எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, November 21, 2019

ஹூஸ்டன் மீனாக்ஷி கோயில்! சில படங்கள்!

வந்ததில் இருந்தே மீனாக்ஷி கோயில் போகணும் என்று ஆவல். முக்கியமாய் நூலகத்திற்காக! ஆனால் இப்போது நூலகம் செயல்படுவதாகத்தெரியலை என்று பையர் சொன்னார். அவரும் அங்கே போய் வெகு நாட்கள் ஆகிறது என்றும் சொன்னார். ஸ்வாமிநாராயண் கோயில் தவிர்த்த வேறு கோயில்கள் எங்கும் போக முடியாமல் அவருக்கு அலுவலக வேலை. ஞாயிற்றுக்கிழமைகள் வீட்டைச் சுத்தம் செய்தல், ஒரு வாரத்துணிகளைத் தோய்த்து இஸ்திரி போட்டு வைத்துக்கொள்வது, வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்குவது என இருவருக்கும் வேலை நெட்டி வாங்கும். ஆகவே நாங்க கோயில் போகலாம் என்று கேட்கவே இல்லை. பின்னர் அங்கிருந்து இங்கே பெண் வீட்டுக்கு வந்ததும் கூட உடனடியாக எங்கேயும் போகலை. நவம்பர் 3 ஆம் தேதி மாப்பிள்ளைக்குக் கொஞ்சம் நேரம் கிடைக்கவே மீனாக்ஷி கோயிலுக்குப் போகலாம் எனச் சொல்லி அழைத்துச் சென்றார்கள். சீக்கிரம் கிளம்பணும் என்று சொல்லிக் கிளம்பியாச்சு. பையர் வீட்டிலிருந்தே கோயில் தூரம் அதிகம் என்றால் இங்கே இருந்து இரண்டு மணி நேரம் ஆகிவிடுகிறது.


அங்கேயே சாப்பாடு விற்பதாகவும் திரும்புகையில் அங்கேயே சாப்பிட்டுவிட்டுத் திரும்பலாம் என்றும் ஏற்கெனவே பெண் சொல்லி இருந்தாள். முன்னரும் கொடுத்தாங்க தான். ஆனால் அது அவ்வளவு நன்றாக இருக்காது என்பதுடன் அளவும் குறைவாக இருக்கும். சீக்கிரம் போகலைனா தீர்ந்துடும். இப்போக் கிட்டத்தட்ட உணவு விடுதி மாதிரி நடப்பதாகவும் சொன்னார்கள். நூலகம் குறித்துப் பெண்ணிற்கு ஏதும் தெரியலை என்றாலும் அது திறந்து பார்க்கலை என்றாள். கோயிலுக்குப் போகும்போது அங்கே உள்ளே சந்நிதியில் யாரோ ஹோமம் ஏற்பாடு செய்து நடந்து கொண்டிருந்தது. அங்கே இருந்த வைதிகர்களில் பட்டர், குருக்கள் ஆகியோரும் இருந்திருக்கலாம். ஆனால் தெரிந்த பட்டரைக் காணோம். குருக்கள் ஒருத்தரும் கும்பகோணம் பக்கத்துக் கிராமத்தில் இருந்து அங்கே வந்திருந்தார். அவரையும் காணோம். நாங்க முதலில் சுந்தரேசரைத் தரிசனம் செய்து கொண்டு மீனாக்ஷி சந்நிதிக்கு வந்தோம். கோயிலில் கூட்டம் அதிகம் தான். ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் ஹோமம் நடந்ததாலும் கூட்டம் என்று நினைத்தேன்.




ஆதியில் குடி வந்த பிள்ளையார் கோயிலின் அருகே உள்ள கார் பார்க்கில் இருந்து கோயில் செல்லும் வழி! :)





மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததால் அவர்கள் ஆக்ஷேபிக்கா வண்ணம் படங்கள் எடுக்க வேண்டி இருந்தது.


இவர் தான் முதல்லே வந்திருக்கார். வந்து மத்தவங்களைக் கூட்டி வந்திருக்கார். இப்போக் குடும்பமே இங்கே தான் பிழைப்பு! :))))


மீனாக்ஷி, சுந்தரேசர் எல்லோரையும் படங்கள் எடுத்திருக்கேன் தான். ஆனால் மக்கள் அதிலே நிறைய இருப்பதால் பகிர்வது கடினம். கூடியவரையிலும் யாரும் இல்லாத படங்களாகத் தான் போடணும். தரிசனம் எல்லாம் முடிச்சுத் திரும்புகையில் நூலகம் பற்றி விசாரித்ததில் இப்போது செயல்படவில்லை என்றும் இருக்கு என்றும் சொன்னார்கள். ஆனால் அந்தப் பக்கமே யாரும் போகலை. நாங்க சாப்பாட்டு ராமர்களாக அதுக்குள்ளே மணியும் பனிரண்டரை ஆகி விட்டதால் நேரே சாப்பிடப் போனோம். உணவு ஆர்டர் கொடுத்ததும் டோக்கன் கொடுத்துவிட்டுத் தயார் ஆனதும் கூப்பிடுவார்களாம். பெண்ணும், மாப்பிள்ளையும் போய் வேண்டியதைச் சொல்லி வாங்கி வந்தார்கள். நான் ரொம்பவே பயத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இட்லி, தயிர் சாதம் சொன்னேன். நம்ம ரங்க்ஸ் புளியஞ்சாதம், தயிர் சாதம் சொன்னார். நான் காரம் வேண்டாம் என்பதால் தவிர்த்தேன். அதோடு அவ்வளவு சாப்பிடவும் முடியாது.


பெண், மாப்பிள்ளை, அப்பு மூணு பேரும் அவங்கவங்களுக்குப் பிடிச்ச தோசை வாங்கிக்கொண்டார்கள். எல்லாமும் சாப்பிடும்படி இருந்தது. முக்கியமாய் இட்லி, சாம்பார், சட்னி, தயிர்சாதம். தொட்டுக்கக் கொடுத்த ஊறுகாய் தான் ரொம்பக் காரம். எண்ணெயே விடலை! ஆனாலும் கொஞ்சமாய்த் தொட்டுக் கொண்டு சாப்பிட்டோம். வத்தக்குழம்பு சாதத்தைப் புளியஞ்சாதம்னு கொடுத்திருக்காங்க என்றாலும் சாப்பிடும்படி இருந்தது. அதே போல் பெண்ணின் ரவா தோசை, மாப்பிள்ளையின் மைசூர் மசாலா, அப்புவின் பூரி, கிழங்கு எல்லாமும். ஏற்கெனவே இந்த உணவு விடுதி பற்றிப் படித்தேன். அக்கம்பக்கம் சுற்றுவட்டார ஊர்களில் இருந்தும் உள்ளூரில் இருந்தும் விடுதியில் வசிக்கும் இளைஞர்கள், இளம்பெண்கள் இங்கே வந்து உணவு குறைந்தது நான்கு நாட்களுக்கு வாங்கிச் சென்று விடுவார்களாம். அதை நேரிலும் பார்த்தேன். இங்கே தான் ஃப்ரீசரில் வைத்துவிட்டுப் பின்னர் மைக்ரோவேவில் வைத்துச் சூடு செய்து சாப்பிடுகிறார்கள் என்பதால் அதற்கு இது வசதியா இருக்கு என்பதோடு மற்ற ஓட்டல்கள், உணவு விடுதிகளை விட விலையும் குறைவு.



ஐயப்பன் சந்நிதியின் பதினெட்டாம்படி. இப்போத் தான் சில வருடங்களாக இருக்குனு சொன்னாங்க. சென்ற முறை 2016/17 ஆண்டில் அம்பேரிக்க விஜயத்தின் போது கோயில்களுக்குச் செல்லக் கூடாதுனு என எங்கேயும் போகாமல் இருந்துட்டோம். ஆகவே எப்போ இது வந்ததுனு தெரியலை. சபரிமலையில் இருக்கிறாப்போல் வடிவமைத்திருப்பதாகச் சொல்கின்றனர். நம்மவரும் ஆமாம் என்றார்.


பையர், மருமகள் உடம்பு சரியில்லை என்பதை அவங்க முதலில் சொல்லவே இல்லை. ஒண்ணும் செய்தி இல்லையேனு நாங்களாகத் தொலைபேசியில் விசாரித்தபோது தான் சொன்னார்கள். இங்கே அப்புவின் பள்ளியில் பிரச்னை என்பதால் நாங்க கொஞ்சம் கலக்கத்துடன் இருந்தோம். யாரோ எட்டாம் வகுப்பு மாணவர்கள் இருவரை அவர்கள் நடத்தையின் காரணமாகப் பள்ளியை விட்டுத் தாற்காலிகமாக நிறுத்தி இருந்ததால் துப்பாக்கிச்சூடு எப்போ வேணா நடக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். முதலில் இது வதந்தியாக இருக்கலாமோ என்று யாரும் எதுவும் பேசாமல் இருந்தோம். பின்னர் பள்ளியில் இருந்தே பெற்றோருக்கு எச்சரிக்கைக் கடிதம் இமெயிலில் வரவே கொஞ்சம் கலக்கம் தான். காவல்துறை பாதுகாப்புப் போட்டிருக்காங்க. இன்னமும் அதை நீக்கவில்லை. அதோடு பள்ளிக்குழந்தைகளைப் பள்ளி வான் போலவே ஏற்பாடு செய்து அதில் வைத்துக் கடத்துவார்கள் என்றும் பேசிக்கொண்டார்கள். இது எதுவும் உண்மையாக இருக்கக் கூடாதே என்றே நாங்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம். இப்போது நிலைமை சீரடைந்து வருகிறது. குழந்தை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்று வருகிறாள்.  இந்த விஷயம் உள்ளூர்த் தினசரிச் செய்திகளிலும் முகநூலிலும் வந்திருக்கிறது என்பது தெரிந்ததும் தான் நானும் இங்கே பகிர்ந்திருக்கிறேன். ஒரு சில பெற்றோர்கள் பகிர்ந்திருக்கின்றனர்.

69 comments:

  1. மீனாட்சி கோவில் என்று சொல்லி விட்டு மீனாட்சியையே காணோம்!  கோவில்கள் சுத்தமாக பராமரிக்கிறார்கள் போலும்.

    ReplyDelete
    Replies
    1. மீனாக்ஷி தான் கூடவே வந்திருக்காங்களே. கீசாக்கா பெண் பெயர் மீனாக்ஷி தான். Jayakumar

      Delete
    2. ஐந்தாவது படத்தில் மூன்றுபேர் இருக்கிறார்கள். அதில் யார் மீனாட்சின்னு தெரியலை

      Delete
    3. மீனாக்ஷியைப் படம் எடுக்காமலா? அதுவும் மதுரைக்காரியான நான்? ஸ்ரீராம், அவற்றில் எல்லாம் நிறைய மக்கள். பிகாசோவில் போட்டு க்ராப்பிங் செய்தால் போடமுடியும். பார்க்கலாம். இல்லைனா வேறே வழியில் எடிட் செய்ய முடியுமானு பார்க்கணும். பார்க்கலாம், ஊருக்குக் கிளம்பும் முன்னர் இன்னொரு தரம் கோயிலுக்குப் போக எண்ணம்.

      Delete
    4. ஜேகே அண்ணா, கவனமாக மீனாக்ஷி இருக்கும் படங்களை எல்லாம் தவிர்த்திருக்கேன். நம்மவர் மட்டும் காணப்படுவார் ஓரிரு படங்களில். ஸ்ரீராம், அவர் போட்டிருக்கும் ஜீன்ஸ் தான் இப்போப் பிள்ளை வாங்கிக் கொடுத்தது.

      Delete
    5. நெல்லைத்தமிழரே, அவங்க 3 பேரு யாரோ, எவரோ, ஊரோ பெயரோ அறியேனே! நல்லவேளையாப் பின்பக்கம் வராப்போல் படம் எடுத்திருக்கேன்.

      Delete
  2. சரி, ஆட்கள் நடமாட்டம் என்று கோவிலைதான் படம் எடுக்கவில்லை, அல்லது எடுத்ததை போடவில்லை.  அந்த புளியஞ்சாதம், தயிர் சாதத்தையாவது படம் எடுத்திருக்கக் கூடாதோ!!!

    ReplyDelete
    Replies
    1. இட்லி வடை புளியம் சாதம் போன்ற போட்டோக்கள் துளசிதளத்தின் டிரேட் மார்க். 

      Delete
    2. பயந்து பயந்து படமெடுத்ததுல பசி அதிகமாகி கட கடன்னு சாப்பிட்டு முடிந்தப்பறம்தான் படம் எடுக்கலையே என்ற நினைவு வந்திருக்கும்

      Delete
    3. ஸ்ரீராம், பொதுவா நான் ஓட்டல்களுக்குப் போனால் சாப்பாடு படங்கள் எடுப்பதில்லைனு வைச்சிருக்கேன். ஒரே ஒரு ஓட்டல் அதுவும் இங்கே உள்ளதில் சாப்பிடும் முன்னர் சில படங்கள் எடுத்தேன். குஞ்சுலுவின் பிறந்தநாள் விழாவில்.புளியஞ்சாதம் உங்க நினைப்பு வந்தது ஸ்ரீராம். ஆனாலும் எடுக்கலை. :))))))

      Delete
    4. ஜேகே அண்ணா, நெ.த. சாப்பாடு படம் எடுக்க வேண்டாம்னு தான் எடுக்கலை. மனம் மாறினால் முயற்சி செய்யறேன்.

      Delete
  3. அங்கு இருந்த நூலகம் என்னதான் ஆச்சு?   அடன்ஹாப் புத்தகங்களை என்னதான் செய்தார்கள் என்றும் யாரும் சொல்லவில்லையா?

    ReplyDelete
    Replies
    1. The library is open for limited time. Every once in two weeks there is heritage classes take place. Library is open at that time. But with ebooks , kindle etc is available ,the interest in ,paper prints have come down drastically. So library times are restricted. We have to change with time.
      Raj

      Delete
    2. ஸ்ரீராம், உங்களுக்கும் சேர்த்துக் கீழே நண்பர் பதில் சொல்லி இருக்கார். ஆனால் எங்களுக்கு நூலகம் செல்லாமல் வந்தது ஓர் குறை தான்! பல அருமையான புத்தகங்கள்! என்ன தான் அமேசான், கின்டில் இருந்தாலும் (நான் அவற்றுக்கு எல்லாம் போவதில்லை என்பது தனி) கையில் புத்தகம் வைத்துக் கொண்டு படிப்பது தான் சுகம்.

      Delete
  4. பையர், மருமகள் உடல்நிலை சீராகி விட்டதா?  பிரச்னைகள் என்ன என்று தெரிந்து கொண்டேன்.  ஒவ்வொன்றாய் மீனாட்சி அருளாலும் ஸ்வாமி நாராயண் அருளாலும் விலகி வருவது மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. சரியாகி வருகிறது ஸ்ரீராம். விசாரிப்புக்கு நன்றி.

      Delete
  5. இது மாதிரி கோவில்களுக்கு இந்தியர்களைத் தவிர வெளிநாட்டவர் வந்து வழிபடுவது உண்டோ?  வடநாட்டவர்?

    ReplyDelete
    Replies
    1. பொதுவாக வட நாட்டவர்கள் அதிகமாக செல்வது துர்க்கா டெம்பிள்ளாகத்தான் இருக்கும்

      Delete
    2. North Indians do come but occasional. Every group has their own temple here.
      Raj

      Delete
    3. Lot of renovations took place about 3 years back. 18 padi, Mahalakshmi sannadi, idols of Alwars and Nayanmars are all new additions. Even the ambience of the main temple spruced up .... right now kalyana Mandap is being renovated. The old hall is torn down completely.....
      Raj

      Delete
    4. அதான் பெரிய உணவு ஹால் இருக்குன்னு சொல்லியிருக்காங்களே.

      இனிப்பு எதுவும் அவங்க விற்கலையா?

      Delete
    5. நன்றி திரு ராஜ். மாற்றங்கள் பலவற்றை நாங்களும் கவனித்தோம்.

      Delete
    6. ஸ்ரீராம், இங்கே நிறையக் கோயில்கள் இருக்கின்றன. பொதுவாய் மீனாக்ஷி கோயிலுக்குத் தென்னிந்தியர் வருகையே அதிகம்/குறிப்பாய்த் தமிழர்கள் அதிகம். ஸ்வாமிநாராயண் கோயில் எனில் குஜராத்தியர்/ராஜஸ்தானியர், வடநாட்டவர், குருவாயூர் கோயில்/கேரளத்தவர், அஷ்டலக்ஷ்மி கோயில்/அஹோபில மடத்தைச் சேர்ந்தது. தக்ஷிணாமூர்த்தி/சிவன் கோயில்/கர்நாடகா புரோகிதர் ஒருத்தர் அங்கே இருக்கார். சிவானந்தா மிஷினோ, சின்மயா மிஷினோ, அல்லது தயானந்தரோட மிஷினோ நடத்துகிறது. இதைத் தவிர்த்தும் ஸ்வாமி தயாநந்தரின் (இப்போது இறந்தவரின்) அர்ஷ வித்யா குருகுலம், அதைச் சார்ந்த கோயில் என உள்ளன. இதைத் தவிர்த்தும் ஸ்வாமி நாராயண் கோயிலே இன்னொரு கோயிலும் உள்ளது. ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா கோயிலும் இருக்கு. அங்கே அதிகம் வெளிநாட்டவர் செல்வார்கள் என்றாலும் நம் நாட்டவரும் செல்வார்கள். ஞாயிறன்று மாலை ஆரத்தி அங்கே பிரபலம். அதன் பின்னர் உணவு இலவசம்.

      Delete
    7. மதுரைத் தமிழர் சொன்ன மாதிரி துர்கை கோயில்கள், காளி கோயில்கள் உண்டு. அங்கே பெரும்பாலும் வடநாட்டவர், முக்கியமாய் வங்காளிகள் செல்வார்கள்.
      நெல்லைத் தமிழரே, இனிப்பெல்லாம் இருக்கானு விசாரிக்கலை. அதோடு அவ்வளவு பெரிய உணவுக்கூடத்தில் நாங்க இருந்த மூலையிலிருந்து அங்கே செல்வது அத்தனை கூட்டத்தையும் தாண்டிக்கொண்டு போகச் சோம்பல். நாங்க தனியா உட்கார்ந்துட்டோம். அவங்க தான் உணவு வாங்கி வந்தாங்க.

      Delete
    8. ஏன் உணவுகளை படம் எடுப்பதில்லை?

      என் உறவினர் ஒருவர் (என்னைவிடச் சின்னவன்), சாப்பிடும்போது, அல்லது சாப்பாட்டுத் தட்டை வைத்திருக்கும்போது படம் எடுக்கக்கூடாது என்று ஸ்டிரிக்டா சொல்லுவான். நான் எப்பப் பார்த்தாலும் படம் எடுப்பேன். சில சமயங்களில்தான், என் பையன் ஒத்துக்கொள்வான். யாருமே அதனை விரும்புவதில்லை.

      நானும் சாப்பிட ஆரம்பித்தால், யாரும் பேசுவதை விரும்பமாட்டேன். தனியா சாப்பாட்டை எடுத்துக்கிட்டு நானே மெதுவாக ரசித்துச் சாப்பிடுவேன்.

      Delete
    9. உணவு சமைக்கும்போது படம் எடுப்பதே எனக்கு அவ்வளவு பிடிக்காது. வேறே வழியில்லாமல் இப்போதெல்லாம் பதிவுகளில் போடுவதற்கு என எடுக்கிறேன். சாப்பிடுகையில் கட்டாயமாய் எடுக்க மாட்டேன். பிடிக்காது.

      Delete
    10. Shiva temple is run by Chinmaya Mission
      Raj

      Delete
    11. Sweets are not sold in the canteen except Diwali time.
      Raj

      Delete
    12. மேல் அதிகத் தகவல்களுக்கு மிக்க நன்றி ராஜ் அவர்களே!

      Delete
  6. அம்பேரிக்கா போயும் ஊறுகாயை குறை சொலாலிட்டீங்களே....

    படங்களை தரிசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. காரம் ஒத்துகாது கில்லர்ஜி, எங்கேயானால் என்ன? :))))) எண்ணெய் ஊற்றி இருந்தால் காரம் அடங்கி இருக்கும்.

      Delete
  7. மீனாக்ஷி கோயில் படங்கள் நன்றாக இருக்கிறது.
    //பெற்றோருக்கு எச்சரிக்கைக் கடிதம் இமெயிலில் வரவே கொஞ்சம் கலக்கம் தான்//

    மனம் கலங்கி தான் போகும். போலீஸார் பாதுகாப்புக்கு இருப்பது மகிழ்ச்சி.
    நிலை விரைவில் சரியாகும்.


    //இது எதுவும் உண்மையாக இருக்கக் கூடாதே என்றே நாங்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம்.//

    நாங்களும் குழந்தைகளின் பாதுகாப்பை இறைவன் பார்த்து கொள்ள வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.

    தவறி நடக்கும் மாணவர்களை தற்காலிக, நிரந்தர நீக்கம் செய்யாமல் அன்பாய் அரவணைத்து புத்தி சொல்ல கூடாதா? பள்ளி நிர்வாகம்.


    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி. நிலைமை சீராகி வருகிறது. படங்கள் நிறைய இருந்தாலும் நான் தேர்ந்தெடுத்துத் தான் போடுகிறேன்.

      Delete
    2. ///படங்கள் நிறைய இருந்தாலும் நான் தேர்ந்தெடுத்துத் தான் போடுகிறேன்.//

      ஹையோ என்னைக் கொண்டுபோய் ஆராவது தேம்ஸ்ல போடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:) என்னால முடியல்ல:))

      Delete
    3. இதோ வரேன் பிடிச்சுத் தள்ள!

      Delete
  8. ஹூஸ்டன் மீனாக்ஷி கோயில்....அழகா இருக்கு கோவில் ..

    கோபுர தரிசனம் மாதிரி கூட எடுக்கலாம் ..அது இன்னுமே நல்லா இருக்கும் ..அடுத்த முறை முயற்சி செஞ்சு பாருங்க ..

    பள்ளியில் சுழல் மிக கடினம் தான் மா ...என்ன இருந்தாலும் இந்த சூழ்நிலைகளை கேக்கும் போதே நமக்கு பயம் பிடித்துக்கொள்ளும் ...விரைவில் சரியாகும்

    ReplyDelete
    Replies
    1. எப்படியும் இன்னொரு முறை போக எண்ணம். அப்போக் கொஞ்சம் நிதானமாகப் படங்கள் எடுக்க முயல்கிறேன் அனு.

      Delete
  9. படங்கள் அழகு .ஆனாலும் அடிதாங்கி இடிவாங்கி கிட்ட கொஞ்சம் ட்ரெய்னிங் எடுக்கணும் :) யாரு க்கும் தெரியாம ஷேக் ஆகாம படமெடுப்பது எப்படின்னு .

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா இடிதாங்கி சொல்லிக் கொடுத்தது தான். இன்னும் நிறைய இருக்கே அவங்க கிட்டே கத்துக்க. :))))

      Delete
    2. //படங்கள் அழகு .ஆனாலும் அடிதாங்கி இடிவாங்கி கிட்ட கொஞ்சம் ட்ரெய்னிங் எடுக்கணும் :)//

      ஹா ஹா ஹா ஹா கர்ர்ர்:))
      அதாவது வந்து களவாக எடுக்கிறோம் எனும் எண்ணம் இல்லாமல்.. பக்கத்தில நிற்போரை அல்லது தூணைப்பிடிச்சுக்கொண்டாவது ஸ்ரெடியா நிக்கோணும் முதல்ல:)) இல்லை எனில் கை எல்லாம் ரைப் படிக்குமெல்லோ பயத்தில:) ஹா ஹா ஹா..

      Delete
    3. நீங்க சொல்லுவது சரி இடிதாங்கி. கொஞ்சம் பயந்து பயந்து தான் எடுக்க வேண்டி இருக்கு!

      Delete
  10. ஸ்கூல் சம்பவம் கலங்கடிக்குது மனசை ..எல்லா குழந்தைகளுக்கும்  ஒரு பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று பிரார்த்திப்போம் 

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சல், உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      Delete
  11. நான் எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது அயல் நாட்டினர் இந்தியாவில் கல்வி கூட்க்களை நிறுவுவார்க்சள் இண்டியர்கள் அயல் நட்டில்கோவில்களை கட்டுவார்கள் ஸ்ரீராமின் சந்தேகம்எனக்கு வந்தது /
    இது மாதிரி கோவில்களுக்கு இந்தியர்களைத் தவிர வெளிநாட்டவர் வந்து வழிபடுவது உண்டோ? வடநாட்டவர்?

    Reply

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி சார், எல்லோரும் எல்லாக் கோயில்களுக்கும் வருவது உண்டு. கருத்துக்கு நன்றி.

      Delete
  12. ஆஆஆ அதிராவை இன்னமும் காணமே என கூஸ்டனில்:) இருந்து கீசாக்கா கூச்சல்போடப்போறா என ஓடி வந்தேன்ன்:)).. மீனாட்சி அம்மனோ.. ஆஆஆஆஆஆ

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது கூஸ்டன் இல்லை. ஹூஸ்டன்! மீனாக்ஷி அம்மனே தான்.

      Delete
    2. ///க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது கூஸ்டன் இல்லை. ஹூஸ்டன்!//

      ஆஆஆ வெற்றீஈ.. வெற்றீஈஈ:)) இதைத்தான் எதிர்பார்த்தேன்:))

      Delete
  13. //வந்ததில் இருந்தே மீனாக்ஷி கோயில் போகணும் என்று ஆவல். முக்கியமாய் நூலகத்திற்காக!//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அப்போ அம்மனுக்காக இல்லையோ:) நில்லுங்கோ வட்சப்பில அம்மாளாச்சிக்கு மெசேஜ் அனுப்புறேன் கீசாக்கா கனவில வந்து மிரட்டச் சொல்லி:))

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, மீனாக்ஷியை யாருனு நினைச்சீங்க அடி/இடி தாங்கி அதிரடி! எங்க வீட்டுப் பெண்ணாக்கும். அவ ஒண்ணும் சொல்ல மாட்டா! அவளோட கண்களின் கருணையை வைச்சுத் தானே பெயரே! அவ எங்கேயானும் மிரட்டுவாளா என்ன?

      Delete
    2. என்னை மிரட்டியிருக்கிறா தெரியுமோ கனவில் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஒருநாள் வெள்ளிக்கிழமையொ என்னமோ ஏதோ வீட்டில் நிற்கவில்லை நேரமாகிவிட்டது விளக்கு வைக்காமல் விட்டு விட்டேன் சுவாமிப்படத்துக்கு.. இரவு கனவு, ஒரு பொம்பிளை வந்து வாசலில் நின்றா, உள்ளே வாங்கோ என்றேன், இல்லை நான் வரமாட்டேன் உன் வீடு இருட்டாக இருக்குது என்றா..


      இப்படி இன்னொரு நாள், ஊரில சிவகாமி அம்மன் இருக்கிறா, திருவிளாக்காலம் விரதமிருப்பேன், ஒருமுறை ஆரம்பநாளை மறந்துவிட்டேன், இரவு கனவு, ஒரு பெண் பெரீஈஈஈய குங்குமத்தோடு வந்து எங்கட கேட்டில நிக்கிறா, விடிய எழும்பி அலறியடிச்சு ஊரில் மாமாவுக்குப் ஃபோனில் கேட்டேன், மாமா சொல்கிறார், இன்று கொடியேற்றமெல்லோ நானும் சொல்ல மறந்திட்டேன் என ஹா ஹா ஹா இப்படி எனக்கும் அவவுக்கும் பல பிரச்சனைகள் ஓடும்:))

      Delete
    3. இடிதாங்கி, நீங்க தான் அவளை மறந்துடறீங்க! அதான் அடிக்கடி வந்து நினைவூட்டுகிறா. நான் மறப்பதே இல்லையே! :)))) என்னை எல்லாம் மிரட்ட மாட்டாளாக்கும்.

      Delete
  14. ஆஆ அழகிய வெள்ளைக்கோயில்.. பொதுவா வெள்ளைக்கோயில் எனில் நோர்த் இண்டியன் கோயிலாகத்தான் இருக்கும்.. இது தமிழ்க்கோயிலோ?

    ReplyDelete
    Replies
    1. அதென்னமோ இந்தக் கோயில் கோபுரத்திற்கு வெள்ளை நிறம் தான் பல வருடங்களாக. பழைய படங்கள் இருக்கின்றன . தேடி எடுத்துப் போடறேன். எங்க மீனாக்ஷி பாண்டிய நாட்டுப் பச்சைத் தமிழச்சியாச்சே! தமிழ்க் கோயில் தான் இது.

      Delete
  15. //அங்கேயே சாப்பாடு விற்பதாகவும்//
    என்ன கோயிலில் விற்கிறார்களோ.. புதுசா இருக்கே? அல்லது அருகில் கடையிலோ?

    ReplyDelete
    Replies
    1. கோயில் வளாகத்திலேயே திருமண மண்டபம், ஆடிட்டோரியம், நூலகம் அதைச் சார்ந்த கூடம் என மிகப் பெரிய வளாகம் இது. நூலகத்தை ஒட்டி இருக்கும் கூடத்திலே தனியாகச் சாப்பாட்டு விடுதி வைத்திருக்கிறார்கள். பல வருடங்களாக அங்கேயே நடைபெற்று வருகிறது. இப்போது பெரிய அளவில் நடக்கிறது. கடை எல்லாம் இல்லை. இதை ஒட்டித் தமிழ்ச் சொற்பொழிவுகள் நடக்கும் கூடம் ஒன்றும் உண்டு. அங்கே பல தமிழறிஞர்கள் வந்து பல்வேறுவிஷயங்களில் சொற்பொழிவு ஆற்றுவார்கள். சுகி சிவம் சொற்பொழிவு நடத்தியபோது நாங்க போனோம்.

      Delete
  16. //இவர் தான் முதல்லே வந்திருக்கார். வந்து மத்தவங்களைக் கூட்டி வந்திருக்கார். இப்போக் குடும்பமே இங்கே தான் பிழைப்பு! :))))
    //

    ஆஆ குண்டுப்பிள்ளையாரோ ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:))

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஆஹா, ஆமாம், இவங்க அண்ணனும் தம்பியும் தானே எங்கே போனாலும் முதல்லே போயிட்டு உட்கார்ந்து கொண்டு பின்னர் குடும்பத்தையே கொண்டு வருவாங்க!

      Delete
  17. //அதே போல் பெண்ணின் ரவா தோசை, மாப்பிள்ளையின் மைசூர் மசாலா, அப்புவின் பூரி, கிழங்கு எல்லாமும்.//

    கிட்டத்தட்ட கடையையே காலி பண்ணியிருப்பீங்கபோல இருக்கே:)).

    //சபரிமலையில் இருக்கிறாப்போல் வடிவமைத்திருப்பதாகச் சொல்கின்றனர். நம்மவரும் ஆமாம் என்றார்.//
    ஹா ஹா ஹா..

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கண்ணு வைக்காதீங்க இடிதாங்கி! :)))))) ஐந்து பேர் போய்ச் சாப்பிட்டிருக்கோம் இல்லையோ? :)))))

      Delete
  18. //இருந்ததால் துப்பாக்கிச்சூடு எப்போ வேணா நடக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். //

    அமெரிக்காவில இதுதான் ஒரு பெரிய பிரச்சனை.. ஏன் ட்றம்ப் அங்கிள் இன்னும் துவக்குக்கு தடை போடாமல் இருக்கிறாரோ தெரியேல்லை, அடுத்த மீட்டிங்கில் இதுபற்றிப் பேசப்போகிறேன்..

    பெற்றோருக்கு எவ்வளவு பயமாக இருக்கும்..

    ReplyDelete
    Replies
    1. இதுவும் கடந்து போகும்.

      Delete
    2. /துவக்குக்கு தடை போடாமல் இருக்கிறாரோ தெரியேல்லை// - இது அமெரிக்காவில் சாத்தியம் அல்ல. (1) ஆயுத வியாபாரிகள் (2) மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வது தங்களின் அடிப்படை உரிமை என்று நினைப்பது, அமெரிக்காவின் கொள்கையும் அதுதான்.

      அதனால்தான் போலீஸ் ஆஃபீசர், சந்தேகப்படுபவரை, கையை அப்படியே வைத்திருங்கள் என்று சொன்னால் அப்படியே வைத்திருக்கணும். கொஞ்சம் நகத்தினாலும், ஆயுதம் வைத்திருக்கிறானோ என்ற சந்தேகத்தில் (தன்னைத் தாக்க முயல்கிறானோ என்ற சந்தேகத்தில்) அவரைச் சுட்டுக் கொல்லமுடியும், சட்டம் ஒன்றும் செய்யாது (போலீஸ்காரரை).

      Delete
    3. everything will be alright!

      Delete
  19. வணக்கம் சகோதரி

    அங்குள்ள மீனாக்ஷி கோவில் அழகாக உள்ளது. படங்கள் கோவில் பற்றிய செய்திகள் சுவாரஸ்யமாக இருந்தது. எல்லா படங்களும் நன்றாக வந்திருக்கின்றன.

    /இவர் தான் முதல்லே வந்திருக்கார். வந்து மத்தவங்களைக் கூட்டி வந்திருக்கார். இப்போக் குடும்பமே இங்கே தான் பிழைப்பு/

    ஹா.ஹா.ஹா. அவரும் நம்மை மாதிரிதான்... குடும்பத்தின் மீது அவ்வளவு பாசம்.. பற்று..! சின்னவரும் அப்படித்தான்! முதலில் தனியாக வருவது போல் வந்து விட்டு பிறகு பெற்றவர்களையும், அண்ணனையும் அருகிலேயே வைத்துக் கொள்வார்.

    வேலை நிமித்தமாக அங்கு அக்கம் பக்கம் விடுதியில் தங்கியிருக்கும் இளைஞர்கள் இளைஞிகள் அந்தக் கோவில் உணவை வாங்கி இரண்டொரு நாள் வைத்திருந்து சாப்பிடும் செய்தி வருத்தமாக இருக்கிறது. வெளிநாடு சென்று வேலைக்காக தங்கும் போது எவ்வளவு சிரமங்கள். அத்தனையும் பொறுத்துக் கொள்வதென்பது கஸ்டந்தான்..பாவம்..

    தங்கள் மகன் மருமகள் உடல்நிலை இப்போது பூரண குணமா? மகள் வீட்டிலும் குழந்தை படிக்கும் பள்ளியில் பிரச்சனைகள் குறைந்துள்ளதா? அனைத்து நலமேயாக நானும் ஆண்டவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கமலா ஹரிஹரன். எங்கேயும் முதல்லே வருபவர் பிள்ளையார் தானே! தொடர்ந்து மத்தவங்களும் வந்துடுவாங்க. :))))) இங்கே ஹூஸ்டன் பல்கலைக்கழகத்திலும் நிறைய இந்தியக் குழந்தைகள் படிக்கின்றனர். எங்க பையர் இங்கே படிக்கையில் சொல்லுவார். வாரா வாரம் ஞாயிறன்று மீனாக்ஷி கோயில் போய் அங்கே கான்டீனில் சாப்பிட்டு விடுவேன் என. மாலை ஆனால் ஹரேராமா கோயிலில் சாப்பிடுவாராம்.இப்போது பல குழந்தைகளும் பார்சல்கள் வாங்கிப் போவதைப் பார்த்தோம். மகன், மருமகள், பெண் வீட்டில் அனைவரும் நலமே. அடுத்தவாரம் முழுவதும் பள்ளி விடுமுறை.

      Delete
  20. மீனாட்சி கோயில்..சிறப்பான படங்கள்.., குழந்தைகளுக்கும், அதனால் குடும்பத்தாருக்கும் இயல்பான சூழல் அமைய இறைவனை வேண்டுகிறேன்.
    தமிழ் விக்கிபீடியா டிசம்பர் 2019இல் நடத்துகின்ற ஆசிய மாதம் போட்டியில் கலந்துகொண்டு கட்டுரைகளை எழுதி வருகிறேன். இந்த மாதம் 30ஆம் நாள் வரை இப்போட்டி நடைபெறுகிறது. தமிழில் இல்லாத செய்திகளை/பதிவுகளை ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து தமிழுக்குக் கொண்டு வரும் என்னுடைய சிறிய முயற்சி. ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு கட்டுரையாவது எழுத/மொழிபெயர்க்க திட்டமிட்டு எழுதி வருகிறேன். ஆதலால் கருத்துரை இடுவதில் தாமதமாகிறது. பொறுத்துக்கொள்க.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முனைவரே, உங்களுக்கு நேரம் கிடைக்கையில் வந்தால் போதும். அதனால் என்ன!

      Delete