//இறைவனுக்கே சூட வேண்டியவராச்சே சம்பந்தர்! புனிதவதியாச்சும் ஏதோ ஒரு மாம்பழ அற்புதம் தான்! ஆனா சம்பந்தர் பலப்பல அற்புதங்கள் செய்து காட்டியவர் ஆச்சே! அப்புறம் எப்படி இறைவனுக்கே சூட வேண்டியவரை, கல்யாணம் கட்டி வைக்கறாங்க?
அவர் "புனிதர்"-ன்னு நினைப்பு வந்தா, "ஏங்க, அத்தான்"-ன்னு எப்படி ஒரு பொண்ணு அழைக்க முடியும்? உங்க லாஜிக் தான்! ஆனால் ஆணுக்கும் அதே லாஜிக் தானே? :) //
கேஆரெஸ் கேட்டிருக்கும் இந்தக் கேள்விக்கு உடனேயே பதில் தெரிந்திருந்தாலும் கொஞ்சம் சரிபார்த்துக் கொள்ள வேண்டி இருந்தது. அதனாலேயே தாமதம். ஞானசம்பந்தர் திருமணக் கோலத்துடனேயே இறை ஜோதியுடன் ஐக்கியம் ஆனார் என்ற விஷயம் இது வரையிலும் கேஆரெஸ்ஸுக்குத் தெரியாதென்றால் நம்பவும் முடியவில்லை. தான் உயிர்ப்பித்த, தனக்கென நிச்சயிக்கப் பட்ட பூம்பாவையையும் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். பின்னர் திருமணத்திற்குச் சம்மதம் சொல்லியும், திருமணத்தின்போது அவருக்குத் தான் வந்த நோக்கம் நினைவில் வர, திருமணத்துக்கு வந்தவர்கள் அனைவருமே ஜோதியில் ஐக்கியம் ஆனார்கள் என்று தெரிய வருகின்றது. இதை திருநல்லூர்ப் பெருமணம் என்ற மூன்றாம் திருமுறையில் 11 பாடல் தொகுப்பாய்க் காண முடியும். முதல் பாட்டையும், கடைசிப் பாட்டையும் மட்டும் இங்கே கொடுத்துள்ளேன்.
//கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில
சொல்லூர்ப் பெருமணம் சூடல ரேதொண்டர்
நல்லூர்ப் பெருமண மேயநம் பானே //
இந்த முதல் பாடலில் சடங்குகள் செய்து செய்யப்படும் இந்தத் திருமணம் தனக்கு வேண்டாம் எனவும் வேண்டி இருக்கின்றார். திருமணம் முடிந்து மங்கலநாண் பூட்டி அக்னியை வலம் வரும்போது அந்த ஜோதியில் இறைவன் திருமுகம் நினைவில் வர இல்லாளுடன் தானும் அந்த ஜோதியில் ஐக்கியம் ஆகவேண்டி அவர் பாடிய பாடல்களே இந்தத் திருநல்லூர்ப் பெருமணம் என்னும் பதினொரு பாடல்களின் தொகுப்பாகும்.
//நறும்பொழிற் காழியுண் ஞானசம் பந்தன்
பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானை
உறும்பொரு ளாற்சொன்ன வொண்டமிழ் வல்லார்க்
கறும்பழி பாவ மவல மிலரே. //
இந்தக் கடைசிப் பாட்டில் ஞானசம்பந்தன் பெற்ற முக்திப் பேற்றை இந்தப் பதிகம் படிக்கும் அனைவரும் பெறவேண்டும் என வேண்டிப் பாடியுள்ளார்.
நேற்றே பதிலைக் கொடுத்திருக்கலாம். என்றாலும் பெரியபுராணத்தில் இருந்து மற்ற சில புத்தகங்களையும் கொஞ்சம் சரிபார்த்துக் கொள்ள வேண்டி இருந்தது. பன்னிரு திருமுறைகள் தளத்தையும் சென்று பார்க்க வேண்டி இருந்தது. அனைத்திலும் இதே மாதிரியாகவே இருக்கின்றது. மாற்றம் ஏதும் இல்லை. ஆகவே ஞானசம்மந்தர் திருமணம் என்று பேருக்குச் செய்து கொண்டாரே தவிர, வாழ்ந்து பிள்ளை, குட்டி ஒன்றும் பெற்றுக் கொள்ளவில்லை. திருமணமும் கட்டாயமாய்ச் செய்து வைக்கின்றார்கள். கீழே பன்னிரு திருமுறைகள் தளத்தில் இருந்து எடுத்தது ஜி3 பண்ணி இருக்கேன். அதையும் பார்க்கவும்.
திருமணம்:
ஞானசம்பந்தரைக்காணும் பெருவேட்கையில் முருக நாயனாரும் நீலநக்க நாயனாரும் சீகாழி வந்தனர். சிவபாத இருதயரும் சுற்றத்தாரும் ஞானசம்பந்தர் புண்ணியப் பதினாறு ஆண்டு எய்திய நிலையினராய் இருத்தலை எண்ணி அவரை அணுகி மறை நெறிப்படி வேள்வி செய்ய ஒருகன்னியைத் திருமணம் புரிந்து கொள்ள வேண்டும் என வேண்டினர். ஞானசம்பந்தர் முதலில் மறுத்தார். ஆயினும் திருவருளை நினைந்து மறைவாழவும் அந்நெறியின் துறைவாழவும் திருமணத்திற்கு இசைவு தெரிவித்தார்.
சிவபாத இருதயர் திருநல்லூரில் வாழும் நம்பாண்டார் என்பாரின் மகளை மணம் பேசி நிச்சயித்தார். நல்லூர் மணவிழா வினால் பொலிவு பெற்றது. ஞானசம்பந்தர் உரிய நாளில் தோணிபுரத் தில் பெரிய நாயகியாருடன் வீற்றிருந்தருளும் பெருமானை வணங்கிச் சிவிகைமீது அமர்ந்து அடியவர்கள் உறவினர்கள் உடன் வரத் திருநல்லூரை அடைந்தார். அங்கு விளங்கும் பெருமணம் என்னும் கோயிலை அடைந்து சிவபிரானைப் பணிந்து போற்றினார். உறவினர் கள் வேண்டக் கோயிலின் பக்கத்தே அமைந்த திருமடத்தில் திரு மஞ்சனமாடித் திருமணக் கோலம் பூண்டு திருமணச் சாலைக்கு எழுந்தருளினார். நம்பாண்டார் நம்பியும் அவரது துணைவியாரும் அவரைப் பொற்பீடத்தில் இருத்தித் திருவடிகளைத் தூய நீரால் விளக்கி அந்நன்னீரை உட்கொண்டு அனைவர் மேலும் தெளித்து, ஞான சம்பந்தரை நோக்கி `யான் பெற்ற அருநிதிப் பாவையை ஆளுடைய பிள்ளையார்க்கு அளித்தேன்` என உரைத்தார். மங்கல மகளிர் மணப் பெண்ணை அழைத்து வந்து ஞானசம்பந்தரின் வலப்பால் அமரச் செய்தனர். திருநீலநக்க நாயனார் வேத விதிப்படி திருமணச் சடங்குகளை நிகழ்த்தினார். ஞானசம்பந்தர் காதலியாரைக் கைப்பற்றித் தீவலம் வரும்போது `விருப்புறும் அங்கியாவார் விடை உயர்த்தவரே` என்னும் நினைவினராய்` `இருவினைக்கு வித்தாகிய இந்த இல்லறம் நம்மைச் சூழ்ந்து கொண்டதே இனி இவளோடும் அந்தமில் சிவன்தாளை அடைவோம்` என உறுதி கொண்டு திருப்பெருமணக் கோயிலை அடைந்தார். இறைவன் திருமுன் நின்று `கல்லூர்ப் பெருமணம் வேண்டா` எனத் தொடங்கித் திருப்பதிகம் அருளிச் செய்தார். அப்போது சிவபெருமான் தூய சோதிப் பிழம்பாய்த் தோன்றி நின்று `ஞானசம்பந்தனே நீயும் நின் மனைவியும் திருமணம் காணவந்தோரும் இச்சோதியினுள்ளே வந்து சேர்மின்` எனக்கூறி அதனுள்ளே புகுதற்கு வாயிலையும் காட்டி நின்றார். ஞானசம்பந்தர் `இம்மண விழாக்காண வந்தோர் அனைவரும் இச் சோதியுட் புகுமின்` எனக் கூறி `காதலாகி` எனத் தொடங்கும் நமச்சிவாயத் திருப்பதிகம் அருளி நின்றார். திருநீல நக்கர் முருக நாயனார் சிவபாத இருதயர் நம்பாண்டார் நம்பி திருநீலகண்டப் பெரும்பாணர் முதலானோர் தத்தம் துணைவியாருடன் சிவசோதியுட் புகுந்தார்கள். ஆளுடைய பிள்ளையாரைத் தொடர்ந்து வந்த அடியவர் பரிசனங்கள் அருந்தவ முனிவர்கள் முதலிய அனைவரும் சிவசோதியுட் புகுந்த பின் திருஞானசம்பந்தர் தம் காதலியாரைக் கைப்பிடித்து இறைவனது எழில்வளர் சோதியை வலம் வந்து அதனுள்ளே புகுந்து பெருமா னோடு ஒன்றி உடனானார்.
``காதலியைக் கைப்பற்றிக் கொண்டுவலம் செய்தருளித்
தீதகற்ற வந்தருளும் திருஞான சம்பந்தர்
நாதனெழில் வளர்சோதி நண்ணியதன் உட்புகுவார்
போதநிலை முடிந்தவழிப் புக்கொன்றி உடனானார்.``
அச்சோதி மறைய பெருமணக்கோயில் முன்போலவே அமைந்தது. அனைவர்க்கும் சிவலோகம் வழங்கிய பெருமானை அன்பர்கள் சிவலோகத்தியாகர் எனப் போற்றினர்.
சரி....
ReplyDeleteஆகா...விளக்கம் போட்டு கலக்கிட்டிங்க...தகவலுக்கு நன்றி தலைவி ;)
ReplyDeleteஉள்ளேன் கீதாம்மா! :)
ReplyDeleteஅனைவரும் வந்து கருத்துரைக்கட்டும்! பிறகு வருகிறேன்!
ஆனால்....
அடிப்படை என்ன தெரியுமா?
எத்தனை நாட்கள் வாழ்ந்தார்? என்பது இல்லை!
அவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டதா என்பது தான்!
சம்பந்தப் பெருமான் மேல் அடியேனுக்கு உங்களை விட பக்தியும் காதலும் அதிகம்!
ஆனால் சொன்னீங்க பாருங்க ஒன்னு. புனிதம் என்றும் இறைப்பணி என்றும் அற்புதம் செய்தவர் என்றும் ஆனதால் "தான்" காரைக்கால் அம்மையாருக்கு இல்வாழ்க்கை "மறுக்கப்பட்டது"-ன்னு!
அது தான் மாபெரும் தவறு!
அதனால் தான் கேட்டேன், அதை விட அற்புதங்கள் புரிந்த சம்பந்தருக்கு ஏன் மறுக்கப்படவில்லை-ன்னு?
இங்கே மணம் செய்து கொண்டு எத்தனை நாள் வாழ்ந்தார் என்பது கேள்வியே அல்ல!
அவருக்கு மட்டும் ஏன் மறுக்கப்படவில்லை என்பது தான் கேள்வி!
புரிந்திருக்கும்-ன்னு நினைக்கிறேன்!
நாளும் இன்னிசையால் நற்றமிழ் பரப்பும் ஞான சம்பந்தன் திருவடிகளே சரணம்!
ReplyDelete//ஞானசம்பந்தர் திருமணக் கோலத்துடனேயே இறை ஜோதியுடன் ஐக்கியம் ஆனார் என்ற விஷயம் இது வரையிலும் கேஆரெஸ்ஸுக்குத் தெரியாதென்றால் நம்பவும் முடியவில்லை//
ஹா ஹா ஹா
அடியேன் சம்பந்தர் திருமணத்தைப் படிச்சிருக்கேன் கீதாம்மா!
//சுற்றத்தாரும் ஞானசம்பந்தர் புண்ணியப் பதினாறு ஆண்டு எய்திய நிலையினராய் இருத்தலை எண்ணி அவரை அணுகி மறை நெறிப்படி வேள்வி செய்ய ஒருகன்னியைத் திருமணம் புரிந்து கொள்ள வேண்டும் என வேண்டினர்//
உங்கள் வாதங்களை நீங்களே முறியடிக்கிறீர்கள்!
சுற்றத்தாருக்கும் சமூகத்துக்கும் நல்லாத் தெரியுமே, சம்பந்தப் பெருமான் அற்புதங்கள் புரிந்தவர், இறைப்பணிக்கே அவதரித்தவர்-ன்னு! அப்புறம் எப்படி இல்வாழ்க்கை மறுக்காம, இல்வாழ்க்கை பேச்சை அவரிடம் மட்டும் எடுத்தார்கள்?
அதே காரைக்கால் அம்மையார் ஒரு அற்புதமும் ஊரறிய பெருசாப் பண்ணலை! பாட்டும் பதிகமும் அப்போது ஒன்னு கூட எழுதலை! அப்படி இருக்க, அவளுக்கு இல்வாழ்க்கை கிடையாது-ன்னு எப்படி பேச்சு எடுக்கலாம்? இது தான் கேள்வி!
இங்கே சம்பந்தரையோ, அம்மையாரையோ ஒப்பிட்டுப் பேசவில்லை! ஆனால் ஆளுக்கு ஏற்றாற் போல் நியாயம் பேசும் சமூகத்தின் அவலத்தை தான் முன் வைத்தேன்!
அந்தச் சமூகத்துக்குத் தான் நீங்களும் வரிந்து கட்டிக் கொண்டு ஆதரவு தேடுகிறீர்கள்! :(
பேசாம நானும் திருஞானசம்பந்தர் கல்யாணத்துக்கு போயிருந்திருக்கணும் :)
ReplyDelete@மெளலி, என்ன சரி??? :P:P:P
ReplyDelete@கோபி, நன்றிங்கோ!
@கவி, எங்க ம.பா.வும் அதையேதான் சொல்றார். :))))))))
ReplyDelete