எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, January 28, 2008

இந்த நாள் இனிய நாள்!

அடுத்து அடுத்துச் சோதனைகள், இப்படி யாருக்காவது வந்திருக்குமானு தெரியலை, இந்த அழகிலே சிஷ்யகேடிகள் எல்லாம் நான் மூன்று மாசமா சரியா வரதில்லைங்கறதைப் பட்டாசு வெடிச்சுக் கொண்டாடறதா வேறே தகவல் கசிஞ்சுட்டு இருக்கு! ம்ம்ம்ம்ம்., எல்லாம் நேரம்! அஜித் லெட்டர்! வேறே என்ன? நான் தான் உடம்பு சரியில்லாமல் போனேன்னு சொன்னா அதே வைரஸ் அட்டாக் என்னோட கணினிக்கும் வந்துடுச்சு. ஹிஹிஹி, எவ்வளவு ஒத்துமை பாருங்க, ஒவ்வொரு வருஷமும் அக்டோபரில் இருந்து டிசம்பர் வரை நான் "லொக், லொக்", யாராவது மூச்சுக் கடனாத் தருவாங்களானு பார்த்துட்டு இருப்பேன். நடு, நடுவிலே இந்த ப்ராங்கிட்டிஸ், வேறே நானும் இருக்கேன்னு சொல்லும், இப்போ போறாததுக்கு டான்சிலிட்டிஸ் வேறே அடிஷனலா ஒரு மூன்று வருஷமா! அதெல்லாம் என்னை மாதிரிக் குழந்தைங்களுக்குத் தானே வரும்! :P அது இந்த வருஷம் ரொம்பவே படுத்திட்டு இருக்கு.

அதே மாதிரி என்னோட கணினியும் ஒவ்வொரு வருஷமும் நவம்பர் வந்தாலே ஸ்ட்ரைக் பண்ண ஆரம்பிக்குது இரண்டு வருஷமா! சும்மா வைரஸ் செக் பண்ணனு ஆரம்பிச்சா ஒரேயடியா வைரஸ் அட்டாக்குனு சொல்லிட்டுப் படுத்திடுச்சு! அதை ஒரு வழிக்குக் கொண்டு வரதுக்குள்ளே போதும், போதும்னு ஆயிடுச்சு. இன்னும் சரியா வழிக்கு வரலை. ஜிமெயில் ஹாங்கிங், ப்ளாக் ஹாங்கிங் அப்படின்னு ஒரு மாசமாவே பாடாய்ப் படுத்தி வச்சுட்டு இருந்தது. ஏதோ சரி பண்ணி இருக்கேனு மெக்கானிக் சொல்லிட்டு இன்னிக்குக் கொண்டு வந்து வச்சுட்டுப் போயிருக்கார்.நல்லாப் பார்த்துட்டு ஒரு 2 நாளாவது கழிச்சுத் தான் சரியா இருக்குனு சர்டிபிகேட் தர முடியும்னு சொல்லிட்டேன். இதுக்கு நடுவிலே ஊர் சுத்தல் வேறே. எப்போவோ பதிஞ்சு வச்சது. கான்சல் பண்ணமுடியலை. போகணும்னு ஆசையும் தான். உயிரைக் கையிலே வச்சுட்டுப் போக வேண்டியதாப் போச்சு. நிஜமாவே உயிர் போக இருந்தது. அதெல்லாம் விவரமா எழுதறேன். இன்னிக்குக் காலையிலே ஒரு ஜோக் நடந்துச்சு. அதை முக்கியமாச் சொல்லத் தான் வந்தேன்.

காலம்பரத் தான் ஊரிலே இருந்து வந்ததாலே குளிக்க நேரம் ஆயிடுச்சு. அப்போ பார்த்து ஒரு தொலைபேசி அழைப்பு. யாரு அழைச்சதுனு கேட்டால் ஸ்ரீதர்னு பேர் வந்தது. எடுத்தது என்னோட ம.பா. அவர் கிட்டே நானே தினமும், "நான் தான் உங்க மனைவி, என் பேர் கீதா!"னு சொல்லி நினைவு படுத்தணும். அவ்வளவு மறதி. இதிலே தூக்கக்கலக்கம்னா கேட்கவே வேண்டாம். சுத்தமா எங்கே இருக்கோம்னே புரியாது. அவர் கிட்டே போய் "நான் ஸ்ரீதர் பேசறேன்!"ன்னு சொன்னா? ஹிஹிஹி, அவரோட தம்பி பேரும் ஸ்ரீதர் தான். நல்லவேளை, குரல் புதுசுங்கறதாலே தம்பினு கூப்பிட்டுப் பேசலை. யாருனே தெரியலை அவருக்கு. நான் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அடையாளம் வச்சிருக்கேன். இப்போ "அம்பி" ஸ்ரீராம் னு சொல்லிக் கொண்டால் புரியாது. அதே மாதிரி "வேதா" உஷானு சொல்லிக் கொண்டால் புரியாது. புலினு சொன்னால் புலியையும் தெரியாது. கைப்புள்ளனு சொன்னால் அவரையும் புரியாது. மோகன்ராஜ்னு சொன்னாலும் புரியாது. இப்படித் தான் ஒருநாள் திராச சார் கூப்பிட்டப்போ சந்திரசேகர்னு சொல்லி இருக்கார். ப்ளாஸ்டிக் சந்திராவோ, அல்லது சந்திரமெளலியோனு நினைச்சுப் பேசிட்டு இருக்கார். என்னடானு சொல்லலை, மத்தது எல்லாம் பேசியாச்சு. அதே மாதிரி "ரசிகனு"க்கும் ஒரு அடையாளம் இருக்கு. ரசிகர் மன்றம் வைக்கப் போறேன்னு சொன்னேனே, அவர் பேசறேன்னு சொல்லி இருந்தா புரிஞ்சுட்டு இருப்பார். ரசிகன் அசடு வழிஞ்சுட்டு இருந்தது எப்படி இருந்திருக்கும்னு நினைச்சுப் பார்த்துச் சிரிச்சுட்டு இருக்கேன், இன்னிக்குப் பூரா. கடைசியிலே ரசிகனுக்கு ஆப்பு வைக்கவும் ஒரு விஷயம் கிடைச்சதே அந்த சந்தோஷமும் தான். அசடு வழிஞ்சது ரசிகன் மட்டும் இல்லை, என்னோட ம.பா.வும் தான். இன்னிக்கு அவரும் மாட்டினார். இந்த நாள் இனிய நாள்!

Wednesday, January 23, 2008

அருட்பெருஞ்சோதி! தனிபெரும்கருணை!


நானும் திவா சொன்ன மாதிரி "அனுபவம் புதுமை"யையாவது தொடரலாம் என்று நினைத்தால் என்ன செய்யறது? இன்னிக்குனு பார்த்து முக்கியமானவங்க எல்லாம் பிறந்திருக்காங்க! அதுவும் வள்ளலாரின் "அருட்பெருஞ்சோதி" என்னும் ஜோதி தரிசனம் காட்டும் நாள் இன்று தான். அதை விட முடியுமா?

//ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற (113)
உத்தமர்தம் உறவுவேண்டும் (114)
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் (115)
உறவுகல வாமைவேண்டும் (116)
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை (117)
பேசா திருக்க்வேண்டும் (118)
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய் (119)
பிடியா திருக்கவேண்டும் (120)
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை (121)
மறவா திருக்கவேண்டும் (122)
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற (123)
வாழ்வில்நான் வாழவேண்டும் (124)
தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் (125)
தலம்ஓங்கு கந்தவேளே (126)
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி (127)
சண்முகத் தெய்வமணியே (128)//

மேற்குறிப்பிட்ட பாடலுடன் சேர்ந்த பாடல் தொகுப்பை எழுதும்போது வள்ளலாருக்கு வயது பத்துக்குள் தான் என்னும்போது அவரின் மெய்ஞானத்தை நாம் புரிந்து கொள்ள முடியும் அல்லவா? இன்று வடலூரில் வள்ளலாரின் "அருட்பெருஞ்சோதி" தரிசனம். அவர் தன் தவ வலிமையால் இரவில் எண்ணெய்க்குப் பதிலாய்த் தண்ணீரை ஊற்றியே விளக்கை எரித்தார் என்று சொல்லும் சம்பவம் ஒன்றும் உண்டு. தன்னுள்ளே உறையும் ஜோதியைக் கண்டதோடல்லாமல் தானே ஜோதிமயமாயும் இருந்தார் என்பதற்கு இதைவிடவும் அத்தாட்சி தேவை இல்லை. அதுவும் எளியவர்களின் பசியை அறிந்தவர். வள்ளலாரின் சமரச சன்மார்க்க சபையில் எப்போதும் அனைவருக்கும் உணவு அளிக்கப் படும். உணவுக்காக மூட்டப் படும் அடுப்பு அணைவதே இல்லை என்பார்கள்.

வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!



இன்று திரு நேதாஜி அவர்களின் பிறந்த நாள். எத்தனையாவது பிறந்த நாள் என்பதோ, அதைக் கொண்டாடுவதோ முக்கியம் இல்லை. அவர் வாழ்வின் அவர் சந்தித்த பலவிதமான ஆபத்துக்களையும், விபத்துக்களையும் அவர் எவ்வாறு துணிவுடனும், தைரியத்துடனும் எதிர்த்துப் போரிட்டாரோ, அதே உறுதியையும், மனோதைரியத்தையும் நாமும் பெறவேண்டும் என்ற வாழ்த்துக்கள், இந்த வலை உலக நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொண்டு கீழ்க்கண்ட ஒரு சிறு சம்பவத்தை எழுதுகிறேன்.

//இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஜெர்மனியில் இருந்து நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஜப்பானுக்குப் பயணப்பட்டுக் கொண்டிருந்தார் நேதாஜி அவர்கள். கூடவே அவரின் நம்பிக்கைக்கு உகந்த படைத் தலைவர்களும். அனைவரும் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நேசநாட்டுப் படையின் உளவுக்கப்பலுக்கு நேதாஜி நீர்மூழ்கிக் கப்பல் மூலம் செல்லுவது தெரிந்துவிட்டது. உடனேயே தகவல்கள் பரிமாறிக் கொள்ளப் பட்டன. மெல்ல, மெல்ல, நாலு பக்கமும் சூழ்ந்து கொள்ள ஆரம்பித்தது அமெரிக்க, இங்கிலாந்துக் கப்பல்கள். கீழே போய்க் கொண்டிருக்கிறது நேதாஜியின் கப்பல். மேலே போகின்றன அதை குறிபார்த்துச் சேதப் படுத்தத் தேடிக் கொண்டு எதிரியின் கப்பல்கள். நேதாஜியின் கப்பல் தலைவனுக்கும் செய்தி வந்து சேருகிறது, மேலே எதிரியின் கப்பல்கள், நேதாஜி இருப்பதைத் தெரிந்து கொண்டு வந்து சூழ்ந்து கொண்டிருப்பதைத் தெரிவிக்கிறது உளவுப்படைத் தகவல். கப்பல் தலைவனுக்குக் கிலி. எப்படியேனும் நேதாஜியின் உயிரைக் காப்பாற்ற வேண்டுமே? என்ன செய்வது? நடுக்கடலில் வேறே இருக்கிறார்கள்.

நேதாஜியுடன் அந்தச் சமயம் விவாதித்துக் கொண்டிருந்த திரு அஜீஸ் அஹமதுவுக்குத் தகவல் போகிறது. அப்போது பார்த்து குண்டு முழக்கம். ஆம், எதிரிகள் கண்டுபிடித்துவிட்டார்கள். கப்பலைத் துளைக்கும் வெடிகுண்டுகள்! நீருக்கடியில் போர்! தலைவன் கலக்கதுடன் எதிர்த்தாக்குதலில்! அஜீஸ் அஹமதுவும் ஒரு நொடி கலங்கித் தான் போனார். ஆனால் தொடர்ந்து அவருக்குக் குறிப்புக்களும், ஆணைகளும் நேதாஜியிடமிருந்து தொடர்ந்து வருகிறது. கிட்டத் தட்ட அரை மணி நேரக் குழப்பத்துக்குப் பின்னர் கப்பல் பாதுகாப்பான இடத்துக்கு ஓட்டிச் செல்லப் பட்டது.

அஜீஸ் அஹமது நேதாஜியிடம் விஷயத்தை விளக்கும் முன்னரே நேதாஜி, "அஜீஸ், எதிரி வந்துவிட்டான் அருகே, என்று தெரிந்ததுமே இப்படிப் பதட்டத்துடன் செயல்பட்டால் நாம் ஜெயிப்பது எவ்வாறு? நான் சொன்னதையே நீங்கள் கவனிக்கவில்லை!" என்று சொல்லவும் அஜீஸ் அஹமதுவுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. தலைவர் தம் உயிரைக் கூடப் பொருட்படுத்தாமல் முக்கியச் செய்தியைக் கொடுத்துக் கொண்டிருக்க நாம் சற்றே தடுமாறிவிட்டோமே! என மனம் வருந்தினாராம். //

இந்த நிகழ்ச்சி அப்போது நேதாஜியுடன் இருந்த இந்திய தேசீயப் படையைச் சேர்ந்த தலைவர்கள் பின்னர் அவர் மறைவுக்குப் பின்னர் பகிர்ந்து கொண்டவற்றில் இருந்து எடுத்தது.
இத்தகைய மனத் துணிவு நமக்கும் வரவும், தேசபக்தியில் நாமும் சிறந்து விளங்கவும் பிரார்த்திப்போம். இது ஒன்றே இந்த மகா மனிதனுக்கு நாம் செய்யும் அஞ்சலி!

Tuesday, January 22, 2008

எதிர்பாருங்கள், எதிர்பாருங்கள்!

தீவிரப் புலனாய்வில் தலைவி? உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் களப்பணி ஆற்றிய விவரங்கள் விரைவில்!

ஒரு மாதிரியா வந்துட்டேன்னு நம்பறேன்! பார்க்கலாம், மத்தியானமா!

Thursday, January 17, 2008

சாதனை மேல் சாதனை!

வல்லி சிம்ஹன் என்னோட பதிவுகளின் சாதனை பத்தி எழுதச் சொல்லிக் கேட்டிருக்காங்க. என்னனு எழுதறது? எழுதறது எல்லாமே மொக்கையா இருக்கும்போது! இதிலே தன்னடக்கம் எல்லாம் ஒண்ணும் இல்லை! நிஜமே இது தானே! இன்னும் சொல்லப் போனால் சென்னையிலே, எனக்கு இருக்கும் இணைய இணைப்புத் தொந்திரவுக்கு நடுவில் இந்த அளவுக்கு நான் "மொக்கை" போடுவதே ஒரு சாதனை தான். எப்போ வரும், எப்போ போகும்னே சொல்ல முடியாது என்னோட இணைய இணைப்பு. இதை நம்பறவங்களை விட, நம்பாதவங்க தான் அதிகம், அதுவும் எனக்குத் தெரியும்! :P என்றாலும் நம்பறவங்களிலே என்னிடம் அடிக்கடி சாட்டிங் செய்யும் வேதாவுக்கு நல்லாவே தெரியும். இங்கே கேபிள் மேலே வரதால் பிரச்னை என்பதோடு அல்லாமல் சமீப காலமாய் "டேட்டா ஒன் ப்ராட்பாண்ட்" இணைப்பும் சரிவர வரதில்லைனு கேள்விப்பட்டதில் கொஞ்சம் சந்தோஷமா இருக்கு! எங்க தெருவிலேயே இருக்கும் டாட்டா இண்டிகாம் இணைப்பு உள்ளவருக்கும் சனி, ஞாயிறு என்றால் சுத்தமாய் இணைப்பே வரதில்லையாம். அவரும் தினம், தினம் சண்டை போடறேன், ஆனால் யாருமே வந்து கவனிக்கிறதில்ல என்கிறார். கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது, டாட்டா இண்டிகாம் ஆளுங்க கூடவும், விஎஸ் என்.எல் காரங்களோடயும் சண்டை போட்டுட்டு, இப்போக் கூட இந்தப் பதிவு என் அண்ணன் வீட்டில் இருந்து தான் எழுதறேன். பக்கத்துத் தெரு என்றாலும் நினைச்சப்போ வந்து உட்கார முடியாது என்பதால் 2 நாளாய் ஒண்ணுமே எழுத முடியாமல் இன்று வந்திருக்கேன்.

ஒரு தாய்க்கு எப்படிப் பெற்ற குழந்தைகள் அனைத்துமே சமமோ அது போல் நான் எழுதுபவை அனைத்துமே எனக்கு சாதனை படைத்த பதிவு தான். இதைப் பின்னூட்டத்தை வைத்தோ, அல்லது வேறு காரணம் குறிப்பிட்டோ சொல்ல முடியாது. ஏனெனில் எனக்கு அதிகமாய்ப் பின்னூட்டங்கள் வரதும் இல்லை, இதனால் யாரும் படிக்கவே இல்லைனும் சொல்ல மாட்டேன். இப்போ நானும் சில பதிவுகள் பின்னூட்டமே போடாமல் படிக்கிறது உண்டு. எனக்கு இணையம் ஒழுங்காய் வந்து தடை இல்லாமல் எழுதும் நாளே எனக்கு நான் எழுதப் போகும் சாதனைப் பதிவு என்று சொல்லலாம். அப்படியும் குறிப்பிட்டு ஒன்றும் சமூகசேவையோ, அல்லது தொழில்நுட்பம் பற்றியோ, அல்லது பெண்கள் பிரச்னையோ, சமூக, குடும்பப் பிரச்னைகளோ நான் தொடுவதே இல்லை. ஓரளவு ஈடுபாட்டுடன் எழுதுவது ஆன்மீகப் பதிவுகள் மட்டுமே. அப்படி எடுத்துக் கொண்டால் தற்சமயம் எழுதிக் கொண்டிருக்கும் "சிதம்பர ரகசியம்" பதிவுகளை என் சாதனையாக ஓரளவு சொல்லலாம். ஏனெனில் அதற்காகப் பல மணி நேரம் பல புத்தகங்களையும், பதிவுகளையும், பலர் கருத்துக்களையும் இணையத்தில் தேடிப் படிக்கிறேன். அதை முடிந்த வரை பதிவும் செய்கிறேன். ஆனால் "சிதம்பர ரகசியம்" பதிவுகளை இந்தப் பக்கங்களில் குறிப்பிடலாமா என்பது பற்றித் தெரியவில்லை!

மற்றபடி நான் அழைக்கிறது என்றால் யாரைனு தெரியலை, துளசி அழைத்ததுக்கே இன்னும் வரலை, உஷா மொக்கை போடச் சொன்னால் பாடம் எடுத்திருக்கார்.:P கோபிநாத் மொக்கைன்ற பேரில் ஒரு உரைநடைச்சித்திரம் எழுதி இருக்கார். அபி அப்பா எங்கே இருக்கார்னு புரியலை, இப்போ சோகமயம் வேறே! வேதா இன்னும் அர்ரியர்ஸ் முடிக்கலை. திராச. சார் அடிக்க வருவார் மறுபடி கூப்பிட்டா. ஏற்கெனவே வல்லி அழைச்சாச்சு. ரசிகன்? ம்ம்ம்ம்ம்? மணிப்பயல்? மொக்கைக்குக் கூப்பிட்டு மொக்கையும் போட்டாச்சு! டிடி அக்கா? மொக்கை போட்டதோடு அல்லாமல், எனக்கு "ஆப்பு" வைப்பேன்னு மறைமுகமா மிரட்டல் வேறே! தனியாக் கவனிச்சுக்கறேன். இதிலே பாருங்க, இந்த டிடி அக்காவோட பக்கம், கண்மணியோட பதிவுகள், ரசிகனோட பதிவுகள் இது மூணும் நான் திறந்து படிக்கிறதுக்குள்ளே படும் கஷ்டம் இருக்கே! அதுவே ஒரு சாதனை தான் வல்லி. சரி, இப்போ யாரைக் கூப்பிடுறது? மெளலி, எழுதற மூடிலே இருக்கீங்களா இல்லையா? தெரியலையே? :( இ.கொ.? சபதம்ங்கிற பேரிலே தமிழ் அகராதியை எழுதிட்டார்! :Pதெரியலை! ஓகே அம்பி? ம்ம்ம்ம்ம்? வல்லி கூப்பிட்டிருக்காங்க! புலி? ராமநாதன் கூப்பிட்டுட்டார்! இப்படி எல்லாரும் முந்திக்கிட்டா "தலைவி" ஆன நான் என்ன செய்யறது? யாருமே யோசிக்கலை பாருங்க! :P

நான் அழைக்கும் மூவர்:

ரசிகன்
சுமதி(மின்னல்)
கார்த்திக் முத்துராஜன், {(ஊருக்கு வந்து சேர்ந்திருப்பீங்கனு நம்பறேன், மெதுவா அவசரமே இல்லாம எழுதுங்க போதும், இதைப் பார்த்தாவது நீங்க எழுதணும்கிறதுக்காகவே உங்க பேரைச் சேர்த்திருக்கேன்.:(((((}

Tuesday, January 15, 2008

சாப்பிடுங்க, முதலில், அப்புறமா படம் பாருங்க!



இது ஹூஸ்டன் அபார்ட்மெண்டில் சாப்பிட ஏற்பாடுகள் செய்தப்போ எடுத்த படம். சட்டியில் வத்தல் குழம்பு, இன்னொரு பாத்திரத்தில் சீரக ரசம், சாதம், என்ன பொரியல்? மறந்துட்டேன்! ஹிஹிஹி, என்னோட திருமுகத்தோட சாப்பிடும்போது எடுத்த படமும் இருக்கு. நம்ம தொண்டர்களில் மூத்த தொண்டர், குண்டரடிப் பொடி, தங்கமணிக்கு அஞ்சி, (முன்னொரு காலத்தில் அதியமான் நெடுமானஞ்சி), என்னோட படத்தைப் போடச் சொல்லி, அதை மற்றொரு சிஷ்யகேடியான கோபிநாத்தும் வழி மொழிஞ்சிருக்கார். போட்டுட்டால் என்ன ஆறது? அதான் போடலை! தவிர, என்னோட படம் தான் ஏற்கெனவே போட்டுட்டேனே, இன்னும் என்ன? அது நிஜமாவே நான் தானுங்க, நம்பாதவங்க திராச சாரைக் கேளுங்க!



இந்தப் படம் "Galveston" கடற்கரையில் ஒரு சின்ன கப்பலில் வரும் பயணிகளை ஏற்றிக் கொண்டு சிறிது தூரம் கடல் பிரயாணம் செய்ய வைத்து அனுப்புகின்றனர். அந்தக் கப்பலுக்குப் போகும் வழி இது! கடல் பிரயாணம் படங்கள் சரியா வரலை போலிருக்கு! ஒரே வெளிச்சமா இல்லைனா இருட்டா வந்திருக்கு!



இந்தப் படம் அங்கேயே உள்ள "அக்வேரியத்தில்" எடுக்கப் பட்டது.

எல்லாம் கண்ணு வைக்காதீங்க, நாளைக்கு இணையம் வருதான்னு தெரியாது, இங்கே வர முடியுமான்னும் தெரியாது, அதான் வந்தப்போ போட்டுடலாம்னு மூணு போஸ்ட் போட்டிருக்கேன். மூன்று நாளைக்கு வெறும் பின்னூட்டங்கள் மட்டும் ஏற்கப் படும்! :D

தலைமைக் கழகத்தில் தொண்டர்கள் குவிந்தனர்!

இந்த மாசம் தலைமைக் கழகத்துக்கு ஏகப் பட்ட தொண்டர்கள் விஜயம். எல்லாம் புது வருஷம் பிறந்திருக்கிறதாலே, தலைவியைப் பார்த்து, மாலை, மரியாதைகள் செய்து, எடைக்கு எடை தங்கம், வெள்ளி கொடுத்துட்டு, சூட்கேஸ் கொடுத்து விட்டுப் பதில் மரியாதையாக் கையை வீசிக் கொண்டு போகத் தான்! வேறே என்ன? முதலில் இதை ஆரம்பிச்சு வச்சது மணிப்பயலும், சூடான் புலியும் தான். சரி, புலி இப்போ எங்கே இருக்கு? யாருக்காவது தெரியுமா?

மணிப்பயலும், சூடானிலிருந்து புலியும் இந்த மாதம் 3-ம் தேதி எங்க வீட்டுக்கு வந்தார்கள். புலியைக் கண்டுபிடிச்சு புது வருஷ வாழ்த்து சொல்லலாம்னா அது தொலைபேசியை எடுக்கவே இல்லை. பஸ்ஸில் போயிட்டு இருந்ததாய்ச் சொன்னது அப்புறமாக் கேட்டப்போ. நாங்க பஸ்ஸிலே போகும்போதெல்லாம் பக்கத்திலே இருக்கிறவங்க மட்டுமில்லாமல், பின்னால், முன்னால், சைடில், என்று எல்லா சீட்டிலும் உட்கார்ந்திருக்கிறவங்க, சிலசமயம் டிரைவரும், கண்டக்டரும் கூட, எங்களைத் தவிர எல்லாருமே செல்போனும் கையுமா பேசிட்டு இருக்கிறதைப் பார்த்திருக்கேன்.புலிக்கு ஒரு வேளை பழக்கம் இல்லையோ என்னமோ தெரியலை, வீட்டுக்கு வந்ததும் உட்கார்ந்தது தான், அப்புறம் வாயே திறக்கலை, பஜ்ஜி சாப்பிடக் கூட! வேதா வந்ததும், உங்களுக்கு வச்சிருக்கேன் என்று சொன்னதோடு சரி, பின்னர் நானும் வேதாவும் ரகசியமாய்ப் பேசும்போது மட்டும் எப்படியோ காதில் விழுந்து என்ன விஷயம் என்று நோட்டம் பார்த்தது. மணிப்பயல் சிதம்பரம் பத்திய மலரும் நினைவுகளில் இருந்தார். மணிப்பயல் என்பதால் என்னமோ ரொம்பச் சின்ன உருவமாய் நினைச்சது என்னோட தப்பு. நல்ல உயரமா இருக்கார். பாட்டிலும்(ஹிஹிஹி, மறுமுறை படிக்கும்போது அர்த்தமே வேறே மாதிரி எனக்கே தெரியுது, அப்புறம் மணிப்பயல் பாவம்!) இசையிலும் நல்ல பரிச்சயம் உண்டாம். அதுக்கப்புறம் எனக்குப் பேசவே பயமாப் போச்சு. எங்கேயாவது பேசறதில் ராகம் கண்டு பிடிச்சார்னா என்ன செய்யறது? நல்ல வேளையா ஸ்டாக் மார்க்கெட் பத்திப் பேசும்போது நான் உள்ளே போயிட்டேன், வேலை இருப்பதாய்ச் சொல்லிக் கொண்டு! :P சாயந்திரம் திராச வீட்டுக்குப் போகணும் என்று சொல்லிட்டுச் சீக்கிரமே கிளம்பிட்டாங்க இரண்டு பேரும். வேதாவோடு கட்சி பற்றிய சிலபல ஆலோசனைகள் செய்ய வேண்டி இருந்ததால் வேதா 6 மணிக்குப் பின்பே வீட்டுக்குப் போனாள்.

இது முதல் வரவு, இதுக்கு அப்புறம் நான், என் கணவர் இருவரும் "முத்தமிழ்க்குழுமம்" நண்பர்கள் சிலரை அண்ணா நகரில் சந்தித்தோம். அங்கே "சிங்கை குமார்" என்னும் பெரியவர், தன் மைத்துனருடன் வந்திருந்தார். மற்றும் டாக்டர் எஸ்கே(சங்கர்குமார்), அவர் மனைவி, பாசிட்டிவ் ராமா, விசாலம் ராமன், தமிழ்த்தேனீ என்னும் பெயரில் எழுதும் கிருஷ்ணமாச்சாரி, லாவண்யா என்னும் கவிதாயினி ஆகியோர் வந்திருந்தனர். அங்கே திரு சங்கர்குமாரும், திரு குமாரும் தலைவியை "நறநறநற" "க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" என்னும் பொன்னான வாசகங்களைச் சொல்லும்படி எவ்வளவோ முயன்றும், ஹிஹிஹி, தலைவி சொல்லவே இல்லை கடைசிவரையில். (இதிலே சிங்கை குமார் தொலைபேசியில் பேசும்போது தலைவி, "வடுவூர் குமார்"னு நினைச்சுட்டு அசடு வழிஞ்சது தனிக்கதை, இதிலே வராது. இதே மாதிரி திராச அவர்கள் "சந்திரசேகரன்" என்று சொல்லிப் பேசும்போதும், முதலில் ப்ளாஸ்டிக் சந்திரா என நினைத்து, நானும், என்னோட ம.பா.வும் அவரை என்னடானு கேட்கலை, மத்தது எல்லாம் சொல்லியாச்சு. மனுஷன் திராசனு சொல்ல மாட்டாரா? சந்திரசேகரன் என்ற பேரிலே குடும்ப உறவுகளே நிறைய இருக்காங்க! யாருனு புரிஞ்சுக்கறது?) கோவி.கண்ணன் பேசும்போது மட்டும் எப்படிச் சரியாப் புரிஞ்சுக்கிட்டேன்னு எனக்கே புரியலை! ஒருவேளை எதிர்க்கட்சிங்கறதாலேயோ? :D

இந்த மாதிரி எதிர்க்கட்சிக்காரங்க, எதிரிக்கட்சிக்காரங்க எல்லாரும் இந்த மாதம் தலைமைக் கழகத்தை முற்றுகை இட்டார்கள்.(எல்லாம் கூட்டணிக்குத் தான். அரசியலில் இதெல்லாம் ஜகஜமுங்க).பின்னர் ஞாயிறு அன்று மாலை சுமார் 4 மணி அளவில் வந்த தொலைபேசி அழைப்பில் டாக்டர் சங்கர்குமாரும், அவர் மனைவியும் வருவதாய்த் தெரிவித்தார்கள். உடனேயே பரபரப்பான தலைமைக் கழகத்தில் உகி. போண்டா, வலை உலகச் சட்டத்தை மீறாமல் தயார் செய்யப் பட்டது. இருவரும் வந்தார்கள் பாசிட்டிவ் ராமாவுடன். அவங்க வந்து கொஞ்ச நேரத்துக்கு எல்லாம் திரு காழியூரார்,தன் நண்பர் நரசிம்மன் என்பவருடன் வந்தார். காழியூரார் வலை உலக நண்பர்களுக்கு அறிமுகம் இல்லாதவர். ஒரு உண்மையான யோகி. அவர் வந்ததும் எங்கள் பேச்சு அனைத்தும் யோகக்கலை பற்றியும், இறைவனை உணர்வது பற்றியும், அது பற்றிய உபயோகமான தகவல்களாலும் நிரம்பியது. பின்னர் சற்று நேரம் ஆரோக்கியமான நகைச்சுவைக்குப் பின்னர் இரவு 9-00 மணிக்கு மேல் கூட்டம் கலைந்தது, அரை மனதோடு.

Monday, January 14, 2008

பொங்கல் வாழ்த்துக்கள்!

வலை உலக நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

Sunday, January 13, 2008

நானும் படம் காட்ட ஆரம்பிச்சுட்டேனே!


எல்லாரும் ஃபோட்டோ போஸ்ட் போடறாங்களே, நாம் மட்டும் மொக்கை போஸ்ட் தவிர வேறே எதுவும் போடறதில்லையேனு என்னோட தன்மானம் என்னை உலுக்கிட்டே இருந்துச்சு, அதுவும் கைப்புள்ள திரும்பத் திரும்ப மாவாட்டறதைக் கூட ஃபோட்டோ எடுத்துப் போட்டுட்டு இருக்கிறதைப் பார்த்ததிலே இருந்து அதிகமா ஆயிடுச்சு. அதுவும் சாட்டிங்கில் என் கிட்டே இட்லி என்னோட தங்கமணிக்கு போரடிக்குதாம், வேறே ரெசிபி சொல்லுங்கனு கேட்டு சனா பட்டூரா ரெசிபி கொடுக்கிறேன்னு சொல்லிட்டு வந்தேன், இங்கே வந்து பார்த்தால் மீண்டும் மாவாட்டல்! ஆஹா! தங்கமணியை வாழ்த்தி ஒரு மெயில் தட்டணும்னு நினைச்சுக்கிட்டு எல்லார் பதிவுக்கும் போய் படம் பார்த்துட்டு வந்து, நானும், எங்கப்பாவும் கச்சேரிக்குப் போயிருக்கார்னு இரண்டே இரண்டு படம் மட்டும் இப்போதைக்குப் போட்டிருக்கேன். இது ஹூஸ்டனில் நாங்க Galveston போனப்போ எடுத்தது. அங்கே ஐ-மாக்ஸ், அப்புறம் 3டி, 4டி தியேட்டர்களில் படம் பார்த்தப்போ எடுத்தது எல்லாம் இருக்கு. ஆனால் என்ன கஷ்டம்னா அது எல்லாத்திலேயும் நம்ம திருமுகமும் இருக்கு. அதனால் அதைத் தவிர்த்துவிட்டு இதை மட்டும் போட்டிருக்கேன். அங்கே உள்ள நீர்வாழ் உயிரினங்களின் அருங்காட்சியகத்தில் எடுக்கப் பட்டது இது. நல்லா இருக்கா? என்னது? போட்டியா? இல்லைங்க, நான் போட்டியில் எல்லாம் கலந்துக்கிறதே இல்லை, போட்டி இல்லாமலேயே நிறையப் பட்டமும், பதவியும் நம்ம தொண்டர்கள் கொடுக்கிறாங்களே!:P

Friday, January 11, 2008

விவேகானந்தர் பிறந்த நாள்!


உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விரும்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.

"Do not talk of the wickedness of the world and all its sins. Weep that you are bound to see wickedness yet. Weep that you are bound to see sin everywhere, and if you want to help the world, do not condemn it. Do not weaken it more. For what is sin and what is misery, and what are all these but the results of weakness?"

செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு.

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தன்!


முதன் முதல் நோன்பு ஆரம்பிக்கும் போது "மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்" ஆரம்பிக்கும் கோதை நாச்சியார், பின்னர் 2-வது பாடலில் இந்த வையத்தில் எல்லாம் வாழ்வோர்களை அழைத்து, நோன்பைப் பற்றியும் அதற்கான விதிமுறைகளையும் கூறுகிறாள். அதற்கான அழகான தமிழ் வார்த்தை "செய்யும் கிரிசைகள்" என்று குறிப்பிட்டு விட்டுப் பின் நோன்பு நூற்குங்காலையில் தாங்கள் மேற்கொள்ளப் போகும் விரதத்தையும் கூறுகிறாள் இவ்வாறு:
"நெய்யுண்ணோம் பாலுண்ணோம், நாட்காலே நீராடி
செய்யாதன செய்யோம், தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்!" என்று உறுதி எடுத்துக் கொள்ளுகிறாள் அவ்வாறே உறுதி எடுத்துக் கொண்டு தன் தோழிகளையும் அழைத்துக் கொண்டு, நந்தகோபன் வீட்டு வாயில் காப்போனை அழைத்து மணிக்கதவம் தாள் திறக்கச் சொல்லிப் பின்னர், நந்தகோபனையும் யசோதையையும் எழுப்பிப் பின்னர், அவர்தம் மருமகளாம், திருமகள் நப்பின்னைப் பிராட்டியையும் எழுப்பிக் கண்னனையும் எழுப்பச் சொல்லி வேண்டுகிறாள். அதுவும் எப்படி?
"உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்!" என்று சொல்லுகிறாள். பொதுவாகக் காலையில் எழுந்து கொள்ளும்போது முதன் முதல் பார்க்க வேண்டிய விஷயங்களில் ஒன்று மனைவியின் முகம். நப்பின்னை பால் கொண்ட காதலால், ஏழு எருதுகளை அடக்கி அவளைத் திருமணம் செய்து கொண்டிருக்கும் கண்ணன் அவளை எவ்வாறு பிரிவான்? மனம் வருந்தும் அல்லவா? அதனால் நப்பின்னையையே வேண்டுகின்றாள் ஆண்டாள், "நப்பின்னாய், நீ உன் மணாளனைத் துயில் எழுப்பு! உன் அழகான செந்தாமரை போன்ற முகத்தைக் காட்டி, அவனுக்குப் புத்துணர்ச்சி ஊட்டி, உன் வளையல் கரங்களால், வளையலில் இருந்தி இன்னிசை எழுப்பிப் பள்ளி எழுச்சி பாடு, அவனைத் திருப்திப் படுத்தி எங்களுடன் நீராட்டலுக்குத் தயார் செய்து அனுப்பி வை!"
"பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவோய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!"

இவ்வாறு நப்பின்னையை வேண்டிக் கொண்ட ஆண்டாள், பின்னர் கண்ணனைத் திங்களும், ஆதித்யனும் ஒரு சேர எழுந்தாற்போல் எங்கள் சாபம் தீர நீ எங்களை உன் அருட்கண்ணால் நோக்குவாய்!" எனக் கேட்டுக் கொள்கின்றாள். மழைக்காலத்தில் குகைக்குள் பதுங்கி இருக்கும் சிங்கத்துக்கு ஒப்பானவன் கண்ணன் எனச் சொல்லும் ஆண்டாள் தன் 24-வது பாடலில் கண்ணனின் அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம், ராம அவதாரம் இரண்டையும் குறிப்பிட்டுப் பாடிப் பின்னர் அடுத்த பாடலில் கண்ணன் பிறந்த கதையை வர்ணிக்கின்றாள். ஒருத்தி மகனாய்ப் பிறந்து, அந்த ஓர் இரவிலேயே ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்க்கப் பட்ட கண்ணனைப் பாடும் போது
"திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து ,மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!" எனச் சொல்கின்றாள். மாலுக்கு, மணிவண்ணனுக்கு, கோல விளக்குக்குப் பல்லாண்டு பாடும் விதமாய்
"சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே!" என்று சொல்லிப் பின்னர் 27-வது பாடலுக்கு வருகின்றாள் ஆண்டாள்.

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!* உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம்பெறும் சம்மானம்*
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்*
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே*
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்*
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு*
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்*
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

ஆண்டாள் அருளிச் செய்த இந்தத் திருப்பாவையின் 27-வது பாடல் இது. இது வரையிலும் "பாவை நோன்பு" நூற்றுக் கொண்டிருந்த நாச்சியார் ஆனவள் தன் நோன்பை முடிக்கிறாள். அதுவும் எப்படி? "கூடாரை வெல்லும் சீர்க்கோவிந்தா!" என்று கண்ணனைக் கூப்பிடுகிறாள். இங்கே கூடார் எனத் தீயவர்களைச் சொல்லும் சொல் மிக அழகாய் ஆண்டாளால் சொல்லப் பட்டிருக்கிறது. சாதாரணமாய்க் கெட்டவங்க என்று சொல்லுவதில் உள்ள கடுமை இங்கே குறைக்கப் பட்டுக் கூடார் என்று அவர்களைக் குறிப்பிட்டிருப்பதன் மூலம் தன் மென்மையான போக்கையும், நாகரீகத்தையும் ஆண்டாள் வெளிப்படுத்தி இருக்கிறாள். இப்படிக் கூப்பிட்டு இறைவனைப் பாடிப் பணிந்து நோன்பு நூற்றுத் தாங்கள் அடையப் போகும் அணிகலன்களையும் அந்நாளைய வழக்கப் படி குறிப்பிடுகிறாள் ஆண்டாள்.
இந்த 27-ம் நாளிலே தாங்கள் கொண்ட பாவை நோன்பை முடிக்கும் விதமாய் இந்தப் பாடலை ஆண்டாள் பாடி இருக்கின்றாள். அது வரை நெய் உண்ணாமல், பால் உண்ணாமல்,மையிட்டு எழுதாமல், மலரிட்டு முடியாமல் இருந்த வந்த பெண்கள் அன்று முதல் நல்ல ஆடை அணிகலன்கள் மட்டுமில்லாமல் :
""அதன் பின்னே பால்சோறு
மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!" எனச் சொல்கின்றாள். சொல்லின் திறம் மட்டுமில்லாமல் கூடி இருந்து அனைவரும் உண்ணும் பாங்கையும் எடுத்து உரைக்கும் இந்தப் பாடல் இன்று அதாவது ஜனவரி 12-ம் நாளான இன்று.

இன்று மதுரை மாநகரில் அனைவர் வீட்டிலும் பால் பொங்கும், நெய் மணக்கும், பொங்கல் உண்ணும் மக்கள் அனைத்து இல்லங்களிலும். அனைத்துப் பெருமாள் கோவிலிலும் இன்று நெய் மணக்கும் சர்க்கரைப் பொங்கல் பிரசாதமாய்க் கொடுக்கப் படும். முக்கியமாய் அழகர் கோயில் அழகருக்கு இன்று செய்யப் படும் நைவேத்தியம் ஆண்டாள் அவள் காலத்திலே வாய்மொழியாக வேண்டிக் கொண்ட ஒன்று ஆகும்.

"நாறு நறும் பொழில் மாவிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்;
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
எறுதிருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ ?"

திருமாலிருஞ்சோலை நம்பியான அழகருக்கு நூறு தடா வெண்ணெயை உருக்கிக் காய்ச்சி, பதமாய் நெய்யாக்கி, அந்த நெய்யால் நூறு தடா நிறைய அக்கார அடிசில் செய்து வைப்பதாயும், அழகரை அதை ஏற்றுக் கொள்ளுமாறும் தன் வேண்டுகோளை நிறைவேற்றுமாறும் கேட்டுக் கொள்கிறாள் ஆண்டாள். அவள் செய்கின்றாளோ இல்லையோ, அவள் பாமாலையால் மகிழ்ந்த எம்பெருமான் அவள் வேண்டுகோளை நிறைவேற்றுகின்றான். ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதருடன் ஐக்கியம் ஆகின்றாள் ஆண்டாள். வருஷங்கள் பறக்கின்றன. நூற்றாண்டுகள் செல்கின்றன. வைணவத்தை உய்விக்க வந்த எம்பெருமானாக ராமானுஜர் தோன்றி, வைணவத்தை மட்டுமில்லாமல் கோயில் வழிபாட்டு முறைகளையும் செம்மைப் படுத்தி வந்த சமயம் அது.

அப்போது ஆண்டாள் பாசுரத்தைப் படித்து வந்த ராமானுஜர், தற்செயலாகப் பாண்டிய நாட்டுக்குச் சென்றார். அழகனைக் கண்டார். அவன் அழகில் மெய்ம்மறந்தார். அன்று இரவு அவருக்கு ஆண்டாளின் வேண்டுகோளும், அவள் அதை நிறைவேற்றாததும் நினைவுக்கு வந்தது. ஆண்டாள் செய்யவில்லை என்றால் என்ன? அதை நாம் நிறைவேற்றுவோம் என எண்ணிக் கொண்டு கோயிலில் சொல்லி ஆண்டாளின் விருப்பம் போலவே நூறு தடா நிறைய வெண்ணெய் வாங்கிக் காய்ச்சி, நூறு தடா நிறைய அக்கார அடிசில் செய்ய்ச் சொல்லி அழகனுக்குப் படைக்கின்றார். அழகன் மனம் மகிழ்ந்தானோ இல்லையோ, ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் மனம் மகிழ்ந்தாள். அழகர் கோயிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்றார் ராமானுஜர். ஆண்டாளின் திருக்கோயிலினுள் நுழைந்தார். நுழையும்போதே, ஒரு குரல், "என் அண்ணாரே!" எனக் குயில் போலக் கூவியது. சுற்றும் முற்றும் பார்த்தால் அழகிய ஆண்டாள் விக்ரகம் அசைந்து, அசைந்து வந்து ராமானுஜரைப் பார்த்து, " என் அண்ணாரே, தங்கையின் வேண்டுகோளை ஒரு அண்ணன் தான் நிறைவேற்றுவான். என் வேண்டுதலை நிறைவேற்றிய நீர் என் அண்ணார்!" எனச் சொல்லி மறைந்தாள். அன்று முதல் தென் மாவட்டங்களில் "கூடாரவல்லி" என்று செல்லமாய் அழைக்கப் படும் கூடாரவல்லித் திருநாள் விமரிசையாகக் கொண்டாடப் பட்டு வருகின்றது. இப்போ எப்படினு தெரியாது!

Thursday, January 10, 2008

நான் அடிக்கடி செல்லும் வலைத் தளம் இது தான்!

ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பதிவு பிடிக்கும். விடாமல் செல்வார்கள், சிலருக்கு ஆன்மீகம், சிலருக்குத் தமிழ் இலக்கியம், சிலருக்கு இலக்கணம், என்னை மாதிரி ஆளுங்களுக்கு மொக்கை என்று ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு டேஸ்ட். என்றாலும் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக என்னைக் கவர நினைத்து, ஆனால் எரிச்சல் அடைய வைத்த ஒரே வலைத்தளம் கீழ்க்கண்டவையே. இதில் முதலில் உள்ளது, சில சமயம் இணையம் வந்தாலும் என்னோட ப்ளாகை நான் திறக்கும்போதே இப்படிச் சொல்லும். மற்ற சமயங்களில் இரண்டாவது ஆப்ஷன்.


1.Page Not Found

The requested URL was not found on this server. Please visit the Blogger homepage or the Blogger Knowledge Base for further assistance.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


Internet Explorer cannot display the webpage

Most likely causes:
You are not connected to the Internet.
The website is encountering problems.
There might be a typing error in the address.

What you can try:
Diagnose Connection Problems

More information

This problem can be caused by a variety of issues, including:

Internet connectivity has been lost.
The website is temporarily unavailable.
The Domain Name Server (DNS) is not reachable.
The Domain Name Server (DNS) does not have a listing for the website's domain.
If this is an HTTPS (secure) address, click Tools, click Internet Options, click Advanced, and check to be sure the SSL and TLS protocols are enabled under the security section.

For offline users

You can still view subscribed feeds and some recently viewed webpages.
To view subscribed feeds

Click the Favorites Center button , click Feeds, and then click the feed you want to view.

To view recently visited webpages (might not work on all pages)

Click Tools , and then click Work Offline.
Click the Favorites Center button , click History, and then click the page you want to view.

Monday, January 07, 2008

பட்டமெல்லாம் வேணாங்க! ஒத்துக்கறேன் நானே! :P


ஏற்கெனவே சிஷ்யகேடிகளோட பட்டமளிப்பு விழாவில் கொடுத்த பட்டங்களால் மூச்சுத் திணறிட்டு இருக்கும் என்னை, ரசிகன் "மொக்கை" போட அழைத்திருக்கிறார். இது போதாது என்று மஞ்சூர் வேறே மறுபடி சபதம் போட அழைத்திருக்கிறார். இப்படி எல்லாரும் என்னைப் "போட்டுத் தாக்கு" தாக்கு என்று தாக்குவதைப் பார்த்தால், ஆஹா, நாம இவ்வளவு, பிரபலமா என்ற மயக்கம் எல்லாம் சுத்தமாய் வரலை. இது ஏதோ சதி வேலை, நம்ம கோபிநாத், (உண்மைத் தொண்டர்) சொன்னாப்பலே ஏதோ எதிர்க்கட்சி சதினு தான் தோணுது. எல்லாருமாச் சேர்ந்து இணைய இணைப்பை வேறே வர விடாமல் செய்துட்டாங்க. (ம.சா. இது தான் கடைசித் தரமா இருக்கணும், இந்தப் புலம்பல் சொல்லிட்டேன்) சீனா சார், ம.சா. தெரியாது? அதான் தமிழ் சினிமாவிலே எல்லாம் ஹீரோ, ஹீரோயின், சில சமயம் வில்லன் எல்லாருக்கும் பெரிய நிலைக்கண்ணாடியில் தெரியுமே அவங்க பிம்பமே, வந்து சில சமயம் புத்தி சொல்லும், சில சமயம் சிரிக்கும், சில சமயம் பல பிம்பங்கள் சுத்தி வந்து நம்மையும் பயமுறுத்துமே, அதான் சார் ம.சா. இப்போப் புரியுதா? (குழம்பாமல் இருந்தால் சரி, இதான் மொக்கை போஸ்ட் ஆச்சே, இஷ்டத்துக்கு அடிக்கலாமே)

நேத்திக்குப் புதுசா வந்துட்டு என்னோட பிரதான சிஷ்யன் அப்படினு ரசிகன் சொல்லிக்கிறதை யாரும் நம்ப வேண்டாம். அதெல்லாம் வரிசையில் பல பேர் காத்திருக்காங்க, சீனியாரிட்டியை மெயிண்டெயின் பண்ண வேண்டாமா? அதுவும் நான் தாயுள்ளத்தோடு எல்லாரையும் பாரபட்சம் இன்றி அனைவருக்கும் "ஆப்பு" வைத்து விட்டுச் சொ.செ.சூ வைத்துக்கொள்ளும் ஆள் வேறே. அப்புறம் ரசிகன் வேறே படம் போடுங்க, படம் போடுங்கனு சாட்டிங்கில் பார்க்கும்போதெல்லாம் ஒரே பிடுங்கல், தொல்லை தாங்கலை, அதான் ஒரே முடிவு படம் போட்டுடறதுன்னு. இந்தப் படத்தில் இருப்பது நான் தான், நானே தான், சந்தேகமே இல்லை, வேணும்னா இதைப் பார்த்திருக்கும் என் உ.பி.ச.வையும், என்னை நேரில் பார்த்திருக்கும் மணிப்பயல், (திராச, சார், மணிப்பயல் பேர் சேர்த்துட்டேன், இன்னும் கீழே பாருங்க, அசந்துடுவீங்க!) சூடான் புலி, வேதா(ள்), கண்ணபிரான் ரவிசங்கர், திராச சார், பாலராஜன் கீதா போன்ற நல்லவர்களையும் வல்லவர்களையும் கேட்டுக்குங்க. அப்புறம் நானும் நாலு பேரை அழைக்கணுமாமே மொக்கைக்கு யாரைக் கூப்பிடுவது?

அம்பி எழுதறதே மொக்கை தான், அதுவும் இப்போ கணேசன் ரொம்ப பிசி, அதனால் அம்பிக்கு எழுதித் தர முடியாது, கார்த்திக் மொக்கை போடற மூடில் இல்லை, வேதா(ள்), ஏற்கெனவே அர்ரியர்ஸ் வச்சிருக்காங்க, அபி அப்பா, வேணாம் சாமி, பயமா இருக்கு, சிரிக்க முடியலை, அன்னிக்குப் பாருங்க, வயிறு வலிச்சு டாக்டர் கிட்டேப் போகற மாதிரி ஆயிடுச்சு, :P கோபிநாத், ஹையா ஜாலி, கோபிநாத் சரியான ஆள், அப்புறம் மணிப்பயல், ஹிஹிஹி, மொக்கையே போடத் தெரியாது, அதனால் இவரும் சரியான சாய்ஸ் தான், ஆனால் பாருங்க மணிப்பயல் அந்த ஷேர் விஷயம் வரக்கூடாது, சரியா? அப்புறம் பாருங்க 2 சீரியஸான ஆளுங்க வரப் போறாங்க, மொக்கை போட யாரு தெரியுமா?
ஒண்ணு துளசி கோபால், என்னை ப்ளாக் எழுத மறைமுகமாய்த் தூண்டியதால் கொடுக்கும் தண்டனை, அப்புறம் ரொம்பவே சீரியஸான ஆள், நுனிப்புல் உஷா, இவங்க மொக்கை போட்டே பார்த்ததில்லை, அதனால் உஷா, ஒரு சேஞ்சுக்கு, கொஞ்சம் ரிலாக்ஸா மொக்கை எழுதுங்களேன், பார்ப்போம் ஒரு வேண்டுகோள் தான்.

கோபிநாத்
மணிப்பயல்
துளசி கோபால்
நுனிப்புல் உஷா

படத்தைப் பார்த்து மயங்கிடாதீங்க, நானே தான், அம்பி, இப்போ என்ன சொல்றீங்க? :P :P

Friday, January 04, 2008

புத்தாண்டு சபதமா? நானா?

திடீரென சுவாதி தனி மெயில் கொடுத்து எனக்கு ஒரு சங்கிலித் தொடருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அவரை ஷைலஜா அழைத்திருக்கிறார். விஷயம் என்ன வெனில் புத்தாண்டு களில் எடுத்துக்கொள்ளும் சபதம் பற்றியது. பலரும் புத்தாண்டு பிறக்கும்போது பலவிதமாய்ச் சபதம் எடுத்துக் கொள்ளுவது உண்டு. என்னைப் பொறுத்த வரையில் எந்தச் சபதமும் இதுவரை எடுத்துக் கொண்டதில்லை. நம்பிக்கைகளே வாழ்க்கை என்பதில் நம்பிக்கை உண்டென்றாலும் புத்தாண்டு சபதங்கள் கடைசிவரை, அல்லது ஒரு வாரத்துக்குக் கூடக் கடைப்பிடிக்க முடிவது இல்லை. என்னளவில் சபதம் எடுத்துச் சோதிக்கவில்லை எனினும் எடுத்தவர்களையும், அதில் தோற்றவர்களையும் தெரியும். பொதுவாக அன்றன்றைய வேலைகளை ஒழுங்காகக் குறைவின்றிச் செய்தாலே போதுமென்ற நினைப்பு உள்ளவள் நான். ஆனால் சில சமயம் புத்தாண்டு அன்று அம்மாதிரியாக முடியாமல் ஏதானும் தடைகள் குறுக்கிடும். சில சமயம் கோவிலுக்குக் கூடப் போக முடியாது. பொதுவாகப் புத்தாண்டு அன்று வெளியே போவதையே நான் அநேகமாய்த் தவிர்த்து விடுகிறேன். தவிர்த்தும் விடுவேன். கூட்டம் தான் காரணம்.

. எனக்கென விதிக்கப் பட்டது இறை அருளில் குறையவும் போவதில்லை, கூடவும் போவதில்லை, என் வாழ்க்கை நான் தான் வாழ்ந்தாக வேண்டும், அல்லவா? என்னுடைய இந்த வாழ்க்கையில் எத்தனையோ அனுபவங்கள். பிரச்னைகள். பல விஷயங்களில் ஒரு பலிக்கடாவாக ஆக்கப் பட்டிருக்கிறேன். காரணமின்றி அவமானங்களைச் சுமந்திருக்கிறேன், சுமக்கிறேன். சுகங்களிலும் அனைவரையும் மறக்காமல் பங்கெடுக்கச் செய்திருக்கிறேன். துக்கங்களில் மனம் நைந்து போனாலும் வெளியே தெரியாமல் இருந்திருக்கிறேன், இருப்பேன். இருக்க இறை அருள் வேண்டும். வாழ்வின் பல நொடிகளில் இறை அருளால் காப்பாற்றப் பட்ட, இறை அருள் துணை புரிந்த பல நிகழ்ச்சிகள் உண்டு. இந்த நீண்ட வாழ்வில் என்னோட அனுபவங்களை விடாமல் எழுதினால் தினம் மூன்று பதிவு இல்லை, எத்தனை போட்டாலும் போதாது. என்றாலும் அனைத்தையும் கடந்து போகச் செய்து என்னை அத்தனை கஷ்டங்களிலும், சுகங்களிலும், இவற்றைத் தந்தவனை மறக்காமல் செய்த அந்த உணர்வு தான் பக்தி என்றால் அது என்னிடம் இருந்தாலே போதும். இன்று உண்ணும் உணவும், பருகும் நீர், இருக்கும் இடம் எல்லாம் அவன் அருளாலே கிடைத்தவை. ஆகவே "இப்போது இருப்பது போல் எப்போது இருக்க வை இறைவா! இன்னொரு பிறவி என எனக்கிருந்தால், நான் மீண்டும் பிறந்தால், அப்போதும் நான் இதே மாதிரி இருக்க வேண்டும் என்பதே என் ஆசை!" இது தான் என்னோட சபதமும் கூட.

நானும் நாலு பேரை அழைக்க வேண்டும். யாரை அழைப்பது? வேதா ஏற்கெனவே ஒரு சங்கிலிப் பதிவுக்கு அழைத்து எழுதவே இல்லை. அம்பி 2 மாசம் ப்ளாகுக்கே வரப் போவதில்லையாம். வல்லி சிம்ஹன் இன்னும் கொஞ்ச நாள் பிசியோ பிசி. ரசிகன் சொதப்பலாயிடுமோ? தவிர, ஒரு எழுத்துக்கு ஒரு தப்பு வேறே, இந்த அழகில் நான் டீச்சராம், எல்லாம் ஹெட் லெட்டர்! :P கைப்புள்ள, மாவரைக்கவே நேரம் இல்லை, இப்போ பட்டூரா வேறே செய்யணும்னு கேட்டுட்டு இருக்கார். ராம், "மதுரைமாநகரம்" பதிவர்களைக் கட்டி மேய்க்கவே முடியலை, கார்த்திக், ஆளே காணோம், அபி அப்பா, ஹையோ, தப்புத் தப்பா எழுதிட்டு, படிக்கும்போது கண்ணாடி உடைஞ்சு, நினைக்கவே பயம்மா இருக்கு, கோபிநாத், "வலைச்சரம்" பிசி. புலி, இப்போத் தான் குகையில் இருந்து வந்திருக்கு. மதுரையம்பதி, ம்ஹூம் இப்போ நேரம் சரியில்லை. :( திராச, சார், அப்பாடி, கடைசியில் ஒரு ஆள் மாட்டிக்கிட்டார், சார், உமா மேடம் கிட்டே கேட்டுக்குங்க, என்ன சபதம் எடுக்கிறதுன்னு? ஒரு பதிவு போட்டுடுங்களேன், ப்ளீஸ்!

ஒருத்தர் மாட்டியாச்சு, இன்னும் வேறே யாரு? இ.கொ. மறந்தே போயிட்டேனே? பின்னூட்டப் புயல், எனக்குக் கோனார் நோட்ஸ் இலவசமாய் சப்ளை பண்ணிய புண்ணியாத்மா, அவரோட பதிவுகளுக்கு வெற்றிலை, பாக்கு வச்சு அழைக்கிறார், (இப்போ என்ன காணோம்? ஒண்ணும் எழுதலியா, வந்து பார்க்க நேரமே இல்லை! :P) அடுத்து, மூன்றாவதாக நானானி, நீங்க எழுதுங்களேன், ப்ளீஸ், இப்போ நீங்க ஃப்ரீதானே? ம்ம்ம்ம்ம்ம்? அடுத்து 4-வதாக யாரு? டிடி அக்காஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், நீங்க சபதம் போடுங்க, பார்க்கலாம், அம்பிக்கு இனிமே ரசம் சப்ளை கிடையாதுன்னு சபதம் போட்டீங்கன்னா, உங்களை விட நல்லவங்க யாருமே கிடையாது.

நான் அழைக்கும் நால்வர்:

திராச
Free Mason
நானானி
டிடி அக்கா

சீக்கிரமாச் சபதம் எடுத்து என்னோட மானத்தைக் காப்பாத்துங்கப்பா!

Wednesday, January 02, 2008

பில்லா பட விமரிசனம், கார்த்திக்குக்காக ஒரு பதிவு!


ரொம்பா நாளாச்சு "பொதிகை"த் தொலைக்காட்சி பற்றி எழுதி. கை துரு துரு னு எழுது, எழுதுனு சொல்லிட்டே இருந்தது. இருந்தாலும் சரியான விஷயம் மாட்ட வேணாமா? இப்போத் தான் பொதிகையில் "பில்லா" படம் முதல் முறையாப் பார்த்தேன். அதனால் விமரிசனம் அதைப் பத்தியே எழுதலாம்னு முடிவு செய்தேன். அது ஒரு பக்கம் இருக்கட்டும், இன்னிக்குக் காலம்பர 9-30 மணிக்குப் பார்த்த போது டாக்டர் என்.வி.சுப்பராமன் என்பவர், கண்ணனின் "பால லீலை" பற்றிய ஒரு இசைச் சித்திரம் கொடுத்துக் கொண்டிருந்தார். உடன் பாடியவர் திருமதி என்.வி. அலமேலுனு போட்டிருந்தது. நிகழ்ச்சியைப் பாதியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த காரணத்தால் யார் நிகழ்ச்சினு புரியாமல் மண்டை வெடிச்சுடும் போல் இருந்தது. பொதிகையில் சில சமயம் பேர் போடாமலே நிகழ்ச்சிப் "படைப்பு, பொதிகைத் தொலைக்காட்சி"னு மட்டும் போட்டுட்டுப் பேசாமல் போயிடுவாங்க, அவங்களுக்கு என்ன தெரியும் எங்களுக்குள் நடக்கும் வாத, விவாதம் எல்லாம், ஒரு நாளைக்கு வந்து பார்த்தால் புரியும், அப்புறம் ஒழுங்கா பேர் எல்லாம் போடுவாங்க, நிகழ்ச்சியின் நடுவிலே கூட! :P இன்னிக்கு என்னமோ அதிசயமா நிகழ்ச்சி முடிஞ்சதும் எல்லார் பேரையும் போட்டுட்டாங்க! அதனால் தெரிந்து கொள்ள முடிஞ்சது. நிகழ்ச்சி நல்லாவே இருந்தது, ஆனால் "ஆடாது அசங்காது வா!" பாட்டைப் பாடிய விதம் இதுவரை கேட்காத ராகத்தில் (கேட்டால் மட்டும் ராகம் பேர் தெரிஞ்சுடுமாக்கும்? ம.சா. கேள்வி!) இருந்தது, என்றாலும் நன்றாகவே பாடினார். நல்ல நிகழ்ச்சி. இப்போ "பில்லா" திரைப்பட விமரிசனம்.

"பில்லா" படத்தைப் பற்றியே எல்லாரும் ரொம்பப் பேசிக்கும்போதெல்லாம், நாம் இந்தப் படத்தை எப்படியாவது பார்க்கணும்னு நினைச்சுப்பேன். அதுக்கு ஞாயிறு அன்றுதான் நேரம் வாய்த்தது, என்றாலும், வழக்கம் போல் முழுப்படமும் பார்க்க முடியவில்லை! :D நான் பார்க்க ஆரம்பித்த போது டி.எஸ்.பி.யான பாலாஜி காரை ஓட்ட, பின்னால் பில்லாவான ரஜினி துப்பாக்கி முனையில் அவரை மிரட்டிக் கொண்டிருந்தார். ஹிஹிஹி, அஜித் நடிச்ச பில்லானு வந்தவங்களுக்கு, சாரி, நான் பார்த்தது, ரஜினியோட பில்லாதான். எப்போ வந்ததுனு தெரியலை, இப்போத் தான் பார்த்தேன். :D மிரட்டியவர் திடீர்னு செத்து விழ, அவரைக் கல்லறையில் புதைத்த பாலாஜி, இதை யார் கிட்டேயும் சொல்லாததும் கொஞ்சம் குழப்பமாய் இருந்தது. எப்படியும் இன்னொரு ரஜினி இருப்பார், அல்லது, இந்த ரஜினியே சாகவில்லை, எல்லாம் ஒரு நாடகம், போலீசோடு சேர்ந்து, சவப்பெட்டிக்கு அடியில் இருக்கும் துவாரம் வழியாகத் தப்பி வந்துவிடுவார் என்று நம்பிக்கொண்டு மேற்கொண்டு படத்தைப் பார்த்தேன்.

கடைசியில் பார்த்தால் மனோரமாவோடு, நாட்டியம் ஆடிப் பிழைக்கும் ரஜினிதான் பில்லாவாக மாறுகிறார். அவரின் இந்த ஸ்டைல் தான் அஜித்தால் "வரலாறு" படத்தில் ஜி3 பண்ண ஒரு காரணம்னு நான் சொன்னால் ஏற்கெனவே என்னிடம் கோபத்தில் இருக்கும், நம்ம கார்த்திக்குக்கு இன்னும் கோபம் வரும், அதனால் அதை உங்கள் ஊகத்துக்கே விடறேன். பில்லாவாக மாற்றப்பட்ட ராஜப்பாவான ரஜினியின் நடவடிக்கையில் சந்தேகப் படும் அந்த நடிகை யாருன்னு தெரியலை. பில்லாவைக் கொல்லும் வெறியுடன் இருக்கும் ஸ்ரீப்ரியாவுக்கும் சந்தேகம் வரலை! ஏனெனில் அந்த சந்தேகக் கேஸ் நடிகையுடன் தான் பழைய பில்லா நெருக்கம்னு சொல்றாங்க. ஆனால் அந்தக் காட்சிகள் காட்டினாங்களான்னு தெரியலை, ஹிஹிஹி, லேட்டாப் பார்த்தேன் இல்லை? அப்பாடி, ஒருவழியா, இந்த ராஜப்பா பில்லா இல்லைனு தெரிஞ்சு, ஸ்ரீப்ரியாவுக்கும் இவர்தான் ஹீரோனு புரிஞ்சு, இவர் மேல் காதல் வந்து, இரண்டு பேரும் டூயட் பாடி, என்னத்தை டூயட்? பாட்டு ஒண்ணும் மனசிலேயே நிக்கலை! அப்புறம் அனாவசியமாய் பாலாஜியைச் சாகடிச்சு, அந்தக் காட்சியைப் பார்க்க முடியலை, வேறே ஏதோ வேலையாப் போயிட்டேன், அப்புறம் ஃப்ளாஷ் பாக்கில் யார் கொன்னாங்கனு காட்டும்போதுதான் பார்த்தேன். அது என்னமோ ஆச்சரியமா இருக்கு! ரஜினி சிவப்புக் கலர் டயரியைத் தூக்கிப் போட்டுட்டு, அது கீழே இறங்குறதுக்குள், எதிரிகளைப் பந்தாடுவதும், சரியா அந்த டயரி அப்புறமா மெதுவா ரஜினி கையிலே வந்து இறங்குறதும், நானும் முயற்சி செய்து பார்த்தேன், நான் தூக்கிப் போட்டுட்டு, யாரை அடிக்கிறதுனு யோசிக்கிறதுக்குள், என் டயரி கீழே வந்து என்னையே அடிச்சுட்டது. இந்தப் படம் ரீமேக்கில் அஜித்தை வச்சு எடுத்திருக்கிறது இன்னும் பார்க்கலை, தொலைக்காட்சிகளில் வரும் விமரிசனம் கூடப் பார்க்கவில்லை. நான் பார்க்கும்போதெல்லாம் திரும்பத் திரும்பக் கல்லூரி படத்தின் வகுப்பறையில் "காமாட்சி" அறிமுகம் செய்து கொள்ளும் காட்சியும், பஸ்ஸில் மாணவர்கள் கலாட்டா பண்ணுவதும் தான் காட்டுகிறார்கள். எல்லாம் ஹெட் லெட்டர்.
**************************************************************************************

இந்தப் பதிவு கார்த்திக்குக்கும், ரசிகனுக்கும் சமர்ப்பணம். கார்த்திக் ரொம்ப நாளா என்னோட பதிவுகளுக்கு வரதே இல்லை. அந்த வருத்தத்திலும், ஒவ்வொரு முறை நான் ஊருக்குப் போகும்போதெல்லாம் கிட்டத்தட்ட போஸ்டர் ஒட்டி, அலங்கார வளைவுகள் வச்சு, மலர் அலங்காரமெல்லாம் செய்து வலை உலகம் முழுக்கத் தெரிவிக்கும் ஒரு அணுக்கத் தொண்டர் இப்போ இப்படி சுறுசுறுப்பே இல்லாமல் உட்கார்ந்திருக்கிறாரே, அவரைத் தட்டி எழுப்பும் விதமாய் எழுதி இருக்கேன்.

அடுத்து ரசிகனுக்கு என்னோட ஃபோட்டோ போடணுமாம். பயந்துக்குவீங்கனு சொன்னால் கேட்கிறதே இல்லை. கமல், ரஜினி, சூர்யா, அசின், ஸ்ரேயா, த்ரிஷா இன்னும் எல்லார் படமும் இருக்கு, உங்க படம் மட்டும் இல்லைனு சொல்றார். கூடிய சீக்கிரம் அவரோட ஆவலை நிறைவேத்தறேன். அதுவரை பொதிகை பத்தி ரொம்ப நாளா நான் ஒண்ணுமே எழுதலைங்கிற அவரோட குறை தீர இந்தப் பதிவு. அப்புறம் அவரோட பதிவிலே வந்து கமெண்டச் சொல்றார். எங்கே? பதிவைத் திறந்தால் கணினியே ஹாங்க் ஆகிடறது. சொன்னால் மனுஷன் கிண்டல் செய்யறார். ஆனால் இன்னும் சிலருக்கும் அந்தப் பிரச்னை இருக்குனு உளவுப்படை தகவல். ஆகவே அவரோட பதிவுக்கு வந்து பின்னூட்டம் போடணும்னால் முதலில் அதை அவர் சரி செய்யணும். அப்புறம், வரலைன்னு சொன்னால் நான் பொறுப்பு இல்லை!