எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, March 08, 2011

பெண்ணுக்குச் சம உரிமை, இருக்கிறதா, இல்லையா?

பெண்கள் முன்னேற்றத்துக்கோ, அல்லது பெண்களின் சுதந்திரத்துக்கோ நான் எதிரி அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொண்டிருப்பீர்கள். என்னுடைய கருத்தே இந்தச் சுதந்திரம் என்பது அளவுகோல் இல்லாமல் கட்டுப்பாடு இல்லாமல் போகிறதே என்பது தான். ஆறு மாதங்களுக்கு முன்னால் வந்த "ஒன் இந்தியா" என்னும் தளத்தில் கண்ட பரபரப்புச் செய்தி ஒன்று– இன்னும் முன்னேற்றமாக 21-ஆம் நூற்றாண்டுப் பெண்கள் தனித்து வாழவேண்டும் என ‘ஒன் இந்தியா’ என்னும் தளத்தின் ஒரு செய்திக் குறிப்பு சொல்கிறது. அதற்காக அவர்கள் குறிப்பிடும் வசதிகள்(?!) பின்வருமாறு:


1. இரவு நேரம்கழித்து வீட்டுக்கு வரலாம்./ இது பெண்களுக்கான சுதந்திரத்தைக் குறிக்கும் என்பது அவர்கள் கருத்து. ஆனால்/////

ஆண்களைப் போல் பெண்களும் பொறுப்பில்லாமல் சுற்றுவது என்பது அவர்களுக்கு ஆபத்தைத்தான் ஏற்படுத்தும். பெண்களுக்கு என்று பொருளாதாரச் சுதந்திரம் என்று எப்போது ஆரம்பித்ததோ அப்போதே பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பொறுப்பின்மைக்குப் போய்விட்டார்கள் என்று சொல்லலாம். தேவைக்கு என தவிர்க்க முடியாமல் வேலைக்குச் செல்வது வேறு. ஆனால் அதிகம் வசதி, இன்னும் வசதி, இன்னும் பணம் என்று வேலைக்குச் செல்வது வேறு. குடும்பத்தில் யார் எஜமானன், யார் அடிமை? இருவரின் பொறுப்பும் சமமானதே.


. திரைப்படம் பார்க்கும்போது அழலாம். / ஆனால்........

இது ஒரு பெரிய விஷயமாய் எனக்குத் தெரியவில்லை. எத்தனையோ ஆண்களுமே உருக்கமான படங்களைப் பார்க்கும்போது அழுகின்றனர். சினிமா நடிகர்களுக்காகத் தலையை மொட்டை அடித்துக்கொள்ளும் இளைஞர்களையும், கட் அவுட்டுக்குப் பாலாபிஷேஹம் செய்யும் இளைஞர்களையும் இப்போதும் காணலாம்.

3. தொலைக்காட்சிப் பெட்டியில் விருப்பமான தொடர்களைப் பார்த்துக்கொள்ள முடியும்./ அது சரிதான், ஆனால்////////வாழ்க்கையின் உன்னத லட்சியமே தொலைக்காட்சியின் தொடர்களைப் பார்க்கத்தானென்று ஏற்பட்டாற்போல் உள்ளதே! பெரும்பாலான வீடுகளில் பெண்கள் சண்டை போட்டு அவர்கள் விருப்பத்துக்கான தொடர்களைத்தான் போடுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் உணவு நேரத்தையே அதற்குத் தகுந்தாற்போல் மாற்றி அமைத்துக்கொள்கிறார்கள். விடுமுறை, பண்டிகை தினங்களில் இப்போதெல்லாம் உறவினரோடு கலந்து கொண்டாடுவது போய், தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதிலும், அதில் வரும் போட்டிகளில் கலந்து கொண்டு ஜெயிப்பதிலும் நேரம் போவது தெரியவில்லை. இது புரியாமல் யார் வீட்டுக்காவது நாம் போனால் வாங்க என்று கூப்பிடக் கூட ஆள் இருக்காது. இதில் ஆண், பெண் பேதமே இல்லை. இதைக் குறித்துப் பல தினசரிப் பத்திரிகைகள், வார, மாதப் பத்திரிகைகள் அலுத்துப் போகும் அளவுக்குப் பேசிவிட்டன. ஆணுக்கும் பெண்ணுக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்பதில் ஒற்றுமையோ ஒற்றுமை இதில்! :P4. மற்றவர்களுக்காக நேரத்தைச் செலவிட வேண்டாம்./ சரி தான், ஆனால் .........

ஆஹா, எத்தனை அற்புதமான கண்டுபிடிப்பு!!! நாம் இந்த உலகில் மற்றவரைச் சாராமல் வாழ முடியுமா? பிறந்ததுமே பெற்றோர். வளர்ந்து படித்து ஒரு வேலைக்குச் செல்வதுவரை அவர்கள் உதவி தேவை. அதன்பின்? எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு, அப்பாடா, நிம்மதி என்று நம்பாட்டைப் பார்த்துக்கொண்டு போகலாம் இல்லையா? இதை விட மட்டமான யோசனை வேறு இருக்க முடியுமா? பொறுப்பின்மையின் உச்சக்கட்டமே இதுதான். சம்பாதிப்பது வேண்டுமானால் நமக்காக என்று சொல்லலாம். ஆனால் வேலை செய்யும் இடத்திலோ தங்குமிடத்திலோ சாப்பிடுமிடத்திலோ மற்றவரைச் சாராமல் இருக்க முடியுமா? முயலுங்கள் பெண்களே! உங்கள் சமர்த்து அது! நீங்கள் குடியிருக்கும் அறைக்குள்ளோ வீட்டுக்குள்ளோ பாம்போ அல்லது விஷ ஜந்துக்களோ வந்துவிட்டால்கூட நாமே விரட்டிக்கொள்ளவேண்டும். தண்ணீர்க்குழாயில் தண்ணீர் வரவில்லை என்றாலோ அல்லது எரிவாயு விநியோகத்துக்கோ, குளிர்சாதனப் பெட்டியையோ, தொலைக்காட்சிப் பெட்டியையோ சரி பண்ணவோ எவரையுமே அழைக்காமல் நாமே செய்து கொள்ள முடியுமா? இப்படிப் பலர் நமக்காக கூப்பிட்ட குரலுக்கு வந்து நேரத்தைச் செலவிடுகிறார்கள். பணத்துக்குத்தான்; இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் நம் அற்புதக் கொள்கை அவர்களுக்கு அரசல் புரசலாகத் தெரிந்தால்கூட நமக்குப் பணத்துக்குக் கூட உதவிக்கு வருவார்களா, சந்தேகமே! “அந்தம்மாதான் அவ்வளவு பேசுதே! அது வேலையை அதுவே பார்த்துக்கட்டும்,” என்று சொல்பவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள்.5. காலையில் எப்பொழுதுவேண்டுமானாலும் எழுந்துகொள்ளலாம்; எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.// என்ன ஒரு ஆனந்தம்?? ஆனால்//////

ஒருபக்கம், “ஆங்கிலேயர் எல்லாத்தையும் குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பாங்க, நமக்கு பங்க்சுவாலிட்டின்னா என்னனே தெரியாது. கொஞ்சம் கூடப் பொறுப்பே கிடையாது,” என்று சொல்லுவோம். இன்னொரு பக்கம் நம் நேரத்தை நாமே வீணடித்துக்கொள்வோம். காலையில் நேரம் கழித்து எழுந்துகொள்வது ஒரு பெரிய சுதந்திரம் என்ற கண்டுபிடிப்புக்கு ஒரு சபாஷ்!6. நண்பர்களோடு நிறைய நேரம் செலவு செய்யலாம்./ ஆமாம், உறவை விடவும் இப்போதெல்லாம் நட்பே பெரிது/ஆனால்.......

வாழ்க்கையின் அர்த்தமே நண்பர்களோடு செலவு செய்வது தானா? அதைவிடவும் உயர்ந்த கொள்கைகளோ, நோக்கங்களோ, சமுதாய முன்னேற்றமோ இருக்கக் கூடாதா? நட்பு வேண்டும்தான். ஆனால் எல்லாமும் ஓர் எல்லைக்கு உட்பட்டே இருக்கவேண்டும். ஆனால் பெரும்பாலும் இப்போதை இளைய சமுதாயம் நட்புக்கே முன்னுரிமை கொடுப்பதையும், அதை மறுக்கமுடியாமல் அவர்கள் பெற்றோரும் நட்புக்கே முன்னுரிமை கொடுப்பதையும் பெருவாரியாகக் காண முடிகிறது. சொந்தங்கள் என்றால் குற்றம், குறை சொல்வார்கள்; ஒத்துப் போவதில்லை என்பது இதற்கு அவர்கள் சொல்லும் முக்கியக் காரணம். நட்பில் மட்டும் ஒத்துப் போகிறதா? அபிப்பிராய பேதங்களே இல்லாமல் இருக்கிறதா? நிச்சயமாய் உண்டு. எவ்வளவு நெருங்கிய நட்பானாலும், ஒரு சிறு பேதமாவது இருக்கத்தான் செய்யும். நட்பு விஷயத்தில் பொறுத்துக்கொள்ளும் நாம் சொந்தங்களைக் காப்பாற்றுவதற்காக சொந்தங்களின் குறைகளையும் பொறுத்துக்கொள்ளக் கூடாதா? “குற்றம் பார்க்கில் சுற்றமில்லை” என்பது தானே ஆன்றோர் வாக்கு? தினமணி தினசரிப் பத்திரிகையில், “அருகி வரும் உறவுகள்” என்ற தலைப்பில், மாமா, மாமி, அத்தை, சித்தி, சித்தப்பா போன்ற உறவுமுறைகள் அழிந்து வருவதைக் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் நாமோ எந்த உறவும் வேண்டாம் என்று ஒதுங்கினால் கொஞ்சநஞ்சம் இருக்கும் சகோதர பாசமும் எங்கே வரும்? ஏற்கெனவே பலருக்கும் இன்று ஒரே குழந்தைதான். குழந்தைகளுக்கு விட்டுக் கொடுத்துப் போவதோ, அனுசரித்தல் என்றால் என்ன என்றோ தெரிவதில்லை. அப்பா, அம்மாவும் பணத்தால் தன் குழந்தைக்கு அனைத்தையும் வாங்கிவிடலாம் என்ற நினைப்பிலேயே மிதக்கின்றனர்.7. பணியில் பதவி உயர்வு பெற்று வெளி ஊர்களுக்கோ, வெளிநாட்டுக்கோ செல்லும்போது பிரிவு இருக்காது./ நாம் தான் யாரையுமே சார மாட்டோமே, பிரிவென்ன பிரிவு, சுண்டைக்காய், ஆனால்//////

குடும்பம் என்ற அமைப்பையே குலைக்கும் ஒரு சுதந்திரம் இது. குடும்பம் என்ற அமைப்பு இன்றைக்கும் ஓரளவாவது இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் இன்னமும் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் கட்டிக் காக்கும் பெண்களே. அத்தகைய பெண்கள் இன்றைய நாள்களில் அருகி வருகின்றனர் என்பதும் மறுக்க முடியாத ஓர் உண்மை. தேவைக்காக பெண் வேலைக்குச் செல்வது போய் இன்றைக்குப் பண ஆசை எல்லையில்லாமல் போய் நிற்கிறது.


மேற்சொன்ன அனைத்துமே சுயநலமாய்ச் சிந்திக்க வைப்பவை என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. மேலும் அது சொல்வது குடும்பம் என்னும் அமைப்பில் இன்னும் ஆண்களுக்கே அதிகாரம் இருப்பதாயும் அவர்கள் கட்டுப்பாடுகளும், தளைகளும் விதிப்பதாயும் சொல்கின்றனர். இது எந்த அளவுக்கு நியாயம்?? தன் சொந்தப் பெற்றோரைத் தன்னுடன் வைத்துக்கொள்ள முடியாத மகன்கள் எத்தனை பேர்? அதற்கான காரணம் மனைவிக்குப் பிடிக்காததனாலேயே. தன் சொந்த அண்ணா, அக்கா, தம்பி, தங்கைகளுடன் பேச மனைவியின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளவேண்டும் நிலையில் இருப்பவர் பலர். அதையே பெண்ணின் உறவினர் என்றால் அந்தப் பெண்ணுக்கு உரிமை மறுக்கப் படுகிறது என்று சொல்வார்கள்.

ஆணுக்குத் திருமணத்தின் மூலம் புதியதொரு வேலைக்காரி கிடைத்தாள் மனைவி என்ற பெயரில் என்பதே இவர்கள் சொல்லுவது. மேலும் இவர்கள் சொல்லுவது கணவன், மனைவி வீட்டிற்குச் சென்று அங்கே மனைவியின் பெற்றோர்களுக்குத் துணிதுவைத்துப் போட்டு, சமையல் செய்து கொடுத்து அவங்களுக்கு அடங்கி இருக்கவேண்டும் என்றும் சொல்கிறார்கள். இதையெல்லாம் சொல்வது படிக்காதவர்கள் யாரும் இல்லை. நன்கு படித்து வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள்தான் இப்படிச் சொல்கிறார்கள். இன்னும் நயமாக, பெண் தன் வேர்களைத் துண்டித்துக்கொண்டு புகுந்த வீட்டுக்கு வருவதாய்ச் சொல்கின்றனர்.

ஒரு செடியை அதன் வேரோடு பிடுங்கினால்தான் இன்னொரு இடத்தில் நடமுடியும். வேரில்லாமல் ஏதேனும் ஒரு செடியை நட்டுப் பாருங்களேன். நிச்சயம் பிழைக்காது என்பதறிவோம் இல்லையா? அப்படியே பெண்களும். நிச்சயமாய்ப் பெண் தன் வேர்களோடுதான் புகுந்த வீட்டுக்கு வருகிறாளே ஒழிய வேர்களைத் துண்டித்துக்கொண்டல்ல. இந்த வேர் குடும்பத்தில் நிலைத்து நின்று ஆலம் விழுதுகளைப் போல் படரவேண்டும் என்றே அனைவரும் விரும்புவார்கள். துண்டித்துக்கொள்ள அல்ல. ஒரு பெண்ணுக்கும், ஓர் ஆணுக்கும் திருமணம் என்பதன் மூலம் சில சடங்குகள், சம்பிரதாயங்கள் ஏற்பட்டிருப்பது எதற்கு என்று அறிவோமா?

பெண்ணுக்குப் பையன் வீட்டோடு நெருங்கவும், பையனுக்குப் பெண் வீட்டோடு நெருங்கவும்தான். அதற்காகவே சில சடங்குகளைப் பையனின் சகோதரி செய்யவேண்டும் எனவும், சில சடங்குகளைப் பெண்ணின் சகோதரன் செய்யவேண்டும் எனவும் வைத்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் இந்துக்களில் சிலரின் திருமண சம்பிரதாயத்தில் பெண்ணையும், பையனையும் திருமண மேடைக்கு அழைத்துச் செல்வது பையனின் உடன் பிறந்த சகோதரியும், அவள் கணவருமாகவே இருப்பார்கள். அதே போல் நிச்சயதார்த்தம் நடக்கையில் பெண்ணின் சகோதரன் மாப்பிள்ளைக்கு அலங்காரம் செய்யத் துணைக்குச் செல்வதும், மாலை போட்டுச் சந்தனம் பூசுவதும், பெண்ணுக்கு அவள் நாத்தனர் அலங்கரிப்பதும், பொட்டு, பூ வைப்பதும், இப்படி நம் சம்பிரதாயம் ஒவ்வொன்றிலும் உறவினரையும் சம்பந்தம் செய்து கொண்டு ஆரம்பிப்பதில் பெண்ணின் உறவின் முறை வேர்களும் சரி, பையனின் உறவின் முறை வேர்களும் சரி பலப்படவே செய்யும்; செய்தன. சம்பந்தம் செய்வது என்பது அப்படி ஒன்றும் சுலபம் இல்லை. அதன் அர்த்தமோ, தாத்பரியமோ புரியாமல் வெறும் இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர் சேர்ந்து வாழச் செய்யப்படும் ஒரு திட்டம் /ஒப்பந்தம் என்ற கோணத்தில் பார்த்தால் இப்படித்தான், அசட்டுத் தனமாய்ச் சொல்லுவார்கள். கூட்டுக் குடும்பம் என்ன அவ்வளவு உயர்ந்த ஒன்றா என்பதும் அவர்கள் கேள்வி.

இதிலிருந்து நம் பாரம்பரியமும், கலாசாரமும் எவ்வளவுக்கு எவ்வளவு செல்லரித்துக்கொண்டு வருகிறது என்று புரிகிறது அல்லவா? இதற்குக் காரணம் பெரும்பாலான புராணங்கள், நம் இதிஹாசங்கள் ஆகியவற்றின் மூலக் கருத்துகள் தவறான கோணத்தில் பார்க்கப்படுவதும் ஒரு காரணம் என்று சொல்லலாமோ? சரியாகப் புரிந்துகொள்ளப்படாமல் மேம்போக்காவே ஒவ்வொரு கடவுளுக்கும் இரு மனைவிகள் என்ற கோணத்தில் நம் வாழ்க்கையைக் கடவுள் மேல் கட்டாயமாய்த் திணித்துக்கொண்டிருக்கிறோம். நம்மை மாதிரி வாழ்க்கை வாழ்வதோ, குழந்தைகள் பெற்றுக்கொள்வதோ கடவுளருக்கு இல்லை. நாம் நம்முடைய பக்தியை நமது வசதிக்காக அவ்விதமாய் வெளிக்காட்டிக்கொள்கிறோமே தவிர, நம்மைப் போல் கடவுளும், குடும்பம், குழந்தை, குட்டி பெற்றுக்கொண்டு மனித வாழ்க்கை வாழ்கிறார் என எண்ணிக்கொள்ளக் கூடாது. நமது குடும்ப வாழ்க்கையில் அவரவருக்கு என விதிக்கப்பட்ட கடமைகளை ஒழுங்காய்ச் செய்தாலே போதுமானது. இல்லறம் என்பதே அறத்தோடு சேர்ந்து நடத்துவதற்குத்தான். மேலும் மனைவியைத்தான் இல்லாள் என்றும் சொல்கிறோம். கணவனை இல்லான் என்று சொல்வதில்லை. இல்லான் என்றால் அர்த்தமே மாறிவிடுகிறது அன்றோ?

குடும்பத்தில் யார் பெரியவர், யார் சிறியவர் என்ற போட்டிக்கே இடமில்லை. ஆண், பெண் இருபாலாருக்கும் அது சமமே. வீட்டு நிர்வாகம் செய்துகொண்டு, வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டம் என்றும் அர்த்தம் இல்லை. வீட்டில் முழுநாளும் இருந்து நிர்வாகம் பண்ணும்போதுதான் அதன் சிரமங்கள் புரியும். ஒரு சில வேலைக்குச் செல்லும் பெண்கள் வீட்டில் இருக்கும் பெண்களை அலட்சியமாய்ப் பேசுவதாலேயே வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களைத் தாங்களே மட்டமாயும் நினைத்துக்கொள்கின்றனர். மேலும் வீட்டில் சமையலறையே கதி என்று இருக்கமுடியுமா என்றும் சில பெண்கள் ஆதங்கப் படுகின்றனர். சமையல் என்பதும் எவ்வளவு முக்கியமான ஒன்று. அதுவும் ஒரு கலை என்பதைப் பலரும் புரிந்து கொள்ளவில்லை. பெண்கள் பத்திரிகைகள் என்றாலே என்ன வரும்? சமையல் கற்றுக்கொடுப்பதும் குழந்தை வளர்ப்பும் தானே என அலட்சியமாய் இன்றைய நவநாகரிகமணிகள் சொல்கின்றனர். குழந்தை வளர்ப்பு முக்கியம் இல்லையா? சமையல்தான் முக்கியம் இல்லையா? அத்தகைய நவநாகரிகமணிகள் சாப்பாடே சாப்பிடுவதில்லையா??

பாகற்காய் அல்வா கற்றுக்கொடுக்க ஒரு பத்திரிகையா என்பதும் அவர்கள் கேள்வி. அந்தப் பாகற்காய் அல்வா செய்யவும், சுவைக்கவும் பலரும் தயாராய்த் தானே இருக்கிறோம், மேற்கண்ட நவநாகரீகமணிகள் உள்பட. அவர்கள் மட்டும் சாப்பாடே சாப்பிடுவதில்லையா? என்னதான் கடையில் வாங்கி டப்பியில் அடைக்கப்பட்ட உணவைச் சூடு செய்து சாப்பிட்டாலும், அந்த உணவையும் யாரோ ஒருவர் எங்கேயோ, எப்பொழுதோ சமைத்துத்தானே அடைத்துக் கொடுத்திருப்பார்கள்? அதுவே நன்றாக இல்லையென்றால், ருசி இல்லை, உப்புக் கம்மி, காரம் தூக்கல் என்றெல்லாம் சொல்லாமலா இருக்கிறோம்.

எல்லாவற்றையும் சரியாகச் சேர்த்து, நன்றாகச் சமைக்க நமக்குத் தெரியவில்லை. வாங்கிச் சாப்பிடுகிறோம். வாங்கிச் சாப்பிடும்போதே குற்றம், குறை சொல்லிக்கொண்டும் இருக்கிறோம். அப்படியானால் சமையல் என்பது கஷ்டம் என்பதும் புரிந்துதானே இருக்கிறது? எல்லாமும் ஒரு கலைதான். இந்தச் சமையலையே மிகவும் சுலபமாய்ச் செய்யும்படி நாம் மனதளவில் நம்மைத் தயார் செய்து கொள்ளுவதோடு, சமையலுக்கான திட்டம், வழிமுறைகள் போன்றவற்றையும் முன்கூட்டியே தயாரித்து வைத்துக்கொண்டால் அரை மணி நேரத்தில் அசத்தலாய்ச் சமைத்துவிட முடியாதா? நம் நோயற்ற உடலுக்கு, நம் குழந்தைகள் ஆரோக்கியமாய் வளர சாப்பாடுதானே முக்கியம். குடும்பத்தை கவனித்து ஆரோக்யமாக வளர்ப்பதும் முக்கியம் இல்லையா? இன்றைய குழந்தைகள் நாளைய குடிமக்கள் ஆகின்றனரே. ஓர் ஆரோக்கியமான சமுதாயத்தை எதிர்காலத்திற்குத் தருவது நம்போன்ற பெண்களின் கையில் தானே இருக்கிறது? நம் குடும்பத்தில் இருந்துதானே சமூகம் உருவாகிறது?

போரடிக்கிறதுனு சொல்றவங்களுக்கு நாளைக்கோ, நாளன்றைக்கோ முடிச்சுடுவேன். மின்வெட்டு இருக்கு, அதனால் சந்தோஷப் படுங்க. பதிவு தாமதமாய் வரதுக்கு! :))))))))))))

15 comments:

 1. ம். எதுக்கு கணவன் வீட்டில் இருப்பவர்களை நாங்கள் கவனிக்கணும் ?? கணவனை எதுக்கு கவனிக்கணும் ? அவர் தேவைகளை செஞ்சுக்க அவருக்குத் தெரியாதா ?? பெண்கள் என்றால் அதற்குதான் பிறந்தோமா ???

  புராணங்கள் பெண்களை அடிமைப் படுத்துகின்றன. அவற்றை எதற்கு நாங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் ....


  இவைதான் இதற்க்கு வரும் பின்னூட்டங்கள்

  ReplyDelete
 2. இது போன்ற கருத்துக்கள் வாழ்க்கை பயணத்தை முழுவதுமாக ஆரம்பிக்காத அல்லது துணையின்றி தனித்து வாழ விரும்பும் பெண்களின் விருப்பமாக் இருக்கும். வேறு படகில் பயணிப்பவர்களுக்கு இது போன்ற கருத்துகள் தேவையும் இல்லை. மற்றபடி குடும்பம் என்ற அமைப்பிற்குள் வந்தவர்கள் இதனை ஒதுக்கி விட்டால்தான் பயணம் இனிமையாக் முடியும்.

  ReplyDelete
 3. இன்னும் முன்னேற்றமாக 21-ஆம் நூற்றாண்டுப் பெண்கள் தனித்து வாழவேண்டும் என ‘ஒன் இந்தியா’ என்னும் தளத்தின் ஒரு செய்திக் குறிப்பு சொல்கிறது. அதற்காக அவர்கள் குறிப்பிடும் வசதிகள்(?!) //
  இது காமெடி கீமெடி இல்லையே? :-((((

  ReplyDelete
 4. கடந்தவாரம் எங்கள் வீட்டில் ஒரு விசேஷம் நடந்தது. அது என் அண்ணனுக்கும் அண்ணிக்கும் 50 வது வருட மண நாள் விழா. அன்று அத்தனை குடும்ப உறவினர்களும் கூடி அவர்களுக்குத் தெரியாமல் யுஸ், துபாய், கொல்கொத்தா போன்ற இடங்களில் இருந்து வந்து வாழ்த்தினார்கள்.எல்லோரையும் அவர்களது அன்பையும் பார்த்த அவர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.இத்தணைக்கும் அண்ணீ அந்த காலத்து பி எ. பெண்ணுரிமயைப் பற்றி அவர்கள் நினைத்திருந்தால் குடும்பம் இன்றைய சீறும் சிறப்பும் நிலையில் இருக்குமா? நிலையில் உங்களது வார்த்தைகள் சிந்தனையைத் தூண்டும் அதே சமயம் சிலர் எள்ளினாலும் எள்ளலாம். பிறருக்கு பிடிக்கவில்லை என்ற காரணத்தால் நல்லவை பயக்கும் கருத்துக்களை சொல்லாமல் இருப்பதும் தவறு. நன்று சொன்னீர்கள்

  ReplyDelete
 5. எல்கே, குழுமங்களில் இத்தகைய விவாதங்களைக் கண்டிருப்பீர்கள்! :(((( தனித்தன்மை என்பதன் அர்த்தமே மாறி வருகிறது. :(((

  ReplyDelete
 6. சாகம்பரி, பல குழுமங்களிலும் இந்த ஸ்வீட் சிங்கிள் குறித்த விவாதங்கள் முழு வீச்சில் நடந்தன. ஒன் இந்தியாவிலும் செய்தியாக வந்திருந்தது. அதன் சுட்டியை எடுத்து வைத்துக்கொள்ளவில்லை. தேடிப் பாரத்துக் கிடைத்தால் தருகிறேன். யாஹூ செய்திகளில் ஒரு வாரம் முழுதும் தலைப்புச் செய்தியாக இருந்து வந்தது. போன வருஷம் செப்டம்பர்?? ஆகஸ்ட்?? அதற்குள்ளாக.

  ReplyDelete
 7. திவா, காமெடி எல்லாம் இல்லை. செய்திகள் பற்றி நானும் தளங்களுக்குச் சென்று பார்த்த பிறகே குறிப்புகள் எடுத்துக்கிறேன். தளத்தின் அப்போதைய தினத்துச் சுட்டியை எடுத்து வைக்கவில்லை. மேலும் தமிழ் ஹிந்துவிலும் இந்தக் கட்டுரை பிரசுரம் ஆகி இருந்ததால் அவங்க ஆதாரம் இல்லைனால் பிரசுரிச்சிருக்கவும் மாட்டாங்க. நான் சுட்டியைத் தேடிப் பார்க்கிறேன். சுட்டி கொடுக்கத் தான் நினைச்சேன். நேரப் பற்றாக்குறை!

  ReplyDelete
 8. திராச, சார், நீங்க வந்ததுக்கும், கருத்துச் சொன்னதுக்கும் முதலில் ரொம்ப சந்தோஷம். உண்மை தான் நீங்க சொல்வது. திருமணம் ஆகி ஐம்பது வருடங்கள், அறுபது வருடங்கள் வெற்றிகரமாய் வாழ்க்கை நடத்திய தம்பதிகள் இருக்கையில் நம்பிக்கையின் ஒளிக்கீற்றுத் தெரிகிறது. உங்க அண்ணாவுக்கும், மன்னிக்கும் எங்கள் நமஸ்காரங்கள், வாழ்த்துகள்.

  உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.

  ReplyDelete
 9. இரவு நேரம் கழித்து வரலாம்:-
  சரி சொல்லிட்டு போங்க சொல்லிட்டு வாங்க , தன்னை புத்தியை உபயோகப்படுத்தி விவேகத்துடன் பாதுகாத்துக்கொள்ளுங்கள்!! அப்பா அம்மா கணவனை எதிரியா நடத்தாம உண்மையா இருங்க!!

  திரைப்படம் பார்க்கும் போது அழலாம் !!
  அட இப்படி ஒரு ஃபெமினிஸ்ட் கொள்கையா போடு சக்கை!!
  அழு!! யார் வேண்டன்னா! சினிமால காசை வாங்கிண்டு அழுதா நாம காசை அழுதுட்டு அழலாம் !!

  டிவில சீரியல்
  என் இஷ்டம் பொன்னிஷ்டம்!
  பார்ப்பதை தான் மனசு இறுக பிடிச்சுக்கும். நல்லதை
  பாத்து நல்லதை புரிஞ்சுண்டா சரி .மனசை வக்கரமாக்காமல்!!

  மத்தவாளுக்காக நேரம் செலவழிக்க மாட்டேன்னா பிறத்தியாரும் தனக்காக செலவழிக்க எதிர்பர்க்ககூடாது . அது முடியாதே!! குடிக்க வம்பு பேச பீத்திகொள்ள அலட்ட ஆள் வேண்டாமா !! நமக்கு கோணாம ஆணிய பிடிச்சு சுவத்துல அடிக்க வருமா !! அப்புறம் பீட்சாகாரர், லான்ட்ரி, இஸ்திரி??? காசு குடுக்கறேன்னாலும் , உங்காசு யாருக்குவேணும் எனக்குவேணும்னாதான் செய்வேன்னு அந்த பொண்ணும் திருப்பி பெண்ணுரிமை கொண்டாடினா என்ன செய்ய?!!!!!

  நம்ப ஊர் சத்தத்துல எங்க தூங்க பகல்ல !!

  தானா வீட்டுவேலை செய்ய வணங்குமா??

  பிரிவு ….. அட !!ஒண்ணும் அண்டலைன்னா எதை பிரிய???பேசறச்சே நன்னா இருக்கும் 40 45 ல புரியும்!!

  வெளிநாடு போறச்சே நன்னா இருந்து குழந்தைகள் வளர்ந்தப்புறம் ஏற்படற புது சோதனைகளில் முழிக்கும் சில வெளிநாட்டு பெற்றோரின் நிலமை -

  " ABCD, NZBCD, AUSBCD யா peer pressure ஆ pub culture ல friends ஆ juice போறும்னு சொல்லற துணிச்சல் இல்லையா சரி ஒரு 2.6 to 4% beer ஐ போறவரை ஸிப் பண்ணிட்டு நண்பர்களோட ரக்பியா, க்ரிக்கெட்டா, ஃபுட்பாலா விடியோ ஈவ்னிங்கா,pool party ya levelheaded ஆ நல்லபடி டீசென்டா enjoy பண்ணிட்டு SMART ஆ இருந்து ஏதோ நல்லபடி இருந்தா சரித்தான்!!"" :))))).

  ReplyDelete
 10. பதிவுக்கு நன்றி கீதாம்மா

  முதல் வாழ்த்து உங்களுக்கு

  ஒவ்வொரு தலைப்புக்கும் தனித்தனியாக கம்மேன்டிட விருப்பம்

  அடுத்த வாழ்த்து ஜெயஸ்ரீ மேடம் அவர்களுக்கு

  என்னமா சொல்லி இருக்காங்க

  ஒவ்வொரு கருத்திலும் எவ்வளவு அர்த்தங்கள்

  சிரிக்கவும் வைக்கிறது சிந்திக்கவும் வைக்கிறது

  தற்பொழுது நியூ சிலன்ட்லில் நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக

  செய்தி தாள்களில் படித்து தெரிந்து கொண்டேன்

  நான் உங்க ப்லோக்ளில் இவங்க கமெண்ட்ஸ் படித்த நாள் முதலே

  இவங்களோட மானசீக சிஷ்யை ஆகிட்டேன்;கொஞ்சம் சிபாரிசு சொல்லுங்க கீதாம்மா !

  ReplyDelete
 11. இங்கே கொங்கு நாட்டு பகுதிகளில் பெண்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது


  நகைச்சுவைக்காக சொல்கிறேன் !

  "இனி வரும் தலைமுறைகளில்

  ஆண்களுக்கு சம உரிமை இருக்கிறதா இல்லையா என்று

  பதிவுகள் வந்தாலும் ஆட்சிரியப்படுவதர்க்கு இல்லை!"

  ReplyDelete
 12. ஜெயஸ்ரீ, பெண்ணுரிமைவாதிகள் நீங்க சொல்வதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை யோசித்துப் பார்த்துப் புரிந்து கொள்ளவேண்டும். ஒருத்தரும் தன்னந்தனியாக வாழ்க்கை நடத்த முடியாது என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும். விடுதலையோ, அல்லது தனிமையோ, எங்கேயும் யாருக்கும் இன்னொருத்தர் உதவி எவ்விதத்திலும் தேவைப்பட்டே ஆகும். ஆகவே இதில் சார்ந்திருப்பது என்பதே கிடையாது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். நன்றிங்க,உங்க மேல் அதிக விளக்கத்துக்கு.

  ReplyDelete
 13. ப்ரியா, உங்கள் கருத்துகளுக்கும், பாராட்டுக்கும் நன்றி. ஜெயஸ்ரீயிடம் நான் சிபாரிசெல்லாம் செய்ய வேண்டியதில்லை. அவங்களே நல்லாப் பழகுவாங்க. :))) மற்றபடி இப்போ நியூசிலாந்தின் கிரைஸ்ட் சர்ச் நகரத்தின் நிவாரண வேலைகளில் இருக்காங்க. ரொம்பவே பிசி. நன்றிம்மா, இத்தனை வேலைகளுக்கிடையேயும் வந்து படிச்சுக் கருத்துச் சொன்னது பெரிய விஷயம்.

  அது சரி, உங்க போஸ்டிலே நான் கமெண்டினேனே, பார்க்கலை?? :D

  ReplyDelete
 14. ப்ரியா, ஏற்கெனவே மனைவியால் கஷ்டப் படும் ஆண்கள் சங்கம்னு ஒண்ணு இருக்கு, அவங்களும் மனைவிகளால் ஏற்பட்ட துன்பங்களிலிருந்து தங்களுக்கு விடுதலை வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்., பிரபல நடிகர் ஒருவரும் இதில் அடக்கம். :)))))))

  ReplyDelete
 15. விசுவோட ஒரு படத்துல .. ஒரு காட்சில மனோரம்மா ஒரு விஷயம் சொல்லிருப்பா.... நான் என் புருஷன்கிட வாங்கினது சுதந்திரம்... நீ உன் புருஷன்கிட விடுதலை ... ரண்டுக்கும் வித்தியாசம் இருக்குன்னுட்டு.... எனக்கு அதான் ஞாபகம் வரது....

  ReplyDelete