எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, June 19, 2007

என்ன ஆச்சு? தலைவிக்கும், தொண்டர்களுக்கும்? பரபரப்புத் தகவல்கள்!

இன்னும் ஒரு போஸ்ட் பாக்கி இருக்கு, 300 போஸ்ட் ஆக. அதுக்குள்ளே ஒரு மொக்கை போட்டுடலாம்னு ஆசை வந்துடுச்சு. அதான் இன்னிக்குக் கிடைத்த கொஞ்ச நேரத்தை அதுக்கு உபயோகிச்சுக்கறேன்.
*************************************************************************************

புதரகம் வந்த தலைவி அதற்குப் பின்னர் அடிக்கடி காணாமல் போவது பற்றித் தொண்டர்கள் கவலை அடைந்திருக்கிறார்கள். தலைவியின் பதிவுகளில் வந்து தவறாமல் பின்னூட்டம் இடும் மு.க. அவர்களையும் சிலநாட்களாய்க் காணவில்லை. மேலும் அவரால் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப் பட்ட முதல் அமைச்சர் ஆன (நறநறநற) திரு பக்கார்டி ச்யாமையும் சில பல தினங்களாய்க் காணாமல் தலைவி கவலையில் ஆழ்ந்திருப்பதாய்ச் செய்திகள் கசிகின்றன. தலைவியை எந்நாளும் கைவிடமாட்டேன் என்று உறுதி அளித்த துணை முதல்வர் வேதா அவர்களும் அவ்வப்போது தலை காட்டுகிறாரே தவிர அவரும் தீவிர அரசியலில்ல் இருந்து ஒதுங்கி இருப்பதாய்த் தெரிகிறது.

தகவல் துறை அமைச்சராய்ப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்ட (நறநறநறநறநறநற) "ஆப்பு அம்பி"யின் திருமணத்தில் வாழ்த்துச் சொன்ன சில நிமிடங்களுக்குப் பின்னரே இவர்கள் காணாமல் போய் விட்டதாயும் நம்பப் படுகிறது. அதிலும் "பில்லு பரணி' என்று நாமக்ரணம் சூட்டப் பட்ட பரணி, துபாயில் துண்டு போட்டுத் தலைவிக்காக நிதி வசூல் செய்த கோபிநாத், தலைவியின் ஒவ்வொரு (அடியையும் வாங்கிக் கொண்டு) அடியையும் பின்பற்றி நடக்கும் மணிப்ரகாஷ் போன்றவர்களைக் காணவில்லை என ஏற்கெனவே செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இப்போது சில நாட்களாய்த் திடீரென தலைவியையும் காணவில்லை! தொண்டர்களுக்குள் குழப்பம். அம்பி&கோவின் வெற்றிக் கூச்சல் கேட்கிறது. இதற்கு அவர்களின் சதிவேலை காரணமோ என ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

பலநாட்களாய்த் தலைவியின் பதிவுக்குத் தலை காட்டாமல் இருந்த திரு தி.ரா.ச. அவர்கள் திடீரென வந்து தலைவியின் பதிவில் பின்னூட்டம் இட்ட மர்மம் என்ன? எங்கே தலைவி? எங்கள் யானைத் தலைவி எங்கே? சீச்சீ தானே தலைவி, இல்லையே, தானைத் தலைவி, (அப்பாடி, இப்போத் தான் சரியா வந்திருக்கு) எங்கேன்னு தொண்டர்கள் கூக்குரல் இட்டுத் தேடுகின்றனர். ஒரு பெரும்படை தலைவியைத் தேடப் போயிருக்கு. (நல்ல ஆயின்மென்ட்டாப் போட்டால் படை எல்லாம் சரியாப் போயிடும்னு யாரோ சொல்லுவது காதில் விழுகிறது.) இதுக்கு நடுவில் ஆப்பு அம்பி அநேகமாய் அனைவரின் பதிவிலும் தலைவியைக் குறிப்பிட்டுப் பின்னூட்டங்கள் இட்ட்டு வருவதும், அதன் காரணம் என்ன என்றும் கேள்வி எழுகிறது. இந்தக் குழப்பமான சூழ்நிலை எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்றும் புரியவில்லை.

6 comments:

  1. உங்களை எட்டு விளையாட்டிற்கு அழைத்துள்ளேன். மேல் விபரங்களுக்கு இங்கு வந்து பார்க்கவும்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்.கீதா மிக மிக மகிழ்ச்சி.

    சாதனைதான் படைக்கிறீர்கள். உங்கள் நமச்சிவாய தான் படிக்க விட்டுப் போகிறது.

    இன்னும் எழுதுங்கோ. நிறைய விஷயங்கள்சொல்லாமல் உங்ககிட்ட இருக்கிறதா எனக்குத் தோன்றும்.

    ReplyDelete
  3. //300 போஸ்ட் ஆக. அதுக்குள்ளே ஒரு மொக்கை போட்டுடலாம்னு ஆசை வந்துடுச்சு.//

    ha haaaa :)

    முன்னூறுமே மொக்கை தானே! இதுல மொக்கைகள்னு தனியா வேற என்ன பிரிக்க வேண்டி இருக்கு? :p

    சரி, இதை ஏன் மொக்கை ஸ்பெஷல்னு லேபிள் பண்ண வில்லை? :)

    ReplyDelete
  4. மேடம் சூப்பரப்பு மேடம், பக்கத்துக்கு பக்கம் பரபரப்பு கேள்விபட்டுருக்கேன். ஆனா வார்த்தைக்கு வார்த்தை பரபரப்பு இப்பதான் படிக்கறேன் நீங்கள் எழுதிய முழு விவரம் புரியவில்லை என்றாலும் படிப்பதற்கு நன்றாக இருந்தது நாளை சென்னை பயணம்.22ஆம் தேதி என் பிறந்த நாள் அன்று என் பிறந்த மண்ணில் இறங்குகிறேன் அங்கிருந்தும் எழுதுவேன் அப்பிடியெல்லாம் வுட்டுடுவோமா? Bye,Bye.

    ReplyDelete
  5. ஆஹா, சிபி, என்னை ஆதரித்த வள்ளல்களில் முதன்மையானவரே! நீங்களே பாருங்க, எப்படி இருந்த நான் இப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பபபபபப்பப டீஈஈஈஇ ஆயிட்டேன்! (குமார காவியம்னா என்னங்க அர்த்தம்?)

    @-இ.கொ. உங்க தலை எழுத்து நல்லாத் தானே இருக்கு! எதுக்கு வேண்டாத வம்பை வாங்கி இருக்கீங்கன்னு புரியலை! இதான் "சனி" பிடிச்சிருக்குன்னு சொல்வாங்க! :P

    @ஹிஹி, வல்லி, நானும் ஏதோ எழுதறதா நீங்க ஒத்துக்கிட்டதே என்னோட சாதனை தான், என்ன சொல்றீங்க? :)))))

    @ஆப்பு, பூரிக்கட்டை அனுப்பிச்சதுதான் வந்துடுச்சு இல்லை, பேசாமல் அடி வாங்கிட்டு உட்கார்ந்திருங்க.

    @மணிப்பயல், பிறந்த நாள் வாழ்த்துக்கள் அட்வான்ஸா. நல்லா ஊருக்குப் போய் எஞ்சாய் பண்ணுங்க. அப்புறம் உங்களுக்கு விஷயம் புரியணும்னா கொஞ்சம் பின்னோக்கிப் போய்ப் பாருங்க. ஹிஹிஹி, நம்ம கிட்டே வந்ததாலே நீங்க பின்னோக்கிப் போக வேண்டி இருக்குப் பாருங்க! உங்க தலை எழுத்து! ஜோதியிலே ஐக்கியம் ஆகிடுங்க!

    @வேதா, து.மு. அமைச்சர் போஸ்ட் கொடுத்தாலும் கொடுத்தாங்க, எந்நேரமும் பதவி நாற்காலியை விட்டு எழுந்திருக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறது சரியா? இது தகுமோ, இது முறையோ? இது தருமம்தானோஓஓஓஓஓஓஓஓஓஓ?

    ReplyDelete