எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Wednesday, January 02, 2008
பில்லா பட விமரிசனம், கார்த்திக்குக்காக ஒரு பதிவு!
ரொம்பா நாளாச்சு "பொதிகை"த் தொலைக்காட்சி பற்றி எழுதி. கை துரு துரு னு எழுது, எழுதுனு சொல்லிட்டே இருந்தது. இருந்தாலும் சரியான விஷயம் மாட்ட வேணாமா? இப்போத் தான் பொதிகையில் "பில்லா" படம் முதல் முறையாப் பார்த்தேன். அதனால் விமரிசனம் அதைப் பத்தியே எழுதலாம்னு முடிவு செய்தேன். அது ஒரு பக்கம் இருக்கட்டும், இன்னிக்குக் காலம்பர 9-30 மணிக்குப் பார்த்த போது டாக்டர் என்.வி.சுப்பராமன் என்பவர், கண்ணனின் "பால லீலை" பற்றிய ஒரு இசைச் சித்திரம் கொடுத்துக் கொண்டிருந்தார். உடன் பாடியவர் திருமதி என்.வி. அலமேலுனு போட்டிருந்தது. நிகழ்ச்சியைப் பாதியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த காரணத்தால் யார் நிகழ்ச்சினு புரியாமல் மண்டை வெடிச்சுடும் போல் இருந்தது. பொதிகையில் சில சமயம் பேர் போடாமலே நிகழ்ச்சிப் "படைப்பு, பொதிகைத் தொலைக்காட்சி"னு மட்டும் போட்டுட்டுப் பேசாமல் போயிடுவாங்க, அவங்களுக்கு என்ன தெரியும் எங்களுக்குள் நடக்கும் வாத, விவாதம் எல்லாம், ஒரு நாளைக்கு வந்து பார்த்தால் புரியும், அப்புறம் ஒழுங்கா பேர் எல்லாம் போடுவாங்க, நிகழ்ச்சியின் நடுவிலே கூட! :P இன்னிக்கு என்னமோ அதிசயமா நிகழ்ச்சி முடிஞ்சதும் எல்லார் பேரையும் போட்டுட்டாங்க! அதனால் தெரிந்து கொள்ள முடிஞ்சது. நிகழ்ச்சி நல்லாவே இருந்தது, ஆனால் "ஆடாது அசங்காது வா!" பாட்டைப் பாடிய விதம் இதுவரை கேட்காத ராகத்தில் (கேட்டால் மட்டும் ராகம் பேர் தெரிஞ்சுடுமாக்கும்? ம.சா. கேள்வி!) இருந்தது, என்றாலும் நன்றாகவே பாடினார். நல்ல நிகழ்ச்சி. இப்போ "பில்லா" திரைப்பட விமரிசனம்.
"பில்லா" படத்தைப் பற்றியே எல்லாரும் ரொம்பப் பேசிக்கும்போதெல்லாம், நாம் இந்தப் படத்தை எப்படியாவது பார்க்கணும்னு நினைச்சுப்பேன். அதுக்கு ஞாயிறு அன்றுதான் நேரம் வாய்த்தது, என்றாலும், வழக்கம் போல் முழுப்படமும் பார்க்க முடியவில்லை! :D நான் பார்க்க ஆரம்பித்த போது டி.எஸ்.பி.யான பாலாஜி காரை ஓட்ட, பின்னால் பில்லாவான ரஜினி துப்பாக்கி முனையில் அவரை மிரட்டிக் கொண்டிருந்தார். ஹிஹிஹி, அஜித் நடிச்ச பில்லானு வந்தவங்களுக்கு, சாரி, நான் பார்த்தது, ரஜினியோட பில்லாதான். எப்போ வந்ததுனு தெரியலை, இப்போத் தான் பார்த்தேன். :D மிரட்டியவர் திடீர்னு செத்து விழ, அவரைக் கல்லறையில் புதைத்த பாலாஜி, இதை யார் கிட்டேயும் சொல்லாததும் கொஞ்சம் குழப்பமாய் இருந்தது. எப்படியும் இன்னொரு ரஜினி இருப்பார், அல்லது, இந்த ரஜினியே சாகவில்லை, எல்லாம் ஒரு நாடகம், போலீசோடு சேர்ந்து, சவப்பெட்டிக்கு அடியில் இருக்கும் துவாரம் வழியாகத் தப்பி வந்துவிடுவார் என்று நம்பிக்கொண்டு மேற்கொண்டு படத்தைப் பார்த்தேன்.
கடைசியில் பார்த்தால் மனோரமாவோடு, நாட்டியம் ஆடிப் பிழைக்கும் ரஜினிதான் பில்லாவாக மாறுகிறார். அவரின் இந்த ஸ்டைல் தான் அஜித்தால் "வரலாறு" படத்தில் ஜி3 பண்ண ஒரு காரணம்னு நான் சொன்னால் ஏற்கெனவே என்னிடம் கோபத்தில் இருக்கும், நம்ம கார்த்திக்குக்கு இன்னும் கோபம் வரும், அதனால் அதை உங்கள் ஊகத்துக்கே விடறேன். பில்லாவாக மாற்றப்பட்ட ராஜப்பாவான ரஜினியின் நடவடிக்கையில் சந்தேகப் படும் அந்த நடிகை யாருன்னு தெரியலை. பில்லாவைக் கொல்லும் வெறியுடன் இருக்கும் ஸ்ரீப்ரியாவுக்கும் சந்தேகம் வரலை! ஏனெனில் அந்த சந்தேகக் கேஸ் நடிகையுடன் தான் பழைய பில்லா நெருக்கம்னு சொல்றாங்க. ஆனால் அந்தக் காட்சிகள் காட்டினாங்களான்னு தெரியலை, ஹிஹிஹி, லேட்டாப் பார்த்தேன் இல்லை? அப்பாடி, ஒருவழியா, இந்த ராஜப்பா பில்லா இல்லைனு தெரிஞ்சு, ஸ்ரீப்ரியாவுக்கும் இவர்தான் ஹீரோனு புரிஞ்சு, இவர் மேல் காதல் வந்து, இரண்டு பேரும் டூயட் பாடி, என்னத்தை டூயட்? பாட்டு ஒண்ணும் மனசிலேயே நிக்கலை! அப்புறம் அனாவசியமாய் பாலாஜியைச் சாகடிச்சு, அந்தக் காட்சியைப் பார்க்க முடியலை, வேறே ஏதோ வேலையாப் போயிட்டேன், அப்புறம் ஃப்ளாஷ் பாக்கில் யார் கொன்னாங்கனு காட்டும்போதுதான் பார்த்தேன். அது என்னமோ ஆச்சரியமா இருக்கு! ரஜினி சிவப்புக் கலர் டயரியைத் தூக்கிப் போட்டுட்டு, அது கீழே இறங்குறதுக்குள், எதிரிகளைப் பந்தாடுவதும், சரியா அந்த டயரி அப்புறமா மெதுவா ரஜினி கையிலே வந்து இறங்குறதும், நானும் முயற்சி செய்து பார்த்தேன், நான் தூக்கிப் போட்டுட்டு, யாரை அடிக்கிறதுனு யோசிக்கிறதுக்குள், என் டயரி கீழே வந்து என்னையே அடிச்சுட்டது. இந்தப் படம் ரீமேக்கில் அஜித்தை வச்சு எடுத்திருக்கிறது இன்னும் பார்க்கலை, தொலைக்காட்சிகளில் வரும் விமரிசனம் கூடப் பார்க்கவில்லை. நான் பார்க்கும்போதெல்லாம் திரும்பத் திரும்பக் கல்லூரி படத்தின் வகுப்பறையில் "காமாட்சி" அறிமுகம் செய்து கொள்ளும் காட்சியும், பஸ்ஸில் மாணவர்கள் கலாட்டா பண்ணுவதும் தான் காட்டுகிறார்கள். எல்லாம் ஹெட் லெட்டர்.
**************************************************************************************
இந்தப் பதிவு கார்த்திக்குக்கும், ரசிகனுக்கும் சமர்ப்பணம். கார்த்திக் ரொம்ப நாளா என்னோட பதிவுகளுக்கு வரதே இல்லை. அந்த வருத்தத்திலும், ஒவ்வொரு முறை நான் ஊருக்குப் போகும்போதெல்லாம் கிட்டத்தட்ட போஸ்டர் ஒட்டி, அலங்கார வளைவுகள் வச்சு, மலர் அலங்காரமெல்லாம் செய்து வலை உலகம் முழுக்கத் தெரிவிக்கும் ஒரு அணுக்கத் தொண்டர் இப்போ இப்படி சுறுசுறுப்பே இல்லாமல் உட்கார்ந்திருக்கிறாரே, அவரைத் தட்டி எழுப்பும் விதமாய் எழுதி இருக்கேன்.
அடுத்து ரசிகனுக்கு என்னோட ஃபோட்டோ போடணுமாம். பயந்துக்குவீங்கனு சொன்னால் கேட்கிறதே இல்லை. கமல், ரஜினி, சூர்யா, அசின், ஸ்ரேயா, த்ரிஷா இன்னும் எல்லார் படமும் இருக்கு, உங்க படம் மட்டும் இல்லைனு சொல்றார். கூடிய சீக்கிரம் அவரோட ஆவலை நிறைவேத்தறேன். அதுவரை பொதிகை பத்தி ரொம்ப நாளா நான் ஒண்ணுமே எழுதலைங்கிற அவரோட குறை தீர இந்தப் பதிவு. அப்புறம் அவரோட பதிவிலே வந்து கமெண்டச் சொல்றார். எங்கே? பதிவைத் திறந்தால் கணினியே ஹாங்க் ஆகிடறது. சொன்னால் மனுஷன் கிண்டல் செய்யறார். ஆனால் இன்னும் சிலருக்கும் அந்தப் பிரச்னை இருக்குனு உளவுப்படை தகவல். ஆகவே அவரோட பதிவுக்கு வந்து பின்னூட்டம் போடணும்னால் முதலில் அதை அவர் சரி செய்யணும். அப்புறம், வரலைன்னு சொன்னால் நான் பொறுப்பு இல்லை!
Subscribe to:
Post Comments (Atom)
நல்லதொரு அலசல்
ReplyDeleteஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
சர்வேசன் அவர்களின் நச் சிறுகதை போட்டியின் இறுதி சுற்றில் வாக்களித்து விட்டீர்களா?
இல்லையெனின் என் இந்த
பதிவை படித்துவிட்டு வாக்களிக்க செல்லுங்கள்..
அன்புடன்
வீ எம்
//கமல், ரஜினி, சூர்யா, அசின், ஸ்ரேயா, த்ரிஷா இன்னும் எல்லார் படமும் இருக்கு, உங்க படம் மட்டும் இல்லைனு சொல்றார். //
ReplyDeleteஹஹா! என்னால சிரிப்பை அடக்க முடியலை. காரைக்கால் அம்மையார்னு ஒரு படம் வந்ததாமே? ரசிகன் இன்னும் அதை பாக்கலையா? :p
என்ன அக்கா, தமிழ் சினிமா பாக்கணும்னா மூளையை கழட்டி வெச்சுட்டுதான் பாக்கனும்னு தெரியாதா என்ன? ஆமா சினிமா பாத்தப்பறமும் கண்ணாடி..... இல்லப்பா நான் இந்த ஆட்டத்துக்கு வரலை!
ReplyDeleteஹிஹிஹி, அஜித் நடிச்ச பில்லானு வந்தவங்களுக்கு, சாரி
ReplyDeleteஇல்ல..இல்ல, நான் அஜித்தின் பில்லாவை யாரோ ரீமேக் பண்ணீருப்பாங்களோன்னு நினைச்சேன்.
படம் வந்து ரொம்ப நாளாச்சில்ல?!
//ரொம்பா நாளாச்சு "பொதிகை"த் தொலைக்காட்சி பற்றி எழுதி//
ReplyDeleteஎழுதினீங்க, எனக்கு மூக்கில வேர்த்துடுச்சு :-)
on demand எல்லாம் கேக்கலாமா? அப்ப பொதிகையிலே நடுநிசிக்கு கொஞ்ச முன்னாலே, 'கதையும் காரணமும்னு' ஒண்ணு போடுவானே,அதைப் பத்தி.....
///////
ReplyDeleteஹஹா! என்னால சிரிப்பை அடக்க முடியலை. காரைக்கால் அம்மையார்னு ஒரு படம் வந்ததாமே? ரசிகன் இன்னும் அதை பாக்கலையா? :p
/////////
ஆஹாஹாஆஆஅ..
என்னது பில்லா பாட்டுக நல்லால்லியா...எனக்கு எல்லாப் பாட்டுமே ரொம்பப் பிடிக்குமே...
ReplyDeleteஹெலன் வந்து நினைத்தாலே இனிக்கும் சுகமே..ஷிக்கு ஷிக்கு ஷிக்குன்னு அடடடடா! நானும் சமீபத்துலதான் நெட்டுல பாத்தேன்.
காதல் பாட்டு கெடையாதே...வெத்தலையப் போட்டேண்டிதானே உண்டு. அது நல்ல பாட்டாச்சே.
சந்தேகப்படும் நடிகை பிரவீணா. இவர் பாக்கியராஜின் மனைவி. இப்பொழுது காலமாகிவிட்டார். இவர் பாமா ருக்மணி படத்திலும் நடிச்சிருக்காங்க.
இப்பதான் ரஜினி நடிச்ச பில்லா படத்தையே பார்த்திங்களா !!!!!!!!!!
ReplyDelete\\நான் தூக்கிப் போட்டுட்டு, யாரை அடிக்கிறதுனு யோசிக்கிறதுக்குள், என் டயரி கீழே வந்து என்னையே அடிச்சுட்டது.\\\
சேதாரம் ஒன்னும் இல்லையே..;))
வாங்க, விஎம், முதல்வரவுக்கு நன்றி. நீங்க சொன்ன மாதிரிப் போனேன், கதை எல்லாம் படிச்சேன். வர்ட்டா?????
ReplyDelete@அம்பி, காரைக்கால் அம்மையார் படத்தில் என்ன ரோலில் நடிச்சிருக்கீங்க? சொல்லவே இல்லையா? இவ்வளவு பழைய படத்தில் நடிச்சதினாலே மறந்து கூடப் போயிருப்பீங்களோ? :P
@திவா,
ReplyDeleteமூளையைக் கழட்ட முடியறதில்லை எனக்கு, உங்களை மாதிரி! :)))))),
ம்ம்ம்ம்ம், கண்ணாடி மாத்தப் போறேன், சினிமா பார்த்ததினால் இல்லை, உங்க பதிவைப் படிச்சதினால் என்னோட பவர் ஏறிப் போச்சு! :P
@ஹாரி, வாங்க, வாங்க, முதல் முதல் வந்திருக்கீங்க, அஜித் நடிச்சதும் பார்த்துட்டு எழுதறேன், என்ன ஒரு 20, 30 வருஷம் ஆகும்,"பொதிகை"த் தொலைக்காட்சியில் வர, பரவாயில்லையா? :P
ReplyDelete@ப்ரகாஷ், no on demand! grrrrrrrrrrr
ReplyDelete@அறிவன், இந்த மாதிரி சிஷ்யகேடிகள் இருக்கும்போது நீங்க சிரிக்காமல் என்ன செய்வீங்க? எல்லாம் என்னோட ஹெட்லெட்டர்! :))))
ReplyDeleteவாங்க ராகவன், முதல்லே ரொம்ப நாளா ஒரு சந்தேகம் கேட்கணும்னு உங்க கிட்டே!
ReplyDeleteஇந்தச் "சரவணன் என்ற ராகவன்" அப்படின்னு ஒருத்தர் பங்களூரில் இருந்தாரே/இருக்கிறாரே? அவரும் நீங்களும் ஒரே ஆளா வேறே வேறேயா? போன வருஷம் "நம்பிக்கைக் குழுமம்" "காதல் கவிதை"ப் போட்டியில் நீங்கதான்னு நினைச்சுட்டு இருந்தேன், மஞ்சூர் இல்லைன்னு சொல்றார்.
ஹிஹிஹி, பாமா, ருக்மிணி பார்த்தாலும் ப்ரவீணாவை அடையாளம் தெரியலை! :P
@கோபிநாத், வாங்க, வலைச்சரம் பிசியிலே காலங்கார்த்தாலே சீக்கிரமா எழுந்துட்டீங்க போலிருக்கு!
ReplyDeleteசேதாரம் ஒன்னும் இல்லையே..;))
சேதாரம் டயரிக்குத் தான்! :P
//////////
ReplyDelete@அறிவன், இந்த மாதிரி சிஷ்யகேடிகள் இருக்கும்போது நீங்க சிரிக்காமல் என்ன செய்வீங்க? எல்லாம் என்னோட ஹெட்லெட்டர்! :))))
//////////
சேச்சே,இதுக்கெல்லாம் வருத்தப் படாதீங்க..
பதிவுலக(நுண்?!!)அரசியல்லே இதெல்லாம் சகஜம்ங்க...
:-)
தல பதிவுப்பக்கம் வர மாட்றார்ன்னு இப்படி ஒரூ ஐடியா போட்டு கூப்பிடுறீங்க போல..
ReplyDeleteபில்லா பழசு புதுசுன்னு பேசி ஒரு வழியா குழப்பிட்டீங்க.. :-S
இதனால் தலைவியின் கணக்கிலா பட்டங்களோடு "மொக்கையற்கரசி" என்ற இன்னொரு பட்டமும் கூடுகிறது என்று படிப்பவர்கள் அறிக.
ReplyDeleteஇவண்
தலைவியின் மூத்த தொண்டர்களில் மூத்தவன்
//இதனால் தலைவியின் கணக்கிலா பட்டங்களோடு "மொக்கையற்கரசி" என்ற இன்னொரு பட்டமும் கூடுகிறது என்று படிப்பவர்கள் அறிக.
ReplyDeleteஇவண்
தலைவியின் மூத்த தொண்டர்களில் மூத்தவன்///
வழி மொழிகிறேன்...
:)
// ambi said...
ReplyDelete//கமல், ரஜினி, சூர்யா, அசின், ஸ்ரேயா, த்ரிஷா இன்னும் எல்லார் படமும் இருக்கு, உங்க படம் மட்டும் இல்லைனு சொல்றார். //
ஹஹா! என்னால சிரிப்பை அடக்க முடியலை. காரைக்கால் அம்மையார்னு ஒரு படம் வந்ததாமே? ரசிகன் இன்னும் அதை பாக்கலையா? :p//
கீதா சாம்பசிவம் said...
@அம்பி, காரைக்கால் அம்மையார் படத்தில் என்ன ரோலில் நடிச்சிருக்கீங்க? சொல்லவே இல்லையா? இவ்வளவு பழைய படத்தில் நடிச்சதினாலே மறந்து கூடப் போயிருப்பீங்களோ? :P
தரையில் விழுந்து ,விழுந்து (உருண்டு,புரண்டு)சிரித்ததில் நெற்றியில் வீங்கியே விட்டது...:))))
அம்பியண்ணா..” அவ்வையார்” படத்துல நடிச்ச நம்ம டீச்சரை,காரைக்கால் அம்மையார் ன்னு தப்பா படம் பேரு சொன்னா கோவம் வரத்தானே செய்யும்..:P
// //இதனால் தலைவியின் கணக்கிலா பட்டங்களோடு "மொக்கையற்கரசி" என்ற இன்னொரு பட்டமும் கூடுகிறது என்று படிப்பவர்கள் அறிக.///
ReplyDeleteடிரிஃபிள் ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்....
//\\நான் தூக்கிப் போட்டுட்டு, யாரை அடிக்கிறதுனு யோசிக்கிறதுக்குள், என் டயரி கீழே வந்து என்னையே அடிச்சுட்டது.\\\
ReplyDeleteசேதாரம் ஒன்னும் இல்லையே..;))//
டைரிக்குத்தானே:P
//
ReplyDeleteஹிஹிஹி, அஜித் நடிச்ச பில்லானு வந்தவங்களுக்கு, சாரி
//
ப்ச்
:(
//
ReplyDeleteகைப்புள்ள said...
இதனால் தலைவியின் கணக்கிலா பட்டங்களோடு "மொக்கையற்கரசி" என்ற இன்னொரு பட்டமும் கூடுகிறது என்று படிப்பவர்கள் அறிக.
//
ரிபீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈட்
பில்லா படத்தை அரைகுறையாக பார்த்துவிட்டு ஒரு மொக்கையா?
ReplyDelete//ரஜினி சிவப்புக் கலர் டயரியைத் தூக்கிப் போட்டுட்டு, அது கீழே இறங்குறதுக்குள், எதிரிகளைப் பந்தாடுவதும், சரியா அந்த டயரி அப்புறமா மெதுவா ரஜினி கையிலே வந்து இறங்குறதும//
ரஜினி படங்களைப் பார்த்தால் நியுட்டன் தான் வருத்தப்படணும் (அவரோட தியரி தான் பொயாகிடும்). நீங்க ஏன் வருத்தப்படுரிங்க!! :)
@அறிவன், ரொம்ப டாங்க்ஸு, டாங்க்ஸுங்கோம், நம்மையும் அரசியல்வாதியா ஆக்கினதுக்கு! :P
ReplyDelete@மைஃப்ரண்டு, அதான் அவரைத் தவிர எல்லாரும் வந்துட்டுப் போயிட்டாங்க! அவரு கண்ணை இறுக்கி மூடிட்டார் போலிருக்கு! :(
@கைப்புள்ள்,
ReplyDeleteவாங்க, குண்டர்களில், ச்சீச்சீ, தொண்டர்களில் மூத்த குண்டரே!
பதில் மரியாதை செய்ய வேணாமா? தங்களுக்கும் தகுந்த ஒரு பட்டம் தயாராயிட்டு இருக்கு என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிச்சுக்கறேன். பின்னூட்டம் போடறது என்னமோ மொக்கைக்குத் தான், இதிலே எனக்குப் பட்டமா? சிறந்த மொக்கைப் பின்னூட்ட மன்னர் என்ற பட்டம் உங்களுக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
@வேதா, அது என்னமோ தெரியலை,நான் பார்க்கும்போது எங்க வீட்டு டிவி "பொதிகை" மட்டுமே காமிக்குதே? :P
ReplyDelete@ராம், இருங்க, உங்களுக்கும் பின்னூட்ட மொக்கை மன்னர் பட்டம் வழங்கப் படும்!
ReplyDelete@ரசிகரே, உங்க டாமேஜரைப் பார்த்து ஒரு நாள் நீங்க ஆபீச்சு நேரத்தில் ப்ளாக் எழுதற மேட்டரைப் போட்டுக் கொடுக்கிறேன்! :P
//கீதா சாம்பசிவம் said...
ReplyDelete@மைஃப்ரண்டு, அதான் அவரைத் தவிர எல்லாரும் வந்துட்டுப் போயிட்டாங்க! அவரு கண்ணை இறுக்கி மூடிட்டார் போலிருக்கு! :(//
அட.. நீங்க வேற.. அவரு பொண்ணு த்டுறதுல பிஜியா இருக்காரு.. இப்போ போய் அவர் பேர்ல போஸ்ட் போட்டாலும் தல கண்ணுக்கு தெரியாது.. தலயோட தல படம்ன்னா 100 தடவை பார்க்கிறவரு.. அவர் தலக்கு குழந்தை பிறந்ததைகூட போஸ்ட் போடாம இருக்காருன்னா அவரு எவ்வளவு பிஜியா(!!) வேலை பார்க்கிறாருன்னு தெரிஞ்சிக்கோங்க.. ஹீஹீஹீ...
pothigai inum usuroda iruka ?
ReplyDelete// கீதா சாம்பசிவம் said...
ReplyDeleteவாங்க ராகவன், முதல்லே ரொம்ப நாளா ஒரு சந்தேகம் கேட்கணும்னு உங்க கிட்டே!
இந்தச் "சரவணன் என்ற ராகவன்" அப்படின்னு ஒருத்தர் பங்களூரில் இருந்தாரே/இருக்கிறாரே? அவரும் நீங்களும் ஒரே ஆளா வேறே வேறேயா? போன வருஷம் "நம்பிக்கைக் குழுமம்" "காதல் கவிதை"ப் போட்டியில் நீங்கதான்னு நினைச்சுட்டு இருந்தேன், மஞ்சூர் இல்லைன்னு சொல்றார். //
:) மஞ்சூர் சொல்றதுதாங்க சரி. நம்ம கவிதையெல்லாம் எழுதுறதில்லைங்க. இதுல காதல் கவிதையெல்லாம் எங்க எழுதுறது? காதல் குளிர் தொடர்கதைக்காக ஏதோ கொஞ்சம் முயற்சி செஞ்சேன்.
சரவணன் என்ற ராகவன் வேற. நான் வேற. நான் அவரில்லை :) அட...நான் அவனில்லை படத்துக்கு எப்ப விமர்சனம்?
காரைக்காலம்மையார் படம் பாத்தா கீதா படம் பாக்கவேணாமா - அம்பி கிளியரா சொல்லிடணும் தெரியுமா
ReplyDeleteஏங்க கோபி , கீதாவை டயரி அடிச்சா சேதாரம் யாருக்கு இருக்கும் - இது கூடத் தெரியாதா ?? கீதாவே சொல்லிட்டாங்க - டயரிக்குத் தானாம். பின்ன அடி வாங்குனதெ ஒத்துக்குவாங்களா என்ன ?
ReplyDelete//இதனால் தலைவியின் கணக்கிலா பட்டங்களோடு "மொக்கையற்கரசி" என்ற இன்னொரு பட்டமும் கூடுகிறது என்று படிப்பவர்கள் அறிக.
ReplyDeleteஇவண்
தலைவியின் மூத்த தொண்டர்களில் மூத்தவன்///
ரிப்பீஇட்ட்ட்டேஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
கீதா - மொக்கைகளின் அரசியா - மொக்கையர்களின் அரசியா - நானு கொஞ்சம் டுயூப் லைட்டு
எங்க வூட்டு டீவீலே பொதிகயும் தெரியுது கீதா
ReplyDeleteஆமா பில்லா படமெல்லாம் நானு இன்னும் பாக்கலே - ரீப்ளே பில்லாவைச் சொல்ல்றேனுங்க - பாக்கணும் - சிவா வேற படம் போட்டு காமிச்சாருல்ல. கீதா 20/30 வருசம் இருக்கட்டும் - நானு இப்ப பாத்துடறேன்.
ReplyDeleteபாக்கறது அஜீத் அல்பபெட்
ஆமா :
ஹெட் = தல = அஜீத்
லெட்டர் = எழுத்து = அல்பபெட்
மேடம், என்னை தட்டி எழ முயற்சி பண்ணியதற்கு நன்றி..இப்படி ஒரு பதிவை எழுதியிருப்பதை கூட படிக்க முடியாதாவனாகி விட்டேன்.. இந்த விஷயத்திற்குத் தான் நாங்கள் எல்லாம் உங்களுக்கு தொண்டனாக இருக்கிறோம்.. பிப்ரவரி மாத கடைசியில் இந்தியா வருகிறேன், விடுமுறையில் அல்ல.. இப்போது அமெரிக்காவில் இருக்கும் வாசத்தை விடும் முறையில்.. அதன் பிறகு ஒரளவுக்கு நேரம் கிடைக்கும் என்று நம்புகிறேன்..
ReplyDeleteபதிவு எழுதியதை எனக்கும் சொல்லி படிக்க அழைத்ததற்கு நன்றிங்க மேடம்.. நிச்சயம் வாரம் இரண்டு..இல்லை ஒன்றாவது எழுத முயல்கிறேன்.. எழுத நிறைய இருக்கிறது.. ஊக்கத்திற்கு நன்றிங்க மேடம்.. இன்னைக்கே ஒரு பதிவு போட முயல்கிறேன் :)
ReplyDelete