போன மாதம் மழை வந்தப்போ பிரச்னை வந்த உருவே வேறே. மே மாதம் செய்த ரிப்பேர் வேலைகளில் ஏதோ தவறு இருந்ததால் வீட்டுக்குள்ளே ஒரே தண்ணீர் மயம். குடை பிடிச்சுட்டு இருந்தோம். அங்கங்கே பாத்திரங்கள் வேறே. இந்த அழகிலே எனக்குக் கைக்கட்டு வேறே. பதினைந்து நாள் ஆகி இருந்தது. வீட்டில் உறவினர் வருகை வேறே. வேறே யாரும் இல்லை. ம.பா.வுக்கு அக்காவும், அவங்க மருமகள், குழந்தையுடன் விஜயம். குழந்தைக்குத் தண்ணீர் கொட்டுவதைப் பார்த்து ரொம்ப சந்தோஷம். நாமும் குழந்தையாய் இருந்தால் எப்படி இருக்கும்னு தோணித்து. நாத்தனார் ரொம்பவே பெருந்தன்மையோடு தான் சமைக்கிறேனு சொல்லிட்டார் தான். ஆனால் சமையல் அறைதான் இருக்கிறதிலேயே மோசமாய் இருந்தது. எல்லா சாமானும் வெளியே வந்தாச்சு. சமைக்க மேடையிலே நின்னால் மேலே தண்ணி கொட்டும். காலுக்குக் கீழே பெருகி வரும் வெள்ளத்தில் சமைப்பது என்னும் வித்தை கை வரவில்லை. கடைசியில் அஞ்சாநெஞ்சள் ஆன நாம தான் போய் இடக்கு ராணியாக(சீச்சீ, இந்த இ.கொ. வச்ச பேரில்லை இது?) இடக்கை ராணியாக அவங்கக் கூடக் கூட எல்லாம் செய்து கொடுக்க சமையல்னு பண்ணி ஒப்பேத்தினோம். அப்புறம் மழையும் விட்டது. அவங்களும் ஊருக்குப் போனாங்க. கைக்கட்டும் எடுத்துட்டு டாக்டர் கையை அசைக்கலாம்னு சொல்லிட்டார். ஒரேயடியா அசைச்சுட்டேனோ தெரியலை. மறுபடி, மறுபடி வலி இருந்துட்டேத் தான் இருந்தது. ஏற்கெனவே word document -ல் எழுதி வச்ச, (அப்படி ஒரு பழக்கமே இல்லாமல் இருந்தது, இந்த ஆற்காட்டார் புண்ணியத்தைக் கட்டிட்டார். திடீர், திடீர்னு அவரோட வரவாலே, கிடைக்கும் நேரத்திலே எழுதி வச்சு schedule பண்ணியும் வச்சுடுறேன்.) எப்போவாவது திருத்தங்கள் செய்யறது உண்டு. இல்லைனா இல்லை.
இணையம் நினைச்ச நேரத்திலே கிடைக்கிறதில்லையே?? மழை நின்னு போச்சுனு நானும், நிக்கலை திரும்ப வரும்னு அவரும் ரெண்டு பேரும் பெட் கட்டி இருந்தோம். கடைசியில் மழை வந்தே விட்டது. நல்லவேளையா, வயசான எங்க மாமியார் வந்த நேரத்திலே மழையும் இல்லை, எனக்கும் சமைக்க முடிஞ்சது. அவங்க திரும்பி ஊருக்குப் போன அன்னிக்கு மழையும் ஆரம்பிச்சது, ஆற்காட்டார் விஜயமும் அதிகம் ஆயிடுச்சு. சில சமயங்களில் யு.பி.எஸ். சார்ஜ் ஆகக் கூட மின்சாரம் இல்லைங்கறாப்போல மத்தியானங்களில் மின் தடை!. இப்போ ஒருவழியா விஷயத்துக்கு வரேன். அப்பாடா! யாரு அது மூச்சுவிட்டுப் பல்லைக் கடிக்கிறது? அம்பிதானே? தெரியுமே எனக்கு? நேத்துப் பெய்த பயங்கர மழையிலே மின்சாரம் எப்போ வரும், எப்போ போகும்னே சொல்ல முடியலை. இந்த அழகிலே நேத்தி ராத்திரி தோசை வார்க்கும்போதே எரிவாயு தீர்ந்துபோய் மாத்தினோம். அப்போவே கொஞ்சம் சந்தேகமா இருந்தது. எங்கேயோ கசிவு இருக்கோனு. இருந்தாலும் சிலிண்டர் மாத்தினதிலே இருக்கும்னு வேலையை முடிச்சுட்டு அடுப்பையும் நல்லா மூடி வச்சுட்டுக் காலம்பர எழுந்து காஃபி போட அடுப்பைத் திறந்தால் எரிவாயு வாசனை.
என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைனு நினைச்சுட்டு இருந்தேன். ம.பா. கிட்டே முதல்லே சொல்லலை. காஃபி குடிச்சதும் பேப்பர் வரலையேனு சோகத்தில் இருந்தார். அப்போ போய் எப்படிச் சொல்றதுனு யோசிச்சேன். மின்சாரம் இல்லை. குளிக்க வெந்நீர் போடணுமே? அடுப்பை மூட்டினால் வீடு பூராவும் எரிவாயு மணத்தது. உடனேயே அவருக்கு விஷயம் தெரிஞ்சு போய் அடுப்பை அணைனு சொல்லிட்டார். காலை ஏழு மணிக்கு எந்த காஸ் கம்பனி திறப்பாங்க? பொறுமையாய் 9-30 வரை இருந்தாகணும். முகத்திலே எண்ணெய் வழிந்தது. குளிக்கும்போது தடவினது தான். வேறே நீங்க நினைக்கிறாப்போல் அசடெல்லாம் இல்லை. இவர் பாட்டுக்குப் பேப்பரைத் தேடிட்டுப் போக, வீட்டுக்கு ஒரு திடீர் விருந்தாளி. உள்ளே வந்ததுமே குளிரால் நடுங்கிட்டு சூடாக் கொஞ்சம் காஃபி கிடைக்குமானு கேட்க தி.தே.கொ. மாதிரி முழிச்சேன். அப்புறமா விஷயத்தைச் சொல்லி மின்சாரம் வந்தால் ரைஸ் குக்கரில் பால் காய்ச்சிக் காஃபி தரேன்னு உறுதிமொழி கொடுத்துப் பத்திரமும் கொடுத்தாச்சு. காலை ஆகாரம் பண்ணணுமே?? என்ன செய்யறது??
ஃப்ரிஜிலே மாவு இருக்கு. ஆனால் எதிலே செய்யறது? மின்சாரமும் இல்லை. வெளியேபோன ம.பா. திரும்பி வந்தார் சோகம் அதிகமாகி. பேப்பரே வரலையாம். தொலைக்காட்சியில் பார்க்கிறதும் செய்திகளே. அப்புறமா பேப்பரில் என்னத்தைப் படிப்பாரோ தெரியலை! விஷயத்தைச் சொன்னதும் விருந்தாளி வேறேனு தெரிஞ்சதும், எங்களுக்கு வழக்கமாய் சமைத்துக் கொடுக்கும் வீட்டுக்குத் தொலைபேசி காலை ஆகாரமும், 3 சாப்பாடும் கேட்டால், அவர் ஆகாரம் வேணால் வாங்கிக்குங்க, சாப்பாடு நோ என்று சொல்லிவிட்டார். சரி இப்போதைக்குப் பார்த்துக்குவோம்னு போய் காலை ஆகாரம் இட்டிலி வாங்கிட்டு வந்து சாப்பிடும்போதே மின்சாரம் வர, ஓடிப் போய் ரைஸ்குக்கரில் பாலைக் காய்ச்சிக் காஃபியும் கலந்து சாப்பிட்டு முடிச்சாச்சு. சமையலையும் ரைஸ் குக்கரிலேயே செய்யலாம் என்றும் ப்ளான் போட்டாச்சு. அதுக்குள்ளே நான் மேலே வைத்த மைக்ரோவேவ் அவனையும் எடுக்கச் சொன்னேன். அதிலே அப்பளம் சூடு பண்ணிக்கலாமே? சமையல் செய்யக் கூடாதுனு சொல்றாங்க. வெந்நீர் போட, பால் காய்ச்சனு வச்சுக்கலாம், காஃபியும் கலந்துக்கலாமே? ஆனால் அதை எடுத்தோமோ இல்லையோ மின்சாரமும் போயாச்சு.
மின் வாரியத்துக்குத் தொலைபேசினால் கட் ஆகி இருக்கும்மா, அதிலேயும் உங்க காலனியிலே தான் போயிருக்கு. மழை கொட்டுதே? இப்போப் பார்க்க முடியாது! னு சொல்லிட்டாங்க. உண்மைதானே. மழையில் என்னத்தைப் பார்க்கமுடியும்? ஆனால் சாப்பாட்டுக்கு வழி?? வேறே என்ன செய்யறது? பக்கத்தில் இப்போ அண்ணாவும் இல்லை. இல்லைனா அங்கே போய் சாப்பாடு சாப்பிட்டுட்டே வரலாம், இல்லைனா எடுத்துட்டு வந்துக்கலாம். ரொம்பக் குழம்பிப் போய்ப் பின்னர் நினைவுக்கு வந்தது கரி ஒரு கிலோ எப்போவோ வாங்கி வச்சது. அது பத்திரமா இருக்கானு பார்த்துட்டு மேலே பரணில் இருந்த குமட்டி அடுப்பை எடுத்து அதில் கரியைப் போட்டுட்டுப் பிடிக்கக் காத்துட்டு இருந்தேன். அதுக்குள்ளே மின்சாரம் வர, போய் அவசரம் அவசரமாக் குளிச்சுட்டு வந்து ரைஸ் குக்கரில் சாதத்தையும் குமட்டி அடுப்பில் ரசம், மோர்க்குழம்பு, வெண்டைக்காய் கறியும் பண்ணி முடிச்சேன். அதுக்குள்ளே கொல்லையிலே காக்காய்க்கும், குருவிக்கும் பசி வந்து ஒரே சத்தம், மழை கொஞ்சம் விட்டிருந்தது. அதுங்களுக்குப் போட்டுட்டுப் பின் வந்த விருந்தாளிக்கும் போட்டுட்டு நாங்களும் சாப்பிடும்போது மணி ஒண்ணாயிடுச்சு. கணினியில் வந்து உட்கார்ந்தேன், மின்சாரமும் போயிடுச்சு. ஏதோ நான் சமைக்கன்னு வந்தாப்போல் வந்துட்டு உடனேயே போயிடுச்சு. இப்போத் தான் 5-00 மணிக்கு வந்திருக்கு.
மீண்டும் குமட்டி அடுப்பில் தான் காஃபி போட்டு முடிச்சு, (இன்னிக்குக் குமட்டி ஸ்பெஷல் காஃபி, இல்லைனா சாயந்தரம் டீ தான்) இட்டிலியும் பண்ணி முடிச்சாச்சு. ஆக மொத்தம் இன்னிக்குப் பழங்காலத்துக்குப் போயாச்சு. மழை இல்லைனா இந்த அனுபவம் எல்லாம் எங்கே கிடைக்கும்???
மின்சாரம் போயிட்டுப் போயிட்டு வரதாலே பின்னூட்டங்களுக்குப் பதில் இல்லைனு கவலைப் படாதீங்க. மின்சாரம் வந்தால் வருவேன்.
ReplyDeleteம்ம்ம் யாரு வரப் போறாங்கனு அம்பி சிரிக்கிறது தெரியுது. ஆனால் இந்த மொக்கைக்கு வருவாங்களே?? :P:P:P
அட, அட எப்படித்தான் இந்த அல்லல்களுக்கு நடுவிலும் எல்லாத்தையும் எழுதினீங்களோ....தலைவியின் சிறப்பே தனிதான்
ReplyDeleteஆஹா, கீதாம்மா, கொடுங்க வலக்கையை! என் நாத்தனாரும் வரேன்னு சொல்லியிருக்காங்க இப்ப லீவுக்கு, நான் என் வலது கையிலே கட்டு போட்டுக்கலாம்னு இருக்கேன்:-) மிக்க நன்றி, ஐடியா திலகமே:-))))
ReplyDelete//முகத்திலே எண்ணெய் வழிந்தது. குளிக்கும்போது தடவினது தான். வேறே நீங்க நினைக்கிறாப்போல் அசடெல்லாம் இல்லை. //னு நாங்க நினைச்சிடுவோமா, நீங்க விட்டுடுவீங்களா?
//மழை நின்னு போச்சுனு நானும், நிக்கலை திரும்ப வரும்னு அவரும் ரெண்டு பேரும் பெட் கட்டி இருந்தோம். // உங்களுக்கு தெரியாதது இல்லை, இருந்தாலும், மற்ற தங்கமணிகளுக்கான சமூகசேவை இது: "மழை திரும்ப வந்தால், துணி எல்லாம் எடுக்கணும்; எனக்கு இப்பவே என்னமோ செய்யிறது, மழை வந்தால் கஷ்டம்" என ஏதாவது எடுத்து விட்டுட வேண்டும். பெட்டில், நாம் தோற்கக் கூடாதுன்னு அவரே வேண்டிக் கொள்ளத் தொடங்கி விடுவார். இந்த மாதிரி அடிக்கடி செய்தால், பெட் வைக்கிறாரான்னு பாருங்க!
"சட்டியில் இருந்தது, அகப்பையில்?"னு ஆதங்கம் போல! மொக்கை நல்லா இருந்தது.
//சமைக்க மேடையிலே நின்னால் மேலே தண்ணி கொட்டும். //
ReplyDeleteஅப்படியா? மேடையிலேயே நின்னுக்கிட்டா சமைப்பீங்க? ஒரு போட்டோ போடுங்க!
//அதுக்குள்ளே நான் மேலே வைத்த மைக்ரோவேவ் அவனையும் எடுக்கச் சொன்னேன். அதிலே அப்பளம் சூடு பண்ணிக்கலாமே? சமையல் செய்யக் கூடாதுனு சொல்றாங்க. வெந்நீர் போட, பால் காய்ச்சனு வச்சுக்கலாம், காஃபியும் கலந்துக்கலாமே?//
மைக்ரோவேவ் (நுண்ணலையாம்) அடுப்பில் சமைக்கக் கூடாதா? எகொஇச!
நல்ல அனுபவம்தான் கீதாம்மா, இந்த மாதிரி நேரத்தில் விருந்தாளிகள் வந்தாதான் கஷ்டம். (முதல் பத்தில நிறையா வேற இருக்கு)
ReplyDelete@மெளலி, வாங்க, வாங்க, ரொம்பவே நன்றி பாராட்டுக்கு! ஹிஹிஹி, உ.கு. ஒண்ணும் இல்லையே?? :P:P:P:P
ReplyDeleteகாலம்பர 5-30-க்குப் போன மின்சாரம் இப்போத் தான் வந்திருக்கு, எத்தனை நேரம் இருக்குமோ தெரியலை, அதுக்குள்ளே முடிஞ்ச வரைக்கும் பதில் கொடுக்கிறேன்.
ReplyDeleteவாங்க கெபி. எவ்வளவு பெரிய பேரு வச்சுக்கிட்டிருக்கீங்க?? அதான் சுருக்கிட்டேன், மொக்கை போட்டால் தான் வரதுனு வச்சுக்கிட்டீங்க நீங்க யு.எஸ்.காரங்க எல்லாம்?? உங்க ஐடியாவுக்கு நன்னிங்கோ, இங்கே நம்ம ஹிட்லர் கிட்டே அதெல்லாம் செல்லுபடியாகாது. அவர் பாட்டுக்குத் தூங்கிடுவார். மழை வந்தால் துணி எல்லாம் நான் தானே எடுக்கணும்?? வேறே ஏதானும் இருந்தால் சொல்லுங்க! :P:P
ReplyDeleteஹிஹிஹி, இ.கொ. மேடையிலே அடுப்பு மேலே தண்ணீர் கொட்டினது, அதை எழுதறதுக்கு அப்படி எழுதிட்டேன், இதெல்லாம் கண்டுக்காதீங்க! (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)
ReplyDeleteம்ம்ம்ம்?? நுண்ணலை அடுப்பில் சமையல் செய்யக் கூடாதுனு நம்ம வீட்டு விஞ்ஞானிகள் சொல்லித் தடாவே போடறாங்களே?? இங்கே ஜெயா டிவியிலே மல்லிகா பத்ரிநாத் வாரம் இரண்டு முறை அதிலேயே எல்லா சமையலும் செஞ்சுட்டு இருக்காங்க! என்னமோ தெரியலை, வம்பு எதுக்குனு நான் சமைக்கிறதில்லை.
அட, நுண்ணலை அடுப்பிலே தாங்க, மத்தபடி வீட்டில் தினமும் சமையல் உண்டே? :P:P:P
@சின்ன அம்மிணி, வாங்க, முதல் வரவு??? நான் எழுதினது என்னமோ கொஞ்சம் தான், மொத்த அனுபவமும் எழுதலை, சும்ம்ம்ம்ம்ம்மாஆஆ ஒரு கோடி காட்டி இருக்கேன், அம்புடுதான்! :)))))
ReplyDeleteபாவம் சாம்பு மாமாவுக்குத் தான் எவ்ளோ கஷ்டம்? :((
ReplyDeleteநீங்க பாட்டுக்கு பதிவு எழுத உக்காந்தாச்சு, அவரு இல்ல எல்லா சமையலையும் அதுவும் குமுட்டி அடுப்புல வேற செய்ய வேண்டி இருக்கு? :p
அனுபவிங்க :)))
ReplyDelete////சமைக்க மேடையிலே நின்னால் மேலே தண்ணி கொட்டும். //
அப்படியா? மேடையிலேயே நின்னுக்கிட்டா சமைப்பீங்க? ஒரு போட்டோ போடுங்க! //
:))))))))))
//மொக்கை போட்டால் தான் வரதுனு வச்சுக்கிட்டீங்க நீங்க யு.எஸ்.காரங்க எல்லாம்?? //
ReplyDeleteமொக்கை தவிர வேறறியோம். பராபரத்தைப் பற்றி நீங்கள் சொன்னால் சரியாகத் தானிருக்கும்னு... ஹிஹி. :-)
//அவர் பாட்டுக்குத் தூங்கிடுவார். மழை வந்தால் துணி எல்லாம் நான் தானே எடுக்கணும்??// இதெல்லாம் ஓரளவுக்குத் தான் சொல்லித் தரமுடியும். மழை வரப் போறதுன்னு தெரிந்தால், அவர் துணிமணிகள் உங்களுக்கு எடுக்க மறந்து போகலாம்;-) 'அச்சச்சோ':-)
அட கரென்ட் எல்லாம் வேற இருக்கா அங்கே! இங்க 3 நாளா இல்லாம சௌக்கியமா இருக்கோம்! இன்னிக்கு மாலைதான் வந்தது.
ReplyDelete@ambi, எப்போப் பார்த்தாலும் உங்க அனுபவத்தையே சொல்றீங்க?? என்ன செய்யறது? சரி, சரி, போய் டயபர் மாத்தற வேலையைப் பாருங்க,
ReplyDelete@வாங்க புலி, அது என்ன, பிரதமருக்கு எழுதின பதிவிலே பின்னூட்டமே போட முடியலை??
மேடையிலே நின்னுட்டு சமைக்கிற படம் தானே போட்டால் போச்சு! :P
//பராபரத்தைப் பற்றி நீங்கள் சொன்னால் சரியாகத் தானிருக்கும்னு... ஹிஹி. :-)//
ReplyDelete@வாங்க கெபி, உங்க ஆதரவுக்கும், நம்பிக்கைக்கும் தன்யள் ஆனேன்! :P
//மழை வரப் போறதுன்னு தெரிந்தால், அவர் துணிமணிகள் உங்களுக்கு எடுக்க மறந்து போகலாம்;-) 'அச்சச்சோ':-)//
சொல்லிடலாம் தான், ஆனால் அவர் துணி சீக்கிரம் காய்ஞ்சிடுமே, என்னோடது தான் இருக்கும், முன்னாலேயே அதெல்லாம் மு.ஜா. முத்தண்ணாவாக எடுத்து வச்சிடுவார்! :P:P:P
வாங்க, திவா, பரம செளக்கியமா இருக்கீங்கனு தெரியுது! மின்சாரம் இல்லாமல், போகட்டும், இந்த மழை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா??
ReplyDeleteநம்பிக்கைக் குழுமத்திலே உங்களைத் தேடிட்டு இருக்காங்கனு கேள்விப் பட்டேனே?? :P:P:P:P:P