எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, May 16, 2007

போஸை விடறதில்லை!

சோவியத் யூனியன் உடைந்து ரஷ்யா ஆகிவிட்டது. வருஷம் 1993-ம் ஆண்டு. இந்தியாவின் பிரதமராக திரு பி.வி.நரசிம்மராவ் இருந்த நேரம். அப்போது திடீரென உடைந்த சோவியத் யூனியனின் தலைமை உளவு அமைப்பாக இருந்து வந்த கேஜிபியின் சில ரகசிய ஆவணக் குறிப்புக்கள் வெளி வருகிறது. அதில் போஸ் பற்றிய செய்திகள் வெளிவருகின்றன. நரசிம்மராவ் அரசு ஆடிப் போனது. செய்தி வெளியில் நன்கு பரவி அனைவரும் கேள்விகள் கேட்கும் முன்னேயே அப்போதைய ரஷ்யத் தூதுவராக இருந்த திரு ரானேன் சென் என்பவர் தன்னுடைய தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தத் தகவல்களை வெளியிட்ட ஓரியன்டல் இன்ஸ்டிட்யூட், மாஸ்கோவை அந்தச் செய்தியை முற்றிலுமாக வெளியிடுவதில் இருந்து தடுக்கிறார். இந்தியன் எம்பஸியின் அலுவலரான அஜய் மல்ஹோத்ரா, ஓரியன்டல் இன்ஸ்டிட்யூடைச் சேர்ந்த பதிப்பகத்தின் துணை ஆசிரியரைச் சந்திக்கிறார். செய்தி பரவாமல் தடுக்கிறார். என்றாலும் முதலில் வெளிவந்த செய்திகளைத் திரும்பப் பெற முடியவில்லை.

மேற்கொண்டு செய்திகள் வராமல் அவரால் தடுக்க முடிந்தது. என்றாலும் ஆசியா-ஆஃப்ரிக்கா -டுடே என்னும் செய்தித்தாளின் 8,9,10 ஆகிய எண்கள் இட்ட செய்தித்தாள்களில் வெளிவந்த செய்திகளில் போஸின் மறைவு பற்றிய உறுதியான உண்மைகள் இருப்பதாய்க் கூறப் பட்டிருக்கிறது. வார்சா பாக்ட்டின் முக்கிய அங்கத்தினராய் இருந்த மேஜர் ஜெனரல் க்லெஷ்னிகோவ் 1946-ல் நேதாஜி சோவியத் யூனியனில் இருந்ததாய்க் கூறுகிறார், நிச்சயமான ஒன்றாக. மறைந்த ஃபார்வார்டு ப்ளாக் அங்கத்தினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு சித்தா போஸ் சோவியத் யூனியன் சென்றபோது அவரிடம் சில ஆவணங்களை போஸே நேரில் கொடுக்க நேர்ந்ததாயும் போஸ் இருந்த நிலையைப் பற்றி அவர் அதிர்ச்சி அடைந்ததாயும் குறிப்பிடுகிறார். ஜோசஃப் ஸ்டாலின், மோலோடோவ், வெஷென்ஸ்கி மூவரும் கூடி போஸ் விஷயத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவாதித்ததாகவும். அதைக் குறிப்பிடும் ஆவணம் ஒன்றையும் தான் பார்த்ததாகவும் அந்த மேஜர் க்லெஷ்னிகோவ் கூறுகிறார். சமீபத்தில் இந்திய அரசால் நியமிக்கப் பட்ட முகர்ஜி கமிஷனின் விசாரணைக்கு இவர் அழைக்கப் பட்டார். ஆனால் இவர் கமிஷன் முன் ஆஜராகவில்லை. ரஷ்ய அரசு இவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்று சொல்லிவிட்டதோடல்லாமல் தன் தரப்பில் தெளிவான ஆவணங்களையும் கொடுக்கவில்லை. தற்சமயம் இவர் ரஷ்ய அரசின் வெளி உறவு அமைச்சரகத்தின் சார்பில் துருக்கியில் ரஷ்ய தூதரகத்தில் முக்கியமான பதவியில் இருப்பதாக ரஷ்ய அரசின் அதிகார பூர்வச் செய்திக் குறிப்புக் கூறுகிறது.

10 comments:

  1. innum vendum..nan appruma vanthu commenturen..

    //இருந்து வந்த கேஜிபியின் சில ரகசிய ஆவணக் குறிப்புக்கள் வெளி வருகிறது//

    enna vanthathunu sonna nalla irukkum.

    ReplyDelete
  2. வாங்க மணிப்ரகாஷ், பொதுவாச் சரித்திரப் பாடம் யாருக்குமே பிடிக்கிறதில்லை! அதனால் கேட்டேன். அப்புறம் நீங்க கேட்ட மாதிரி என்ன சொன்னாங்கன்னு எனக்கும் எழுத ஆசை தான். ஆனால் நாம் இருக்கிறது இந்தியாவிலே ஆச்சே? அதான் ரொம்பத் தோண்ட வேண்டாம்னு இருக்கேன். :D

    ReplyDelete
  3. போஸைப் பத்தி இன்னும் என்ன தெரியணும் மணிப்ரகாஷ்?

    ReplyDelete
  4. Excellent Madam. Thank you so much again.

    Can you give us some pointers, link or references for that news which got published?

    ReplyDelete
  5. தினம் வந்து படிக்க/கமண்ட இயலாவிட்டாலும், போஸ் பற்றிய இந்த பதிவுத்தொடர் மிக அருமை.

    தற்போதும் உயிரோடு துருக்கியில் இருக்கும் இந்த நபரைக் கொண்டாவது போஸின் கடைசி வருடங்களை அறிந்து ஆவணப்படுத்த தற்போதைய அரசாவது முன்வர வேண்டும். பார்வேர்ட் பிளாக் கட்சியாவது இந்த முயற்சியினை மேற்க்கொள்ளுமா?

    ReplyDelete
  6. லிங்க்கைக் குறிச்சு வச்சுக்கலை. "மிஷன் நேதாஜி"யில் இருந்து தான் எடுத்தேன். இன்னிக்குப் போய்ப் பார்க்க முடிந்தால் லிங்கைக் குறிப்பிடுகிறேன், சத்யா! ரொம்பவே நன்றி.

    @வேதா வாங்க, வாங்க ரொம்ப நாள் கழிச்சு எட்டிப் பார்த்திருக்கீங்க! கல்யாணம எல்லாம் முடிஞ்சதா? அடுத்து உங்க கலயாண சாப்பாட்டுக்காவது இந்திய வந்துடுவேன்னு நம்பறேன்.

    @மதுரையம்பதி, வாங்க, எல்லாருக்கும் ஆணி பிடுங்கற வேலை அதிகம்னு புரியுது. இங்கேயும் அப்படித்தான் இருக்கு. நிறைய ஆணி பிடுங்கப்படாமல் இருக்கு. அதுக்கு எல்லாம் பதில் சொல்லணும். நீங்க வந்த வரை நன்றி.

    ReplyDelete
  7. கொஞ்சம் பரபரப்போடு தான் இந்த பதிவைப் படித்தேன்.. கடைசியில், முழுதான உண்மைகள் வெளிவரவில்லை என்று சொல்லி இன்னும் அந்த பரபரப்பு நெஞ்சோடு..

    சற்று ஆணிகள் குறைவு.. அடிக்கடி இனிமேல் வருவேங்க மேடம்,

    ReplyDelete
  8. பழைய பதிவுகளையும் படித்தேங்க மேடம்

    ReplyDelete
  9. aajar! bose e nerla vandhu ennai vutrunga thaayi nu kadharanum unga kitta! adhu varai podhaadhu nu than solvom :D

    ReplyDelete
  10. வாங்க கார்த்திக், ரொம்பவே பிசி போல இருக்கெ! ஒரே மீள் பதிவா போட்டுட்டு இருந்தீங்களே!

    அம்மா, போர்க்கொடி, அதெல்லாம் ஒண்ணும் நடக்காது என் கிட்டே! ஜாக்கிரதை!

    ReplyDelete