எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, January 31, 2011

சீனாச் சட்டி பார்க்க வாங்க, மல்லிகைப் பூ இட்லி!

கல்யாணம் ஆனப்போ எனக்குக் கொடுத்த சீர் வரிசைகளில் திருட்டுப் பாத்திரம் என்ற பெயரில் நுழைந்தது இந்தச் சீனாச்சட்டி. இந்தத் திருட்டுப் பாத்திரம் தமிழ்நாட்டின் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே பின்பற்றப் படுகிறதென நினைக்கிறேன். எனக்கு மாமியார் வீடு, அம்மா வீடு இரண்டு பக்கமும் இந்தப் பழக்கம் உண்டு. ஆகவே என்ன தான் சீர் கொடுத்தாலும் திருப்திப் படாத சம்பந்தி வீட்டுக்காரங்க ஒரு இரும்புப் பாத்திரத்தைத் திருடியும் எடுத்துப் போவாங்களாம். அதுக்காகக் கொடுத்தது இந்தச் சீனாச்சட்டி. வார்ப்பிரும்பில் தயாரிக்கப் பட்டது. இதை வாங்கறச்சேயே அம்மா இதிலே வைக்கும்படியான இட்லித் தட்டும், (ஐந்து குழி உள்ளது.) சேர்த்து வாங்கிக் கொடுத்தார். ஆகவே கல்யாணம் ஆகித் தனிக்குடித்தனம் வந்ததில் இருந்து உழைத்துக்கொண்டிருந்த இந்தச் சட்டி ஒரு முறை என் நாத்தனார் காப்பிக்கொட்டை வறுக்கும்போது கீழே விழுந்து அடியில் கொஞ்சம் விரிந்து போயும், கண்ணில் உசிரை வைத்துக்கொண்டு உழைத்துக் கொண்டிருந்தது.

2010-ம் வருஷம் பிள்ளையார் சதுர்த்திக்கு முன்னால் ஒரு நாள் இட்லிக்கு ஜலம் கொதிக்க விட்டுவிட்டு தட்டில் துணியைப் போட்டு, மாவை ஊற்றிவிட்டு சட்டியில் வைக்க வந்தால் கொதிச்சுட்டு இருந்த நீரைக் காணோம்! என்னடா இது சோதனை என்று நினைத்தவண்ணம் தண்ணீர் ஊத்தலை போலிருக்குனு மறுபடியும் நீரை ஊற்றினால் சொய்ங்க்க்க்க்க்க்! எல்லா நீரும் அடுப்பில் விழுந்துவிட்டது. அடடானு கையிலே எடுத்துப் பார்த்தால் விரிசல் பெரிசாயிடுத்து. தண்ணீர் நிற்கவில்லை. அப்புறமா அன்னிக்கு எப்படியோ சமாளிச்சேன் இட்லி பண்ணாமல். சாயந்திரமே கடைக்குப் போய் சீனாச்சட்டி, சீனாச்சட்டினு ஏலம் போடாத குறையாக் கேட்டால் எந்தப்பாத்திரக் கடைக்காரங்களுக்கும் புரியவே இல்லை. கல்கத்தா அலுமினியம் சட்டியை ஒருத்தர் கொடுக்க, "உங்களுக்கு வேணும்னா நான் தரேன்"னு சொல்லிட்டு அதை வைச்சுட்டு அலைஞ்சோம் இரண்டு பேரும். ஒரு வட இந்தியப் பாத்திரக் காரர் மட்டும் இங்கே கிடைக்காது. சென்னையில் கந்தகோட்டம் அருகே கிடைக்கும் அங்கே போங்கனு சொன்னார். மறுநாள் பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை, இட்லிக்கு என்ன பண்ணறது? அவசரம் அவசரமா அங்கிருந்து இன்னொரு கடையிலே போய் இட்லிக் கொப்பரை வாங்கி வ்ந்தேன். எல்லாம் நல்லாத் தான் இருக்கு பார்க்க. மூன்று தட்டு இட்லிக்கு. ஒரே நேரம் பனிரண்டு இட்லி. அதைத் தவிர கொழுக்கட்டை, பருப்பு உசிலிக்குனு ஒற்றைத் தட்டும் இருந்தது. ஆனாலும் மனசு என்னமோ சீனாச்சட்டிக்கு அடிச்சுண்டது. அப்புறமா ஒரு நாள் சாவகாசமா வேறே எதுக்கோ சென்னை போகவேண்டிய சந்தர்ப்பம் நேர அப்போச் சீனாச்சட்டியும் வாங்கி வந்தேன். என்ன இருந்தாலும் பழசு மாதிரி இல்லைதான். என்னோட இட்லித் தட்டு உள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளே போகிறது. கொஞ்சம் அகலம் கம்மியாய் இருந்திருக்கணும். ஆனால் இரண்டே அளவுகள் தான். இன்னொன்று ரொம்பச் சின்னது. அதிலே தட்டே வைக்க முடியலை. சரினு வாங்கி வந்தாச்சு!! இதிலே கொஞ்சம் நீர் ஜாஸ்தியானாலும் கொதிச்சு மேலே வந்து இட்லியில் பட்டு இட்லி வீணாகும். ஆகவே கவனமாய் நீரைச் சரியான அளவிலே ஊற்றணும். பழசிலே அப்படி இல்லை. வைச்சுட்டு நான் பாட்டுக்கு தொல்லைக்காட்சி பார்க்கலாம், கணினியிலே உட்காரலாம், கொல்லையிலே பூனை வந்திருக்கானு பார்க்கலாம், புதுசா வந்திருக்கிற குருவி என்ன கலர்னு பார்க்கப்போகலாம். நாரத்தையிலே பூ விட்டிருக்கானு ஆராயலாம். ஆனாலும் இதிலே தான் இட்லி செய்யறேன். பக்கத்திலேயே இருந்து காவல் காத்துக்கொண்டு. கொஞ்ச நாள் ஆனால் இதுவும் பழகிடும்! :))))))))




  இட்லி மாவுக்குக் காத்திருக்கும் சீனாச்சட்டி.
  ஜலம் உள்ளே கொதிக்கிறது.

  உள்ளே இட்லி வேகிறது.

 
Posted by Picasa
இன்னும் வெந்து கொண்டிருக்கிறது. இட்லியைத் தொடுத்துத் தலையில் வைச்சுக்கலாம் ஏடிஎம்.

36 comments:

  1. கொஞ்சம் எப்படி பண்றதுன்னு சொல்லுங்க அவங்களுக்கு அவங்க ரங்கஸ் நம்ம தொண்டர் படையில் சேருவார்

    ReplyDelete
  2. அட, ரொம்பத்தான் பயமுறுத்திட்டீங்க! இது எங்க வீட்டுலே இருக்கே!

    ReplyDelete
  3. வாங்க எல்கே, யாருக்குச் சொல்லித் தரணும்?? ஏடிஎம்முக்கா?? அவங்க தான் எட்டிப்பார்க்கிறதே இல்லையே? :P

    ReplyDelete
  4. வாங்க திவா, இருக்கும், இல்லாமல் இருக்காது. ஆனால் பாருங்க சீனாச்சட்டினு இங்கே கேட்டால் எல்லாம் திரு திருனு முழிக்கிறாங்க. என்னத்தைச் சொல்றது! :(

    ReplyDelete
  5. இதுக்கு என்ன பேர்ன்னு எல்லாம் தெரியாது மாத்தா.. ஆனா இதுல தான் அம்மா இட்லி வார்ப்பா.. துணி இட்லி சூப்பரோ சூப்பர்ர்ர்ர்! 1000 தான் இருந்தாலும் இந்த டேஸ்டு எதுலேயும் வராது..

    ReplyDelete
  6. அவங்களுக்குதான் .... பாவம் அவங்க ரங்க்ஸ்

    ReplyDelete
  7. இதுக்கு பேரு சீனாச்சட்டியா? இப்பதாங்க தெரியும். அப்படியே இட்லியையும் கண்ணுல காட்டியிருக்கலாம் :-)!!

    ReplyDelete
  8. //திருட்டுப் பாத்திரம்//
    சூப்பர் பேரு... :))))

    //மாவை ஊற்றிவிட்டு சட்டியில் வைக்க வந்தால் கொதிச்சுட்டு இருந்த நீரைக் காணோம்//
    இங்க இட்லியே காணாம போன கதை எல்லாம் இருக்காம்... இதுல தண்ணிய காணோமாம்... ஹையோ ஹயோ...

    //சொய்ங்க்க்க்க்க்க்//
    ஹா ஹா... உங்க இட்லி எப்படி இருந்ததுன்னு தெரியாது... ஆனா மியூசிக் சூப்பர் மாமி...

    ReplyDelete
  9. //அப்புறமா அன்னிக்கு எப்படியோ சமாளிச்சேன் இட்லி பண்ணாமல்//
    மாமா சந்தோசமா டீ கடைல போய் சாப்ட்டு இருப்பரே... ஹா ஹா ஹா...

    //சீனாச்சட்டி//
    வித்தியாசமா இருக்கே பேரு... சீனால இருந்து இம்போர்ட் பண்ணினதோ? இல்ல சீனாதானா கம்பெனி தயாரிப்போ? இல்ல...சரி வேண்டாம் விடுங்க... நீங்களே சொல்லிடுங்க மாமி...

    //சென்னையில் கந்தகோட்டம் அருகே கிடைக்கும் அங்கே போங்கனு சொன்னார்//
    அட ராமா... கொஞ்சம் விட்டா ஏழு மலை தாண்டி ஏழு கடல் தாண்டி ஒரு குகைல கிளி யோட உயிர்ல இருக்குனு சொல்லுவாங்க போல இருக்கே... :))

    ReplyDelete
  10. //வைச்சுட்டு நான் பாட்டுக்கு தொல்லைக்காட்சி பார்க்கலாம், கணினியிலே உட்காரலாம்//
    அப்போ இனிமே போஸ்ட் கம்மிய வரும்னு சொல்லுங்க (இட்லி எடு கொண்டாடு... :)))))

    //இன்னும் வெந்து கொண்டிருக்கிறது. இட்லியைத் தொடுத்துத் தலையில் வைச்சுக்கலாம் ஏடிஎம்//
    grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr.... உங்களுக்கு இன்னும் கொஞ்ச நாளைக்கி இட்லியே வராம கடவுக..... :((((((

    ReplyDelete
  11. //எல் கே said...
    கொஞ்சம் எப்படி பண்றதுன்னு சொல்லுங்க அவங்களுக்கு அவங்க ரங்கஸ் நம்ம தொண்டர் படையில் சேருவார்//

    உங்க ப்ரூட்டஸ் கட்சிக்கு தொண்டர் வேற வேணுமா? grrrrrrrrrrrrrrrrrrrrr...............

    ReplyDelete
  12. //கீதா சாம்பசிவம் said...
    வாங்க எல்கே, யாருக்குச் சொல்லித் தரணும்?? ஏடிஎம்முக்கா?? அவங்க தான் எட்டிப்பார்க்கிறதே இல்லையே? :P//


    இதெல்லாம் அநியாயம் மாமி... உங்க ப்ளாக்ல ப்ரியா கூட சேந்து கமெண்ட் போடறதே புல் டைம் ஜாப் ஆய்ட்டு இருக்கு இப்பவெல்லாம்...இப்படி சொல்றது ஞாயமா?
    (நான் கேசரி பிடிக்கும்னு சொன்னதை மனசுல வெச்சுண்டு ....ஹ்ம்ம்...:((((( நான் வேணா ஒரு மாசத்துக்கு கேசரி விரதம்... ஒகேவா மாமி இப்போ... :))))))

    ReplyDelete
  13. தொடர....
    (உங்க தொண்டரடி பொடி ஆள்வி நானுனு இப்பவாச்சும் புரிஞ்சுகோங்க மாமி... :)))

    ReplyDelete
  14. எங்க வீட்டிலும் இருக்கு சார்.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. நாங்க இதை சீனிச்சட்டின்னுதான் இப்பவும் சொல்றோம். துணிபோட்ட இட்லித்தட்டுல இட்லியும் அவிக்கலாம். இடியாப்பமும் பிழிஞ்சு வேகவைக்கலாம். (அம்மா இப்படித்தான் செய்வா).

    ReplyDelete
  16. ஹை அநன்யா அக்கா, எங்கே இருக்கீங்க?? ரொம்ப நாளாச்சு பார்த்து! இட்லி நிஜம்மாவே நல்லாத் தான் இருக்கும், இந்த அடுக்கு இட்லித் தட்டில் குக்கரில் வைச்சால் அப்புறம் இட்லியோட மேல் தோலை உரிச்சு எடுக்கிறாப்போல் ஆயிடுமே, அப்படி ஆகாது!

    எங்க வீட்டிலே என்னோட பழைய சட்டி எத்தனையோ பேருக்கு இட்லியைப் படைச்சிருக்கு! அதைப் பிரியவே மனசில்லை!:) நம்ம ரங்க்ஸோட நண்பர்கள் எல்லாம் கூட்டம் கூட்டமா வருவாங்க ராஜஸ்தான், குஜராத்திலே. எத்தனை பேரைப் பார்த்திருக்குங்கறீங்க? பாவம்!

    ReplyDelete
  17. ஏற்கெனவே அநன்யா அக்கோவோட ரங்க்ஸை கு.ப.த.வா போட்டுட்டு இப்போ என்னடான்னா அவர் கட்சியை விட்டே வெளியேறிட்டார் போல! ம்ம்ம்ம்?? ஏடிஎம்மோட ரங்க்ஸா?? நான் இட்லி பத்தி எழுதிருக்கேன்னு பயந்துட்டார்னா என்ன பண்றது? :P

    ReplyDelete
  18. வாங்க தெய்வ சுகந்தி, இட்லியைக் கண்ணிலே காட்டற ஐடியாதான். ஆனால் அப்போப் பார்த்து எதிர் வீட்டுப் பேரர் (ஹிஹிஹி, பேரன், ஒரு மரியாதை இருக்கணுமில்ல, அதான் பேரர்) இங்கே தான் விளையாடுவேன்னு வந்துட்டார். அவர் காமிராவைப் பார்த்துட்டுக் கொண்டான்னா கஷ்டம்! கேட்கமாட்டார், இருந்தாலும் இரண்டு வயசு ஆன பெரியவர் ஆச்சே? விளையாடறேன்னு சொன்னார்னா?

    ReplyDelete
  19. ஹிஹிஹி, சம்பந்தி வீட்டுக்காரங்க கிட்டே நேரிலேயே இந்தத் திருட்டுப் பாத்திரத்தைச் சொல்லிக் காட்டிட்டு வச்சுட்டுப்போவாங்க ஏடிஎம். ஆனால் என்னமோ திருட்டுப் பாத்திரம்னு பேரு, இரும்பு தான் கொடுக்கணுமாம். அதிலேயும் நல்ல இருப்புச் சட்டி இருக்கே அது கொடுக்கக் கூடாதாம், இந்தச் சட்டியோ அல்லது தண்டவாளக் கல்லில் செய்த தோசைக்கல்லோ கொடுப்பாங்க. இரும்பு திருஷ்டி கழிக்கவும் ஒரு காரணமாய் இங்கே பயன்படுத்தப் படுகிறதுனு அப்புறமா தெரிஞ்சுக்கிட்டேன். :))))

    ReplyDelete
  20. ஆனா மியூசிக் சூப்பர் மாமி...//

    பின்னே ம்யூசிக் இல்லாமலா?? :P

    //மாமா சந்தோசமா டீ கடைல போய் சாப்ட்டு இருப்பரே... ஹா ஹா ஹா...//

    க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    /சென்னையில் கந்தகோட்டம் அருகே கிடைக்கும் அங்கே போங்கனு சொன்னார்///

    எனக்கு இது ரொம்பக்கிட்டக்க ஏடிஎம், அம்பத்தூர் ஸ்டேஷனில் ஏறினா செண்டரலில் இறங்கி நடந்தே போயிடலாம். சாமான் நிறைய இருந்தால் மட்டும் வரச்சே ஆட்டோ வச்சுண்டா போதும். நான் கல்யாணம் ஆனதிலே இருந்து கந்தகோட்டம் அருகே பெருமாள் செட்டிக்கடைப் பெருங்காயம் தான் வாங்கறேன். :)))))))) இதுக்காகவே போவோம். பித்தளையில் பரிசுப் பொருட்கள் கொடுக்கவும் இங்கே மொத்த வியாபாரக் கடைகளில் வாங்கலாம். நாங்க அடிக்கடி போவோம். அதோட நான் புடைவைகள் எடுப்பதும், ரத்தன் பஜார் ஹாண்ட்லூம் ஹவுஸில் தான். எப்போவானும் பட்டு எடுக்க நேர்ந்தால் தான் தி.நகர் பனகல் பார்க் நல்லி. தி.நகரில் எதுவுமே வாங்கப்போகமாட்டோம். நோ ஷாப்பிங் இன் தி.நகர்!

    ReplyDelete
  21. (உங்களுக்கு இன்னும் கொஞ்ச நாளைக்கி இட்லியே வராம கடவுக..... :((((((//

    ஹிஹிஹி, நேத்திக்குக்கூட சூப்பரா வந்ததே! :P

    உங்க ப்ரூட்டஸ் கட்சிக்கு தொண்டர் வேற வேணுமா? grrrrrrrrrrrrrrrrrrrrr...............//

    வேணாம் போங்க! :P

    ((((( நான் வேணா ஒரு மாசத்துக்கு கேசரி விரதம்... ஒகேவா மாமி இப்போ... :))))))//

    ஓகே, ஓகே, கொலஸ்ட்ரால் வந்தால் நான் பொறுப்பில்லை! :)

    ReplyDelete
  22. வாங்க மதுரை சரவணன், சார் இல்லை, மேடம்! :))))))

    ReplyDelete
  23. வாங்க அமைதி, உங்களுக்குத் தெரிஞ்சிருக்குனு சந்தோஷமா இருக்கு. பலருக்கும் புரியலை! :( இதிலே நானும் இடியாப்பம்(சேவை) பண்ணுவேன். நேரடியாப் பிழிஞ்சும் பண்ணுவேன், இதிலே இட்லி மாதிரி ஊத்திட்டு அப்புறமாவும் பிழிவேன். :)))))

    ReplyDelete
  24. வா..ர்ப்...பு இரும்பு>>> சொல்லாதீங்கோ!! சொல்லவே சொல்லாதீங்கோ . நம்ப முதுகுல வா...ர்ப்பு போட்ட இரும்பு:(( "துணிய பிழிஞ்சுண்டிருக்கேன் அடுப்புலேந்து கறிய எடுத்துடு"ன்னா அம்மா. எனக்கு 10 வயசு . ஷிம்மி ங்கற, காடா வாங்கி அம்மாவே தைச்சு நன் கையால சாய்வு தையல் ஆர்ம்ல போட்ட, அது முதல்ல ஷிம்மியா இருந்து நாம உயர பனியனாட்டும் தொடர்ந்து போட்டுக்கவேண்டி வர சாதனம் !! தொடைக்கு மேல இருந்தது. பிடிச்சு எடுக்க இழுத்தா நீளாது!!நமக்கு இடுக்கி வராது:(( ஆள்காட்டி விரலை காதுல மாட்டி அன்று வந்ததும் அதே நிலா சச்சசா ஆலாபனையோட ஜூலா ஜூல் பண்ண, சூடு , ஆட்டம் எல்லாத்துலேயும் கறி ஜனதா ஸ்டோவ் ல கொட்டி கெரஸின் நாத்தம் . கொமரிப்பொண்ணுக்கு இதுகூட தெரியல்லனு சொல்லப்போறாக நு நீட்டி முழக்கி தாயம்மா "ஜிஞ்சப்"கனிவு மொழிய சீதன இலுப்பசட்டி ஃபணால் !! ப்ளஸ் கோவிந்தா கறி!! அப்பா சாப்பிடவர நேரம் ( நம்ப நேரம் சரியில்ல சட்டிக்கும் தான் !! )!! எல்லா ஸ்ட்றெஸ்சும் சேந்து "நொர நாட்டியம் வேணுமா இப்பனு" அம்மா உபயம் !!நம்ப முதுகுக்கு வார்த்தது!!
    கோவத்துல ஒத்தருக்கும் தெரியாம சின்ன சீனா சட்டிய நைஸா அப்புறமா கல்லை வைச்சு உடைச்சேன் .அம்மா அப்போ சிரிச்சா!! புரிஞ்சுக்கவே முடியல்லப்பா அப்போ!!:))))

    ReplyDelete
  25. இதுக்கு இலுப்பச்சட்டின்னுனா பேரு. சீனாச் சட்டியா?
    இதில பண்ணின இட்லியை நானும் உங்க வீட்ல சாப்பிட்டு இருக்கேன். ரொம்ப நன்றி கீதா:)

    ReplyDelete
  26. வாங்க ஜெயஸ்ரீ, அம்மா தானே முதுகுலே வார்ப்புப் போட்டது? நான் எண்ணெய் தேய்ச்சுக் குளிக்க வாங்கிப்பேன் அம்மா கிட்டே இருந்து அடி! முதுகுலே அடிச்சுட்டு முதுகு சிவந்து போய் எரிச்சல் தாங்காது, கத்துவேன். :))))))

    துணியைப் பிடிச்சுண்டு எடுத்திருந்தா நிலா நிலா ஓடி வானு பாடிண்டே எடுத்திருக்கலாம். :)))) துணி கை கொடுக்கும். பக்கத்திலே இல்லை போல!

    ReplyDelete
  27. வாங்க வல்லி, இட்லியைச் சாப்பிட்டதுக்கும், நல்லா இருக்குனு சொன்னதுக்கும் நன்றிங்க. இதைச் சீனாச்சட்டினு தான் சொல்லுவோம்.

    ReplyDelete
  28. இலுப்பச்சட்டிக்கு இத்தனை அலப்பறை பண்ண ஒன் அண்ட் ஒன்லி கீதா பாட்டீ!!!!

    ReplyDelete
  29. பதிவுக்கு நன்றி கீதாம்மா !

    சீனா சட்டி பற்றி இப்போ தான் கேள்வி படுகிறேன் .ரொம்ப இன்டரஸ்டிங்கா இருக்கு

    ஒரு மொழம் இட்லி பார்சல் !

    ReplyDelete
  30. //இதெல்லாம் அநியாயம் மாமி... உங்க ப்ளாக்ல ப்ரியா கூட சேந்து கமெண்ட் போடறதே புல் டைம் ஜாப் ஆய்ட்டு இருக்கு இப்பவெல்லாம்//

    ஆமாம்பா ;கொ ப செ என்றால் சும்மாவா ! என்ன புல் டைம் ஜாப் க்கு சம்பளம் வேணுமா ..

    இதோ பாருங்க அப்பாவி வந்தமா இட்லி யை பார்த்தமா நடையை கட்டினமா ன்னு இல்லாமே ....

    சின்ன பிள்ள தனமா இருக்கு :)

    ReplyDelete
  31. கொடியவர்களே ச்சீ கொடி அவர்களே எங்கள் தங்க தலைவி அவர்களின் இருபதாவது பிறந்த நாள் இனி மேல் தான் வர இருக்கிறது என்பதை கழகத்தின் சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் !

    இப்படிக்கு கழக கண்மணிகள் ...........

    ReplyDelete
  32. // யாருக்குச் சொல்லித் தரணும்?? ஏடிஎம்முக்கா?? அவங்க தான் எட்டிப்பார்க்கிறதே இல்லையே? :ப//

    உங்களையும் அப்பாவி ரெம்பா மிஸ் பண்ணறாங்களாம் !அவங்க ஸ்பெஷல் இட்லி யோடு வெயிட்ங்காம்!

    ReplyDelete
  33. //இலுப்பச்சட்டிக்கு இத்தனை அலப்பறை பண்ண ஒன் அண்ட் ஒன்லி கீதா பாட்டீ!!!!//

    :)

    கீதாம்மா, உங்க சீனாச்சட்டியைப் பத்தி என்னென்னவோ சொல்லணும்னு நினைச்சுக்கிட்டே படிச்சேன், எல்லாம் மறந்து போச், இதைப் படிச்சதும் :)

    ReplyDelete
  34. @போர்க்கொடி, நீங்க என்ன சொன்னாலும் என்னோட தொண்டர்கள் மட்டும் என்னோட கட்சிதான். எனக்கே அவங்க வாக்களிப்பாங்க! :P

    வாங்க ப்ரியா, இட்லி ஆறி அவலாப் போச்சு! ஆனால் என்ன செய்யறது? குழந்தைங்களைக் கவனிச்சுட்டுத் தானே வரணும்! ஓகே, சூடு பண்ணிச் சாப்பிடுங்க, ஒரு முழம் என்ன ஒரு பெரிய இட்லிப் பூப் பந்தே தரேன். :))))) அடுத்து வரப் போகுது பாருங்க உருளியும், வெண்கலப் பானையும்! :))))

    அதானே, ஏடிஎம், கொ/ப/செ. பதவி வேணுமா, வேண்டாமா? சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு? (வடிவேலு குரல்லேயே சொல்லிக்குங்க!)

    @ப்ரியா, முதல்லே ஒரு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதான் சான்ஸுனு சேம்சைட் கோல் போடறீங்க?

    ஹிஹிஹி, இருபதாவது பிறந்த நாள்? எனக்கு?? இருக்கும், இருக்கும், நீங்க சொன்னாச் சரியாத் தான் இருக்கணும், ஆனால் இன்னும் பிறக்கவே இல்லை! பிறந்ததும் பார்த்துக்கலாமே எத்தனாவது பிறந்த நாள்னு! :))))

    என்ன கொடுமை இது? அப்பாவியோட இட்லிக்கு நான் தான் மாட்டிக்கொண்டேனா? ப்ரியா, எவ்வளவு கோபம் உங்களுக்கு என் மேலே! க்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  35. வாங்க கவிநயா, போர்க்கொடிக்கு எப்போவுமே இப்படித் தான் என்னைப் பார்த்தால் புகை வரும், கேசரிக் கட்சி வேறேயா! அதான்! கண்டுக்காமல் நீங்க சொல்ல வந்ததைச் சொல்லிடுங்க! :)))))))

    ReplyDelete
  36. //ஒரு முழம் என்ன ஒரு பெரிய இட்லிப் பூப் பந்தே தரேன். :))))) //

    Saar neenga periya baseball player pola irukku. irukkattum.

    ReplyDelete