எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, June 15, 2010

என்ன கொடுமைடா சரவணா இது?? :(

விஜய் தொலைக்காட்சியில் நடக்கும் சிறுவர்களுக்கான பாட்டுப் போட்டிக்கு முதலிடத்திற்குப் போட்டியிடும் பையனை ஆதரிக்குமாறு தினசரி செய்தித்தாளோடு வந்த விளம்பர நோட்டீஸ் இது. பையனைப் பாருங்க, எவ்வளவு பணிவா, குனிந்து கூழைக்கும்பிடு போட்டுக்கொண்டு இருக்கான்?? இது என்ன கொடுமைனு மனசுக்கே பாரமா இருக்கு! இதோடயா? சென்னை பூராவும் போஸ்டர் ஒட்டி இருக்காங்க.

சனிக்கிழமை என் உறவினர் ஒருவருக்குக் கண் ஆபரேஷன் என்று போனப்போ வடபழநி வரை நூறடி சாலை முழுதும் இந்த போஸ்டர் காணக்கிடைக்குது. போறாததுக்கு அம்பத்தூரில் பேருந்தில் இருந்து இறங்கும் இடத்தில் பெரிய டிஜிடல் பானர். குழந்தைகளை இம்மாதிரியானதொரு மன நிலைக்குத் தயார்ப்படுத்தும் பெற்றோரைச் சொல்வதா? இவற்றை ஊக்குவித்துப் போட்டிக்கு மேல் போட்டி நடத்தும் தொலைக்காட்சிச் சானல்களைச் சொல்றதா? ஏற்கெனவே இம்மாதிரியான போட்டி ஒன்றில் தோற்ற ஓர் இளம்பெண் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறர் என்பதும் விரிவான செய்திகளாக வந்தன. அப்படி இருந்தும் பெற்றோரின் இந்தத் தொலைக்காட்சிப் போட்டிகள் வெறியும், சானல்களின் மயக்கும் பேச்சும் எப்போது ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரும்? இதன் பின் விளைவுகளை யாரேனும் யோசித்துப் பார்த்தார்களா? எங்கே போகிறோம் நாம்??? இந்தத் தொலைக்காட்சிகள் மோகம் எப்போ ஒழியும்???

அது மட்டுமா? சனிக்கிழமை கண் அறுவை சிகிச்சைக்குப் போனதும், தொலைக்காட்சி மூலம் பிரபலம் அடைந்து வரும் ஒரு மருத்துவமனையே. உள்ளே நுழைந்தால் வரவேற்பில் போட்டிருக்கும் 50க்கும் மேற்பட்ட நாற்காலிகளும் வழிகின்றன. மேலே முதல் தளத்தில் அறுவை சிகிச்சை என்றனர். அங்கே போனால் கிட்டத்தட்ட 20 பேருக்கு மேலே அறுவைசிகிச்சைக்குக் காத்திருக்க, உள்ளே ஒரு முறைக்கு 3,4 நோயாளிகள் அறுவை சிகிச்சைக்குச் செல்கின்றனர். கண்டிப்பாகக் கட்டணம் முழுதும் செலுத்தினால் தான் அறுவை சிகிச்சை ஆரம்பிக்கப் படும். உபசாரம் என்னமோ பலமா இருந்தது. காபி, டீ, பால், சாப்பாடு என நோயாளிக்கு மட்டுமின்றிக் கூட வந்தவர்களையும் கேட்டுக்கொண்டிருந்தனர். பின்னால் நோயாளியின் பில்லில் அதற்கு வசூலிப்பார்களோ என்னமோ தெரியவில்லை. நல்லவேளையா, அன்னிக்கு வெளியிலே சாப்பிடமுடியாத நாளாக அமைந்துவிட்டதால் நாங்க தப்பிச்சோம். காலை 11-00 மணிக்கு ஆரம்பிக்கும்னு சொன்ன அறுவை சிகிச்சை மதியம் 2 மணி வரை ஆரம்பிக்கவில்லை. இதிலும் டூர் பாக்கேஜ் மாதிரி பாக்கேஜ் உண்டாம். லென்ஸ் இல்லாமல்னு ஆரம்பிக்குதோ? தெரியலை எப்படினு. ஆனால் குறைந்த செலவு தான் செய்யமுடியும்னு இருக்கும் நபர்களுக்கு தரமற்ற லென்ஸ் பொருத்தப்படும்னு சொன்னாங்க. இது எப்படி இருக்கு? Lens Clarity இருக்கணும்னா அதிகப் பணம்னும் சொல்றாங்க. இது பத்தி எனக்குப் புரியலை. அப்படியானு கேட்டுக்கொண்டேன். அங்கே கவுண்டரில் இருந்த பெண்ணுக்குக் கை வலித்திருக்கும், பணக்கட்டை எண்ணி, எண்ணிப் போட்டு. அது மட்டும் நல்லாப் புரிஞ்சது. எங்கே போகிறோம்?? மறுபடியும் மனசு வலிக்குது. இங்கே கவுன்சிலர்னு சிலரை வேலைக்கு வச்சிருக்காங்க. அவங்க தான் கண்ணைப் பரிசோதனை செய்யறாங்களோனு நினைக்கிறேன். அது தவிரவும் எக்கச்சக்கமான ஊழியர்கள். சிலருக்கு யூனிபார்ம், சிலருக்கு யூனிபார்ம் இல்லை. வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கும் வழியோனும் தோணுது.

மூன்று நாட்களாய் எழுத நினைச்சுக் கணினிப் பிரச்னை, கீ போர்ட் சரியில்லைனு எழுதவே முடியலை. ஆனால் எத்தனை நாட்கள் ஆனாலும் இவை எல்லாம் கவனிக்கப் படவேண்டிய பிரச்னைகளே.

31 comments:

  1. இந்த மாதிரி நிகழ்ச்சிகளின் வெற்றிக்கு பெற்றோர்களே காரணம். அந்தப் பையன் தூங்கக் கூட விட மாட்டங்க போல. அவ்ளோ வகுப்புகளுக்கு போறான்.

    மருத்துவமனைகள், வியாபார இடங்களாகி பல வருடங்கள் ஆகின்றன

    ReplyDelete
  2. ரொம்பச்சரி.

    கொடுமைகள் பல இன்னும் ஓசைப்படாமல் அரங்கேறி வருது.

    இந்தக் கண் மருத்துவமனை அனுபவம் ஒன்னு கைவசம் இருக்கு.

    நேரம் கிடைக்கும்போது போட்டுடறேன்.

    ReplyDelete
  3. I've been watching Vijay TV recently and is amazed by the performance of the kids. But after looking at this I really don't know, if it is really worth it.

    ReplyDelete
  4. I've been watching Vijay TV recently and was really amazed by the performance of these kids. But, I didn't know that parents do these kind of advertisements. Yaarai cholla?

    ReplyDelete
  5. கொடுமை கீதாம்மா! ஏற்கனவே அதிஷா இதே விஷயத்தை புனைவா எழுதினாரு. அடுத்து இதே விஷயத்தை ஜ்யோவ்ராம் சுந்தர்ஜி எழுதினாரு. அடுத்து நீங்க. நானே இது பத்தி எழுதலாம்ன்னு இருந்தேன். நிகழ்ச்சி நடக்கும் போது பார்த்தா அந்த அப்பனை பார்க்கனுமே அப்படியே குரங்காட்டி நியாபகம் தான் வருது.

    இது போல குரங்காட்டிகளை மனநோய் மருத்துவமனைவில் தான் சேர்கனும். விஜய் டிவி இதை ஊக்கப்படுத்த மாட்டாங்கன்னு நினைக்கிறேன். அந்த பையனின் எதிர்காலத்தை நினைத்தாவது விஜய் டிவி அந்த பையனை அந்த போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்து அந்த குழந்தையை காப்பாத்தனும். இதுவே என் வேண்டுகோள்!

    ReplyDelete
  6. வாங்க எல்கே, நிச்சயமாப் பெற்றோர் தான் காரணம். அந்தப் பையனுக்கு சுதந்திரம்னா என்னனே புரியாதுனு தோணுது. நல்லவேளையா இதெல்லாம் நாங்க பார்க்கிறதில்லை.

    அந்த மருத்துவமனையைப் பற்றி நிறைய எழுத இருந்தாலும் கொஞ்சம் அடக்கியே வாசிச்சிருக்கேன். ஏனெனில் நோயாளியாய்ப் போனது உறவினர். அவர் சிகிச்சை இன்னும் அங்கே தானே தொடருது! :(

    ReplyDelete
  7. வாங்க துளசி,

    கொடுமைகள் கண்ணுக்குத் தெரியாமல்லாம் நடக்கலை, தெரிஞ்சே தான் நடக்குது. நம்மாலே தான் ஒண்ணும் செய்ய முடியலை. கையாலாகமல் உட்கார்ந்திருக்கோம். :( எழுதுங்க கண் மருத்துவமனை அநுபவம் பத்தியும். நானே பூராவும் எழுதலை. யோசனையா இருந்தது. :(

    ReplyDelete
  8. வாங்க கலா, முதல் வரவுக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி. அந்த போஸ்டர் அடிச்சுச் சென்னை பூரா ஒட்டி இருப்பது விஜய் தொலைக்காட்சினும், பிட் நோட்டீஸ் அடிச்சுக் கொடுத்தது பையனின் பெற்றோர்னும் சொல்றாங்க. எது எப்படியோ ரொம்பக் கீழே இறங்கித் தரம் கெட்டுப் போய்க்கொண்டிருக்கோம்னு நல்லாவே புரியுது. :(((((((

    ReplyDelete
  9. வாங்க அபி அப்பா, கோபி எழுதி இருந்தார் இன்னொருத்தர் போஸ்ட்னு. பார்த்தேன் அதிலும், அன்னிக்கே எங்களுக்கும் வந்துடுச்சு இந்த விஷயம். 25 லக்ஷம் மதிப்புள்ள வீடு பரிசாம். அதுக்காகப் பையனைப் போட்டு வதைக்கும் பெற்றோர்கள். பையன் ஒழுங்கா சாப்பிட்டு, ஒழுங்காத் தூங்கினால் தானே மேற்கொண்டு பாட முடியும்? அதுக்கானும் விடுவாங்களா? புரியலை போங்க! :((((((((

    ReplyDelete
  10. dont forget to cast votes for ALKAA AJITH- SSJ02,

    vijay.india.com

    ReplyDelete
  11. varuththapadaveendeya vishayamthaan geetha madam!!...:(

    ReplyDelete
  12. ஆரம்ப நாட்களில் அந்தச் சிறுவன்,’சரியாப் பாடலேன்னா அப்பா அடிப்பார்’ன்னு சொன்னதுதான் உச்சக் கட்ட கொடுமை. கீதாம்மா!

    ReplyDelete
  13. வாங்க ராம்ஜி யாஹூ, இது என்ன புதுசா? நிஜமாவே புரியலை போங்க! :(

    ReplyDelete
  14. தக்குடு, வருத்தமா, எனக்கு ஆத்திரம் இன்னமும் அடங்கவில்லை போங்க! :(

    ReplyDelete
  15. நானானி, வாங்க ரொம்ப நாட்களாச்சு பார்த்து,

    நல்லவேளையா இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் பார்க்கிறதே இல்லை.

    ReplyDelete
  16. //நல்லவேளையா இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் பார்க்கிறதே இல்லை.

    15 June, 2010///

    naan stop panni romba naal acchu. votingla kooda etho politics irukkunu solranga

    ReplyDelete
  17. i dont watch these tamil shows.. but at my home, mom watches this Dance India Dance in Zee tv. I don't know.. The strain those kids are put through- they can write 10 board exams.. but this is far too dangerous! Rope/malcolm/what not! the kids are made to hang on to them! Televisions thrive on "Human emotions"!

    Very bad!

    ReplyDelete
  18. இரண்டொரு பதிவுகளில் நானும் படித்தேன்... மனசுக்கு கஷ்டமாகதான் இருக்கிறது. எஸ் எம் எஸ் ஆகவும் அனுப்பி ஆதரவு தேடுகிறார்கள்...என்னவோ போங்க...தன் குழந்தையின் மனதை தானே கெடுப்பார்களோ..?

    ReplyDelete
  19. என்னவோ எல்லோரும் ரொம்பவே ரசிக்கிறாங்க...இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை.எனக்குத்தான் அவ்வளவாக ..ஈடுபாடு இல்லை.

    பின்னணியில் இருந்த கலைஞர்கள் அனைவரும் முன்னணியில் ஜொலிக்க வைத்த ஒரு நிகழ்ச்சி என்றுதான் படுகிறது.

    ReplyDelete
  20. எல்கே, நான் தொலைக்காட்சி பார்க்கிறதே ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் இருந்தா அதிகம். எங்கே பிராமணன் தொடருக்காக உட்காருவேன். அது முடிஞ்சதும் எழுந்துடுவேன்.மற்றபடி தொலைக்காட்சியில் வரும் கச்சேரிகள், பஜனைகள் போட்டுட்டு வேலையைச் செய்துண்டு இருப்போம். :))))))))))

    ReplyDelete
  21. வாங்க மாதங்கி, ஜீ தொலைக்காட்சியில் வரும் அந்த நிகழ்ச்சியும் இதற்குச் சற்றும் குறைந்தது இல்லை. அதிலேயும் இப்படி எல்லாம் நடக்கிறது. மொத்தத்தில் இந்தியாவின் ஜீவநாடியே இப்போ தொலைக்காட்சித் தொடர்களில் தான் இருக்குனு சொல்லிடலாம். இந்த அளவுக்குப் பைத்தியம் பிடிச்சு அலையறதைப் பார்த்தா பரிதாபமும் வருது. :(((((

    ReplyDelete
  22. ஸ்ரீராம், பணம் செய்யும் வேலை. குழந்தையின் மூலம் லக்ஷக்கணக்கான பணம் வருதுனா பெற்றோருக்கு ஆசை அளவுக்கு மீறுகிறது. பணம் அதை ஒட்டிய வசதியான வாழ்க்கை, நக்ஷத்திர ஓட்டல்களில் சாப்பாடு, இதுதானே பெருவாரியான மக்களின் கனவு

    ReplyDelete
  23. வாங்க கோமா, எப்படி இருக்கீங்க?? பார்த்து ரொம்ப நாளாச்சு! :D

    ம்ம்ம்ம்ம் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு மாதிரித் தோணுது. ஆனால் என்ன இருந்தாலும் இப்படி எல்லாம் நோட்டீஸ் அடிச்சு ஒட்டறது, டிஜிடல் பானர் ஒட்டறது எல்லாம் ரொம்பவே ஓவர்! :(

    ReplyDelete
  24. :-( ஆக இனிமே குழந்தை மனசு போலன்னு எல்லாம் சொல்ல ஒண்ணுமில்ல, பிஞ்சுலயே நஞ்சை விதைச்சுடுறாங்க‌!

    ReplyDelete
  25. தலைவி...நீங்களும் எழுதிட்டிங்களா...காலையில அந்த டிவியை வச்ச இதோ நிகழ்ச்சி தான். குழந்தைங்க குழந்தைகளா இருக்காங்களான்னு சந்தேகம் தான்.

    இதுல தமிழ்நாட்டின் சிறந்த குரலாம்...வெங்காயம்...இவுனுங்க யாரு சொல்றதுக்குன்னு தெரியல.

    இதுல பல நிகழ்ச்சிகள் சிறந்த அம்மா..அப்பா...ஆயான்னு...

    ஒரு டிவியில சீரியலாக போட்டு சாவடிக்கிறானுங்க இதுல இப்படி...சீன்னு இருக்கு

    ReplyDelete
  26. உண்மை தான் பெற்றோர்களுக்கு எவ்வளவு அக்கறை இருக்கின்றதோ அது போல குழந்தைகளுக்கும் அக்கறை இருந்தால் நிச்சயம் வெற்றி அடைவார்கள்...அதனை விட்டுவிட்டு எதற்காக இப்படி விமர்சனம் செய்து பிஞ்சு குழந்தையினை வைத்து விளையாடுக்கின்றாங்க...குழந்தை வெற்றி பெற்றால் சந்தோசம் ...மாறுதலாக வெற்றி பெற முடியாமால் போய்விட்டால் என்ன செய்வது...இது போன்ற பெற்றோர்கள் கவனிப்பார்களா...

    ReplyDelete
  27. வாங்க தங்கச்சிக்கா, (போர்க்கொடி) எப்படி இருக்கீங்க?? நீங்க இந்தப் பதிவை ரசிச்சதுக்கு நன்னி ஹை!

    ReplyDelete
  28. கோபி, திருந்தற ஜன்மங்களாத் தெரியலை போங்க!:(((

    ReplyDelete
  29. வாங்க கீதா அசல், அப்பா, அம்மா குழந்தைகளைக் குழந்தைகளா நடத்தும் நாள் எப்போனு தெரியலை! ஆனாலும் இது ரொம்பவே ஓவர்.

    ReplyDelete
  30. இது நம்ப socialism போல இருக்கு!!:((
    முதல்ல எல்லாம் பிழைப்புக்காக "ஆட்றா ராமா போட்றா ராமா கர்ணம் அம்மாவுக்கு போட்டு காட்டு ராமா!!"
    அப்புறம் அய்யாவுக்கு நல்ல காலம் வருமா வராதான்னு தலையை ஆட்டி சொல்லற "பூம் பூம் " மாடு!!அப்புறம் " பம்ப ரப்பப் பரம் பரம் பா..." baby elephant walk!! வசூலுக்கு சினிமால :) தண்டாயுதபாணி ப்ரொடக்ஷன் உபயம்!! இப்ப இது !மேல் நாட்டு உபயம்.குழந்தைகளை நாம குழந்தைகளா வாழ விட்டாத்தான் என்ன? பெரும்பாலும் "பொம்மரிலு" கதை தான்!!

    ReplyDelete