
இது ஹூஸ்டன் அபார்ட்மெண்டில் சாப்பிட ஏற்பாடுகள் செய்தப்போ எடுத்த படம். சட்டியில் வத்தல் குழம்பு, இன்னொரு பாத்திரத்தில் சீரக ரசம், சாதம், என்ன பொரியல்? மறந்துட்டேன்! ஹிஹிஹி, என்னோட திருமுகத்தோட சாப்பிடும்போது எடுத்த படமும் இருக்கு. நம்ம தொண்டர்களில் மூத்த தொண்டர், குண்டரடிப் பொடி, தங்கமணிக்கு அஞ்சி, (முன்னொரு காலத்தில் அதியமான் நெடுமானஞ்சி), என்னோட படத்தைப் போடச் சொல்லி, அதை மற்றொரு சிஷ்யகேடியான கோபிநாத்தும் வழி மொழிஞ்சிருக்கார். போட்டுட்டால் என்ன ஆறது? அதான் போடலை! தவிர, என்னோட படம் தான் ஏற்கெனவே போட்டுட்டேனே, இன்னும் என்ன? அது நிஜமாவே நான் தானுங்க, நம்பாதவங்க திராச சாரைக் கேளுங்க!

இந்தப் படம் "Galveston" கடற்கரையில் ஒரு சின்ன கப்பலில் வரும் பயணிகளை ஏற்றிக் கொண்டு சிறிது தூரம் கடல் பிரயாணம் செய்ய வைத்து அனுப்புகின்றனர். அந்தக் கப்பலுக்குப் போகும் வழி இது! கடல் பிரயாணம் படங்கள் சரியா வரலை போலிருக்கு! ஒரே வெளிச்சமா இல்லைனா இருட்டா வந்திருக்கு!

இந்தப் படம் அங்கேயே உள்ள "அக்வேரியத்தில்" எடுக்கப் பட்டது.
எல்லாம் கண்ணு வைக்காதீங்க, நாளைக்கு இணையம் வருதான்னு தெரியாது, இங்கே வர முடியுமான்னும் தெரியாது, அதான் வந்தப்போ போட்டுடலாம்னு மூணு போஸ்ட் போட்டிருக்கேன். மூன்று நாளைக்கு வெறும் பின்னூட்டங்கள் மட்டும் ஏற்கப் படும்! :D
வத்தக் குழம்பு.கண்ணைப் பறிக்கிறது.
ReplyDelete\\\பாச மலர் said...
ReplyDeleteவத்தக் குழம்பு.கண்ணைப் பறிக்கிறது.\\
அப்போ தலைவி வச்சிருக்க வத்தக் குழம்பை சாப்பிட முடியாதுன்னு சொல்றிங்க...;)))
சீரக ரசம் - அப்ப்டியே சாப்பிடணும் போல இருக்கு
ReplyDeleteசாப்பிடும் போது படிக்கக் கூடாதுன்னு எங்கம்மா சொல்லுவாங்க. ஆனா யாருமே சாப்பிடும் போது மடிக்கணனி வச்சிக்க கூடாதுன்னு சொல்லலைன்னு உங்க படம் விளக்குதா?
ReplyDelete