சென்ற வருடத்திய சில நிகழ்வுகள்:
சிறுவன் ஆதித்யாவைப் பூவரசி என்ற பெண் கொன்றுவிட்டாள்.
வேறொருவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சாஸ்திரக்கனி என்னும் காவல்துறைப் பெண் காவலர், தன் பழைய நீண்டநாள் காதலனான மின்வாரிய ஊழியர் ராஜேந்திரனைக் கொன்று எரித்து விட்டார். அதுவும் தன் புதுக் கள்ளக் காதலன் வீரராஜனோடு சேர்ந்து கூட்டமைத்துக் கொண்டு.
இந்தப் பெண்கள் இருவருமே கள்ளத்தனமாய்க் காதல் செய்து வந்திருக்கின்றனர். இதே ஓர் ஆணாக இருந்தால் மனைவியை ஏமாற்றியதற்கும் கள்ளக் காதலில் ஈடுபட்டதற்கும் அவன் மேல் நடவடிக்கை எடுத்து தண்டிக்க முடியும். ஆனால் பெண்களுக்கு மென்மையான சட்டங்களே இருக்கின்றன. அவ்வளவு எளிதில் அவர்களைத் தண்டிக்க முடியாது. பெண்ணியம் பேசும் பெண்ணியவாதிகளும் பெண் விடுதலை பற்றிப் பேசும் ஆண்களும் சரி இத்தகைய பெண்களின் நடவடிக்கைகள் பற்றியும் அவர்கள் செயல்கள் பற்றியும் கண்டித்து ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை. ஆண்களிடம் பெண்கள் கஷ்டப் படுவதாயும், கொடுமைப்படுத்தப் படுவதாயும் சொல்லும் பெண்ணியவாதிகள் இந்தப் பெண்களால் சீரழிந்த குடும்பங்களைப் பற்றி நினைத்தானும் பார்க்கிறார்களா? சந்தேகமே! அந்தச் சீரழிக்கப்பட்ட குடும்பங்களிலும் பெண்கள் இல்லையா? அந்தப் பெண்களுக்கு மட்டும் எந்தவிதமான உரிமையும் கிடையாதா?
மேலும் லஞ்சம் வாங்குவதிலும் பெண்கள் நாங்கள் ஒருவருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்துக்கொண்டு வருகின்றனர். சில மாதங்கள் முன்னால் பாஸ்போர்ட் அதிகாரியான பெண்மணி ஒருவரின் லஞ்ச ஊழல் வெளிவந்தது. மேலும் காவல் துறையில் இருக்கும் சில பெண்களும் லஞ்சம் வாங்குவதாயும் வேறு துறைகளிலும் லஞ்சம் வாங்கும் பெண்மணிகள் இருப்பதாயும் செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன. மருந்துகள் வழங்கும் மருத்துவத் துறையையும் பெண்கள் விட்டு வைக்கவில்லை. பிஹாரில் காங்கிரஸ் மேலவை உறுப்பினரான ஜோதி தேவி என்ற பெண்மணி சட்டசபை நுழைவாயிலில் இருந்த பூந்தொட்டிகளை எல்லாம் உடைத்துப் போட்டு அமர்க்களம் செய்தார். அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் இந்த அநாகரிகமான, பெண்மைக்குச் சற்றும் பொருந்தாத, ஆர்ப்பாட்டமான நிகழ்ச்சி காட்டப் பட்டது. என் கணவரோடு அருகே அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த எனக்குக் கூச்சமாய் இருந்தது. இது மட்டுமா?
பெண்களுக்கு உரிமைகள் இல்லை என்றும் அவர்களை அடிமைகள் என்றும் சொல்லிக் கொண்டு பெண்ணியவாதிகள் எதற்கெடுத்தாலும் கொடிதூக்கிக் கொண்டு அலைகின்றனர். சமீபத்தில் ஷர்மிளா தாகூர், பிருந்தா காரத், ஜெயந்தி நடராஜன், ஷபனா ஆஸ்மி போன்றோர் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவிற்காக நடுத்தெருவில் ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றனர்; தினசரிகளில் செய்தியாக வந்தது. இப்படி எல்லாம் இருக்கும்போது பெண்களுக்கு உரிமை இல்லை என்றும் அடிமையாக நடத்தப்படுகிறாள் என்றும் பெண்களுக்குச் சம உரிமை வேண்டும் என்றும் முழங்குவதைப் பார்த்தால் சிரிப்பாய் வருகிறது. உடை உடுத்துதலில் தொடங்கிய ஆபாசம் இன்று கள்ளக் காதலிலும் லஞ்சம் வாங்குவதிலும் அதற்காகச் சிறு குழந்தை என்று கூடப் பார்க்காமல் கொலை செய்வதிலும் போய் முடிந்திருக்கிறது. நமக்குத் தெரிந்து வெளியே வந்திருக்கும் சில நிகழ்ச்சிகள் இவை. சம உரிமை கொடுக்கவில்லை என்றே வைத்துக் கொள்வோம். அப்படி இருக்கும்போதே இப்படி எல்லாம் நடந்துகொள்ளும் பெண்கள் சம உரிமை கொடுத்துவிட்டால்– அதாவது அவர்கள் கேட்பதெல்லாம் இப்போது கிடைப்பதில்லை என்று இப்போது சொல்கிறார்கள்; அதெல்லாம் கிடைத்துவிட்டால்– இப்படி எல்லாம் நடக்காதா?
இன்று பெண்கள் எந்தத் துறையில் இல்லை? ஆட்டோ ஓட்டுநராக, பேருந்து ஓட்டுநராக, மின்சார ரயில் ஓட்டுநராக, தபால் பட்டுவாடா செய்பவராக, பெட்ரோல் பங்குகளில், ரேஷன் கடைகளில் பொருள்களை அளந்துபோடுபவராக… இன்னும் உயர்ந்த நிலையில் சொல்லவேண்டுமானால் விமானம் ஓட்டுபவராக, விண்வெளிப் பயணியாக, விண்வெளி விஞ்ஞானியாக என்று பல துறைகளிலும் பரிமளிக்கிறார்கள் தானே? இதை விடவும் என்ன முன்னேற்றமும் உரிமையும் வேண்டும்? ஒரு சிலர் எல்லாப் பெண்களுக்கும் கிடைத்துவிட்டதா என்றும் கேட்கின்றனர். சரி, இல்லை என்றே வைத்துக்கொள்வோம். எல்லா ஆண்களுக்கும் இந்தச் சம உரிமை கிடைத்திருக்கிறதா? ஏன் எல்லா ஆண்களும் உயர்ந்த இடத்தில் இல்லை? ஏன் ஒரு சிலருக்கு மட்டும் நல்ல உயர்ந்த பதவிகளும், பட்டங்களும் கிடைக்கின்றன? இன்னும் சில ஆண்கள் மூட்டை தூக்கியும், வண்டி இழுத்தும், ரிக்ஷா ஓட்டியும் பிழைக்கின்றனர்? ஏன் இப்படி?? அவர்களுக்காகப் போராட யாருமே இல்லையா? ஆண்கள் முன்னேறவேண்டாமா? அவங்களுக்கும் இதில் எல்லாம் உரிமை இல்லையா?
கேட்டால் காலம் காலமாய்ப் பெண்கள்தான் அடிமையாக நடத்தப்படுவதாய்ச் சொல்லுவார்கள். பெண் எப்போது அடிமையாய் இருந்தாள்? எப்போதும் இல்லை! ஆனால் இந்தப்பெண் உரிமை பேசுபவர்களுக்கு என்னவோ பெண்கள் அடிமையாக இருப்பதாயும் அவர்களை வன்கொடுமைக்கு ஆளாக்குவதாயுமே நினைப்பு. சமீப காலங்களில் கிட்டத்தட்ட இந்தக் கள்ளக்காதல் பிரச்சினைகளால் பத்துக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருக்கின்றன. அனைத்திலும் அநேகமாய்ப் பெண்களே குற்றவாளிகள். ஓர் ஆண் தன் மனைவிக்குத் தெரியாமல் இன்னொரு பெண்ணோடு உறவு பூணும் பட்சத்தில் சட்டம் அவன் மேல் வலிமையாகப் பாய்கிறது. அதுவே ஒரு பெண் என்றால் மென்மையாக அணுகுகிறது. ஆணும் பெண்ணும் சரிசமம் என்று வருகிறபோது இதில் மட்டுமே ஏன் பெண்ணிடம் மென்மையான அணுகுமுறை?? பெண்ணிய வாதிகளும் இப்படிப் பட்ட பெண்களைப் பற்றி ஒருவார்த்தை கூடப் பேசுவதில்லை. உடல் ரீதியாகவும், இயக்கங்களின் மூலமாகவும் ஆணும் பெண்ணும் மாறுபடுவது இயற்கை. ஆனால் அதற்காக ஒரு பெண் என்னவேண்டுமானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்பது அருவருப்பாய் இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று ஆராய்ந்தெல்லாம் பார்க்கவே வேண்டாம்.
பெண்களுக்கு இப்போது பணமும் ஆடம்பர வாழ்க்கையும் உல்லாசப் பொழுது போக்குகளும் மட்டுமே முக்கியமாய் இருக்கின்றன. எல்லாப் பெண்களையும் ஒட்டுமொத்தமாய்க் குற்றம் சாட்டவில்லை. நானும் ஒரு பெண்தான். குடும்பத் தலைவிதான். ஆனாலும் தொலைக்காட்சியில் வரும் நெடுந்தொடர்களில் பெண்களை மட்டமாய்ச் சித்திரிப்பதற்கு ஒரு வரையறையே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. எந்தத் தொடரை எடுத்தாலும் அதில் கணவன் அல்லது மனைவிக்கு ஒரு கள்ளக் காதல், அதற்காகப் பழிவாங்குவது, அல்லது மாமியாரைப் பழிவாங்குவது, மாமியாரையோ, கணவனையோ பழிவாங்குவதற்காக ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் தான் வாழ வந்த குடும்பம் என்ற எண்ணமே இல்லாமல் பழி தீர்த்துக்கொள்ளுவது…. அத்தகைய பெண்களைத் திறமைசாலிகளாய்க் காட்டுவது. அவர்களால் கஷ்டப் படும் பெண்களைத் திறமையற்றவர்களாய் வாயில்லாப் பூச்சிகளாய், பயந்தவர்களாய்க் காட்டுவது. ஒரு நாள் பூராவும் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு சராசரிப் பெண் மனதளவில் மிகவும் பாதிக்கப் படுகிறாள். அவளுக்குத் தன் நிலைமையை நினைத்துத் தன்னிரக்கம் ஏற்படுகிறது. தான் வாழும் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா என்று எண்ணுகிறாள். மேலும் தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் பெண்கள் உடுத்தும் உடைகள், அணியும் ஆபரணங்கள் இந்தப் பெண்களின் கருத்தையும், கவனத்தையும் கவருகின்றன. ஆனால் சராசரிப் பெண்களால் வாங்க முடியாத அளவுக்கு உச்சத்தில் இருக்கும் அவற்றின் விலைகள். ஆகவே பெண்களுக்குத் தேவை பணம், அதனால் வரும் ஆடம்பர வாழ்வு. அதற்காகத் தன்னையே அழித்துக்கொள்ளவும் தயங்கவில்லை அவர்கள்.
மேலும் இன்றைய அவசர உலகில் கணவன், மனைவி இருவரும் அநேகமாய் வேலைக்குச் செல்கிறார்கள். மனைவிக்கு அலுவலகம் இருக்கும்போது கணவனுக்கு இருக்காது. கணவன் அலுவலகம் சென்றால் மனைவி வீட்டில் இருப்பாள். ஆக, பெண்களுக்கு முதல் எதிரி இந்தத் தனிமையே. வீட்டில் இருக்கும் பெண்கள்தான் என்றால் நாள் முழுதும் தொலைக்காட்சித் தொடர்களே அவர்களின் ஒரே பொழுதுபோக்கு என்றாகிவிட்டது. அதிலோ பெண்கள் தைரியமாய் என்னவெல்லாம் செய்கிறார்கள்? தனிமையில் வாடும் பெண்கள் தங்களுக்கு ஆறுதல் சொல்லவும், தங்கள் அலங்காரத்தைப் பார்த்து ரசிக்கவும் யாரானும் இருக்க மாட்டார்களா என உள்ளூர ஏங்குகிறார்கள் என்பது சில உளவியல் நிபுணர்களின் கருத்து. அதனால்தான் அவர்கள் பாதை மாறுகிறார்கள் என்பதும் அவர்கள் கருத்து. முன்பு கூட்டுக்குடும்பமாய் இருந்த போது இந்தப் பிரச்சினை அதிகம் எழவில்லை. அன்பைத் தேடி ஏங்குவதும் தனிமை தரும் சுதந்திரமும் காரணங்களாய்ச் சொல்கிறார்கள். நம் வீட்டில் நம் கணவனிடமும் நம் குழந்தைகளிடமும் கிடைக்காத அன்பா வெளியில் கிடைக்கப் போகிறது? விசித்திரமாய் இல்லை? ஏன் அவர்கள் கணவன்மார்களிடம் மனம் விட்டுப் பேசி, இதைத் தீர்த்துக்கொள்ளக் கூடாது. குழந்தை பெற்ற பெண்கள் என்றால் ஏன் குழந்தைகளோடு பொழுது போக்கக் கூடாது? ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. குழந்தைகளையும் இன்று தொலைக்காட்சியின் சில நிகழ்ச்சிகள் பெருமளவில் பாதித்திருக்கின்றன. அதைப் பற்றி அடுத்துப் பார்ப்போம். இப்போது பெண்களின் இந்த நிலைமைக்குத் தீர்வு என்னவென்று யோசிக்கலாம்…
தொடரும்.
டிஸ்கி: இந்தக் கட்டுரை சென்ற வருடம் தமிழ் ஹிந்துவில் வெளிவந்தது. இதை எழுதிய எனக்கு ஆதரவாயும், எதிர்த்தும் கருத்துகள் வந்தன. ஒரு பெண்மணி என்னை நகரத்தை விட்டே போகும்படி கூறி இருந்தார். நகரத்துப் பெண்கள் வேலை பார்ப்பதில் கிடைக்கும் சுதந்திரத்தையும்,பொருளாதார முன்னேற்றங்களையும் கண்டு, அதிலும் இந்தக் காலத்துப் பெண்களைக் கண்டும், எனக்குப் பொறாமை என்றும் கூறி இருந்தார். பெண் எக்காலத்திலும் பெண்ணே! மாறமுடியாது. மேலும் நானும் ஒரு காலத்தில் வேலைக்குச் சென்றேன். அம்பத்தூரில் இருந்து தண்டையார்பேட்டைக்குச் செல்வேன். அப்போதெல்லாம் மின்சார ரயில் போக்குவரத்து அம்பத்தூரில் ஆரம்பிக்கவில்லை. எண்பதுகளின் கடைசியில் தான் மின்சார ரயில் போக்குவரத்து ஆரம்பித்தது. நான் சென்ற போது புகைவண்டி தான். டீசல் கூட எப்போவோ ஒரு சில விரைவு வண்டிகளுக்கு மட்டுமே. அதனால் பெண்கள் வேலைக்குச் செல்லுவதின் செளகரியம், அசெளகரியம் எனக்கு நன்கு புரிந்ததே. பின்னர் குழந்தை பிறந்ததும், அதை வளர்ப்பதில் ஏற்பட்ட பல சிக்கல்களுக்காக வலிய வந்த வங்கி வேலையையும் மறுத்தேன். இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்னும்படி மருத்துவம் படித்த என் அருமை சிநேகிதி ஒருத்தர் தன் மருத்துவப் பயிற்சியையே குழந்தை வளர்ப்புக்காகப் பத்து வருடங்கள் போல் தள்ளிப் போட்டார். இதை விடப் பெரிய தியாகம் எதையும் நான் செய்துவிடவில்லை. இன்றைய நாட்களில் பெண்கள் வீட்டை விட்டுப் பல வேலைகளிலும் ஈடுபடுவதால் ஏற்படும் சமூக, கலாசார மாற்றங்களையே இங்கு குறிப்பிடுகிறேன். இதன் மூலம் பெண்கள் வேலைக்குச் செல்வதை நான் எதிர்ப்பதாய் நினைக்கவேண்டாம். பொருளாதாரத்தில் பின்னுக்கு இருப்பவர் வேலைக்குச் சென்றுதான் தீரவேண்டும்.
இந்தக் கட்டுரையை ரொம்பநாளா உங்க பதிவில் பார்க்க காத்திருந்தேன். ஏற்கனவே தமிழ் ஹிந்துவில் படித்திருந்தாலும் நம் பதிவுலக புரட்சி வீரர்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்
ReplyDeleteசபாஷ்! வணங்குகிறேன்!
ReplyDeleteவாங்க எல்கே, இந்த முதல் பகுதியை மட்டுமே படித்தீர்கள் என நினைக்கிறேன். இதுக்கு அப்புறம் மூன்று பகுதிகள் உள்ளன. முடிக்கவில்லை. எழுத நிறைய இருந்தது. ஆனாலும் வேறு சில அவசர வேலைகளினால் நாலாம் பகுதியோடு முற்றும் போட்டுவிட்டேன். இதிலாவது கடைசிப் பகுதியையும் எழுதிப் போடணும் எண்ணம். பார்க்கலாம்.
ReplyDeleteமறந்துட்டேனே, பெண்கள் தினத்துக்காகக் காத்திருந்தேன் இதைப்போட! :)))))
ReplyDeleteவாங்க சேட்டைக்காரரே, உங்க சேட்டைகளை இப்போ ரசிக்க முடியறதில்லை. பல பதிவுகள் பக்கம் போயே பல மாசங்களாகிவிட்டன. வேறு ஏதோ வேலைகள். வரவுக்கும் கருத்துக்கும் நன்றிப்பா.
ReplyDeleteஎவ்வளவு தான் படித்த பெண்களாக இருந்தாலும், சில பெண்கள் எது சுதந்திரம் என்பதை சரிவர புரிந்து கொள்ள தவறிவிடுகிறார்கள். நல்ல,அவசியமான கட்டுரை.
ReplyDeleteசென்னையில ஒரு ஆட்டோவும் ஃப்ரீ இல்லையாமே? எல்லாம் அம்பத்தூர் போகுதாம்!
ReplyDeletejokes apart, நல்ல பதிவு. தொடருங்க!
பெண் எக்காலத்திலும் பெண்ணே! மாறமுடியாது. //
ReplyDeleteஇதுவே என் கருத்தும். பெண்ணின் பலவீனத்தோடே உரிமைகள் தரப்படணும்.
சில முரண் இருந்தாலும் உங்க நோக்கம் எனக்கு முழுதும் தெரியுமாதலால் ஏற்கிறேன்..
வாழ்த்துகள் சொல்ல மறந்தேன்.. வாழ்த்துகள்..
ReplyDeleteதற்காலத்து பெண்களுக்கு சுதந்திரத்திற்கும் விடுதலைக்கும் வித்தியாசம் தெரியவில்லை ... எங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று விடுதலை வாங்கிவிடுகிறார்கள்.....
ReplyDeletevery good post mami. I came here after a long time.Glad to read this post mami. Waiting for the next posts....
ReplyDeleteanbudan
Subha
Super Post. I too talk about this often though people say "loosaa nee"... but never had the courage to post in the blog. Hats off to you maami... great... Very appreciable...
ReplyDeleteகேட்டால் காலம் காலமாய்ப் பெண்கள்தான் அடிமையாக நடத்தப்படுவதாய்ச் சொல்லுவார்கள். பெண் எப்போது அடிமையாய் இருந்தாள்? எப்போதும் இல்லை! //
ReplyDeletehaa...haa..
வேற்று கிரக வாசியோ?
அம்னீசியாவில் இருந்து மீண்டவரோ?
// கேட்டால் காலம் காலமாய்ப் பெண்கள்தான் அடிமையாக நடத்தப்படுவதாய்ச் சொல்லுவார்கள். பெண் எப்போது அடிமையாய் இருந்தாள்? எப்போதும் இல்லை! //
ReplyDeleteஹாஹாஹாஹா
வேற்று கிரக வாசியோ?
அம்னீசியாவிலிருடந்து மீண்டவரோ?
இப்போது இல்லை என்றால் ஓரளவு ஒப்புக்கொள்ளலாம். இந்த வாக்கியம் நிச்சயமாக மனசாட்சி இல்லாமல் எழுதப்பட்டது.
//நம் வீட்டில் நம் கணவனிடமும் நம் குழந்தைகளிடமும் கிடைக்காத அன்பா வெளியில் கிடைக்கப் போகிறது?//
ReplyDeleteஅவ்வாறு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் யாரும் செல்வதாகக் கூற இயலாது. அப்படிச்சொல்பவர்கள் பாசாங்கு செய்கிறார்கள்; பொய் பேசுகிறார்கள். உண்மையில் குடும்பத்தில் கிடைக்காத அமைதி வெளியில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதே அறிவீனம்.
சபாஷ்!
ReplyDeleteஇருங்க நானும் ஒரு பதிவு போடறேன்
கருத்துள்ள பகிர்வு தலைவி ;)
ReplyDelete//வேற்று கிரக வாசியோ?
ReplyDeleteஅம்னீசியாவிலிருடந்து மீண்டவரோ?//
ஏன் இப்படி ?? இந்தியாவில் ஆதிகாலம் தொட்டே பெண்களுக்கு சம மரியாதையும் உரிமையும் கொடுத்து உள்ளனர் . சங்ககால பெண் புலவர்களை
தெரியாதா உங்களுக்கு ??
. பெண் எப்போது அடிமையாய் இருந்தாள்? எப்போதும் இல்லை! //
ReplyDeletehaa...haa..
வேற்று கிரக வாசியோ?
அம்னீசியாவில் இருந்து மீண்டவரோ?//
எனக்கும் உடன்பாடில்லை.. இன்னமும் பெண்கள் அடிமையாகத்தான் இருக்கிறார்கள் பல இடங்களில்.. அக்கம் பக்கம் அனுபவம் இல்லையோ கீதாக்கா?
பெண்களுக்காக போராடும் சமூக ஆர்வலர்களை கேட்டுப்பாருங்கள்..
இங்கே மட்டுமல்ல உலகம் முழுதுமே பெண்ணடிமைத்தனம் முழுதுமாக மறையவில்லை..
உண்மையில் குடும்பத்தில் கிடைக்காத அமைதி வெளியில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதே அறிவீனம்.//
ReplyDeleteசெய்திகளில் படிப்பதில்லையா செளம்யா?. குடித்துவிட்டு மனைவியை அடிக்கும் கணவர்களை?..
வரதட்சணை இன்னும் ஒழியவில்லையே..
//அப்படிச்சொல்பவர்கள் பாசாங்கு செய்கிறார்கள்; பொய் பேசுகிறார்கள். //
நமக்கு அந்த சூழல் ஏற்படவில்லை என்பதாலேயே அவற்றை பொய் , பாசாங்கு என ஒதுக்க கூடாது.. எனக்கு தெரிந்தே என் அருகிலேயே ஒரு பெண் கணவனிடம் இன்னமும் அடி வாங்குகிறார்.. அதிகம் படிக்கவில்லை.. வேலைக்கும் போகவில்லை.. பிறந்த வீட்டிலும் அவருக்கு ஆதரவில்லை..
நம்மை வைத்து மட்டும் நாடும் மக்களும் சுபிட்சமாக இருக்காங்கன்னு நினைக்ககூடாதுதானே செளம்யா..
இதை விவாதத்துக்காக சொல்லவில்லை..காயப்படவேண்டாம்.. பாதிப்புகள் ஒருபக்கம் நடந்துகொண்டே இருக்கிறது.. முற்றிலும் அப்ப்டி ஒன்று இல்லவே இல்லை என்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள மட்டுமே..
படித்து வேலைக்கு போகும் பெண்களுக்கு மன ரீதியாக உளைச்சல் நடக்கவும் செய்கிறது..
கீதாக்கா சொன்னதில் பல விஷயம் உடன்படக்கூடியவையே.. சில பெண்களின் அத்துமீறல்கள் , குடிப்பதையே சம உரிமை என கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள்.. அவை போன்றவை வருத்தத்துக்குறியதே..
வாங்க தேஜா அம்மா, புரிதலுக்கு நன்றி.
ReplyDelete@திவா, என்ன ஆசை, என்ன ஆசை? :P
வாங்க பயணமும் எண்ணங்களும், உண்மைப் பெயரை வெளியே சொல்லிக்கலை, பரவாயில்லை. முரண் என்னனு எழுதி இருக்கலாம்னு சொல்ல இருந்தேன், கீழே குறிப்பிட்டிருப்பதை இப்போத் தான் பார்த்தேன். நான் ஆண்களையும் உயர்த்திப் பிடிக்கவில்லை, பெண்களையும் உயர்த்திப் பிடிக்கவில்லை. அது புரிஞ்சால் போதும்/ வாழ்த்து எதுக்குனும் புரியலையே?? இப்போ யாரும் எனக்கு எந்தப் பரிசும் கொடுக்கலை! :D
ReplyDelete@பாலாஜி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteவாங்க சுபா, ரொம்ப நாள் கழிச்சு வந்ததுக்கு நன்றிங்க.
@ஏடிஎம், நீங்க இந்த முதல் பதிவை மட்டும் தானே படிச்சீங்க?? இருங்க, மிச்சத்தையும் போட்டதும் அப்புறமாச் சொல்லுங்க! :))))))
@மோனா, ஆமாம், வேற்றுக்கிரஹவாசிதான். அம்னீசியாவும் உண்டு. மனசாட்சி இல்லாமல் எந்த வாக்கியத்தை எழுதினேன்?? அதோட உங்க கருத்து அது. அதை நான் எப்படி மாற்ற முயலமுடியும்? கருத்து வேறுபாடுகள் என்பது அனைவருக்கும் உண்டு. நன்றி வரவுக்கு.
ReplyDeleteஅது சரி, மோகனா, நீங்களும் மோனாவும் ஒருவர் தானே?
வாங்க செளமியா, முதல்வரவுக்கு நன்றி. உங்க பதிவையும் படித்தேன். அதில் கூறி இருக்கும் நியாயமற்ற செயல்களைக் கண்டிக்க யாரும் அதிகம் முன் வருவதில்லை. மேலும் குடும்பத்தில் அமைதி இல்லை என்று பெண்கள் அதுவும் நடுத்தரக் குடும்பத்துப் பெண்கள் கூறுவதும் உண்மையே. ஒன் இந்தியா என்னும் மின்னிதழிலும் பேட்டிகள் வந்துள்ளன. சில தொலைக்காட்சி சானல்களின் நேரடி ஒளிபரப்பிலேயும் கேட்க நேர்ந்தது. இதற்கென உட்காருவதில்லை என்றாலும் அக்கம்பக்கம் தொலைக்காட்சியைப் பெரிதாக வைக்கும்போது காதில் விழுவதைத் தவிர்க்க முடிவதில்லை! :(
ReplyDeleteகோபி ராமமூர்த்தி, போட்டுட்டுச் சுட்டி மறக்காமல் கொடுங்க.
ReplyDeleteவாங்க கோபி, ஒரு விமரிசனம் கூடவா இல்லை? என்ன போங்க! :)
எல்கே, அவங்க ஆதங்கம் சொல்றாங்க, சொல்லிட்டுப் போகட்டும், விடுங்க.
ReplyDeleteபயணமும் எண்ணங்களும்,
உடன்பாடில்லை என்பதை ஏற்கிறேன். அக்கம்பக்கம் அநுபவம் எனக்கு இருக்கும் அளவுக்கு உங்களுக்கு இருக்குமா என்பதும் சந்தேகமே. பெண்களுக்காகப் போராடும் சமூக ஆர்வலர்கள் நகரத்துப் பெண்களுக்கு மட்டுமே போராடுகின்றனரோ என்றும் எனக்கு சந்தேகம். உலகம் முழுதையும் சரி பண்ண என்னாலோ, உங்களாலோ முடியாது. நம் சமுதாயத்தை, நம் சமூகத்தைக் குறைந்த பக்ஷம் நம் வீட்டைச் சரி பண்ணினால் பின் அதிலிருந்து சமூகம், சமுதாயம், ஊர், மாவட்டம், மாநிலம் என்று பரந்து விரியலாம். இந்த ஆசைதான். :(
செய்திகளில் குடித்துவிட்டு அடிக்கும் கணவர்கள் பற்றி மட்டுமா வருது?? இல்லையே? பெரும்பாலும் வேறொரு குடும்பத்துத் திருமணமான ஆணைக் காதலிக்கிறதில் சிக்கல் ஏற்பட்டு அதற்குக் கொலை செய்யும் பெண்கள் பற்றியும் தான் வருகிறது. ஆண்களிலும் சிலர் கொடூரமாய் நடப்பதையும் சொல்கின்றனர். ஆனாலும் எல்லாவற்றிலும் ஒரு பெண்ணின் துணை இல்லாமல் அல்லது பெண் காரணமாய் இல்லாமல் நடக்கிறதாய்த் தெரியவில்லையே?
ReplyDeleteஅடிக்கிற கணவன் அன்பால் திருந்தவில்லை எனில் அதிரடியாகவாவது மாற்ற வேண்டும். இதற்கெல்லாம் அந்தப் பெண் தான் முயலவேண்டும். அடி வாங்கிக்கொண்டும் பேசாமல் இருக்கிறார் என்றால் என்ன செய்ய முடியும்?? இது மூன்றாம் மனிதர் தலையீட்டில் முடியும் விஷயம் இல்லை. இப்போது நாம் போய்த் தலையிட்டாலும், பின்னர் ஒரு முறை அந்தப் பெண்ணே இது எனக்கும், என் கணவருக்கும் உள்ள பிரச்னை என்று சொல்லலாம். இப்படியும் நடந்திருக்கிறது. ஆகவே கணவன், மனைவிக்குள் இருக்கும் பிரச்னைகளை அவர்களே சரி பண்ணிக்கணும். பெற்றோராகவே இருந்தாலும் அவங்க தலையீடும் கூடாது.
ReplyDeleteகொலை செய்யும் பெண்கள் பற்றியும் தான் வருகிறது. //
ReplyDeleteஎத்தனை சதவீதம் அக்கா?..
10:1 இருக்குமா?..
//அடிக்கிற கணவன் அன்பால் திருந்தவில்லை எனில் அதிரடியாகவாவது மாற்ற வேண்டும்.//
:) நாம் பேசிக்கத்தான் முடியும் அக்கா.. பெண் பலவீனமா ஆணை நம்பி இருந்தால், அவள் வீட்டில் ஆதரிக்க ஆள் இல்லாவிட்டால் இதுதான் பலரின் நிலைமை.. ஆனா பழகிக்கொள்கிரார்கள்..
-
சாந்தி ( மறந்துட்டீங்களா அக்கா ?.:) )
I went through your post..! Agree to a larger extend.. Thanks for sharing.
ReplyDeleteபெண்ணே இப்படி எழுதுவதா என்று நிறையப் பேர் பொங்கிப் போயிருப்பார்களே...
ReplyDeleteஆனாலும் உண்மைதான் கீதா அத்தனையும்....உண்மைகள் கசக்கத்தானே செய்யும்...தொடருங்கள்...