நம்ம பதிவுகளின் நீஈஈஈஈஈஈஈஈளம் பற்றிய புகார்ப்பட்டியல் பதிவை விடப் பெரிசா இருக்கிறதாலே கொஞ்சம் சுருக்கலாமே என்று சுருக்கினேன். நம்ம கவிக்கு அது அவசரமா எழுதி முடிச்சுட்டாப்போல் தெரிஞ்சிருக்கு. எப்படியோ கண்டு பிடிச்சுடறாங்கப்பா?? எல்லாம் எங்கேயோ அமெரிக்காவிலே இருந்துட்டு இதைச் சொல்றாங்க. எல்லாம் முருகன் அருள். இப்போ அடுத்து மெளலி கேட்ட குமாரன் என்பதன் அர்த்தம் என்னனு பார்ப்போமா?? இதை முதலிலேயே எழுதிடலாம் பதிலானு நினைச்சேன். ஆனால் பதிலை எத்தனை பேர் பார்ப்பாங்கனு தெரியலை. ஆகையால் பதிவாகப் போடுகின்றேன்.
*************************************************************************************
குமாரன்= என்றால் சிவ, சக்தி ஆகியோரின் அருளால் வெளிப்பட்டவன் என்று ஒரு பொருள் ஆன்றோர் வாக்கில் சொல்கின்றனர். ஷரவணப் பொய்கையை அம்பிகையின் அம்சம் என்றும், கங்கையானவள் அந்தப் பொய்கையில் ஈசனின் வீரியத்தைக் கொண்டு சேர்த்ததால் சிவ சக்தி ஐக்கியத்தில் சர்வலோகத்துக்கும் அன்னை, தந்தை ஆனவர்களின் புத்திரன் என்பதாலும் குமாரன் என்று சொல்வதுண்டு என்று பரமாச்சாரியார் கூறுகின்றார். முதன்முதலாய்க் கந்தன் புராணத்தைக் "குமார சம்பவம்" என்று வால்மீகியே ராமாயணத்தில் பால காண்டத்தில் கூறி இருக்கின்றார். கு= என்ற சொல்லுக்கு அக்ஞானம், (ஆணவம், மலம், கன்மம்) இம்மூன்றில் உள்ள மலம் என்றும் கொள்ளலாம். மாரன்= என்றால் அழிப்பவன். நம் ஆணவத்தை அழிப்பவன். நம் கர்மாவை அழிப்பவன். நம் மலத்தை அழிப்பவன். அனைத்து உயிர்களின் மலப்பிணிகளை அழித்து ஒழிப்பவன் என்று கொள்ள வேண்டும். நம்மை அழிக்காமல், தன் வேலாயுதத்தால் காத்து ரட்சித்து நம் மனதில் உள்ள அசுர எண்ணங்களை அழித்து ஞானத்தைப் பிறப்பிக்கின்றவனே குமாரன்.
இந்தக் குமாரன் என்ற பெயரை வைத்தே ஆதிசங்கரர் தோற்றுவித்த ஷண்மதங்களில் உள்ள கெளமாரம் பிறந்தது. வடநாட்டில் குமாரன் என்றாலே கார்த்திகேயன் ஒருவன் தான். அங்கே இவன் நைஷ்டிக பிரம்மச்சாரி. புனே நகரில் உள்ள பார்வதி மலையில் கந்தன் தவக்கோலத்தில் அன்னையிடம் வேல் வாங்கும் முன்னர் தவம் புரிவதாயும் அங்கே பெண்கள் செல்லக் கூடாது என்றும் இன்றளவும் இருக்கின்றது. பார்வதியைத் தரிசித்து விட்டு மேலே போய்க் குமாரனைத் தரிசிக்க வேண்டும். பார்வதியையும் மலை ஏறியே தரிசிக்க வேண்டும். அன்னை அங்கே குமாரனுக்கு அருள் தர ஆயத்தமாய் இருக்கின்றாள். மேலே கார்த்திகேயன் இருக்குமிடத்துக்கு ஆண்கள் மட்டுமே செல்லலாம். இந்தக் குமாரனே குமாரஸ்வாமியாகவும் ஆகின்றான். குமரனாகவும் ஆகின்றான். ஸ்கந்தன் எப்படித் தமிழில் கந்தன் ஆனானோ அப்படியே குமாரனும் தமிழில் குமரன் ஆகின்றான்.
அடுத்து ஷரவணபவ. ஷ=மங்கலம் என்ற பொருளிலும், ர= ஒளி என்ற பொருளிலும், வ= சாத்வீகம், என்ற பொருளிலும், ண= போர், யுத்தம் என்ற பொருளிலும், பவன்= என்றால் தோன்றியவன், உதித்தவன் என்ற பொருளிலும் வருகின்றது. நம் ஷண்முகன் பிறக்கும் முன்னரே தேவசேனாதிபதி அவன் தான் என்பது தீர்மானம் ஆயிற்றே. பிறக்கும் முன்னரே அவனுக்குரிய பதவியைத் தீர்மானித்தாயிற்றல்லவா. அது மட்டுமா??? எல்லாரும் துறவியாகித் திருமணம் செய்யாமல் இருப்பார்கள். அல்லது திருமணத்தின் பின்னர் துறவியாவார்கள், இவனோ துறவியாகிப் பின்னர் ஒரு மணத்துக்கு இரு மணம் அதிலும் ஒரு பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதலித்து மணந்து கொண்டிருக்கின்றான். ச= என்ற சொல்லுக்கு மகா லட்சுமி என்ற பொருளும் உண்டு. ர= என்றால் வாக் தேவி, சரஸ்வதி, வ= என்றால் ஆரோக்கியம், அந்த ஆரோக்கியம் தரும் வீரம் என்ற பொருளில் வரும். இந்த ஆறெழுத்து மந்திரத்தைத் தக்க குரு மூலம் உபதேசம் பெற்று ஜபித்து வந்தோமானால் கந்தன் கருணையால் அவன் வேல் நம்மைக் காத்து அரணாக நிற்கும்.
கதை இல்லையேனு பார்த்துட்டுத் திரும்பப் போயிடாதீங்க, கதை ரொம்ப நீஈஈஈஈஈளம். அதான் சுருக்கிட்டு இருக்கேன். ஒவ்வொரு பகுதியாய்ப் போடறேன், நாளையில் இருந்து.
//Can't create a new thread (errno 12); if you are not out of available memory, you can consult the manual for a possible OS-dependent bug//
ReplyDeleteஇன்னிக்கும் தமிழ்மணம் துரத்திடிச்சே?? :)))))))))
2-3 முறை பூனே போயிருக்கேன்...தெரியாம போச்சே
ReplyDelete:(.
மந்திர விளக்கம் அருமை. நன்றிகள் கீதாம்மா...ஆனா நான் கேட்டது வேற. :)
சரவணபவ என்பது போல குமாராய நம: என்பதும் மந்திர சாஸ்திரத்தில் இருக்கிறதா?. இதன் ரிஷி யார் என்பதே என் கேள்வி.
//எல்லாரும் துறவியாகித் திருமணம் செய்யாமல் இருப்பார்கள். அல்லது திருமணத்தின் பின்னர் துறவியாவார்கள், இவனோ துறவியாகிப் பின்னர் ஒரு மணத்துக்கு இரு மணம் அதிலும் ஒரு பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதலித்து மணந்து கொண்டிருக்கின்றான்.//
ReplyDeleteகுழந்தை கோவிச்சு கொண்டு வெளியே போனா துறவுன்னு சொல்லறதா?
//இன்னிக்கும் தமிழ்மணம் துரத்திடிச்சே??//
தமிழ்மணம் வாழ்க!
//இவனோ துறவியாகிப் பின்னர் ஒரு மணத்துக்கு இரு மணம் அதிலும் ஒரு பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதலித்து மணந்து கொண்டிருக்கின்றான்.//
ReplyDeleteச்சோ ச்வீட் அம்மா. ச்செல்லமான முருகக் குழந்தையாச்சே :) நன்றி.
ம்ம்ம்...மந்திர விளக்கம் , பெயர் விளக்கம் இரண்டுக்கும் மிக்க நன்றி தலைவி ;))
ReplyDelete\\//இவனோ துறவியாகிப் பின்னர் ஒரு மணத்துக்கு இரு மணம் அதிலும் ஒரு பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதலித்து மணந்து கொண்டிருக்கின்றான்.//\\
என்னை போல இளைஞர்களுக்கு தேவையான முக்கியமான விஷயத்தை மிகவும் சுருக்கமாக சொல்லிவிட்டதற்கு என்னோட கண்டனங்கள் ;))