ஒரு வழியாய் மும்பைத் தாக்குதல் முடிவுக்கு வந்தது. இதில் தாஜ் ஹோட்டலின் ஜிஎம்மின் மனைவி, குழந்தைகளும் கொல்லப் பட்டிருக்கின்றனர். என்றாலும் அவர் தம்மால் இயன்ற அளவுக்கு சீரிய பணியை விடாமல் ஆற்றி, அங்கிருந்து தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு மட்டுமின்றி, மற்ற விருந்தினர்கள் தப்பவும் பெருமளவு உதவி செய்திருக்கின்றார். முதலில் அவருக்கு நம் தாழ்மையான வணக்கங்களைத் தெரிவிப்பதோடு, இனிமேல் தான் தெரியப் போகும் மாபெரும் துயரில் இருந்தும், இழப்பில் இருந்தும் அவர் மீண்டு வரவும் பிரார்த்தனைகள் செய்வோம். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களுக்குத் துணையாக வந்த கமாண்டோக்கள் ஆறு பேர் தாஜ் ஹோட்டலின் உணவு பரிமாறும் அறையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சுமார் 150 அப்பாவி மக்களைப் பக்கத்தில் உள்ள மீட்டிங் நடக்கும் அறை ஜன்னல் வழியாகத் தப்பிக்க வைத்திருக்கின்றார்கள். அவர்களின் உயர்ந்த, தன்னலமற்ற பணிக்கு நம் பாராட்டுகளும், நன்றியும் உரித்தாகும். தங்கள் இன்னுயிரை ஈந்த வீரர்கள் ஆன ஏடிஎஸ்ஸின் தலைவர், தேசீய பாதுகாப்புப் படை வீரர்கள் அனைவருக்கும் நம் வீர வணக்கங்களும், அஞ்சலிகளும். அனைவரின் குடும்பத்தினருக்கும் நம் உளமார்ந்த இரங்கல்களும். நம் இரங்கல்களும், அனுதாபங்களும் ஒருநாளும் அவர்கள் வாழ்வில் ஒளியேற்றப் போவதில்லை. நம் கையாலாகாத் தனமும் நமக்குத் தெரிந்ததே. எந்த ஒரு அரசியல்வாதி செய்யும் உதவியும் வேண்டாம் என்று உறுதியோடு ஏடிஎஸ்ஸின் தலைவர் கர்காரேயின் மனைவி சொல்லி இருக்கின்றார். அவரின் மன உறுதிக்கு ஒரு வணக்கம்.
மாபெரும் துயரில் இருந்து அனைவரும் மீண்டு வரக் காலம் தான் துணை செய்யவேண்டும். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தொலைக்காட்சியில் பார்த்த நமக்கே உடலும், உள்ளமும் பதறுகின்றது. அவங்களுக்கு எப்படி இருக்கும்???தாஜ் ஹோட்டல், டிரைடெண்ட் ஹோட்டல் மற்றும் விடி ரெயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களில் தாக்குதலுக்கு உள்ளாகி உயிர் இழந்த அனைத்து அப்பாவிப் பொதுமக்களுக்கும் நம் வணக்கங்களும், அஞ்சலிகளும் உரித்தாகின்றன. அவர்கள் குடும்பத்தினருக்கும் இந்த துக்கத்தில் இருந்து மீண்டு வரப் போதுமான மனோதிடத்தை இறைவன் அருளுவானாக! காயம் அடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நூற்றுக் கணக்கான பொதுமக்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும், காவல் படையினருக்கும் அவர்கள் விரைவில் குணமடைந்து பணிக்குத் திரும்ப இறைவனைப் பிரார்த்திப்போம்.
முக்கியமாய் நம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர், உள்துறை மந்திரிகளுக்கும் இனியாவது சுறுசுறுப்பாய் இதை ஒடுக்கக் கூடிய அளவுக்கு மனோதிடத்தையும், துணிச்சலையும் இறைவன் தரவேண்டுமென்று பிரார்த்திப்போம். உளவுப்படையினருக்கு வேண்டிய சுதந்திரத்தைக் கொடுத்து அவர்கள் வேலையில் குறுக்கிடாத அளவுக்கு மனோவலிமை உள்ள அரசு அமையவும் பிரார்த்திப்போம். தேவை ஒரு பலம் வாய்ந்த தலைவர்! ஈசன் அவரை அடையாளம் காட்டவும் பிரார்த்திப்போம்.
எல்லாத்துக்கும் மேலே முக்கியமான ஒண்ணு, மும்பை வாழ் மக்களின் ஒத்துழைப்பு. ஒவ்வொரு முறையும் தீரத்துடன் ஒத்துழைக்கும் மக்கள். வாழ்க, வளர்க! நம்பிக்கை துளிர்க்கிறது.
வீரர்களுக்கு எனது வீர வணக்கங்கள்.
ReplyDeleteஇதில் அரசியல் ஆதாயம் தேடமுனையும் அற்ப அரசியல்வாதிகளுக்கு...?
பிரார்த்தனையில் நானும் கலந்துக்கிறேன்!
ReplyDelete:-|
வீரர்களுக்கு வணக்கத்துடன் அஞ்சலி செலுத்துவோம். அன்னாரின் குடும்பத்தினருக்கும் நம் ஆழந்த அனுதாபங்கள்.
ReplyDelete\\எல்லாத்துக்கும் மேலே முக்கியமான ஒண்ணு, மும்பை வாழ் மக்களின் ஒத்துழைப்பு. ஒவ்வொரு முறையும் தீரத்துடன் ஒத்துழைக்கும் மக்கள். வாழ்க, வளர்க! நம்பிக்கை துளிர்க்கிறது. \\
ReplyDeleteஅவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கு...அந்த மக்களுக்கும் & வீரர்களுக்கும் ஒரு ராயல் சல்யூட்
வீரர்களுக்கு வணக்கங்கள். எத்தனையோ அல்லல்களுக்கு நடுவே வேலையை முடித்திருக்கிறார்கள்.
ReplyDeleteஇதற்கு மேல் எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் வேறு.
இந்த அழகில் சுட்டவன், வாய் நிறைய சிரிப்போடு அத்தனை பேரயும் சுட்டானாம்.என்னத்தை சொல்லறது.
வாங்க யாழ், உங்க பக்கத்தை இறுக்கி மூடி இருக்கீங்க போல!
ReplyDeleteஅரசியல் ஆதாயம் தேடத் தானே அரசியல்வாதிகளாகவே ஆகறாங்க, நம் நாடு என்ன யு.எஸ். பிரிட்டன் போலவா? அவங்க கலாசாரமும், மொழியும் மட்டுமே நமக்கு வேண்டும். அந்தப் பெருந்தன்மை, உழைப்பு,பாரபட்சமின்றி அனைத்து மக்களுக்கும் தொண்டு செய்வது இதெல்லாம் எதுக்கு சொல்லுங்க???
@திவா, நன்றி.
ReplyDelete@ராமலக்ஷ்மி, வாங்க ரொம்ப நன்றி.
@கோபிநாத், ஒருவழியா எல்லாம் முடிஞ்சது, இனிமேலாவது கவனமாய் இருப்பாங்கனு நம்புவோம்.
வாங்க வல்லி, ரொம்பவே அனுபவிச்சுச் சுட்டான் என்று விடி ஸ்டேஷனில் இருந்து தப்பியவரும் சொல்றார். அதுக்கு ஏத்தாப் போல அவங்க மனசைப் பக்குவம் செய்திருக்காங்க. இது ஒண்ணே எங்க கடமைனு நினைச்சுச் செயல்பட்டிருக்காங்க. மேலும் அதிக அளவில் போதை மருந்துகளும் எடுத்துட்டு இருக்காங்க. அதன் தாக்கமும் இருந்திருக்கு! :((((
ReplyDelete