இப்போதைய அரசு சில குறிப்பிட்ட கட்டண அதிகரிப்புச் செய்திருப்பதை ஒட்டுமொத்தமாக அனைவரும் எதிர்க்கின்றனர். முக்கியமாய்ப் பேருந்துக் கட்டணம்; மின் கட்டணம். இரண்டுமே பல வருடங்களாக ஏற்றப்படவே இல்லை. அப்போதைக்கப்போது சிறிது சிறிதாக ஏற்றி இருக்க வேண்டிய ஒன்றே. ஆனால் யாரும் முன் வந்து செய்யவில்லை. இப்போது நமக்குச் சுமையாகத் தெரியும் அளவுக்கு ஏற்றப்பட்டிருக்கிறது. என்றாலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் இது குறைவே.
தியேட்டரிலே போய்ப் படம் பார்க்கக் கட்டணங்கள் எக்கச்சக்கமா ஏறி இருக்கிறதாச் சொல்றாங்க. இது தியேட்டர் முதலாளிகளோட விருப்பம்னும் கேள்விப் பட்டேன். தியேட்டரிலே போய்ப் படம் பார்க்கும் வழக்கமே இப்போ எங்க வீட்டிலே 20 வருஷங்களுக்கும் மேலாக இல்லாமல் போயாச்சு. ஆனாலும் பத்திரிகைகளில் படிப்பதையும், செல்பவர்கள் சொல்வதையும் வைத்துக் கேட்டால் இரண்டு பேர் ஒரு சினிமா பார்க்கப் போக்குவரத்துச் செலவையும் சேர்த்துக் கொண்டு, காபி, டிபன் வகையறாவும் சேர்த்தால் ரூ. 500/-க்கும் மேல் என்று சொல்கின்றனர். ஆனால் இதை ஏன் யாரும் எதிர்ப்பதில்லை??
விவசாயத்திற்கு மின்சாரம் இலவசம். அதுவும் சரியாக வருவதில்லை என்பதால் பயிருக்கு நீர் பாய்ச்ச முடியலை என ஒரு விவசாயி புலம்புவதாக ஒருத்தர் எழுதி இருந்தார். இப்போ ஐம்பது வருடங்களுக்குள்ளாகத் தான் பம்ப்செட்டெல்லாம். முன்னெல்லாம் எப்படித் தண்ணீர் பாய்ச்சினோம்? நம் கால்நடைகளின் உதவியோடு, கிணற்றில் ஏற்றம் இறைத்ததும், கால்வாய்கள் வெட்டி நீர் பாய்ச்சிய முறையும் தண்ணீர் குறைவாய்க் கிடைக்கும் இடங்களில் சொட்டு நீர்ப்பாசன முறையும் என்ன ஆச்சு? ஏன் மின்சாரத்தையே நம்பி இருக்க வேண்டும்?? கால்நடைகளைச் சரியானபடி பராமரித்தால் இயற்கை உரமும் கிடைக்கும். நீர் பாய்ச்சவும், ஏர் உழவும் பயன்படுமே? இப்போதெல்லாம் யார் மாட்டை வைத்து ஏரோட்டுகிறார்கள் என்பவர்களுக்கு, அதெல்லாத்தையும் நாம் விட்டு விட்டு நவீனம் நவீனம் என்று அதன் பின்னால் சென்றதாலேயே இப்போது இத்தகைய அவதி.
காலத்துக்குத் தகுந்த முன்னேற்றங்கள் வேண்டியது தான். ஆனால் இலவசங்களும் வேண்டுமா? அவை எப்படி மனிதரைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி, அவர்களின் உழைப்பைச் செய்ய விடாமால் சோம்பேறியாக்குகிறது என்பதை நாம் அறிவோமா?? எல்லாம் இலவசமாய்க் கிடைப்பதால் ஏன் வேலை செய்து கஷ்டப்பட வேண்டும் என்ற எண்ணம் இன்று பெரும்பாலோர் மத்தியில் நிலவுகிறது. அதுவும் கிராமங்களில் விவசாயக் கூலி வேலை செய்யும் ஆட்களிடம் இந்த எண்ணம் பரவலாய்க் காணப்படுகிறது. ஏற்கெனவே விளைநிலங்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளாகவும், வணிகவளாகங்களாகவும் மாறி வருகின்றன. இப்போது இப்படி ஆட்களும் சோம்பேறிகளாகி வருவதால் நாளைய சமுதாயத்துக்கு எதை விட்டுச் செல்லப் போகிறோம் என்று கவலையாக இருக்கிறது. இலவசம் கொடுப்பதற்காகவே பணம் தேவை என அரசு கூடுதல் வரி விதிக்கிறது. ஆக மொத்தம் இலவசத்தால் என்ன லாபம்??
இலவசம் வேண்டாம். ஆனால் தடையற்ற மின்சாரம் தாருங்கள் என அரசைக் கேளுங்கள். அவர்களால் இயன்ற அளவுக்கு உற்பத்தியை அதிகரித்து மின்சாரம் விநியோகம் செய்ய இயலும். பணம் இல்லாமல் அரசும் எப்படி மின் உற்பத்தியை அதிகரிக்கும்?
கொஞ்சம் இல்லை; நிறைய யோசியுங்கள்.
இன்றைய தினசரியில் பள்ளி ஆசிரியை ஒருவர் தன் காதலனைத் திருமணம் செய்ய வேண்டி காதலனின் சொந்தக்குழந்தைகளைக் கொலை செய்யத் தூண்டி குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கின்றன. அந்த ஆசிரியைக்கும் ஒரு மகள் இருக்கிறாள். விதவை. மறுமணம் தேவை தான்; ஆனால் அதற்காகக் குழந்தைகளைக் கொன்று மணம் செய்து கொள்ள எப்படி மனம் வந்தது? அந்தக் காதலனும் சரி, தான் பெற்ற குழந்தைகளை எப்படிக் கொல்லத் துணிந்தான்? பெற்ற குழந்தையையே அடித்துக் கோமா நிலைக்குத் தள்ளி இருக்கிறார் தகப்பன் ஒருவர். ஏனெனில் அவருக்குப் பிறந்தது பெண் குழந்தையாம். அவரைப் பெண் பெற்றெடுக்காமல் ஆணா பெற்றெடுத்தார்?? இது என்ன கொடுமை???

மின் கட்டண ஏற்றம் ஒரே சமயத்தில் இவ்வளவு ஏற்றப் பட்டதை தாங்க முடியாமல்தான் மக்கள் அவதியுறுகிறார்கள். பழகக் கொஞ்ச நாள் ஆகும்! எத்தனை இடங்களில் மின் சிக்கனத்தைக் கடைப் பிடிக்கிறார்கள்? அலுவலகங்களில் பணி புரிவோர் தேவையற்ற மின் விசிறிகள் சுற்றுவதை நிறுத்த முயல்வதில்லை. நம் பணமா போகிறது..ஆபீஸ்தானே என்ற மடத்தனமான எண்ணப் போக்கு... இலவசமாய்க் கொடுக்கும் எதையும் வேண்டாம் என்று சொல்லும் மனப் பக்குவத்துக்கு தமிழக மக்கள் என்று வருவார்கள்... குஜராத்தின் முன்னேற்றம் என்று தமிழகத்துக்குக் கிடைக்கும்?
ReplyDeleteஒரு விளக்கு திட்டத்தில் குடிசைக்கு வழங்கப் படும் இலவச மின்சாரத்தில் ஒரு விளக்கு மட்டுமா ஏற்றப் படுகிறது? வாக்கு வங்கி அரசியலை விட்டு தமிழக அரசியல்வாதிகள் வெளியே வந்து ஒரு ஐந்தாண்டு மட்டுமாவது ஆட்சி நடத்திப் பார்க்கட்டும்...
ReplyDeleteகள்ளக்காதல் செய்திகள், குழந்தைகளைக் கொல்லும் செய்திகள் படிக்கவே வெறுப்பாக இருக்கின்றன.
வீட்ல இருப்பவங்க மின்சாரத்தை சிக்கனமாக செலவு செய்ய நினைத்தாலும் ரோடில் போகும்போதெல்லாம் பகலில் கூட தெருவிளக்குகள் எரிந்துகொண்டிருப்பது என்ன ஒரு பொறுப்பில்லாதனம். சிக்கனமா இருன்னு சொல்ரவன்களே இப்படி செய்தா எப்படி உருப்படும்?
ReplyDeleteகடைசியில் சொன்ன விஷயம் வருத்தப்பட வைத்தது.. என்ன தான் நடக்கிறது!
ReplyDeleteதனிமனித பொறுப்புணர்வு மிகவும் அவசியம் என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்?
ReplyDelete//கள்ளக்காதல் செய்திகள், குழந்தைகளைக் கொல்லும் செய்திகள் படிக்கவே வெறுப்பாக இருக்கின்றன.//
ஆம்! வெறுப்பாக மட்டுமின்றி மிகவும் அருவருப்பாகவும், வருத்தமாகவும் இருக்கிறது :( தாய்மைக்கு இலக்கணமான பெண், அதுவும் ஆசிரியையா?! கடவுளே! பெருமூச்சைத் தவிர்க்க முடியவில்லை :(
வாங்க ஸ்ரீராம், மக்களால் தாங்க முடியலை சரி, ஆனால் இலவசங்களை எங்கேருந்து கொண்டு வரமுடியும்? அதுக்குப் பணம் எங்கிருந்து வரும்? இப்படி வாங்கி அப்படிக் கொடுப்பதைப் புரிந்து கொண்டால் இலவசமே வேண்டாம்னு சொல்லலாம் இல்லையா? எங்கே? ஒரு சேப்டி பின் இலவசம்னாக் கூட விழுந்தடிச்சுட்டுப் போறவங்க தான் நிறைய. :((((
ReplyDeleteபொதுவாகவே வட மாநிலத்தில் இலவசமாய் எதையும் பெற்றுக்கொள்வதை அவமானமாய்க் கருதுகின்றனர். வீட்டு வேலை செய்யும் பெண்கள் கூட சம்பளத்துக்கு மேல் எதையும் எதிர்பார்ப்பதில்லை. சாப்பாடோ, தேநீரோ கொடுத்தால் கூட வெகு சிலரே அரை மனதோடு வாங்கிப்பாங்க. சம்பளத்தில் அட்வான்ஸ் எனப் பெற்றுக்கொள்ளும் வழக்கமும் கிடையாது.
ReplyDeleteஇங்கே வீட்டு வேலை செய்யும் பெண்கள் குறைந்த பக்ஷம் ரூ 1,000/-இல் ஆரம்பித்து 5,000/- வரையிலும் அட்வான்ஸ் பெறுகின்றனர்.
ஆனால் அவர்களே தியேட்டருக்குப் போய் சினிமா பார்க்க ரூ 200/- அல்லது 300 கொடுக்க அஞ்சுவதில்லை. இது மட்டும் எப்படி முடியுது?
ReplyDelete@லக்ஷ்மி,
ReplyDeleteவீட்டில் என்னதான் மின்சாரத்தைச் சிக்கனமாய்ச் செலவழித்தாலும் எல்லாரும் அப்படி இருக்கணுமே!
வாங்க வெங்கட், மனிதத் தன்மை அழிந்து கொண்டு வருகிறது. வேறென்ன! :(((
ReplyDeleteவாங்க கவிநயா, இன்றைய நாட்களில், சூழ்நிலையில் பெண்தான் மிகப் பெரிய கொடுமைக்காரியாகத் திகழ்கிறாள். திருமணம் செய்து கொள்ளப் போடும் நிபந்தனைகளைக் கேட்டால் இன்னும் அதிசயப் படுவீங்க. இதுவும் பெற்றோர் ஆதரவிலேயே சொல்லப் படுகிறது. ஆக மொத்தம் கலாசாரமே அழிந்து வருகிறது.
ReplyDeleteஇதையெல்லாம் படிக்க வேண்டாம்னு செய்தித்தாளையே நிறுத்திவைத்திருந்தேன். இணையத்திலேயெ படிக்க முடிகிறது. இந்த நெகடிவ் செய்திகளும் அவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பத்திரிகள் போதாது என்று தொலைக்காட்சியிலும் அதே புராணம்.
ReplyDeleteஇந்த மாதம் என்ன பில் வரப்போகிறதோ. கிடுக்கியில் மாட்டிக் கொண்ட மனிதர்கள் நாம்.
அம்பத்துரிலேயும் ஷேக்கித்தா?
ReplyDeleteஅம்பத்துரிலேயும் ஷேக்கித்தா?
ReplyDeleteவாங்க ஜெயஶ்ரீ, ஷேக்கினதுக்கு அப்புறமா நில அதிர்வுனு தெரிஞ்சதுமே உங்களைத் தான் நினைச்சேன்.
ReplyDeleteரொம்ப பிசி போலிருக்கு; ஆளையே காணோமே? இல்லாட்டி ப்ளாகர் படுத்தலா? :))))))