எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, January 17, 2008

சாதனை மேல் சாதனை!

வல்லி சிம்ஹன் என்னோட பதிவுகளின் சாதனை பத்தி எழுதச் சொல்லிக் கேட்டிருக்காங்க. என்னனு எழுதறது? எழுதறது எல்லாமே மொக்கையா இருக்கும்போது! இதிலே தன்னடக்கம் எல்லாம் ஒண்ணும் இல்லை! நிஜமே இது தானே! இன்னும் சொல்லப் போனால் சென்னையிலே, எனக்கு இருக்கும் இணைய இணைப்புத் தொந்திரவுக்கு நடுவில் இந்த அளவுக்கு நான் "மொக்கை" போடுவதே ஒரு சாதனை தான். எப்போ வரும், எப்போ போகும்னே சொல்ல முடியாது என்னோட இணைய இணைப்பு. இதை நம்பறவங்களை விட, நம்பாதவங்க தான் அதிகம், அதுவும் எனக்குத் தெரியும்! :P என்றாலும் நம்பறவங்களிலே என்னிடம் அடிக்கடி சாட்டிங் செய்யும் வேதாவுக்கு நல்லாவே தெரியும். இங்கே கேபிள் மேலே வரதால் பிரச்னை என்பதோடு அல்லாமல் சமீப காலமாய் "டேட்டா ஒன் ப்ராட்பாண்ட்" இணைப்பும் சரிவர வரதில்லைனு கேள்விப்பட்டதில் கொஞ்சம் சந்தோஷமா இருக்கு! எங்க தெருவிலேயே இருக்கும் டாட்டா இண்டிகாம் இணைப்பு உள்ளவருக்கும் சனி, ஞாயிறு என்றால் சுத்தமாய் இணைப்பே வரதில்லையாம். அவரும் தினம், தினம் சண்டை போடறேன், ஆனால் யாருமே வந்து கவனிக்கிறதில்ல என்கிறார். கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது, டாட்டா இண்டிகாம் ஆளுங்க கூடவும், விஎஸ் என்.எல் காரங்களோடயும் சண்டை போட்டுட்டு, இப்போக் கூட இந்தப் பதிவு என் அண்ணன் வீட்டில் இருந்து தான் எழுதறேன். பக்கத்துத் தெரு என்றாலும் நினைச்சப்போ வந்து உட்கார முடியாது என்பதால் 2 நாளாய் ஒண்ணுமே எழுத முடியாமல் இன்று வந்திருக்கேன்.

ஒரு தாய்க்கு எப்படிப் பெற்ற குழந்தைகள் அனைத்துமே சமமோ அது போல் நான் எழுதுபவை அனைத்துமே எனக்கு சாதனை படைத்த பதிவு தான். இதைப் பின்னூட்டத்தை வைத்தோ, அல்லது வேறு காரணம் குறிப்பிட்டோ சொல்ல முடியாது. ஏனெனில் எனக்கு அதிகமாய்ப் பின்னூட்டங்கள் வரதும் இல்லை, இதனால் யாரும் படிக்கவே இல்லைனும் சொல்ல மாட்டேன். இப்போ நானும் சில பதிவுகள் பின்னூட்டமே போடாமல் படிக்கிறது உண்டு. எனக்கு இணையம் ஒழுங்காய் வந்து தடை இல்லாமல் எழுதும் நாளே எனக்கு நான் எழுதப் போகும் சாதனைப் பதிவு என்று சொல்லலாம். அப்படியும் குறிப்பிட்டு ஒன்றும் சமூகசேவையோ, அல்லது தொழில்நுட்பம் பற்றியோ, அல்லது பெண்கள் பிரச்னையோ, சமூக, குடும்பப் பிரச்னைகளோ நான் தொடுவதே இல்லை. ஓரளவு ஈடுபாட்டுடன் எழுதுவது ஆன்மீகப் பதிவுகள் மட்டுமே. அப்படி எடுத்துக் கொண்டால் தற்சமயம் எழுதிக் கொண்டிருக்கும் "சிதம்பர ரகசியம்" பதிவுகளை என் சாதனையாக ஓரளவு சொல்லலாம். ஏனெனில் அதற்காகப் பல மணி நேரம் பல புத்தகங்களையும், பதிவுகளையும், பலர் கருத்துக்களையும் இணையத்தில் தேடிப் படிக்கிறேன். அதை முடிந்த வரை பதிவும் செய்கிறேன். ஆனால் "சிதம்பர ரகசியம்" பதிவுகளை இந்தப் பக்கங்களில் குறிப்பிடலாமா என்பது பற்றித் தெரியவில்லை!

மற்றபடி நான் அழைக்கிறது என்றால் யாரைனு தெரியலை, துளசி அழைத்ததுக்கே இன்னும் வரலை, உஷா மொக்கை போடச் சொன்னால் பாடம் எடுத்திருக்கார்.:P கோபிநாத் மொக்கைன்ற பேரில் ஒரு உரைநடைச்சித்திரம் எழுதி இருக்கார். அபி அப்பா எங்கே இருக்கார்னு புரியலை, இப்போ சோகமயம் வேறே! வேதா இன்னும் அர்ரியர்ஸ் முடிக்கலை. திராச. சார் அடிக்க வருவார் மறுபடி கூப்பிட்டா. ஏற்கெனவே வல்லி அழைச்சாச்சு. ரசிகன்? ம்ம்ம்ம்ம்? மணிப்பயல்? மொக்கைக்குக் கூப்பிட்டு மொக்கையும் போட்டாச்சு! டிடி அக்கா? மொக்கை போட்டதோடு அல்லாமல், எனக்கு "ஆப்பு" வைப்பேன்னு மறைமுகமா மிரட்டல் வேறே! தனியாக் கவனிச்சுக்கறேன். இதிலே பாருங்க, இந்த டிடி அக்காவோட பக்கம், கண்மணியோட பதிவுகள், ரசிகனோட பதிவுகள் இது மூணும் நான் திறந்து படிக்கிறதுக்குள்ளே படும் கஷ்டம் இருக்கே! அதுவே ஒரு சாதனை தான் வல்லி. சரி, இப்போ யாரைக் கூப்பிடுறது? மெளலி, எழுதற மூடிலே இருக்கீங்களா இல்லையா? தெரியலையே? :( இ.கொ.? சபதம்ங்கிற பேரிலே தமிழ் அகராதியை எழுதிட்டார்! :Pதெரியலை! ஓகே அம்பி? ம்ம்ம்ம்ம்? வல்லி கூப்பிட்டிருக்காங்க! புலி? ராமநாதன் கூப்பிட்டுட்டார்! இப்படி எல்லாரும் முந்திக்கிட்டா "தலைவி" ஆன நான் என்ன செய்யறது? யாருமே யோசிக்கலை பாருங்க! :P

நான் அழைக்கும் மூவர்:

ரசிகன்
சுமதி(மின்னல்)
கார்த்திக் முத்துராஜன், {(ஊருக்கு வந்து சேர்ந்திருப்பீங்கனு நம்பறேன், மெதுவா அவசரமே இல்லாம எழுதுங்க போதும், இதைப் பார்த்தாவது நீங்க எழுதணும்கிறதுக்காகவே உங்க பேரைச் சேர்த்திருக்கேன்.:(((((}

12 comments:

  1. //"டேட்டா ஒன் ப்ராட்பாண்ட்" இணைப்பும் சரிவர வரதில்லைனு கேள்விப்பட்டதில் கொஞ்சம் சந்தோஷமா இருக்கு!//

    என்ன ஒரு வில்லத்தனம்....? அதெல்லாம் ஒழுங்கா தான் வருதாம். ஏர்டெல் எடுங்க, செம ஸ்பீடு, பில்லும் தான். :)

    ReplyDelete
  2. அடுத்து அடுத்துப் பதிவுகள்..இதுவே சாதனைதான் கீதா..

    ReplyDelete
  3. எனக்கு "ஆப்பு" வைப்பேன்னு மறைமுகமா மிரட்டல் வேறே! தனியாக் கவனிச்சுக்கறேன்///
    ungaluku vaika porennu sonnena??
    neengalum santhosha paduveenga yaruku aapu vaika porennu therinja

    ReplyDelete
  4. "சிதம்பர ரகசியம்" - சீக்கிரம் அந்த பக்கத்துக்கு வரேன் ;)

    ReplyDelete
  5. எப்படியும் உங்க பதிவும் பின்னூட்டமும் படிச்சிக்கிட்டு தான் இருக்கேன். அகலக் கற்றை நன்றாகத் தான் வேலை செய்கிறது. ( ஒத்துக்க மாட்டிங்களே)

    சிதம்பர ரகசியம் படிக்கணும்

    ReplyDelete
  6. மேடம், பிப்-23 தான் இங்க இருந்து கிளம்புறேன்.. அதுக்கு முன்னாடி இதை எழுதிடுறேன் கட்டாயமா.. அழைப்பிற்கு நன்றிங்க மேடம்

    ReplyDelete
  7. //ஒரு தாய்க்கு எப்படிப் பெற்ற குழந்தைகள் அனைத்துமே சமமோ அது போல் நான் எழுதுபவை அனைத்துமே எனக்கு சாதனை படைத்த பதிவு தான்.//
    நெத்தியடி குடுக்குறீங்க. அதான் எல்லாரும் உங்களை தலைவியா ஏத்துக்கிட்டாங்களோ? :-)

    ReplyDelete
  8. இரண்டு பதிவுகள் போட்டிருக்கேங்க மேடம்.. இன்னும் நீங்க சொன்ன பதிவைப் போடல.. விரைவில் எழுதிவிடுகிறேன்

    ReplyDelete
  9. தலைவி சொல்லிட்டப்பறம் செய்யாம இருக்க முடியுமா?.:P. கொஞ்சம் டைம் குடுங்க அக்கா.. செஞ்சுடறேன்..:)

    ReplyDelete
  10. இணைப்பு சரியா வேலை செய்யலைன்னு சொல்லியே பாதிப் பதிவை நிரப்புற யோசனை ரொம்ப நல்லாவே வேலை செய்யுதுங்க அக்கா..
    வாழ்த்துக்கள்...ஹிஹி..:)))))))))))))))))))

    ReplyDelete
  11. //ஒரு தாய்க்கு எப்படிப் பெற்ற குழந்தைகள் அனைத்துமே சமமோ அது போல் நான் எழுதுபவை அனைத்துமே எனக்கு சாதனை படைத்த பதிவு தான்//
    அதே அதே! சூப்பரு :)

    ReplyDelete
  12. சாதனை "மேல்" சாதனை அப்படின்னு ஒரு 'ஃபீமேல்' எழுதி இருக்கீங்களேன்னு பார்க்க வந்தேன். வழக்கம் போல மொக்கைதானா. ஓகே ஓக்கே. :))

    ReplyDelete