இப்படி எதானும் சொல்லித் தான் சமாளிச்சுக்கணும். :))) வேறே வழியில்லை. கிளம்பறன்னிக்குக் காலங்கார்த்தாலே 2 மணி 3 மணிலே இருந்து இடியும், மின்னலுமா வானம் அமர்க்களப் படுத்திட்டு இருந்தது. காலங்கார்த்தாலே ஆறு மணிக்கெல்லாம் பாக்கர்ஸை வரச் சொல்லியாச்சு. வந்துடுவாங்க. சாமான்களை எப்படி ஏத்தறது. மாடியிலே இருந்து கீழே இறக்கியாகணும். கவலை பிச்சுக்கொள்ளப் பிள்ளையாருக்கு ஒரு ரூபாய்க் காசு லஞ்சம் கொடுத்துச் சரிக்கட்டினேன். வரும் வழியிலே தூற்றல் அக்ஷதை போட, இங்கே வந்ததும் வெளுத்துக் கட்டியது மழை. சென்னை அளவுக்கு வெயில் தெரியலை; சாமான்களை எல்லாம் இன்னும் சரி பண்ணலை. பிஎஸ் என் எல்லுக்கு ஏற்பாடாக முன்னாடியே எல்லாம் கொடுத்துத் தயார் செய்து வைத்திருந்தும் இந்தக் கட்டிடத்தில் ஒரு சில குடியிருப்புக்காரங்களுக்கு பிஎஸ் என் எல் கனெக்ஷனுக்கான வயர் இணைப்பு இல்லை. அதிலே நம்ம குடியிருப்பும் ஒண்ணு. இன்னிக்குத் தான் வந்து பார்த்துட்டுத் திங்கட்கிழமைக்குள்ளாக வயர் இணைப்புக் கொடுப்பதாய்ச் சொல்லி இருக்காங்க. வராதுனு நினைச்ச எரிவாயு இணைப்பு வந்தாச்சு. மற்ற இன்வெர்டர், ஏசி இணைப்பெல்லாம் கொடுத்தாச்சு. இரண்டு நாளாகக் கரன்டும் கட் ஆகலை.
இன்னிக்கு பிஎஸ் என் எல் டாடா கார்ட் வாங்கினேன் அவசரத்துக்காக. தாத்தாவோட அஞ்சலிப் பதிவு ஒரு மாசம் முன்னாடியே ஷெட்யூல் பண்ணியாச்சு. டாடா கார்ட் விலை மட்டுமில்லாமல் இணைய இணைப்புக்கான பணமும் நான் 2ஜியில் சம்பாதிச்சிருந்தாத் தான் கட்டுபடியாகும் போலிருக்கு. ஆகவே தோழர்களே, தோழிகளே, நண்பர்களே, நண்பிகளே, சகோதர, சகோதரிகளே, ரத்தத்தின் ரத்தங்களே, உடன்பிறப்புக்களே, அனைவரும் ஸ்வீட் எடு, கொண்டாடுனு கொண்டாட வேண்டாம்.
வண்ணான் வீடு போற வழி இன்னும் கொஞ்ச தூரம் தான். வந்துடுவோமாக்கும்.
இன்னிக்கு பிஎஸ் என் எல் டாடா கார்ட் வாங்கினேன் அவசரத்துக்காக. தாத்தாவோட அஞ்சலிப் பதிவு ஒரு மாசம் முன்னாடியே ஷெட்யூல் பண்ணியாச்சு. டாடா கார்ட் விலை மட்டுமில்லாமல் இணைய இணைப்புக்கான பணமும் நான் 2ஜியில் சம்பாதிச்சிருந்தாத் தான் கட்டுபடியாகும் போலிருக்கு. ஆகவே தோழர்களே, தோழிகளே, நண்பர்களே, நண்பிகளே, சகோதர, சகோதரிகளே, ரத்தத்தின் ரத்தங்களே, உடன்பிறப்புக்களே, அனைவரும் ஸ்வீட் எடு, கொண்டாடுனு கொண்டாட வேண்டாம்.
வண்ணான் வீடு போற வழி இன்னும் கொஞ்ச தூரம் தான். வந்துடுவோமாக்கும்.
வாங்க...வாங்க... மெதுவா நிதானமா சீக்கிரம் வாங்க!
ReplyDeleteஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து உங்களுக்கு பி எஸ் என் எல் இணைப்பு கிடைக்கும் வரை நான் உண்ணாவிரதப் போராட்டம். (கண்டிப்பா திங்கட்கிழமை இணைப்பு கொடுத்துவிடுவார்கள்தானே!:))
ReplyDeleteநீங்கள் திருவரங்கம் வந்த நேரம் கரண்ட் கட் ஆகலை! :) நல்ல விஷயம். தொடர்ந்து அங்கேயே இருக்கப் போவதால் இனிமே கரண்ட் கட் இருக்காது என நம்புவோம். :)))
ReplyDeleteமெதுவா வந்து இனிய நினைவுகளைத் தொடர்ந்து பகிர்ந்துக்கோங்க. காத்திருக்கிறேன்.
சன்னலில் இருந்து பார்த்தால் காவேரி தெரிகிறாளாமே?
ReplyDeleteவாழ்த்துக்கள்! வாருங்கள்...
ReplyDeleteநீங்க சென்னையை விட்டு கிளம்பரதால அழுததோ? ஸ்ரீ ரங்கம் ஆனந்த கண்ணீர் விட்டு வரவேற்றதோ.
ReplyDelete//டாடா கார்ட் விலை மட்டுமில்லாமல் இணைய இணைப்புக்கான பணமும் நான் 2ஜியில் சம்பாதிச்சிருந்தாத் தான் கட்டுபடியாகும் போலிருக்கு.//
ReplyDeleteஉண்மைதான்
பொறுமையாக எல்லாவற்றையும் செட் பண்ணிட்டு வாங்க.
ReplyDeleteநானும் எப்போதுமே பிள்ளையாரிடம் 1ரூபாய் லஞ்சம் வைக்கும் ஆள் தான். அவர் துணையிருந்தா தானே எல்லாமே நடக்கும்....:)
Maami!!!!Nambavae mudiyala!!!!oorla irundhu vandhu oorai vittae kaali panni irukeenga!!enaku theriyama pochae!! I will miss you Maami. Adhukenna pesina pochu, illiya? sowkiya poi serndhu kadudasi (post ) podungo. :))
ReplyDeleteஓ! ஸ்ரீரங்கத்துக்கு போயாச்சா? நல்லது மாமி,ரங்கனை தினமும் சேவித்துக்கொண்டு இருக்கலாம்.
ReplyDeleteநிதானமாக வாங்க காத்திருக்கிறோம்.
சும்மா ஒரு ரூவாதனா? கஞ்சூஸ்!
ReplyDeleteஆஹா இப்போதுதான் இணையம் நிறைவு பெறுகிறது. கீதா மாமாவும் நீங்களும் சௌக்கியமாக இருக்க அகிலாண்டேஸ்வரியும் உச்சிப்பிள்ளையாரும் ஆரங்கணும் அருள்வார்கள்.
ReplyDelete//Vasudevan Tirumurti said...
ReplyDeleteசும்மா ஒரு ரூவாதனா? கஞ்சூஸ்!//
I like it...:)))