எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, January 28, 2008

இந்த நாள் இனிய நாள்!

அடுத்து அடுத்துச் சோதனைகள், இப்படி யாருக்காவது வந்திருக்குமானு தெரியலை, இந்த அழகிலே சிஷ்யகேடிகள் எல்லாம் நான் மூன்று மாசமா சரியா வரதில்லைங்கறதைப் பட்டாசு வெடிச்சுக் கொண்டாடறதா வேறே தகவல் கசிஞ்சுட்டு இருக்கு! ம்ம்ம்ம்ம்., எல்லாம் நேரம்! அஜித் லெட்டர்! வேறே என்ன? நான் தான் உடம்பு சரியில்லாமல் போனேன்னு சொன்னா அதே வைரஸ் அட்டாக் என்னோட கணினிக்கும் வந்துடுச்சு. ஹிஹிஹி, எவ்வளவு ஒத்துமை பாருங்க, ஒவ்வொரு வருஷமும் அக்டோபரில் இருந்து டிசம்பர் வரை நான் "லொக், லொக்", யாராவது மூச்சுக் கடனாத் தருவாங்களானு பார்த்துட்டு இருப்பேன். நடு, நடுவிலே இந்த ப்ராங்கிட்டிஸ், வேறே நானும் இருக்கேன்னு சொல்லும், இப்போ போறாததுக்கு டான்சிலிட்டிஸ் வேறே அடிஷனலா ஒரு மூன்று வருஷமா! அதெல்லாம் என்னை மாதிரிக் குழந்தைங்களுக்குத் தானே வரும்! :P அது இந்த வருஷம் ரொம்பவே படுத்திட்டு இருக்கு.

அதே மாதிரி என்னோட கணினியும் ஒவ்வொரு வருஷமும் நவம்பர் வந்தாலே ஸ்ட்ரைக் பண்ண ஆரம்பிக்குது இரண்டு வருஷமா! சும்மா வைரஸ் செக் பண்ணனு ஆரம்பிச்சா ஒரேயடியா வைரஸ் அட்டாக்குனு சொல்லிட்டுப் படுத்திடுச்சு! அதை ஒரு வழிக்குக் கொண்டு வரதுக்குள்ளே போதும், போதும்னு ஆயிடுச்சு. இன்னும் சரியா வழிக்கு வரலை. ஜிமெயில் ஹாங்கிங், ப்ளாக் ஹாங்கிங் அப்படின்னு ஒரு மாசமாவே பாடாய்ப் படுத்தி வச்சுட்டு இருந்தது. ஏதோ சரி பண்ணி இருக்கேனு மெக்கானிக் சொல்லிட்டு இன்னிக்குக் கொண்டு வந்து வச்சுட்டுப் போயிருக்கார்.நல்லாப் பார்த்துட்டு ஒரு 2 நாளாவது கழிச்சுத் தான் சரியா இருக்குனு சர்டிபிகேட் தர முடியும்னு சொல்லிட்டேன். இதுக்கு நடுவிலே ஊர் சுத்தல் வேறே. எப்போவோ பதிஞ்சு வச்சது. கான்சல் பண்ணமுடியலை. போகணும்னு ஆசையும் தான். உயிரைக் கையிலே வச்சுட்டுப் போக வேண்டியதாப் போச்சு. நிஜமாவே உயிர் போக இருந்தது. அதெல்லாம் விவரமா எழுதறேன். இன்னிக்குக் காலையிலே ஒரு ஜோக் நடந்துச்சு. அதை முக்கியமாச் சொல்லத் தான் வந்தேன்.

காலம்பரத் தான் ஊரிலே இருந்து வந்ததாலே குளிக்க நேரம் ஆயிடுச்சு. அப்போ பார்த்து ஒரு தொலைபேசி அழைப்பு. யாரு அழைச்சதுனு கேட்டால் ஸ்ரீதர்னு பேர் வந்தது. எடுத்தது என்னோட ம.பா. அவர் கிட்டே நானே தினமும், "நான் தான் உங்க மனைவி, என் பேர் கீதா!"னு சொல்லி நினைவு படுத்தணும். அவ்வளவு மறதி. இதிலே தூக்கக்கலக்கம்னா கேட்கவே வேண்டாம். சுத்தமா எங்கே இருக்கோம்னே புரியாது. அவர் கிட்டே போய் "நான் ஸ்ரீதர் பேசறேன்!"ன்னு சொன்னா? ஹிஹிஹி, அவரோட தம்பி பேரும் ஸ்ரீதர் தான். நல்லவேளை, குரல் புதுசுங்கறதாலே தம்பினு கூப்பிட்டுப் பேசலை. யாருனே தெரியலை அவருக்கு. நான் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அடையாளம் வச்சிருக்கேன். இப்போ "அம்பி" ஸ்ரீராம் னு சொல்லிக் கொண்டால் புரியாது. அதே மாதிரி "வேதா" உஷானு சொல்லிக் கொண்டால் புரியாது. புலினு சொன்னால் புலியையும் தெரியாது. கைப்புள்ளனு சொன்னால் அவரையும் புரியாது. மோகன்ராஜ்னு சொன்னாலும் புரியாது. இப்படித் தான் ஒருநாள் திராச சார் கூப்பிட்டப்போ சந்திரசேகர்னு சொல்லி இருக்கார். ப்ளாஸ்டிக் சந்திராவோ, அல்லது சந்திரமெளலியோனு நினைச்சுப் பேசிட்டு இருக்கார். என்னடானு சொல்லலை, மத்தது எல்லாம் பேசியாச்சு. அதே மாதிரி "ரசிகனு"க்கும் ஒரு அடையாளம் இருக்கு. ரசிகர் மன்றம் வைக்கப் போறேன்னு சொன்னேனே, அவர் பேசறேன்னு சொல்லி இருந்தா புரிஞ்சுட்டு இருப்பார். ரசிகன் அசடு வழிஞ்சுட்டு இருந்தது எப்படி இருந்திருக்கும்னு நினைச்சுப் பார்த்துச் சிரிச்சுட்டு இருக்கேன், இன்னிக்குப் பூரா. கடைசியிலே ரசிகனுக்கு ஆப்பு வைக்கவும் ஒரு விஷயம் கிடைச்சதே அந்த சந்தோஷமும் தான். அசடு வழிஞ்சது ரசிகன் மட்டும் இல்லை, என்னோட ம.பா.வும் தான். இன்னிக்கு அவரும் மாட்டினார். இந்த நாள் இனிய நாள்!

11 comments:

  1. ஆண்களை மாட்டி விட்டு வேடிக்கை பார்க்கிறதுல அவ்வளோ குஷியா?
    ஆணியவாதிகளே ஒன்று சேருங்கள். போராடுங்க! (போராடுவோம் இல்லை)

    கணினிக்கு கொஞ்சம் விக்ஸ் தடவுங்க.

    ReplyDelete
  2. ஆஹா..எந்த நிலையிலும் மாறமால் ஆப்பு வைக்கும் தலைவி வாழ்க ! வாழ்க! ;)))

    ReplyDelete
  3. அட என்னங்க சங்கத்தின் முதல் தலைவிங்க நீங்க.. உங்களை எல்லாம் எங்களால் மறக்க முடியுமா? உங்க பதிவுகள் வருவதும் உண்டு படிப்பதும் உண்டு... சோம்பேறி தனம் காரணமாக பின்னூட்டம் இடுவது மட்டும் இல்லை.. அதான் இப்போ வந்து அழைப்பு வச்சுட்டோம் இல்ல.. வந்து கலக்குங்க...

    ReplyDelete
  4. //அதெல்லாம் என்னை மாதிரிக் குழந்தைங்களுக்குத் தானே வரும்!//

    யப்பா! இதுக்கே எனக்கு கண்ண கட்டிடுச்சு! :))

    //ரசிகன் அசடு வழிஞ்சுட்டு இருந்தது எப்படி இருந்திருக்கும்னு நினைச்சுப் பார்த்துச் சிரிச்சுட்டு இருக்கேன்//

    உங்களுக்கு கால் பண்ணான் பாருங்க, அவனுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும். என்ன ஒரு வில்லத்தனம்..? :))

    நாங்களும் (அதாவது நானும், என் தம்பியும்) உங்களுக்கு, TRC சாருக்கு வேற பெயர் தான் வெச்சு இருக்கோம். :p

    ReplyDelete
  5. ஹாய் தலைவி,

    ஆமாம் உங்க உடம்பு இப்போ எப்படி இருக்கு?உங்க assistant அதாங்க உங்க கணிணி எப்படி இருக்கு? உங்க கணிணிக்கு
    தான் உங்க மேலே எவ்ளோ பாசம்...

    //ரசிகனுக்கு ஆப்பு வைக்கவும் ஒரு விஷயம் கிடைச்சதே அந்த சந்தோஷமும் தான்.//

    ஹா ஹா ஹா ஹா ஹா... இந்த ரசிகனுக்கு ஆப்பு வைக்க எவ்ளோ பேரு கிளம்பி இருக்காங்க...கேக்கவே படிக்கவே சந்தோஷமா இருக்கு...

    ReplyDelete
  6. இப்படித் தான் ஒருநாள் திராச சார் கூப்பிட்டப்போ சந்திரசேகர்னு சொல்லி இருக்கார். ப்ளாஸ்டிக் சந்திராவோ, அல்லது சந்திரமெளலியோனு நினைச்சுப் பேசிட்டு இருக்கார். என்னடானு சொல்லலை, மத்தது எல்லாம் பேசியாச்சு.

    கீதமேடம் யாருக்கு மறதி ஜாஸ்தி ம.பாக்கா? தீபாவளி அன்றைக்கு தீபாவளி வாழ்த்து
    சொன்னபோது எந்த சந்திரசேகர்ன்னு கேட்டீங்களே அதுவும் மறந்து போச்சா.அவர்கூட சொன்னாரே நம்ப வீட்டுக்கு வந்தூட்டுப் போனாரே அவர்ன்னு நினைவு படுத்தலே!பாவம் சாம்பு சார் ஏதோ சமாதனாமா போனம்னு பாக்கறார்.உங்களுக்குத்தான் மறதி ஜாஸ்தி இப்போல்லாம் கண்ணாடிலே முன்னாலே உங்களை பாக்கும் போதே இந்த முகத்தை எங்கோ பாத்தாமாதிரி இருக்கேன்னு சொல்லறதா அம்பி சொல்லறான்.எங்களுக்கும் இந்த நாள் இனியநாள்தான் ஆப்பு வெக்க வசதியான நாள்.:)

    ReplyDelete
  7. ஏம்பா அம்பி பேர் வெச்சுதுதான் வெச்சே காது குத்தி புண்யாவசனம் பண்ணி அப்படியே எங்களுக்கும் சாப்பாடு போடேன்.கீதா மேடம் இத்தனை ஆப்பு வச்சும் இந்த வாதபி& வில்வளன் (அம்பி&தம்பி) அடங்களையே?.நான் பண்ணது தப்புதான் உன்னை அப்பவே கவனிச்சுருக்கனும்!

    ReplyDelete
  8. ஒவ்வொரு பதிவுலயும் கலக்கறீங்களே ;-)

    //கடைசியிலே ரசிகனுக்கு ஆப்பு வைக்கவும் ஒரு விஷயம் கிடைச்சதே அந்த சந்தோஷமும் தான்.//

    ரசிகனுக்கு ஆப்பு வைக்கறதுல இவ்ளோ சந்தோஷமா உங்களுக்கு. ம்ம்.. நடத்துங்க நடத்துங்க

    ReplyDelete
  9. ரசிகன் ரணகளம் பண்ணியிருக்கார்...அங்கே போய்ட்டு இப்போ இங்கே வந்தேன்...அடடா இதுவல்லவோ ரகளை :))... தலைவி அவர்களே... சங்கத்துல எப்புடி member ஆகறது?? :)

    ReplyDelete
  10. ஹா ஹா ஹா.... இன்று இனிய நாள் ஆண்களுக்கா? இல்லை இந்தப் பெண்ணுக்கா? :-)

    ReplyDelete
  11. அவ்வ்வ்வ்.... இம்புட்டு நடந்திருக்கா...
    நான் பேசும்போது,சாம்பு மாம்ஸ் ரொம்ப அன்னியோன்யமா.. உன்னிய பத்திகூட நேத்து தான்ப்பா பேசிக்கிட்டிருந்தோம்ன்னெல்லாம் சொன்னாரே..
    நான்கூட நெனச்சேன்,...பிரதம சீடனா இருக்கறதால, தலைவி எனக்கு ஏதாவது ஹாமர் கார் பிரசண்ட் பண்ண டிஸ்கஸ் பண்ணியிருப்பாங்களோன்னெல்லாம் நெனச்சேன்.. என்ன பேசுனிங்கன்னு மடக்கனுதுக்கு,பொதுவா பேசும்போது உங்க ஞாபகம் வந்துச்சுன்னெல்லாம்
    பயங்கரமா சமாளிச்சாரே..அவ்வ்வ்வ்வ்வ்....... மாம்ஸ் நீங்க கிரேட்டு..

    ஆனாலும் உங்களுக்காக அக்காக்கிட்ட எம்புட்டு தடவை சப்போர்ட் செஞ்சிருப்பேன்.. இதுக்கு முன்னாடியே புத்தாண்டு சமயத்துல போன்ல உங்க கிட்டயும் அக்காக்கிட்டயும் பேசியிருக்கேனே.. அப்போ கூட உங்களுக்காக சப்போட் பண்ண என்னிய ஞாபகம் இல்லைன்னா..அவ்வ்வ்வ்வ்வ்வ்.....:))))))))

    ReplyDelete