எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, May 21, 2007

தலைப்பு உங்க இஷ்டம்!

இரண்டு பதிவுமாச் சேர்ந்து 370 ஆகி இருக்கிறது. இதிலே ஆன்மீகப் பயணம் பதிவிலே திருப்பி 2-ம் முறையாக வந்தது ஒரு 30 கழிச்சா மொத்தப் பதிவுகள் 340-க்குக் கிட்டத் தட்ட இருக்கும். எண்ணங்கள் பதிவு 287 வந்திருக்கு. இன்னும் 13 இருக்கு 300 தொட. அதுக்குள்ளே குழந்தைக்குப் பிறந்த நாள் வேறே வந்துடுச்சு. ஹிஹிஹி, குழந்தை வேறே யாரும் இல்லை. இந்தப் போர்க்கொடி என்னோட பிறந்த தினத்தைத் தப்புத் தப்பா எல்லார் கிட்டேயும் சொல்லி வச்சிருக்கு. நறநறநற. சும்மா பாலக் பனீர், பனீர் பரோட்டானு ஏதோ 2 ஐடெம் பேரு தெரிஞ்சு வச்சுக்கிட்டு எல்லார் கிட்டேயும் ஒரே ஆட்டம். எல்லாம் தெரிஞ்சாப்பல. அது சும்மானு எனக்கு நல்லாத் தெரியும். ஏமாறவே இல்லையே! பாவம் போர்க்கொடியோட ரங்கமணி.

போன வருஷம் என்னோட பிறந்த நாளுக்கு அதியமான் வ.வா.சங்கத்திலே பதிவு போட்டு அனைவருக்கும் போட்டியும், பரிசும் அறிவித்தார். போட்டி என்னனு நான் சொல்ல வேண்டாமே? ஹிஹி, வழக்கம் போல் எனக்கு என்ன வயசுன்னு தான் போட்டி. யாருமே ஜெயிக்கலையா? பரிசுக்கு வச்சிருந்த பல்லி மிட்டாயை அவரே தின்னுட்டார். என் கண்ணிலே கூடக் காட்டலை. போகுது போனு விட்டுட்டேன். பல்லி மிட்டாய் யாருக்கு வேணும்? இந்த வருஷம் அவர் வலை உலகிலேயே இல்லை. கல்யாணம் நிச்சயம் ஆகிட்ட குஷியிலே தலை எது, கால் எதுனு தெரியாம இருக்கார். பொண்ணு எங்க ஊருங்கிறதாலே அதுக்கும் போனாப் போகுதுனு தான் விடணும். தவிர, ஆரம்ப காலத்திலே இருந்து என்னோட பதிவையும், எனக்குத் தமிழ் அறிவு ஜாஸ்தின்னும் (ஹிஹிஹி, அவர் தான் நம்பிட்டு இருக்கார், நான் என்ன செய்யறது சொல்லுங்க?) என்னைப் புகழ்ந்துட்டு இருக்கிற ஒரே மனிதர். எனக்கு என்னமோ விஷய ஞானம் ரொம்ப இருக்குன்னும் நினைச்சுட்டு இருக்கார். தலை எழுத்து, எனக்கில்லை அவருக்குத் தான். இப்படி அப்பாவியா இருக்கிறாரே! இரண்டு பேரும் இன்னும் சந்திக்கலை. அதனால் அவர் கோப்பெருஞ்சோழன், நான் பிசிராந்தையார். யாரைச் சொல்றேன்னு புரியும்னு நம்பறேன். நம்ம கைப்புள்ளயத் தான். கல்யாணம் நிச்சயம் ஆகும் முன்னேயே வலை உலகத்தில் இருந்து திடீர்னு காணாமல் போயிட்டாரேன்னு நினைச்சா, மாசக்கணக்காத் தேடிப் பொண்ணைக் "கண்டு கொண்டேன்"னு வந்து சொல்றார். நல்லா இருக்கட்டும். கல்யாணம் தான் கலந்துக்கவே முடியாது.

என்ன என்னோட பிறந்த நாளைப் பத்தி எழுதப் போறேன்னு சொல்லிட்டு அதைக் குறிப்பிடலைன்னு பார்க்கறீங்களா? கைப்புள்ள கல்யாணப்பத்திரிகை அனுப்பிச்சதிலே இருந்து எழுத நினைச்சது. இன்னிக்குத் தான் நேரம் கிடைச்சது. அப்புறம் என்னோட பிறந்த நாள் பத்தி: 22-ம் தேதி தான் என்னோட பிறந்த நாள். போர்க்கொடி பேச்சை கேட்டு 24-ம் தேதினு நம்பினவங்க எல்லாம் ஏமாந்து போயிட்டீங்க. அதெல்லாம் ஒரு 2 நாள் கூட வயசைக் குறைச்சுச் சொல்லிக்கிற டைப்பே இல்லை நானுனு இதிலே இருந்து தெரிஞ்சிருக்குமே!

30 comments:

  1. ஹிஹிஹி, வழக்கம்போல முதல் ஸ்வீட் எனக்குத் தான். ப்ளாக்கர் இந்த லேபலையும் ஏத்துக்கிட்டதே! :D

    ReplyDelete
  2. தலைவி,

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. :)

    ReplyDelete
  3. அட ராயல், இன்னுமா தூங்கப் போகலை? அவ்வளவு ஆணியா? ரஞ்சனியாமே யாரோ அந்த நினைப்பா? :P

    ReplyDelete
  4. கீதா சாம்பசிவம் said...
    அட ராயல், இன்னுமா தூங்கப் போகலை? அவ்வளவு ஆணியா? ரஞ்சனியாமே யாரோ அந்த நினைப்பா? :P
    ///


    ஆசையா வாழ்த்து சொன்ன
    பச்சை மண்ன நீங்களும் கலாய்க்கனுமா...:)

    ReplyDelete
  5. தங்கள் வயது போன வருடம் 15 என்று சொன்னீர்கள் ஆகவே தங்கள் வயது இந்த வருடம் 14தான்.
    மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் தி டே :-)))

    ReplyDelete
  6. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்!! :))

    ReplyDelete
  7. பிறந்த நாளா? சிங்கையில் இருந்தா ஒரு ட்ரீட் கொடுக்கலாம்.
    குடும்பத்துடன் குதூகலமாக கொண்டாடுங்க.

    ReplyDelete
  8. மின்னல், வெட்டிக்கு ஒரு சு(ம்)மா மாதிரி ராயலுக்கு ஒரு ரஞ்சனி! உங்களுக்கு? மோகினியா? தெரிஞ்சால் உங்களையும் கலாய்க்கலாமே! :P

    ReplyDelete
  9. அட லதா, கரெக்டா வந்துட்டீங்க? ஆனால் என்னோட சங்கிலிப் பதிவை மட்டும் போடவே இல்லை! அப்புறம் ஹிஹிஹி நீங்க சொல்றது சரிதான், எனக்குத் தான் வயசு குறைஞ்சுட்டே போகுமே! :))))))))))))))

    ReplyDelete
  10. இ.கொ. ரொம்பவே நன்றி, உங்களோட வாழ்த்துக்களுக்கு.

    @வடுவூர், என்ன போங்க, முன்னேயே ஒரு ஹின்ட் கொடுத்திருந்தா சிங்கப்பூர் வந்திருப்பேன். நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டேனே! பரவாயில்லை, சிங்கப்பூர் டாலரிலே அனுப்பிச்சுடுங்க, இங்கே பார்த்துக்கறேன். :P

    ReplyDelete
  11. //இ.கொ. ரொம்பவே நன்றி, உங்களோட வாழ்த்துக்களுக்கு.//

    வாழ்த்தா? நான் வாழ்த்த வயதில்லைன்னு வணங்க இல்ல செஞ்சேன்... :))

    ReplyDelete
  12. யாரு அங்கே அ.வ.சி? ஹிஹிஹி, அது நானில்லைங்க. விட மாட்டீங்களே! விடு ஜூட், நான் வரலை இந்த ஆட்டத்துக்கு. அழுகுணி ஆட்டம். :P

    ReplyDelete
  13. மேடம், பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    தலைவியின் பிறந்த தினத்தை முன்னீட்டு சென்னை, பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களில் ரத்ததான முகாமும், எல்லா பாடல்/புகழ் பெற்ற கோவில்களிலும் அர்ச்சனையும் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ReplyDelete
  14. அட, மதுரையம்பதி, மண்சோறையும், அலகு குத்திக் காவடி இழுக்கறதையும் விட்டுட்டீங்களே! :))))))))

    @வேதா, ஆளைக் காணோமே! அங்கே எல்லாம் அறிவிக்கப் படாத மின்வெட்டுன்னு சொல்லிக்கறாங்களே! அதனாலா?

    ReplyDelete
  15. கீதாம்மாவுக்கு வாழ்த்துக்கள் & வணக்கங்கள்

    அன்புடன்

    அபிஅப்பா, அபிஅம்மா&அபிபாப்பா

    ReplyDelete
  16. கீதாஜி, பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!!!!

    ReplyDelete
  17. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    300வது பதிவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் புக்கிங்!

    ReplyDelete
  18. முப்பத்தி ஆறு முடிஞ்சு முப்பத்தி ஏழு போடுவதுக்குள்ள மூச்சு வாங்குது, இங்கிட்டு 300 வர போகுதா சூப்பர்(ஆஹா இப்போ ஒரு பதிவு போட்ட விஷயத்த சொல்லியாச்சு-பெரம்பட் வாங்க ரெடியாகனும்):-))

    ReplyDelete
  19. தலைவிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;)))


    (அபி அப்பா சாரி)

    ReplyDelete
  20. //வழக்கம் போல "வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் :D " //

    repatteeeeeeeeeeeey! :-) naan innum porakkave illai, paavam adhukula ivlo velai tharinga wish panna solli!

    ReplyDelete
  21. அபி அப்பா, வாழ்த்துக்களுக்கு நன்றி. அபி அம்மா, அபி பாப்பாவுக்கும், அது சரி டைகரை ஏன் விட்டுடறீங்க ஒவ்வொரு முறையும்? இங்கே கூட கடிக்குமோ? :P
    கவிதா, வாழ்த்துக்களுக்கு நன்றி

    வாங்க ஹரிஹரன், வாழ்த்துக்களுக்கும் அட்வான்ஸ் புக்கிங்குக்கும் நன்றி.

    @அபி அப்பா, இந்தப் "பெரம்படி" கூடவா தப்பா எழுதணும்? நறநறநற

    ReplyDelete
  22. @கோபிநாத், ஏன் அபி அப்பாவுக்கு சாரி சொல்றீங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன். ஹிஹிஹி, நீங்க தான் உண்மைத் தொண்டர்.

    @ஹாட் காட், என்னமோ போங்க, இந்தப் பேரைச் சொல்லிக் கூப்பிடும்போதெல்லாம் கையெல்லாம் சுடுது.:P வாழ்த்துக்களுக்கு நன்றி.

    @யம்மா, போர்க்கொடி, நாளைக்குத் தான் உங்க பிறந்த நாள், ஒரு நாள் தான் நான் பெரியவள், தெரியுதா? ஹிஹிஹி, அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. //கோபிநாத் said...
    தலைவிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;)))


    (அபி அப்பா சாரி) //

    இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? கோபி கிளம்பி ஏர்போர்ட் போன பின்ன எனக்கு போன் பண்ணினான். அப்ப நான் "இன்னிக்கு கீதாம்மாவுக்கு பர்த் டே"ன்னு சொன்னேன். அதுக்கு கோபி"ஆஹா இங்க ஏர்போர்ட் வந்துட்டேனே, எனக்காக நீங்க நான் ஆசீர்வாதம் கேட்டேன்ன்னு சொல்லி பின்னூட்டம் போடுங்க"ன்னு சொன்னான். நானும்"சர் நாளைக்கு போடுகிறேன்"ன்னு சொன்னேன்.

    அதுக்குள்ள அவனே ஏர்போர்ட்டிலிருந்து போட்டுவிட்டான். அதான் எனக்கு சாரி!!!

    ReplyDelete
  24. ஒ நேற்றா, மிஸ் பண்ணிட்டேன், சாட்ல பாத்தப்ப சொல்லவே இல்ல....

    தாமதமான பிறந்த நாள் "வாழ்த்துக்கள்" சொல்லாம வணங்கி மகிழ்ந்துக்குறேன்...

    ReplyDelete
  25. வாழ்த்த வயதில்லை! வணங்குகிறேன்!

    ReplyDelete
  26. @அபி அப்பா, விட மாட்டீங்களே! நான் "தலைவி" தான்னு அவர் ஒத்துக்கிட்டிருக்காரேன்னு சந்தோஷப்பட்டா நீங்க வந்து விளக்கம் எல்லாம் கொடுத்துட்டுத் தேவையா இது? :P

    @சத்யா ரொமபவே நன்றிகள்.

    @நாகை சிவா, எங்கே "சாட்"டினீங்க? அதான் ஆளே ஒளிஞ்சுக்கறீங்களே, கவிதை எழுதச் சொல்லி யார் மிரட்டினது? அதுவும் புலியை1 எனக்கு ஒரு "உண்மை" தெரிஞ்சாகணும். :P

    @சிபி, ஞாபகம் வச்சுட்டு வந்து வாழ்த்தினதுக்கு நன்றிகள். :D

    ReplyDelete
  27. எனக்கு நானே கமென்ட் கொடுத்துக்கிட்டாத் தான் ப்ளாகே திறக்குது! எல்லாம் தலை எழுத்து! :)

    ReplyDelete
  28. வணங்க வயதில்லை வாழ்த்துகிறேன்

    ReplyDelete