
எல்லாரும் ஃபோட்டோ போஸ்ட் போடறாங்களே, நாம் மட்டும் மொக்கை போஸ்ட் தவிர வேறே எதுவும் போடறதில்லையேனு என்னோட தன்மானம் என்னை உலுக்கிட்டே இருந்துச்சு, அதுவும் கைப்புள்ள திரும்பத் திரும்ப மாவாட்டறதைக் கூட ஃபோட்டோ எடுத்துப் போட்டுட்டு இருக்கிறதைப் பார்த்ததிலே இருந்து அதிகமா ஆயிடுச்சு. அதுவும் சாட்டிங்கில் என் கிட்டே இட்லி என்னோட தங்கமணிக்கு போரடிக்குதாம், வேறே ரெசிபி சொல்லுங்கனு கேட்டு சனா பட்டூரா ரெசிபி கொடுக்கிறேன்னு சொல்லிட்டு வந்தேன், இங்கே வந்து பார்த்தால் மீண்டும் மாவாட்டல்! ஆஹா! தங்கமணியை வாழ்த்தி ஒரு மெயில் தட்டணும்னு நினைச்சுக்கிட்டு எல்லார் பதிவுக்கும் போய் படம் பார்த்துட்டு வந்து, நானும், எங்கப்பாவும் கச்சேரிக்குப் போயிருக்கார்னு இரண்டே இரண்டு படம் மட்டும் இப்போதைக்குப் போட்டிருக்கேன். இது ஹூஸ்டனில் நாங்க Galveston போனப்போ எடுத்தது. அங்கே ஐ-மாக்ஸ், அப்புறம் 3டி, 4டி தியேட்டர்களில் படம் பார்த்தப்போ எடுத்தது எல்லாம் இருக்கு. ஆனால் என்ன கஷ்டம்னா அது எல்லாத்திலேயும் நம்ம திருமுகமும் இருக்கு. அதனால் அதைத் தவிர்த்துவிட்டு இதை மட்டும் போட்டிருக்கேன். அங்கே உள்ள நீர்வாழ் உயிரினங்களின் அருங்காட்சியகத்தில் எடுக்கப் பட்டது இது. நல்லா இருக்கா? என்னது? போட்டியா? இல்லைங்க, நான் போட்டியில் எல்லாம் கலந்துக்கிறதே இல்லை, போட்டி இல்லாமலேயே நிறையப் பட்டமும், பதவியும் நம்ம தொண்டர்கள் கொடுக்கிறாங்களே!:P

காதல் கிளிகள் படம் நன்றாக இருக்கிறது கீதா..வண்ணங்கள் துல்லியமாய்..
ReplyDeleteரெண்டும் படமும் நல்லாயிருக்கு..;))
ReplyDeleteஅழகா இருக்கே கீதா.
ReplyDeleteபோட்டிக்குப் போகாட்ட என்ன,
பசுமையா படம் பார்த்ததெ திருப்தியா இருக்கு.
இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.
கீதா,
ReplyDeleteஉங்களை
டேக் செய்து இருக்கிறேன்.
உங்கள் பெஸ்ட் பதிவு பற்றி எழுத வேண்டும். கொசுறு பதிவும் போடலாம்:)
சரியா.??http://naachiyaar.blogspot.com/2008/01/blog-post_13.html
படங்கள் ரெண்டும் நல்லாருக்கு.
ReplyDelete//ஆனால் என்ன கஷ்டம்னா அது எல்லாத்திலேயும் நம்ம திருமுகமும் இருக்கு. அதனால் அதைத் தவிர்த்துவிட்டு இதை மட்டும் போட்டிருக்கேன்//
குண்டரடிப்பொடிகளுக்குத் தரிசனம் தரக் கூடாதுன்னு ஏன் இந்த கோபம்?
:)
ஏதோ பொம்மையை படம் எடுத்தாப்புல இருக்கே?...
ReplyDeleteகாதல் கிளிகள் கலர் நல்லா பளிச்.
ReplyDeleteமொத படம் டல்லா இருக்கே.
//
கைப்புள்ள said...
குண்டரடிப்பொடிகளுக்குத் தரிசனம் தரக் கூடாதுன்னு ஏன் இந்த கோபம்?
:)
//
ரிப்பீட்டேய்
ஆஹா இப்பதான் பிளாக்கே களைகட்டியிருக்கு. அருமையாண போட்டோக்கள். ஆமாம் வேதா எங்களுக்கெல்லாம் இந்த மாதிரி உதவியெல்லாம் பண்ணக்கூடாதா?
ReplyDeletepadam nalla irukku !!
ReplyDelete