எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, September 28, 2011

கொலுவுக்கு வந்துட்டுச் சுண்டல் வாங்கிக்குங்க!

 பல பொம்மைகள் மழை நீரில் ஊறிப் போய்க் கரைந்து போய்விட்டன. முக்கியமாய் அம்மன் பொம்மைகள், வெங்கடாசலபதி, அலமேலு மங்கா, மீனாக்ஷி, மற்றும் சில பெரிய பொம்மைகள். இருந்தவற்றில் பாண்ட் செட், தக்ஷிணாமூர்த்தி செட், வேடுவன் செட் போன்றவற்றையும் சில சின்ன பொம்மைகளையும் என் தம்பி மனைவியிடம் கொடுத்துவிட்டேன். அதுபோக மிருகங்களின் பாண்ட் செட், கனகதாரா செட், முருகன் குடும்பம், ராமர் குடும்பம், காட்டு மிருகங்கள், நாட்டு மிருகங்கள், பறவைகள், ஊர்வன, பறப்பன என உள்ளது. அவற்றையும் என் அண்ணா இன்னும் சில நண்பர்கள் எடுத்துக்கறதாச் சொல்லி இருக்காங்க.
 மிச்சம் உள்ளதில் அஷ்ட லக்ஷ்மி, தசாவதாரம், காயத்ரி அம்மன், நவநீத கிருஷ்ணர், தவழும் கிருஷ்ணர், புலி கொடுத்த கிருஷ்ணர், வாத்தியம் இசைக்கும் டெரகோட்டா பிள்ளையார், மாக்கல் சொப்பு செட், மரச் சொப்பு செட், பித்தளை சொப்பு செட், செட்டியார், மரப்பாச்சி போன்றவை மட்டும் எங்களுக்கு வைக்க எடுத்து வந்திருக்கிறேன்.
 சொப்புக்களையும் கொடுக்கலாம்னு தான் நினைச்சேன். ஆனால் என்னோட மன்னி தான் வீட்டிலே குழந்தை பிறக்கணும் கொடுக்காதீங்கனு செண்டிமெண்டலாச் சொல்லவும் சொப்பைக் கொடுக்கலை.
 
Posted by Picasa
கோலாட்டம் நான் குழந்தையா இருக்கையிலே வாங்கினது. அதனோட பெயிண்ட் போகாமல் அப்படியே இருக்கு. அதே போல் மரச்சொப்புக்களும், மாக்கல் சொப்புக்களும், பித்தளைச் சொப்புக்களும் எனக்கு நினைவு தெரிஞ்சதில் இருந்து எங்க வீட்டில் இருந்தது. இன்றும் அப்படியே இருக்கின்றன. மாக்கல் சொப்பு புதுக்கருக்கு அழியாமல் பார்ப்பவர்கள் எல்லாம் புதுசானு கேட்கிறாப் போல் இருக்கும். 
 
Posted by Picasa
இன்னிக்குப் பண்ணின சுண்டல் படம் போட்டிருக்கேன். கோபி கேட்டிருந்தார். சின்னக் கிண்ணத்தில் பயறு வெல்லம் போட்ட சுண்டல். முதல் நாள் தித்திப்புப் பண்ணணும்னு கொஞ்சமாப் பண்ணினேன். இன்னொரு பாத்திரத்தில் இருப்பது பயறு உப்புச் சுண்டல். நாளைக்கு என்ன சுண்டல்??

10 comments:

  1. கொலுவுக்கு படிகள் இல்லையா?புதிய
    வீடு என்பதால் சின்ன அளவில்வைத்துள்ளீர்களா.எங்கள்வீட்டிலும் மூன்று வருடங்களுக்கப்பின் சின்ன அளவில் வைத்துள்ளோம்.குழந்தைகள் எல்லாம் வெளியூர்.என்ன செய்வது?
    முக்யமான பொம்மைகளைப்பிரித்துக்கொடுத்தாயிற்
    றுமதுரை திமிலோகப்படுகிறது.

    ReplyDelete
  2. படிகள் இல்லாமலா?? செளந்தர்ய லஹரிக்கு முன் பதிவு மதுரைக் கொலு நினைவுகளில் பாருங்க. ஸ்டீல் படிக்கட்டுகளோடு உண்டு. பொம்மைகளை அதிலேயே வைக்க இடம் இல்லாமல் பாதி பொம்மை வைக்க முடியாது; இப்போக் குறைத்தாச்சு. ஒவ்வொரு வருஷமும் அந்தப் படிகளை நாங்க ரெண்டுபேருமா உட்கார்ந்து ஒரு மணி நேரம் செலவு செய்து கோர்ப்போம். பின்னர் அதை அவிழ்த்துப் புத்தக ஸ்டாண்டா மாத்த இன்னொரு நாள் செலவாகும். இப்போ இந்த வீட்டில் இருக்கும் இடத்திலேயே கொலு வைச்சாச்சு.

    ReplyDelete
  3. எல்லாம் சரி தலைவி ஆனால் சுண்டல் காணோமே ! ;-))

    ReplyDelete
  4. சுண்டல் இனிமேல் தானே பண்ணவே போறேன். தனிப் படமாப் போடறேன். பாருங்க.

    ReplyDelete
  5. ஒரு சுண்டல் பாக்கெட் பார்சல் பிளீஸ்! :-)

    ReplyDelete
  6. வாங்க ஸ்ரீநி, சுண்டல் நல்லா இருந்ததா?

    ReplyDelete
  7. அட! வடுவூர், வாங்க, வாங்க, ரொம்ப நாட்கள் கழிச்சு வந்ததுக்கு நன்றி.

    ReplyDelete
  8. போன வருசத்துக்கு முந்தின வருசம் உங்க வீட்டுக் கொலுவுக்கு வந்தது மனசில் அப்படியே நிக்குது.அந்த ராமர் பட்டாபிஷேகப்படம்.......... ஹைய்யோ!!!!!!

    பொம்மைதானம் நடக்குமுன்னு தெரிஞ்சுருந்தால்.....அப்பவே..... ஹூம்...யோகம் இல்லை:(

    சொப்பு செட் அட்டகாசமா இருக்கு. நானும் மாடர்ன் அடுக்களை ஒன் னு வாங்கிக் கப்பலில் போட்டுருக்கேன்:-)

    ReplyDelete
  9. சொப்பு செட் அட்டகாசமா இருக்கு. நானும் மாடர்ன் அடுக்களை ஒன் னு வாங்கிக் கப்பலில் போட்டுருக்கேன்:-)//

    சொப்பு செட் நான் குழந்தையா இருக்கிறச்சே இருந்து இருக்கு. அதுவும் மரச் சொப்புக்களோடு விளையாடிய நினைவும் இருக்கு.

    பொம்மை தானம் செய்யப்போறேன்னு நீங்க வந்தப்போ எங்களுக்கே தெரியாது. திடீர்னு போன வருஷம் தான் உதயமாச்சு. அதுக்கப்புறமா நிறையவே தானம் நடக்கிறது. பொம்மை மட்டுமின்றிப் பலவித தானங்களும்,,,,,,,,,,,

    ReplyDelete