ததா சொல்வாங்க.

  விடுமுறைக்கு நாலஞ்சு நாள் ஹோட்டல்ல தங்க வேண்டியதால நாயையும் உடன் கூட்டி வர, ஒரு குடும்பம் ஹோட்டல் மேனேஜருக்கு அனுமதி கேட்டு லெட்டர் போட்டாங்களாம். நாயின் படம், அதன் பழக்க வழக்கம் எல்லா விவரமும் கொடுத்து நாயினால யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்காதுனு சொல்லி அனுமதி கேட்டாங்களாம். அதுக்கு ஹோட்டல் மேனேஜர் எழுதின பதில்: "நான் பதினஞ்சு வருஷமா இந்த ஹோட்டல் மேனேஜரா இருந்திருக்கேன். எனக்குத் தெரிஞ்ச வரை ரூமை அசிங்கப்படுத்துறது.. பாத்ரூம் டவல் திருடுறது.. பக்கத்துல இருக்கறவங்களைப் பத்திக் கவலைப்படாம கூச்சல் போடுறது.. இதுவரைக்கும் ஒரு நாய் கூட இதையெல்லாம் செஞ்சதில்லே. அதனால உங்க நாய் தாராளமா எங்க ஹோட்டலுக்கு வரலாம். உங்களை அனுமதிக்கலாமா வேண்டாமானு உங்க நாய் கிட்டே கேட்டு சொல்றோம்"

  ReplyDelete
 17. மோதி குடும்பத்தில் எல்லோருக்கும் அருமை தெரிகிறது.

  அப்புறம் என்னாச்சு?

  ReplyDelete
 18. மோதி ரொம்ப அழகு. கம்பீரமா இருக்கு.நன்றாகக் கவனித்துவளர்த்து இருக்கிறீர்கள். சம்பவம் சுவாரஸ்யம்.ஆனால் உளி சுத்தின்னு வந்துடுத்தே. பையருக்கு அடிபட்டுடுத்தோ.யாரோட யார் சண்டை போட்டார்கள். கல்யாணமும் அதுவுமா என்ன சங்கடம் கீதா>{

  ReplyDelete
 19. இப்படி ஆகிவிட்டதே...

  தொடர்கிறேன்.

  ReplyDelete
 20. ஹைய்யோ!!! பசங்களை மறக்க முடியலையேப்பா...........

  ReplyDelete
 21. //சொந்தக்காரங்க இதைப் புரிஞ்சுக்கலங்கறது வேறே விஷயம்! :))) //

  சேம் பின்ச் .. இதுக்குன்னே ரிஸப்ஷனை ரெயில்வே ஹால் இருக்குமே அந்த அயனாவரம் போறவழி அங்கே வச்சோம் //தங்கையும் அப்பாவின் நண்பரும் மாறி மாறி வீட்டுக்குப்போய் செல்லங்களை பார்த்துக்கிட்டாங்க .அடுத்த பார்ட் எங்கே ?

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், பலரும் ஒரு நாய்க்காகவா? என்றார்கள்/என்பார்கள், ஆனால் எங்களைப் பொறுத்தவரை அவன் நாயே இல்லை. :(

   Delete
 22. மறுபடியும் சுவாரஸ்யமாய்ப் படித்தேன். என் திருமணத்தில், என் அண்ணா திருமணத்தில் எங்கள் மோதி அடித்த கூத்துகள் தனிரகம்!

  ReplyDelete
  Replies
  1. மீள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 23. மோதி என்று பெயர் வைக்க காரணம் ?
  குஜராத்தில் இருந்ததாலா ?

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி, மோதி என்பது பொதுவான பெயர். அப்போ எங்களுக்கு நரேந்திர மோதியைப் பற்றியே தெரியாது! :))))) அதன் பின்னரே அவர் குஜராத்தின் முதல்வர் ஆனால். ஜாக்கி ஷெராஃப் நடிச்ச ஒரு படத்தில் நடித்த ஒரு நாயின் பெயர் "மோதி" கிட்டத்தட்ட எங்க நாயைப் போலவே இருந்ததுனு நினைக்கிறேன். அந்த நினைவில் வைச்சது. அதோடு முன்னர் இருந்தவற்றுக்கெல்லாம் ஆங்கிலப் பெயர்கள் ப்ரவுனி, டாமி, என்றெல்லாம் இருந்தது. இதுக்கானும் இந்தியப் பெயரா இருக்கட்டும்னு வைச்சோம்.

   Delete