எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, January 04, 2008

புத்தாண்டு சபதமா? நானா?

திடீரென சுவாதி தனி மெயில் கொடுத்து எனக்கு ஒரு சங்கிலித் தொடருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அவரை ஷைலஜா அழைத்திருக்கிறார். விஷயம் என்ன வெனில் புத்தாண்டு களில் எடுத்துக்கொள்ளும் சபதம் பற்றியது. பலரும் புத்தாண்டு பிறக்கும்போது பலவிதமாய்ச் சபதம் எடுத்துக் கொள்ளுவது உண்டு. என்னைப் பொறுத்த வரையில் எந்தச் சபதமும் இதுவரை எடுத்துக் கொண்டதில்லை. நம்பிக்கைகளே வாழ்க்கை என்பதில் நம்பிக்கை உண்டென்றாலும் புத்தாண்டு சபதங்கள் கடைசிவரை, அல்லது ஒரு வாரத்துக்குக் கூடக் கடைப்பிடிக்க முடிவது இல்லை. என்னளவில் சபதம் எடுத்துச் சோதிக்கவில்லை எனினும் எடுத்தவர்களையும், அதில் தோற்றவர்களையும் தெரியும். பொதுவாக அன்றன்றைய வேலைகளை ஒழுங்காகக் குறைவின்றிச் செய்தாலே போதுமென்ற நினைப்பு உள்ளவள் நான். ஆனால் சில சமயம் புத்தாண்டு அன்று அம்மாதிரியாக முடியாமல் ஏதானும் தடைகள் குறுக்கிடும். சில சமயம் கோவிலுக்குக் கூடப் போக முடியாது. பொதுவாகப் புத்தாண்டு அன்று வெளியே போவதையே நான் அநேகமாய்த் தவிர்த்து விடுகிறேன். தவிர்த்தும் விடுவேன். கூட்டம் தான் காரணம்.

. எனக்கென விதிக்கப் பட்டது இறை அருளில் குறையவும் போவதில்லை, கூடவும் போவதில்லை, என் வாழ்க்கை நான் தான் வாழ்ந்தாக வேண்டும், அல்லவா? என்னுடைய இந்த வாழ்க்கையில் எத்தனையோ அனுபவங்கள். பிரச்னைகள். பல விஷயங்களில் ஒரு பலிக்கடாவாக ஆக்கப் பட்டிருக்கிறேன். காரணமின்றி அவமானங்களைச் சுமந்திருக்கிறேன், சுமக்கிறேன். சுகங்களிலும் அனைவரையும் மறக்காமல் பங்கெடுக்கச் செய்திருக்கிறேன். துக்கங்களில் மனம் நைந்து போனாலும் வெளியே தெரியாமல் இருந்திருக்கிறேன், இருப்பேன். இருக்க இறை அருள் வேண்டும். வாழ்வின் பல நொடிகளில் இறை அருளால் காப்பாற்றப் பட்ட, இறை அருள் துணை புரிந்த பல நிகழ்ச்சிகள் உண்டு. இந்த நீண்ட வாழ்வில் என்னோட அனுபவங்களை விடாமல் எழுதினால் தினம் மூன்று பதிவு இல்லை, எத்தனை போட்டாலும் போதாது. என்றாலும் அனைத்தையும் கடந்து போகச் செய்து என்னை அத்தனை கஷ்டங்களிலும், சுகங்களிலும், இவற்றைத் தந்தவனை மறக்காமல் செய்த அந்த உணர்வு தான் பக்தி என்றால் அது என்னிடம் இருந்தாலே போதும். இன்று உண்ணும் உணவும், பருகும் நீர், இருக்கும் இடம் எல்லாம் அவன் அருளாலே கிடைத்தவை. ஆகவே "இப்போது இருப்பது போல் எப்போது இருக்க வை இறைவா! இன்னொரு பிறவி என எனக்கிருந்தால், நான் மீண்டும் பிறந்தால், அப்போதும் நான் இதே மாதிரி இருக்க வேண்டும் என்பதே என் ஆசை!" இது தான் என்னோட சபதமும் கூட.

நானும் நாலு பேரை அழைக்க வேண்டும். யாரை அழைப்பது? வேதா ஏற்கெனவே ஒரு சங்கிலிப் பதிவுக்கு அழைத்து எழுதவே இல்லை. அம்பி 2 மாசம் ப்ளாகுக்கே வரப் போவதில்லையாம். வல்லி சிம்ஹன் இன்னும் கொஞ்ச நாள் பிசியோ பிசி. ரசிகன் சொதப்பலாயிடுமோ? தவிர, ஒரு எழுத்துக்கு ஒரு தப்பு வேறே, இந்த அழகில் நான் டீச்சராம், எல்லாம் ஹெட் லெட்டர்! :P கைப்புள்ள, மாவரைக்கவே நேரம் இல்லை, இப்போ பட்டூரா வேறே செய்யணும்னு கேட்டுட்டு இருக்கார். ராம், "மதுரைமாநகரம்" பதிவர்களைக் கட்டி மேய்க்கவே முடியலை, கார்த்திக், ஆளே காணோம், அபி அப்பா, ஹையோ, தப்புத் தப்பா எழுதிட்டு, படிக்கும்போது கண்ணாடி உடைஞ்சு, நினைக்கவே பயம்மா இருக்கு, கோபிநாத், "வலைச்சரம்" பிசி. புலி, இப்போத் தான் குகையில் இருந்து வந்திருக்கு. மதுரையம்பதி, ம்ஹூம் இப்போ நேரம் சரியில்லை. :( திராச, சார், அப்பாடி, கடைசியில் ஒரு ஆள் மாட்டிக்கிட்டார், சார், உமா மேடம் கிட்டே கேட்டுக்குங்க, என்ன சபதம் எடுக்கிறதுன்னு? ஒரு பதிவு போட்டுடுங்களேன், ப்ளீஸ்!

ஒருத்தர் மாட்டியாச்சு, இன்னும் வேறே யாரு? இ.கொ. மறந்தே போயிட்டேனே? பின்னூட்டப் புயல், எனக்குக் கோனார் நோட்ஸ் இலவசமாய் சப்ளை பண்ணிய புண்ணியாத்மா, அவரோட பதிவுகளுக்கு வெற்றிலை, பாக்கு வச்சு அழைக்கிறார், (இப்போ என்ன காணோம்? ஒண்ணும் எழுதலியா, வந்து பார்க்க நேரமே இல்லை! :P) அடுத்து, மூன்றாவதாக நானானி, நீங்க எழுதுங்களேன், ப்ளீஸ், இப்போ நீங்க ஃப்ரீதானே? ம்ம்ம்ம்ம்ம்? அடுத்து 4-வதாக யாரு? டிடி அக்காஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், நீங்க சபதம் போடுங்க, பார்க்கலாம், அம்பிக்கு இனிமே ரசம் சப்ளை கிடையாதுன்னு சபதம் போட்டீங்கன்னா, உங்களை விட நல்லவங்க யாருமே கிடையாது.

நான் அழைக்கும் நால்வர்:

திராச
Free Mason
நானானி
டிடி அக்கா

சீக்கிரமாச் சபதம் எடுத்து என்னோட மானத்தைக் காப்பாத்துங்கப்பா!

23 comments:

  1. ennanga idu.. new year arambame taga???

    ReplyDelete
  2. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவேன் கவலை வேண்டாம். மணிப்பயலை விட்டுடீங்களே.

    ReplyDelete
  3. நானும் உங்க கட்சி தான்

    @வேதா அதைச் சொல்லவும் வேண்டுமோ?

    ReplyDelete
  4. ஹிஹிஹி டிடி அக்கா, நான் ஆரம்பிக்கலை, வேறே ஒருத்தர் ஆரம்பிச்சு, அவங்க என்னை மாட்டி விட்டுட்டாங்க, சரி, சரி, சீக்கிரம் சபதம் எடுத்துக்குங்க, ரசத்தோடு, புளியோதரையும், கேசரியும் சேர்த்துக்குங்க! :P

    @வேதா, இப்போப் போட்டுக் கொடுக்கலைன்னா அப்புறம் நேரம் எப்போ வரும்? சீக்கிரம் எழுதுங்க!

    @சார், மணிப்பயலை நினைப்பு இல்லாமல் இல்லை. ஆனால் அவர் இப்போத் தான் ஊருக்குத் திரும்பறார். அப்புறம் ப்ளாக் பார்க்க உடனே முடியுமா, முடியாதான்னு தெரியாது, அதான் புலியையும், அவரையும் ஆட்டையிலே சேர்க்கலை! :))))))))) அவரோட பேர் எழுதலைன்னு கேட்கிறீங்களோ என்னமோ, அது விட்டுப் போயிருக்கு, அப்புறமாத் தான் பார்த்தேன், :))))

    ReplyDelete
  5. கீதாம்மா, இந்த வருடம் என்ன தொடராட்ட வருடமா? ஏற்கனவே பாபாவும் வெங்கட்டும் வேற ஒரு விளையாட்டுக்குக் கூப்பிட்டு இருக்காங்க. இப்போ நீங்க.

    புத்தாண்டுக்கு சபதம் போடறது எல்லாம் நமக்குப் பழக்கமே இல்லையே..என்ன பண்ணறது? பேசாமா தொடராட்டங்களில் பங்கெடுக்காம இருக்கணும் அப்படின்னு வேணா ஒரு சபதம் போடலாமா? :))

    ReplyDelete
  6. தலைவியின் வழி நடப்பதே இந்த தொண்டனின் கடமை ;))

    நமக்கும் அந்த மாதிரி எல்லாம் எதுவும் இல்லை...இதெல்லாம் கூட எதிர்கட்சி சதின்னு நினைக்கிறேன்..! ;)

    ReplyDelete
  7. பரவாயில்லையே...நிறைய பேர் நம்மைப் போலவே இருக்கிறார்கள் என்று தெரிய வ்வரும் போது சந்தோஷமாகத் தான் இருக்கிறது. ஷைலஜாவுக்கு நன்றி சொல்லாத் தான் வேண்டும் ஆரம்பித்து வைத்ததற்கு. இதன் மூலம் என்னைப் போலவே புத்தாண்டு சபதங்கள் எடுக்கும் வழக்கமில்லாதவர்கள் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று ஒரு சிறு கணக்கெடுப்பு நடத்திவிடலாம்.. :)

    நன்றி கீதா! என்னுடைய அழைப்பை ஏற்றுக் கொண்டமைக்கு!

    அன்புடன்
    சுவாதி

    ReplyDelete
  8. அப்பப்பா, இந்த தி.ரா.சவுக்குத்தான் என் மேலே என்ன அன்பு. என்னமா ஞாபகம் வச்சிருக்காரு (போட்டு குடுக்குறாரு)

    ReplyDelete
  9. ஆபீஸ் வேலை ஆரம்பிச்சுட்டேன் மேடம். அதுனாலே இனிமே பிளாகுக்கு நிறையா டைம் கிடைக்கும். ஹி, ஹி, ஹி.

    ReplyDelete
  10. ஹலோ தனிப் பெரும் தலைவி,

    நீங்க மட்டும் தனியா டேக் போடலாமா? உங்க துணை தலைவியையும் கூட சேத்துக்க வேண்டாமா?

    ReplyDelete
  11. //இன்று உண்ணும் உணவும், பருகும் நீர், இருக்கும் இடம் எல்லாம் அவன் அருளாலே கிடைத்தவை. ஆகவே "இப்போது இருப்பது போல் எப்போது இருக்க வை இறைவா! இன்னொரு பிறவி என எனக்கிருந்தால், நான் மீண்டும் பிறந்தால், அப்போதும் நான் இதே மாதிரி இருக்க வேண்டும் என்பதே என் ஆசை!" இது தான் என்னோட சபதமும் கூட. //

    கீதா - நல்லதொரு ஆசை - சபதம். நல்வாழ்த்துகள். இறைவன் அருள் எப்போதும் கிட்ட வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. கீதாம்மா!
    வறேன்..வறேன்..ஏதாவது சபதத்தையும் எடுத்துக்கொண்டு. ஏன்னா இதுவரை சபதமே எடுக்கக்கூடாது என்று சபதமெடுத்திருக்கிறேன்.இன்னா?கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்?

    ReplyDelete
  13. //நானும் நாலு பேரை அழைக்க வேண்டும். யாரை அழைப்பது//
    எதற்கு நாலு பேர்..? புரியவில்லையே !

    இருந்தும் அந்த நாலு பேரை ப்பார்த்து சங்கதி சொல்ல‌
    பருந்து போல புறப்பட்டேன்.

    நானானி எங்கே எனத் தேடிப்பார்த்தேன்.
    நான் ஆனி மாதம் வருவதாகச் சொல்லிவிட்டார்.

    இ.கொவின் விலாசம் கேட்டேன். அவர் வீடு சென்றேன்.
    இன்னிசை பெல் ஒன்று அங்கு, அடித்தும் பார்த்தேன்.
    பூனை குறுக்கேயும் கொரில்லா எதிரேயும் வந்தன.
    பயமுறுத்தின ..போ..போ..என்றன.
    http://elavasam.blogspot.com/
    தொடர்ந்து சென்ற என்னை வழிமறித்த இ.கொ.
    ஜாடி, மூடி என்று சொல்லி ஜாலக் காட்டுகிறார்.
    பிக் பிக்சர் என்று சொல்லி பியரை ஊற்றுகிறார்.
    வாழ்க நீ பல்லாண்டென வாழ்த்து பல சொல்லிப்பின்
    டி,டி அக்கா வீட்டிற்குச் சென்றால் பூட்
    டிய கதவு கண்டேன். கூகுளைக் கேட்டபோது
    பல்லைத் தட்டி உடைப்பது போல்
    பேஜ் நாட் ஃபெளன்ட் என்று இங்க்லீசில் சொன்னது.

    மிச்சமுள்ள திராசாவோ மதுர கீதம் பாடிக்கொண்டு
    http://trc108umablogspotcom.blogspot.com/
    மல்லியின் மணம் கண்டுவிட்டேன்.
    மயங்கிப்போனேன். இனி
    குறையொன்றும் இல்லை என் கோவிந்தன்
    அருள் பெற நான் ஆல்ரெடி வைட் பண்ணிட்ருக்கேன்.
    நேரம் கிடைத்தால் வருவேன் என நீயே போய் சொல்லு என்றார்.

    அழையாத விருந்தாளியாக நானே வரவா? யாரும்
    கேளாத சபதம் ஒன்று நானே தரவா?
    "புத்தாண்டில் ஓர் சபதம் உடன் எடுப்பேன்.
    எல்லாம் ஹெட் லெட்டர் என இனி நான் ஓர்
    டெட் லெட்டர் எழுதமாட்டேன்.
    உன் வினையைச் செய் பயனை நினையாதே என்ற‌
    கீதையின் கருத்தினை கீதாவிடம் சொல்வேன்."

    கீதா சாம்பசிவம் அவர்களது 2008ம் ஆண்டு
    பொன் போல் மிளிரிட‌
    எனது ஆசிகள்.
    ஆக்கமது கைவிடேல்.
    மேனகா சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.
    http://movieraghas.blogspot.com
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  14. கீதாம்மா! நானும் சபதமெடுத்திட்டேன்.
    யுவர்ஸ் ஒபீடியண்ட்லி
    நானானி

    //9-west.blogspot.com//

    ReplyDelete
  15. என்ன ரொம்ப தன்னடக்கத்தோட இந்த பதிவு வந்ருக்கு? :p

    புது வருஷத்துல நல்ல மாற்றம். வெரிகுட். :))

    ReplyDelete
  16. 2003 new year resolution - never to take any new year resolution ever. Happily able to hold on to ti for fourth consecutive year.

    ReplyDelete
  17. இ.கொ. நீங்க போடாத மொக்கையா? உப்புமாப் பதிவா? ஒண்ணும் வேணாம், இனிமேல் மொக்கை போட மாட்டேன்னு சபதம் எடுத்துப் பதிவு போட்டுடுங்க போதும்!

    @கோபிநாத், நீங்க எப்போவுமே உண்மைத் தொண்டர்னு தெரியுமே! :))))))

    ReplyDelete
  18. @ஸ்வாதி, முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    @மணிப்பயல், ஹிஹிஹி, ஆப்பீச்சே ப்ளாக் எழுதத் தான்னு எனக்குத் தெரியுமே? அதான் நீங்க ஊர் போய்ச் சேர்ந்து தகவல் கொடுத்ததுமே அழைச்சாச்சு, அழைப்பிதழ் வந்ததா? சீக்கிரமா ஒரு மொக்கை எழுதுங்க!

    ReplyDelete
  19. @சுமதி, அதான் எல்லாரையும் இழுத்தாச்சே, இன்னும் என்ன? வரவுக்கு நன்றி

    @சீனா சார், ரொம்ப நன்றி, நான் திடீர்னு மதுரை வந்ததாலேயும், கூடவே விருந்தாளிகள் இருந்ததாலும், யாருக்கும் முன்கூட்டிச் சொல்ல வில்லை. நானும், என் கணவரும் தனியாய் வந்தால் கட்டாயம் சொல்லிவிட்டு வரோம்.

    ReplyDelete
  20. @நானானி, இந்த உதவி கூடச் செய்யலைன்னா எப்படி? இதுக்குப் போய்க் கோவிக்கலாமா? :))))))
    நன்னி, நன்னி, நன்னி, சீக்கிரமா வந்து பார்க்கிறேன், உங்க சபதத்தை!

    ReplyDelete
  21. @சூரி சார், உங்க வ்லைப்பக்கம் வந்தேன், ரொம்ப அருமையா இருக்கு, எல்லாமும் பார்க்க இன்னும் கொஞ்சம் நேரம் தேவை, உங்களைப் போன்ற பெரியவர்கள் வழிகாட்டுதலுடன், என் பணி இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். என் கணவரிடமும் சொல்லி இருக்கேன், உங்க வலைப்பக்கம் பத்தி.

    ReplyDelete
  22. @அம்பி, எல்லாம் நேரம், நீங்க ஏன் பேச மாட்டீங்க?

    @தெரிந்த அந்நியரே, வாங்க, வாங்க, உங்க கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  23. இசலிகளின் இடாப்பும் இன்ன பிற டிஸ்கிகளும் அப்படின்னு ஒரு பதிவு போட்டு இருக்கேன். வந்து பாருங்க! :)

    ReplyDelete