ம்ம்ம்ம்ம், இந்த கீதா என்ற பெயர் ரொம்பவே பொதுவாய்ப் புழங்கும் பெயர் என்றாலும் எங்க வீட்டில் அம்மா வழியிலும், அப்பா வழியிலும் இன்று வரை நான் ஒருத்திதான் கீதா. கல்யாணம் ஆகி வந்ததும், இங்கே சொந்தங்களிலே ஒன்றிரண்டு கீதாக்கள் இருக்கின்றனர். வலை உலகுக்கு வந்தப்போ கீத்ஸ் னு ஒருத்தர் எழுதிட்டு இருந்தார். அவங்க அப்போ நிறைமாசக் கர்ப்பம் என்பதால் அதிகமாய் இணையம் வரமுடியலை. அப்புறமாக் குழந்தை பிறந்துக் கொஞ்ச நாட்கள் எழுதினாங்களோ என்னமோ தெரியலை. ஆனால் இணையத்திலும் சில காலம் செங்கோல் செலுத்திட்டு இருந்தேன். இப்போ இரண்டு வருஷமா கீதா அசல், கீதா சந்தானம், கீதா 6 என்று சிலர் வந்திருக்காங்க. இப்போ சீதா லக்ஷ்மியைக் கவனிப்போமா??
பள்ளியிலே என் பெயரை சீதாலக்ஷ்மி என்று கொடுத்தது செல்லாமல் போச்சுனு சொல்லிட்டேன் இல்லையா?? தாத்தாக்களைத் தவிர வேறே யாருமே சீதானு கூப்பிட்டதில்லை. அம்மாவுக்கு செண்டிமெண்ட். சீதை கஷ்டப் பட்டாளே அது மாதிரிக் கஷ்டப்படணும்னு. அதோட என்னோட இந்தப் பெயர் கொண்ட பாட்டியும் கஷ்டப் பட்டிருக்காங்க. பெரியவங்க பெயர் என்ற காரணமும் சேர்ந்து கொள்ளவே நிரந்தரமாய் கீதாவானேன். ஆனால் கல்யாணத்திற்குப் பையர் பார்க்கையிலே ஜாதகத்திலே கீதா என்ற பெயரே கொடுக்கலை. சீதாலக்ஷ்மி என்ற பெயர்தான் இருந்தது. என்னோட கணவர் வீட்டிலே அவருடைய கொள்ளுப்பாட்டி பெயர் சீதா லக்ஷ்மி. கொள்ளுத்தாத்தா பெயர் சாம்பசிவம். ரெண்டு பேரும் இப்போ நாங்க ரெண்டு பேரும் எப்படி எல்லாத்திலேயும் காண்ட்ராஸ்டா இருக்கோமோ அதே போல் இருப்பாங்களாம். ஆனால் ரெண்டு பேருமே நல்ல செல்வாக்கோட இருந்திருக்காங்க. சாம்பசிவம் தாத்தா நாச்சியார் கோயிலின் பெருமாள் கோயில், உப்பிலியப்பன் கோயில் போன்ற கோயில்களில் தர்மகர்த்தாவாக (அறங்காவலர்) இருந்திருக்கிறார். அதோடு உள்ளூரின் பெருமாள் கோயிலும் சேர்ந்து கொண்டது. (இந்தப் பெருமாளுக்குத் தான் இப்போ திருப்பணி நடக்கிறது. கும்பாபிஷேஹம் தேதி வைச்சு தேர்தல் அறிவிப்பினாலே தள்ளிப் போயிருக்கு.)
கொள்ளுத்தாத்தா பெயரைத் தான் என் கணவருக்கு வைச்சிருக்காங்க. ஆகவே எங்களுக்குக் கல்யாணத்தின் போது ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது முதல்லே என்னோட பெயரைப் பார்த்திருக்காங்க. அதிலேயே அவங்க டோட்டலா சந்தோஷமாயிட்டாங்களாம். ஆஹா, இந்த மாதிரிப் பெயர்ப் பொருத்தம் கிடைக்கறது ரொம்பவே அரிதுனு நினைச்சு ஜாதகத்தைக் காட்டினால்,அங்கே இரண்டு, மூன்று பேர் ஜோசியம் பார்ப்பாங்க. எல்லாருமே ஒரே வாக்கா இவங்க பூர்வ ஜன்மத்திலேயும் தம்பதிகள், அதனாலே இவங்களுக்குள்ளே தான் கல்யாணம் நடக்கும் அப்படினு சொல்லி இருக்காங்க. உடனே எங்க வீட்டுக்கும் ஜாதகம் வந்தது. எங்க வீட்டிலே இந்தப்பெயர்ப் பொருத்தம் பத்தி எல்லாம் அப்போத் தெரியாது. மாப்பிள்ளை வீட்டுக்கு என் ஜாதகம் எங்க சித்தப்பா மூலமாப் போச்சு. உடனே அவங்க வீட்டிலே இருந்து என் சித்தப்பா மூலமாவே இவர் ஜாதகம் வந்தது. மாப்பிள்ளை வீட்டில் பொருத்தம் பார்த்தாச்சு என்பதும் ஜாதகம் வந்தப்போ எங்களுக்குத் தெரியாது. அப்போல்லாம் மாப்பிள்ளை வீட்டில் அவ்வளவு சுலபமாப் பெண் வீட்டில் வலுவிலே போய்ச் சொல்ல மாட்டாங்க.
எங்க அப்பாவும் ஜாதகம் பார்ப்பதில் நம்பிக்கை உள்ளவரே. ஜாதகம் பார்த்துச் சொல்லும் ஜோசியரும் உள்ளதை உள்ளபடியே சொல்லக் கூடியவர். அப்படி ஒருவரை அவருக்குப் பின் இன்று வரை நாங்க கண்டதில்லை. ஜோசியரும் பார்த்துட்டு , என் அப்பாவிடம் இந்த வரன் தான் முடியும். இவங்க போன ஜன்மத்துத் தம்பதிகள், இந்தப் பிறவியிலும் சேரப் போறாங்கனு சொல்லி இருக்கார். என் அப்பாவுக்கு முதல் ஆக்ஷேபம் மாப்பிள்ளை தஞ்சாவூர்க்காரர் என்பது, இரண்டாவது ஆக்ஷேபம் அப்போ அவர் புனாவில் இருந்தார். அவ்வளவு தொலைவெல்லாம் பெண்ணை அனுப்ப முடியாது என்று அப்பாவுக்கு இஷ்டமில்லை. அதற்கு முன்னால் டெல்லியில் இருந்து ஒரு வரன் வந்ததை இதே காரணத்தைச் சொல்லி அப்பா நிராகரித்திருந்தார். ஆகவே அக்கம்பக்கம் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஊர்களான திருச்சி, திருநெல்வேலி போன்ற இடங்களில் இருக்கும் பையர்களாகவே பார்த்துக்கொண்டிருந்தார். அப்படி ஒன்றிரண்டு வரவும் வந்தது. அவங்களும் போட்டோவைப் பார்த்துட்டு நேரிலே பேசறதுக்கும் வரச் சொல்லி இருந்தாங்க. ஆகவே அப்பாவுக்குத் திருச்சி வரன் ஒன்று தான் முடிக்க எண்ணம். அப்பா திருச்சிக்குப் போனார்.
அப்போல்லாம் பெண் வீட்டில் நேரே பையர் வீட்டுக்குப் போய் செய்முறைகள், சீர், செனத்திகள் என்று எல்லாத்தையும் பேசி முடிச்சுட்டு அப்புறமே பெண் பார்க்க வருவார்கள். பெண் பார்த்துவிட்டுச் சீரில் குறைகள் என்று பெண்ணை விடவேண்டாம்னு எண்ணமோ என்னமோ! எல்லாம் பேசி முடிச்சாலே பாதிக் கல்யாணம் முடிஞ்சாப்பலனு சொல்வாங்க. அப்படியும் சிலர் வீடுகளிலே பெண்பார்த்துப் பிடிச்சும், சீர் செனத்திகள் பிடிச்சும் வேறு ஏதேனும் காரணங்களால் நடக்காமலும் போனது உண்டு. ஆனால் எங்க ஜோசியரோ அப்பாவிடம் இதெல்லாம் நடக்காது. உங்க பெண்ணுக்கு அந்தப் பையர் தான். நீங்க பண்ணி வைக்கலைனா அந்தப் பையரே வந்து பண்ணிக்கொண்டு போயிடுவார்னு அடிச்சுச் சொல்லிட்டார். ஆனாலும் அப்பா கேட்கவில்லை. பையர் எங்கேயோ புனாவில் இருக்கிறார். அவர் வந்து பெண்ணைப் பார்த்துப் பிடிச்சு, சம்பந்தம் பேசினு எவ்வளவோ இருக்கு. கையிலே வெண்ணெய் இருக்கு, நெய்க்கு அலைவானேன்னு திருச்சி கிளம்பினார்.
ம்.. அப்புறம் .சீக்கரம் பொண் பாத்த படலம் வரட்டும் :))என்ன புடவை ந்யாபகம் இருக்கா? பாடினேளா??
ReplyDeleteசீக்கிரம் சீதா கல்யாணத்தை முடிங்க
ReplyDeleteஅருமையாக இருக்கிறது.
ReplyDeleteவாங்க ஜெயஸ்ரீ, நினைவு இருக்கு, என் கிட்டே இரண்டு, மூன்றுக்கும் மேல் பட்டுப்புடைவைகள் இருந்தும் என் சித்தியோட புடைவைதான் கட்டிண்டேன். :)))) மெஜந்தா கலர், எங்க வீட்டிலே பெண் பார்க்கிற போது எல்லாப் பெண்களுக்கும் அது குடும்பக் கலர்னு நினைக்கிறேன். :)))))))
ReplyDeleteஹிஹிஹி எல்கே, அ.வ.சி. உங்களோட இந்த கமெண்ட்டுக்கு பதிலை முதல் பதிவிலே கொடுத்திருக்கேன்./ வெயிட் பண்ணச் சொல்லி! :))))))
ReplyDeleteவாங்க மாதேவி ரசனைக்கு நன்றிம்மா.
ReplyDeleteஜூப்பர்!!!!!!!!!!!!
ReplyDeleteஅடுத்த பகுதிக்கு வெயிட்டிங்!
அடடே, தொடரா..?
ReplyDelete// இவங்க பூர்வ ஜன்மத்திலேயும் தம்பதிகள்//
ReplyDeleteஅப்போ அடுத்த ஜென்மத்துலயும் மாமா பாவம் தானா.. நோ டென்சன்... ஜஸ்ட் கிட்டிங் மாமி... ஹா ஹா... :))))
//கையிலே வெண்ணெய் இருக்கு, நெய்க்கு அலைவானேன்னு திருச்சி கிளம்பினார்//
அடப்பாவமே இப்படி சஸ்பென்சா நிறுத்தினா எப்படி மாமி? மாமா எப்படி மாட்டினார்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன்...:))))
அதெல்லாம் இருக்கட்டும் மாமி, பெண் பாக்க வந்தப்போ கேசரி செஞ்சீங்களா இல்ல அப்பவே டீ கடைல வாங்கினது தானா...:))))
to follow...:))
ReplyDelete:P
ReplyDeletenaan athai padikalai. rendu naala blog pakkame varalai.
ReplyDeleteவாங்க துளசி, வரவுக்கு முதல்லே நன்றி. உங்க பதிவு இன்னும் நாலு பாக்கி வச்சிருக்கேன். :)))))
ReplyDeleteஅப்பாதுரை, ஆமாம், தொடரே! :))))))
ReplyDeleteஅப்போ அடுத்த ஜென்மத்துலயும் மாமா பாவம் தானா//
ReplyDeleteஏடிஎம், நாங்க ரெண்டு பேருமே இதை வச்சு இப்போவும் கிண்டலடிச்சுப்போம்! so no sweating!!! :))))))))
அதெல்லாம் இருக்கட்டும் மாமி, பெண் பாக்க வந்தப்போ கேசரி செஞ்சீங்களா இல்ல அப்பவே டீ கடைல வாங்கினது தானா...:))))//
ReplyDeletegrrrrrrrrrrrrrrrrrrrஅப்போல்லாம் பெண் பார்க்கிறதுனா என்னனு நினைச்சீங்க?? சமையலுக்கு ஆளே போட்டாங்களாக்கும்! வெயிட்டுங்க, ஒண்ணொண்ணா வரும்! :))))))
பாலாஜி அங்கிள், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ReplyDeleteஎல்கே, பிசி வித் கிரிக்கெட்?????
///அப்போல்லாம் பெண் பார்க்கிறதுனா என்னனு நினைச்சீங்க?? சமையலுக்கு ஆளே போட்டாங்களாக்கும்! வெயிட்டுங்க, ஒண்ணொண்ணா வரும்! :))))))/// இப்பலாம் பொண்ணு வீட்டுக்கு போய் யாரும் பொண் பாக்கறது இல்ல ... எங்கயாவது கோவில்ல வச்சு பாத்துட்ரா ... அதனால நோ கேசரி நோ பஜ்ஜி ... ஒன்லி கடை ஸ்வீட்ஸ்... இது என்னோட சொந்த அனுபவம்.... :(
ReplyDelete:))..அடுத்து பதிவுக்கு வெயிட்டிங் ;)
ReplyDeleteஎங்கயாவது கோவில்ல வச்சு பாத்துட்ரா ... அதனால நோ கேசரி நோ பஜ்ஜி ... ஒன்லி கடை ஸ்வீட்ஸ்... இது என்னோட சொந்த அனுபவம்.... :(//
ReplyDeleteபாலாஜி அங்கிள், போனால் போகுது, பெண்ணைப்பிடிச்சதா இல்லையா?? அதைச் சொல்லுங்க முதல்லே.
கோபி,கோபீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ நிஜம்மா நீங்களா?? ஆச்சரியம்போங்க, பஸ்ஸிட்டுத் தான் இருக்கீங்கனு நினைச்சேன். :)
ReplyDeleteவரவுக்கும் வெயிட்டறதுக்கும் நன்னிங்கோ.
இது மாதிரி பதிவு போடறேன்னு சொல்லக் கூடாதோ!
ReplyDeleteமிஸ் பண்ணி இருப்பேன்.:(
பூர்வ ஜன்ம பந்தமா. அப்போ சரி.
அவர் பாடு ஜாலி. இந்த மாதிரி துணவி கிடைக்க நிறைய புண்ணியம் செய்திருக்கிறார்.ஸ்ரீ சாம்பசிவம். நல்லா இருக்குமா. அடுத்த பதிவைப் பார்க்கிறேன்.
\\ கீதா சாம்பசிவம் said...
ReplyDeleteகோபி,கோபீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ நிஜம்மா நீங்களா?? ஆச்சரியம்போங்க, பஸ்ஸிட்டுத் தான் இருக்கீங்கனு நினைச்சேன். :)\\
தலைவியின் பதிவை படிக்கமால் இருக்க முடியுமா!!! ? ;)))
அதெல்லாம் சரியாக படிச்சிக்கிட்டும் பார்த்துக்கிட்டும் தான் இருக்கேன் தலைவி ;)
வாங்க வல்லி, திடீர்னு தோணித்து. எழுதினேன். சொல்லணும்னு தோணலை. பொதுவா நான் பதிவு போட்டுட்டு யாருக்கும் சொல்றதில்லை. பார்த்துட்டு அவங்களா வந்தால் சரினு இருந்துடுவேன். எனக்கும் மத்தவங்க பதிவுக்கு எங்கே போக முடியுது? :( சனி, ஞாயிறுனு வச்சுண்டிருக்கேன். படிக்கவே சரியாயிடும்.
ReplyDeleteநன்றி கோபி:)))))
ReplyDelete//என் அப்பாவிடம் இந்த வரன் தான் முடியும். இவங்க போன ஜன்மத்துத் தம்பதிகள், இந்தப் பிறவியிலும் சேரப் போறாங்கனு சொல்லி இருக்கார்//
ReplyDeleteநல்ல பதிவு கீதாம்மா
யாருக்கு மாப்பிளை யாரோ! அவர் எங்கே பிறந்து இருக்கின்றாரோ!
ஹ ஹ ஆ ஹ என்ற ஹம்மிங்க்வோடு வரும் பாடல் தான் உடனே நினைவுக்கு வந்தது
உங்களை போன்று ஒரு மதராசி சாரி மாதரசி கிடைக்க
சிவம்ப்பா போன ஜன்மத்தில் புண்ணியம் செய்து இருக்க வேண்டும் கீதாம்மா :)
தொடர வாழ்த்துக்கள் ..................
ReplyDeleteஎன்ன புடவை ந்யாபகம் இருக்கா? பாடினேளா??
ReplyDeleteஇரண்டாவது கேள்விக்கு என்ன பதில் கீதாம்மா ? !
வாங்க ப்ரியா, இப்போத் தான் நினைச்சேன், காணோமேனு, நூறு வயசு. நானும் கிட்டத்தட்ட இப்படித் தான் எல்கே கிட்டே ஒருத்தன்பெண்டாட்டியை இன்னொருத்தன் கட்ட முடியாதுனு சொன்னேன். அதிர்ஷ்டமோ இல்லையோ, தெரியாது, பல எதிர்ப்புகள். இத்தனைக்கும் இது ஏற்பாடு செய்யப் பட்ட கல்யாணம். :))))
ReplyDeleteமெஜந்தா கலர் புடைவை, சித்தியோடது. பாட்டுப்பாடி இருந்தேன்ன்னா ஒருவேளை வேண்டாம்னு சொல்லி இருப்பார். :))))))))))
ReplyDelete//பாட்டுப்பாடி இருந்தேன்ன்னா ஒருவேளை வேண்டாம்னு சொல்லி இருப்பார். :))))))))))//
ReplyDeleteNarrow trap....:)))))
ம்ம்ம்ம்... சுவாரசியமா ஆரம்பித்து இருக்கு.... மற்ற பகுதிகளையும் படிக்கிறேன்...
ReplyDelete