ஐயப்பன் சபரிமலையில் காட்சி தரும் தோற்றமே மேலே காண்பது. வலக்கரத்தில் சின்முத்திரையைக் காட்டி. இடக்கையை இடது முழங்கால் மீது வைத்துக் கொண்டு இரு கால்களையும் குத்திட்டு அமர்ந்த கோலம். முழங்கால்களுக்குக் கொஞ்சம் கீழே இரு கால்களிலும் பட்டையான துணியால் கட்டி இருப்பது போல் தோற்றம் கொடுக்கும். இதற்குக் காரணமாகச் சொல்லப்படுவது சபரிமலையில் குடி கொண்ட பின்னர் ஐயனைத் தரிசிக்கப் பந்தள ராஜா வருகை தந்ததாகவும், தன் தகப்பனார்/ வளர்த்தவர் என்னும் முறையில் அவரைக் கண்டதும் ஐயன் எழுந்திருக்க முனைந்ததாகவும் ஒரு காலத்தில் தான் வளர்த்த மகன் ஆனாலும் இப்போது இறைவனாக இறை உருவில் இருக்கும் ஐயன் தனக்கு மரியாதை செய்யலாகாது என்பதால் பந்தள ராஜா தன் மேல் துண்டைத் தூக்கிப் போட்டதாகவும் அது ஐயப்பனின் கால்களைச் சுற்றிக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. குதிகால்கள் தூக்கிய நிலையில் எழுந்திருக்கும் கோலத்திலேயே ஐயப்பன் காட்சி தருவதாகவும் சொல்லுவார்கள்.
இனி சபரிமலைக்கு விரதம் இருந்து மாலை அணிதல் போன்றவை பற்றிச் சுருக்கமாகக் காண்போம். அனைவருக்குமே தெரிந்தது தான் என்றாலும் மறுபடி ஒரு முறை பார்த்துக் கொள்ளலாம். ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டுக் கொண்டு விரதம் இருந்து செல்வோர் முதலில் செய்ய வேண்டியது ஐயப்பனிடம் பரிபூரண சரணாகதி அடைவது தான். ஒருமுகமாக ஐயப்பன் ஒருவனையே தியானித்துக் கொண்டு இருக்க வேண்டும். மாலை அணிவதற்கென்று முறைகள் இருக்கின்றன. அதற்கு முன்னர் ஒரு மண்டலம் விரதம் இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஐப்பசி கடைசி நாள் அல்லது கார்த்திகை முதல் தேதி அன்று விரதம்+மாலை அணிதலை ஆரம்பிப்பார்கள். பெண்களுக்கு சபரிமலை செல்ல அனுமதி இல்லை என்றாலும் பத்து வயதுக்கு உட்பட்டச் சின்னப் பெண்கள்/60 வயதுக்கு மேற்பட்ட பேரிளம்பெண்களுக்கும்/சிலர் ஐம்பது வயது ஆகி இருந்தால் போதும் என்கிறார்கள். மாலை அணிந்து சபரிமலை செல்ல அனுமதி உண்டு.
ஐயப்பன் யோகநிலையில் நிஷ்டையில் பிரமசரிய விரதம் பூண்டு தவக்கோலத்தில் இருப்பதால் இளம்பெண்களுக்கும், குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் அனுமதி இல்லை. ஆண்கள் மாலை அணியும்போது கடைப்பிடிக்க வேண்டியவைகள் முக்கியமாக. ருத்திராக்ஷ மாலைகள் 54 மணிகள் உள்ளதாகவோ அல்லது துளசிமாலை108 மணிகள் கொண்டதோ அணிய வேண்டும். வீட்டிலும் மாலை அணியலாம். கோயில்களிலும் மாலை அணியலாம். தாய்/தந்தை இருப்பவர்கள் மாலையை அவர்களிடம் கொடுத்து ஆசி பெற்றுக்கொண்டு பல முறைகள் சபரிமலை சென்று பதீனெட்டுப்படிகள் ஏறி ஐயனைத் தரிசித்தவராக இருப்பவரை குருவாக வரித்துக் கொண்டு அவர் கரங்களால் மாலை அணியலாம். குருசாமி கிடைக்கவில்லை எனில் அருகிலுள்ள கோயில் எதற்கானும் போய் அங்கே மூலவரின் பாதங்களில் மாலையை வைத்து வணங்கீ இறைவனின் ஆசி பெற்று அர்ச்சகர் அல்லது குருக்களின் கைகளினால் வாங்கி அணியலாம். அல்லது தமக்குத் தாமே அணியலாம். அல்லது அவரவர் தாயின் கரங்களால் மாலையைக் கொடுத்து வாங்கி அணியலாம்.
ஆண்களில் சிறுவர்கள் இருவேளை குளித்துச் சரணம் சொல்லி ஆகாரம் எடுத்துக்கொண்டு விரதத்திற்கென இருக்கும் பாயில் இரவு படுக்க வேண்டும். பெரியவர்கள் இருவேளை குளித்துச் சரணம் சொல்லுவதோடு அல்லாமல் முக க்ஷவரம் போன்றவை செய்யாமல் சுத்தமாய் இருக்க வேண்டும். இருவருமே தீட்டுகளைத் தவிர்க்க வேண்டும். மாதாந்திரச் சுற்றில் இருக்கும் பெண்களைப்பார்க்கக் கூடாது. பேசக்கூடாது. அவர்கள் கரங்களால் உணவு உண்ணக் கூடாது.விரத காலத்து விதி முறைகளைக் கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். மாலையை அணிந்த பின்னர் அதை விரத காலங்களில் ஒருபோதும் கழட்டக்கூடாது. துக்க சம்பவங்கள் மூலம் தீட்டு ஏற்பட்டால் குருசாமியிடம் சொல்லிக் கலந்து ஆலோசித்து அவர் வழிகாட்டுதலின்படி மாலையைக் கழட்ட வேண்டும். அதன் பின்னரே துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம். முதல் முறையாக இருமுடி கட்டிக்கொண்டு செல்லுபவர்கள் கன்னி ஐயப்பன் என அழைக்கப்படுகின்றனர்.இனி அடுத்து விரத கால நியதிகள் என்னென்ன எனப் பார்ப்போம்.
வணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. ஐய்யப்பனை தரிசித்துக் கொண்டேன். சாஸ்தாவின் கால்கட்டு விபரம் பற்றியும், விரத முறைகள் பற்றியும் பகிர்ந்தது மிகச் சிறப்பாக உள்ளது. பெண்கள் அக்கோவிலுக்கு செல்வது குறித்து பல சர்ச்சைகள் வந்துள்ளனவே..! ஐயப்பனை பக்தியுடன் துதிக்கும் அனைவருக்கும் அவனருள் கிடைத்திட வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.
ஐயப்பனின் கால்கட்டு சம்பந்தமாக பிரம்மசாரியத்தின் புலனடக்கம் குறித்து ஒரு கருத்தும் கேள்விபட்டுள்ளேன்.தாங்கள் அறியாததா? அத்தனைப் பகிர்வுக்கும் நன்றி சகோதரி. தொடர்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஐயப்பனின் கால்கட்டு குறித்த உங்கள் கருத்தை நீங்களும் இங்கே தாராளமாய்ப் பகிர்ந்து கொள்ளலாம் கமலா! தயக்கம் வேண்டாம்.
Deleteதேர்ந்த குருசாமியைப் போல நியமங்களைச் சொல்கின்றீர்கள்
ReplyDeleteசாமியே சரணம் ஐயப்பா..
சாமி சரணம். நம்ம வீட்டில் ஐயப்பனைப் பார்க்கச் சென்றிருக்கிறார்கள் அல்லவா? அப்போப் பழக்கம்.
Deleteஸ்வாமியின் முழங்கால்களைச் சுற்றி இருப்பதற்கு பட்ட பந்தனம் என்பது பெயர்..
ReplyDeleteThank You Durai!
Deleteகன்னி சாமிகளுக்கு சிறந்த வழிகாட்டல் தொடர்ந்து வருகிறேன்...
ReplyDeleteThanks Killerji!
Deleteதஞ்சையம்பதியில் பயணம் செல்லும் வழி விவரங்கள்.. இங்கு விரதம் விவரங்கள்... தொடர்கிறேன்.
ReplyDeleteThanks Sriram
Deleteகிட்டத்தட்ட இதே முறைகள்தான். எங்கள் வீட்டில் செல்வோர்கள் மற்றும் ஊரில் செல்வோர்கள் நடத்தும் பூஜையில் கலந்துகொண்டதுண்டு. அது போல நான் இருந்த ஊர்களில் எல்லாம் விரதம் இருந்து கட்டு கட்டும் போது எனக்கு அழைப்பு வரும். நேரில் கண்டிருந்தாலும், விவரங்கள் விரிவாக உங்கள் பதிவின் மூலம்தான் தெரிந்துகொண்டேன் கீதாக்கா.
ReplyDeleteகீதா