எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, May 29, 2007

அதியமானுக்குக் கல்யாணம்!!!!!!!!

ஜூன் மாதம் 3-ம் தேதி அருமை நண்பர், என் பதிவுகளையும், என் எழுத்தையும் ஆரம்ப நாட்களில் இருந்தே ஆதரித்து வருபவர், அறிமுகம் இல்லாமலேயே முதல்முதலாய் எனக்காக என் பிற்ந்த நாளன்று (போன வருஷம்) பதிவு போட்டவர், இந்த வலை உலகில் என்னைப் பற்றி அனைவருக்கும் ஓரளவு அறிமுகம் ஆகக் காரணமாய் இருந்தவர் "மோகன்ராஜ்" என்ற கைப்புள்ளக்குக் கல்யாணம். கைப்புள்ளயாய் இருந்தவர் இப்போது கல்யாண மாப்பிள்ளை ஆகிவிட்டார். என்னால் திருமணத்தில் கல்ந்து கொள்ள முடியவில்லை. ஆனால் வ.வா.ச. சார்பில் சங்கத்துச் சிங்கங்களில் முடிந்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள் என நம்புகிறேன்.

1-ம் தேதிதான் இதைப் போட்டிருக்கணும். ஆணால் அன்னிக்கு என்னாலே கணினியில் உட்கார முடியுமான்னு தெரியலை. அதான் இன்னிக்கே போட்டுட்டேன். அருமை நண்பர் திரு கைப்புள்ளக்கும் அவர் தம் அருமை மண்மகளுக்கும் எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். திருமணம் சிறப்பாக நடைபெறவும், மணவாழ்க்கை இனிமையாகவும், அருமையாகவும் அமையவும் எங்கள்வாழ்த்துக்களோடு மட்டுமில்லாமல் அந்த இறைவனையும் பிரார்த்திக்கிறேன்.

3-ம் தேதி அன்று இங்கே எனக்கும் ஒரு குடும்ப விழாவில் கலந்து கொள்ளும் வேலை இருக்கிறதால் 1-ம் தேதியே போடலாம்னு இருந்தேன். ஆனால் அதற்கான ஏற்பாடுகள் இப்போவே ஆரம்பிச்சுச் செய்ய வேண்டி இருப்பதால் என்னால் அதிக நேரம் கணினியில் உட்கார முடியலை. அதனால் இன்னிக்கே போட்டிருக்கேன். ஜூன் 3-ம் தேதியன்று கிட்டத் தட்ட நானும் கைப்புள்ளயின் கல்யாணத்தை நினைத்துக் கொண்டே இங்கே விருந்து சாப்பிடுவேன். மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

11 comments:

  1. என் வாழ்த்துக்களையும் இங்கே பதிவு செய்து கொள்கிறேன்! ஆனா கல்யாணம் 3 ம் தேதின்னு நெனைக்கிறேன்!

    ReplyDelete
  2. பதிவு ஆரம்பத்திலேயே 3-ம் தேதின்னு எழுதி இருக்கேனே அபி அப்பா! 3-ம் தேதி எனக்கு வேறே வேலை இருப்பதால் 1-ம் தேதி போட நினைச்சேன். இருங்க, கொஞ்சம் சரி பண்ணிட்டு வரேன். அப்புறம் தெளிவா ஆகிடும். :D

    ReplyDelete
  3. ஆஹா அவசரகுடுக்கையா ஆயிடுச்சே:-( நம்ம பின்னூட்டம்!

    ReplyDelete
  4. கீதா, அதியமான், கைப்புள்ள எல்லாரும் ஒண்ணா.
    அதியமான்னு எனக்குத் தெரிந்தவர் எகனாமிக்ஸ் பத்தி எழுதரவர்.

    எப்படி இருந்தாலும்
    கைப்புள்ளக்கு வாழ்த்துக்கள் சொல்லவும்.
    மணமக்கள் இந்தே இல்லறம் நடத்த இறைவன் அருள் இருக்கட்டும்.
    நன்றி கீதா.

    ReplyDelete
  5. ஹிஹிஹி, அபி அப்பா, எப்பவுமே பிரம்பு நம்ம கையிலே தான். அதான் நாம நிரந்தரத் தலை(வலி)வின்னு எல்லாரும் சொல்றாங்க. :)))))))))))))))))))

    @வல்லி, அதியமான்னு ஒருத்தர் ப்ளாக் எழுதறாரா? ஹி,ஹி,ஹி, நம்ம அதியமான் பெயர்க்காரணமே வேறே. அநேகமாய்க் கைப்புள்ளக்கே தெரியாது. இருங்க, ஒரு பதிவே போட்டுடறேன். பதிவுக்கும் ஹிட் லிஸ்ட் எகிறுமே! ஒரு அல்பத் (தனமான) ஆசை தான். வேறே என்ன? அ.வ.சி.

    ReplyDelete
  6. என் நண்பர் மோகன்ராஜுக்கு கல்யாணமா?

    மகிழ்வாய் இருக்கிறது!
    [பின்னே,..... நாம மாட்டிகிட்ட மாதிரி மாட்டறாங்கள்ல!:))]

    தகவலுக்கு மிக்க நன்றி, தலைவி!

    மணமக்கள் இனிதே வாழ என் உளங்கனிந்த வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. அது சரி, அவர் எப்போ உங்களுக்கு நெல்லிக்கனி கொடுத்தார்?

    :))

    ReplyDelete
  8. என்னுடைய வாழ்த்துக்களும்.
    எல்லா வளமும் பெற்று வளமுடன் வாழ்க.

    ReplyDelete
  9. கைப்புள்ளக்கு வாழ்த்துக்கள்...

    மணமக்கள் இந்தே இல்லறம் நடத்த இறைவன் அருள் இருக்கட்டும்

    ReplyDelete
  10. @ kaips..

    :) இனிதே வாழ வாழ்த்துகள் :)

    ReplyDelete
  11. கைப்புள்ளயின் திருமண தேதி தகவலுக்கு நன்றி.

    அவருக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

    ReplyDelete