எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, February 19, 2025

தமிழ்த்தாத்தாவுக்கு நமஸ்காரங்கள்!

 வாழ்நாளில் திருப்பம்: சிந்தாமணி பதிப்பு

உ.வே.சா. ”அரியலூரிலிருந்து இராமசாமி முதலியாரென்பவர் கும்பகோணத்திற்கு முன்சிபாக மாற்றம் பெற்று வந்தார்.



அவரிடம் என் நல்லூழ் என்னைக் கொண்டு போய்விட்டது. அவருடைய நட்பினால் என் வாழ்வில் ஒரு புதுத்துறை தோன்றியது. தமிழிலக்கியத்தின் விரிவை அறிய முடிந்தது” என்று இச்சந்திப்பைத் தமது வாழ்நாளில் ஒரு பெரிய திருப்புமுனை என்று அறிகின்றார். திருவாவடுதுறை ஆதினம் தண்டபாணித் தேசிகன் விரும்பியபடி உ.வே.சா., இராமசாமி முதலியாரைச் சென்று பார்த்தார். தமது அறிமுகத்தின் போது முதலியாரவா்கள் தாம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் தமிழ் கற்றதைக் கூறியபின்பும், தம்மை அவர் பெரிதும் மதித்தாகத் தெரியவில்லை என்றும் தாம் படித்த நூல்கள் யாவை என்று அவர் வினவ, தாம் ஒரு பெரியபட்டியலிட்டதாகவும் பலவகை அந்தாதிகள், பிள்ளைத்தமிழ் நூல்கள் மற்றும் கோவை யடக்கமாகப் பல நூல் பெயர்கள் கூறியும் ”இதெல்லாம் படித்து என்ன பிரயோசனம்?” என்று முதலியாா் வினவினார் என்றும் அதனால் உ.வே.சா. பெரிய அதிர்ச்சியடைந்ததாகவும் கூறுகிறார். தாம் அனேக தமிழ் நூல்களை ஆழமாகக் கற்றிருந்தும் தம்மைச் சிறிதும் மதிக்காமல் இதனால் என்ன பயன் என்று கேட்டதை உ.வே.சாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் நைடதம், பிரபுலிங்கலீலை, சிவஞானபோதம், போன்ற பெயர்களைக் கூறியும் அவர் திருப்தியடையாமல் சரி அவ்வளவு தானே என்று கூறிவிட்டார். “இவைகளெல்லாம் பிற்கால நூல்கள், இவைகளுக்கு மூலமான நூல்களைக் கற்றுள்ளீர்களா? எடுத்துக்காட்டாகச், சீவக சிந்தாமணி என்று கூறியுளார். நூல் கிடைக்கவில்லை; கிடைத்தால் கண்டிப்பாகப் படிப்பேன் என்று கூறிய பின், முதலியாரவர்கள் சீவக சிந்தாமணி நூல் நகல் ஒன்றை உ.வே.சா.விடம் கொடுத்துக் கற்றுவரச் சொன்னதாகவும் அப்பொழுதுதான் சிந்தாமணி நூலின் அருமை உ.வே.சாவிற்குத் தெரிந்தது என்றும் பதிவு செய்கிறார்

Wednesday, February 12, 2025

சமோசா வாங்கிய கதை!

 நம்ம ரங்க்ஸுக்கு சமோசா என்றால் மிகவும் பிடிக்கும். பையர் இருந்தால் வண்டியை எடுத்துக் கொண்டு குஞ்சுலுவும் கூடப் போகும். வாங்கிக் கொண்டு வந்துடுவார். யாருமே இல்லையே. ஆகவே நான் சமோசா இருப்பைப் பார்த்துக் கொண்டு ஸ்விகியில் ஆர்டர் பண்ணுவேன். விலை ஒட்டிக்கு இரட்டிப்புத் தான், ஆனாலும் அவருக்கு மட்டும் வாங்குவதால் அதிகம் கணக்குப் பார்ப்பதில்லை 2 சமோசா வாங்கி ஒண்ணை இன்னைக்குக் கொடுத்துட்டு இன்னொண்ணை மறுநாளைக்காகக் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பேன்.  ஒரு தரம் சமோசா வாங்கினால் 2 சமோசாவுக்கு 42 ரூபாய் தான் ஆகும். ஆனால் ஸ்விகியில் 30+30 60 ரூபாய் ஜாஸ்தி வாங்கறாங்க. எல்லாம் சேர்த்து 42+60=102 ரூபாய் ஜிஎஸ்டி 5 ரூ சேர்த்து 107 ரூ வரும். ரொம்பக் கணக்குப் பார்ப்பது இல்லை. இது கொஞ்ச நாட்கள், அதாவது ஓரிரு மாதம் வரை சரியாகவே போய்க் கொண்டிருந்தது 

பின்னர் திடீரென சமோசாவை மெனுவிலிருந்து எடுத்துவிட்டு அன்றைய தினம் மாலை ஆறுமணிக்குப் பின்னரோ அல்லது மறுநாள் மதியம் பதினோரு மணிக்குன்னோ போட்டு அப்போத் தான் கிடைக்கும் எனச் சொன்னார்கள் மெனுவில். சில சமயங்களில் திடீர்னு சமோசா மெனுவில் வரும். அப்போ சமோசானு போட்டால் ஆர்டர் எடுத்துப் பணம் கொடுக்கும்வரை எல்லாம் சரியாகப் போவது போல் இருக்கும். ஸ்விகிகாரங்க ஆர்டரை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரப்போறாங்கனு செய்தியும் வரும். திடீர்னு தொலைபேசி அழைப்பு வரும். சமோசா தீர்ந்து விட்டது. வேறே ஏதானும் கொடுக்கலாமானு கேட்பாங்க. உண்மைனு நினைச்சுட்டு என்ன இருக்குனு கேட்டு அதில் அந்த ஆர்டர் செய்த பணத்துக்கு உள்ளதைக் கொடுப்பாங்க. அதுவும் அந்த 42 ரூபாய்க்கு என்ன வருமோ அது தான்.  இது கொஞ்ச நாட்களில் தொடர்கதை ஆக எனக்குச் சந்தேகம் வந்து ஒரு நாள் எனக்கு சமோசா தான் வேணும்,கிடைக்குமா, ஆர்டர் பண்ணட்டுமா? எனத் தொலைபேசியில் அந்தப் பிரபலக் கடையைக் கேட்டு அவங்க வ்ந்து வாங்கிக்கோங்கனு சொல்ல எனக்கு வ்ர முடியாது நடக்க முடியாதுனு சொல்லவும் ஆர்டர் பண்ணுங்க என்றனர்.



PC Google images

சரினு உடனே, கவனிக்கவும் உடனே ஆர்டர் பண்ணிப் பணமும் கொடுத்துட்டேன். சற்று நேரம் எந்தவிதமான செய்தியும் இல்லை. உங்க ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வாங்கிக் கொண்டு வராங்கனு செய்தி வ்ந்தது. அப்பாடானு நினைச்சேன். அடுத்த நிமிஷமே தொலைபேசி அழைப்பு. சமோசா ஒண்ணு தான் இருக்கு. இன்னொண்ணு ஆனியன் சமோசா, அது தரலாமானு கடைக்காரர் கேட்பதாக உணவை டெலிவரி செய்யும் பையர் கேட்டார். நான் கேட்டுட்டுத் தான் ஆர்டர் கொடுத்திருக்கேன். எனக்கு இரண்டுமே ஆலு சமோசா தான் வேண்டும் எனச் சொல்லவே அது இல்லை. அதுக்குப் பதிலாக நீங்க ஆர்டர் செய்த பணத்துக்கு வேறே ஐடம் கொடுக்கிறோம்னு சொல்லவே கோபம் வாந்தது எனக்கு. ஏற்கெனவே ஒரு முறை வெங்காயப் பக்கோடா கொடுப்பதாகச் சொல்லிட்டு வெறும் அடித்தூளைக் கொடுத்து ஏமாத்தினாங்க. இத்தனைக்கும் பிரபல கடை இப்படிப் பண்ணறாங்க. யார் மேல் தப்புனு தெரியலை. நான் ஆர்டரைக் கான்சல் செய்வதாகச் சொல்லிட்டுக் கான்சலும் செய்தேன்.

உடனே வந்துட்டாங்கப்பா சாட்டுக்கும், சமாதானத்துக்கும். யாரோ ஒருத்த்ற் என்னைச் சற்றுக் காத்திருக்கும்படியும் நிலைமை என்னனு அவர் தெரிஞ்சுண்டு வருவதாகவும் சொன்னார் ஸ்விகியில் இருந்து. நான் ஒத்துக்கலை, எனக்குக் கான்சல் தான் பண்ணணும் என்று சொல்லவே உங்க பணம் தாமதமாய்க் கிடைக்கலாம் என சந்தேகமாய்ச் சொன்னார். எதுக்கும் நான் அசைஞ்சு கொடுக்கலை.. இதுக்குள்ளே கடையிலிருந்து டெலிவரி கொடுக்கும் நபர் கான்சலா? அல்லது கொண்டு வரணுமானு சீக்கிரமாச் சொல்லுங்க நான் எத்தனை நேரம் காத்துண்டு இருப்பது எனக் கோபித்தார். 2,3 முறை கூப்பிட்டு விட்டார். நானும் ஸ்விகியில் சாட் செய்தவரிடம் நிலைமையைச் சொல்லிக் கான்சலை ஏத்துக்கச் சொல்லிக் கேட்டேன். சற்று நேரம் வாதாடிய பிறகே அவர் கான்சலுக்கு ஒத்துக் கொண்டார் உடனே ஸ்விகியிலிருந்து ஒரு பெண்மணி வந்து நடந்தவற்றுக்கு மன்னிப்புக் கேட்டுட்டு, உங்க பணம் 2 நாட்களில் திரும்பக் கொடுத்துடுவோம் என்றனர். அப்பாடானு ஆச்சு எனக்கு. அதன் பின்னர் அந்தப் பிரப்லக் கடைஇயில் எதுவுமே வாங்குவது இல்லைனு வைச்சுட்டோம். அதுக்காக அவங்களுக்கு வியாபாரம் ஆகாமல் போகப் போவதில்லை. ஏதோ நம் மனசு ஆறுதலுக்காக.

Wednesday, February 05, 2025

சாப்பாட்டைப் பழிக்க வேண்டாம்!

தலைப்பிலே சொல்லி இருக்கேனே தவிர அதைக் கடைப்பிடிப்பதில்லை!:(

சாப்பாடு மறுபடியும் வாங்க ஆரம்பிச்சிருக்கேன். எல்லாம் கால்கள் படுத்தும் பாட்டில் தான்,. நின்று கொண்டு எதுவும் செய்ய முடிவதில்லை.. ஆனால் வாங்கும் சாப்பாடு நல்லா இருக்கானு கேட்டால் ஏதோ இருக்கு, அவ்வளவு தான்,. இதே காடரர் ஒரு வருஷம் முன்னாடி வரை நன்றாகவே கொடுத்தார். என்ன பிரச்னைன்னா தினம் மிஞ்சிப் போயிடும். அதை யாரிடம் கொடுப்பது என்பது ஒரு பிரச்னை. வீட்டு வேலை செய்யும் பெண்மணி காலையிலேயே வந்துட்டுப் போயிடுவாங்க. ஆகவே இதைக் கொடுக்கனு தனியா ஆள் தேட வேண்டி இருக்கும். நடுவில் மாமா குழம்பு, ரசம் சாப்பிடாததால் எதுவும் வாங்கவில்லை. இப்போ ஒரு வருஷம் கழிச்சுக் கொடுக்கையில் அந்தப் பெண்மணி ஆயிரம் கண்டிஷன்கள். வீடு வேறே மாத்திட்டாங்களாம். இங்கிருந்து ஒரு கி.மீ தூரத்தில் போயிட்டாங்க. அதோடு இப்போச் சாப்பாடு செய்து முடிக்கவே பத்து மணி ஆகிவிடுகிறதாம். அங்கெல்லாம் கொடுத்துட்டு இங்கே வர பதினோரு மணி ஆகும்னு சொல்லிட்டாங்க. ரொம்பக் கேட்டதுக்கு அப்புறமா முடிஞ்சால் பத்தே முக்காலுக்குக் கொடுக்கச் சொல்றேன் நு அரை மனசோடு சொல்லி இருக்காங்க.

முன்னாலும் சாப்பாட்டில் காரம் இருந்தது, நாங்க சுட்டிக் காட்டினதோடு எங்களுக்கு ஒத்துக்கலைனும் சொன்னோம். குறைச்சுண்டாங்க. ஆனால் இப்போ அப்படி எல்லாம் சமரசம் செய்துக்கத் தயாரா இல்லை என்பதோடு, வேணும்னா வாங்கிக்கோங்க என்னும் நினைப்புத் தான். வாடிக்கையாளர்கள் நிறையச் சேர்ந்திருப்பாங்க போல. காய்கறியும் முன்னைப் போல் எல்லாம் பண்ணுவதில்லை. கறி கொஞ்சம் பரவாயில்லை ரகம். கூட்டில் காய்களே தெரியாது. காயை நறுக்கிப் பாத்திரத்தில் போட்டுக் கூட்டுக்கு அரைச்சு விடும் விழுதை நிறைய மாவு கரைச்சு அதோடு விட்டுக் குக்கரில் வைச்சுடறாங்க. காய் என்னமோ வெந்திருக்கும். ஆனால் அந்த விழுதில் தேடிக் கண்டு பிடிக்கணும். கரண்டியால் அரிச்சால் விழுது தான் வருது. கூட்டும் சில சமயம் காரமாக இருக்கும். ரசம் புளிப்பாக இருப்பதோடு உப்புச் சேர்த்தால் காரம் தனித்துத் தெரியும். சாம்பார் என்னிக்குமே காரம் தான்,. அதையும் மீறிக்கொண்டு மாவு கரைச்சு விட்டிருப்பாங்க. தான் என்ன என்பது வாசனையில் தான் தெரியும். முன்னெல்லாம் கூட்டில் காய்கள் நன்கு தெரியும் என்பதோடு அரைச்சு விடுவதும் நிதானமாக இருக்கும். இப்போ சமையலுக்கு, விநியோகத்துக்குனு ஆட்கள் வேறே போட்டுட்டாங்க. ஆகவே எல்லாம் கமர்ஷியல் தான்,

சாம்பாரைத் தவிர்த்து வேறே எதுவும் இந்தக் காடரிங் காரங்க பண்ண மாட்டாங்க போல. மோர்க்குழம்புனாலே பயம்மா இருக்கும். மோர் அவ்வளவு புளிப்பாக இருக்கும். அவியல் கூட இப்போல்லாம் தயிர் இல்லாமல் புளிச்ச மோரில் மாவு கரைச்சு விட்டுப் பண்ணிடறாங்க. மொத்தத்தில் ஒரிஜினாலிடி என்பதே இருப்பதில்லை. ஆனால் பாருங்க இதை எல்லாம் பேசிக் கொண்டிருக்கையில் காஞ்சி முனிவர் தளத்தில் இருந்து சாப்பாட்டைப் பழிக்காதீங்கனு ஒரு பதிவு வந்திருப்பதைப் பகிர்ந்திருக்காங்க. படிக்கையில் மனசுக்குக் க்ஷ்டமாத் தான் இருக்கு. நாம் இவ்வளவு மோசமாக விமரிசிக்கிறோமே என்றெல்லாம் தோன்றியது. ரங்க்ஸிடம் சொன்னால் நான் எப்போவோ படிச்சுட்டேன் என்றார்.

பேசாமல் வீட்டிலேயே சமைச்சுடலாமானு தோணினா அப்போன்னு பார்த்துக் கால் தகராறு பண்ணும். ஒரு அடி எடுத்து வைப்பது கஷ்டமாக இருக்கும். வீட்டில் சமையல் ஆளை வைத்துச் சமையல் செய்வதிலும் பல  கஷ்டங்கள்
இருக்கின்றன. முதலாவது செலவு. சாமான்கள், காய்கள் எல்லாம் வாங்கணும். பொடிகள் எல்லாம் தயாரா வைச்சுக்கணும். நிச்சயமாச் செலவு கூடத் தான் ஆகும். அதுவே காடரர் கிட்டே வாங்கினால் ஒரு நாளைக்கு சாம்பார், ரசம், கறி,கூட்டுக்கு 100 ரூபாயும், சர்வீஸ் சார்ஜ் பத்து ரூபாயுமாக 110 ரூ தான் ஆகிறது. ஆனா வீட்டிலே விதம் விதமாப் பண்ணிக்கலாம், நல்ல சமையல் ஆளாக இருந்தால். இவங்க ரசம் கூட மாத்த மாட்டாங்க. எலுமிச்சை ரசம் வைக்கச் சொல்லி ஒரு நாள் கேட்டதுக்கு அதெல்லாம் கட்டுபடி ஆகாதுனு சொல்லிட்டாங்க. தினம் ஒரே ரசம் தான். நேத்து ரசத்தையே இன்னிக்குச் சுட வைச்சுச் சாப்பிடறாப்போல் இருக்கும். அதிலும் பெரும்பாலும் சாம்பார் தான், அவங்களுக்கு அதான் கட்டுபடி ஆகும்போல.

என்னடா இது, பதிவுகளே புலம்பலாக வருதே, இதுக்கு எழுதாமல் இருந்தப்போவே தேவலைனு தோணும். எனக்கே தோணுது. ஆனால் என்ன பண்ண? சுத்திச் சுத்தி மனசு இப்போ இதில் தான் பதிஞ்சு கிடக்கு. மெல்ல மெல்ல வெளியே கொண்டு வரப் பார்க்கிறேன்.  இதிலே பெஸ்ட்னு சொல்லக் கூடியது எங்க வீட்டுக் காஃபி தான். நல்ல பால், காஃபி பவுடரும் நல்ல கொட்டையை வறுத்து அரைச்சுத் தயார் பண்ணுவது. சிக்கரியே இல்லை. ஆகவே காஃபி டிகாக்ஷன் போடும்போதே வாசனை ஊரைத் தூக்கும். என் மாமனார் இருந்தவரை சொல்லிக் கொண்டே இருப்பார். காஃபிக்கு வெந்நீர் போடும்போதே வாசனை வந்துடுறாப்போல் இருக்கு என்பார். அதே பவுடரில் மத்தவங்க போட்டால் அம்புட்டு வாசனை வராது. இஃகி,இஃகி,இஃகி. அதே போல் இட்லி, தோசைக்கு அரைக்கும்போதும், அடைக்கு அரைக்கும்போதும் அம்பத்தூரில் ஐம்பது அடி தள்ளி இருக்கும் எதிர் வீடு வரை வாசனை மூக்கைத் துளைக்கும். அவங்கல்லாம் நீ என்னதான்  ரகசியமாப் பண்ணினாலும் உன் கை மணம் காட்டிக் கொடுத்துடும் என்பாங்க. இப்போ இந்த நிமிஷம் ஒரு மாமியிடம் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டு இருக்கேன். இதான் இப்போதைய நிலைமை.

Monday, February 03, 2025

என்ன குற்றம் செய்தேன்?

 பலதும் எழுத நினைச்சு ஆனால் ஏனோ எழுதப் பிடிக்காமல் இருக்கேன். என்றாலும் சில நிகழ்வுகள் மனதைப் பாதித்தவற்றை மட்டும் சொல்றேன். சில/பல புத்தகங்கள் காணாமல் போய்விட்டன. அதில் எங்கள் ப்ளாக் மூலம் பரிசாகக் கிடைத்த ஆனந்தப் பூங்காற்றே புத்தகம், கடுகு சார் எனக்கு அனுப்பி வைத்த கமலாவும் தொச்சுவும் ரேவதி எனக்குப் பரிசாய் அளித்த அமரதாராவின் இரண்டாம் பாகம் ரங்கதுரையின் கதையும் அடக்கம். இன்னும் சில புத்தகங்களும் உண்டு. மோகன் ஜி அனுப்பிய சாஸ்தாம்ருதம், ஜிஎம்பியின் புத்தகம், வைகோவின் புத்தகம் என இருக்கின்றன. ஒரு மனது போனால் போகட்டும். உனக்கப்புறம் என்ன ஆகுமோ அது இப்போவே ஆகிவிட்டதாய் நினைச்சுக்கோ என்றாலும் இன்னொரு மனசு தவிப்பாய்த் தவிக்கிறது. இதனால் மனஸ்தாபமே வந்து விட்டது. எனக்கு அது தான் ஆச்சரியம். மனிதர்களின் உண்மையான முகம், நாம் அறியாத பக்கம் நன்றாகத் தெரிந்தாலும் அதிர்ச்சியும் மன வருத்தமும் இன்னமும் அடங்கவில்லை. இப்படிக் கூடவா? இப்படிக் கூடவா என மனம் அடிச்சுக்கறது. இத்தனைக்கும் இது நடந்து ஒரு வருஷம் போல் ஆகப் போகிறது. ஆனாலும் நினைத்தாலே மனம் பதறுகிறது. இதனால் எனக்கு வரவேண்டிய கார்த்திகைப் பணமும், கணுப் பணமும் வராமல் போய் விட்டன. நம்ம ரங்க்ஸ் வேறே முடியாமல் இருந்துட்டு இப்போத் தான் கொஞ்சம் எழுந்திருந்து நடமாடும் நேரம் இப்படிச் சீர் வராமல் போனதில் எங்க இரண்டு பேருக்குமே ரொம்ப வருத்தம். எங்களைப் பொறுத்தவரை இதனால் எல்லாம் உறவு பாதிக்காது/பாதிக்கக் கூடாது என்பதே! ஆனால் நடப்பதே வேறே மாதிரியா இருக்கே! என்ன செய்வதுனு புரியவே இல்லை. :(

நான் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கெல்லாம் போனதே இல்லை. மதுரையில் முன்னெல்லாம் மேலமாசிவீதி, டவுன் ஹால் ரோடோடு சேரும் முக்கில் வண்டியை வைத்துக் கொண்டு சோவியத் யூனியன் புத்தகங்களை விற்பார்கள். தூதரக அலுவலகத்துக்குக் கடிதம் போட்டால் மாதா மாதம் இலவசமாயும் புத்தகங்கள் வரும். அது தவிர ஹனுமந்தராயன் கோவில் தெரு முக்கில் மீனாக்ஷி பதிப்பகம்/புத்தகங்களும் விற்பனை செய்தார்கள் இருந்தது. அங்கே போய்ப் பழக்கப் படுத்திக் கொண்டதில் அவங்க விற்பனைக்கு வந்திருக்கும் புதுப் புத்தகம் ஏதேனும் ஒன்றைப் படிக்கத் தருவார்கள். அப்போல்லாம் எழுத்தாளரைப் பொறுத்து நாலணாவில் இருந்து ஒரு ரூபாய் வரை வாங்கிப்பாங்க. நிறையப் புத்தகம் படிச்சிருக்கேன் அப்படி வாங்கிப் படிச்சதில் அதிகம் ஜெயகாந்தனின் புத்தகங்கள். 

யதேச்சையாக அறிமுகம் ஆன பழைய பேப்பர் காரரின் கூடையில் நான் கண்டெடுத்த பொக்கிஷம் தான் கல்கியின் அலை ஓசை, சிவகாமியின் சபதம் போன்றவை. பணமே வாங்கிக்காமல் படிச்சுட்டுக் கொடு பாப்பானு புத்தகங்களைத் தருவார். அதன் பின்னரும் நிறையப் புத்தகங்களைக் கொண்டு வந்து கொடுத்திருக்கார். அது ஒரு பொற்காலம்னு சொல்லலாம்.  கல்யாணம் ஆகி வவுந்தப்புறமா என்னோட புத்தக ஆர்வத்தைப் பார்த்து மிரண்டு போன நம்ம ரங்க்ஸ் என்னைப் புத்தகக்கடைபக்கமே கூட்டிச் சென்றதில்லை. எத்தனையோ புத்தகக் கண்காட்சி நடந்தும் நான் போனதே இல்லை.சித்தப்பாவிடம் இருந்த புத்தகங்களே நிறையப் படிக்காதவை இருந்ததால் எப்போ டி.நகர் போனாலும் ஐந்தாறு புத்தகங்களை எடுத்துக் கொண்டு வருவேன். ரயிலில் அலுவலகம் செல்லும்போதும்/திரும்பி வரும்போதும் அலுவலக ஓய்வு நேரத்தின் போதும் புத்தகங்களே துணை.

Sunday, January 26, 2025

தவிக்கும் மனசு

 இன்னிக்குக் குளிக்கும்போது நம்ம ரங்க்ஸ்   கீழே விழுந்துட்டார். தினம் தினம் தானே குளிப்பதால் இப்போக் கொஞ்ச நாட்களாகக் கிட்டே இருப்பதில்லை; அவரும் வேண்டாம், நீ போய் சமையலைப் பார் என்பார். ஆனால் கதவை உள்ளே தாழ் போட்டுப்பார்னு நினைக்கலை. இன்னிக்குச் சாதம் வைச்சுட்டு ஏற்கெனவே வேக வைச்சிருந்த குட்டி உருளையை எடுத்துக் கொண்டு தோல் உரிக்க வந்து உட்காரும் முன்னரே கீதா, கீதா எனக் கூப்பிடுகிறாபோல் இருந்தது. நிஜமா, அல்லது என்னோட பிரமையானு சுதாரிக்கும் முன்னர் மீண்டும் மீண்டும் அடுத்தடுத்துக் கூவல். என்னால் என்னதான் வேகமாய்ப் போனாலும் உடனே போக முடியாதே! இப்போத் தானே நடை பயிலும் குழந்தை போல் நடக்கிறேனே! ஆகவே நானும் பதிலுக்குக் கத்திக் கொண்டே போனேன்,. போனால் உள்ளே இருந்து ரங்க்ஸ் சத்தம் போடுகிறார்,  கீழே விழுந்துட்டேன் என்று. கடவுளே! என்னோட கை, கால்கள் இயங்காது போல் பின்னிக்கொண்டன. கதவைத் திறக்க முயன்றால் உள்ளே தாழ் போட்டிருக்கார்.

கடவுளே இப்போ என்ன செய்யறது? இன்னிக்குனு பார்த்து வேலை செய்யும் பெண் தாமதமாக ஒன்பதரைக்கு வந்திருந்தார். என்னோட கூச்சல், அவரோட கூக்குரல் எல்லாம் கேட்டுட்டு அவங்க வீடு சுத்தம் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுட்டு அங்கே வந்தார். கதவைத் திறக்க முயன்றார், அதுக்குள்ளே உள்ளே இருந்து ரங்க்ஸும் நல்ல வேளையாக் கைக் கம்பு உள்ளே எடுத்துப் போயிருந்ததால் அதன் உதவியோடு கதவுத் தாளைத் தள்ள ஆரம்பிச்சார். இங்கேயும், உள்ளே இருந்தும் முயன்றதில் கதவு தாழ் திறந்து கொண்டது.எக்கச்சக்கமான நிலையில் கீழே விழுந்திருந்தார். ஆனால் மெதுவாக எழுந்து எப்படியோ உட்கார்ந்து விட்டார். வேலை செய்யும் அம்மா உள்ளே போய்த் தூக்க முயல, அவரும் எழுந்திருக்க முயல வழுக்கிக் கொண்டே இருந்தது. அதைப் பார்த்துவிட்டு நான் இன்டர்காம் மூலம் செக்யூரிடியை அழைத்து யார் இருந்தாலும் உடனே வரச் சொன்னேன். அப்போது ட்யூடியில் இருந்தவர் உடனே மேலே வர, வேலை செய்யும் பெண்ணும் அவருமாகத் தூக்கிக் குளிக்கும் நாற்காலியில் உட்கார்த்தி வைத்தனர்.

பின்னர் வாளியை ஸ்டூலில் வைத்து விட்டுத் தண்ணீர் நிரப்பி இருந்ததால் கிட்டே வைத்துக் குளிக்க வைத்துவிட்டுப் பின்னர் வெளியே வந்தார், செக்யூரிடி அவர் வேலையைக் கவனிக்கப் போக வேலை செய்யும் அம்மா  வேலையைத் தொடர நான் அங்கேயே உட்கார்ந்து கொண்டு குளித்து முடித்து வரும் வரை காத்திருந்தேன்.

எல்லோரும் துணைக்கு ஒருத்தர் வேண்டும் என்கின்றனர். ஆனால் வரவங்க ஆயிரத்தெட்டு நிபந்தனைகள் சொல்றாங்க. ஒரு அம்மா வீட்டோடு இருந்து பார்த்துக் கொண்டு  சமைத்துப் போடுவேன் என தினசரியில் விளம்பரம் கொடுக்க அவங்களை அழைத்துப் பேசினால் காலை ஏழு அல்லது எட்டு மணிக்கு வந்து காலை ஆகாரம், மதியம் சாப்பாடு முதலியன பண்ணி வைச்சுட்டுப் பத்துமணிக்குள் போயிடுவாராம். அவருக்கு காலை பத்தில் இருந்து மாலை நாலு, ஐந்து, சில நாட்கள் ஆறு மணி வரை அரசுக் காய்கறிப் பண்ணையில் வேலையாம். அதை முடிச்சுட்டு நேரம் இருந்தால் வந்து இரவு உணவு தயாரிப்பாராம். அப்படி வந்தால் இரவு இங்கேயே தங்கிப்பாராம். அதைத் தான் வீட்டோடு இருந்துனு சொல்லி இருக்கார் போல. வர முடியலைனா நாமே ஏதானும் பண்ணிக்கணுமாம். இல்லைனா ஓட்டலில் வாங்கிக்கோங்கனு புத்திமதி. அவங்க டிஃபன் செய்தாலும் இட்லி மட்டும் தான் பண்ண முடியுமாம். எண்ணெய் விட்டு தோசை, அடை, சப்பாத்தி எல்லாம் பண்ணினால் உங்களுக்கு ஜீரணமே ஆகாது என்றார். இங்கே நான் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவில் சப்பாத்தி அல்லது தோசை தான் பண்ணறேன். 

இதுக்கெல்லாம் நாங்க அட்ஜஸ்ட் செய்து கொள்ளணும் என்றும் சொன்னார். அதோடு குழம்போ, ரசமோ, சாம்பாரோ ஏதோ ஒண்ணு தான் பண்ணுவாராம். அதையே இரவு உணவுக்கும் வைச்சுக்கணுமாம். அவங்க இங்கேயே சாப்பிட்டுக்கறாங்களானு கேட்டதுக்கு எனக்கு இனிப்புப் பதார்த்தம் தான் ரொம்பப் பிடிக்கும். நான் ஏதாவது இனிப்புப் பண்ணிச் சாப்பிட்டுப்பேன். நான் சாதத்தில் குழம்பெல்லாம் உங்களைப் போல விட்டுக் குழைத்துச் சாப்பிட மாட்டேன் என்றார், இத்தனைக்கும் அவர் நாங்க சாப்பிடும்போது வரலை. சாப்பிடுவதைப் பார்த்ததும் இல்லை. சாப்பிட்ட பாத்திரங்களை ஒழிச்சுப் போடணுமேனு சொன்னதுக்கு அதுக்குத் தனியா ஆள் போட்டுக்கோங்க, என்னால் அதெல்லாம் இருந்து செய்ய முடியாது. அப்படி நான் தான் செய்யணும்னா சம்பளத்தில் கூடக் கொடுக்கணும் என்பதோடு பாத்திரங்களை இரவு நான் எப்போ வருவேனோ அப்போ ஒழிச்சுப் போடறேன். அது வரை டேபிள்ளேயே இருக்கட்டும் என்றார். 

எங்க வீட்டுக்கு வரவங்க யாரா இருந்தாலும் இவ்வளவு முடியாத சமயத்தில் கூட சமையலறை சுத்தமாக இருப்பதோடு வீட்டிலும் ஆங்காங்கே ஒட்டடை எல்லாம் தொங்காமல் கழிவறை, கை கழுவும் வாஷ் பேசின் எல்லாமும் சுத்தமாகப் பராமரிக்கிறீங்க என்பார்கள். இந்த அம்மாவை நான் வைத்துக் கொண்டால் வீடு அதோகதி தான். அதோடு இதை எல்லாம் நான் அட்ஜஸ்ட் செய்துக்கணும்னு வேறே சொல்றாங்க. என்னால் இதை எல்லாம் அட்ஜஸ்ட் செய்துக்க முடியாது என்பதால் பையர், பெண்ணிடம் பேசிட்டுச் சொல்றோம்னு சொல்லிட்டோம். அடுத்து நம்மவருக்கு திடீர்னு ஹோமுக்குப் போனால்னு ஒரு எண்ணம் தோன்ற பெருங்களத்தூரில் என்னுடைய மரியாதைக்குரிய நண்பர் திரு இன்னம்பூரார் இருந்த ஹோம் நன்றாக இருப்பதாக அவர் சொல்லிக் கொண்டே இருந்ததோடு என்னை அழைக்கவும் அழைத்தார். அவங்க விலாசத்தைக் கேட்டு வாங்கி அவங்களோடு  பேசினதில் மனதில் அவ்வளவாய்த் திருப்தி வரலை. அபார்ட்மென்ட் தனியா இருக்காம். அதில் தங்கறவங்க டைனிங் ஹாலுக்குப் போய்ச் சாப்பிடணுமாம். எங்களைப் போல் முடியாதவங்களுக்கு ஒரு ஹால், ஒரு படுக்கை அறை என்றார். அழைப்பு மணியெல்லாம் பொருத்தி இருப்பதால் நீங்க எப்போக் கூப்பிட்டாலும் ஆட்கள் உடனே வருவாங்க என்றார். எல்லா வேலைகளும் செய்து கொடுக்கிறங்க தான். பணம் தான் அதிகம். மின்சாரக் கட்டணம் கூட ஒரு யூனிட்டுக்குப் பதினைந்து ரூபாய். தனியாக் கொடுக்கணும்.

எங்க உறவுப் பெண் ஒருத்தர் என் வயது கோவையில் பிரபலமான ஹோமில் தங்கிட்டு அங்கிருந்து வருவதற்கு முயற்சி பண்ணி மிகவும் கஷ்டத்தோடு நான்கு வருஷம் சிரமப்பட்டு இப்போத் தான் போன வருஷம் வந்து விட்டார். இன்னும் சிலர் ஹோமுக்குப் போன அன்றே இறைவன் அழைப்பில் போயிட்டாங்க. நல்ல ஹோமெல்லாம் இருக்குன்னாலும் நமக்கு மனது ஒத்துக்கணும்,. ஆகவே இப்போதைக்கு ஏதேனும் ஏஜென்சி மூலம் தங்க ஒரு ஆள் பகல் வேளை மட்டும் இருந்தாலும் போதும்னு பார்க்கிறேன். கிராமங்களிலும் விசாரிக்கிறேன். எனக்கு என்ன தான் உதவிக்கு ஆள் இருந்தாலும் என் வேலைகளை நானே செய்து கொண்டிருந்த/கொண்டிருப்பதால் மனம் சமாதானம் ஆகச் சில நாட்கள் ஆகும். பார்ப்போம். இறைவன் என்ன நினைக்கிறானோ அதுபடி. எங்கே போவது என்றாலும் அதற்கு முன்னால் சாமான்களை ஒழுங்கு செய்யணும், போகிற இடத்திற்கு என்னெல்லாம் கொண்டு போகலாம் என்பதை யோசிக்கணும். முக்கியமாய் ஸ்ரீராமர்!  வேண்டாம் அழுதுடுவேன்.

இப்போ இங்கே இருப்பதால் என்னிக்கானும் மாறுதல் தேவைப்பட்டால் ஸ்விக்கி மூலம் உணவு வரவழைக்கிறேன். ஹோமில் அதெல்லாம் முடியாது. நமக்குத் தேவைக்கு ஒரு காஃபி கூடப் போட்டுக்க முடியலைனா ரொம்பக் கஷ்டம். யோசிக்கணும் விரைவில் ஆண்டவன் நல்லவழி காட்டுவான் என்னும் நம்பிக்கையோடு இருக்கேன்.

Friday, January 24, 2025

மலரும் நினைவுகள்

 



இவங்கல்லாம் யாருனு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இது 93-/94 ஆம் ஆண்டில் நாங்க ஜாம்நகரில் இருந்தப்போ எடுத்த படம். அந்த அலுவலகத்தில் இருக்கும்போது அடிக்கடி பிக்னிக் போவோம். அப்படி ஒரு பிக்னிக்கில் சுத்திட்டு வந்தப்போ யாரோ அலுவலக நண்பர் இந்தப் படத்தை எடுத்திருக்கார்.. அப்போ மாமியார் எங்களோடு தான் இருந்தார். அவங்களையும் வலுக்கட்டாயமாக இழுத்துட்டுப் போவோம். அது ஒரு பொற்காலம்.

பார்க்கப் போனால் எங்களுக்கெல்லாம் ஆரம்பத்தில் குஜராத் பிடிக்கலை.. முக்கியமா ஜாம்நகர் பிடிக்கவே இல்லை. ராஜஸ்தானை விட்டுட்டு வந்ததுக்கு அழுதுட்டே இருப்போம். பின்னால் கொஞ்சம் கொஞ்சமாக ஊர் பழகியது. ஆனாலும் ராஜஸ்தான் வாழ்க்கை சொர்க்கம் தான். மயிலும், குயிலும், கிளியும் கொஞ்சும். கொத்துக் கொத்தாகக் கிளிகள் வீட்டுக் கூரையில் உட்கார்ந்து கொண்டு கொஞ்சிக் கொண்டிருக்கும். மயில்கள் இஷ்டம் போல் கத்திக் கொண்டு நடனம் ஆடிக் கொண்டிருக்கும். தோட்டத்தில் நடுவே பெரிய லான். சுற்றிலும் பூச்செடிகள். சமையலறை ஓரமாகக் காய்கறித் தோட்டம்.பட்டாணிக்கும், காலி ஃப்ளவருக்கும், மொச்சைக்கும் கொத்தித் தின்னக் குருவிகள். நாங்க போய் வாழை, முருங்கை, மஞ்சள் எல்லாம் போட்டோம், தை மாதப் பிறப்புக்குத் தமிழர்களுக்கெல்லாம் மஞ்சள் கொத்து விநியோகம் செய்வோம். கரும்பும் தோட்டத்துக் கரும்பு.    

ஜாம்நகரிலும் காய்கறித்தோட்டம், வாழை, முருங்கை, மஞ்சள் போட்டோம் என்றாலும் ராஜஸ்தான் அளவுக்குச் செழிப்பெல்லாம் இல்லை. ஏதோ ஓடியது. நம்ம ரங்க்ஸுக்கு மாதத்தில் பதினைந்து நாட்கள் கட்சில் புஜ்ஜுக்குப் போகணும் ஆடிட்டிற்கு. சமயங்களில் எல்லையோரங்களுக்கெல்லாம் போக வேண்டி இருக்கும். அப்போத் தொட்ர்பு கொள்ள முடியாது. எங்கே இருக்கார்னே தெரியாது.  எந்த யூனிட்டிற்குப் போயிருக்கார் என்பதெல்லாம் கூட ரகசியமா இருக்கும். அலுவலகம் மூலமாகத் தகவல்கள் முக்கியமானது இருந்தால் கொடுப்போம். இங்கே ஜாம்நகரில் நாங்க மூணு பேரும் மாமியாரும் தான். நடந்தே போய்க் காய்கறிச் சந்தையில் காய்கள், பழங்கள் வாங்குவேன். பேரிச்சைப் பருவத்தில் கொத்துக் கொத்தாகப் பேரிச்சம்பழங்கள் செக்கச் செவேல்னு வரும். வாங்கிக் காய வைச்சுப்போம். காலிஃப்ளவர் எல்லாம் பெரிது பெரிதாக, ஒரு கத்திரிக்காய் ஒரு கிலோவுக்குக் குறையாமல் இருக்கும். அதிலே பைங்கன் பர்த்தா பண்ணினால் நாலைந்து பேர் சாப்பிடலாம். ஆகவே நடுத்தர அளவுக் கத்திரியாகப் பார்த்து வாங்குவேன், வெண்டைக்காய்க் குட்டிக் குஞ்சுலுவின் விரல் அளவுக்கு அளந்து வைத்தால் போல் கிடைக்கும், அப்படியே வாங்கிக் கொண்டு வந்து அலம்பிக் காய வைச்சுட்டு நடுவில் கீறிக் காரப்பொடி கலந்த மசாலாவை அடைச்சுட்டு முழுதாகப் போட்டு வதக்குவோம். இப்போ வெண்டைக்காயே வாங்குவதில்லை. முத்தலாக இருக்கு.


முடிஞ்சால் மலரும் நினைவுகள் தொடரலாம்.