எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, January 15, 2008

தலைமைக் கழகத்தில் தொண்டர்கள் குவிந்தனர்!

இந்த மாசம் தலைமைக் கழகத்துக்கு ஏகப் பட்ட தொண்டர்கள் விஜயம். எல்லாம் புது வருஷம் பிறந்திருக்கிறதாலே, தலைவியைப் பார்த்து, மாலை, மரியாதைகள் செய்து, எடைக்கு எடை தங்கம், வெள்ளி கொடுத்துட்டு, சூட்கேஸ் கொடுத்து விட்டுப் பதில் மரியாதையாக் கையை வீசிக் கொண்டு போகத் தான்! வேறே என்ன? முதலில் இதை ஆரம்பிச்சு வச்சது மணிப்பயலும், சூடான் புலியும் தான். சரி, புலி இப்போ எங்கே இருக்கு? யாருக்காவது தெரியுமா?

மணிப்பயலும், சூடானிலிருந்து புலியும் இந்த மாதம் 3-ம் தேதி எங்க வீட்டுக்கு வந்தார்கள். புலியைக் கண்டுபிடிச்சு புது வருஷ வாழ்த்து சொல்லலாம்னா அது தொலைபேசியை எடுக்கவே இல்லை. பஸ்ஸில் போயிட்டு இருந்ததாய்ச் சொன்னது அப்புறமாக் கேட்டப்போ. நாங்க பஸ்ஸிலே போகும்போதெல்லாம் பக்கத்திலே இருக்கிறவங்க மட்டுமில்லாமல், பின்னால், முன்னால், சைடில், என்று எல்லா சீட்டிலும் உட்கார்ந்திருக்கிறவங்க, சிலசமயம் டிரைவரும், கண்டக்டரும் கூட, எங்களைத் தவிர எல்லாருமே செல்போனும் கையுமா பேசிட்டு இருக்கிறதைப் பார்த்திருக்கேன்.புலிக்கு ஒரு வேளை பழக்கம் இல்லையோ என்னமோ தெரியலை, வீட்டுக்கு வந்ததும் உட்கார்ந்தது தான், அப்புறம் வாயே திறக்கலை, பஜ்ஜி சாப்பிடக் கூட! வேதா வந்ததும், உங்களுக்கு வச்சிருக்கேன் என்று சொன்னதோடு சரி, பின்னர் நானும் வேதாவும் ரகசியமாய்ப் பேசும்போது மட்டும் எப்படியோ காதில் விழுந்து என்ன விஷயம் என்று நோட்டம் பார்த்தது. மணிப்பயல் சிதம்பரம் பத்திய மலரும் நினைவுகளில் இருந்தார். மணிப்பயல் என்பதால் என்னமோ ரொம்பச் சின்ன உருவமாய் நினைச்சது என்னோட தப்பு. நல்ல உயரமா இருக்கார். பாட்டிலும்(ஹிஹிஹி, மறுமுறை படிக்கும்போது அர்த்தமே வேறே மாதிரி எனக்கே தெரியுது, அப்புறம் மணிப்பயல் பாவம்!) இசையிலும் நல்ல பரிச்சயம் உண்டாம். அதுக்கப்புறம் எனக்குப் பேசவே பயமாப் போச்சு. எங்கேயாவது பேசறதில் ராகம் கண்டு பிடிச்சார்னா என்ன செய்யறது? நல்ல வேளையா ஸ்டாக் மார்க்கெட் பத்திப் பேசும்போது நான் உள்ளே போயிட்டேன், வேலை இருப்பதாய்ச் சொல்லிக் கொண்டு! :P சாயந்திரம் திராச வீட்டுக்குப் போகணும் என்று சொல்லிட்டுச் சீக்கிரமே கிளம்பிட்டாங்க இரண்டு பேரும். வேதாவோடு கட்சி பற்றிய சிலபல ஆலோசனைகள் செய்ய வேண்டி இருந்ததால் வேதா 6 மணிக்குப் பின்பே வீட்டுக்குப் போனாள்.

இது முதல் வரவு, இதுக்கு அப்புறம் நான், என் கணவர் இருவரும் "முத்தமிழ்க்குழுமம்" நண்பர்கள் சிலரை அண்ணா நகரில் சந்தித்தோம். அங்கே "சிங்கை குமார்" என்னும் பெரியவர், தன் மைத்துனருடன் வந்திருந்தார். மற்றும் டாக்டர் எஸ்கே(சங்கர்குமார்), அவர் மனைவி, பாசிட்டிவ் ராமா, விசாலம் ராமன், தமிழ்த்தேனீ என்னும் பெயரில் எழுதும் கிருஷ்ணமாச்சாரி, லாவண்யா என்னும் கவிதாயினி ஆகியோர் வந்திருந்தனர். அங்கே திரு சங்கர்குமாரும், திரு குமாரும் தலைவியை "நறநறநற" "க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" என்னும் பொன்னான வாசகங்களைச் சொல்லும்படி எவ்வளவோ முயன்றும், ஹிஹிஹி, தலைவி சொல்லவே இல்லை கடைசிவரையில். (இதிலே சிங்கை குமார் தொலைபேசியில் பேசும்போது தலைவி, "வடுவூர் குமார்"னு நினைச்சுட்டு அசடு வழிஞ்சது தனிக்கதை, இதிலே வராது. இதே மாதிரி திராச அவர்கள் "சந்திரசேகரன்" என்று சொல்லிப் பேசும்போதும், முதலில் ப்ளாஸ்டிக் சந்திரா என நினைத்து, நானும், என்னோட ம.பா.வும் அவரை என்னடானு கேட்கலை, மத்தது எல்லாம் சொல்லியாச்சு. மனுஷன் திராசனு சொல்ல மாட்டாரா? சந்திரசேகரன் என்ற பேரிலே குடும்ப உறவுகளே நிறைய இருக்காங்க! யாருனு புரிஞ்சுக்கறது?) கோவி.கண்ணன் பேசும்போது மட்டும் எப்படிச் சரியாப் புரிஞ்சுக்கிட்டேன்னு எனக்கே புரியலை! ஒருவேளை எதிர்க்கட்சிங்கறதாலேயோ? :D

இந்த மாதிரி எதிர்க்கட்சிக்காரங்க, எதிரிக்கட்சிக்காரங்க எல்லாரும் இந்த மாதம் தலைமைக் கழகத்தை முற்றுகை இட்டார்கள்.(எல்லாம் கூட்டணிக்குத் தான். அரசியலில் இதெல்லாம் ஜகஜமுங்க).பின்னர் ஞாயிறு அன்று மாலை சுமார் 4 மணி அளவில் வந்த தொலைபேசி அழைப்பில் டாக்டர் சங்கர்குமாரும், அவர் மனைவியும் வருவதாய்த் தெரிவித்தார்கள். உடனேயே பரபரப்பான தலைமைக் கழகத்தில் உகி. போண்டா, வலை உலகச் சட்டத்தை மீறாமல் தயார் செய்யப் பட்டது. இருவரும் வந்தார்கள் பாசிட்டிவ் ராமாவுடன். அவங்க வந்து கொஞ்ச நேரத்துக்கு எல்லாம் திரு காழியூரார்,தன் நண்பர் நரசிம்மன் என்பவருடன் வந்தார். காழியூரார் வலை உலக நண்பர்களுக்கு அறிமுகம் இல்லாதவர். ஒரு உண்மையான யோகி. அவர் வந்ததும் எங்கள் பேச்சு அனைத்தும் யோகக்கலை பற்றியும், இறைவனை உணர்வது பற்றியும், அது பற்றிய உபயோகமான தகவல்களாலும் நிரம்பியது. பின்னர் சற்று நேரம் ஆரோக்கியமான நகைச்சுவைக்குப் பின்னர் இரவு 9-00 மணிக்கு மேல் கூட்டம் கலைந்தது, அரை மனதோடு.

8 comments:

  1. //சரி எல்லாம் சொன்னீங்க ஆனா அன்னிக்கு கேசரி செஞ்சு அதையும் போட்டோ எடுத்துப் போட்டு அம்பிக்கு காட்டணும்னு நினைச்ச உங்க கருணையுள்ளத்தை பத்தி சொல்லவேயில்ல ;)//

    ஹிஹிஹி, ஆமாம் இல்லை, அட, இந்த இணையப் பிரச்னையிலே மறந்திருக்கேனே? :P

    ReplyDelete
  2. //ஆனா அன்னிக்கு கேசரி செஞ்சு அதையும் போட்டோ எடுத்துப் போட்டு அம்பிக்கு காட்டணும்னு நினைச்ச உங்க கருணையுள்ளத்தை//

    என்ன ஒரு வில்லத்தனம்....? கர்ர்ர்ர்ர்ர்ர். :)

    ReplyDelete
  3. பதிவர் கூட்டம்..இது ஒரு வகை..வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. தலைவி முதலில் ஒரு கிர்ர்ர்ர்ர்ர்ர்

    \\புலிக்கு ஒரு வேளை பழக்கம் இல்லையோ என்னமோ தெரியலை, வீட்டுக்கு வந்ததும் உட்கார்ந்தது தான், அப்புறம் வாயே திறக்கலை,\\

    சகா எல்லா இடத்திலும் இப்படி தானா!!!!

    ஆமாம் புலி பொம்மை எதுவும் கொடுக்கவில்லையா!? அதை பத்தி சவுண்டே இல்ல

    ReplyDelete
  5. //வீட்டுக்கு வந்ததும் உட்கார்ந்தது தான், அப்புறம் வாயே திறக்கலை, பஜ்ஜி சாப்பிடக் கூட//

    ஒரு வேளை புலி உறுமாதோ?

    எல்லாம் சரி...விருந்தினர்களுக்கு வாழைக்காய் கூட்டும் அமுதும் பரிமாறியதை பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலை? ஏன்?

    ReplyDelete
  6. இவ்வளவு நடந்திருக்கு..பிரதம சிஷ்யன் நான்.என்னிய கூப்பிடக் கூட இல்லையே..என்ன அநியாயம் இது?..சரி பரவாயில்லை...வாழ்த்துக்கள் என்னிய தனியா விட்டுட்டு, கலந்துக்கிட்ட எல்லாருக்கும்,....:P

    ReplyDelete
  7. //கைப்புள்ள said...
    எல்லாம் சரி...விருந்தினர்களுக்கு வாழைக்காய் கூட்டும் அமுதும் பரிமாறியதை பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலை? ஏன்?//

    அதான் நமக்கு எல்லாம் அல்வா பரிமாறிட்டு போயிட்டாங்கன்னு தெரியுதில்ல... பின்ன என்ன இலக்கண சுத்தமா ஒரு கேள்வி :P
    :)))))))))))))))

    ReplyDelete
  8. என்னங்க வேதா, ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு இப்பிடி ஒரு ஸ்டேட்மெண்ட் குடுத்தா என்ன அர்த்தம்? இல்ல படிக்கறவங்கதான் என்ன நினைப்பங்க?

    ReplyDelete