இப்போது குறிப்பிடப் போகும் கதை தெரிந்தவர்கள் இருக்கலாம், எனக்கு இதன் ஒரு பகுதி மட்டுமே சிறிய வயதில் அறிந்திருக்கின்றேன் வாய்மொழியாக. இந்தக் கதையை நான் படிச்சது 4,5 வருஷத்துக்கு மேல் இருக்கும். இந்தக் கோயில்களுக்கு நாங்கள் இன்னும் செல்லவில்லை என்பதாலேயே இதைப் பற்றி எழுதாமல் இருந்தேன். இப்போது சஷ்டியை முன்னிட்டுப் பதிவுகள் போடுவதால் இதை எழுதத் தீர்மானித்துள்ளேன். கோபி கேட்டிருக்கும் காதல் கதையும் எழுதுகின்றேன். ஆனால் கொஞ்சம் நாள் ஆகும். வடிவேலனைக் கல்லில் வடித்த ஒரு சிற்பியைப் பற்றிய கதை இது. செவிவழிச் செய்தியாகவே சொல்லப் பட்டு வருகின்றது. ஆகவே யாராவது "தரவு"னு கேட்டுட்டு வந்தால், தரவே மாட்டேன் என்பதையும் சொல்லி விடுகின்றேன்.
*************************************************************************************
சோழநாட்டு அரசர்கள் அனைவருமே சைவப் பற்றுடையவர்கள். ஈசனிடம் பற்றுள்ளவர்களுக்கு அவர் குமாரனிடம் பக்தி இல்லாமல் போகுமா? குறைவின்றி நிறைவாகவே இருந்து வந்த சமயம் அது. இந்தக் கதை நடந்த காலத்தில் விஜயநகரப் பேரரசு ஆட்சி புரிந்து வந்தது என்றும், அதன் கீழ் கப்பம் செலுத்தி வந்த சோழச் சிற்றரசன் என்றும் சொல்லுவாருண்டு. ஆன்மீகக் காவலர்கள் ஆன சோழச் சிற்றரசர்களில் ஒருவன் ஆன முத்தரசன் என்பான் ஆண்டு கொண்டிருந்தான். ஒருமுறை அவன் சிக்கலில் ஈசனைத் தரிசனம் செய்ய வந்திருக்கின்றான். அதுவரையிலும் சிக்கிலில் ஈசன் மட்டுமே கோயில் கொண்டிருந்ததாயும் சொல்கின்றனர். சிக்கிலுக்கு வந்த முத்தரசன் ஈசனின் வரலாற்றைக் கேட்டறிந்தான். வசிஷ்டர் காமதேனுவின் வெண்ணையை லிங்கமாய்ப் பிடித்து வைத்துப் பூஜை செய்து வந்ததையும், அந்த லிங்கத்தைப் பெயர்த்து எடுக்க முயன்ற பலராலும் முடியாததையும் லிங்கம் மண்ணில் சிக்கிக் கொண்டதாலேயே ஊருக்கும் சிக்கில் எனப் பெயர் வந்ததையும் கேட்டறிந்த முத்தரசன் உணர்ச்சி மேலிட்டுப் பல மானியங்களை ஒதுக்கினான் கோயிலுக்கு. குமாரன் கோயிலில் இல்லை என்பதையும் அறிந்துகொண்டு சிங்காரமாய், அழகாய், நேர்த்தியாய் ஒரு வேலனை வடிக்கச் செய்து அங்கே பிரதிஷ்டை செய்யவும் உத்தரவிட்டான் மன்னன்.
சிற்பிக்காக அலைந்து, திரிந்து வெண்ணாற்றின் கரையில் ஒரு பாழடைந்த மண்டபத்தில் தன்னந்தனியே சிலைகள் வடித்துக் கொண்டிருந்த ஒரு சிற்பியைக் கண்டார்கள். சிலைகளின் அழகோ பிரமிக்க வைத்தது. சிலையா அல்லது உயிருள்ள தெய்வமா என்று எண்ணும்படிக்கு ஜீவசக்தி ததும்பிக் கொண்டிருந்தன சிற்பங்களில். சிற்பியின் நெற்றியில் திருநீறு, மார்பில் உத்திராட்ச மாலை. பார்த்தாலே கை எடுத்துத் தொழவேண்டிய தோற்றம். சிற்பியா, இல்லை சிவனடியாரா?? முத்தரசனுக்குச் சந்தேகம். என்றாலும் அவனிடம் தன் வேண்டுகோளை வைக்கின்றான் முத்தரசன். சிற்பி சொல்கின்றான்:" மன்னா! நாங்கள் முருகனடிமைகள். பரம்பரைச் சிற்பிகளும் கூட. என்னைச் "சில்பா சிற்பி" என்றே சொல்லுவார்கள். பூர்வ ஜென்மத்தின் புண்ணியத்தாலும், முருகனின் கருணையாலுமே அவன் உருவை வடிவமைக்கும் வாய்ப்பைத் தாங்கள் எனக்களிக்கின்றீர்கள். தங்கள் சித்தம் போல் மயிலோனை அனைவரும் வியக்கும் வண்ணம் சிங்காரமாய் வடிவமைக்கின்றேன்." என்று உறுதிமொழி கொடுக்கின்றார் சில்பா சிற்பி.
நாட்கள் பறக்கின்றன. அருமையான கல்லைத் தேர்ந்தெடுத்துச் சிற்ப வேலையை ஆரம்பிக்கின்றார் சிற்பி. ஒருநாள் அவர் கனவில் ஆறுமுகன் தோன்றி, " நீ என்னை இந்த ஆறுமுகக் கோலத்தில் பனிரண்டு கைகளுடனேயே உருவாக்கு!" என்று கட்டளை இட, அவ்வாறே உருவாக்கத் தொடங்கினார் சிற்பி. வலக்கைகளில் சக்திவேல், கதை, கொடி, தண்டு, அம்புடன் கூட மற்றொரு வலக்கரத்தில் அபய ஹஸ்தமும், இடக்கைகளில் வஜ்ரம், பத்மம், கடகாஸ்தம், சூலம், வில், வரத ஹஸ்தமும் கொண்டு அழகை அள்ளிச் சொரியும்படியான சுந்தரவேலனை மயில் வாகனத்தில் வடித்தார் சில்பா சிற்பி. பார்த்தவரைப் பித்துப் பிடிக்க வைத்தான் ஆறுமுக வேலன். மயிலோடு பறந்துவிடுவானோ என நினைக்கும் வண்ணம் ஜீவன் ததும்பி நின்றது சிலையில். கண்களின் அழகைச் சொல்லுவதா? புன்முறுவலைச் சொல்லுவதா? கைகளின் வடிவைப் பாராட்டுவதா? மயில் சிற்பமா? உண்மையான மயிலா? என்னும்படிக்குச் சிற்பம் அனைவரையும் திகைக்கவும், பிரமிக்கவும் வைத்தது.
மக்கள் மன்னனைப் பாராட்டுவதா? சிற்பியைப் பாராட்டுவதா எனத் தெரியாமல் மயங்கி இருவரையும் மனதாரப் பாராட்டி இத்தகையதொரு சிற்பத்தை இனி எவராலும் உருவாக்க முடியாது என்று சொன்னார்கள். ஜெயகோஷங்கள் முழங்கின. ஒரு நன்னாள் பார்த்துக் குடமுழுக்குக்கு ஏற்பாடு செய்தான் முத்தரசன். நன்னாளில் குடமுழுக்கையும் நடத்தி ஆறுமுகன் பிரதிஷ்டையும் செய்வித்தான். ஊரெங்கும் கொண்டாட்டம், கோலாகலம், ஆனந்தத் திருவிழா! மக்கள் மனதில் மகிழ்ச்சி! ஆனால் மன்னனுக்கோ மனதில் ஏதோ குழப்பம்! வேகம், என்ன என்னவோ கணக்குகள். என்னவோ எண்ணங்கள். சிற்பிக்கு மன்னன் என்ன பரிசு கொடுக்கப் போகின்றானோ என்று மக்கள் பேசுவதும் அவன் காதில் விழுந்தது. சிற்பியை அரசவைக்கு வரவழைத்தான். அரசவையில் பெருங்கூட்டம். அனைவரும் மன்னன் அளிக்கப் போகும் பரிசையும், பாராட்டுச் சொற்களையும் எதிர்பார்த்துக் குழுமி இருந்தார்கள்.சிற்பி வரவழைக்கப் பட்டார். மன்னன் தரப்போகும் பரிசை எதிர்பார்த்துக் காத்திருந்தார் சிற்பியும். மன்னனும் சிற்பியைப் புகழ்ந்தான், இது போன்ற சிற்பம், எவராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத பேரழகுப் பெட்டகம் ஆன சிங்காரவேலன் சிலையைச் செதுக்கியதன் மூலம் தன் உள்ளத்தைச் சிற்பி குளிர்வித்து விட்டதாயும் கூறினான். இன்னொரு உதவியையும் செய்யவேண்டும் என்றும் கேட்டான். மற்றொரு சிற்பமோ என சிற்பி ஆவலுடன் காத்திருந்தான். முத்தரசன் கூறுகின்றான்:" சில்பா சிற்பியே! இத்தனை தத்ரூபமாய் முருகன் சிலையை வடிவமைத்த நீர் இனி எந்த மன்னனுக்கும் இதே போல் எந்தக் காலத்திலும் முருகன் சிலையை மட்டுமல்ல, எந்தச் சிலையையும் வடிக்கக் கூடாது. முத்தரச மன்னன் மட்டுமே முருகப் பெருமானைப் பேரழகுடனும், பொலிவுடனும் படைத்தான் என வரலாற்றில் என் பெயர் நிலைத்து நிற்க வேண்டும். ஆகவே" என நிறுத்தினான் மன்னன். அடுத்து வரப்போவதை எதிர்பார்த்துச் சிற்பி காத்திருக்கையில் மன்னன் கண்ணசைவில் சில வீரர் சிற்பியை நெருங்கினார்கள். சிற்பியை இருவர் இறுக்கிப் பிடித்துக் கொள்ள மற்றும் இருவர் அவர் வலக்கைக் கட்டை விரலை வெட்டப் போனார்.
சிற்பி பயத்திலும் நடுக்கத்திலும் ஆழ்ந்து போய் மன்னனைக் கெஞ்சினார் கட்டை விரலை வெட்டவேண்டாம் என. கட்டை விரல் இல்லை எனில் உளியைப் பிடிப்பது எவ்வாறு?? அதற்கு என் உயிரை எடுத்துக் கொள் என்றும் சொல்லிப் பார்த்தார், மன்னன் மனம் இரங்கவில்லை. இந்தப் பெருமை யாவும் எனக்கே வந்து சேரவேண்டும் என்ற அவன் காவலரை நோக்கி," அஞ்சாதீர்கள் கட்டை விரலை வெட்டுங்கள்" என்று சொல்ல, அவர்களும் மன்னன் கட்டளைக்கிணங்கி சில்பா சிற்பியின் கட்டை விரலை வெட்டினார்கள். சிற்பி துடிதுடித்தார். உடல்வேதனையும், மனவேதனையும் தாள மாட்டாமல், "முருகா, உன் பேரழகைச் செதுக்கிய எனக்கு நீ கொடுத்த பரிசா இது?" என கண்ணீருடன் கலங்கி, சோகம் தாங்க முடியாமல், சோர்ந்து போய் உறங்க மீண்டும் கனவில் வந்தான் சிங்காரவேலன், முகம் கொள்ளாத புன்னகையுடன்.
இன்று ஒரு தகவல்:
ReplyDeleteதமிழ் மணம் சொல்வது:
Error performing query. Try after sometime Can't open file: 'tm_items.MYI' (errno: 145)
நச், நச், நச், நச், திவா, சந்தோஷமா இருக்கா இப்போ?? :P:P:P:P:P:P
//ஆகவே யாராவது "தரவு"னு கேட்டுட்டு வந்தால், தரவே மாட்டேன் என்பதையும் சொல்லி விடுகின்றேன்//
ReplyDeleteஹஹா, அப்படி கேக்கறவங்க கிட்ட சுருட்டு கதைக்கு தரவு கேளுங்க. கம்முனு போய்டுவாங்க. :))
முருகனின் சிற்ப அழகை விவரித்தை படித்துவிட்டு அங்க போகனும்னு ஆவல் எழுகிறது.
ஆமா, சிக்கல் எங்க இருக்கு? தமிழ்மணத்துல!னு பதில் தர முயற்சிக்க வேண்டாம். :))
//தமிழ் மணம் சொல்வது:
ReplyDeleteError performing query. Try after sometime Can't open file: 'tm_items.MYI' (errno: 145)
//
எங்களுக்கு எல்லாம் ஒழுங்கா தான் வருது. :))
அப்படியே மக்கர் பண்ணாலும் சரி செய்ய ஒரு டெக்னிக் இருக்கு. :p
ஆனா உங்களுக்கு சொல்ல மாட்டேன். :))
புலி, இந்தக் கொடுமையைப் பாருங்க, சூடானிலே தானே இருக்கீங்க?? இந்த அம்பிக்கு "சிக்கல்" எங்கே இருக்காம்? கேட்கிறாரு?? இந்தியாவிலேனு சொல்லிடவா??
ReplyDelete@அம்பி, பூகோளம் திரும்பிப் படிக்கவும். :P:P:P:P
ReplyDelete@ அம்பி,
ReplyDeleteஆஹா, என்ன ஒரு நல்ல எண்ணம்??/ வாழ்க! வளர்க! :P:P:P:P எனக்கு என்ன சொல்ல ஆளா இல்லை?? :P:P:P
//நச், நச், நச், நச், திவா, சந்தோஷமா இருக்கா இப்போ?? :P:P:P:P:P:P//
ReplyDeleteகிரேட்!
சிக்கலை அடுத்து எண்கண் வருமா?
இரண்டுமே அருமையான சிற்பங்கள்! நேரிலே பாத்தேன்.
//ஆனா உங்களுக்கு சொல்ல மாட்டேன். :))//
அதான் தெரியுமே!
புதுசு புதுசாக பிரச்சனை.....ஆனா ஒன்னுமே புரியல (தெரியல) இப்போ தமிழ்மணத்துல சேர்த்துட்டு தான் வரேன் ;)
ReplyDeleteசிற்பி கதை முடிஞ்சிடுச்சா!!!? முருகன் கனவில் வந்து என்ன சொன்னார்?? சொல்லுங்கள் தலைவி...சொல்லுங்கள் ;))
\\கோபி கேட்டிருக்கும் காதல் கதையும் எழுதுகின்றேன்\\
ம்ம்...ரைட்டு ;)
சிக்கல் சிங்காரவேலனுக்கு இப்படி ஒரு சிக்கலான கதையா?
ReplyDeleteநேத்துத் தமிழ்மணத்துக்கு ஒடம்பு சரியில்லையாம். என்னைக்கூட வெள்ளாட்டுக்குச் சேர்க்கமாட்டேன்னுச்சு.
அம்பி, சிக்கல் எல்லாம் அந்தப் பக்கத்தில்தான். நம்ம பக்கத்தில் எல்லாமே தெளிவு!
ReplyDeleteசமீபத்தில் பூவனத்தில் இந்தக் கதையை படித்திருக்கிறேன்! - தலைப்பு - கல்லிலே கலைவண்ணம் கண்டான்.
ReplyDelete//கிரேட்!//
ReplyDeleteஅப்பா! எவ்வளவு சந்தோஷம்???
//சிக்கலை அடுத்து எண்கண் வருமா?
இரண்டுமே அருமையான சிற்பங்கள்! நேரிலே பாத்தேன்.
//
நீங்க பார்க்கலைனா தான் அதிசயம்! அதான் முதலிலேயே சொல்லிட்டேனே, தெரியாதவங்களுக்குத் தான் கதைனு! :P:P:P:P
@கோபி, அதென்னமோ தெரியலை, 10 நாளா தமிழ்மணம் உள்ளேயே விட மாட்டேங்குது, என்னனு யாரும் சொல்லவும் மாட்டேங்கறாங்க! :(((
ReplyDelete@துளசி, ஒரு நாள் தானே உங்களைச் சேர்த்துக்கலை! நமக்கு அப்படி இல்லையே?? :P:P:P
@இ.கொ. அதானே, கல்லிடைக்குறிச்சிக்காரங்க எல்லாம் ஒத்துமையா ஒண்ணு சேர்ந்துப்பீங்களே! :P:P:P:P:P:P:P:P
வாங்க ஜீவா, உங்களுக்கும் தெரியலைனா தான் எனக்கு ஆச்சரியமா இருந்திருக்கும். நன்றி, வந்ததுக்கும், பின்னூட்டத்துக்கும்.
ReplyDelete