எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Monday, January 07, 2008
பட்டமெல்லாம் வேணாங்க! ஒத்துக்கறேன் நானே! :P
ஏற்கெனவே சிஷ்யகேடிகளோட பட்டமளிப்பு விழாவில் கொடுத்த பட்டங்களால் மூச்சுத் திணறிட்டு இருக்கும் என்னை, ரசிகன் "மொக்கை" போட அழைத்திருக்கிறார். இது போதாது என்று மஞ்சூர் வேறே மறுபடி சபதம் போட அழைத்திருக்கிறார். இப்படி எல்லாரும் என்னைப் "போட்டுத் தாக்கு" தாக்கு என்று தாக்குவதைப் பார்த்தால், ஆஹா, நாம இவ்வளவு, பிரபலமா என்ற மயக்கம் எல்லாம் சுத்தமாய் வரலை. இது ஏதோ சதி வேலை, நம்ம கோபிநாத், (உண்மைத் தொண்டர்) சொன்னாப்பலே ஏதோ எதிர்க்கட்சி சதினு தான் தோணுது. எல்லாருமாச் சேர்ந்து இணைய இணைப்பை வேறே வர விடாமல் செய்துட்டாங்க. (ம.சா. இது தான் கடைசித் தரமா இருக்கணும், இந்தப் புலம்பல் சொல்லிட்டேன்) சீனா சார், ம.சா. தெரியாது? அதான் தமிழ் சினிமாவிலே எல்லாம் ஹீரோ, ஹீரோயின், சில சமயம் வில்லன் எல்லாருக்கும் பெரிய நிலைக்கண்ணாடியில் தெரியுமே அவங்க பிம்பமே, வந்து சில சமயம் புத்தி சொல்லும், சில சமயம் சிரிக்கும், சில சமயம் பல பிம்பங்கள் சுத்தி வந்து நம்மையும் பயமுறுத்துமே, அதான் சார் ம.சா. இப்போப் புரியுதா? (குழம்பாமல் இருந்தால் சரி, இதான் மொக்கை போஸ்ட் ஆச்சே, இஷ்டத்துக்கு அடிக்கலாமே)
நேத்திக்குப் புதுசா வந்துட்டு என்னோட பிரதான சிஷ்யன் அப்படினு ரசிகன் சொல்லிக்கிறதை யாரும் நம்ப வேண்டாம். அதெல்லாம் வரிசையில் பல பேர் காத்திருக்காங்க, சீனியாரிட்டியை மெயிண்டெயின் பண்ண வேண்டாமா? அதுவும் நான் தாயுள்ளத்தோடு எல்லாரையும் பாரபட்சம் இன்றி அனைவருக்கும் "ஆப்பு" வைத்து விட்டுச் சொ.செ.சூ வைத்துக்கொள்ளும் ஆள் வேறே. அப்புறம் ரசிகன் வேறே படம் போடுங்க, படம் போடுங்கனு சாட்டிங்கில் பார்க்கும்போதெல்லாம் ஒரே பிடுங்கல், தொல்லை தாங்கலை, அதான் ஒரே முடிவு படம் போட்டுடறதுன்னு. இந்தப் படத்தில் இருப்பது நான் தான், நானே தான், சந்தேகமே இல்லை, வேணும்னா இதைப் பார்த்திருக்கும் என் உ.பி.ச.வையும், என்னை நேரில் பார்த்திருக்கும் மணிப்பயல், (திராச, சார், மணிப்பயல் பேர் சேர்த்துட்டேன், இன்னும் கீழே பாருங்க, அசந்துடுவீங்க!) சூடான் புலி, வேதா(ள்), கண்ணபிரான் ரவிசங்கர், திராச சார், பாலராஜன் கீதா போன்ற நல்லவர்களையும் வல்லவர்களையும் கேட்டுக்குங்க. அப்புறம் நானும் நாலு பேரை அழைக்கணுமாமே மொக்கைக்கு யாரைக் கூப்பிடுவது?
அம்பி எழுதறதே மொக்கை தான், அதுவும் இப்போ கணேசன் ரொம்ப பிசி, அதனால் அம்பிக்கு எழுதித் தர முடியாது, கார்த்திக் மொக்கை போடற மூடில் இல்லை, வேதா(ள்), ஏற்கெனவே அர்ரியர்ஸ் வச்சிருக்காங்க, அபி அப்பா, வேணாம் சாமி, பயமா இருக்கு, சிரிக்க முடியலை, அன்னிக்குப் பாருங்க, வயிறு வலிச்சு டாக்டர் கிட்டேப் போகற மாதிரி ஆயிடுச்சு, :P கோபிநாத், ஹையா ஜாலி, கோபிநாத் சரியான ஆள், அப்புறம் மணிப்பயல், ஹிஹிஹி, மொக்கையே போடத் தெரியாது, அதனால் இவரும் சரியான சாய்ஸ் தான், ஆனால் பாருங்க மணிப்பயல் அந்த ஷேர் விஷயம் வரக்கூடாது, சரியா? அப்புறம் பாருங்க 2 சீரியஸான ஆளுங்க வரப் போறாங்க, மொக்கை போட யாரு தெரியுமா?
ஒண்ணு துளசி கோபால், என்னை ப்ளாக் எழுத மறைமுகமாய்த் தூண்டியதால் கொடுக்கும் தண்டனை, அப்புறம் ரொம்பவே சீரியஸான ஆள், நுனிப்புல் உஷா, இவங்க மொக்கை போட்டே பார்த்ததில்லை, அதனால் உஷா, ஒரு சேஞ்சுக்கு, கொஞ்சம் ரிலாக்ஸா மொக்கை எழுதுங்களேன், பார்ப்போம் ஒரு வேண்டுகோள் தான்.
கோபிநாத்
மணிப்பயல்
துளசி கோபால்
நுனிப்புல் உஷா
படத்தைப் பார்த்து மயங்கிடாதீங்க, நானே தான், அம்பி, இப்போ என்ன சொல்றீங்க? :P :P
Subscribe to:
Post Comments (Atom)
அஹா என்ன ஒரு பவ்யம்,களை,சாந்தம் முகத்தில்,பார்க்க பார்க்க தேஜஸ் அப்படியே கொள்ளை கொள்ளுதே. இதெல்லாம் யாருக்கு சாம்பு சாருக்குதான்.பயமயமாய் நிற்கிரார்போல. முதல் நம்பதானே.
ReplyDelete// சீனா சார், ம.சா. தெரியாது? அதான் தமிழ் சினிமாவிலே எல்லாம் ஹீரோ, ஹீரோயின், சில சமயம் வில்லன் எல்லாருக்கும் பெரிய நிலைக்கண்ணாடியில் தெரியுமே அவங்க பிம்பமே, வந்து சில சமயம் புத்தி சொல்லும், சில சமயம் சிரிக்கும், சில சமயம் பல பிம்பங்கள் சுத்தி வந்து நம்மையும் பயமுறுத்துமே, அதான் சார் ம.சா. இப்போப் புரியுதா? (குழம்பாமல் இருந்தால் சரி, இதான் மொக்கை போஸ்ட் ஆச்சே, இஷ்டத்துக்கு அடிக்கலாமே)//
ReplyDeleteஅவ்வ்வ்வ்..... சீனா சார்?.. கீதா அக்கா ஏது சொன்னாலும்.. நெசமா சொல்லு.. இது பொய்தானேன்னு அடிக்கடி வந்து புலம்பிட்டு போகுமே.. அதேதான்.. ஆனா அதைத்தான் நம்ம கீதா அக்கா கண்டுகறதே இல்லியே... :P
(மொக்கைக்கு மொக்கை பின்னூட்டம் போட்டா தப்பாங்க டீச்சர்?..)
// இதான் மொக்கை போஸ்ட் ஆச்சே, இஷ்டத்துக்கு அடிக்கலாமே)//
ReplyDeleteஏனுங்க கீதா அக்கா..
இதுக்கு இம்புட்டு யோசிக்கனுமா?.. நீங்க சாதாரணமா எழுதினாலும் அப்படித்தான் இருக்கும்ல்ல...:)))
// ஒண்ணு துளசி கோபால், என்னை ப்ளாக் எழுத மறைமுகமாய்த் தூண்டியதால் கொடுக்கும் தண்டனை,//
ReplyDeleteஓஹோ..இந்த கொடுமைகளுக்கெல்லாம் மூல காரணம் அவிங்க தானா?.. இதுக்கு தண்டனையா தேன் கிண்ணத்துல "மன்னிக்க வேண்டுகிறேன்"பாட்டுக்கு பிட்டு எழுத வைக்கனும்:P
// ரசிகன் வேறே படம் போடுங்க, படம் போடுங்கனு சாட்டிங்கில் பார்க்கும்போதெல்லாம் ஒரே பிடுங்கல், தொல்லை தாங்கலை,//
ReplyDeleteஇப்பவும் அதேத்தான் சொல்லறேன்.. இந்த 1930ம் வருஷ படமெல்லாம் ஓவரு..வேறே படம் போடுங்க,
ஹிஹி..
// ரசிகன் வேறே படம் போடுங்க, படம் போடுங்கனு சாட்டிங்கில் பார்க்கும்போதெல்லாம் ஒரே பிடுங்கல், தொல்லை தாங்கலை,//
ReplyDeleteஇப்பவும் அதேத்தான் சொல்லறேன்.. இந்த 1930ம் வருஷ படமெல்லாம் ஓவரு..வேறே படம் போடுங்க,
ஹிஹி..
ஆனாலும் மொக்கைன்னதும் அதுல குதிச்சு தலைவி,தலைவிதான்னு அடிச்சு(?) சொல்லற மாதிரி கலக்கலா ஒரு மொக்கை போட்டதுக்கு கீதா அக்காவுக்கு நன்றிகள்..
ReplyDeleteஅன்புடன் ரசிகன்...
leave your comment
ReplyDeleteஎன்று பார்த்தவுடன் ஞாபகம் வந்தது.
எங்கள் ஸ்ரீ ராமச்சந்திர மிஷன் ஆசிரமத்தின் வாயிலில் ஒரு அறிவிப்பு .
Leave your shoes and ego here.
இங்கும் அதுவே பொருந்துமோ ?
அல்லது வருவோருக்கு மட்டும் பொருந்துமோ ?
நானறியேன் பராபரமே.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
மொக்கை ரசிக்கும் படியா இருந்துச்சி. :-)
ReplyDeleteமுதல் பாராவில் குழப்பிட்டீங்க. சக்சஸ் சக்சஸ் சக்சஸ். ;-)
பழைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய படத்தை போட்டுட்டீங்க? புதுசு எப்போ?
அப்பா இப்பத்தான் லேசா ஞாபகம் வருகிறது. சாரை நன்றாவே னினைவுக்கு வருகிறது. கண்ணன் பிறந்தபோது உங்களைப் பார்த்த ஞாபகம் இருக்கு. இது மதுரை வடக்கு வெளிவீதி வக்கீல் ஆத்து பின்புறம் உள்ள வீடுதானே. சரியா சொல்லியிருக்கிறேனா என்று தெரியவில்லை.
ReplyDeleteம்ம்ம். சின்ன பொண்ணுன்னு ஒத்துக்கலாம்னா படம் காரைக்கால் அம்மையார் காலமானா இருக்கு. (கேவா கலர் கூட இல்லையே!) அந்த காலத்துல நல்ல பொண்ணா இருந்தாமாதிரி தோணுது!
ReplyDelete\\இந்தப் படத்தில் இருப்பது நான் தான், நானே தான், சந்தேகமே இல்லை,\\\
ReplyDeleteசரித்திர புகழ் வாய்ந்த படத்தை வலையேற்றித் தந்தமைக்கு நன்றியோ நன்றி ;))
\\\ கோபிநாத், ஹையா ஜாலி, கோபிநாத் சரியான ஆள்\\\\
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்
தலைவியின் கட்டளையை விரைவில் முடிக்க பார்க்கிறேன்...:)
:-P
ReplyDelete@திராச, சார், நீங்க தான் முதல் போணி, என்ன சார் இன்னும் சபதம் போடவே இல்லை? படத்தில் தெரியும் வீடு உங்களுக்குத் தெரிஞ்ச வீடுதான், போட்டோ எடுத்தவரும் உங்களுக்குத் தெரிஞ்சவர் தான். கண்டு பிடிங்க, பார்க்கலாம்!
ReplyDelete@ரசிகன், சும்மா அலட்டாதீங்க, ரொம்ப ஆட்டம் ஜாஸ்தியா இருக்கே? என்ன விஷயம்? நான் இணையத்தில் இல்லைனா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
@ஹிஹிஹி, ரசிகரே, துளசி பாவம், அப்பாவி, அவங்க பாட்டுக்கு ஏதோ எழுதிட்டு இருந்தாங்க, நான் வந்து மாட்டி விட்டுட்டேன். சொ.செ.சூ.ங்கிறது இது தானோ?
ReplyDeleteஅப்புறம் நீங்க தான் ஜார்ஜ் புஷ், ராணி எலிசபெத், மன்மோகன் சிங், அப்துல் கலாம், சோனியா காந்தி இவங்க படத்தோட சேர்த்து மாட்டணும்னு கேட்டீங்க இல்லை, அதான் போட்டிருக்கேன். :P
@சூரி சார், நீங்க வந்ததுக்கும், கருத்துக்கும் நன்றி, இந்தப் பக்கம் இப்படித்தான் இருக்கும் சார், இது ஜனரஞ்சகமான பதிவுப்பக்கம்! :D
ReplyDelete@காட்டாறு, ரொம்ப நன்றி
@ஜெயராமன், தப்போ தப்பு, இது மதுரையே இல்லை. சென்னையில் ஒரு வீடு, அப்புறமா கண்ணன் பிறந்தப்போ நான் பள்ளி மாணவி! :))))))) கல்யாணமே அப்புறமாத் தான் ஆச்சு, ஆகவே நீங்க என் கணவரைப் பார்த்திருக்கச் சந்தர்ப்பமே இல்லை, என்னைத் தான் பார்த்திருப்பீங்க, :))))))))))))
ReplyDelete@திவா, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்,. கலர் படமும் இருக்கு, அதான் போட நினைச்சேன், அப்புறமா ஒரு சேஞ்சுக்கு ப்ளாக் அண்ட் வொயிட்டா இருக்கட்டுமேன்னு பார்த்தேன், அதுக்காக இப்படியா? :P
ReplyDelete@கோபிநாத், உங்க வீட்டுகே வந்து அழைப்பிதழ் வச்சிருக்கேன், சீக்கிரமா மொக்கை போட்டுட்டுச் சொல்லுங்க,
@மை ப்ரண்டு? என்ன? :Pயா :P நான் சொல்றேன் பாருங்க :P :P :P :P :P :P :P :P
கீதா, நான் பதிவு எழுத ஆரம்பித்தப்பொழுது எழுத்தில் நான் ஒரு கத்துக்குட்டி. மற்ற ஜாம்பவான்கள்
ReplyDeleteமத்தியில் நான் போடுபவை எல்லாம் மொக்கையாக கருதப்பட்டது. இப்ப, என்னைவிட சூப்பர் மொக்கை பார்ட்டிகள் வந்ததால், எனக்கு கிடைத்த பெயர் பறிக்கப்பட்டுவிட்டது :-)
பி.கு சார் ரொம்ப உயரமா அல்லது நீங்க கொஞ்சம் குள்ளமா :-)
@கீதாமேடம் வேணாம் அப்பறம் நான் பாட்டுக்கு தாமோதர ரெட்டி தெரு போட்டோ எடுத்தவர் திரு. அசோக மித்ரன் என்று உளறி வைப்பேன்
ReplyDelete@உஷா, மொக்கை எல்லாம் நான் தேடிப் பிடிச்சுப் படிக்க முடியுமா என்ன? போடுங்கம்மா மொக்கையை, இப்போ புதுசா,
ReplyDeleteஅப்புறம் சாரும் நல்ல உயரம், நானும் கொஞ்சம் குள்ளம் தான், நீங்க சொல்றது இரண்டுமே சரி! :)))))))))))
திராச சார், ஹிஹிஹிஹி, இப்படிப் போட்டு உடைச்சுட்டீங்களே? :)))))))
காட்டாறு புதுசு எங்கேன்னு கேட்கறாங்க? எதுக்குங்க வீணாய்? இதுவே புதுசுதானே? :P
ReplyDeleteலேட்டஸ்ட் படம் எங்கிட்ட இருக்கு. நான் ரீலீஸ் பண்ணிடவா? :D
ReplyDelete@தும்பி, சீச்சீ, எடுத்த எடுப்பிலேயே தப்பா வருதே? :P அம்பி, உங்க கிட்டே ஏது படம்? பப்படம் தான் இருக்கு! போடுங்க அதைப் பார்க்கலாம்! :P
ReplyDelete@வேதா(ள்), ஹிஹிஹிஹி, டாங்ஸு, டாங்ஸு, அது சரி, ஏதோ உ.கு. இருக்கிறாப்பல ஒரு சின்ன டவுட் வருதே, அதெல்லாம் ஒண்ணும் இல்லையே? :)))))))))
விரைவில் எதிர்பாருங்கள் - இதுதாண்டா மொக்கை!!!!!!!!!!!!!!!
ReplyDeleteகீதா,
ReplyDeleteபடத்துக்கும் இப்போது உங்கள் முகத் தோற்றத்துக்கும் தொடர்பு இருக்கிறதுதானே...நாளை எதேச்சையாய் மதுரையில் பார்த்துக் கொண்டால் கண்டுபிடித்து விடலாம்...
@மணிப்பயல், அதான் ஆப்பீச்சில் ஆணி கூட இல்லைனு சொல்லிட்டீங்களே? :P சீக்கிரம், போடுங்க உங்க மொக்கை போஸ்டை, பின்னே ஆப்பீச்சு போறது வேறே எதுக்காம்? :P
ReplyDelete@பாசமலர், என்ன இப்படிக் கேட்டுட்டீங்க, நான் அதே சின்னப் பொண்ணுதானுங்க! :P
மொக்கையிலும் ஒரு நேர்மை வேணும். இது போங்கு நம்பர் ஒன். சின்னக்குழந்தையா இருக்கறச்சே எடுத்த படத்தையெல்லாம் போடப்பிடாது...போடப்பிடாது...போடப்பிடாது.
ReplyDeleteபடம் போடறேன்னு படம் காட்டிட்டு என்னா ஒரு வில்லத்தனம்?
@கைப்புள்ள, நீங்க கைப்புள்ளன்னா நான் சின்னப் பொண்ணு, தெரியுமில்ல, சின்னப் பொண்ணு, அந்தப் படத்தைப் போடாமல் வேறே எதைப் போட முடியும்? தவிர, "படம்" போடறேன்னு தான் ரசிகனுக்கு வாக்குக் கொடுத்தேன், அதை நிறைவேற்றி உள்ளேன், தாயுள்ளத்தோடு, அதை நினைச்சுப் பாருங்க, வில்லனிலும் பெரிய வில்லனே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.,
ReplyDeleteவர, வர, நீங்க அதியமானாக இருக்காமல் மூவேந்தர்களில் ஒருவராக மாறி இந்த ஒளவைக்கும், அவள் தமிழுக்கும் துரோகம் செய்யப் போகின்றீர்கள். ஆஹா, அடுத்தது, கேடிவியில் பார்த்த க்ளாசிக் மாட்னி, ஒளவையார் பட விமரிசனம், ஒரு விஷயம் கிடைச்சுதே, எழுத! :P
unga tag potachu
ReplyDeleteபடத்தில பார்த்தா ரொம்ப அப்பிராணி மாதிரி இருக்கீங்க,பதிவுகள்ள இந்தப் போடு(மொக்கைப்) போடுறீங்களே !!!! ஒருவேளை ரசிகன் கூட பேச ஆரம்பிச்சதனாலயா???? !!!!!
ReplyDelete(கொளுத்திப் போட்டாச்சுப்பா..)
@அறிவன்,
ReplyDeleteஉங்க ரசிகன் எல்லாம் நேத்து ஆளு, நம்ம மொக்கை, எப்போதிலிருந்து வந்துட்டு இருக்கு? இதைப் பார்த்து ப்ளாக் ஆரம்பிச்சு மொக்கை போட ஆரம்பிச்சவங்களை எல்லாம், துண்டைக் காணோம், துணியைக் காணோம்னு விரட்டி அடிச்சுட்டுத் தனி ஆட்சி செய்யும், "தனிப்பெரும் தலைவி"யான என்னைப் பார்த்து, "ரசிகன் கூடப் பேச ஆரம்பிச்சதாலேயா?" என்று கேட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன். :)))))))))))))))))))
அப்பாவி தானுங்க நானு!, அதான் பார்த்தால் தெரியுதுல்லை? :P
டிடி அக்கா, டாங்ஸு, டாங்ஸு, இணையம் இடம் கொடுத்தால் இன்னிக்கே இப்போவே வரேன், இல்லைனாலும் நாளை வந்து கை கொடுப்பேன். நன்னி, நன்னி! :D
haa haa ரசிகன் படம் கேட்டாலும் கேட்டாரு - கீதா போட்டுட்டாங்கப்பா படம். சாம்பு மாமா பாவம் போல இருக்காரு. ம்ம்ம்ம்ம்
ReplyDeleteம.சா = புரிகிறது
நான் ம.பா ( மறு பாதி - சாம்பு மாமா) ன்னு புரிஞ்சிகிட்டு. உங்களே திட்டிடலாமுன்னு நெனைச்சென் ( தப்புக்காக). ஆனா தப்பிச்சிட்டீங்க. நல்ல வேளை , குற்றம்னு சொல்லி இருந்தா நெத்திக் கண்ணே தொறந்து இருப்பீங்களே !
தப்பிச்சேண்டா சாமி
உங்க ம.சா உங்க ம.பா தானெ
இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்
mama azhaga irukaray !!!!!!!!!! by the by - it seems a painting of your sindoor done with some paint shop i guess. thaniya theriyuthu.
ReplyDelete