பெண்ணை வீட்டில் அடக்கி வைத்திருந்தது என்பது அந்நியர் படையெடுப்பு மற்றும் பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட நிர்பந்தங்கள் காரணமாக ஏற்பட்ட ஒன்று என்பதை எவரும் அறியாமல் இருக்கமாட்டோம். திடீரென்றுதான் பெண்களை அடக்க ஆரம்பித்தனர். வடநாட்டில் பெண்கள் உடன்கட்டை ஏறியதற்கும் இதுவே முக்கியக் காரணம். சித்தோட் (ராஜஸ்தான் சித்தூர் என்பார்கள்) ராணி பதுமனியின் கதை அறியாதோர் இருக்க மாட்டோம். அப்படி ஒரு நிலைமை நம் தமிழ்நாட்டுப் பெண்களுக்கும் வரவேண்டாம் என்பதாலேயே பெண்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பாத ஒரு சகாப்தம் துரதிர்ஷ்டவசமாய் ஏற்பட்டது. அதைச் சரியானபடி புரிந்துகொள்ளாமலேயே பெண்ணடிமை என்று ஒரு பெயர் ஏற்பட்டுவிட்டது. பெண்ணை ஆண் வன்முறையால் அடக்கியாளும் நிலையும் ஏற்பட்டுவிட்டது. இனி வரும் சமூகமாவது இதைச் சரியான கோணத்தில் புரிந்துகொள்ளும் என நம்புகிறேன். இப்படி ஏன் திடீரென ஆயிற்று என்பதற்கான ஒரு சான்றை– சென்ற வருடம் பிப்ரவரி 27-ஆம் தேதி, ஹிந்து சப்ளிமெண்ட்ரியில் வந்த ஒரு செய்தியின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.
சென்னையில் நூறு, நூற்றைம்பது வருடங்கள்முன் வாழ்ந்த சுப்புநாகம்மாள் என்னும் பிரபலமான வக்கீல் வெங்கட்ரமண பந்துலு குடும்பத்துப் பெண்ணின் உண்மைக் கதையை எத்தனை பேர் படித்திருப்பீர்கள்? அதைப் படித்திருந்தால் பெண்கள் ஏன் அடக்கப்பட்டார்கள் என்பதற்கான காரணம் புரியும். சுப்புநாகம் என்னும் அந்தப் பெண் எல்லாப் பெண்களையும் போலவே வீட்டில் தமிழும் வடமொழியும் படித்துவிட்டுத் திருமணம் செய்துகொடுக்கப்பட்டார். செல்வாக்குள்ள குடும்பம். அந்த நாள்களில் சென்னையில் இவர்கள் குடும்பம் ரொம்பவே பிரபலம் என்று சொல்கிறார்கள். அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த 12 வயதுப் பெண்,திருமணம் ஆனதும், உயர் கல்வி பயின்ற கணவனுக்கு மனைவி ஆங்கிலம் படிக்க வேண்டும் என்ற ஆசை என்பதால் ஆங்கிலம் படித்தாள். அதற்கென ஒரு கன்யாஸ்த்ரீ வரவழைக்கப் பட்டார். பாடம் கற்றுக்கொள்வதற்கு பதிலாக அந்தப் பெண் கற்றுக்கொண்டது, வேற்று மதத்தின் பாடங்களே. கற்றுக்கொடுக்கப்பட்டதும் அதுவே. நாளாவட்டத்தில் பெண் அந்த கன்யாஸ்திரீயின் மதத்தைச் சார்ந்து அவரோடு நாட்டை விட்டே வெளிநாட்டுக்குப் போய்விட்டார். பெற்றோர் பல இடங்களிலும் தேடியும் பெண் கிடைக்காமல் ஊரில் இருந்தால் அவமானம் என்று ஊரை விட்டே போய்விட்டதாயும், பின்னர் அந்தப் பெண் திரும்பி வந்து தேடியதாகவும் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அந்தப் பெண் பின்னர் என்ன ஆனார் என்பதே தெரியவில்லை என்று குறிப்பிடப் பட்டிருந்தாய்ப் படித்த நினைவு.
பெண்கள் பலரும் வீட்டிலேயே தமிழும் சம்ஸ்கிருதமும் சொல்லிக் கொடுத்து வளர்க்கப்பட்டனர். மேலும் தமிழை ஆழ்ந்து படிக்க சங்கீத ஞானமும் தேவை என்பதை எத்தனை பேர் அறிந்திருக்கிறோம்? தேவாரம், திருவாசகம், பிரபந்தங்கள் போன்றவை அனைத்தும் ராகங்களோடேயே கற்பிக்கப்பட்டிருக்கின்றன. அதே போல் வடமொழி ஸ்லோகங்களும், அதற்கான ராகங்களோடுதான் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. அதோடு உயர்வு, தாழ்வு என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று. எப்படியும் ஏற்றத் தாழ்வை நிறுத்த முடியாது. எல்லாரும் பணக்காரர்களாகவோ அறிவாளிகளாகவோ ஆக முடியாது. அதே போல் அனைவருமே ஏழைகளாகவும் முட்டாள்களாகவும் இருக்க முடியாது. ஏனென்றால் ஏற்றத்தாழ்வு இல்லாமல் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை. எல்லாரும் பல்லக்குகளில் ஏறிவிட்டால் பல்லக்குகளும் அதிகம் வேண்டும். சுமக்கவும் ஆள்கள் வேண்டும். யார் சுமப்பார்கள்? ஆண்களா?? அவர்கள்தான் ஏற்கெனவே யானை மேலே ஏறி இருப்பதால்தானே நாம் அதிகமான உரிமைகள் கேட்டுக்கொண்டிருக்கிறோம், இல்லையா? 33% இட ஒதுக்கீடு பெண்களுக்குத் தரப்போகிறார்களாம். நாட்டில் அதைக் கொண்டாடுகிறார்கள் எல்லாரும். ஆனால் என்றைக்கோ 50% கொடுத்திருக்கிறானே ஒருவன். அவளில்லாமல் நானில்லை, நானில்லாமல் அவளில்லை என்றும் சொல்லியிருக்கிறானே!
ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்,
அவளொன்று தானொன்று சொல்லாதவன்
தான் பாதி உமைபாதி என்றானவன்
சரிபாதி பெண்மைக்குத் தந்தானவன்
நேற்றானவன், இன்றானவன்,
இனி நாளையும் என்றாகப் போகின்றவன்.
அந்த உரிமையைச் சரியாகப் பயன்படுத்தும் பெண்கள் தான் இன்றைய தேவை. கேட்டு வாங்குவதல்ல உரிமைகள். மேலும் அடிமைகள் இருந்தால் அல்லவோ உரிமைகள் என்று கேட்டு வாங்கவேண்டும்? நம் கடமைகளை மறக்காமல் நல்லபடி நிறைவேற்றினாலே போதும்.
வேத காலத்தில் இருந்து பெண்கள் அறிவாளிகளாகவே இருந்து வந்திருக்கின்றனர். அத்ரியின் மனைவி அநசூயை, நளாயினி (கணவனால் பலமுறை சோதிக்கப் பட்டவள், இவள் தான் மறு பிறவியில் திரெளபதியாகப் பிறந்தாள். அந்தக் கதை தனியா வச்சுக்குவோம்.)வசிஷ்டரின் மனைவி அருந்ததி, காச்யபரின் பெண் அபலா, இவளுக்கு இருந்த சரும வியாதியை இந்திரனைத் துதித்ததன் மூலம் போக்கிக்கொண்டாள். அவ்வளவு ஏன்? கல்விக்கு அதிபதியாக சரஸ்வதியைத் தான் சொல்கிறோம்! அதே போல் செல்வத்திற்கு என மஹாலக்ஷ்மி! வீரத்துக்கு என மலைமகளான பார்வதி தேவி! ஏன் சிவனுக்கு வீரம் இல்லையா? அதே போல் வேதங்கள் அறிந்த, சிருஷ்டிகள் செய்யும், பிரம்மாவிற்குப் படிப்பே கிடையாதா? மஹாவிஷ்ணு தான் ஒன்றுமே இல்லாமல் ஏழையாக இருக்கிறாரா? பெண்களைத் தான் இவற்றிற்கெல்லாம் நாம் அடையாளம் காட்டுகிறோம். இந்தியாவையே பாரத தேவி எனப் பெண்ணாகவே போற்றுகிறோம். அனைவரும் தாய் நாடு என்றே சொல்கிறோமே தவிர, தந்தை நாடு என்று சொல்வதில்லை. பெண்கள் சுதந்திரம் இருக்கிறதாய்ச் சொல்லப் படும் மேலைநாடுகளிலும் Motherland தான், Father land கிடையாது.
சங்க காலத்தில் பெண்பாற் புலவர்கள் வாழ்ந்துள்ளார்கள். அவர்கள் பெயர் வருமாறு:
அள்ளூர் நன்முல்லையார்
ஆதி மந்தியார்
ஒக்கூர் மாசாத்தியார்
ஓரம் போகியார்
ஔவையார்
கச்சிப்பேட்டு நாகையார்
கழார்க்கீரன் எயிற்றியார்
காக்கைப் பாடினியார் நச்சோள்ளையார்
காவற்பெண்டு
காமக்கணி பசலையார்
குறமகள் இளவெயினியார்
குறமகள் குறிஎயினியார்.
குமிழி ஞாழலார் நப்பசலையார்
நக்கண்ணையார்
நன்னாகையார்
நெடும்பல்லியத்தை
பக்குடுக்கை நன்கணியார்
பூங்கண் உத்திரையார்
பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப் பெண்டு
பெரெயில் முறுவலார்
பேயார்
பேய்மகள் இளவெயினியார்
பொதும்பில் புல்லாளங் கண்ணியார்
பொன்முடியார்
மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
மாரிப்பித்தியார்
மாறலோகத்து நப்பசலையார்
முள்ளியூர்ப் பூதியார்
வருமுலையாரித்தி
வெறியாடிய காமக் கண்ணியார்
வெள்ளி வீதியார்
வெண்ணிக் குயத்தியார்
வெண்மணிப் பூதியார்
சங்க காலப் பெண்பாற் புலவர் பெருமக்கள் முப்பத்தி மூன்று பேர். இந்தப் பெண் புலவர்கள் வீராதி வீரர்களாய்த் தெரிந்த மாமன்னர்களைத் தங்கள் பாடல்களால் தங்கள் பக்கம் உள்ள நியாயங்களைப் புரிய வைக்கத் தெரிந்தவர்கள். இவர்களில் ஒளவையாரின் காலம் முன்பின்னாகச் சொல்லப் படுகிறது. மேலும் பல ஒளவையார்கள் இருந்ததாயும் தெரிகிறது. என்றாலும் எல்லாருமே மன்னர்களைத் தம்மோடு சரிசமமாகவே பழக வைத்துள்ளனர். எவரும் பெண்கள் தானே என இகழ்ச்சியாக நினத்ததில்லை. இன்னும் பல பெண்கள் வீரத்திலும், தீரத்திலும், கல்வி, கேள்விகளிலும் சிறந்து விளங்கி இருக்கின்றனர். ஒரு குந்தவை வளர்த்த ராஜராஜசோழனின் புகழும், ராஜேந்திர சோழனின் புகழும் இன்றளவும் மங்காமல் இருக்கிறது. முதல் முதல் பயணக்கட்டுரைகள் எழுதியது, அதுவும் வடமொழியில் எழுதியது கங்காதேவி என்னும் பெண்மணிதான்.
புராணங்களிலும் இதிகாசங்களிலும் கூடப் பெண்கள் சுதந்திரமானவர்களாகவே இருந்து வந்திருக்கின்றனர். சரித்திரங்களிலும் பல பெண்கள் இடம் பெற்றிருக்கின்றனர். ராணி அகல்யா, ஜான்சி ராணி, சித்தோட் ராணி பதுமனி, ராணி மங்கம்மாள், ராணி மீனாக்ஷி(இவள் பின்னால் வந்தவள்), பூசைத்தாயார் என்னும் பெண்மணி எனப் பலரையும் கூற முடியும். இவர்கள் அனைவரும் தங்கள் வீரத்தையும் காட்டி இருக்கின்றனர். சில பெயர்கள் விடுபட்டிருக்கிறது. சுதந்திரப் போராட்டத்திலும் நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்ட பெண்கள் பலர். தில்லையாடி வள்ளியம்மையாலேயே காந்தி இந்தியா வந்தார். சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசீய ராணுவத்தின் மகளிர் பிரிவில் தலைவராக இருந்த பெண்மணி லக்ஷ்மி என்பவர் தமிழ்நாட்டுப் பெண்ணே. ஆகவே பெண்களை எப்போதும் அடிமையாக நினைப்பவர் இருந்ததில்லை என்பதே உண்மை. வாய்ப்புக் கிடைத்தால், இந்த வாய்ப்பு என்பது தானாக உருவாகாது அல்லவா? அத்தகைய வாய்ப்புக் கிடைத்தால் எல்லாப் பெண்களும் முன்னேற்றப் பாதையில் பயணிக்கலாம்.
அவ்வளவு ஏன்? என் ஓரகத்தியின் தந்தைவழிப் பாட்டியார் அந்தக் காலங்களில் சிதம்பரம் நகராட்சியின் சேர்மனாக இருந்திருக்கிறார். ஒன்பது கஜம் புடைவையை மடிசாராகக் கட்டிய வண்ணமே நகராட்சி நிர்வாகங்களில், சந்திப்புகளில் பங்கு பெற்றதாய்ச் சொல்வார்கள்.
பதிவுகள் பெரியதாக இருப்பதாய் திவா சொல்கிறார். இன்னும் சிலரும் சொல்வதால் மிச்சம் நாளை பார்ப்போம்.
கீதாம்மா! உங்களின் பல துணிச்சலான கருத்துக்கள் மலைப்பை ஏற்படுத்துகின்றன. வெகுஜன கருத்திலிருந்து மாறுபட்டு சிந்திக்கிற உங்கள் நேர்மைத் திறனுக்கு எனது பணிவானவணக்கங்கள்.
ReplyDeleteநல்ல பதிவுகளில் இதுவும் ஒன்று கீதாம்மா
ReplyDeleteநிறைய விசயங்களை தெரிந்து கொண்டேன்
நீங்கள் வாழ்த்த காலங்களில் நாங்களும் வாழ்கிறோம் என்று
இந்த மகளிர் தினத்தில் நாங்கள் பெருமை பட்டு கொள்கிறோம்
வாழ்க தங்கள் திருப்பணி வளர்க தங்கள் திருத்தொண்டு .................
பெண்கள் பிறர் மனதில் பதியுமாறு விஷயங்களைத் திறமையுடன் எடுத்துரைக்கும் ஆற்றல் வாய்ந்தவர்கள். இத்தகைய பெண்கள் நாட்டுத் தொண்டு, வீட்டுத் தொண்டு, சமயப் பணி, முதலியவற்றில் காட்டியுள்ளார்கள். மொழி வளர்ச்சிக்காவும், சமூக முன்னேற்றத்திற்காகவும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி உள்ளார்கள்.
ReplyDeleteஇப்படி நானும் “உன்னையே நீ உணர் “
என்ற பதிவில் எழுதியிருக்கிறேன்.
நேரம் கிடைத்தால் பாருங்கள்.
சங்ககால பெண்புலவர்களின் திறமைகளையும், அந்தகால பெண்களின் தொண்டுகளையும் தான் கூறிப்பிட்டு இருக்கிறேன்.
திலகவதியால் தான் திருநாவுக்கரசர் கிடைத்தார்.
மங்கையர்கரசியால் ஞானசம்பந்தர் புகழ் பரவியது.
டாகடர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்கள், இப்படி பெண் பெருமை பேசிக் கொண்டு போகலாம்.
இப்போது இருவரும் சமம் என்பது போல் இருவருக்கும் சம பொறுப்பு உண்டு குழந்தைகளை வளர்ப்பதிலும்,குடும்பம் நடத்துவதிலும், எல்லா வற்றிலும் இணைந்து தங்கள் பெருமையை காத்துக் கொண்டு வீட்டுக்கும் ,நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் பெண்கள்.
உங்கள் பதிவு பெண்களுக்கு தங்கள் பெருமையை தாங்கள் எப்படி பாதுகாத்துக் கொள்வது என்ற விழிப்புணர்வை தரும்.
நன்றி சங்க கால சிறந்த பெண்களை வரிசைப்படுத்தி சொன்னதற்கு.
அர்த்தநாரி உருவத்தில் சரிபாதி பெண்மைக்கு கொடுத்து விட்டதை பரம் பொருள் விளக்கி விட்டார்.
//அத்தகைய வாய்ப்புக் கிடைத்தால் எல்லாப் பெண்களும் முன்னேற்றப் பாதையில் பயணிக்கலாம்//
ReplyDeleteஅப்படி வாய்ப்பு பெற்று முன்னேற்ற பாதையில் பயணிப்பவர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு பிற பெண்களுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி தந்து அவர்களையும் உயர்த்த வேண்டும் என்பது எனது தனிபட்ட வேண்டுகோள்
எனது பாட்டிம்மா காலத்தை ஒப்பிடும் போது எங்களது காலம் முன்னேற்றத்தின் சதவிகிதம் உயர்ந்து தான் இருக்கிறது
இன்னும் இரு தலை முறைகள் கழித்து பார்க்கும் போது 50 :50 கண்டிப்பாக நடைமுறைக்கு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது
அர்த்தநாரிஷ்வர் அருள் புரிவாராக !
Woman is a ray of God: she is not the earthly beloved.
ReplyDeleteShe is creative: you might say she is not created.3
Jallaludhdhin Rumi
It is the plain women who know about love; the beautiful women are too busy being fascinating.
KATHARINE HEPBURN,
And now!!! something to laugh!!
.....A man's got to do
what a man's got to do.
A woman must do what he can't.
-Rhonda Hansome-
Happy Women's day!!
மகளிர் தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteவானமே எல்லை என்பதில் வலையுலகம் மட்டும் விதிவிலக்கா என பதிவுலகிலும் சாதிக்கும் உங்களுக்கு, மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இனிய நூறாவது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..
ReplyDeleteமகளிர் எழுச்சியே... மனித குல வளர்ச்சி..
வாங்க சேட்டைக்காரரே, இது ஒண்ணும் துணிச்சலான கருத்துக்கள் எல்லாம் இல்லை. காலம் காலமாய்ச் சொல்லி வருகின்றன. இப்போது இவை சொல்லப் படுவதில்லை என்பது மிகப் பெரிய சோகம்! நன்றிங்க உங்களோட மனம் திறந்த பாராட்டுக்கு.
ReplyDeleteவாங்க ப்ரியா, குழந்தைகள் பரிக்ஷை முடிந்து விட்டதா? குழந்தைகள் படிப்பைக் கவனிங்க. நடுவிலே வந்தது குறித்தும் சந்தோஷம். நன்றிம்மா.
ReplyDeleteகோமதி அரசு, உங்கள் பதிவுகளுக்கு வரணும்னு தான். ஆனால் என்னவோ முடியலை. இப்போ நீங்க அழைப்பு வேறேகொடுத்திருக்கும்போது கட்டாயமா வரேன். பல சிநேகிதிகளின் பதிவுகளுக்கும் போயே பல மாதங்கள் ஆகின்றன.:(
ReplyDeleteமீண்டும் ப்ரியாவிற்கு நன்றி.
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி ஜெயஸ்ரீ, உங்களுக்கும் உங்கள் சிநேகிதிகளுக்கும் பெண்கள் தின வாழ்த்துகள்.
வாழ்த்துகள் கோமதி அரசு.
ReplyDeleteபாரத் பாரதி பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.
"ஒண்ணும் துணிச்சலான கருத்துக்கள் எல்லாம் இல்லை. காலம் காலமாய்ச் சொல்லி வருகின்றன. இப்போது இவை சொல்லப் படுவதில்லை என்பது மிகப் பெரிய சோகம்!"
ReplyDeleteNo need to peeve.
Because the present is far more imp than the past. The present generations do not get attracted to examples from the past. So no one is telling and no one is listening.
All your heroines are from either puranas/ithikaasaas or from distant history.
Puranic heroines are not historically provable, Ramayanam is said to have taken place 75 lakh years ago; so Sita was from that past, wasn't she?
Give examples from recent history or current times.
Perhpas the young girls may be motivated to take them as role models.
The present generation of brides dont obey the elders.
ReplyDeleteIt is a realistic peeve. One shd agree with u.
Reason s simple,
If u educate a person, i mean correct education which increases his independent thinking, that person will b more n' more individualistic.
All news to me Geethammaa... never read about those women from last century. Also nice mention about "Pen pulavargal"... Nice post for a nice day.. thanks Maami..:)
ReplyDeletethodara..:)
ReplyDeleteஜோ, நிச்சயம் புராண காலத்தின் கதாநாயகிகளைத் தான் சொல்லி இருக்கேன். இல்லைனு சொல்லலை. ஏனெனில் வேத காலத்திலிருந்து பெண்கள் அடிமைப்பட்டுக்கிடப்பதாயும், அந்த அடிமைத்தனத்திலிருந்து மீட்க வேண்டும் என்றும் தானே போராடுகிறார்கள். ஆகையால் அப்படி இல்லை, எப்போவும் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டவே, புராண, சரித்திர நாயகிகளைக் காட்டி உள்ளேன். கடைசிப் பதிவில் சமீபத்திய கதாநாயகிகளையும் சேர்க்க எண்ணம். நேரம் தான் கிடைக்க மாட்டேன் என்கிறது. இயன்றவரை பார்க்கிறேன். வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteஇன்னொரு விஷயம், இளைஞரோ, வயதானவர்களோ, புதுக்கவிதையோ, மரபுக்கவிதையோ பெண்ணுரிமை பற்றி எழுத ஆரம்பித்தால் முதலில் எடுத்துக்கொள்ளும் விஷயமே சீதை தீக்குளித்தது தான். இப்போவும் கணவன் மேல் கோபத்தில் தீக்குளிக்கும் பெண்கள் உண்டு. அது போல் சீதையும் ஒரு சாமானிய சராசரிப் பெண்ணைப் போலத் தீக்குளிக்க முடிவெடுத்தாள். அதே போல நீங்கள் நினைப்பது போல இளம்பெண்களுக்கோ, அல்லது இன்றைய புதிய உலகப் பெண்களுக்கோ நான் எதிரி அல்ல என்பதைத் திரும்பத் திரும்பப் படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். மேலும் என்னை ஆதரித்துப் பின்னூட்டம் இட்டவர்களில் பெரும்பான்மையான பெண்கள் வயதில் இளையவர்களே.
தனித்தன்மை பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அந்த தனித்தன்மை சுயநலமிக்கதாய் இருக்கக் கூடாது என்பதே என் கருத்து. இவ்வுலகில் அனைவரோடும் சேர்ந்தே நாம் வாழவேண்டி உள்ளது. தனியாகத் தீவில் அல்ல.
ReplyDeleteஏடிஎம், ரொம்ப நன்றிங்க. பெண்கள் இப்படியும் இருந்திருக்கிறார்கள் என்பதையும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும். சகோதரி சுப்பு லக்ஷ்மியும், டாக்டர் முத்து லக்ஷ்மி ரெட்டியும், இன்னும் அந்தக் காலங்களில் எழுதிய குமுதினி என்னும்பெண் எழுத்தாளர், வை.மு. கோதை நாயகி அம்மாள், என்று எத்தனையோ பேரைச் சொல்லலாம். பதிவின் நீளம் கருதிச் சுருக்கவேண்டி இருக்கிறது.
ReplyDeleteபெண்ணுரிமை என்பது தன் சுயமான சிந்தனை, சுயமுயற்சி , சுயமரியாதை , தன்னம்பிக்கை நேர்மை, நடுநிலமை , மனதில் உறுதி assertiveness, inclusiveness நிதானம் , பிறத்தியார் கருத்தில இருக்கிற நேர்மை, உண்மை விவேகத்துக்கு மதிப்பு கொடுத்து கேட்ப்பது எல்லாத்துக்கும் மேல அன்பு!! சுதந்திரம் என்கிற பேர்ல சுற்றுப்புறத்தை பாதிக்காமல் இருப்பது தன்னுடைய நலத்துக்கும் கேடு வராமல் நடப்பது !! வேத காலத்திலெல்லாம் பெண்களுக்கு உரிமை இருக்கத்தான் செஞ்சது .அது ஏன் கேரளா மராட்டி, பெங்காலிகளில் வீட்டுல மூத்த பெண்மணி தான் தலைவர் !! பெண்கள்ல கர்கியம்மா , ஜிஜாபாய், சுசேதா க்ருபலானி, விஜயலக்ஷ்மி பண்டிட்,சரோஜினி நாயடு, கிரண்பேடி, இந்த்ரா காந்தி, கஸ்துர்பா காந்தி இவர்களும் சாதித்த பெண்கள் தானே !!ஒரு முற்போற்கு சிந்தனை, தைரியம், நியாயம் உள்ள சகோதரியால் நமக்கு கிடைத்தவர் அருணகிரி!!ஆண்டாளம்மாவை விட்டுட்டேளே மிஸஸ் ஷிவம் !! ”மானிடவர்க் கென்று பேச்சுப்படில்
ReplyDeleteவாழ்கில்லேன்” தன் மன ஆசையை தைரியமா சொல்லி தான் நினைத்ததை அருமையா நிறைவேற்றிக்கொள்ளலையா இவர்களும் இந்த ஃபெமினிஸ்ட் சொல்லற so called “””அடக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து” வந்தவர்களே!!இவா எல்லார்கிட்டேயும் இருந்த என்னது இவர்களை மேம்படுத்தியது!! யோசிக்கணும் எல்லாரும்
ஜெயஸ்ரீ, எந்த சாதனைப் பெண்களையும் விடலை. ஆண்டாளை மறப்பேனா?? உண்மையில் சாதனைப் பெண்களைக் குறித்துத் தனியாகக் குறிப்பிட எண்ணியே முதலில் அவர்களைச் சொல்லவில்லை. உங்கள் கருத்துகளையும் அதன் பொருளையும் இதைப் படிக்கும் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். நீங்க சொல்றாப்போல் எல்லாரும் யோசிக்கணும்.
ReplyDeleteநன்றி கீதாம்மா
ReplyDeleteமாதிரி தேர்வுகள் நடந்து முடிந்து இருக்கின்றன
முழு ஆண்டு தேர்வுகள் இனி நடக்க வேண்டும்
டியூஷன் வைத்து கொள்வது எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை கீதாம்மா
இதனால் குழந்தைகளின் கல்வி தரம் மற்றும் அவர்களில் ஆசிரியைகளிடம் நேரடியாகவும் அலைபேசி மூலமாகவும் பேசி தெளிவாக்கி கொள்ள முடிகிறது.
நல்லது ப்ரியா, உங்க குழந்தைகளின் பாடங்களைக் கவனிச்சு அவங்களை மேம்படுத்தும் திறமை உங்க கிட்டே இருக்கும்போது ட்யூஷன் எல்லாம் அநாவசியம். என்னோட குழந்தைகளுக்கும் குறிப்பிட்ட வகுப்பு வரையிலும் நான் தான் சொல்லிக் கொடுத்தேன். என்னோட ஹிந்தி அறிவை அவங்களுக்காகவே மேம்படுத்திக்கொண்டேன். நீங்க செய்யறது நல்லது. குழந்தைகளின் படிப்பைக் கவனியுங்கள். தேர்வில் நல்லவிதமாக மதிப்பெண்கள் பெறக் குழந்தைகளுக்கு வாழ்த்துகள், ஆசிகள்.
ReplyDelete