எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, January 23, 2007

ஜெய்ஹிந்த்

இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த நாள். இந்த நாடு மறந்து போன தலைவர்களுள் மிகவும் முக்கியமானவர். இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்ட இவர் முதலில் காங்கிரஸ் மஹா இயக்கத்தில் தான் இருந்தார். இவரின் வேகமும், துடிதுடிப்பும் இவரை மிக உயர்ந்த நிலைக்கும், முக்கியமானவராகவும் மாற்றியது. இவரின் தீவிரமான கொள்கைகளில் பற்றுக் கொண்ட மக்களும், தலைவர்களும் நிறைய இருந்தார்கள். காந்தியின் மிதவாதக் கொள்கையை இவர் ஏற்கவில்லை. இருந்தாலும் காங்கிரஸில் தொடர்ந்து பணியாற்றிய இவர்,
"இந்திய தேசியக் காங்கிரஸின்" தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அப்போது காந்தி ஆதரித்தது பட்டாபி சீதா ராம ஐயா அவர்களை என்று நினைக்கிறேன். அதையும் மீறி உடல் நலம் குன்றிய நிலையிலும் போட்டி இட்டு வாகை சூடிய இவரின் வெற்றியை காந்தி அவர்கள் அங்கீகரிக்கவில்லை. மாறாக "பட்டாபி சீதாராம ஐயாவின் தோல்வி, நானே தோற்றது போல்" என்று சொன்னார். ஆகவே இவர் காங்கிரஸில் இருந்து அதன் பின் விலகித் தனியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார். இவர் தொடங்கிய் "இந்திய விடுதலைப் படை" இயக்கத்திற்கு முன்னுதாரணமாய்த் திகழ்ந்தது கன்னியாகுமரியைச் சேர்ந்த தியாகி செண்பகராமனின் INDIAN NATIONALS VOLUNTEERS CODE என்னும் அமைப்புத் தான் என்றும் சொல்வார்கள்.

திரு செண்பகராமன் ஜெர்மனியில் இருந்த போது அவர் வீட்டில்தான் சுபாஷ் சந்திர போஸ் தங்கி இருந்தார் என்றும் சொல்வார்கள். இவரின் இந்திய தேசியப் படை பர்மா வழியாக டெல்லிக்கு (2-ம் உலகப் போர் சமயம்) வந்து கொண்டிருந்த சமயம் திடீரென இவர் மறைவினால் ஏற்பட்ட குழப்பம் படையை முன்னின்று நடத்த யாருமே இல்லாத காரணத்தாலும் திடீரென ஏற்பட்ட அதிர்ச்சியால் என்ன செய்வது என்ற தடுமாற்றத்தாலும் நிலை குலைந்து போயிற்று. இன்றளவும் இவர் மறைந்தது பற்றிய சர்ச்சைகள் இருந்தாலும் இவரின் சுதந்திரப் போராட்டப் போர் மறக்கப் பட்டு விட்டது அல்லது மறைக்கப் பட்டு விட்டது. மற்ற விடுதலைப் போராட்ட வீரர்கள் வரலாற்றில் இடம் பெற்ற அளவு இவரோ, பகத்சிங்கோ, செண்பகராமனோ, பம்பாயில் இருந்த "ராயல் இந்தியக் கப்பற்படை" வீரர்களோ சேர்க்கப் படவும் இல்லை. நினைக்கப் படுவதும் இல்லை. மிகச் சிறந்த தேசீய வாதியான இவரை இன்று சிறிது நேரமாவது நினைப்பதின் மூலம் நாம் அவருக்குச் சிறந்த அஞ்சலி செய்வோமாக!

வந்தே மாதரம்! ஜெய்ஹிந்த்!

9 comments:

  1. Another good post after a long gap! :p

    வந்தே மாதரம்! ஜெய்ஹிந்த்!

    @To all, *ahem, so, gandhi kaalathulenthu geetha maami vayasu 16 thaan! illaya..? :D

    ReplyDelete
  2. அம்பி, தங்கமணி ஒரு வழியா தொல்லை பேசியிலே இருந்து விட்டாங்களா? நீங்க என்ன சொல்றீங்க? நான் காந்தி காலத்துலே இருந்தேன்னா? கடவுளே அப்படின்னா நான் நூற்றாண்டு கடந்த ரிஷிபத்தினியா? முக்காலமும் உணர்ந்த ஞானின்னா சொல்றீங்க? ஹையா, ஜாலி!

    நேதாஜியை யாருமே நினைவு வச்சுக்கலைன்னு வருத்தமா இருந்தது. குறைந்த பட்சம் என்னோட பதிவுக்கு வந்து பார்க்கவாவது உங்களுக்கு நேரம் இருந்ததே, நன்றி. உங்களோட பின்னூட்டத்துக்கு.

    ReplyDelete
  3. பொதிகைக்குப் பாராட்டுத் தெரிவிச்சு எழுதி இருக்கேனே, அதெல்லாம் நல்ல பதிவாக் கண்ணிலே படலையா? இல்லாட்டித் தங்கமணி நினைப்புலே பார்க்க நேரமில்லையா? எல்லாமே நல்ல பதிவுகள்தான் எழுதறேன், உங்களை மாதிரிப் பஞ்சாப் குதிரையப் பத்தியா எழுதறேன்? இருங்க, தங்கமணி கிட்டே இன்னும் கொஞ்சம் அதிகமாச் சொல்லிப் போட்டுக் கொடுக்கறேன்.

    ReplyDelete
  4. ஹிஹிஹி, கமெண்ட் ரேட் நானே ஏத்திக்கும்படியா இருக்கு, தொண்டர் படைக்கு என்ன ஆச்சு? 2 நாளா கண்ணிலே காணாம ஒளிஞ்சுட்டு இருக்காங்க!

    ReplyDelete
  5. உண்மை,சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கு வரலாற்றில் முக்கியத்துவம் தரவில்லை.அப்போதே அரசியல் புகுந்து விளையாடி இருக்கு.மனதளவில் தீண்டாமையை அழிக்க போரடவில்லை நம் தலைவர்கள்.அருமையாக கருத்துக்கள் சொல்லி இருக்கீங்க மாமி.நன்றி.நான் தினமும் வந்து படிக்கிறேன்.ஆனால் வேறு வளைத்தளம் மூலம் வருவதால் பின்னோட்டம் போட முடியவில்லை.மன்னிக்கவும்.--SKM

    ReplyDelete
  6. வாங்க எஸ்.கே.எம். மறுபடி யாஹூவிலே பிரசனை. ஆனால் எனக்கு மட்டும் இல்லையாம். இங்கே இன்னும் சிலருக்கு மெயில் போக மாட்டேங்குதாம். பார்க்கலாம்.
    நேதாஜி பத்தின உங்க கமெண்ட்டுக்கு ரொம்பவே நன்றி. உண்மையில் இம்மாதிரி நிறையத் தலைவர்களை நாம் மறந்து தான் விட்டோம்.

    ReplyDelete
  7. பதிவ படிக்கும்போதுதான் நியாபகத்திற்கே வருகிறது.. சே, எப்படி மறந்து போனேன்.. நான் மறந்து போனதிற்காய் வெட்க படுகிறேன்..

    போராட்டவீரர்களிலே எனக்கு மிகவும் பிடித்த தலைவர் நேதாஜி. வீட்டிலே எல்லா தலைவர்களொட போட்டா இருந்தாலும் நேதாஜி படத்துக்கு மட்டும் தனி மரியாதை.. அந்த INA உடையில் அந்த தொப்பி,
    கண்ணாடி ... வாவ்..



    தலைவி அவர்களே, உங்களுக்கு நன்றி.. நினைவுறுத்தியதற்கு..

    தலைவிக்குரிய பணியினை சிறப்பாக செய்து வருகிறீர்கள்.. வாழ்த்துகள்

    ஜெய்ஹிந்த்!!!

    ReplyDelete
  8. நானும் நேற்றிலிருந்து பின்னுட்டம் போட்டரனும் டிரை பன்னிக்கிட்டே இருந்தேன்..இந்த கூகிள் சதி செஞ்சு போட விட மாட்டேன்கிறது..விடுவான இந்த தொண்டன்.. வெற்றி,,வெற்றி..வெற்றி...

    ReplyDelete
  9. ஏன் எனக்கு மட்டும் வருகை பதிவு போடவில்லை??????????

    ReplyDelete