வள்ளி தினைப்புலம் காக்க வந்துவிட்டாள். ஏற்கெனவே வள்ளியின் திருமணம் குறித்து அவளின் வளர்ப்புத் தந்தையான நம்பிராஜனும், தாயான மோகினியும் கவலையுற்றிருந்தார்கள். ஆனால் நாரத முனியோ அவள் குறிஞ்சிக் கடவுளான முருகனுக்கே உரியவள் எனச் சொல்லி இருந்தார். முருகனாவது, வள்ளியை வந்து மணப்பதாவது! என்ன செய்வது என்றறியாமல் இருந்தனர் நம்பிராஜனும், மோகினியும். இந்நிலையில் வள்ளி தினப்புலம் காக்கச் சென்றாள். அங்கே தோழிகள் புடை சூழ “ஆலோலம்” பாடினாள். ஆடினாள். அப்போது தோழிகள் ஓடி வந்து வள்ளியிடம் வளைச் செட்டி வந்திருப்பதாய்க் கூற , அவனை அழைத்து வருகின்றனர். தோழியர் அழைத்து வந்த வளைச் செட்டியைப் பார்த்து வள்ளி, இவன் என்ன சிறு பிள்ளையாக இருக்கின்றானே என மனதிற்குள் எண்ணினாள். வள்ளியின் கை பிடித்து வளை போட செட்டி நெருங்கியதும், வள்ளி விதிர் விதிர்த்துப் போகின்றாள். அந்த ஆறுமுகன் பிடிக்க வேண்டிய கை இது, ஒரு வளைச்செட்டி பிடிக்கலாமோ என மயங்குகின்றாள்.
வளைச் செட்டியைத் துரத்துகின்றாள் வள்ளி. ஏளனமாய்ப் பேசுகின்றாள் அவனைப் பார்த்து. அவமானப் படுத்தித் திருப்பி அனுப்புகின்றாள். “ஏ! வளைச்செட்டி,
“ஆருமற்ற வள்ளி நாம்
அருந்தினையைக் காக்கப் போறேன்
வாசலிட்டுப் போறவளுக்கு
வளசலு எனக்கெதுக்கு?”
என்று சொல்லி அவனை விரட்டுகின்றாள். வள்ளியின் அன்பின் ஆழம் புரிகின்றது கந்தனுக்கு. ஆம் வளைச் செட்டி வேடத்தில் வந்து வள்ளியைச் சோதனை செய்தது அந்தக் கந்தனே ஆகும். தினைப்புலம் காக்கும் போது வள்ளி தினைக் கொத்த வரும் கிளி, மைனா, குருவி, அன்னங்கள், காக்கைகள் போன்றவற்றை விரட்டுகின்றாள்.
ஆலோலம், ஆலோலம், ஆலோலங்கடி, சோஓஓஓஓஓஓ”
ஆலோலங்கடி சோஓஓஓஓஓ
ஆயலோ கிளி ஆயலோ
அன்னங்களே, வாத்துகளே
போவென்று விரட்டினாலும்
குந்துகெட்ட வெள்ளக்கிளி
ஆனாலும் போவதில்லை அடி
ஆலோலம், ஆலோலம், ஆலோலங்கடி சோஓஓஓஓ”
எனப் பாடிப் பறவைகளை விரட்டுகின்றாள் வள்ளி. அப்போது அங்கே ஒரு தள்ளாத வயது சென்ற கிழவர் வருகின்றார். கிழவரைப் பார்த்தாலே பாவமாய் இருக்கின்றது. உடல் மட்டுமில்லாமல் அனைத்து அவயங்களும் ஆடுகின்றன. கையில் பிடித்திருந்த தடியும் கையில் பிடிக்க முடியாமல் தடுமாற்றத்தோடு வந்து கொண்டிருந்தார் கிழவர். தோழிகள் பார்த்தனர். கிழவரை மெதுவாய்க் கை பிடித்து அழைத்துச் சென்று வள்ளியிடம் கொண்டு சேர்த்தனர்.
கந்தன் நினைப்பில் இருந்த வள்ளி கிழவரைக் கொஞ்சம் எரிச்சலுடனேயே பார்த்தாள். என்னவென்று கேட்க, பாவம் தள்ளாத கிழவர், பசி போலிருக்கிறது, கை, கால் நடுக்கமாய் இருக்கிறது, அதான் இங்கே கொண்டு வந்து சேர்த்தோம் என்றனர் தோழிகள். சரி அந்தத் தினைமாவைக் கொஞ்சம் சாப்பிடக் கொடுங்கள் என்று தோழியரிடம் ஆணை இடுகின்றாள் வள்ளி. “வள்ளி, வள்ளி, நீ உன் கையால் கொடேன்!” என்று ஆசையுடன் கிழவர் கேட்க, கிழவருக்கு ஆசையைப் பாரேன், என்ற வள்ளிக்குத் தன்னை மீறிச் சிரிப்பு வந்து விடுகின்றது.
“கல்லை உரலாக்கி
கருங்கம்பை ஒலக்கையாக்கி
தேக்கிலையை அளவாக்கி
தெள்ளி விடு வள்ளி
தினைமாவை அள்ளி”
சரி, கிழவர் தானே ஆசையை நிறைவேற்றுவோம் என எண்ணிக் கொண்டே, தேனும், தினைமாவும் கலந்து கிழவருக்குக் கொடுக்கின்றாள் வள்ளி. ஒரு வாய் போடவில்லை, கிழவருக்கு, விக்கல் எடுத்து விடுகின்றது. பயத்தில் வள்ளியைக் கட்டிக் கொள்கின்றார் கிழவர். வள்ளிக்குக் கோபம் வந்துவிடுகின்றது.
“தண்ணீர் தவிக்குதடி வள்ளி” என்று தண்ணீர் கேட்கின்றார் கிழவர். வள்ளி மறுக்க, கிழவர் யோசிக்கின்றார். இவள் எதற்கும் பயப்படவே மாட்டேன் என்று பிடிவாதமாய் இருக்கின்றாளே என நினைத்த வண்ணம், “வள்ளி, வள்ளி, இந்தக் காட்டு யானை இருக்கே!” என்று ஆரம்பித்தார்.
\\\“வள்ளி, வள்ளி, இந்தக் காட்டு யானை இருக்கே!” என்று ஆரம்பித்தார்.\\\
ReplyDeleteஅவ்வ்வ்வ்...முக்கியமான இடத்தில் போட்டிங்க பாருங்க பிரேக்கை...கலக்கல் தலைவி ;))
அறிய நாட்டுப்புறப் பாடல்களை தொடர்ந்து அளியுங்கள்.
ReplyDeleteதவராக "அரிய" என்பது 'அறிய" என்றாகிவிட்டது...இணையத் தமிழ் மூதாட்டி மன்னிக்கவும். :-)
ReplyDeleteஆனை வந்தது கதை நின்னு போச்சு!
ReplyDeleteகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......
பாட்டு எங்கேந்து? அழகா இருக்கே!
அரங்கேற்றத்துக்கு ஆடிய "சப்தம்", முருகன் பாட்டுதான். கடைசியில வள்ளி கதை வரும். எனக்கு ரொம்பப் பிடிக்கும் :) ம்... அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்...
ReplyDelete@கோபி, ஹிஹிஹி, கதை தெரிஞ்சது தானே???
ReplyDelete@மெளலி, அறியத் தரும்படிச் சொல்லிச் சொல்லி அறியச் சொல்லிட்டீங்க போல! :P:P:P
@திவா, பாட்டெல்லாம் எங்கேருந்துனு சொல்லிட்டேனே, அத்தனை அழகாப் படிக்கிறீங்க! :P:P:P:P
ReplyDelete@கவிநயா, நாட்டியம் தெரிஞ்ச உங்களுக்குத் தெரியாத பாட்டையா நான் போடப் போறேன், ரொம்பவே நன்றிம்மா, தொடர்ந்த பாராட்டுக்கு.
ReplyDeleteகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ReplyDeleteஆடிக்கொருதரம் அமாவாசைக்கு ஒரு தரம் வந்து பின்னூட்டங்களை படிச்சா அப்படித்தான்.
நான் கேள்வி கேட்டது வேற பதிவு, நீங்க பதில் சொன்னது வேற பதிவு!