எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, January 02, 2007

177. ஓங்கார தத்துவம்

"ஓம்" என்னும் ஓங்கார தத்துவம் பத்தி நான் புதுசா ஒண்ணும் சொல்லப் போறதில்லை. சும்மா ஏற்கெனவே இருக்கிற விஷயத்தை நினைவுக்குத் தான் கொண்டு வரப் போறேன். இந்தப் பிரபஞ்சம் பூராவுமே "ஓம்" என்ற ஒலியினால் வியாபித்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். இது அழிவற்றது என்பார்கள். எங்கும் வியாபித்திருப்பதால் இதைத் தான் "பிரம்மம்" என்று சொல்வதாயும் எடுத்துக் கொள்ளலாம். "ஓம், பூர், புவர், சுவர்" என்று கூறப்படும் பூலோகம், புவனலோகம், சுவர்கலோகம் இந்த மூன்றும் இந்த ஓங்காரத்தினுள் அடங்கியது என்பது தத்துவம். இது பிரிக்க முடியாதது. சாட்சாத அந்த வாஸுதேவனின் ஸ்வரூபம் இந்த ஓங்காரம் என்பார்கள். இது "அகார, உகார, மகார" எழுத்தைக் கொண்டு அ+உ+ம்=ஓம் என்று கூறப்படுகிறது என்பதையும் நாம் அறிவோம். இது வேத மயமானது. இதில் இருந்து தான் 4 வேதங்களும் வந்ததாயும் கூறுவார்கள்.

இந்த "அகாரம்" என்பது பிரம்மாவையும், "உகாரம்" திருமாலையும், "மகாரம்" ருத்திரரையும் குறிக்கும். முறையே படைத்துக் காத்து அழித்தல் ஆகிய மூன்று தொழில்களையும் குறிக்கிறது. "நாத பிந்து கலாதி" என்பதில் உள்ள நாதமானது அகாரம் ஆகும். பிந்து உகாரத்தைக் குறிக்கும். கலை அதாவது கலாதி என்பது மகாரம் ஆகும். அதாவது அகாரம் "கிரியா" சக்தியாகவும், உகாரம் "இச்சா" சக்தியாகவும், மகாரம் "ஞானசக்தி"யாகவும் இருக்கிறது. நம்முள் இருக்கும் உணர்வுகளைத் தூண்டிவிடும் சக்தி இந்த "ஓம்" என்னும் சொல்லுக்கு இருக்கிறது. அடிவயிற்றில் இருந்து ஓங்கார நாதம் எழுப்பி "ஓம்" என்று கூறினோமானால் இதை நாமே நன்கு உணர்கிறோம். அதனால் தான் தெய்வத்தின் நாமங்கள் எல்லாம் "ஓம்" என்ற சொல்லுடனேயே தொடங்குகிறது. இதை நாம் இடைவிடாமல் உச்சரித்தால் நமக்குள் உள்ளே உறையும் அந்த அருட்பேரொளியையும் உணர்வோம்.

14 comments:

  1. நன்றியம்மா....

    ReplyDelete
  2. மதுரையம்பதி,
    ம்ம்ம்ம், ஓங்கார ரகசியத்தை விட உங்க ப்ளாக்கோட ரகசியம் மண்டையை உடைக்குதே. தினம் வந்து பார்க்கிறேன். PERMISSION DENIEDஅப்படின்னே வருது. பார்க்கலாம், இன்னும் எத்தனை நாளுக்கு இப்படியே வச்சிருக்கப் போறீங்கன்னு! :D

    ReplyDelete
  3. பிரணவ மந்திரத்தை சுவாமி நாதன் தன் தகப்பனுக்கு உபதேசம் செய்ததைப் போல் எளிமையாக விளக்கியுள்ளீர்கள்.பாரதியாரும் சொல்லுவார் ஓம் ஓம் என்று உரைத்தது வேதம்(ப.ச)
    எனக்கு உகார மகார அகாரம் தெரியும்

    ReplyDelete
  4. "ஆமேன்"ம் இவ்வாறேனு நினைக்கிறேன்.


    நாத பிந்து கலாதி .. இது என்னனு தெரியலீயே எனக்கு?

    ReplyDelete
  5. தி.ரா.ச. சார், ஒருவழியா உங்க சிஷ்யன் உங்களை அனுமதிச்சுட்டார் போல் இருக்கு. ரொம்ப நன்றி வந்ததுக்கும் கருத்துத் தெரிவிச்சதுக்கும், அது சரி, அம்பி இன்னுமா தங்கமணிக்கு see off கொடுத்துட்டு வரலை? கூடவே போயிட்டாரா?

    ReplyDelete
  6. மணி ப்ரகாஷ்,
    நம்ம மனசிலே உள்ள இச்சை அதாவது ஆசையைக் குறிக்கிறது பிந்து என்பது. அதைத் தூண்டும் காரியம் கிரியா சக்தி என்பார்கள் என்பதே நாதம் என்பது. எல்லாம் கடந்து ஞானத்தைப் பெறும் மோனத்தை உணர்வதே கலை என்று சொல்லப் படும் ஞான சக்தி. எனக்குத் தெரிஞ்சவரை சற்று எளிமையாக விளக்கி உள்ளேன். பொதுவான அர்த்தம் ஆசைகளை வென்று ஞானத்தை அடைய வேண்டும் என்பது தான். அதான் "நாத பிந்து கலாதி" என்று சொல்லி விட்டுப் பின் "நமோ நமோ" என்று பரம்பொருளை அடையும் வழியை வரிசைப் படுத்தி உள்ளார்கள் என நினைக்கிறேன். இதற்கு மேல் என்றால் கண்ணபிரான் KRS. அல்லது குமரன் போன்றவர்கள் தான் வந்து சொல்ல வேண்டும். வந்து சொன்னால் நானும் தெரிந்து கொள்வேன். நடக்காத ஆசைதான், இருந்தாலும் எதிர்பார்ப்புன்னு ஒண்ணு இருக்கே, இதான், இதான் ஆசை என்பது. இதைத் தான் விடச் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்த வரை ஆசை அற்ற நிலை என்பதே ஒரு ஆசை தான் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  7. அப்பாடி, ஒருவழியாக அக்ஞாத வாசம் முடித்து விட்டு வந்தாச்சா? ரொம்ப நன்றி, வேதா(ள்)

    ReplyDelete
  8. //ஓங்கார ரகசியத்தை விட உங்க ப்ளாக்கோட ரகசியம் மண்டையை உடைக்குதே. தினம் வந்து பார்க்கிறேன். PERMISSION DENIEDஅப்படின்னே வருது. பார்க்கலாம், இன்னும் எத்தனை நாளுக்கு இப்படியே வச்சிருக்கப் போறீங்கன்னு!//

    அங்க ஒண்ணுமே இல்லம்மா, அதனாலதான் லாக் பண்ணி வைத்திருக்கிறேன்......ஏதாவது எழுதினாத்தானே பதிவிட. ஏதோ சத்சங்கத்தில் கொஞ்சம் காதால கேட்டுக்கொள்கிறேன்.....

    ReplyDelete
  9. //எனக்குத் தெரிஞ்சவரை சற்று எளிமையாக விளக்கி உள்ளேன்//

    ஆகா அருமையாக புரிந்தது.மிகவும் நன்றி மேடம்.

    சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள ஆசையுறுகிறேன்..(இங்கயும் ஆசை...)

    அனைத்திற்கும் ஆசையுறுனு சில ஞானிகள் சொல்ல கேள்விபட்டு இருக்கேன்..

    ஆசையுறாமல் எதுவும் நடக்காது என்றே நினைக்கிறேன்..

    அப்புறம் ஒசோ சொன்னதும் நியாபகத்திற்கு வந்தது..

    பற்றற்று இருத்தல் .. அதுவே வாழ்க்கைனு...

    இப்படி எல்லாரும் ஒவ்வோன்றை சொல்லிடுராங்க..நாம் என்ன பன்றது...

    ReplyDelete
  10. ஆசைப்படாதே என்பதே ஒரு ஆசை என்பது எனக்கும் தோன்றும். இப்போ ஜக்கி வாசுதேவும் அதைக் கூறுகிறார். அதான் நீங்க சொல்றீங்கன்னு நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை எல்லாத்தையும் படிச்சுப்பேன், இந்த மாதிரிப் பதில்களுக்கு வேணுமானால் உபயோகம் ஆகும்.ஆனால் என்னோட அனுபவத்தில் இறைவன் அருளை விடச் சிறந்தது, நம்மோட வருவது எதுவும் இல்லை. அதிலிருந்து மாறாமல் இருந்தாலே போதுமானது என்று பிரார்த்தித்துக் கொள்வேன்.

    ReplyDelete
  11. ஓங்காரமாய் விளங்கும் நாதம் - அந்த
    ரீங்காரமே இந்த கீதம்
    ஆங்கார உள்ளமே அமைதியும் பெறுமே
    நீங்காத துயர் மாறி நிம்மதி பெருமே

    - தங்கள் எழுத்துக்கள் அனைத்தும் அருமை. பல விஷயங்களை விளங்க வைக்கிறீர்கள்.

    தொடர்க..

    அன்புடன்
    ஆகிரா

    ReplyDelete
  12. மூலதாரம் என்பதன் பொருள் யாருக்கும் சரியாக தெரியவில்லை..நாதத்தின் ஒலியை யாரும் இதுவரைக்கும் கண்டுபிடித்தது இல்லை சித்தர்களும் சரி ரிஷிகளும் சரி.

    ReplyDelete
  13. மூலதாரம் என்பதன் பொருள் யாருக்கும் சரியாக தெரியவில்லை..நாதத்தின் ஒலியை யாரும் இதுவரைக்கும் கண்டுபிடித்தது இல்லை சித்தர்களும் சரி ரிஷிகளும் சரி.

    ReplyDelete