இரண்டு மூன்று நாட்களாகத் தொடரணும்னு நினைச்சும் தொடர முடியலை. சனிக்கிழமை வேறே ஏதோ வேலைகள்! ஞாயிறன்று வீடு சுத்தம் செய்யும் ஆட்கள் வந்திருந்தார்கள். சாமான்களை எடுப்பதும் வைப்பதுமாகச் சாயந்திரம் வரை போய் விட்டது. இதற்கு நடுவில் நம்மவருக்கு ஆதாரை உடனடியாக மின் வாரிய இணைப்பில் இணைக்கணும்னு! ப்ரவுசிங் சென்டரெல்லாம் போயிட்டு வந்துட்டார். அங்கே செர்வெர் வேலை செய்யலையாம். குட்டி போட்ட பூனை மாதிரித் தவித்துக் கொண்டிருந்தார். ஞாயிறன்று மாலை ஆட்கள் எல்லாம் போனதும் உட்கார்ந்து முயற்சி செய்தேன். வெகு எளிதாக ஓடிபி எல்லாம் வந்து விட்டது. ஓடிபி கொடுத்து மற்றத் தகவல்களை நிறைவு செய்துவிட்டு ஆதார் கார்டை இணைத்தால் ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ! படம் ரொம்பப் பெரிசுனு தகவல் வருது. என்னவெல்லாமோ பண்ணிப் படத்தைச் சிறிது பண்ணப் பார்த்தால் அது ஒத்துக்கவே இல்லை. இவருக்கு ரொம்பவே அப்செட் ஆகி விட்டது. என்னோட ராசி வெளியிலே தான் பண்ணிக்கணும்னு இருக்கு! நாளைக்கு நான் ப்ரவுசிங் சென்டரிலேயே கொடுத்துப் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு எல்லாவற்றையும் எடுத்து வைச்சுட்டார். இதுக்கு நடுவில் தான் முகநூல் மூலம் நண்பர்களுக்குப் படத்தை எப்படிச் சின்னது பண்ணுவதுனு கேட்டிருந்தேன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்று சொல்லி இருந்தனர். அதில் திரு சந்திரசேகரன் நாராயணசாமி அவர்கள் சொன்னது மட்டும் எளிதாக இருந்தது.
அப்படியும் நம்மவர் ப்ரவுசிங் சென்டரிலேயே பண்ணிக்கிறேன்னு போயிட்டார். திரும்பி வர ரொம்ப நேரம் ஆச்சா? என்னனு விசாரிச்சால் செர்வெர் சரியாகவே இல்லையாம். ஒரே கூட்டமாம். திரும்பி வந்துட்டார். அன்னிக்கு மத்தியானம் உட்கார்ந்து ஆதார் படத்துடன் உள்ள லாமினேஷன் பண்ணின பகுதியைச் சேமித்து வைத்திருந்ததைத் தேர்ந்தெடுத்து ரைட் க்ளிக் செய்து அதிலே ரீ சைஸ் தேர்வு செய்து கொண்டேன். அதில் வந்த 3 ஆப்ஷனில் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்துப் படத்தைச் சேமித்து வைத்துக் கொண்டேன். அதைக் கொடுத்ததும் உடனே வாங்கிக் கொண்டு விட்டது. முடிந்தது வேலை பத்தே நிமிஷங்களிலே. ஆகவே ஐயப்பனைத் தொடரக் கொஞ்சம் நாட்கள் எடுத்து விட்டது. இனி தொடர முயற்சி செய்யறேன். இன்னமும் தட்டச்சுச் செய்ய 2,3 பக்கங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. அதோடு ஆதாரை வோட்டர் ஐடியோடு வேறே இணைக்கணுமாம். எல்லாரும் இணைச்சுட்டாங்களோ இல்லையோ, தெரியாது. நம்மவருக்குச் சொன்னா உடனே அதைச் செய்துடணும். அதுக்கு ஒருநாள் உட்காரும்படி இருக்கும்.
ஆதாரை மின் இணைப்போடு இணைக்கணும் என்பதே உங்கள் முகநூல் பதிவு பார்த்தே அறிந்தேன். எப்போ லாஸ்ட் டேட்? இன்னும் எதெதை எதேதோடு இணைக்கணுமோ... இதில் ஆதார் பத்து வருஷமாச்சுன்னா புதுசா எடுக்கணுமாம். ஆஃபீஸ்;எ ஒருத்தர் அல்லாடிண்டு இருக்கார்.
ReplyDelete@ஸ்ரீராம்! தமிழ், ஆங்கில தினசரிகள் தினம் தினம் இது பற்றிச் செய்திகள் தொடர்ந்து கொடுக்கின்றன. நீங்க தினசரிகளே பார்ப்பதோ/படிப்பதோ இல்லைனு நினைக்கிறேன்.
Deleteவோட்டர் ஐடியை ஆதாரோடு இணைத்தேனான்னு தெரியவில்லை. வாசு பாலாஜி சார் பர்த் சர்டிபிகேட் இணைப்பது பெட்டி ஒரு பதிவு போட்டிருந்தார். எதோடு என்று நினைவில்லை. ஆதாரிலேயே இருக்கிறதே போதாதோ, என்று கேட்டிருந்தார். இன்னும் என்னென்ன தொல்லைகள் தரப்போகின்றனரோ...
ReplyDeleteஇன்னைக்கு தினமலர் கார்ட்டூனில் அரசாங்கம் இப்படி ஒவ்வொன்றாக நம்மை ஒவ்வொன்றுடன் இணைக்கச் சொல்லிக் கடைசியில் எங்க செலவுக்குப் பணம் தேவை/ உங்க ஏடிஎம் கார்ட், க்ரெடிட் கார்டை இணைங்கனு சொல்றாப்போல்! :)))))) யாருக்குத் தெரியும்! நடந்தாலும் நடக்கும்!
Deleteவோட்டர் ஐடியை நாங்களும் இன்னும் இணைக்கலை. அதுக்கு தேர்தல் கமிஷனின் தளத்திற்குத் தான் போகணும்னு நினைக்கிறேன். ஆதார் தளம்னால் ரொம்பவே சுற்று.
ReplyDeleteஇது தொல்லையாகத் தெரிந்தாலும் பின்னாட்களில் உண்மையான நபர்கள் மட்டுமே ஓட்டளிக்கவும், பொய்யான ஆதார்/மின் இணைப்பு வைத்திருப்பவர்களைக் கண்டு பிடிக்கவும் உதவும் அல்லவா? முதலில் சிரமம் தான். பின்னால் சரியாயிடும். போலி நபர்கள் ஊடுருவ முடியாது.
ReplyDeleteAadhaar linking to voter Id can be done through an Election Commission of India app also. I dont remember the app name. Youtube videos are there explaining how to link Aadhaar and Voter Id using that app. Please see them. It may be helpful to you.
ReplyDeleteThank You.
Deleteஇந்த ஆதார் பிரச்சனை எப்போது தீருமோ ?
ReplyDeleteசரியாகக் கையாளத் தெரிந்தால் இது பிரச்னையே இல்லை கில்லர்ஜி. இங்கே தான் பெரிது படுத்துகிறார்கள். ஆதாரோடு இணைக்கச் சொல்வதையே ஏதோ குற்றம் என்கிறாப்போல் பேசுகின்றனர். இப்போது மின் வாரியத்தோடு இணைப்பதால் எத்தனை உண்மையான நபர்கள் இலவச மின்சாரம் பெறுகின்றனர், எத்தனை பேர் போலியாகச் சொல்லி இலவச மின்சாரம் பெற்றிருக்கின்றனர் என்பது தெரிய வருமே! அதோடு ஊடுருவல்கள் இருந்தாலும் தடுக்கப்படும்.
Deleteகீதாக்கா படங்களைச் சின்னது பண்ணுவது எளிது. ரி சைஸ் பண்ணனும் அவ்வளவுதான்...ஆனால் ஆதார் இணைப்பதில் சில சமயம் பிரச்சனைகள் ரொம்ப வருது. எங்களுக்கு வீட்டிலிருந்தே அட்ரெஸ் மாற்ற முடியாமல் அப்புறம் அதற்கான சென்டர் போய்த்தான் செய்தோம்.
ReplyDeleteகீதா
தி/கீதா, நல்வரவு. எ.பியிலும் பார்த்தேன். அப்பா நலமா? நடமாடுகிறாரா? தாமதமாய்க் கேட்கிறேனோ?
Deleteபடங்களைக் க்ராப்பிங் செய்து சின்னது பண்ணி இருக்கேன் தி/கீதா. அதெல்லாம் பிகாசாவில். உண்மையில் ஆதார் இணைப்பதில் எனக்குப் பிரச்னை எல்லாம் இல்லை. அந்தப் படத்தோடு கூடிய ஆதார் கார்டை இணைப்பதில் தான் பெரிதாக இருக்குனு சொல்லி மறுப்புத் தெரிவித்துக்கொண்டே இருந்தது மின்வாரியத் தளம். பின்னர் அதைச் சுருக்கிப் போட்டதும் பத்தே நிமிஷத்தில் எல்லாம் ஓகே!
அக்கா இதுக்கு முந்தி உங்கள் ஐயப்பன் பதிவுக்கு கருத்து போட்டிருந்த நினைவு இருங்க வந்திருக்கான்னு பார்க்கிறேன்.
Deleteஅப்பா நலம் நடமாடுகிறார்.
உங்கள் கருத்து புரிந்தது அக்கா....ஹப்பா இணைந்துவிட்டதே ...
கீதா
இங்கு ஆதாரை வோட்டர் ஐடியோடு மட்டும் இணைக்கவில்லை மற்றதெல்லாம் இணைத்தாச்சு.
ReplyDeleteகீதா
ஆமாம், எங்களுக்கும் இன்னும் அந்த வேலை பாக்கி இருக்கு.
Deleteஅக்கா பீச் பார்த்து காத்து வாங்க வரலையே!! ருஷிகொண்டா பீச் (இது என் பதிவு) அப்புறம் இப்ப பேக்கல் பீச் (துளசி)
ReplyDeleteகீதா
ஓஓஓ!உங்கள் பதிவு குறித்துத் தான் சொல்லி இருக்கீங்களா? முதல்லே புரியலை. வரேன், கொஞ்சம் மெதுவாத் தான் வருவேன்.
Deleteஓகே ஓகே மெதுவா வாங்க!!! பீச்சும் காத்தும் அங்கிட்டுதானே இருக்கும்!!!!!!
Deleteகீதா
வணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவை இந்தப்பதிவை இன்று காலைதான் பார்த்தேன். அறற்குள் வேறொரு பதிவு (ஐய்யபன்பதிவு ) வந்து விட்டதே..!! தாங்கள் கணினியில் எப்போதுமே திறம்பட வேலை செய்கிறீர்கள். பாராட்டுக்கள். உங்கள் அளவுக்கு எனக்குத் தெரியாது. இது விஷயமாக குழந்தைகள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, எங்க வீட்டில் என் கணவர் நான் கணினி படிப்பதற்குச் சம்மதித்ததே இம்மாதிரி வேலைகளை வெளியே போய்ச் செய்யாமல் வீட்டிலேயே பண்ணிடணும் என்பதற்குத் தான். இதுவும் ஆரம்ப காலங்களில் இணையம் சரியில்லாமல், சில அலுவலகங்களின் சர்வெர் சரியில்லாமல் உடனே வராது. உடனே புலம்ப ஆரம்பிச்சுடுவார். வங்கி வேலையில் ஆகலைனா உடனே வங்கிக்குப் போய் அங்கே உள்ள அலுவலர் மூலம் செய்து கொள்ளச் செல்வார். ஆனால் அங்கேயும் இதே போல் தவறுகள் ஏற்பட்டதும் தான் புரியும். இப்போக் கொஞ்சம் பரவாயில்லை. போகலைனால் புரிஞ்சுக்கறார். அப்புறமாப் பார்த்துக்கலாம் என்பார். :))))))
Delete