எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, March 18, 2011

ராமனுக்கு எத்தனை மனைவிகள்???


அயோத்யா காண்டத்தில் ஸ்ரீராமருக்குப் பல மனைவிகள் இருப்பதாய் ஒரு குறிப்புச் சொல்லுவதாய்ச் சிலர் எனக்குத் தனி மடல் போட்டுக் கேட்டிருக்கின்றனர். நானும் சிலர் சொல்லுவதையும், எழுதுவதையும் பார்த்தேன். அப்படி எல்லாம் வால்மீகி எங்கேயும் கூறவே இல்லை. அப்படிப் பல மனைவியர் ராமருக்கு இருந்தால் அவர்கள் பற்றிய குறிப்பு அயோத்யா காண்டத்தில் மட்டும் ஒரே ஒரு இடத்தில் ஏன் இருக்கவேண்டும்?? அதுக்கப்புறம் ராமர் காட்டுக்குப் போனபோது அவங்கல்லாம் என்ன செய்தார்களாம்??

அயோத்தியிலேயே இருந்தாங்களா? அப்படி இருந்திருந்தால் அது குறித்த குறிப்புகள் ஏன் இல்லை?? அதன் பின்னரும் ராமர் காட்டு வாசம் முடிந்து ராவண வதமும் நடந்து முடிந்து சீதையுடன் நாட்டுக்குத் திரும்பித் தன் தம்பிமார்களையும், தாய்மார்களையும், குருமார்களையும் நாட்டுமக்களையும் தான் பார்க்கிறார். அப்படி இருக்கும் பல மனைவியர் பற்றி எதுவுமேவா கேட்காமல் இருந்திருக்கிறார். ஆச்சரியமா இல்லை?? தங்களைக் குறித்து எதுவுமே விசாரிக்காத கணவனை அந்தப் பெண்கள் எல்லாருமே சும்மா விட்டுவிட்டார்களா?? ஒருத்தர் கூடவா இதைக் குறித்துக் கேட்கவில்லை? சரி அதுவும் போகட்டும்.

நாட்டுக்குத் திரும்பிப் பட்டாபிஷேஹமும் முடிந்து சீதையுடன் தானே ஸ்ரீராமர் சந்தோஷமாய் வாழ்கிறார். அப்போவும் அந்தப் பெண்கள் கணவனை சீதைக்கு மட்டுமே என விட்டுக் கொடுத்துவிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தார்களா?? அதன் பின்னர் தான் சீதை கர்ப்பவதியாகிக் காட்டுக்கும் அனுப்பப் பட்டாளே! ஒருத்தி கூட அதைக் கொண்டாடினதாய்த் தெரியவில்லையே?? அப்படிப் பல மனைவியர் இருந்திருந்தால் யாரானும் ஒருத்தியாவது சீதை தான் இப்போ இல்லை, இனி நமக்குத் தான் கணவனிடம் உரிமை என்று உரிமை எடுத்துக்கொண்டு கவனித்துக்கொண்டாளா?? அதை எங்கானும், வால்மீகியோ மற்றவர்களோ சொல்லி இருக்கிறார்களா?? கம்பர் பட்டாபிஷேஹத்தோடு நிறுத்திக்கொண்டார். அதன் பின்னர் நடந்தவைகளுக்கு அவர் போகவே இல்லை.

இப்படி ஒரு கேள்வி-பதில் விவாதங்கள் நடக்கின்றன. பலருக்கும் இதில் சந்தேகம். நெருப்பில்லாமல் புகையுமா?? என்ற கேள்வி. வெறும் புகையாகவே இருக்கும் பல சமயமும். நன்றாய் எரிவதில்லை. இங்கேயும் அப்படித்தான் சொல்லப் பட்டிருக்கிறது. அதுவும் யார் சொன்னதாய் வந்திருக்கிறது தெரியுமா?? மந்தரை சொல்வதாய் வருகிறது. இதோ வால்மீகி ராமாயணத்தின் ஆங்கில உரையைப் பார்ப்போம்.

hR^ishhTaaH khalu bhavishhyanti raamasya paramaaH striyaH |
aprahR^ishhTaa bhavishhyanti snushhaaste bharatakshaye || 2-8-12


Rama's wives will get delighted. Your daughters-in-law will be unhappy because of Bharata's waning position."

With folded arms, as a maid-servant, you have to serve that Kausalya who having reached great prosperity, in the height of joy, will dispose of her adversaries (in the person of Bharata and yourself). Thus, if you become Kausalya's servant-maid along with us, your son Bharata will be Rama's attendant. Rama's wives will get delighted. Your daughters-in-law will be unhappy because of Bharata's waning position."

Comment: The words 'Rama's wives' here do not indicate that Rama had multiple wives. Manathara refers to a possible future where Rama being a King would marry other women. It was a norm then for a king to have more than one wife.


எட்டாவது சர்கத்தின் பனிரண்டாவது ஸ்லோகம்.

மேலே கண்ட வரிகள் வால்மீகியின் ராமாயணத்தில் உள்ளன. கம்பரில் அதுவும் இல்லை. ராமன் பட்டத்துக்கு வந்தால் கைகேயி கோசலையிடமும், அவள் தாதிப் பெண்களிடமும் தானும் ஒரு தாதியாக மாறிவிடுவாள் எனவும், தன்னையும் அந்நிலைமைக்கு ஆளாக்கவேண்டாம் எனவும் சொல்கிறாள்.

வேதனைக்கூனி, பின் வெகுண்டு நோக்கியே,
:பேதை நீ பித்தி: நிற்-பிறந்த சேயொடும்
நீ துயர் படுக; நான் நெடிது உன் மாற்றவள்
தாதியர்க்கு ஆட்செயத் தரிக்கிலேன்: என்றாள்


மந்தரையான கூனி கைகேயியின் மனதை மாற்றப் பேசும்போது மேற்கண்ட வார்த்தைகளைப் பேசுவதாய் வருகிறது. கூடவே அதிலேயே பின் குறிப்பும் கொடுத்துள்ளது. ராமனின் மனைவிகள் என்று சொல்லி இருப்பதால் ராமனுக்குப் பல மனைவியர் என்ற பொருளில் இங்கே சொல்லப் படவில்லை என்பது. ஆனாலும் நாமோ நமக்கு என்ன வசதியோ அதைத் தானே எடுத்துக்குவோம். ஆகவே வால்மீகியே சொல்லிட்டார். ராமன் ஒரு மனைவி மட்டும் உள்ளவன் அல்ல. பல மனைவியர் உள்ளவன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

அந்தக் காலங்களில் அரசர்கள் யுத்தங்களில் அடிக்கடி கலந்து கொள்வதுண்டு. அப்படிக் கலந்து கொள்ளும் அரசன் உயிருடனும் வரலாம். உயிரற்ற உடலாகவும் வரலாம். தக்க வயது வருவதற்குள்ளாக ஒரு அரசன் இறந்தால் அவனுக்குப் பின்னர் பட்டம் ஏற ஒரு வாரிசு வேண்டுமே. பொதுவாய் இருந்த அந்தக் காலத்து வழக்கப்படி பட்டத்து அரசியின் மூத்த மகனுக்கே அடுத்த பட்டம் போய்ச் சேருவது வழக்கம். ஒரு சில இடங்களில் இரண்டாம்,மூன்றாம் மனைவியரின் மகன்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் தான். பொதுவான வழக்கம் பட்டத்தரசியின் மகன். ஆனால் அந்தப் பட்டத்தரசிக்குக் குழந்தைகளே பிறக்காவிட்டாலோ அல்லது பிறந்தது எல்லாமே பெண்களாய் இருந்தாலோ அடுத்த அரசியின் மூத்த மகனைப் பட்டத்து இளவரசனாக முடி சூட்டுவது உண்டு. மேலும் பட்டத்து ராணிக்குக் குழந்தைகள் பிறக்கும் என்பது எவ்வளவு நிச்சயமில்லையோ அவ்வளவு ஆண்குழந்தை பிறப்பும். ஆகவே மன்னர்கள் தங்களுக்கு அரச குடும்பத்து வாரிசு வேண்டுமென்பதற்காகவும், பல்வேறு அரசியல் காரணங்களுக்காகவும், ஒரு மனைவி மட்டும் கொள்ளாமல், இரண்டோ அல்லது மூன்றோ கொள்ளலாம். ஒரு சிலர் ஒரே மனைவியோடும் நிறுத்திக்கொள்வது உண்டு. இங்கே ஸ்ரீராமரை அவ்விதம் ராமனின் மனைவியர் என மந்தரை கூறி இருப்பதன் காரணமே, பட்டத்து இளவரசனாய் முடிசூடப் போகும் ஸ்ரீராமனுக்கு அது வரையிலும் குழந்தைகள் பிறக்கவில்லை. ஆகவே பட்டத்துக்கு முடி சூட்டியதும் அடுத்த வாரிசுக்குத் தயாராகவேண்டும். இதன் காரணமாய் ஒருவேளை எதிர்காலத்தில் ராமன் இரண்டு அல்லது மூன்று பெண்களை மணக்க நேரிடலாம் என்பதால் மந்தரை நடக்கப்போகும் ஒன்றைக் கற்பனை செய்து கூறி இருக்கிறாள். உண்மையில் ராமனுக்கு ஒரே மனைவி மட்டும் தான். பல மனைவியர் இருந்திருந்தால் அது குறித்த குறிப்புகள் பல இடங்களிலும் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அப்படி எங்கும் சொல்லப் படவில்லை. ஆகவே இந்த சந்தேகம் அர்த்தமற்ற ஒன்றாகும்.

20 comments:

  1. நல்ல விளக்கம் மாமி. எதிர் பார்த்துக் கொண்டிருந்த ராமாயணம் சீரியஸ் ஆரம்பிச்சாச்சு

    ReplyDelete
  2. //இங்கே ஸ்ரீராமரை அவ்விதம் ராமனின் மனைவியர் என மந்தரை கூறி இருப்பதன் காரணமே, பட்டத்து இளவரசனாய் முடிசூடப் போகும் ஸ்ரீராமனுக்கு அது வரையிலும் குழந்தைகள் பிறக்கவில்லை. ஆகவே பட்டத்துக்கு முடி சூட்டியதும் அடுத்த வாரிசுக்குத் தயாராகவேண்டும். இதன் காரணமாய் ஒருவேளை எதிர்காலத்தில் ராமன் இரண்டு அல்லது மூன்று பெண்களை மணக்க நேரிடலாம் என்பதால் மந்தரை நடக்கப்போகும் ஒன்றைக் கற்பனை செய்து கூறி இருக்கிறாள். உண்மையில் ராமனுக்கு ஒரே மனைவி மட்டும் தான்.//

    மிக அருமையான விளக்கம்

    ராமர் எத்தனை ராமனடி என்று தான் கேள்வி பட்டு இருக்கிறோம்

    ராமருக்கு எத்தனை மனைவியை என்றா கேள்வி படுகிறோம் :)

    பதிவுக்கு நன்றி கீதாம்மா

    ReplyDelete
  3. //பலருக்கும் இதில் சந்தேகம். நெருப்பில்லாமல் புகையுமா?? என்ற கேள்வி. வெறும் புகையாகவே இருக்கும் பல சமயமும். நன்றாய் எரிவதில்லை.//

    ஊட்டி மலைப்பாதையில் செல்லும் போது பார்த்தா ஒரே புகையாக இருக்கும் அருகில் பார்க்கும் போது தான்

    அது பனி புகை என்று தெரியும்

    ஆகவே நெருப்பிலாமலும் புகை வரும் என்ற என்னுடைய வாதத்தை இங்கே பதிவு செய்கிறேன் !

    ReplyDelete
  4. அப்புறம் ஸ்ரீராமர் மட்டும் தான்

    ஏக பத்தினி விரதன் என்று அழைக்க படுகிறார்

    அப்படி தானே கீதாம்மா

    ReplyDelete
  5. பார்க்கலாம் எல்கே, இன்னிக்கு வெள்ளிக்கிழமை என்பதலும், அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதாலும் பெரும்பாலானவர்கள் திங்களன்றே கவனிக்கலாம். மேலும் நானும் சந்தேக விளக்கமாய்த் தான் எழுதி இருக்கிறேன்.

    ReplyDelete
  6. நன்றி ப்ரியா. உங்கள் வாதத்தைப் பதிவு செய்ததுக்கு மீண்டும் நன்றி. ஆம் ஸ்ரீராமன் மட்டுமே ஏகபத்தினி விரதன்.

    ReplyDelete
  7. தமிழில் - ஒரு இல்; ஒரு வில்; ஒரு சொல்

    இந்தியில் - ஏக் பாணி; ஏக் பத்னி; ஏக் வசனி

    சௌராஷ்ட்ராத்தில் - யோக் பாணி; யோக் பத்னி; யோக் வசனி

    என்று எல்லா இடத்திலும், எல்லா மொழியிலும் ஒன்று தானே சொல்கிறார்கள்!

    ஏனோ தெரியவில்லை பகவான் இராமரை நோக்கி எப்போதும் ஒரு சந்தேக பார்வை இருக்கிறதே என்று வருத்தமாக உள்ளது!

    நிலவை(இராமசந்திரனை) பற்றி யார் என்ன சொன்னாலும் அதன் மதிப்பு குறையாது!

    ReplyDelete
  8. பங்குனி உத்திரத்துக்கு கல்யாண கோலங்கள் போடுவேளாக்கும்னு பாத்தேன் .எலெக்ஷன் வந்தலும் வந்தது ஜாலி ஜிம்குல்ல ஒரே சீட், வாரியம், எஸ்டேட்டா முழங்கறது!!:)))) நம்ப மன்னார் மன்னா(ரி)ம்மா கல்யாணத்தை போடுங்கப்பா!ஜெயரங்கத்தை விட்டுட்டு:)))

    ReplyDelete
  9. நான் படித்த வரையிலும் ராமனுக்கு ஒரு மனைவி தான். சீதை அனுமனிடம் பேசும் பொழுது, ராமன் சொன்னதாக தனக்கு மட்டுமே தெரிந்திருக்கக் கூடிய விஷயங்களில் ஒன்று 'இந்தப் பிறவியில் உன்னோடு மட்டும் தான் வாழ்வேன்' என்பது (along those lines.. அசல் வரி மறந்துவிட்டது:)

    மந்தரை கூறியதற்கு இன்னொரு காரணம் - 'அப்பனைப் போல் பிள்ளை' என்று அவள் சொல்வதும் தான். தசரதனுக்கு நிறைய பெண்டாட்டிகள் (அந்தக் கணக்கு கூட ராமாயணத்தில் காணோம். பத்தாயிரம் எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை).

    ReplyDelete
  10. Sensational blog heading !

    Could have put it gently. As it is, some Ram bhaktas may feel hurt.

    ReplyDelete
  11. இப்படிக்கூட யோசிக்கலாமே!!ஆத்மாங்கறது ஒரு energy. அதுக்கு உருவம் கிடையாது . ராமாயணத்துல ராமன் பரமாத்மாவா உருவகிச்சுக்கிறோம். சீதை ஆத்மனின் உருவம் .ஹனுமன் மனஸு. ராமனோட குணாதிசயங்கள் - தர்மம், ம்ருது பாஷணை, கருணை தயை நெறிதவறாமை சாந்தம் . அவைகளுக்கும் உருவம் என்னமோ கிடையல!இவை எல்லாமே ராமனின் கல்யாண குணங்கள். இந்த குணங்கள் ஒவ்வொன்றுமே பெண்மையின் attribute தானே!! சக்தியான இந்த உயர்ந்த குணங்களை தன் உடமையாகக் கொண்டவனென்றால் இந்த கல்யாண குணங்கள் எல்லாமே மரியாதா புருஷோத்தமனின் மனைவிகளே!!
    யா தேவி சர்வ பூதேஷு தயா ரூபேண ஸ்ம்ஸ்திதா, சக்தி ரூபேண சம்ஸ்திதா, தயா ரூபேண ஸ்ம்ஸ்திதா தானே!!
    மந்திரைதான் பொல்லாங்கு சொல்லறான்னா, தன் புத்தியையும் தன் மனசாக்ஷியையும் கைகயி உபயோகிச்சிருந்தா இந்த ப்ரச்சனையே இருந்திருக்காதே!!:))) கொஞ்சம் வித்யாசமா தோனித்து !!

    ReplyDelete
  12. கமென்ட் எழுதுகிறவர்களின் பெயர் தெரிவதில்லையே, ஏன்?
    ராமன்-பரமாத்மா பற்றிய கருத்து வித்தியாசமானது. ரசித்தேன். அப்ப பல பெண்டாட்டிகள் இருந்து நிரூபணமானால் சமாளிக்க இப்பவே இப்படி ஒரு position எடுத்து வச்சுறலாம்னு சொல்லுங்க :)

    ReplyDelete
  13. வாங்க சிவமுருகன், பார்த்தே பல வருடங்களாகிவிட்டன. எப்படி இருக்கீங்க?? ராமரைத் தான் சந்தேகமாய்ப் பார்க்க முடியும். ஏனெனில் மத்தவங்க அனைவருக்கும் உள்ள பலவீனம் அவரிடம் இல்லை அல்லவா?? அதனாலேயே ஆச்சரியமாய் இருக்கும் எல்லாருக்கும், இவரால் எப்படி முடிந்தது என! நடத்தித் தானே காட்டினார். எல்லாவற்றுக்கும் மேல் உயிரினும் இனிய இளையவன் லக்ஷ்மணனையும் பிரிய நேர்ந்ததே அவருக்கு. அதையும் தாம் கொடுத்த வாக்கிற்காகவே நிறைவேற்றினார்.

    ReplyDelete
  14. ஜெயஸ்ரீ, பங்குனி உத்திரத்துக்குனு பதிவு போடமுடியலை. வேறே தளங்களுக்கு எழுதவேண்டியது, முடிச்சுக் கொடுக்க வேண்டியதுனு இருந்தது. :( இன்னுமொரு தளத்தின் தன்னார்வ வேலைனு சரியாப் போயிடுது. இங்கே இன்னும் தேர்தல் களை கட்டவில்லை. நீங்க மன்னார்னு சொன்னதும் நினைவிலே வருது. மன்னார்குடி ராஜகோபால சுவாமியும், வடுவூர் ராமரையும் தரிசித்தோம் பெப்ரவரி மாதம். அதைக் குறித்து எழுதணும், எழுதறேன். நன்றி.

    ReplyDelete
  15. அப்பாதுரை, வால்மீகி கண்ணெதிரே பார்த்ததைக் கேட்டதைத் தான் எழுதி இருக்கார். என்றாலும் குற்றம் கண்டு பிடிக்கும் மனம் எல்லாவற்றிலும் எதிலும் குற்றமே கண்டு பிடிக்கும். இன்னொருவர் நல்லவர், உயர்ந்தவர் என்பதை லேசில் ஒப்புக்கொள்ளாது.

    தசரதனுக்கு நிறைய மனைவிகள் என்பதும் தவறு. இதைக் குறித்து எழுதிய பதிவின் சுட்டியைத் தரேன் மத்தியானமா. அறுபதினாயிரம் பெண்கள் அந்தப்புரத்தில் இருந்ததாகத் தான் வால்மீகி கூறி இருக்கிறார். அறுபதினாயிரம் பேரை எப்படி ஒருவன் மனைவியாகக் கொள்ள முடியும்? யோசிக்கவேண்டாமா??

    அவர் முன்னோர்கள் வழி வந்த பெண்கள், அவர்கள் பிறந்த வீடுகளில் இருந்து அழைத்து வந்த பெண்கள், ஏற்கெனவே அந்தப்புரத்தில் பணி புரியும் பெண்கள், மூன்று மனைவியரின் தோழிப் பெண்கள் என்று தான் அறுபதினாயிரம் பேர் இருந்திருக்கலாம். அதை விடுத்து அறுபதினாயிரம் மனைவியர் என்பது தவறான கண்ணோட்டம்.

    ReplyDelete
  16. வாருங்கள் ஜோ, அப்படி ஒண்ணும் யாரும் தப்பா எடுத்துக்கலை. எல்லாருக்குமே என்னைக் குறித்துத் தெரியும் தானே! இருந்தாலும் உங்கள் கரிசனத்திற்கு என் நன்றி. :)))))

    ReplyDelete
  17. இது நண்பர் ஒருவர் தனி மடலில் கேட்டிருந்த சந்தேகம், அவருக்கும் இன்னொருவருக்கும் நடக்கும் விவாதத்தைக் குறித்துச் சொல்லி இருந்தார். அவரின் சந்தேகத்தைத் தீர்க்கவே போட்டேன். நன்றி.

    ReplyDelete
  18. ஆமாம், ஜெயஸ்ரீ, பரமசாரியாரும் நீங்க சொல்வது போலத் தான் சொல்லுவார். ராமாயணத்தின் தத்துவமே அதுதான் எனவும் வேதங்களின் சாரமே ராமாயணம் எனவும் கூறுவார். மேலும் மஹாபாரதத்தில் திரெளபதிக்கு ஐந்து கணவர்கள் என்பதற்கும் தத்துவார்த்தமான விளக்கம் கூறுவார். ஐந்து பூதங்கள், ஐந்து கணவர்கள், அதை அடக்கி ஆளும் சக்தி திரெளபதி என்றொரு கூற்று. பஞ்சேந்திரியங்கள் பாண்டவர்கள், ஆன்மா திரெளபதி, பஞ்சேந்திரியங்களையும் அடக்கி ஆன்மா எவ்வாறு பரமாத்மாவிடம் அடங்குகிறது என்பது இன்னொரு கூற்று. இருவிதமாயும் பார்த்திருக்கின்றானர்.

    ReplyDelete
  19. அப்பாதுரை, comment box வைக்காமல் முழுப்பக்கமாய் வைத்திருக்கிறேன். நீங்க முழுப்பக்கம் வரும்படி உங்க ப்ரவுசரில் முயலுங்கள், எல்லாருடைய பெயரும் தெரியும். எனக்குத் தெரிகிறது. ஆனால் உங்களைப் போல் இன்னும் சிலரும் கேட்கின்றனர். என்ன செய்யணும்னு எனக்குப் புரியலை, பார்க்கிறேன், நன்றி.

    ReplyDelete