எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, November 17, 2008

கோடி செம்பொன் போனால் என்ன கிளியே, குறுநகை போதுமடி!

"முருகா" இந்த மூன்று சொற்களுமே உன்மத்தம் பிடிக்க வைத்து ஆடிப் பாடி, அழுது, அரற்றி, சிரித்து மகிழ வைக்கும் சொல்லாகும். வாயினால் பாடியும், மனதினால் சிந்தித்தும் முருகா என அழைத்தும், முத்துக்குமரா எனக் கொஞ்சியும் அந்தக் கந்தனை வணங்குகின்றோம். அதுவும் கந்தனுக்கு என உள்ள சஷ்டி விரதத்தை அனுசரிப்பவர்களுக்கு அவன் பெயர் ஒன்றே பித்துப் பிடித்து ஆட வைக்கும். கந்தனுக்கு அரோஹரா, வேலனுக்கு அரோஹரா, என்று கூவிக் கொண்டு காவடிகளைத் தோளில் சுமந்து செல்லும் பக்தர் கூட்டத்தில் அறிஞர்களும் உண்டு, படிக்காத பாமரர்களும் உண்டு. ஆத்மார்த்தமாக இறை இன்பத்தை அனுபவித்தால் அந்த சுகத்தை விட மற்றொரு சுகமும் உண்டோ என்றே தோன்றும் அல்லவா?? இந்த முருகா என்ற மூன்றெழுத்தில் அப்படி என்னதான் இருக்கிறது? பார்ப்போமா???

"மு" என்ற சொல் முகுந்தனாகிய மஹாவிஷ்ணுவைக் குறிக்கின்றது. "ரு" என்ற சொல்லானது ருத்ரனைக் குறிக்கின்றது. "கா" என்ற சொல்லோ கமலத்தில் வாசம் செய்யும் பிரம்மனைக் குறிக்கின்றது. இம்ம்மூவரையும் ஒருங்கிணைக்கும் சொல்லே "முருகா" என்று ஆகின்றது. இந்த முருகனுக்கு ஆறு முகங்கள். ஏற்கெனவே ஆறு திசைகளைக் குறிக்கும் எனப் பார்த்துவிட்டோம். இது தவிர முருகு என்றால் தமிழ், தமிழ் என்றால் முருகு என்றும் சொல்வதுண்டே? அந்த ஆறுமுகனின் ஆறுமுகங்களே தமிழ் எழுத்தில் உள்ள வல்லினம், மெல்லினம், இடையினம் என்னும் ஒவ்வொரு இனத்திலும் உள்ள ஆறு எழுத்துக்கள் ஆகின்றன. "அ" முதல் "ஒள" வரை உள்ள பனிரண்டு எழுத்துக்கள் ஆறுமுகனின் பன்னிரு திருக்கரங்களும், தோள்களும் ஆகின்றன. "க" முதல் "ன" வரையில் உள்ள பதினெட்டு எழுத்துக்கள் அவனின் பதினெட்டுக் கண்கள் ஆகின. ஆயுத எழுத்தான ஃ என்னும் எழுத்தோ கந்தனின் முக்கிய ஆயுதமான வேலாயுதத்தைக் குறிக்கின்றது.

கந்தனின் புகழ் பாடும் திருப்புகழைப் பாடினாலோ வாய் மணக்கும் என்கின்றனர் முருகனடியார்கள். திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும், அறிவு தெளியும்,மனம் அமைதி அடையும். சந்தேகமே இல்லை. பழமுதிர்சோலையில் ஒளவைக்கிழவிக்குப் பழத்தைக் கொடுத்துச் சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா எனக் கேட்டு அவளுக்கு ஞானத்தைப் போதித்தான் கந்தவேள். அகத்தியருக்கே கந்தனே தமிழ் ஆசான். கந்தனிடம் இருந்தே செந்தமிழைக் கற்ற பெரும் பாக்கியவான் அகத்தியர். கந்தனுக்கு முகங்கள் ஆறு இருப்பதைப் போல அவனுக்கு உரிய திதியும் ஆறாவது நாளான சஷ்டி திதி ஆகும். இந்த சஷ்டி திதியில் கந்தனை நினைத்து விரதம் இருப்பவர்க்குக் கேட்டவர்க்குக் கேட்டவற்றைக் கொடுப்பான் கந்தவேள்.

கந்தன் என்றால் திரட்டப் பட்டவன் என்றும் பொருள் அல்லவா?? கடவுளர் அனைவரின் சக்தியும் ஒன்று சேர்ந்து திரட்டப் பட்டவனே கந்தன், உயிர்களுக்குப் பற்றுக் கோடாகக் கையில் தண்டத்தை ஏந்திப் பழநி மலையில் தண்டாயுதபாணியாக நிற்கின்றான். அவன் வேலோ நம்மைச் சுற்றி வந்து அரண்போல் காக்கின்றது. "குத்து, குத்து கூர் வடிவேலால்," என்று சொல்லிக் கொண்டே சென்றோமானால் வழித்துணையாக அந்த வேலாயுதமே நம்மைக் காக்கின்றது. இந்த வீரவேல் சூர பதுமனின் அகந்தையை அழித்ததே ஒழிய அவனை அழிக்கவில்லை. கந்தன் என்னும் கருணைப் பெருங்கடலுள் அவன் இணைய உறுதுணையாக நின்ற சக்திவேல் அது. அகந்தை நிறைந்த சூரனின் அசுர உடல் நீங்கி ஞானம் பெற்று சேவலாகவும், மயிலாகவும் மாற உறுதுணையாக இருந்த ஞானவேல் அது.
சேவல் காலையில் முதலில் கூவும். அதுவும் எப்படிக் கூவுகின்றது? கொக்கரக்கோ எனக் கூவுகின்றது. இந்த சப்தமே பிரணவ வடிவாக ஓங்கார நாதமாக ஆகின்றது. மயிலோ ஆடும் மயில், அது பிந்து வடிவாக இருக்கின்றது. இந்த சேவலாகிய நாதமும், மயிலாகிய பிந்துவும் சேர்ந்து தான் கலையாகி நின்ற சக்திவேலைக் கையில் வைத்திருக்கும் முருகவேள். அதனாலேயே அருணகிரி நாதர் "நாத பிந்து கலாதி நமோ நம" என்று படினார். மயில் தோகை விரித்தால் தெரிவது ஓங்கார ஸ்வரூபமே! இது நம் கண்ணுக்குத் தெரியும் உருவம் ஆகின்றது. ஆனால் சேவலோ கண்ணுக்குத் தெரியாமல் உணரும் வண்ணம் "கொக்கரக்கோ" எனக் கூவிப் பிரணவத்தை அருவ ரூபமாய் உணர்த்துகின்றது. அது மட்டுமா??

சேவல் ஒளியை நாடும். சூரியன் வரும் நேரத்தைக் கண்டு மகிழும். ஆனந்தம் பொங்கும். கூவுகின்றது. மயிலோ எனில் கார்மேகத்தைக் கண்டாலேயே மகிழ்கின்றது. இருளே அதற்குப் பிடிக்கின்றது. இந்த இரண்டுக்கும் நடுவில் உருவாயும் இல்லாமல், அருவாயும் இல்லாமல், அதே போல் ஒளியாயும் இல்லாமல், இருளாயும் இல்லாமல், உள்ளதென்றும் இல்லாமல், இல்லை என்றும் இல்லாமல் இருப்பவனே கந்தவேள். இந்தக் கந்தனால் இந்திராணியின் மாங்கல்யம் காக்கப் படுகின்றது, இந்திரனுக்கு இந்திர பதவி திரும்பக் கிடைக்கின்றது. கந்த சஷ்டியில் விரதம் இருந்தால் மாங்கல்ய பலமும் கிடைக்கும். ஆறுமுகனை வேண்டினால் கிடைக்காதது எது? சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்ற பழமொழியே உண்டல்லவா?? சஷ்டியில் விரதம் இருந்து கந்தனை நினைந்து வழிபட்டால் பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளைப் பேறு உண்டாகும் என்று சொல்வதுண்டு. அகப்பை என்பது இங்கே கருப்பையைக் குறிக்கின்றது. இது தான் இன்று மருவி சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்னு ஏதோ சாப்பாட்டைக் குறிக்கும் புதுமொழியாக மாறிவிட்டது. காலம் செய்த கோலம் இது.
,

8 comments:

  1. அருமை...அருமை ;))

    பெயர் விளக்கமும், பழமொழி விளக்கமும் சூப்பரு ;))

    ReplyDelete
  2. கீதாம்மா, கந்தனைப் பற்றிய பதிவுகளுக்கு மகுடம் வைத்தாற் போல் இந்தப் பதிவை மிக அருமையாக எழுதியிருக்கீங்க. படிக்கப் படிக்க மனம் மணக்கிறது :) சஷ்டியில் விரதம் இருந்தால் அகம் என்னும் பையில் அருள் சுரக்கும் அப்படின்னு திருமுருக கிருபானந்தவாரியார் சொன்னார்னு சன் டி.வி. தெய்வ தரிசனத்துல கேட்டேன். (பழனியில சஷ்டியப்போ நடந்த சூரசம்ஹார விழா காண்பிச்சாங்க. அருமையா இருந்தது :)

    ReplyDelete
  3. தகவல்களை அறியத் தந்தமைக்கு நன்றி..

    ReplyDelete
  4. எல்லாரும் சொன்னதை நான் வழிமொழிகிறேன்

    ReplyDelete
  5. @கோபிநாத், அது சரி, தமிழ்மணத்துக்கு என்ன ஆச்சு? மருதைக்காரங்களை மட்டும் விரட்டுதாமில்ல?? :P:P:P

    @கவிநயா, ரொம்பவே நன்றிம்மா, திருச்செந்தூர் சூர சம்ஹாரம் ஒவ்வொரு வருஷமும் பொதிகையின் தயவில் காண முடிகின்றது.

    ReplyDelete
  6. @மெளலி, ரொம்ப நன்றி,

    @அம்பி, என்ன பீட்டரெல்லாம்??

    @புலி, என்ன இது? இப்படி வழி மொழியறதையே எத்தனை நாளைக்கு வச்சுக்கப் போறீங்க?

    ReplyDelete
  7. @புலி, களத்திலே இறங்கியாச்சில்லை, ஒரு கை என்ன இரண்டு கையாலும் பார்த்துட வேண்டியது தானே? :P:P:P

    ReplyDelete