பேர் சொல்ல ஒரு பிள்ளை என்று தான் சொல்லுவாங்க. பேர் சொல்ல ஒரு பெண் என்று சொன்னது இல்லை. அது ஏன்???? பொதுவாப் பிள்ளை வயிற்றிலே பிறக்கும் பிள்ளைகளே வாரிசு என்றாகிறது. எங்க அம்மாவுக்கு 47 ஆகஸ்டில் கல்யாணம். கல்யாணம் ஆகையில் அம்மாவுக்கு அப்போப் பதினைந்து வயசிருக்கும். ஏற்கெனவே அம்மா எட்டாவது, அந்தக் காலத்தில் ஈ எஸ் எல் சி என்னும் படிப்பும், ஹிந்தியில் விஷாரத் என்னும் படிப்பும் முடிச்சுட்டு ஆசிரியப்பயிற்சிக்குப் போகணும்னு சொல்லிட்டு இருக்கையில் அப்பா அப்போவே பெண் கேட்டுப்போயிருக்கார். பொதுவாய் பெண் கேட்டுப் பிள்ளை வீட்டில் போற வழக்கம் இல்லை. ஆனாலும், தாத்தாவும் பெரியப்பாவும் நண்பர்கள், பக்கத்துத் தெரு, இரண்டு பேரும் ஒண்ணாய் வக்கீல் தொழில் செய்து கொண்டிருந்தார்கள். ஆகையால் திருமணத்துக்கு முன்னாடியே அப்பா அம்மாவைப் பார்த்திருக்கிறார். ஆனால் வெள்ளையனே வெளியேறு இயக்கம் அப்போ மும்முரமா இருந்திருக்கு அதனால் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் திருமணம் கிட்டத்தட்ட நிச்சயம் பண்ணி இருந்து, அப்பா சுதந்திரம் கிடைச்சதும் தான் கல்யாணம்னு சொன்னதாலே இரண்டு வருஷங்கள் தள்ளிப் போயிருந்தது. சுதந்திரம் கிடைச்சு ஒரு வாரத்திலோ என்னமோ தெரியலை, கல்யாணம். உடனே ஒரு வருஷத்துக்குள்ளே அண்ணா பிறந்தாச்ச்ச். அண்ணா அப்பா வழியிலே முதல் பேரன் இல்லை. ஆனால் அம்மா குடும்பத்திலே அம்மாவுக்கும், அவங்க அக்காவுக்கும் ஒரே நாள், ஒரே முஹூர்த்தத்தில் கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க. பெரியப்பாவுக்கும், பெரியம்மாவுக்கும் பிறந்த முதல் குழந்தை தங்கலை. அதுக்கப்புறமாய்ப் பிறந்த என்னோட அண்ணாவே வீட்டுக்கு முதல் குழந்தையாய் இருந்திருந்தார். அதுக்கப்புறமாய்ப் பெரியம்மாவுக்கு ஒரு பையரும், உடனேயே ஒரு பெண்ணும் பிறந்தாச்ச்ச்ச்ச் அம்மா என்னை அப்போத் தான் வயித்திலே உண்டாகி இருக்காங்க.
அம்மா வீட்டில் அம்மாவையும் சேர்த்து ஐந்து பெண்கள். ஆகையால் சிறப்புக் கவனம் எல்லாம் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. அப்பா வழியிலே பெண்களே குறைவு. பிறந்தாலும் ஒரே பெண் குழந்தைதான் பிறக்கும். ஆகவே பெண் குழந்தையை அப்பா ஆவலோடு எதிர்பார்த்திருக்கலாமோ என்னமோ! அந்தச் சமயம் என்னோட அம்மாவின் இரு பாட்டிமார்கள், தாய் வழித் தாத்தா போன்றோரும் என் தாத்தாவும் இருந்திருக்கின்றனர். எனக்கு நினைவு தெரிந்து இவர்களைப் பார்த்து விளையாடியது எல்லாம் நினைவில் இருக்கிறாது. என்னோட பெரியப்பா (எல்லாருக்கும் மூத்தவர்) தினமும் ராமாயணம் பாராயணம் செய்வார். அப்பாவும் அப்போத்தான் சுந்தரகாண்டப் பாராயணம் ஆரம்பித்திருக்கிறார். அந்தப் பாராயணம் முடியும் நாள் நான் பிறந்திருக்கிறேன் என்று செய்தி வந்திருக்கு. அதோட எங்க தாத்தா எப்போதும் ராம ஜபம் செய்வாராம். தாத்தாவின் மனைவி என்னோட தந்தைவழிப் பாட்டி பெயர் சீதா லக்ஷ்மி. எல்லாப் பேத்திகளுக்கும் அந்தப்பெயர் தான். இன்னமும் இது தொடர்கிறது. ஆகவே வீட்டிலே தடுக்கி விழுந்தா ஒரு சீதாலக்ஷ்மி மேலே தான் விழணும்.
பெரியப்பாவின் பெண்கள் உட்பட எல்லாருக்கும் ஏற்கெனவே சீதாலக்ஷ்மினு தான் பெயர் வைச்சிருக்காங்க. இந்தச் சமயம் நம்ம அவதாரம் ஏற்பட்டிருக்கு. என்னோட அம்மாவின் அம்மா, என் தாய்வழிப்பாட்டி என்னைப் பிறந்ததும் பார்த்துட்டுக் குழந்தை ரொம்பக் கறுப்பாய் இருக்கும், நோஞ்சானாய் இருக்கும்னு சொன்னாங்களாம். அம்மாவுக்குப் பெண்ணாய்ப் பிறந்து கறுப்பாயிருக்கேனு ரொம்ப வருத்தம்,. அழுதிருக்காங்க. ஆனால் என்னோட தாத்தாவும், அப்பாவும் கட்டாயம் குழந்தை நல்லா நிறமா இருப்பானு சொல்வாங்களாம். தாத்தா சீதாலக்ஷ்மினு பெயர் வைக்கணும்னு சொல்லி இருக்கார். பொதுவா எங்க பக்கத்திலே மூணு பெயர் வைக்கிறது உண்டு. தாய்வழிப் பெயர், தந்தை வழிப் பெயர், கூப்பிடற பெயர்னு. ஆனால் எனக்கு சீதாலக்ஷ்மினு ஏக மனசாத் தீர்மானம் போட்டு நிறைவேத்தியாச்ச்ச்ச்ச்./ ஆனால் எப்போலே இருந்து கீதானு கூப்பிட ஆரம்பிச்சாங்கனு தெரியலை. ஏனென்றால் எனக்கு நினைவு தெரிஞ்சு என்னை எங்க தாத்தாக்களும் சரி, அம்மாவின் அம்மா, அம்மாவின் பாட்டி, தாத்தா எல்லாரும் சீதுக்குட்டினோ, கட்டிக் கட்டி சீதா, தங்கக் கட்டி சீதானு கொஞ்சியோ தான் பார்த்திருக்கேன், கேட்டிருக்கேன்.
பள்ளிக்குச் சேர்ந்தப்போ கூட ஒண்ணாங்கிளாசிலே/இரண்டாவதிலே????? ஒருதரம் பள்ளியிலே கீதானு பெயர் கொடுத்திருக்கிறது பத்திச் சரியாப் புரியாமல்/ தெரியாமல் பரிக்ஷை பேப்பரில் சீதானு எழுதிக் கொடுத்திருக்கேன்னு சொல்வாங்க. அதுக்கப்புறம் கை எழுத்தை வைச்சுக் கண்டு பிடிச்சு வாத்தியார் கிட்டேச் சொன்னோம்னு சொல்வாங்க. ஆகவே வல்லி சிம்ஹன் சொல்றாப் போல் சுவையான செய்திகள் எதுவும் என் பெயர் சூட்டு விழாவில் கிடையாது. ஆனால் நான் ஆறாம் வகுப்புக்கு வந்தப்போ தான் ஒரு சுவையான சம்பவம். ஆறாம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு உண்டு. அப்போதே கிட்டத்தட்ட இருநூறு பெண்கள் எழுதினோம். இரண்டே பிரிவு கொண்ட வகுப்பில் ஒரு வகுப்புக்கு 25ல் இருந்து முப்பதுக்கு மேல் எடுக்க மாட்டாங்க. ரொம்பக் கண்டிப்பா இடம் இல்லைனு சொல்லிடுவாங்க. அந்த நுழைவுத் தேர்விலே என்னோட பெயர் இருக்கிறதைப் பார்த்துட்டு அம்மா நுழைவுக்கான பணம் கட்டப் போனால் கீதாவா?? பணம் கட்டியாச்சேனு பதில் வருது. அம்மாவுக்கானா ஆச்சரியம். நான் அப்போப் பள்ளிக்குப் போகலை.
வீட்டிலே வந்து அம்மா விஷயத்தைச் சொல்லிட்டு என்னையும் அழைத்துக்கொண்டு மறுபடி பள்ளிக்குப் போனாங்க. இந்தப் பெண்ணா பாருங்கனு சொல்ல, பணம் கட்டுமிடத்தில் உள்ள பெண்மணி, அப்பாவோட வேலை என்னனு கேட்க, என் அப்பா சேதுபதி பள்ளி ஆசிரியர் என்று சொல்ல அவங்க செக் பண்ணிட்டு இல்லை, இதிலே உள்ள பெண்ணின் அப்பா பெயர் ராமகிருஷ்ணன், அவர் பள்ளி ஆசிரியர் இல்லைனு சொல்ல, அம்மா எங்க வீட்டுக்காரர் பெயரும் ராமகிருஷ்ணன் தான்னு சொல்ல ஒரே குழப்பம். அப்பாவோட இனிஷியலைக் கேட்க என். என்று அம்மா சொல்ல, அந்த கீதாவின் அப்பாவுக்கோ என்.ஆர். என்று இனிஷியல். அவங்க வீடு பக்கத்திலேயே இருந்தது. விசாரித்ததில் அவங்க அம்மா பிரபலமான பெண் மருத்துவர் கமலா என்பதும் புரிய வந்தது. உடனேயே அம்மா தேர்வு லிஸ்டில் இருக்கிறது ஒரே ஆர். கீதா தான். எங்க பொண்ணோட ரிசல்ட் என்ன ஆச்சுனு கேட்க, நல்லவேளையாப் பரிக்ஷை எழுதின பேப்பர்களை அவங்க வைச்சிருந்தாங்க.
ஒரு ஆசிரியரை அனுப்பி என்னையும் உடன் போகச் சொல்லி நான் எழுதின பேப்பரைத் தேடி எடுக்கச் சொல்ல, நானும் தேடினேன். தேடினதில் கண்டது மேலும் இரண்டு கீதா. இரண்டும் எஸ்.கீதா. கடவுளே என்று வேண்டிக்கொண்டு என்னோடதைத் தேட என் பேப்பர்கள் கிடைத்தன. இன்னொரு ஆர். கீதாவை விடவும் அதிக மதிப்பெண்கள் வாங்கி இருந்தேன் நல்லவேளையா! இரண்டு எஸ்.கீதாக்களும் வேறே பாஸ் ஆகி இருக்க அவங்களையும் அழைத்துக் கேட்டுக் குழப்பத்தைத் தீர்க்க என் பெயரிலே இனிஷியலில் என். ஆர். என்றும் இன்னொரு எஸ்.கீதாவுக்கு எம்.எஸ். என்றும் போட்டுப் பணம் கட்டச் சொல்லிப் பள்ளியில் சேர்ந்தேன்.
வல்லி சிம்ஹன் எழுதி இருக்காப்போல் மனதைத் தொடும் விஷயம் எல்லாம் எதுவும் இல்லை. கொஞ்சம் உப்புச் சப்பில்லாமல் இருக்கும். அவங்க கூப்பிட்டாங்க, இன்னிக்கு உடனே எழுதிடலாம்னு முடிவு பண்ணி எழுதிட்டேன்.
அட !! இப்பொ நீங்க ஹேமமாலினி!!!!! "சீதா ஔர் கீதா!!":)))
ReplyDeleteUr opening setences. It is due to partiarchical system in which the property descends to the male heirs. Female heirs are not entitlted.
ReplyDeleteA man, with big property, needs a male heir to bequeath all. If not, or only with daughters, all that he has earned will pass on to some stranger male, or close relation like annan or thambi magan.
It has been universal practice.
In Kerala, it is matilineal system in which the property desends to female heirs only. So, she is the head of the family. Hence, we call Thangkammma House etc.
However, today laws have slightly changed this, whereby if the man executes a will bequeathing the property to her daughter, it will descend to her.
Otherwise, even he dies w/o any will, the property will autmatically go to his son however bad he is.
However good the daughter is, she wont get anything.
This has been accepted by the Hindu society from time immemorial. Having been supporting such a society w/o examination, and having been supporting traditional social values without questioning,
u cant complain, can u?
Reason for the matrilineal system was due to the fact that nairs are (were) a warrior tribe; they were always be on battlfront or on the mission of war. The women needed to be at home taking care of property. So legal entitlment should be devolved upon them so that cases could be defended in courts by them or in their names.
ReplyDeleteI dont know why such a thing has not happened in your Tamil society, where also, we come across certain warrior tribes, but no matrlineal system of devolution of property.
What stopped you to imitate nairs ?
என்ன கீதா, திகில் சம்பவங்களா நடந்திருக்கு, சுவை இல்லைன்னு சொன்னா நம்பும்படி இல்லையே!!!!
ReplyDeleteஅப்பவே கீதா என்கிற பெயர் அவ்வளவு புகழ் பெற்று இருக்கு.
எனக்குத் தெரிந்து திண்டுக்கல்லில் என்னுடன் இரண்டு கீதாக்கள் படித்தனர். அதே மாதிரி உஷா என்கிற பேரும். எங்க அம்மா கிட்டச் சொல்லி வருத்தப் படுவேன் ''போம்மா ,இப்படிப் பெயர் வச்சீங்களே''ன்னு. ஒரு சீதா லக்ஷ்மியும் உண்டு.
திருமங்கலம் சின்ன ஊரு.அதில் பரிட்சை எழுதப் போனவர்கள் 30 பெண்கள் இருந்தால் அதிகம்.
அதனால் நுழைவுத்தாளில் பெயர் மாற்றம் செய்யப் பெரிய துன்பமோ சிரமமோ இல்லை.
இதுவே என் தந்தை என்னுடம் முதலிலேயே வந்திருந்தாலும் ஒன்றும் சொல்லி இருக்க மாட்டார். இப்ப அப்படி எல்லாம் நடக்குமா என்ன.;) உடனே எழுதினதற்கு மிகவும் நன்றி மா. ஒரு சரித்திரமே இருக்கிறது இந்தப் பதிவில்.
பரபரப்பா,திருப்பங்களுடன் இருந்தாதான் சுவார்சியமா இருக்குமாபதிவு. உங்க பெயர்க்காரணமும் இண்ட்ரெஸ்டிங்கா
ReplyDeleteதானே இருந்தது.
வாங்க ஜெயஸ்ரீ, ஹிஹி, ஹேமமாலினி நடிப்பு எனக்குப் பிடிக்காது, ஒரே ஒரு படத்தைத் தவிர, ம்ம்ம்ம்?? படம் பேரு மறந்து போச்சு, ஹரியானவி?? பஞ்சாபி?? ரெண்டிலே ஏதோ ஒண்ணு, குதிரை வண்டி ஓட்டும் அண்ணா திடீரென இறந்து போக, ரிஷிகபூர் தம்பி அண்ணி ஹேமமாலினிக்குச் சத்தர் போடுவார். ஆனால் அவர் காதலிச்சது நீலம் என்னும் கழைக்கூத்தாடி(?)ப் பெண்ணை. பெற்றோர்கள் கட்டாயத்தில் அண்ணியின் குடும்பப் பொறுப்பை ஏற்க நேரிடும். அந்த ஒரு படத்தில் மட்டும் அவர் நடிப்பு இயல்பாய் இருக்கும். நடிக்கலை, வாழ்ந்திருந்தார்னு சொல்லலாம். :))))))படம் பேர் மறந்து போச்ச்ச்ச்ச்ச்!
ReplyDeleteஜோ, உங்க பின்னூட்டத்தின் ஆரம்ப வார்த்தைகளை வன்மையாக மறுக்கிறேன், என்றாலும் இப்போ அது குறித்து எழுதப் போவதில்லை. இது வெறும் பொருளாதார ரீதியான சொத்து மட்டும் சார்ந்ததில்லை என்பதை மட்டும் சொல்லிக்கிறேன். வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteமருமக்கள் தாயம் குறித்து விரிவாக எம்.டி. வாசுதேவன் நாயரின் கதைகளில், முக்கியமாய் நாலு கெட்டு வீடு, படித்திருக்கிறேன். சின்ன வயசு தான் அதைப் படிக்கும்போது என்றாலும, புரிஞ்சுக்க முடிந்தது. நான் பள்ளியில் படிச்ச எகனாமிக்ஸ் என இன்றழைக்கப் படும் வணிக ரீதியான பொருளாதாரப் படிப்புக்கு அது மிகவும் உதவியது. நன்றி உங்கள் பின்னூட்டத்துக்கு.
ReplyDeleteவாங்க வல்லி, இந்த சீதாலக்ஷ்மி சம்பந்தமா நீங்க கேட்காமலேயே சில விவரங்களை அடுத்த பதிவிலே தரேன். இதிலேயே எழுதினால் ரொம்பப் பெரிசா இருக்கும்னு எழுதலை! :))))))
ReplyDeleteவாங்க லக்ஷ்மி, வரவுக்கு நன்றி. பாராட்டுக்கும் நன்றி. ரேவதிக்கு அவங்களா வைத்துக்கொண்ட பெயர் இன்று நிலைத்துவிட்டது. ஆனால் பாருங்க, என்னோட சொந்தப் பெயரை நானா வச்சுண்டும், ம்ஹும், பேரை எடுத்துட்டாங்கப்பா! :)))))))))
ReplyDeleteநான் உங்களை இந்த தொடர் பதிவுக்கு கூப்ட்டு பெயர் ரகசியம் தெரிஞ்சுக்கணும்னு நெனச்சுட்டு இருந்தேன்...வல்லிம்மா முந்திட்டாங்க..:))
ReplyDeleteஅழகான பெயர் மாமி சீதா/ கீதா ரெண்டுமே... எங்க க்ளாஸ்லயும் மூணு கீதா இருந்தாங்க... ரெம்ப பேமஸ் பேரு தான் போல...:))
//சீதுக்குட்டினோ, கட்டிக் கட்டி சீதா, தங்கக் கட்டி சீதானு கொஞ்சியோ தான் பார்த்திருக்கேன், கேட்டிருக்கேன்.//
ReplyDeleteரசித்த வரிகள் .
சூப்பர்ரா கொஞ்சி இருக்காங்க கீதாம்மா :)
சீதா,கீதா இரண்டுமே பெருமை வாய்ந்த பெயர்கள் தான்
ReplyDeleteஆமா உங்களுக்கு எந்த பெயர் ரொம்ப பிடிச்சு இருக்கு கீதும்மா :)
எங்க தின்னேலி பக்கம் பெண்களை "பிள்ளை"( பிள்ள ) கூப்பிடுவாங்க!!
ReplyDeleteகொஞ்சம் ஏமாந்தால் மிளகாய் தான் போங்க. பிள்ளை என்பது பொதுவான தமிழ்ச்சொல். 'பேர் சொல்ல ஒரு பிள்ளை' என்பது 'இன்னார் சந்ததி என்று சொல்லிக்கொள்ளும்படி' சந்ததி வளர்வதற்காகச் சொன்ன வழக்கு. ஆண் பிள்ளை பெண் பிள்ளை என்று தான் பால் பகுப்பு.
ReplyDeleteபிள்ளை என்றால் ஆண் என்பது... க்க்க்க்க்ம்ம்ம்ம்ம்.. கோத்ரக்காராள் கட்டியதாக்கும்னு தோண்றது.
என் தங்கை பெயர் கீதா. கீது என்போம். மெட்ராஸ் பாஷையில் 'கீது கீதா?' என்று அவளைத் தேடி யாராவது வரும்பொழுது சிரிப்போம்.
ReplyDeleteஹேமமாலினி ஒரு படத்துல நடிச்சாரா.. என்னங்க இது அபாண்டம்!
ReplyDelete'க்ருஷ்ணா நீ பேகனே பாரோ' ஹேமமாலினி பரதநாட்டியம் பத்தி சுப்புடு விமரிசனம் படிச்சிருக்கீங்களோ? (70s குமுதம் என்று நினைக்கிறேன்)
வாங்க் ஏடி எம், தொடர் பதிவா?? ஹிஹி, தொடர் கதைனு படிச்சுட்டேன், என்னடா இது ஏடிஎம்மோட தொடர்கதைனா முடிவே கிடையாதேனு யோசிச்சேன்! :)))))) ஹிஹிஹி, இந்தப்பேரு பிரபலமானதே நம்மளால தானே! :))))))))
ReplyDeleteவாங்க ப்ரியா, பெயரை நல்லா இருக்குனு சொன்னதுக்கு நன்றி. எந்தப் பெயரானால் என்ன?? A Rose is a Rose is a Rose is a Rose is a Rose is a Rose! இல்லையா?? ஹிஹிஹி, கொஞ்சம் ஓவரா இருக்கோ??? :P(இது எனக்கு நானே சொல்லிக்கிட்டது)
ReplyDeleteஜெயஸ்ரீ, தின்னேலி மட்டுமில்லை, மதுரைப் பக்கமும் பிள்ளை தான். எங்க ஆசிரியைகள் எல்லாருமே ஏ, பிள்ளை னே கூப்பிடுவாங்க. ஆம்பளப்புள்ள எத்தினி? பொம்பளப்புள்ள எத்தினினு தான் கேட்பாங்க. தஞ்சைப் பக்கம் குழந்தைகள்னு சொல்றாங்க. பசங்க என்றால் ஆண் பையர்களைனு மட்டுமே தான் நினைச்சிட்டு இருந்தேன். சென்னைத் தமிழில் பசங்க என்பது பொதுவான சொல் என்பது முதல் முதல் சென்னைக்குக் குடித்தனம் வந்தப்போத் தான் புரிஞ்சது. வீட்டுக்கார அம்மா உங்க மாமியாருக்கு எத்தன பசங்கனு கேட்க, நான் ஆண் பையர்களை மட்டுமேனு நினைச்சு மூணுனு சொல்லி இருந்தேன். அப்புறமாப் பேச்சு வாக்கில் எங்க மாமியார் 3 பெண், 3 ஆண் என்று சொல்லப் போக நான் மூணு பேர்தான்னு சொன்னேனேனு அவங்க கேட்க, நான் திருதிருக்க///// அதை ஏன் கேட்கறீங்க?? இப்படி அநுகூலச் சத்ருக்கள் நிறைய இருக்காங்க நமக்கு! :)))))))))
ReplyDeleteஅப்பாதுரை, கோத்ரக்காராள் மட்டுமில்லை, எல்லாருக்குமே பிள்ளைனா ஆண் குழந்தைதான்னு தோணுது. இதிலே வித்தியாசமே பார்க்கிறதில்லை! :)))))))
ReplyDeleteஎன்னோட சின்னமனூர் சித்தப்பா என்னைக் கீது என்று தான் கூப்பிடுவார். அவருக்கப்புறமா யாரும் கூப்பிடலை.
ReplyDeleteஅப்பாதுரை, ஹேமமாலினி வேறே படங்களிலும் நடிச்சிருக்காங்கங்கறீங்க?? :P:P:P எனக்குத் தெரிஞ்சு விதவிதமா ட்ரஸ் பண்ணிட்டு ஆடறேன் பேர்வழினு கையைக் காலை உதைப்பாங்க. பார்த்திருக்கேன். அப்புறமாக் கொஞ்சம் முன்னேற்றம் நாட்டியத்தில் மட்டும். அவங்க நடிச்சது நான் சொன்ன அந்த ஒரே ஒரு படம் தான். என்னமோ பேரு, சத்தர்னு ஆரம்பிக்கும், நினைவில் இல்லை.
ReplyDelete//வாங்க ஜெயஸ்ரீ, ஹிஹி, ஹேமமாலினி நடிப்பு எனக்குப் பிடிக்காது, ஒரே ஒரு படத்தைத் தவிர, ம்ம்ம்ம்?? //
ReplyDeleteமுன்ன சிவாஜியை பிடிக்காது, இப்ப ஹேம மாலினியை பிடிக்காது.இனிமே பேஅவே போறதில்லை! :P:P:P
//படம் பேர் மறந்து போச்ச்ச்ச்ச்ச்!//அதானே வயசு குறஞ்சு கோண்டே போகுதில்லை? :-))))
//A Rose is a Rose is a Rose is a Rose is a Rose is a Rose! //
ReplyDeleteஇப்படி கொடேஷனே கிடையாது. A Rose by any other name will smell as sweet! அதானே 'செகப்பிரியர்' சொன்னது?
கீதா கீத் எல்லாம் கூட தேவலையே இங்க கீ!! ரெண்டெஷுத்துதான் ஒரிஜினலே!!சின்னதையும் இப்படி சுஷ்க்கம் பண்ணலைன்னா என்ன !!
ReplyDeleteஇனிமே பேஅவே போறதில்லை! :P:P:P//
ReplyDelete@திவா, என்ன அர்த்தம் பேஅவே போறதில்லைனா?? இம்பொசிஷன் எழுதுங்க. :P:P:P நீங்க பேசாட்டி வேண்டாம், நான் பேசுவேனே! இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க? :))))
ஹேமமாலினி உங்க பேவரிட்டா?? ம்ம்ம்ம்?? ஆஆஆஆஆஆஆஆச்சரியம் தான் !
A Rose by any other name will smell as sweet! அதானே 'செகப்பிரியர்' சொன்னது?//
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், என்னோட வசதிக்கு நான் எழுதிண்டேன். ஸ்கூல்லே படிக்கிறச்சே ஆங்கில டீச்சர் சொல்லுவாங்க. இப்படியும் சொல்லலாம்னு, அது மனசிலே தங்கிடுச்சு. இது மாதிரி ஒண்ணு, ரெண்டு புத்தகங்களிலும் படிச்சிருக்கேனா? அதையே வசதியாப் பயன்படுத்திக்கலாமே! :))))
கீதா கீத் எல்லாம் கூட தேவலையே இங்க கீ!! ரெண்டெஷுத்துதான் ஒரிஜினலே!!சின்னதையும் இப்படி சுஷ்க்கம் பண்ணலைன்னா என்ன !!//
ReplyDeleteஜெயஸ்ரீ! :))))))))))))))))))))
எல்கே, என்ன அவசரம்?? எங்க அப்பாவை விட அவசரப் படறீங்க??? :))))))) கிரிக்கெட்டில் மூழ்கி இருக்கீங்க போல, ஆளையே பார்க்க முடியறதில்லை?? :))))))
ReplyDeleteரசித்தேன்.அழகிய பெயர்.
ReplyDeleteஹாஸ்டல்ல இருந்தப்ப வருஷம் ஆக ஆக அப்ளை பண்ணா இன்னும் வசதியான ரூம் கிடைக்கும். அப்படி கிடைச்ச ஒரு ரூமில வாசல் ஜன்னல் கண்ணாடி உடைஞ்சு இருந்தது. என்னடா பண்ணறதுன்னு யோசிச்சு அப்ப யதேச்சையா கிடைச்ச ஹேமமாலினி காளண்டர் பேப்பரை கண்ணாடிக்கு பதில் ஒட்டிட்டேன். அப்பலேந்து அது ஹேம மாலினி ரூம் ன்னு பேமஸ் ஆயிடுத்து. ஆனா அவங்க படம் பார்த்ததே கிடையாது பிஜி க்காக தில்லி போகும் வரை!
ReplyDeleteவாங்க மாதேவி, நன்றி.
ReplyDelete@திவா, சரிதான்!~ :))))))) ஸோ உங்க அபிமான நடிகை ஹேமமாலினி??? ஓகே! :)))))
ReplyDeleteமறுபடியும் அபாண்டமா சொல்றீங்களே.. ஒரு படத்துல ஹேமமாலினி நடிச்சார்னு? வந்துட்டுப் போனார்னு சொல்லுங்க.
ReplyDeleteதிவா.... நெஜம்.....மா கண்ணாடி உடைஞ்சதுனாலதான் ஒட்டினேளாமா???:))
ReplyDeleteMrs shivam எனக்கும் ஹே . மா பிடிக்காது .ரொம்பவே படிக்கறமாதிரி இருக்கும் பேசறதும் . ஆனா உங்களுக்கு வஸ்த்ரகலால மட்டும் பிடிச்சிருந்ததா??!!:))))இல்ல புடவை மட்டுமா?
ஹிஹிஹி, அப்பாதுரை, நான் சொல்றதை நீங்க தான் புரிஞ்சுக்கலை. அந்தப்படத்திலே ஹேமமாலினி வந்துட்டுப் போகலை. ரொம்பவே பரவாயில்லை ரகம். படம் பேரு ஏக் சத்தர் மைலி ஸி?? இல்லாட்டி சத்தர் லால் தீ? சரியா நினைவில் இல்லை. அதிலே ஹேமமாலினி நடிப்பு நல்லாவே இருக்கும். பத்மினி கோல்ஹாபுரி ஹேமாமாலினிக்கும் முதல் கணவனுக்கும் பிறந்த பெண்ணாக வந்து அவரும் தன் அருமையான நடிப்பைக் காட்டி இருப்பார். விளம்பரப் பாட்டி ஒருத்தர் அதிலே வருவாங்க?? தீனா பாதக்??? ம்ம்ம்ம்ம்ம்????
ReplyDeleteஜெயஸ்ரீ, அதானே,
ReplyDeleteதிவா, நல்லா மாட்டிக்கிட்டீங்களா?? ஹையா, ஹையா, ஜாலியா இருக்கே!
ஜெயஸ்ரீ, எனக்கு வஸ்த்ரகலா மட்டும் தான் பிடிக்கும். ஹிஹி, நான் வஸ்த்ரகலாவை ரசிக்கிறது தெரிஞ்சப்புறம் தான் ஹேமமாலினியே விளம்பர அம்பாசடர் ஆனாங்களாக்கும்! :))))))))
ஜெயஸ்ரீ அக்கா, ஆமாம். நெஜ...ம்ம்ம்ம்ம்ம்மா! அப்பவே நான் நல்ல பையன்! :-))))
ReplyDelete