
இன்று திரு நேதாஜி அவர்களின் பிறந்த நாள். எத்தனையாவது பிறந்த நாள் என்பதோ, அதைக் கொண்டாடுவதோ முக்கியம் இல்லை. அவர் வாழ்வின் அவர் சந்தித்த பலவிதமான ஆபத்துக்களையும், விபத்துக்களையும் அவர் எவ்வாறு துணிவுடனும், தைரியத்துடனும் எதிர்த்துப் போரிட்டாரோ, அதே உறுதியையும், மனோதைரியத்தையும் நாமும் பெறவேண்டும் என்ற வாழ்த்துக்கள், இந்த வலை உலக நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொண்டு கீழ்க்கண்ட ஒரு சிறு சம்பவத்தை எழுதுகிறேன்.
//இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஜெர்மனியில் இருந்து நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஜப்பானுக்குப் பயணப்பட்டுக் கொண்டிருந்தார் நேதாஜி அவர்கள். கூடவே அவரின் நம்பிக்கைக்கு உகந்த படைத் தலைவர்களும். அனைவரும் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நேசநாட்டுப் படையின் உளவுக்கப்பலுக்கு நேதாஜி நீர்மூழ்கிக் கப்பல் மூலம் செல்லுவது தெரிந்துவிட்டது. உடனேயே தகவல்கள் பரிமாறிக் கொள்ளப் பட்டன. மெல்ல, மெல்ல, நாலு பக்கமும் சூழ்ந்து கொள்ள ஆரம்பித்தது அமெரிக்க, இங்கிலாந்துக் கப்பல்கள். கீழே போய்க் கொண்டிருக்கிறது நேதாஜியின் கப்பல். மேலே போகின்றன அதை குறிபார்த்துச் சேதப் படுத்தத் தேடிக் கொண்டு எதிரியின் கப்பல்கள். நேதாஜியின் கப்பல் தலைவனுக்கும் செய்தி வந்து சேருகிறது, மேலே எதிரியின் கப்பல்கள், நேதாஜி இருப்பதைத் தெரிந்து கொண்டு வந்து சூழ்ந்து கொண்டிருப்பதைத் தெரிவிக்கிறது உளவுப்படைத் தகவல். கப்பல் தலைவனுக்குக் கிலி. எப்படியேனும் நேதாஜியின் உயிரைக் காப்பாற்ற வேண்டுமே? என்ன செய்வது? நடுக்கடலில் வேறே இருக்கிறார்கள்.
நேதாஜியுடன் அந்தச் சமயம் விவாதித்துக் கொண்டிருந்த திரு அஜீஸ் அஹமதுவுக்குத் தகவல் போகிறது. அப்போது பார்த்து குண்டு முழக்கம். ஆம், எதிரிகள் கண்டுபிடித்துவிட்டார்கள். கப்பலைத் துளைக்கும் வெடிகுண்டுகள்! நீருக்கடியில் போர்! தலைவன் கலக்கதுடன் எதிர்த்தாக்குதலில்! அஜீஸ் அஹமதுவும் ஒரு நொடி கலங்கித் தான் போனார். ஆனால் தொடர்ந்து அவருக்குக் குறிப்புக்களும், ஆணைகளும் நேதாஜியிடமிருந்து தொடர்ந்து வருகிறது. கிட்டத் தட்ட அரை மணி நேரக் குழப்பத்துக்குப் பின்னர் கப்பல் பாதுகாப்பான இடத்துக்கு ஓட்டிச் செல்லப் பட்டது.
அஜீஸ் அஹமது நேதாஜியிடம் விஷயத்தை விளக்கும் முன்னரே நேதாஜி, "அஜீஸ், எதிரி வந்துவிட்டான் அருகே, என்று தெரிந்ததுமே இப்படிப் பதட்டத்துடன் செயல்பட்டால் நாம் ஜெயிப்பது எவ்வாறு? நான் சொன்னதையே நீங்கள் கவனிக்கவில்லை!" என்று சொல்லவும் அஜீஸ் அஹமதுவுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. தலைவர் தம் உயிரைக் கூடப் பொருட்படுத்தாமல் முக்கியச் செய்தியைக் கொடுத்துக் கொண்டிருக்க நாம் சற்றே தடுமாறிவிட்டோமே! என மனம் வருந்தினாராம். //
இந்த நிகழ்ச்சி அப்போது நேதாஜியுடன் இருந்த இந்திய தேசீயப் படையைச் சேர்ந்த தலைவர்கள் பின்னர் அவர் மறைவுக்குப் பின்னர் பகிர்ந்து கொண்டவற்றில் இருந்து எடுத்தது.
இத்தகைய மனத் துணிவு நமக்கும் வரவும், தேசபக்தியில் நாமும் சிறந்து விளங்கவும் பிரார்த்திப்போம். இது ஒன்றே இந்த மகா மனிதனுக்கு நாம் செய்யும் அஞ்சலி!
மிக அரிதான குறிப்பு. நன்னி. :)
ReplyDeleteமுக்கிய பிரமுகர்களில் இது போன்றோரை நினைவு வைத்திருந்து..அவர்கள் பிறந்த நாளையும் நினைவுபடுத்தி வாழ்த்தும் செய்தியும் பதிவிடும் கீதாவுக்கு ஒரு ஜே..
ReplyDeleteஆமாம், நேதாஜி தொடர் எழுதினீங்களே முடிச்சீங்களா?....முடித்த மாதிரி ஞாபகம் இல்லையே?.
ReplyDeleteஅருமையான தகவல்!
ReplyDeleteதிவா
எனது பேவரைட் கதாநாயகன் சுபாஸ் தான்... இந்தக்கால திரை நாயகர்களின் கவர்ச்சியில் விட்டீல் பூச்சியாக இளைஞர்கள் வீழ்வதை விட நிஜநாயகனின் வழியில் எழுவது நல்லது...
ReplyDeleteஅரிதான தவகல்..நன்றி தலைவி ;)
ReplyDelete