எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, April 01, 2012

காணாமல் போன நண்பர் குழாம்!

2011 நவம்பரோட வலைப்பக்கம் ஆரம்பிச்சு ஆறு ஆண்டுகள் முடிஞ்சாச்சு. ஆனாலும் தமிழில் எழுத ஆரம்பிச்சது 2,  ஏப்ரல் 2006-இல் இருந்து தான்.  அது வரைக்கும் உடம்பும் சரியில்லாமல் இருந்தது; தமிழில் தட்டச்சவும் வரலை.  இத்தனைக்கும் தமிழ், ஆங்கிலம் தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன். :))))) போகட்டும்.  தமிழில் எழுதச் சுட்டி அனுப்பி உதவியது ஜீவ்ஸ்.  வெண்பா வடித்துக்கொண்டிருந்தவர் கூடவே எனக்கும் வந்து சொல்லிக் கொடுத்தார். ஆனால் அதுக்கப்புறமாக் குழந்தை பிறந்திருக்குனு சொல்லிட்டுக் காணாமல் போயிட்டார். (வலை உலகிலே எனக்குச் சொல்லிக் கொடுத்ததுதான் காரணம்னு யாரானும் சொன்னால் நம்பாதீங்க! :D) ஜீவ்ஸ் சொல்லிக் கொடுத்தும் முடியாமல் தவிச்சுட்டு இருந்தப்போ முதல் முதல் 2 ஏப்ரல் 2006-இல் அம்பி தான் என்னைக் கிண்டல் பண்ணி முதல் கமென்ட் போட்டிருந்தார்.  ஹிஹி நினைவு அப்படித் தான் சொல்லுது.  செக் பண்ணணும்.  அதற்கு முன்னர் பல பின்னூட்டங்கள் வந்தாலும் அன்னிக்கு அம்பி போட்டது கையைப் பிடிச்சு எழுதச் சொல்லித் தரமுடியுமானு கிண்டல் பண்ணி இருந்தார். அதுக்கு அடுத்த பதிவை ஒழுங்கா எழுத ஆரம்பிச்சுட்டேன்.  தாங்க்ஸ் டு அம்பி! :))))


அப்புறமாப் பழக்கம் ஆனவங்களிலே சூடான் புலி நாகை சிவா, கைப்புள்ள இருவரும் முக்கியமானவர்கள் என்பதோடு எனக்கு ஒரு வகையில் விளம்பரமும் கொடுத்தாங்க.  கைப்புள்ள வா.வா. சங்கத்தில் என்னோட பிறந்த நாளைக்குப் போஸ்டர் ஒட்டினார் என்றால் (பல்லி முட்டாய் வாங்கி அவரே தின்னதைப் பெருந்தன்மையா மன்னிச்சு விட்டுட்டேன்.) நாகை சிவா தொழில் நுட்ப உதவிகள் பலவும் செய்தார்.  ஆனால் இப்போ இவங்க மூணு பேருமே கல்யாணம் ஆகிக் குழந்தை பிறந்த பின்னர் பதிவுலக வரவைக் குறைத்துக் கொண்டு விட்டார்கள்.  நாகை சிவாவும், கைப்புள்ளயும் எப்போவோ ஓரிரு பதிவுகள் போட்டாலும், அம்பி சுத்தமாய்ப் பதிவு எழுதுவதையே நிறுத்திவிட்டார்.  கொஞ்சம் வருத்தம் தான்.  ஆனால் அவருக்கு என்னமோ யு.எஸ். போனதில் இருந்து எழுதத் தோன்றவில்லை போலிருக்கு.

அடுத்து அதே கால கட்டத்தில் அறிமுகம் ஆனவர் கார்த்திக் முத்துராஜன்.  அம்பியும் நானும் போட்டுக்கொள்ளும் வம்புச் சண்டையில் சமயத்துக்கு ஏற்றாற்போல் அவரும் கலந்து கொண்டு கலகலப்பை ஏற்படுத்துவார். வலை உலகில் அறிமுகம் ஆனப்புறம் ஒரு கல்யாணத்துக்காக பங்களூர் சென்றோம். அப்போ அம்பியைப் பார்க்க வரதாச் சொல்லி இருந்தேனா. நான் பங்களூர் போனப்போ அதைப் போஸ்டர் போட்டு விளம்பரப் படுத்தினார்.  மிக அருமையான நண்பர். இவரும் பல விதங்களில் ஊக்கம் கொடுத்ததோடு அருமையாகத் தன் கிராமத்து வாழ்க்கையை எழுதி வந்தார்.  இவரையும் கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்கும் மேலாகப் பதிவுகளில் பார்க்க முடியவில்லை.  2010-ஆண்டில் கடைசியாக எழுதினார்னு நினைக்கிறேன்.  இவங்க எல்லாருமே கிட்டத்தட்ட நான் ஆரம்பிச்ச சமயமே ஆரம்பிச்சாங்க.


இதில் அருமைச் சகோதரி வல்லி சிம்ஹனும் ஒருவர்.  ஆரம்பத்தில் நானும் வல்லியும்  இருவருமே ஒருவருக்கொருவர் பின்னூட்டங்கள் கொடுத்துக்கொண்டதோடு அம்பிக்கும் பின்னூட்டம் கொடுப்போம்.  அதன் பின்னர் ஒவ்வொருத்தருக்கும் திசை மாறியது.   இதிஹாசங்கள், புராணங்கள் குறித்தே எழுத நினைத்த எனக்கு எண்ணங்கள் வலைப்பக்கத்தில் அதை முழுமையாகக் கடைப்பிடிக்க முடியவில்லை. பல்வேறு விஷயங்களைத் தொகுத்தளிக்கும் முக்கிய வலைப்பக்கமாகவும் ஆகி விட்டது அது.  ஆகையால் என்னுடைய தனிப்பட்ட விருப்பம் ஆன இதிஹாசங்கள், புராணங்களுக்காகத் தனி வலைப்பதிவு துவங்கும்படி ஆகிவிட்டது.  பிரயாணங்கள், பக்திச் சுற்றுலாக்கள் போன்றவற்றிற்கு நாகை சிவாவின் உதவியோடு ஆன்மிகப் பயணம் என்ற பெயரில் வலைப்பக்கம் திறக்க முடிந்தது.  அதைத் தவிரவும் சில வலைப்பக்கங்களைத் திறந்தேன். அவற்றிலும் ஏதோ உளறிக் கொட்டிக் கிளறி மூடி இருக்கேன்.

ஆன்மிகப் பயணம் வலைப் பக்கத்தில்  பயணக்கட்டுரைகள் தவிரவும் சிதம்பர ரகசியம் என்னும் சிதம்பரம் குறித்த தொடரும் மற்றச் சில பதிவுகளும், கிராமத்து தெய்வங்கள், ஈசனின் வடிவங்கள் என எழுதி வருகிறேன்.  இந்தச் சிதம்பர ரகசியம் தான் ஓரளவுக்குப் பெயர் வாங்கிக் கொடுத்த தொடர் என்பதோடு அனைவரும் கவனிக்கவும் ஆரம்பித்தார்கள்.  அதே சமயம் இந்தத் தொடர் பிடிக்காதவங்களும், இதெல்லாம் என்ன, இதுக்குப் படிச்சுப் பின்னூட்டம் போடணுமானு கேட்டவங்களும் உண்டு.  இம்மாதிரியான தொடர்கள் எல்லாவற்றுக்கும் குறிப்புகள் எடுக்கத் தான் நேரம் எடுக்கும்.  நினைத்த மாதிரி எழுதிவிட முடியாது.  சில சமயம் தொடர்ந்து நாலைந்து பதிவுகளுக்கு எழுதி வைத்துக்கொண்டு விடுவேன்.  அப்போது அடுத்தடுத்துப் போட முடியும்.  சில சமயம் குறிப்புகள் எடுக்கவோ, புத்தகங்கள் கிடைக்கவோ சிரமம் ஆகப் போய்விடும்.  அப்போதெல்லாம் தாமதம் ஆகும்.  ஆனால் எப்படியோ ஒப்பேத்திக்கொண்டு வருகிறேன்.  சமீப காலமாகப் பழகிய  நண்பர்கள் யாரும் இன்று எழுத முடியாமல் போனது துரதிர்ஷ்டமே.  அப்போ ஒரு கூட்டம் என்று சொல்லும்படியா அமர்க்களம் செய்து கொண்டிருந்தோம்.


அடுத்த முக்கியமான வெகு முக்கியமான நபர் வேதா. அம்பியோட பதிவுகளின் மூலம் பழக்கம் ஆனவர். என் அருமைச் சிநேகிதி;  இன்றும் என்றும்.  வயசு பார்க்கப் போனால் எனக்குப் பெண்ணாக இருக்கலாம்.  என்றாலும் மன முதிர்ச்சியில் என்னை விடச் சிறந்தவள்.  பல விதங்களில் இருவரும் ஒத்துப் போவோம்.  நான் என்னை நானே தலைவியாக அறிமுகம் செய்து கொண்ட நமக்கு நாமே திட்டத்தின்படி வேதா தான் உ.பி.ச.  அதுக்குப் போட்டியாக இன்னும் யாரையும் நியமிக்கவில்லை.  எல்லார் பேரும் லிஸ்டில் வரிசைக்கிரமமாக இருக்கு. :D  ஆனால் என்று வேண்டுமானாலும் வேதா உள்ளே நுழையலாம்.  (யாருப்பா அது மு.அ.வோட உ.பி.ச.வோட கம்பேர் பண்ணறது? நாங்க தனி ரகம் ஆக்கும்!)  அதனால் மத்தவங்க பார்த்துட்டு இருங்க இப்போதைக்கு.  அடிக்கடி தொலைபேசிப்போம். இதோ எழுத வருவேன் என ஒவ்வொரு முறையும் சொல்லுவார்.  ஆனால் அவரால் இயலவில்லை.  அமெரிக்காவில் இருக்கையில் என்னோடு பேசியஅம்பியும் வேதா ஏன் எழுதுவதை நிறுத்திவிட்டார் என விசாரித்தார்.  என்னனு சொல்வது!  2007-ல் நான் அமெரிக்கா சென்றபோது வேதா எனக்குப் பல உதவிகள்செய்து கொடுத்தார். முக்கியமாய்ப் படங்களைத் தரவிறக்கி அப்லோட் செய்ய, லிங்க் இணைக்க, எனப் பலவும் சொல்லிக் கொடுத்தார்.  இப்போது நானாகவே சில விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறேன் என்றாலும் வேதா இல்லாதது மிகப் பெரிய குறையே.  பழைய ஆட்களில் நானும் வல்லி சிம்ஹனும் மட்டும் ஏதோ எழுதுவதாய்ப் பேர் பண்ணிக் கொண்டிருக்கோம்.

அடுத்து தி.ரா.ச. அவர்கள்.  குமரனின் பதிவின் மூலம் பழக்கம் ஆனார்.  இப்போது தொடர்பில் இருக்கிறார் என்றாலும் அவருக்கு இருக்கும் வேலைத் தொந்திரவினால் எப்போதாவது பதிவு எழுதுகிறார்.  ஆனால் ஒரு பதிவு எழுதினாலும் குறிப்பிட்டுச் சொல்லத் தக்க அளவுக்கு அதில் மிக முக்கியமான விஷயங்கள் இருக்கும்.  அவ்வப்போது தொலைபேசியில் உரையாடலோ, ஜி சாட்டிலோ, மெயிலிலோ பார்க்க இயலும்.  இப்போ இம்முறை இந்தியா வந்தப்புறமாப் பார்க்க முடியலை.  பிசி போல் இருக்கு.  இன்னும் நிறையப் பேர் இருக்காங்க.  எல்லாரையும் குறித்து எழுத முடியவில்லை. இலவசக் கொத்தனார், மணிப்பயல்,  போர்க்கொடி, ச்யாம், மணிப்ரகாஷ், மதுரை ராம்னு நிறைய நண்பர்கள் இருக்காங்க தான்.  ஆனால் ரொம்பவே தொடர்பு வைச்சுக் கொண்டு இருந்தவங்களை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறதால் மத்தவங்களை மறந்துட்டேனோனு யாரும் வருந்தவேண்டாம். தவறாக நினைக்க வேண்டாம்.  பதிவு ஏற்கெனவே பெரிசு.  இன்னும் பெரிசாகிவிடும்.  இப்போதைக்கு இந்த நாள் முக்கியமான நாள் என்பதற்காகவே இந்தப் பதிவு.


இப்போ எனக்கு ஏழாவது வயசு ஆரம்பம்.  ஒரு வகையில் ஆரம்பிச்சாச்சு; இன்னொரு வகையில் ஆரம்பிக்கப் போகுது.  எல்லாருக்கும் நக்ஷத்திரப் பிறந்த நாள், ஆங்கிலத் தேதினு இருக்காப்போல் வலைப்பக்கம் ஆரம்பிச்சது 2005 நவம்பர் என்றால் தமிழில் எழுத ஆரம்பிச்சது ஏப்ரல் 4 2006.  அதற்கான கொண்டாட்டங்களை ஆரம்பிக்கலாம். சாதாரணமா நம்ம தொண்டர்கள், குண்டர்கள் எல்லாருமாக் கூடி முப்பெரும் விழா எடுக்கிறது தான் வழக்கம்.  அதுக்கு இன்னும் ஒரு மாசம் காத்திருக்கணும். :)))))))


ஹூஸ்டன் வீட்டிலே முயல் ஐந்தாறு குட்டிங்க போட்டிருக்காம்.  நேத்திக்குப் பேசறச்சே பையர் சொன்னார்.  இல்லாமல் போயிட்டேனேனு ரொம்பவே வருத்தமாப் போச்சு.  நாங்க வந்ததுக்கு அப்புறமாப் போட்டிருக்கு.  இருக்கிறச்சேயே போட்டிருக்கக் கூடாதோ?  ஒரு படம் எடுத்திருப்பேன். அபார்ட்மெண்டிலே இருந்த வரைக்கும் புறாக்கள் குடும்பம் நடத்திக் குப்பை கொட்டிட்டு இருந்ததுங்க.  இங்கே வந்ததில் இருந்து முயல்கள். எப்படியோ குடும்பத்தோடு சந்தோஷமா இருக்கட்டும். 

37 comments:

 1. ஹய் ஜாலி கீதாம்மா என்னை மறந்துட்டீங்க:-)) இதை வச்சே இந்த வருஷம் முழுக்க உக்களை கலாய்க்கலாம்:-))

  ReplyDelete
 2. தலைவி-உ.பி.ச. நினைவு சமீப நிகழ்வுகளால் வந்து அதன் மூலம் பழைய நண்பர்கள் நினைவுக்கு வந்து பதிவெழுதினீர்களோ ...அல்லது ஏப்ரல் நான்குக்காகவா... நண்பர்களை நினைவு கொள்வது எப்பவுமே சந்தோஷம் தரும். இலவசக் கொத்தனார் கதை ஒன்றை குங்குமத்தில் படித்த நினைவு. ஏழாவது பிறந்த நாள் வாழ்த்துகள். மென்மேலும் எழுத எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

  இப்ப மட்டும் என்ன, முயல்களைப் படம் பிடித்து மெயிலில் அனுப்பினால் நீங்கள் போடப் போகிறீர்கள்...! :))

  ReplyDelete
 3. அட வாழ்த்துகள்.. ஸ்வீட் எங்க

  ReplyDelete
 4. வாழ்த்துகள் அம்மா! ஆனாலும் உங்களுக்கு ரொம்ப வயசாயிருச்சுதான்! :P

  ReplyDelete
 5. ரேவதி மேடத்தைப் பார்த்தீர்களா? ஆனந்தத்திற்கு ஒரு மிஸ்டு கால் புத்தகம் (பரிசுப் புத்தகம்) கைக்கு வந்து சேர்ந்ததா? அதைப் படித்து முடித்தவுடன், அந்தப் புத்தகத்தைப் பற்றிய உங்கள் விமரிசனத்தை, உங்கள் வலைப்பூவில் பதியவும். ஏழாம் ஆண்டில் எட்டு எடுத்து வைத்ததற்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. அன்பு கீதா உங்கள் திறமையும், பொறுமையும் ,உற்சாகமும் எப்பவும் குன்றாமல் இருக்கணும்.நல்லதொரு தோழி நீங்கள் எனக்கு.
  பலபதிவுகள் படிக்காமல் விட்டிருப்பேன். மன்னிக்கணும்.
  ஏழு வருட சாதனைகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
  இறைவன் உங்களுக்கும் திரு சாம்பசிவம் அவர்களுக்கும் அமோகமான ஆரோக்கியம் கொடுத்து நன்றாக இருக்கணும்.

  ReplyDelete
 7. அபி அப்பா, அதெல்லாம் மறக்கலை! :P நீங்கல்லாம் ஜூனியர். 2007 பாட்ச். நான் 2005-06 பாட்சை மட்டுமே எடுத்துக் கொண்டேன். :))))))

  ReplyDelete
 8. வாங்க ஸ்ரீராம், தலைவி, உபிச. நினைவுகளிலே நான் தலைவியாகவும், வேதா உபிச ஆனதும் மட்டுமே உண்மை. :))))

  ஆனால் ஒவ்வொரு வருஷமும் நினைவு கூர்ந்து சொல்வது உண்டு. சில நாட்கள் முன்னால், பின்னால் போகும். :)))))

  முயல்களைப் படம் பிடிச்சு அனுப்பச் சொல்லி இருக்கேன். பையருக்கு இருக்கிற பிசியான ஷெட்யூலில் நினைவு வைச்சுக்கணும். பார்ப்போம். :))))))

  ReplyDelete
 9. வாங்க எல்கே, நோ ஸ்வீட்! நான் மட்டும் சாப்பிட்டுப்பேன். :))))

  ReplyDelete
 10. வாங்க கவிநயா, வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி. ஆமாம், வயசாச்சு தான்! :)))))

  ReplyDelete
 11. வாங்க கெளதம் சார், வெளியூர்னா இத்தனை நாள் போயிருப்பேனோ என்னமோ! உள்ளூர் அதுவும் மயிலை; இப்போத் திருநாள் சமயம்! எங்கே! உங்களை வரச் சொன்னால் ஏமாத்திட்டீங்க! :(

  அரண்மனையைப் பார்த்து அசந்து போயிருக்கலாம். சான்ஸை விட்டுட்டீங்க! :))))))

  ReplyDelete
 12. வாங்க ரேவதி, சாதனை எல்லாம் ஒண்ணும் பண்ணினதாத் தெரியலை; ஏதோ பேத்தலும், பினாத்தலுமா எழுதி ஒப்பேத்தறேன். பாராட்டுகளுக்கு நன்றிம்மா.

  உங்கள் கண்கள் இப்போத் தேவலையா? சீக்கிரம் சரியாகப் பிரார்த்திக்கிறேன். சிங்கத்துக்கு எங்கள் நமஸ்காரங்கள்.

  ReplyDelete
 13. வாழ்த்துகள் அம்மா..... ஏழாம் வருடத்தில் அடி எடுத்து வைத்திருக்கும் இந்நேரத்தில் இன்னும் பல வருடங்கள் பல பதிவுகள் தொடர்ந்து வர இறைவன் ஆசீர்வதிக்கட்டும்!

  மீண்டும் பாராட்டுகளுடன்

  ReplyDelete
 14. கீதா பதிஉலகில் நீங்க எனக்கெல்லாம் ரொம்பவே சீனியர்தான் நாலாம் பதிவுலகில் எல் கே ஜி தான் நீங்க சொல்லி இருப்பவர்களில் வல்லி சிம்ஹன் அம்மா மட்டும் ஓரளவு தெரிஞ்ச் பெயரா இருக்கு. 7- ம் ஆண்டிலும் சிறப்பாக உங்க எழுத்துப்பணி தொடர வாழ்த்துகள். நீங்க எனக்கு ஃப்ரெண்ட் என்று நினைக்கவே சந்தோஷமா இருக்கு..

  ReplyDelete
 15. ஏழாவது பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் பொறுமையும், அழகான பதிவுகளும் , இன்னும் பல பிறந்த நாட்கள் காண வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 16. ஹூஸ்டன் வீட்டிலே முயல் ஐந்தாறு குட்டிங்க போட்டிருக்காம்

  இனிய வாழ்த்துகல் முயல் குட்டிகளுக்கு..

  ReplyDelete
 17. ஏழாம் ஆண்டு எட்டிப் பிடித்த சாதனைக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 18. பதிவுலகின் நிரந்தர தானை தலைவலி சே... தலைவி கீதா சாம்பசிவாம் வாழ்க வாழ்க
  .
  .
  .
  .
  .
  .
  .
  வாழ்க
  .
  .
  .
  .
  .
  .
  அப்படியே குப்புற விழுந்து ஒரு ஆசிர்வாதமும்

  ReplyDelete
 19. 7வது வயசுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;-))

  ReplyDelete
 20. உங்கள் பதிவுப் பக்கங்கள் மேலும் சிறந்து, புகழ் பெற எல்லாம் வல்ல இறைவனை இடைவிடாது இறைஞ்சுகின்றேன். பி.கு. : உங்கள் பதிவுகளைப் பார்த்துத்தான், எளியேனும் பதிவுகள் இட வேண்டும் அவா பிறந்தது. எஞ்ஞான்றும் நன்றிகளுடன்
  நி.த. நடராஜ தீக்ஷிதர்

  ReplyDelete
 21. வாங்க வெங்கட், வாழ்த்துகளுக்கு நன்றி.

  ReplyDelete
 22. வாங்க லக்ஷ்மி, துளசி கோபால் என்னை விட சீனியர். பதிவுலகப் பிதாமஹி. :)))) அவங்க பதிவுகளைப் படிச்சுத் தான் எனக்கு எழுத ஆசை வந்தது. இதை ஏற்கெனவே சொல்லி இருக்கேன். :))))))
  உங்கள் வாழ்த்துகளுக்கு என் நன்றி. எனக்கும் உங்கள் நட்புக் கிடைத்தது சந்தோஷமாய் இருக்கு.

  ReplyDelete
 23. வாங்க வெற்றிமகள் ஜெயலக்ஷ்மி, உங்க பதிவுகளைப் படிச்சுட்டு நான் அசந்து போய்ப் பின்னூட்டம் கூடப் போட மாட்டேன். நீங்க என்னை சாதனை படைச்சதாச் சொல்றீங்க. ஒரு சாதனையும் இல்லை. உங்களைப் போல் எழுத எனக்கு இன்னும் எத்தனை காலம் ஆகுமோ? :(
  வாழ்த்துகளுக்கு நன்றி.

  ReplyDelete
 24. நன்றிங்க ராஜராஜேஸ்வரி, பையர் கிட்டே சொல்லி முயல்குட்டிகள் கிட்ட வாழ்த்துகளைத் தெரிவிக்கச் சொல்றேன். :D

  வாழ்த்துகளுக்கு நன்றி.

  ReplyDelete
 25. வாங்க புலி, நீண்டநாட்கள் கழிச்சு வந்ததுக்கும், ஹிஹிஹி, எனக்கு ஆசீர்வாதம் பண்ணினதுக்கும் நன்னியோ நன்னி.


  ஹிஹிஹி, அவசரத்துலே குப்புற விழுந்து ஒரு நமஸ்காரம்னு எழுதறதுக்கு ஆசீர்வாதம்னு எழுதி இருக்கீங்க. :P:P:P:P

  ReplyDelete
 26. வாங்க கோபி, நீங்களும் ஜூனியர் லிஸ்ட்; :D அதனாலே தான் உங்களையும் குறிப்பிடலை. வாழ்த்துகளுக்கு நன்றி.

  ReplyDelete
 27. வாங்க தீக்ஷிதரே, வரவுக்கும், பாராட்டுக்கும் ரொம்ப நன்றி.

  ReplyDelete
 28. அன்புள்ள கீதா,
  உங்கள் பதிவுகளும்,பின்னூட்டங்களும்
  அருமை!ரசித்துப் படிப்பேன்.
  ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் தங்கள்
  வலைப்பூவிற்கு மகிழ்ச்சியோடு
  வாழ்த்துகள்!பாராட்டுகள்!

  அன்புடன்,
  தங்கமணி.

  ReplyDelete
 29. வாழ்த்துகள் அம்மா. சிறப்பாய் தொடரட்டும் உங்கள் எண்ணங்கள்........

  ReplyDelete
 30. @தங்கமணி அம்மா, வாங்க, உங்க வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி. நீங்க வந்ததும் மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.

  ReplyDelete
 31. வாங்க கோவை2தில்லி, வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

  ReplyDelete
 32. //நீங்கல்லாம் ஜூனியர்//

  என்ன மாதிரி பாப்பாங்களுக்கு இன்னும் 20 வருஷம் கழிச்சு போடுவீங்களா?
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

  ReplyDelete
 33. வாங்க வா.தி. நீங்க ரொம்பப்புதுசா வந்திருக்கீங்க போலிருக்கே? :P ஆறு மாசமாத் தான் உங்களைப் பார்க்கிறேன். அதனால் இன்னும் 50 வருஷம் கழிச்சுத் தான் போடுவேன். செரியா???//

  ReplyDelete
 34. எனக்குத் தெரிஞ்சு நீங்க, வல்லிசிம்ஹன் எல்லாம் பதிவுலகத்துல எத்தனையோ சாதிச்சிருக்கீங்க. நீங்க தொட்டிருக்கும் டாபிக்ஸ் சாதாரணமா எழுதக் கூடியதே அல்ல. ஆச்சரியமா இருக்கு உங்களால எப்படி முடிஞ்சுதுனு நினைக்கறப்ப ஆச்சரியமா இருக்கு.

  அப்பப்போ இது சரியில்லே அது சரியில்லே இங்க குத்தம் அங்க குறை இங்க களைவரம் அங்க ரகளைனு பிக்கல் வேறே - இருந்தாலும் எப்படியோ சமாளிச்சு விடாம எழுதிட்டு வரீங்களே.. சலாம். :))


  தமிழ் blog hall of fameம்னு ஒண்ணு வச்சா உங்க print நிச்சயம் இருக்கும்.

  ReplyDelete
 35. அப்பப்போ இது சரியில்லே அது சரியில்லே இங்க குத்தம் அங்க குறை இங்க களைவரம் அங்க ரகளைனு பிக்கல் வேறே -//

  ஹிஹிஹி, அது நம்ம ட்ரேட் மார்க்னு நண்பர் குழாம் சொல்லிக்கும். :)))))))


  தமிழ் blog hall of fameம்னு ஒண்ணு வச்சா உங்க print நிச்சயம் இருக்கும்.//

  மிகப் பெரிய கெளரவத்துக்கு எப்படி நன்றி சொல்றதுனு தெரியலை. நன்றி.

  ReplyDelete
 36. பதிவுலகின் நிரந்தர தானை தலைவலி சே... தலைவி கீதா சாம்பசிவாம் வாழ்க வாழ்க
  .
  .
  ."

  intha mathri g3 panni evlo varusham aachu;) ennaiyum marakama listla serthathuku nanri;D ungal aarvathilum, uzhaipilum paathi alavu kooda enaku illai, ivlo varushama thodarnthu ezhuthuvathu oru sathaanai.
  che remba peelingsa iruku;) yaarupa anga namma yanai thalaivali che che thanai thalaiviku ambatturla avanga theruvula periya flex board vechu paaratu vizha edungappa(ivlo thooram pesi iruken oru soda pls;)

  ReplyDelete
 37. @வேதா,

  வாங்க உ.பி.ச. நல்வரவு, ஒரு வழியாத் திரும்ப வந்துட்டீங்க தானே?? வேணும்னா இந்தத் தொண்டருங்க மனத் திருப்திக்காக ஒரு மன்னாப்புக் கடிதாசு கொடுங்க. அதைப் போட்டுடுவோம். நமக்குனு ஒரு தொலைக்காட்சி சானல் இல்லாதது பெரிய குறை! :)))))

  காப்பி, பேஸ்ட் பண்ணினது தான் பண்ணினீங்க, எழுத்துப் பிழை இல்லாததாய்ப் பார்த்திருக்கக் கூடாதோ! நோ ஜோடா!

  நீங்க வந்ததும் சேர்த்தே விழா எடுத்துக்கலாம்னு பெருந்தன்மையோடும், தாயுள்ளத்தோடும் சொல்லிட்டேன்.

  ReplyDelete